ஞாயிறு, 30 ஜூலை, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 8 - மரங்களும், மலர்களும் பேசினால்


அந்நியன் மரம்!!!???.... மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!

மலர்ந்துவிட்டேன் நான்!
காத்திருக்கிறேன் 
என் தேனினைப் பருக வரும்
என் காதலன் வண்டிற்காக!
சூரியன் வந்துவிட்டான்!
காதலனே! எங்கே சென்றாய்?
என் தேனும் வற்றுகிறதே! 
 
காத்திருந்துக் காத்திருந்து 
பொழுதே சாய்ந்திட்டது
என் காதலனைக் காணாது
என் மகரந்தமும் சோர்ந்துவிட்டது!
 
நாங்கள் இயற்கையில் அமைந்த பௌ (Bow) பட்டன்கள்! எவ்வளவு அழகாய் இருக்கிறோம் இல்லையா!!
காலையில் மலர்ந்து
மாலையில் வாடுகிறோம்
வாழ்வதே ஒரு நாள்!
இடையில் எங்களை 
ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்!
நீங்கள் கட்டடங்களாகக் கட்டிக் கொண்டே போனால் நாங்கள் வளர்ந்து மலர்வதற்கு இடமே இல்லாமல் போகுமே! நீங்கள் வாழ்வதற்கு நாங்களும் மிகவும் முக்கியம் மக்களே! 
நாங்கள் மலர்வதே 
உங்களை மகிழ்விக்கத்தான்! 
உங்கள் மரணத்தில் நாங்கள் மிதிபட்டு 
மரணமடைகிறோம்!
உங்கள் திருமணத்திலும் நாங்கள் மிதிபட்டு
மரணமடைகிறோம்! 
முரண்!
 
பூப்போன்ற பூவையர் 
என்று  உவமையுடன் 
சொல்லும்  நீங்கள்
பூவாகிய எங்களைப் பிய்த்து மிதிப்பதேனோ?
பூப்போன்ற பூவையரை
 மிதித்துத் துன்புறுத்தாதீர்
என்று குரல் கொடுக்கும் நீங்கள்
இளம் பூவையர் எங்களையும்
காப்பதற்குக் குரல் கொடுங்களேன்!
பூப்போன்ற மனம்
என்று சொல்லிவிட்டு
வேதனையுறும் வார்த்தைகளை
உதிர்க்கலாமோ?
எங்களயும்தான்!
நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!

நாங்கள் வீழ நினைப்பதும் நாங்கள் பிறந்த நிலத்தில் தான் குப்பைத் தொட்டியிலல்ல…வீழ்ந்தாலும் உரமாவோம்!

உங்கள் வீடு வண்மா வேண்டுமா?! எங்களைத்தான் நாடுவார்கள் வண்ணத்துப் பூச்சிகள்! நீங்கள் அலங்காரமாக வைக்கும் ப்ளாஸ்டிக் பூக்களை அல்ல! எங்களைப் போற்றுங்கள்! உங்கள் வீட்டினை நாங்கள் அலங்கரிக்கிறோம்! 
வண்ணத்துப் பூச்சிகளுடன், புள்ளினங்களுடன்!

 நாங்கள் மிகவும் பொறுமைசாலிகள்! சரிதானே!!?

எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!

நான் பாடும் மௌன ராகம் கேட்கிறதா!!

யப்பா! என்ன வெயில்! நீங்களெல்லாம் வெயிலுக்கு ஒதுங்கிடறீங்க! எங்களையும் கொஞ்சம் நிழல்ல வையுங்கப்பா! கருத்துப் போயிடுவோம்ல!  

இயற்கை அன்னை மௌனமாக இசைத்திடும் இசையாய் நாங்கள்!

இயற்கை அன்னை எங்கள் வழியாய் புன்சிரிப்பை உதிர்க்கிறாள்! உங்களுக்கும் அது பரவட்டும்! 
நாங்கள் ஒவ்வொருவரும் மலர்கிறோம்! அருகருகே இருக்கும் எங்களுக்குள் போட்டியில்லை…பொறாமையில்லை! 

 எங்கள் இதழ்களைப் பிரிக்காமல் அழகை ரசியுங்கள்!
வண்ண வண்ண இலைகள் வடிவில் பூக்களாய்
நாங்களும் அழகுதான் இல்லையா!

எனக்குக் கவிதை எழுதத் தெரியாது! எனவே பூக்கள் பேசுவது போல என் மனதில் தோன்றிய எண்ணங்களே இங்கு! ஆயின், அருமையாகக் கவிதை எழுதுபவர்களும் நம் வலை உறவுகளில் இருக்கிறார்கள். பெண் பூக்கள் - நம் தோழி/சகோதரி தேனம்மை அவர்கள் எழுதிய இப்புத்தகத்தில் பூக்களின் உணர்வுகளை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். புத்தக விமர்சனத்தை இங்கு 1, (எங்கள் ப்ளாக்) 2. (வை கோ சார் ப்ளாக்) காணலாம். 
வித விதமான பூக்களை மிக மிக அழகாக, மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும்படி மனதைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் படம் பிடித்துத் தனது தளத்தில் பகிர்ந்து வரும் தோழி கீதா மதிவாணன் அவர்கள் தற்போது பூக்களைப் பற்றி விவரமான தகவல்களுடன் எழுதத் தொடங்கியுள்ளார். 

-----கீதா
52 கருத்துகள்:

 1. அருமையான பகிர்வு. வித விதமான இந்தப் பூக்கள் எல்லாம் ராஜஸ்தானில் நாங்கள் இருந்த குடியிருப்பில் வாசல் பக்கம் லானில் சுற்றி பார்டர் மாதிரிப் போட்டிருந்தோம். ஜனவரி, பெப்ரவரியில் அந்தப் பூக்கள் மிக அழகாகப் பூத்துக்குலுங்கும். செம்பருத்தி இந்த நிறச் சேர்க்கையில் எங்கள் அம்பத்தூர் வீட்டிலும் இருந்தது! இப்போது எதுவும் இல்லை! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கீதாக்கா முதல்ல வந்து மொய் வைச்சுட்டுப் போனதுக்கு..ஹஹ்ஹஹ்...பழைய நினைவுகள் மலர்ந்திருக்கும் இல்லையாக்கா...!!

   நீக்கு
 2. படம்லாம் நல்லாத்தான் இருக்கு. பிப்ரவரியில் எடுத்தாலும் இன்னும் வாடவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிப்ரவரியில் எடுத்தாலும் இன்னும் வாடவில்லை.// ஹஹஹஹ் இப்படி நிறைய வாடா மலர்கள் இருக்குது நெல்லை!! இன்னும் போடலை...மிக்க நன்றி கருத்திற்கு...

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆமாம் கீதாக்கா நீங்க ஃப்ர்ஷ்ட்டு!!!!! அதிரா இல்லை போட்டிக்கு!!ஹ்ஹஹஹஹ்

   நீக்கு
 4. அழகான படங்கள். படங்களுடன் தந்திருக்கும் வாசகங்களும் சிறப்பு.

  தொடரட்டும் படப் பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 5. அத்தனை டேரி பூவும் எனக்கு பார்சல் பண்ணிவிடுங்க. சின்ன பிள்ளைல வச்சிக்கிட்டு போனது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யாரப்பா அங்கே! ராஜி கேட்டுருக்கற பூ எல்லாத்தையும் பார்சல் பண்ணி அனுப்புங்க!!! இப்ப கிடைக்கறதில்லையா என்ன?

   மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 6. அத்தனை டேரிப்பூவும் எனக்கு பார்சல் பண்ணிவிடுங்க. எனக்கு டேரிப்பூன்னா பிடிக்கும். சின்ன புள்ளைல வச்சிக்கிட்டுது, இன்னிக்கு குலதெய்வம் கோவிலுக்கு போய்ட்டு வரும்போது பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்சல் அனுப்பச் சொல்லிட்டேனே ராஜி!!ஹஹஹ்ஹ் வந்துரும்!!

   அட கிடைக்குதா இப்பவும்!! சூப்பர்!!! சரி வாங்கி வைச்சுக்கிட்டு சின்னப் புள்ளையா ஆயிரலாம்ல!!

   நீக்கு
 7. முதல் படமே கண்ணைக்கட்டி நிறுத்துகிறது.

  தேனருந்த வரும் வந்து காதலனா? அதிதியா?

  மலர்கள் பணியில் நனைந்தனவோ இல்லையோ... எங்கள் பார்வையில் நனைந்தன!

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஸ்ரீராம்! முதல் படம்...பாண்டிச்சேரியில, என் மகனின் நண்பனின் அக்கா அரசு மருத்துவர். அவர்கள் இருக்கும் அந்த க்வார்ட்டர்ஸில் பின்னால் இருக்கும் மரம்...ஒரு திருமணத்திற்குப் போயிருந்த போது அங்கு அதை நேரில் பார்த்து அப்படியே பிரமித்து நின்றேன். முதலில் மரத்திற்கு மட்டும் மழை பெய்வது போல் தோற்றம்....அப்புறம் நம்ம அந்நியன் விக்ரம் இப்படித்தானே தலையை கவிழ்த்து முடி தொங்க இருப்பாரே அப்படியும் தோன்றியது..ஹ்ஹஹ்

   ஸ்ரீராம்! வண்டு அதிதியா..தேன் அருந்தி மகரந்தச் சேர்க்கை நடக்க உதவுகிறதே!!! அதிதியாய் வந்து காதலனாய் மாறிடலாம் தானே!!! அந்தப் பூவின் தேன் பிடித்துவிட்டால்!!!!

   உங்கள் பார்வையில் நனைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!! நன்றி!

   நீக்கு
  2. வந்து இல்லை, வண்டு!// அதெல்லாம் புரிஞ்சுருச்சே ஸ்ரீராம்..அதே போல பணி இல்லை பனி!! சரிதானே!! .மொபைல்ல அடிச்சீங்களோ? ...மொபைல்ல அடிச்சா வர பிரச்சனைகள் நமக்கும் பழக்கமாச்சே!!

   நீக்கு
 8. பூக்களின் பாஷை புரிகிறது ,மொபைல் பாஷையும் புரிகிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ பகவான் ஜி!!! பூக்கள் மொபைல் பாஷை பேசிச்சா...புரிஞ்சுது ஸ்ரீராமுக்குப் போட்ட கருத்து தானே!! ஹஹ் மிக்க நன்றி ஜி!!!கருத்திற்கு

   நீக்கு
 9. ஆயிரம் மலர்களே மலருங்கள். அமுத கீதம் பாடுங்கள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகானபாடல் அது ! மிக்க நன்றி இளங்கோ சகோ! கருத்திற்கு

   நீக்கு
 10. பதில்கள்
  1. காட்சியே கவிதைதான் ஆனால் எனக்குக் கவிதை எல்லாம் வருவதில்லையே துரை செல்வராஜு சகோ!! மிக்க நன்றி கருத்திற்கு

   நீக்கு
 11. வணக்கம்
  மலரோடு கவிதை மனதோரம் தந்தீர்கள்

  அருமையான காட்சிகள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன் -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி. அழகான..கருத்திற்கு...பல நாட்கள் ஆகிவிட்டதே உங்களைப் பார்த்து

   நீக்கு
 12. பூக்கள் அனைத்தும் அழகு அவைகள் பேசிய மொழிகள் அதனினும் அழகு வாழ்த்துகள்
  த.ம.6

  முதல் நபராக செல்லில் நீண்ட கருத்துரை எழுதி இட்டேன் வரவில்லையோ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி!!

   செல்லுலயா போட்டீங்க அதான் செல்லாமப் போச்சு!!! ஹஹஹஹ் எனக்கும் இப்படி நடப்பதுண்டு..பல சமயங்களில்...உங்க பதிவுக்குக் கூட அப்படித்தான் ஆச்சு எனக்கு..ஓட்டு போட்டுட்டேன் முதல் ஓட்டுநு நினைக்கறேன்...கருத்தும் போட்டு போகவே இல்லை...அப்புறம் தான் போட்டேன்...

   நீக்கு
 13. எத்துனை எத்துனை வண்ணங்கள்....

  இந்த

  வண்ண வண்ண மலர்களில்.....


  அழகோவியம்...

  பதிலளிநீக்கு
 14. படங்கள் எல்லாம் வெகு அழகு.
  அர்ச்சுனன் அம்பு கூடாரமோ! என்று வியக்க வைக்கிறது முதல் படம். மழையை தடுக்க அர்ச்சுனன் அம்பு கூடாரம் போடுவார் காட்டுக்கு அது போலும் இருக்கிறது.
  சரமழை போலவும் காட்சி அளிக்கிறது.
  மலர்கள் எல்லாம் வெகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! இது இதுதான் கோமதிக்கா!!! அர்ச்சுனன் அம்பு கூடாரம் என்று உங்களுக்குத் தோன்றியது பாருங்கள்!!! அருமை அக்கா!!!

   மிக்க நன்றி கோமதிக்கா...கருத்திற்கு

   நீக்கு
 15. தலைப்பே ஒரு கவிதைபோல் ஆரம்பித்து ஒவ்வொரு சம்பாஷனையும் அருமை.

  "காலையில் மலர்ந்து
  மாலையில் வாடுகிறோம்
  வாழ்வதே ஒரு நாள்!
  இடையில் எங்களை
  ஏன் கொய்து பிய்த்துக் குதறுகிறீர்கள்! "

  சிந்திக்கத்தூண்டும் கண்ணீர் வாக்கியங்கள்.

  அந்நியன் சொல்லும் அக்கினி குண்டத்திற்கும் இந்த மரங்களையல்லவா வெட்டிப்போடவேண்டி இருக்கின்றது?

  "எங்களை உற்று நோக்குங்கள்! உங்களை அறியாமலேயே நாங்கள் உங்கள் முகத்தில் மலர்வோம்! புன்சிரிப்பாய்!!! புன்சிரிப்பு மன அழுத்தத்தை மாற்றிவிடும் தெரியுமா!!!" உண்மை.

  அருமை அருமை.

  தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் படைப்பென்னும் மலர் தோட்டம் அதில் மொய்க்கட்டும் வண்டுகளெனும் வாசக இதயங்கள்.

  கோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்நியன் சொல்லும் அக்கினி குண்டத்திற்கும் இந்த மரங்களையல்லவா வெட்டிப்போடவேண்டி இருக்கின்றது?// இந்த அக்னி குண்டம் இங்கில்லை கோ!!! அது வேறு உலகமாம்..அங்கு மரமெல்லாம் வேண்டாமாமே!!! ஹஹஹ்ஹ

   //தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் படைப்பென்னும் மலர் தோட்டம் அதில் மொய்க்கட்டும் வண்டுகளெனும் வாசக இதயங்கள்.//

   இது கோ வின் அக்மார்க் தமிழ்!! அதன் அழகு!!நடை! மிகவும் ரசித்தோம் கோ இந்த வரிகளை...மிக்க நன்றி!!

   நீக்கு
 16. கண்ணைப் பறிக்கும் வண்ணப் பூக்கள் அருமை த ம 7

  பதிலளிநீக்கு
 17. பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி எம் பி ஸார் கருத்திற்கு!! யெஸ் ஆல்வேஸ்!!!

   நீக்கு
 18. "நாங்கள் விரும்புவதும் இயற்கை மரணத்தைதான்!"
  கனடாவில் யாரும் பூக்களைப் பறிப்பதில்லை!
  படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 19. அழகான படங்கள். அருமையான வாசகங்கள்

  பதிலளிநீக்கு
 20. ஸ்டார்ட்டிங்கு டயலாக்கு (மூட மாந்தர்களே! எங்களையா வெட்டி வீழ்த்துகிறீர்கள்! உங்களுக்குக் கும்பிபோஜன, அக்னிக்குண்டத் தண்டனைகள் கிடைப்பதாக! ஹஹஹ!) கொஞ்சம் டெரராக இருந்தாலும் அடுத்தடுத்த ஃ போட்டோக்கள் அழகு

  பதிலளிநீக்கு
 21. ரசனையோ ரசனை. அழகான படங்கள், பொருத்தமான வரிகள். மனம் நிறைந்த பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 22. பூக்களெல்லாம் அழகோ அழகு. அவை பேசியிருந்தால் வசனங்கள் அதைவிட அழகு.நம்மால் பதில் சொல்லவே முடிந்திருக்காது. அதான் அவைகள் பேசவில்லை. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி காமாட்சியம்மா வருகைக்கும் கருத்திற்கும்..பூக்கள் பேசினால் பதில் சொல்ல முடியாது நீங்கள் சொல்லுவது போல் பூக்கள் மட்டுமல்ல இயற்கையே பேசினால் ..மனிதனிடம் பதில் கிடையாது...

   நீக்கு