அவளுக்கு,
அவளை ரசித்து, ரஸனையான மெஸேஜுகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வாட்ஸப்போ? இருக்கலாம். அவளுக்கு வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாம். என்னிடம் சொன்னாள். அவள் ஃபோட்டோ
கூட எங்கும் வந்ததில்லையே என்று எனக்குத் தோன்றியது.
அவள்
அப்படி ஒன்றும் பார்ப்பதற்கு மனதை ஈர்ப்பவள் என்று சொல்வதற்கில்லை. அழகோ? சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சொல்வார்களே அதில்
ஒரு லட்சணம் கூடத் தேறாது. அதெல்லாம் அவளுக்குப் பொருட்டே இல்லை.
சொல்லப்போனால்
ஆண்களுக்கானவை என்று இந்தச் சமூகத்தில் சொல்லப்படுபவை இவளிடம் சற்றுத் தூக்கலாக இருக்கிறதோ
என்று கூட எனக்குத் தோன்றும். மாமரம் ஏறுவாள். தென்னை மரம் கூட ஏறுவாள். சென்ற வாரம்
எங்கள் குடியிருப்பில் இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்கும் ஆள் ரொம்பவே
கிராக்கி பண்ண இவள் மரத்தில் ஏறும் பெல்டைக் கட்டிக் கொண்டு சட சடவென ஏறினாளே பார்க்கணும்!
விழும் தேங்காய்களைக் கூடப் பொறுக்காமல் எல்லோரும் வாய் பிளந்து வாய்க்குள் காகம் எச்சமிட்டது
கூடத் தெரியாமல் நின்றிருந்தோம். தேங்காய் பறிக்க வந்தவன் தலைதெறிக்க ஓடினான்! தென்னைமரப்
பேய் என்று சொல்லிக் கொண்டே! உங்கள் வீடுகளில் தென்னை மரங்கள் இருக்கிறதென்றால் எனக்குச்
சொல்லுங்கள். பேயை அனுப்புகிறேன்.
பல்சர்,
ரேஸ் பைக் கூட ஓட்டுவாள். ஜீப் ஓட்டுவாள். லாரி என்ன விமானமே ஓட்டும் தைரியம் உண்டு.
ஆனால் அதற்குக் கொடுப்பினை இல்லை பாவம்! நடு இரவில் கூட தன்னந்தனியாகச் செல்வாள். பயமில்லை!
ஆமாம், ஒரு முறை ஒரு பெண்ணின் கழுத்தில் கைவைத்தவனை துவம்சம் பண்ணியதாகச் சொன்னார்கள்!
கராத்தேயில் ப்ளாக் பெல்டாம்! நடந்தால், ‘பூமியே அதிருதுல்ல’ சுனாமி வந்துவிடப் போகிறது
என்று கலாய்க்கும் அளவிற்கு நடை. வீட்டில் கூட, ‘ஜவான் மாதிரி நடை’ என்றுதான் அவளைக்
கடிந்து கொள்வார்கள். உங்களுக்கு மாயாபஜார் சாவித்திரி நினைவுக்கு வருகிறாரா? எனக்கு
வருகிறார். மஹாபாரதத்தின் பிருகநளையோ என்று வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் ஆனால்,
சிகண்டி போலவோ என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்! டி வி யில் மஹாபாரதம் பார்த்ததன் விளைவு!
சமையல்
கூட நன்றாகச் செய்வாள் தெரியுமோ! என்னது இது? ஆணைப் போல என்று சொல்லிவிட்டு சமையல்
என்று சொல்லுகிறீர்களே என்று கேட்கத் தோன்றுகிறதா! இருங்கள். நளபாகம்! ஆண்கள்தான் சமையலில்
கெட்டிக்காரர்கள் என்று சொல்லுவதுண்டுதானே! ஹோட்டல்களில், கல்யாணங்களில் எல்லாம் ஆண்கள்
தான் சமைக்கிறார்கள். அதைப் பெண்களும் விரும்பிச் சாப்பிடுகிறார்களே என்று தானே வாதம்
வைக்கப்படுகிறது! விஜய் டிவியில் சமையல் சமையல் வெங்கடேஷ் பட் பார்த்திருப்பீர்களே!
அவரைப் போன்று சமைக்கவில்லை என்றாலும், சரி அவ்வளவு ஏன் போக வேண்டும், என் நண்பர்கள்
ராம், தில்லிக்காரர், இரு தமிழன்கள், போன்று சமைப்பாள் என்று சொல்லலாம். ரசிப்பவர்கள்
யாரேனும் இவளது சமையலைச் சாப்பிட்டுருக்கிறார்களோ என்று கேட்டால் அதுவுமில்லையாம்.
நான்
சாப்பிட்டுருக்கிறேன். ஏதோ, புதுசா செய்திருக்கிறேன் என்று ஒரு நாள் கொடுத்துவிட்டுப் போனாள். நன்றாகத்தான்
இருந்தது. அவள் வீட்டு அடுக்களை ஜன்னல் என் அறையின் எதிரே! தினமும் காலையில் நல்ல மணம்தான்
என்னை எழுப்பும். நாவில் நீர் ஊற எழுவேன். அறிவாளியாம், ஏதோ டிகிரி வாங்கியிருக்கிறாளாம்.
சிந்தனாவாதியாம், அப்படித்தான் வீட்டில் பேசிக் கேட்டிருக்கிறேன். உடை கூடப் பெரும்பாலும்
ஆண்களைப் போலத்தான் உடுத்துவாள்! இன்னொன்று சொல்ல விட்டுப் போச்சே! ஓடும் ரயிலில்,
பேருந்தில் ஏறுவாள். இறங்குவாள்! சைக்கிளில் போவாள்! ஸ்கேட்டிங்க் செய்வாள்! கோ கார்ட்
ஓட்டுவாள்! ரேஸ் காரே கூட ஓட்டத் தெரியுமாம்.
வெளிநாட்டுப்
பெண்ணோ என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா? இல்லை. என்ன ஒரே அமைதி?! ஓ! புரிகிறது! அவள்
பெயரைச் சொல்லாமல் அவள் அவள் என்று சொல்லிக் கொண்டே போகிறீர்களே என்று தானே கேட்க
நினைக்கிறீர்கள்?! ரசிப்பதற்கு பெயர் எல்லாம் வேண்டுமா என்ன? அவளைப் பற்றி நான் சொல்லுவதை
நீங்கள் நம்பாமலா போய்விடப் போகிறீர்கள்! ‘அவள்’ என்றே இருந்துவிட்டுப் போகட்டுமே! இல்லையென்றால் உங்களுக்குப் பிடித்த பெயர் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.
சரி
விஷயத்திற்கு வருகிறேன்! தன்னைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் தனக்கு மெஸேஜஸ் மட்டும் எப்படி
அனுப்புகிறார்கள் என்று அவளுக்கே வியப்பு! ஒரு வேளை அவளைப் பற்றி நான் சொல்லுவதைப்
போல, எங்கள் குடியிருப்பின் அக்கம்பக்கத்தவர்கள் பார்த்திருப்பார்கள்தானே! அவர்களில்
யாரவது இருக்கலாம். ஆனால், அவளுக்கு யாரென்று தெரியவில்லையாம்.
மெஸேஜ்
அனுப்புபவர்கள் எல்லோருமே இளைஞர்களாம். அவள் பாட்டினை ரசிக்கிறார்களாம்! பாடகியோ என்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. ஆனால் பாத்ரூம், கிச்சன் பாடகி! எனக்கும் கேட்குமே! அவள் சாகசங்களையும் ரசிக்கிறார்களாம்! சிலருக்கு இவள் நடை பிடிக்குமாம்! சிலர் இவளது தைரியத்தை ரசிக்கிறார்களாம்.
இப்படி ஒவ்வொரு இளைஞனும் ஒவ்வொரு காரணமாம்.
உங்களுக்கும்
ரசிக்கத் தோன்றுகிறதா?! உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். மெஸேஜ்
அனுப்பிய ரசிக இளைஞர்களில் நானும் ஒருவன்! அவள் இளைஞர்கள் என்று சொன்னதில் எனக்கு ஒரே மகிழ்ச்சி! இருக்காதா பின்னே!
கொஞ்சம் நடந்தாலே மூச்சு வாங்கிக் கொண்டு முட்டியைத் தேய்த்துக் கொண்டிருக்கும் 70 வயது இளம் வாலிபனான எனக்கு, 8 பேரக் குழந்தைகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு சாகஸ நாயகியான ஸ்வீட் 60! அவ்வைசண்மு/கனை/கியை ரசிக்கத்தானே தோன்றும்? தவறா சொல்லுங்கள்!!
எல்லோரும் சொல்லுகின்றார்கள். எனக்குப்
புத்தி பேதலித்துவிட்டதாம்! நீங்களும் அப்படிச் சொல்லிவிடாதீர்கள்!
என் உலகில் நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்!
-------கீதா
(நன்றி கில்லர்ஜி! ஆ! நன்றி கில்லர்ஜி என்றவுடன் 70 வயது வாலிபராக வருவது கில்லர்ஜியோ என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால்....அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்!! ஹாஹாஹா!!)
(நன்றி கில்லர்ஜி! ஆ! நன்றி கில்லர்ஜி என்றவுடன் 70 வயது வாலிபராக வருவது கில்லர்ஜியோ என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால்....அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்!! ஹாஹாஹா!!)
சுவரஸ்யம்
பதிலளிநீக்குசொல்லியதும்
சொல்லிப்போனவிதமும்
வாழ்த்துக்களுடன்...
மிக்க நன்றி ரமணி சகோ கருத்திற்கு
நீக்குஆஹா இப்படி டிவிட்ஸ் வைத்தால் யார் அவள்)))இராமதூதன் அவன்)))
பதிலளிநீக்குஹஹஹஹ் தனிமரம் நேசன் என்ன இங்கு மாருதியைக் கொண்டு வந்துவிட்டீர்கள்! இல்லை இது பெண் தான்....அந்த வயதானவரின் கற்பனையில் ஹிஹிஹி மிக்க நன்றி நேசன்
நீக்குபடித்து இரசித்தேன் எழுதியுள்ள நடை கண்டு! த ம 1
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா தாங்கள் ரசித்தமைக்கு!
நீக்குதம வாக்கு இரண்டாவது என்னுது.
பதிலளிநீக்குபதிவை படித்துக் குழம்பி, ரசித்து,சிரித்துச் செல்கிறேன்!!
ஹஹஹஹஹ் மிக்க நன்றி ஸ்ரீராம் ரசித்துச் சிரித்தமைக்கு!
நீக்குசீரியல் நடிகர் திரு. கமல் ஹாசன் உங்கள் மீது வழக்கு தொடராமல் இருக்கணும்.
பதிலளிநீக்குஇப்படிக்கு
அல்வா ஜாம்முக்கி
த.ம.பிறகு.
ஹஹஹஹ கில்லர்ஜி நன்றிக்கு இப்படி ஒரு கமென்டா...ஹஹஹஹ் அது சரி பிக் பாஸை நான் இழுக்கவே இல்லையே!! ஹிஹிஹி ஆனால் இழுக்க நினைத்துள்ளேன் பார்ப்போம்..
நீக்குமிக்க நன்றி கில்லர்ஜி!!!
தமிழ் மணம் பொருத்தமான எண் ஒம்போது
நீக்குநல்ல நடை. அது சரி, கில்லர்ஜி இதிலே எங்கே வந்தார்? புரியலை கொஞ்சம்! மற்றபடி 70 வயது கிழவரின் ரசனை நன்றாகவே இருக்கிறது!
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதாக்கா...அது வேறு ஒன்றுமில்லை....கில்லர்ஜியிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அவ்வைஷன்முகன் என்று பெயர் சொல்லலாமோ என்று சொல்லிட அட எனக்கும் அதே எண்ணம் இருந்தது...அவ்வைஷண்முகன்/கி என்று இரண்டுமே சொல்லி கற்பனைக்கு விட்டுவிடலாம் என்று நான் நினைத்ததைச் சொல்ல அவர் இதனை மிகவும் ரஸித்ததாகச் சொன்னார்...அதனால் பி குவில் அவருக்கு நன்றி சொல்லி விட்டு ப்ராக்கெட்டைக் க்ளோஸ் பண்ணவும் திடீரென்று அந்த நன்றியை வைத்தே அவரே அந்த 70 வயது மனிதராக இந்தக் கதையில் வந்தால் என்று யோசித்து அவரைக் கலாய்த்தேன்....அவ்வளவுதான் விஷயம்..!!!!
நீக்குமிக்க நன்றி கீதாக்கா
ஹாஹா.... தில்லிக்காரர் தலை வேறு உருண்டு இருக்கிறதே! :)
பதிலளிநீக்குத.ம. மூன்றாம் வாக்கு.
ஹஹஹ்ஹஹ் ஆமாம்!!! மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு...
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குதம +1
மிக்க நன்றி கரந்தை சகோ ரசித்தமைக்கு...
நீக்குவித்தியாசமாக உள்ளது. ரசித்தேன். அது சரி, கடைசியில் கில்லர்ஜியை இழுத்தது ஏனோ?
பதிலளிநீக்குமிக்க நன்றி முனைவர் ஐயா! ரசித்தமைக்கு.
நீக்குகில்லர்ஜியை இழுத்ததற்குக் காரணம் கீதாக்காவுக்குச் சொன்னதேதான்அது வேறு ஒன்றுமில்லை....கில்லர்ஜியிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் அவ்வைஷன்முகன் என்று பெயர் சொல்லலாமோ என்று சொல்லிட அட எனக்கும் அதே எண்ணம் இருந்தது...அவ்வைஷண்முகன்/கி என்று இரண்டுமே சொல்லி கற்பனைக்கு விட்டுவிடலாம் என்று நான் நினைத்ததைச் சொல்ல அவர் இதனை மிகவும் ரஸித்ததாகச் சொன்னார்...அதனால் பி குவில் அவருக்கு நன்றி சொல்லி விட்டு ப்ராக்கெட்டைக் க்ளோஸ் பண்ணவும் திடீரென்று அந்த நன்றியை வைத்தே அவரே அந்த 70 வயது மனிதராக இந்தக் கதையில் வந்தால் என்று யோசித்து அவரைக் கலாய்த்தேன்....அவ்வளவுதான் .!!!!
அது சரி ,ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலேன்ன,ரோஜா ரோஜாதானே :)
பதிலளிநீக்குஅதானே!! ஹஹ மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு
நீக்குஇந்த கதையின் நாயகன் கில்லர்ஜியோ?
பதிலளிநீக்குஹஹஹஹ்ஹ் வாங்க மதுரை சகோ... அப்படியும் வைத்துக் கொள்ளலாமோ??!!!!! அதான் கலாய்த்தேன் அவரை...
நீக்கு2 தமிழன்களில் ஒருவர் நீங்கள் தான் ஹிஹிஹி
மிக்க நன்றி மதுரைத் தமிழன் சகோ...
ஐம்பதுல ஆசை வரும்போது எழுபது வயசில் ஆசை வந்தா தப்பில்ல. அதுமில்லாம, இப்ப்லாம் எழுபது வயசுக்காரங்க போடும் ஆட்டம்தான் வாட்ஸப்ல வைரலா வருது.
பதிலளிநீக்குஹஹஹஹ் ராஜி சரிதான். ஆனா என்னுடைய கதாநாயக இந்த ஓல்ட் மேன் ரசிக்கத்தான் செய்கிறார்....வில்லங்கம் எல்லாம் இல்லை ஹஹஹ
நீக்குமிக்க நன்றி ராஜி
கில்லர்ஜி அண்ணாக்கு எழுபது வயசா?! மீசையை பார்த்தா அப்படி தெரியலியே
பதிலளிநீக்குஎன்ன ராஜி நீங்க இந்தக் காலத்துல இப்படி ஒரு கேள்வி ஹஹஹ்ஹ் கில்லர்ஜி எவ்வளவு பாடு பட்டு அந்த மீசையை பாதுகாத்து வரார்...அப்போ அதுக்கு மை கூடவா தீட்டாம இருப்பார் ....70 ஆனா என்ன...ஹிஹிஹிஹி...கிலர்ஜி மீ எஸ்கேப்...
நீக்குஎன்னது...? சிந்தனை வித்தியாசமாக உள்ளது...! ஆடி வெயிலோ...? ஹா... ஹா...
பதிலளிநீக்குஹஹஹஹஹ் டிடி ஆமங்க இங்க ரொம்பவே வெய்யில்தான்...மிக்க நன்றி டிடி....
நீக்குகொஞ்சம் குழப்பமாக இருந்தது. கடைசியில் ஓரளவு ரசித்தேன். இரண்டு விஷயம் உங்களுக்கு.
பதிலளிநீக்கு1. ஆண்கள் வயது ஏற ஏற, அவர்கள் ரசிக்கும் பெண்களின் வயதும் ஏறும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். (அதாவது, 30 வயசில், 16-18, 40 வயசில் 28-32, 50ல் 40,..70ல் 60 என்று). கொஞ்சம் பேர்கிட்ட செக் பண்ணிப் பாருங்க. அப்படி இல்லை.
2. "சாமுத்திரிகா லட்சணங்கள் என்று சொல்வார்களே" - ஏங்க.. இதைப் போல ஒரு மொக்கை கிடையாது. எது சாமுத்ரிகா லட்சணம் என்று பாருங்கள்.
த ம போட்டாச்சு.
1. இல்லை நெல்லை இளம் பெண்களை ரசிப்பார்கள் என்பது நன்றாகவே தெரியும்...எத்தனைக் கல்யாணங்களுக்குச் செல்கிறேன் ஹிஹிஹிஹி...(செல்கிறேன் நோட் இட் நெல்லை...அதாவது இளம் பெண் ஹிஹிஹிஹிஹி) நீங்கள் சொல்வதும் தெரியும் நெல்லை. இங்கு நான் எடுத்துக் கொண்டது ஒரு வயோதிகர் அவ்வளவே!!!! அவர் கொஞ்சம் நினைவுகள் அப்படியும் இப்படியுமாக....என்று இருப்பவர் ஆனால் மிகவும் ரசனை மிக்கவர்...
நீக்கு2. நெல்லை நான் இதை எழுதி வைத்து ஒரு 1 1/2 வருடம் அல்லது அதற்கு மேலும் இருக்கும் வேர்ட் டேட் 2015 சொல்லுச்சு. அப்புறம் இப்ப அதை கொஞ்சம் மாத்தி...போட்டேன். அப்போ சாமுத்த்ரிகா லட்சணம் என்று யாரோ பெண் பார்ப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது அப்படி என்றால் என்ன என்று கூகுளில் தேடினேன் தான்...ஒவ்வொண்ணும் ஒவ்வொண்ணு சொல்லிச்சு. எனக்கு ஒன்றுமே புரியலை. அழகு என்பது அவரவர் பார்வையில் தான் உள்ளது என்பது என் எண்ணம். அதற்கு ஒரு வரையறை எல்லாம் இல்லை. அப்படிப் பார்த்தால் இங்கு நான் சொல்லியிருக்கும் 65 வயது பாட்டியும் அழகுதானே!!! ஹஹஹ் (இப்படி நாம சைக்கிள் கேப்ல சொல்லிக்கணும்ஹிஹிஹ்) எனவே இந்த சமுத்ரிகா லட்சனம் என்பதற்கு கூகுள் சொல்லும் எந்த இலக்கணைத்தையும் எடுத்துக் கொள்ளாமல், நாம் வாய் வார்த்தையாகச் சொல்லுவது போல் பொத்தாம் பொதுவாக பெண் கிளி போல இருக்கிறாள் என்று சொல்லுவது இல்லையா. ராஜகுமாரி போல இருக்கானு சொல்லுவதுண்டில்லையா..குத்துவிளக்காட்டம் இருக்கானு..சொக்கத் தங்கம் என்று சொல்லுவது இல்லையா...அப்படியான ஏதோ ஒன்று இருக்கட்டும் என்றுதான் சும்மா சா ல..வைப் போட்டேன். அதுக்கு அர்த்தம் எல்லாம் எங்கிட்டக் கேக்கப்படாது ஹிஹிஹிஹி....
எப்படியோ ஓரளவுக்கு ரசித்தமைக்கு நன்றி நெ த...ஹஹஹ்ஹஹ் (30 வயசில், 16-18, 40 வயசில் 28-32, 50ல் 40,..70ல் 60...ஹஹஹஹ் ரசித்தேன்!!..)
நெல்லை 79 வயது வாலிபர் ஜி எம் பி ஸாரின் கருத்தைப் பாருங்கள்!!!ஹஹஹ் //பெண்கள் அவர்களின் மத்திம வயதில்தான் அழகாய்த் தெரிகிறார்கள் . இது ஒரு 79 வயது இளைஞனின் கருத்து//
நீக்கு"ட்விஸ்ட்" டின் ரோல் புரியுது ,
பதிலளிநீக்குசும்மா சொல்லக்கூடாது செம !
ஆனால் கில்லர்ஜீயின் ரோல் என்னன்னு புரியல .
ஹஹஹஹ் அருணா நன்றி! கில்லர்ஜி ரோல் பத்தி சொல்லிருக்கேனே ரெண்டு பேருக்குப் பதில்...அவரைக் கலாய்த்தல்!!! சும்மா அந்த 70 வயசு ரோல்தான்...!!ஹிஹிஹி
நீக்குமனம்போனபடி எழுதுவது என்பதில் இதுவுமொரு வகையோ பெண்கள் அவர்களின் மத்திம வயதில்தான் அழகாய்த் தெரிகிறார்கள் . இது ஒரு 79 வயது இளைஞனின் கருத்து
பதிலளிநீக்குஹஹஹ்ஹ் அப்படியும் கொள்ளலாம் ஸார்! அதான் அந்த 70 வயது வாலிபர் ரசிக்கிறார் போலும்!!ஹஹ்ஹ
நீக்குமிக்க நன்றி ஸார்!!
எதிர்பாராத டுவிஸ்டு.. சிரித்து ரசித்தேன். தென்னைமரப்பேயும் நகைப்பு.
பதிலளிநீக்குமிக்க நன்றி அப்பாதுரை ஸார்...தென்னைமரப் பேய் ஹஹ் ஸார் எனக்கு என்னவோ பேய் என்றால் பிடிக்கும், அதைப்பற்றிய கதைகளும் பிடிக்கும். தமிழ்ப்படப் பேய்கள் அல்ல...ஹஹஹ்.... நகைச்சுவைப் பேய்கள்...உங்கள் பல்கொட்டிய் பேய் போன்று....
நீக்குபடித்து இரசித்தேன்
பதிலளிநீக்குமொஹம்மது தம்பி மிக்க நன்றி ரசித்தமைக்கு
நீக்குஒரு மிகச் சிறந்த கதாசிரியரின் கை தேர்ந்த எழுத்தாய் ஆரம்பத்தில் தோன்றியது எனக்கு உங்களின் எழுத்தைப் படித்த போது!
பதிலளிநீக்குரசித்தவாறே ஒரு அருமையான சிறுகதையை நோக்கிப்போகிறோம் என்று எத்ர்பார்த்துக்கொண்டே போனால் க்டைசியில் காமெடியில் முடித்து ஏமாற்றி விட்டீர்கள்!!
மிக்க நன்றி மனோ அக்கா! ஓ!! ஏமாற்றமாகிவிட்டதோ...கருத்தில் கொள்கிறேன்...மிக்க நன்றி அக்கா.
நீக்குமுழு பதிவையும் கண் இமைக்காமல் ஒரே மூச்சில் படிக்க வைத்துவிட்டீர்கள்; பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கோவிந்த ராஜு ஐயா! தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்
நீக்குSuper! Keep confusing,that is the highway to humour
பதிலளிநீக்குபெண் மாடாய் வேலை செய்கிறாள், பேயாய் வேலை பார்ப்பாள் என்பது இதுதானா?
பதிலளிநீக்குஅருமையான அவள்.
யாராக இருந்தால் என்ன? கற்பனை கதாநாயகி மனம் கவர்ந்தாள்.
ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கே உரிய பாணியில் புனையப்பட்ட இந்த விஷய குவியலில் வரும் "நாயகியனுக்கு" பொருத்தமான பெயராக எனக்கு தோன்றுவது......."அஷ்ட லக்ஷ்மணனி".
பதிலளிநீக்குஅருமை.
கோ
சிறப்பான பதிவு! பார்வைக்காக Spa Lanka & மசாஜ் நிலையம்
பதிலளிநீக்கு