இந்த வருட நவராத்திரி கொலு - என் பார்வையில் பட்டதை மூன்றாவது விழியிலும் சேமித்தேன். கொலு முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. தாமதமாகத்தான் வெளியிடுகின்றேன். ஒரு வழியாக இன்று வெளியிட்டுவிடலாம் என்று இதோ உங்கள் பார்வைக்கு....கொலு மட்டும்தான் சுண்டல் எதுவும் கிடையாது! ஊசிப்போய்விட்டது.
நல்ல காலம்! அந்த நேரத்தில் மோடியின் திட்டம் அறிவிக்கப்படவில்லை! .....பட்டிருந்தால் பல பொம்மை வியாபாரிகளுக்கும், கலைஞர்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கும்! இப்போது டிசம்பர் மாத இசை விழா சோக கீதம் பாடுவது போல் அப்போதே நவராத்திரி பொம்மைகள் எல்லாம் சோகமே வடிவாக இருந்திருக்கும். மக்கள் எல்லோரும் ஏடிஏம் வாசலிலும், வங்கிகளின் வாசலிலும் தவமிருந்திருப்பார்கள்!
இதோ புகைப்படங்கள்..
கும்பகர்ணன் செட்
-----கீதா
கொலு பொம்மைகள் அழகு
பதிலளிநீக்குமிக்க நன்றி கில்லர்ஜி. வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குபலைடத்துக் கொலுப்படங்கள் போல் தெரிகிறதே கொலு வைக்கும் போது அதற்கென வ்வழி முறைகள் உண்டு என்பார்கள் பலரும் அவர்களது கலை எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள்
பதிலளிநீக்குஆமாம் ஜிஎம்பி சார் பல வீடுகளில் எடுத்தவைதான். மிக அருமையாக வைத்திருந்தார்கள் சார்.
நீக்குதாமதம் ஆனால் என்ன ரசிக்கும்படியான கொலுப் படங்கள். எல்லாமே அனுபவித்து வைத்திருந்திருக்கிறார்கள். கும்பகர்ணன் அசத்தல்!
பதிலளிநீக்குஆமாம் கீதாக்கா, மிக மிக ரசனையுடன் வைத்திருந்தார்கள். கும்பகர்ணன் என் மாமாவின் பேத்தி கல்யாணம் முடிந்து வரும் முதல் நவராத்திரி என்பதால் அவளது புகுந்த வீட்டில் இங்கிருந்து வாங்கி வைத்த புதிய செட்...
நீக்குமிக்க நன்றி அக்கா வருகைக்கும் கருத்திற்கும்
#கொலு முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.#
பதிலளிநீக்குஆனாலும் கூட படங்கள் அப்டேட்டா இருக்கின்றனவே ,குறிப்பாக அந்த கும்பகர்ணன் :)
ஹஹஹ் ஆமாம் பகவான் ஜி அந்தக் கும்பகர்ணன் எல்லோரையும் கவர்ந்துவிட்டான்!!!
நீக்குமிக்க நன்றி ஜி வருகைக்கும் கருத்திற்கும்
அற்புதமான கொலு
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் பார்த்து இரசித்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ரமணி சார் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும். வண்ணமயமான பொம்மைகள் எப்போதுமே மனதிற்கு மகிழ்வளிப்பவைதானே!
நீக்குகொலு முடிந்தால் என்ன
பதிலளிநீக்குகொலுக் காட்சிகள் அருமை அருமை
அழகு
தம +1
மிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!
நீக்குஅருமை. டிசம்பர் மாதத்தில் கொலு பார்க்கக் கிடைத்ததில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குகொலு பொம்மைகள் அசத்தல்.
மிக்க நன்றி வெங்கட்ஜி! டிசம்பர் மாதத்தில் கொலு பார்க்கக் கிடைத்ததில்// ஹஹஹ் சரிதான் இப்படி பதிவுகள் போடும் வசதி இருப்பதால் எல்லா மாதத்திலும் பார்க்கமுடியும் இல்லையா
நீக்குகும்பகர்ணன் செட் எனக்கு மிகவும் பிடித்தது. உரிய நேரத்தில் நீங்கள் இந்தப் படத்தைப் பதிப்பித்திருந்தால் எங்கள் வீட்டுக் குழந்தைகள் விரும்பி வாங்கி, கொலுவில் வைத்திருப்பார்கள். அதனால் என்ன, எல்லாப் புகழும் உங்களுக்கே! - இராய செல்லப்பா (நியூ ஜெர்சியில் இருந்து)
பதிலளிநீக்குமிக்க நன்றி செல்லப்பா சார். நியூஜெர்சி என்பதால் நேரம் கிடைக்கிறதோ சார்!!!!ஓ! அடடா சார் இப்படி ஒரு நன்மை இருப்பது அறியாமல் போய்விட்டதே! குழந்தைகள் மகிழ்ந்திருப்பார்கள் இல்லையா சார். தாமதமாக்கிவிட்டதற்கு வருந்துகிறேன் சார்...இனி இது போன்றவற்றை உடனே பகிர்ந்துவிடுகிறோம் சார்.
நீக்குமிக்க நன்றி சார் நியூஜெர்சியிலிருந்து இங்கு வந்து கருத்திட்டமைக்கு!!! ஹஹஹஹ்
கும்பகோணத்தில் நான் இளமைப்பருவம் முதல் விரும்பி ரசித்ததில் ஒன்று கொலு. கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் ஒன்பது படிகளில் பெரிய பெரிய பொம்மைகளாக வைத்திருப்போம். எங்கள் தெருவில் பெரிய, அதிக கொலுக்கள் இருந்த வீடுகளில் ஒன்று எங்களது வீடு. நல்ல கொண்டாட்டம். நல்ல சுண்டல். நல்ல விளையாட்டு. ஒவ்வொரு வீடாகப் போட்டி போட்டுக்கொண்டு பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் நண்பர்களுடன் செல்வது வாழ்வில் மறக்கமுடியாதது. குடும்ப சூழல் கும்பகோணத்தைவிட்டு வெளியேறும் நிலை. கும்பகோணத்தைவிட்டு வெளியேறியதில் இழந்த ஒன்றில் கொலுவும். ஒவ்வொரு கொலுவிற்கும் அவசியம் கும்பகோணம் சென்று கோயில்களில் பார்த்துவருகிறேன். இன்றும் என்றும் கொலு என்பது என் நெஞ்சில். அந்நாள்களின் நினைவுகள் இன்னும், இன்றும்.
பதிலளிநீக்குஎன் மனதிலும் ஐயா! நானும் எனது சிறு வயதில் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ரசித்திருக்கிறேன். நான் கொஞ்சம் கற்பனைத் திறனுடன் வைப்பேன் என்பதால் என் உறவினர்கள் அவர்கள் வீட்டில் அலங்கரிக்க என்னை அழைப்பதுண்டு. மணமான பின் என் மாமியார் வீட்டிற்கு ஒவ்வொரு வருடமும், என் மகன் பள்ளி செல்லும் வருடம் வரை வந்து வைத்ததுண்டு. பாராட்டுகளும் பெற்றதுண்டு. அதன் பின் ஒவ்வொரு ஊராக மாறியதில் எல்லாம் விட்டுப் போயிற்று. இன்று பொதுவாக, இங்கு சென்னை நகரத்தில், எங்கள் வீடுகளில் வைக்கப்படும் கொலு என்பது அதன் அர்த்தம் மாறி, பொருட்கள் என்ன கொடுக்கிறார்கள் என்ற ரீதியில் மாறியிருப்பதாலும், பொருளாதார ரீதியாகவும் வைக்க முடியாமல் போனது.
நீக்குநானும் தங்களைப் போன்று கோயில்களில் பார்த்து வருகிறேன் ஐயா. இறைவனின் முன் மனிதர்களில் எந்தவித ஒப்பீடுதலும் இல்லை. எனவே மிகவும் இனிமையாக மகிழ்வாகப் பிரார்த்தித்து ரசித்துவிட்டு வருகிறேன்.
மிக்க நன்றி ஐயா தங்களின் அனுபவங்களை இங்கு பகிர்ந்தமைக்கு
கொலுக் காலம் மீண்ட சந்தோஷம் படங்களைப் பார்க்கும்போது. இவ்வளவு படங்களையும் வலையேற்ற எவ்வளவு நேரம் பிடித்திருக்கும்!!
பதிலளிநீக்குஆமாம் ஸ்ரீராம்! கொலு எப்போது பார்த்தாலும் அதென்னவோ ஒரு சந்தோஷம் தொற்றிக் கொள்கிறது! இப்போது கூட பல கடைகளில் கிறித்துமஸ் கொலு போன்று பொம்மைகளை வைத்து குடில் எல்லாம் வைத்து அழகுபடுத்தியுள்ளார்கள். பார்க்கவே மனதிற்கு ஓர் ஆனந்தம்!
நீக்குஆனால் கொலுவின் போது சென்னையில் ஒவ்வொரு இடமாகப் போவதுதான் கடுப்ஸ்...அலுப்பு...
நேரம் ரொம்பவே பிடித்தது! அதுவும் ஒரு காரணம் தாமதத்திற்கு!
மிக்க நன்றி கருத்திற்கு
ஆஹா பாலன் இயேசு காட்சி தரும் மாதத்தில் கொலு காட்சி,, நல்லா இருக்கு சகோ,, அப்புறம் மோதி இதனை முன்பே அறிவித்திர்ந்தால்,, பொம்மைகள் எல்லாம் சோகத்தில்,,, அருமை சகோ,, படங்கள் அனைத்தும் அழகு,,
பதிலளிநீக்குஆமாம் மகேஸ்வரி...சில கடைகளில் கிறித்துமஸ் கொலு வைத்திருக்கிறார்கள் மிக ரம்மியமாக இருக்கிறது. எனது தோழி வீட்டிலும் வைத்திருக்கிறார்கள். மிக்க நன்றி கருத்திற்கு
நீக்குகொலு பற்றிய அனைத்துப் புகைப்படங்களும் அழகு என்றாலும் அந்த ' கும்பகர்ணன்' பொம்மை அசத்தல்! சிறு வயதில் நானும் என் தங்கையும் நிறைய வீடுகளில் கொலு பார்க்கச் சென்றதும் பாடியதும் நினைவுக்கு வருகிறது!!
பதிலளிநீக்குமிக்க நன்றி மனோ அக்கா. ஆம் நீங்கள் கூட தங்களின் பதிவொன்றில் நீங்களும் உங்கள் தங்கையும் சிறுவயதில் கொலுவில் பாடியது பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள் என்பது நினைவு.
நீக்குமிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்