சனி, 12 டிசம்பர், 2015

எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 2


ஹாங்க்...ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகின்றேன் என்று சொன்னேன் அல்லவா?  எங்கு நிறுத்தினேன்? ம்ம்..உங்களுக்கு இப்போது நடந்த கொடுமையை நினைத்து மனது வருந்தினேன். என்னால் உதவ முடியாத அளவிற்கு நீங்கள் என்னை இப்படிக் குப்பைகளின், நோய்களின் இருப்பிடமாக்கி வைத்திருக்கின்றீர்களே என்று. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நீங்கள், அரசு எல்லோரும் நன்றாக இருங்கள்!

தொடர்கின்றேன். கேட்டுக் கொள்ளுங்கள். இப்போது என் சோகக் கதையைச் சொல்லிவரும் சமயம் ஒருவேளை நான் பொங்கி எழும் பகுதிகள் வரும் போது கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டலாம். எனக்கு மட்டுமில்லை உங்களுக்குமே கூட கோபம் வரலாம்.  மனம் வருந்த நேரிடலாம்.

நான் ஆரம்பத்தில் சொன்னேன் அல்லவா விஜயவாடாவரை வளர்ந்துள்ளேன் என்று.  அது மட்டுமல்ல நான் காக்கிநாடா அருகில் உள்ள பாண்டிச்சேரியின் யானம் பகுதியில் எனது மிக மூத்த சகோதரியான கோதாவரியுடன் கைகோர்த்து நீட்டி வளர்க்கப்பட்டேன். ஆங்காங்கே. விஜயவாடாவில் மற்றொரு சகோதரியான கிருஷ்ணாவுடனும் ஆங்காங்கே கைகோர்த்துள்ளேன். எனது பாதை காக்கிநாடாவில்/யானம் இப்படி ஆரம்பித்து, விஜயவாடா, தெனாலி, எல்லூர், நெல்லூர், கூடூர், சென்னை நகரம், சோழிங்கநல்லூர், முட்டுக்காடு, மஹாபலிபுரம், கல்பாக்கம், மரக்காணம் வரை வளர்ந்து வங்காளவிரிகுடாவில் இணைகின்றேன். இப்போது நினைத்துப் பாருங்கள் நான் எத்தகைய பெருமை உடையவள் என்று!

ஆங்கிலேயர்கள் இருந்தது வரை அவர்கள் சுயநலத்திற்காக என்று சொன்னாலும் நான் நன்றாகப் பேணப்பட்டேன். அதன் பின்னர் நான் கண்டுகொள்ளப்படவில்லையாதலால், 1965, 66, மற்றும் 76 களில் ஏற்பட்ட புயலில் நான் பாதிக்கப்பட்டேன். நான் தான் சீரழிந்துவிட்டேனே! அதன் பின் நான் ஒடுக்கப்பட்டேன். ஒதுக்கப்பட்டேன். உபயோகப்படுத்தவில்லை.  பேணவும் இல்லை. நீங்கள் எல்லோரும் என் மீது ஈவு இரக்கம் இல்லாமல் எல்லா குப்பைகளையும், தொழிற்சாலைக் கழிவுகளையும் கொட்டிக் குப்பை கொட்டும் கிடங்காக மாற்றினீர்கள். வாழ்க நலம்!

வட சென்னையில் உள்ள தெர்மல் பவர் ஸ்டேஷனிலிருந்து வெப்பமான கழிவு நீர், சாம்பல் உட்படக் கொட்டியதால், வடசென்னையில் என் உடல் மிக மிகக் கறுப்பாக மாறியது.  இப்போது நான் மலேரியா கொசுக்களின் இருப்பிடமாகி அந்த நோயைப் பரப்பும் துர்பாக்கியவதியாகி உள்ளேன். யாரால்? உங்களால்.  வெட்கித் தலைகுனியுங்கள்.

Image result for buckingham canal
The Government has said that it plans to nationalise the Buckingham Canal and make it a navigable waterway once more. This is an excellent idea and is to be welcomed. However, like many government plans, it may prove well nigh impossible to implement, for on the ground the canal has practically ceased to exist, particularly in the stretch through Chennai.This is not a new plan and time and again several such intentions have been aired only to be put back on the shelf. The same plan was announced in 2002 and there was no action after that.

உங்களுக்குத் தெரியுமா, சென்னையில் 12 சிறிய, சிறிய எனக்கு முளைத்தக் கைவிரல்கள்/நீர்ப் பிரி முகடுகள் இருப்பது? முன்பு ஒரு காலத்தில் சென்னை முழுவதுமே நிறைய என் குடும்பத்தார் இருந்தனர். ஆனால், இப்போது..ம்ம் அதைச் சொல்லிப் பயன் இல்லை. இப்போது உள்ளவை பற்றி மட்டும் சொல்லுகின்றேன். நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள். 12 நீர்ப்பிரி முகடுகள். இவற்றில் 2,3 ஐத் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் கேட்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. ஹும் அவை எல்லாம் நல்ல நிலையில் இருந்திருந்தால் உங்களுக்கும் நினைவு இருக்கும். உங்களைப் பொருத்தவரை நாங்கள் குப்பைக்கிடங்கு. உங்களால் ஆக்ரமிக்கப்பட்டுக் குட்டிச் சுவராகி இருக்கும் போது உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்.

1.   காப்டன் காட்டன் கால்வாய்
2.   கொளத்தூர் கால்வாய்
3.   விருகம்பாக்கம் கால்வாய்
4.   வேளச்சேரி கால்வாய்
5.   ஒட்டேரி கால்வாய்
6.   வடக்கு பக்கிங்ஹாம் கால்வாய்
7.   அடையார்
8.   கூவம்
9.   தெற்கு பக்கிங்ஹாம் கால்வாய்
10.  ராயபுரம் கால்வாய்
11.  மத்திய பக்கிங்ஹாம் கால்வாய்
12.  மாம்பலம்/நந்தனம் கால்வாய்

எனது கொள்ளளவு என்ன என்று தெரியுமா? 5,600 கன அடி நொடிக்கு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மழைக்காலங்களில் என்னால் 600 கன அடிதான் சுமந்து ஓட முடிகின்றது. பாருங்கள் என் நிலைமையை.  இதற்கு யார் காரணம் என்று இப்போதேனும் யோசியுங்கள். எனது கன அடியை 1000 த்திற்கு உயர்த்த வேண்டும் என்று சொல்லி, நீர்ப்பிரி முகடுகளில் குவிந்து கிடக்கும் சாக்கடைக் கழிவுகளையும் சுத்தப்படுத்தி, இவற்றின் கரைகள், எனது கரைகள் எல்லாவற்றையும் உறுதிப்படுத்தி, எங்களை எல்லாம் ஆழப்படுத்தி மழை நீரைச் சுமக்க உதவச் செய்யப்போவதாக மத்திய அரசு சொல்லத் தொடங்கியது எந்த வருடம் தெரியுமா? ஜனுவரி 1, 2001. ஆனால், என்ன நடந்தது இதுவரை?

இங்கு உங்களுக்கு ஒரு விசயத்தைச் சொல்லுகின்றேன். இது என்னைப் பற்றிய பெருமை என்று நினைக்க வேண்டாம். என்னால் ஏற்படும் நன்மையைப் பற்றி. என் தோழி கீதா, அவளது இளம் நிலை பொருளாதாரப் பட்டப்படிப்பின் போது, சென்னைக்கு ஒரு நுழைவுத் தேர்வு எழுத வர நேர்ந்ததில் என்னைப் பார்த்து விட்டு, என் பெயரைக் கேட்டுத் தான் மனதில் பதித்திருந்தவை எல்லாம்  கானல்நீராகியதை நினைத்து என்னைப் பார்த்து வருந்தி என்னுடன் அன்று தொடங்கிய நட்பு இதோ இன்றும் என் கரையோரம் நடைப்பயிற்சி செல்லும் போது என்னுடன் பேசிக் கொண்டே செல்வது வரை தொடர்ந்துள்ளது.

ஊருக்குச் சென்றவுடன், அவளது விருப்பப் பாடமாகிய விவசாய பொருளாதாரப் பாடத்தில், நீர் மேலாண்மை பற்றி ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதி சமர்ப்பிக்க விழைந்த போது சென்னையில் எனது முக்கியத்துவத்தைப் பற்றியும், நீர் மேலாண்மை பற்றியும் எடுத்துக் கொண்டு எழுதிய போது அவள் குறிப்பிட்ட வரிகள் இன்று மெய்யாகிவிட்டது. “பக்கிங்ஹாம் கால்வாயையும், அதனுடன் சேரும் சிறிய நீர் வடிகால்வாய்களையும்  பராமரித்து, அதை நீரோட்டம் மிக்கதாகச் செய்தால், பருவமழைக்காலத்தில் சென்னை வெள்ளத்திற்கு உட்படாமல், வெள்ள நீர் வடிகால்வாயாக அது உதவுவது மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் சென்னைக்கு அது பலவிதங்களில் உதவக் கூடும்” என்றும் என்னைப் பற்றிய பெருமையை எடுத்துரைத்த அந்தக் கட்டுரையை அவளது தனிப்பட்டக் காரணங்கள் சில பல என்று சமர்ப்பிக்க முடியாமல் போனது என்பது துரதிர்ஷ்டமே. இது நடந்த வருடம் 1982-83.

இதோ 2014 ஆம் வருடத்து அறிக்கையில். தென்சென்னையில் நான் நல்ல வடிநீர் கால்வாய், என்னிடமிருந்து ஒரு குறுக்குக் கால்வாயை, ஒக்கியம் மடு எனும் இடத்திலிருந்து கடலில் கலப்பதற்கு அமைப்பதற்காக ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் (JNNURM) கீழ், 100 கோடி ரூபாய் அளவில் தொடங்கப்பட்டு கைவிடப்பட்டது. பாருங்கள் என் கதையை. அந்தத் திட்டம் நிறைவேறியிருந்தால், நொடிக்கு 3,500 கன அடி வெள்ள நீரை, தென்சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதியிலிருந்து நான் வெளியேற்றியிருப்பேன்.

வெள்ள நீர் பதிப்புத் தடுப்புத் திட்டம் தவறாகக் கையாளப்பட்டதாலும், இந்தத் திட்டம் தொடங்குவதற்குக் காலதாமதம் ஆனதாலும் கைவிடப்பட்டது.  காரணம் தனியார்கள் சிலரின் சுயநலத்திற்காகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், இதற்கு, பொதுப்பணி துறை அதிகாரிகள் சிலர் உடந்தையாகச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டும் எழுந்ததால்.

இப்படிப் பல திட்டங்கள் கோடிகள் விழுங்கி.... இந்தத் திட்டம் மட்டுமல்ல, நான் பள்ளிக்கரணை சதுப்புநிலத்திலும் கூட கைகோர்க்கும் திட்டம் நிறைவேறியிருந்தால், நான் பார்த்து, பிறந்து, வளர்ந்த என் மக்கள், சென்ற வாரம், என்னால் உதவ முடியாத இயலாமையில், என் கண் முன்னே அடித்துச் செல்லப்பட்டதைப் பார்த்த போது என் மனம் நொந்துவிட்டது. இன்னும் தீரவில்லை என் கண்ணீர். ம்ம்ம் என்னால் இப்போதுத் தொடர இயலவில்லை. மனம் நொந்துகிடக்கின்றது. என்னை என் துக்கம் தீர அழ விடுங்கள்....
The CGWB studies have pointed out the contamination of groundwater along the Buckingham Canal and the ‘adverse impact on ground water regime’. Photo: M. Karunakaran
The CGWB studies have pointed out the contamination of groundwater along the Buckingham Canal and the ‘adverse impact on ground water regime’.  நன்றி த ஹிந்து.

உங்களாலும், அரசின் மெத்தனத்தினாலும், சட்டம் அமலாக்கம் கடுமையாக இல்லாததனாலும் நடக்கும் சுற்றுப்புறச்சூழல் கொடுமையும், உயிரழப்புகளையும் பாருங்கள்...இனியாவது திருந்துங்கள்..


தொடர்கின்றேன்..


--கீதா

படங்கள் : இணையத்திலிருந்து

ஆதாரங்கள் : பல வருடங்களாக வெளி வந்த அறிக்கைகள், செய்திகள்

37 கருத்துகள்:

  1. திருந்துவதா?
    நாமா?
    நடக்கிற காரியமா என்ன
    தம 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ..திருந்த வேண்டும் இல்லையேல் இன்னும் நாம் பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடலாம்...

      நீக்கு
  2. //5,600 கன அடி நொடிக்கு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது மழைக்காலங்களில் என்னால் 600 கன அடிதான் சுமந்து ஓட முடிகின்றது.// வெள்ளம் வராமல் என்ன செய்யும்? உணர்ந்திருந்தால் செயல்பட்டிருக்கவேண்டும்...ஹ்ம்ம்ம் அன்றைக்கே அருமையாகக் கட்டுரை உங்களுக்கு வாழ்த்துகள் கீதா..இன்று உங்கள் மனநிலை எப்படி இருக்கும்!! திட்டமெல்லாம் பெயரளவில் காணாமல் போனதால் வந்த அழிவு எவ்வளவு பெரிது! :( இனியாவது திருந்துவார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி க்ரேஸ். வாழ்த்துகளுக்கு. ஆனால் அது சமர்ப்பிக்க முடியாமல் போனது. இன்று சத்தியமாக ஒவ்வொரு நாளும் அதன் கரையோரம் நடைப்பயிற்சி மேற்கொள்கையில் மனம் வருந்துகின்றது.

      நீக்கு
  3. அரசாங்கம் செய்ய விட்டுப் போன பற்பல நல்ல விஷயங்களை இப்போது செய்து விடுதல் நலம். மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும் இந்நிலையில் எதிர்ப்பும் கம்மியாக இருக்கும், சிலபேர்கள் ஒத்துழைப்பு கூடத் தருவார்கள் - அனகாபுத்தூரில் நடப்பது போல. மேலும் மீண்டும் ஒரு பெருமழை (மழையாமி!) வரும் என்ற பயமுறுத்தல் இருக்கும் நிலையில் அதன் பாதிப்புகளைக் குறைக்கலாம்.

    நல்ல ஆராய்ச்சிக் கட்டுரை. தன்னிலையில் சொல்வது போல அமைந்திருக்கும் நடையும் நன்றாயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் ஸ்ரீராம் செய்தால் மிக நலல்தே. ஆனால் பாருங்கள் ஒரு சில பகுதிகளில் இந்தக் குறுக்குக் கால்வாய்கள் வெட்ட விடாமல் தடை போடுவதே தனியார்கள்தான். அடுத்த பகுதியில் வரும்.

      ம்ம் எதிர்ப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் இது பெரிய திட்டம் ஆச்சே செலவும் கூடுதல். இதுவரை போட்ட பணம் எல்லாம் எங்கே? ஒருவேளை அதுவும் பக்கிங்ஹேம் கால்வாயில் மக்கி நாறுகின்றதோ..

      நீக்கு
    2. ஸ்ரீராம் ஹை மழையாமி !!! நல்ல சொல் சுனாமி போல...நாங்களும் இனி உங்கள் சொல்லைப்பயன்படுத்தப்போகின்றோம்.....நன்றி

      நீக்கு
  4. சிறப்பான நடை.

    சிறப்பாக இருந்த ஒன்றை எப்படி சீரழிப்பது என்பதை நமது அரசும் மக்களும் செய்து காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் சீரமைக்கப்பட வேண்டும். செய்வார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கு, திருந்தியே ஆக வேண்டிய சூழல்...செய்வார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் ஆறுமாதத்தில் ஆட்சி மாற்றம். ஒருவர் தொடங்குவதை மற்றொருவர் தொடர்வதில்லையே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டால்தானே..ஈகோ விளையாடும் போது என்ன செய்ய..

      நீக்கு
  5. 'மழையாமி'யில் மரணத்தைத் தழுவுவோமே தவிர திருந்த மாட்டோம் ,திருந்தவும் விட மாட்டோம் :)
    அருமையான புது வார்த்தைக்கு நன்றி ஸ்ரீராம் ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி பகவான் ஜி! நல்ல அருமையான வார்த்தைதான் இல்லையா ஜி! அப்படித்தானே. ஆனால் மழை மரணத்தைத் தழுவ வைப்பதில்லை நாம் தவறு செய்வதால்தானே ஜி..இல்லையா

      நீக்கு
  6. திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு என்று இந்நிகழ்வினை நாம் மனதில் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ள வேண்டும் நிச்சய்மாக முனைவர் ஐயா....நன்றி ஐயா..

      நீக்கு
  7. நல்ல அருமையான கட்டுரை, ஐரோப்பிய நாடுகளில் நீர் வழிப் பாதை அமைத்தோ அல்லது இருக்கும் நதிகளை நன்றாக பேணி பொருட்கள் எடுத்து செல்ல உபயோகப் படுத்துகிறார்கள், ஆனால் நம் நாட்டில் இயற்கையாக அல்லது செயற்கையாக வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்டதை நாசம் செய்து புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கும்மாச்சி. ஐரோப்பியர்கள் நீர்வளத்தை அருமையாக உபயோகிக்கின்றார்கள். நாம் ஆங்கிலேயரைக் குற்றம் சொல்லுகின்றோம் அவன் சுயநலத்திற்காகச் செய்தது என்று இருந்தாலும் பேணியிருக்கின்றான். ஆனால் நாமும் அதே சுயநலத்தோடுதான் ஆனால் அழிவை நோக்கி...

      மிக்க ந்னறி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  8. ஒரு நதி கண்ணீர் வடித்து அழுகின்றது இதற்க்கான காரணவாதிகள் முதல் குற்றவாளி மக்களாகிய நாமே... தொடர்கிறேன் நானும்...
    தமிழ் மணம் 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி. காரணம் மக்கள் என்பது கொஞ்சம் தான். பல விஷயங்களை அரசுதான் முனைந்து செய்ய வேண்டும். மக்கள் செய்ய வேண்டியது குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டாமல், ஆட்சியாளர்களை ஒழுங்காகத் தேர்வு செய்வது...நன்றி ஜி!

      நீக்கு
  9. எத்தனை ஆதாரங்கள்,,என்னென்ன சேதாரங்கள், பாவங்கள் தூக்கிச்சுமக்கும் பாவிகள்.. அய்யோ எனப்போவார்கள்...கால்வாய்க்கு கழுவாய் தேடாதவரை...வெள்ளம் தொடரத்தான் செய்யும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா ஆமாம் நிச்சயமாக..அடுத்ததில் பாருங்கள் எத்தனைக் கோடியை விழுங்கியிருக்கின்றார்கள் என்று...

      நீக்கு
  10. ஏராளமான விவரங்களுடன் அற்புதமான பதிவு இது. தேவையான நேரத்தில் வெளியிட்டிருப்பது இன்னும் சிறப்பு.
    த ம 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  11. அன்புள்ள சகோதரி,

    பக்கிங்ஹாம் கால்வாய் தன் வரலாறை அருமையாகக் கூற வைத்த சகோதரி கீதாவின் கீர்த்தி ஓங்குக!

    நன்றி.
    த.ம.10

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மணவை சகோ தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  12. இனியாவது திருந்துங்கள்...
    என்று விட்டுவிட முடியாதே....
    இனித் திருந்தித் தான் ஆகணும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ யாழ்பாவாணன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். நிச்சய்மாகத் திருந்தித்தான் ஆக வேண்டும்.

      நீக்கு
  13. எத்துணை செய்திகள்.. எத்துணை வரலாற்றுத் தகவல்கள், மனிதச் சுயநலம், ...!

    உங்களது வாசிப்பும் இந்த இடுகைக்கு உங்களின் உழைப்பும் கண்முன் வந்து போகிறது சகோ.

    வரலாறு குறிப்பாகச் சூழலியல் வரலாறு இப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.

    எதை எதற்காகக் கற்கிறோம் என்றறியாமல் படித்துக் கடந்து மறந்து போகின்ற மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இதுபோன்று ஆர்வமாகப் படிக்கவும் யோசிக்கவும் வைக்கின்ற பாடங்கள் இணைக்கப் பெற வேண்டும்.

    தொடர்கிறேன்.

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ விஜு நாங்கள் உங்கள் பதிவுகள், க்ரேஸ் அவர்களின் பதிவுகளை வாசிக்கும் போது நினைத்து சொல்வதும் உண்டு. உங்களைப் போன்றுக் கற்பிக்கவும், பாடங்களை நடத்தவும், க்ரேஸின் அறிவியல் கட்டுரைகள், தகவல் கட்டுரைகள் போன்று பள்ளிகளில் வந்தால் எவ்வளவு ஆர்வமாகப் படிப்பார்கள் என்று.

      //வரலாறு குறிப்பாகச் சூழலியல் வரலாறு இப்படிச் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்.//

      எனது ஆசிரியர்களுக்குத்தான் இந்தப் பெருமை சேரும். அதை ஒரு பதிவாகச் சொல்லுகின்றேன்.

      எதை எதற்காகக் கற்கிறோம் என்றறியாமல் படித்துக் கடந்து மறந்து போகின்ற மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இதுபோன்று ஆர்வமாகப் படிக்கவும் யோசிக்கவும் வைக்கின்ற பாடங்கள் இணைக்கப் பெற வேண்டும்.//

      உண்மைதான் சகோ. நமது பாடத்திட்டம் மாற வேண்டும் என்று நாங்களும் அடிக்கடி நினைப்பதுண்டு.

      உங்கள் பின்னூட்டம் எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கின்றது. நான் வெட்டி என்று பலரிடமும் சொல்லுவதுண்டு. இப்போது உங்கள் மற்றும் எல்லோரது ஊக்கமும் இன்னும் எழுத ஆர்வம் ஏற்படுகின்றது. மிக்க நன்றி சகோ. மிக்க மிக்க நன்றி

      நீக்கு
  14. ஆறு தன் வரலாறு கூறுதல் என்று பள்ளிநாட்களில் படித்ததுண்டு. அதை இத்தனை தரவுகளோடு சுவாரஸ்யாமான நடையில் சொல்ல உங்களால் தான் முடியும் சகாஸ்!!! இதை ஒரு மின்னூல் ஆக்குங்கள். மேலும் பலர் பயன்படட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மைதிலி உங்கள் கருத்திற்கு. உங்கள் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. பார்ப்போம்..முயற்சி செய்கின்றோம்.

      நீக்கு
  15. வணக்கம் சகோ,

    எத்துணை அருமையான தகவல்கள், தரவுகள் சொல்லி செல்லும் விதமும் அருமை சகோ, செய்திகளை நாம் உள் வாங்கிக் கொண்டு அதற்கான செயல்வடிவம் கொடுத்தால் நல்லது தானே,

    தெரிந்தது எல்லாம் கூவம் என்று சொல்லும் ஆறு மட்டும் தான்,, அதுவும் கூவமாய்,,,,,

    நல்ல பகிர்வு மா,

    பதிலளிநீக்கு
  16. மிகவும் வருத்தமும் வேதனையுமாக உள்ளது. கண்முன் இருக்கும் பொக்கிஷத்தின் அருமை தெரியாமலேயே அதை குழிதோண்டிப் புதைத்துக்கொண்டிருக்கிறோம்.. இனியாவது கவனம் வைத்து அதன் பெருமை மீட்போமா? கவலைதான் மிஞ்சுகிறது.

    பதிலளிநீக்கு
  17. மனிதர்களாக இருந்தால்தானே தவறுக்கு வருந்தி திருந்துவார்கள்.......அவர்கள் மனிதர்களே அல்ல.....

    பதிலளிநீக்கு
  18. அப்பப்பா, பிரமிப்பு உண்டாகிறது. எவ்வளவு விஷயங்கள். நீங்களும், கரந்தை சாரும் எனக்கு வரலாற்று ஆசிரியர்களாக இருந்திருந்தால், எனக்கு இன்னமும் வரலாற்றின் மீது ஈடுபாடு ஏற்பட்டிருக்கும்.
    தொடர்கிறேன் சகோ.

    பதிலளிநீக்கு
  19. இந்தளவுக்கு நீங்கள் இதை ஆய்ந்து எழுதியிருப்பதிலிருந்தே இது விதயத்தில் - குறிப்பாக, மக்கள் நலனில் - உங்களுக்கு இருக்கும் அக்கறை புரிகிறது. நல்ல தகவல்கள்! சிறப்பான பதிவு! தொடருங்கள்! தொடர்வேன்!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம்
    சமுக உணர்வுடன் தகவலை பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்.. நிச்சயம் திருந்தியாக வேண்டும்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு