இன்றுஆசிரியர் தினம். கடந்த 25 வருடங்களாக
ஆங்கில ஆசிரியராகப் பணிபுரியும் எனக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு தனியார் வங்கியிலும்,
1987 ஆம் ஆண்டு புனலூர் தென்மலை அருகே உள்ள ஹாரிசன் மலையாளம் கம்பெனியின்
இஃப்ஃபீல்ட் எஸ்டேட்டிலும் பணி புரிந்த போதுதான் ஆசிரியப் பணிதான் எனக்கு மிகவும்
ஏற்றது என்பது எனக்குப் புரிந்தது.
இதனிடையே, தனியார் வங்கி வேலையை இழக்க நேர்ந்த போது எர்ணாகுளத்தில் உள்ள
சயின்ஸ் அக்காடமியில் சில மாதங்கள் ஆங்கிலம் கற்பித்த போது கிடைக்கபெற்ற இனிய
அனுபவம் தான் எனக்கு அதைப் புரிய வைத்தது.
கல்லூரி மாணவனாக இருந்த போதே சாசரின்
காண்டர்பரி டேல்ஸ் முதல் (chaucer’s canderbury tales) ராபர்ட் ஃப்ராஸ்டின்
(Robert Frost) ஸ்டாப்பிங்க் பை வுட்ஸ்
ஆன் அ ஸ்னோயி ஈவினிங்க் (Stopping by Woods on a snowy evening) வரையும், டானியல் டீஃபொ (Daniel Defoe) வின் ராபின்ஸன் க்ருசோ, (Robinson Crusoe) முதல் எர்ன்ஸ்ட் ஹெம்மிங்க்ஸின் (Ernest Hemingway) ஓல்ட் மேன் அட்ன் த் சீ (Old man and the sea) வரையுள்ள இலக்கியப் படைப்புகளைப் படித்துத்
தேர்வெழுதி முதுகலைப் பட்டம் வாங்கியது எனக்கு கரும்பு தின்னக் கூலிவாங்கியது
போலத்தான் அனுபவப்பட்டது. அவர்களது
எழுத்துக்கள், எண்ணங்கள், கருத்துக்கள் வழியாக அவர்கள் மனதுக்குள் நுழைந்து
அவர்கள் கண்டதை எல்லாம் கண்டு, உணர்ந்ததை எல்லாம் உணர்ந்து அவர்கள் வாழ்ந்த
காலகட்டத்தில் அவர்களுடன் பயணித்தபின், மீண்டும் நம் உலகிற்கு வருவதும், பின்
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றை எல்லாம் அசை போட்டு இன்புறுவது என்பதும் இனிமையான
தருணங்கள்தான். (இதையெல்லாம் வாசிக்கும்
போது என்னைப் பற்றித் தவறான எண்ணம் வேண்டாம். கல்லூரி மாணவர்கள் செய்யக் கூடிய
சேட்டைகளை எல்லாம் செய்து, ரிலீசான படங்களை எல்லாம் பார்த்து, இறையருளால் எப்படியோ
அரியர்ஸ் இல்லாமல் 55% மதிப்பெண்களுடன்
நாகர்கோயில் இந்துக் கல்லூரியை விட்டு வெளிவந்த ஒரு சராசரி மாணவன்
அவ்வளவே!)
கணக்கும், கடிதமெழுதும் வங்கிப் பணியிலும்,
தொழிலாளர்களைக் கண்காணிக்கும் எஸ்டேட் பணியிலும் கிடைத்த ஊதியம் உயர்வானதுதான்
என்றாலும், கதைகளும், கவிதைகளும்,
கட்டுரைகளும், இலக்கணமும் கற்பிப்பதில் கிடைக்கும் குறைந்த ஊதியம் கரும்பு தின்னக்
கிடைக்கும் கூலியே, என்பதை உணர்ந்த நான், அப்போதே ஆங்கில ஆசிரியனாக வேண்டும் எனத்
தீர்மானித்தேன். அதன் பின் 1994 வரை எர்ணாகுளத்திலுள்ள அவர் கல்லூரிலும்,
நிலம்பூரிலுள்ள க்ளாசிக் கல்லூரியிலும், கரும்பு தின்று கூலி பெற்று வாழ்ந்தேன். கரும்பு தின்று அவ்வப்போது உதியம் பெற்று
வாழ்ந்தால் போதாதே, வாழ்வின் பின் பாதியில் ஓய்வு தேவைப்படும் போது ஓய்வூதியம்
வேண்டுமே. எனவே, 1995 முதல் இதோ இப்போது பணி புரியும், உயர்
மேல்னிலைப் பள்ளியில் கரும்பு தின்று கூலி பெறுகின்றேன். கல்லூரிகளில் கடித்துத்
தின்னக் கிடைக்கும் செங்கரும்பு (இலக்கியம் கற்பித்தல்) இல்லை எனினும் இதுவும்
கரும்புதான், இனிமைதான்.
இந்த இனிய வாழ்க்கைக்கு, வழிகாட்டித் தந்த என்
வாழ்வில் மறக்க முடியாத ஒரு ஆசிரியரைப் பற்றிச் சொல்லத்தான் நான் உங்கள்
பொறுமையைச் சோதிக்கும் வண்ணம் இவ்வளவு நேரம் சுற்றி வளைத்துப் பேசினேன்.
நான் 1976 ஆம் ஆண்டு போடிநாயக்கனூரில் 1976 ஆம்
ஆண்டு ZKM ஹை
ஸ்கூலில் 9 ஆம் வகுப்பு படித்த போது எனக்குக்
ஆங்கிலமும் கணக்கும் கற்பித்த திரு வீரய்யா வாத்தியார்தான் அந்த அற்புத ஆசிரியர்.
கணக்கு ஆசிரியரான அவர் ஆங்கில அறிவுக்கு அடிப்படைத் தேவையான டென்ஸசை (Tenses) ஒரு பட்டியல் போட்டு தமிழ் மொழி பெயர்ப்புடன்
ஃபார்முலா சகிதம் கற்பித்து, என் மனதில் பசுமரத்தில் பதிந்த ஆணி போல் பதித்து,
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெறும்வரை உதவியது. ஆங்கில வாக்கியங்களை
பிழையின்றி எழுத அப்பட்டியல் இன்றியமையாதது என்பதை உணர்ந்த அவர், கையில்
பிரம்புடன் அப்பட்டியலை நாங்கள் எண் சுவடியை மனதில் பதிப்பது போல் பதிக்கச் செய்ய
அவர் எடுத்த முயற்சி பாராட்டிற்குரியது.
இப்பொதும், ஆங்கில மொழி கற்க, ஆங்கில
இலக்கணம் தேவையில்லை, சிறு குழந்தை தாய் மொழி கற்பது போல கேட்டும் பேசியும்தான்
கற்க வேண்டும் எனும் கொள்கையை எல்லோரும் பின்பற்றும் இந்த நாட்களிலும், வீரய்யா
சார் கற்பித்த அந்தப் பட்டியலை விரிவாக்கி அதனுடன் கேள்விகளாக்கப்பட்ட நேர்மறை
மற்றும், எதிர்மறை வாக்கியங்கள், செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களையும்
உட்படுத்தி, நான் என் மாணவர்களுக்குக் கற்பிக்கின்றேன். ஆசிரியர்களாகப் பணியாற்றும் என் மாணவர்களில்
சிலர் அதை அவர்கள் மாணவர்களுக்கும் கற்பிப்பதாகச் சொன்ன போது நான் மதிப்பிற்குரிய
வீரய்யா சாருக்கு நான் எனது மனதில் நன்றி சொன்னேன். இறையருளால், முதுகலைப்
பட்டத்திற்காக நாகர்கோவிலில் இருந்த பொது ஒருமுறை வீரய்யா சாரை காண நேர்ந்த்து. அவரது இளைய சகோதரன் என்னுடன் அதே வகுப்பில்
அன்று (1976) படித்திருந்ததால் வீரய்யா சார் என்னை
சிரமமின்றி நினைவு கூர்ந்தார். அவர் கற்பித்த
ஆங்கில அறிவு வளர்க்கத் தேவையான அந்தப் பட்டியல்தான் என்னை ஆங்கில இலக்கியத்தில்
முதுகலைப் பட்டம் பயிலச் செய்தது என்றதும், என்னைத் தோளில் தட்டிப் பாராட்டினார்.
நானும் என் உளமார்ந்த நன்றியை அவருக்குச் சொன்னேன். அது மறக்கமுடியாத மகிழ்சிகரமான ஒரு நிகழ்ச்சி
அன்றும் இன்றும். இந்த ஆசிரியர் தினத்தில்
எல்லாம் வல்ல இறைவனிடம் திரு வீரய்யா ஆசிரியர் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,
உடல் நலத்தையும் எல்லா நன்மைகளையும் தர வேண்டுகின்றேன். அவர் இப்போதும் நலமுடன் இருக்கின்றார் என்ற
நம்பிக்கையுடன்)
இந்த ஆசிரியர் தினத்தில் எனக்கும் ஆசிரியன்
என்ற நிலையில் மன நிறைவு தந்த ஒரு சம்பவம் ஏற்பட்டது. கடந்த 27.8.2014 அன்று வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூலான எங்கள்
பள்ளிக்கு ஹையர் செகண்டரியும், தொடங்க அனுமதி கிடைத்ததால், ஆசிரியர்களுக்கான
நேர்முகத் தேர்வு நடந்தது. நானும்
தேர்ந்தெடுக்கும் அக்குழுவில் ஒருவனாக ஆங்கில ஆசிரியர்களை மாணவர்களுக்கு மாதிரி
வகுப்பு எடுக்கச் செய்து, மதிப்பீடு செய்து கொண்டிருந்தேன். வகுப்பு முடித்தபின் ஒரு ஆசிரியை என்னிடம்
வந்து “சார் என்னைத் தெரிகிறதா? நான்தான்
பபிதா. 2004 பாச்.
ஆங்கில இலக்கியம் தேர்ந்தெத்து ஆங்கில ஆசிரியை ஆக வேண்டும் ஆர்வம் உங்கள்
வகுப்பில் அமர்ந்த்தால் தான் கிடைத்தது. என்று சொல்லி என்னையும் அன்று வீரய்யா
சாருக்கு என்னால் ஏற்பட்ட மகிழ்ச்சியை உணரச் செய்த சம்பவம்தான் அது. இது எனக்கு இவ்வருட ஆசிரியர் தினத்தில் கிடைத்த
ஆசிரிய விருது தான். வேறு என்ன சொல்வது!
வாசித்த உங்கள் மனதிலும் ஒரு ஆசிரியர்
பளிச்சிடுகின்றார் இல்லையா? அவரைப் பற்றி
பின்னூட்டத்தில் எழுதுங்களேன். அவரது
மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல் நலத்திற்கும், நன்மைக்கும், நாம் அனைவரும்
வேண்டிக் கொள்வோம், இவ்வாசிரியர் தினத்தில். அப்படி நம் நினைவுகளில் நிறைந்து நிற்கும்
நல் ஆசிரியர்களை நாம் இவ் ஆசிரியர் தினத்தில் நினைவு கூர்வோம். மட்டுமல்ல,
என்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகர்க்கு
என்பதுதானே வள்ளுவன் வாக்கும். இவ்வாசிரியர்
தினத்தில் செய்நன்றி மறவா மாணவ மாணவிகளாக (வயதான) நம் வாழ்வில் நமக்குக் கிடைக்கப்
பெற்ற நல் ஆசிரியர்களைப் போற்றி புகழ்ந்து புண்ணியம் சேர்ப்போம்.
பிகு ப்பிதாவுக்கு நான் வகுப்பெடுக்க நான்
கொடுத்த தலைப்பு “Where there is a will there is a way”
இப்போது பபிதா எங்கள் பள்ளியில் ஆங்கில ஆசிரியை.
இதோ,
தோழி கீதாவும், அவரது வழிகாட்டியான
ஆசிரியைகளைப் பற்றிச் சொல்கின்றார்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
எண்ணும்,
எழுத்தும் உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர். நான் இவ்விரு கலைகள் கற்றச் சிறப்புடையவளா, ஏட்டுக் கல்வியை சீரிய வகையில் கற்றவளா என்றால்
ஐயமே! ஆயின், இவ்விரண்டுக் கண்களையும் கற்றுத் தந்த ஆசிரியர்களை நான் பெரும்பாலும்
தினமுமே நினைவு கூர்வேன். ஏனென்றால் அவர்கள்
ஏட்டுக் கல்வியை மட்டும் எனக்குக் கற்பித்தாரில்லை. வாழ்க்கையை எதிர்கொண்டு வாழும் வாழ்வியலையும்
கூடவே கற்றுக் கொடுத்தார்கள். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் போல் வேறு யாருக்கேனும்
அமைந்திருப்பார்களா என்ற கேள்வி எனக்குள் அவ்வப்போது எழுந்து என்னைச் சற்றுப்
பெருமிதம் கொள்ளச் செய்யும். எல்லோருக்கும் ஒரிரு ஆசிரியர்கள் இருக்கலாம். ஆனால் எனக்கோ என் ஆசிரியர்கள் அனைவருமே அப்படி
இருந்தது என் அதிர்ஷ்டம் தான் என்பேன். அவர்கள் எல்லோரையும் குறிப்பிட இந்தப்
பதிவு போதாது. எனவே, ஒரு சிலரை மட்டும்
இங்குக் குறிப்பிடுகின்றேன்.
வள்ளியூரில்,
இரண்டு வருட வாழ்க்கையில், அரசு ஆரம்பப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு
(தமிழ் வழிக் கல்வி) படிக்கும் போது எனக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் திரு
திரவியம். எனது ஆங்கில மொழி ஆர்வத்தையும்,
தமிழிலும் அதே போன்று ஆர்வம் உடைவளாக இருந்ததையும் கூர்ந்து கவனித்து என்னை
இலக்கியம் படிக்க ஆர்வத்தைத் தூண்டியவர். விதை ஊன்றப்பட்டது. (கணக்கைப் பற்றிக்
கேட்கக் கூடாது! ஆச்ரியைகள் மிகவும் நல்லவர்கள் ஆனால் எனக்கு பேஸ்மென்ட்
வீக்குங்கோ).
6 ஆம் வகுப்பு
பாத்திமா கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியில். அங்கும் தமிழ் வழிக் கல்வி. முதல்
நாள், முதல் வகுப்பு. உயரம்குறைவான, சற்று குண்டான, நல்ல நிறத்துடன் சிறிய
கொண்டையுடன், பெரும்பாலும் நீலக் கலர் புடவையில் (அதுதான் என் மனதில் இன்றும்
பளிச்) ஒருவர் ஆங்கிலத்தில் பேசிய படியே வகுப்பில் நுழைந்தார். அவர்தான் ஆங்கில ஆசிரியை என்பது புரிந்தது. லீலாவதி என்று தன்னை அறிமுகப் படுத்திக்
கொண்டார். தமிழில் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
என்னுடன் வகுப்பில் அமர்ந்திருந்தவர்கள் பெரும்பான்மையோர், அதே பள்ளியில்
படித்தவர்கள். ஆங்கிலத்தில் சரளமாகப்
பேசினார்கள். ஆசிரியை, வகுப்பெடுத்தார்.
அசந்து விட்டேன். ஆங்கில அடிப்படை இலக்கணம் - தன்னிலை, முன்னிலை, படர்க்கை,
வினைச்சொற்கள் எல்லாம் எப்படிக் கற்றால் எளிது என்பதற்கு ஒரு அட்டவணை இட்டுக்
கற்பித்தார். ஆங்கிலம் சரளமாகப் பேசியவர்களுக்குக் கூட இலக்கணம் தெரிந்திருக்கவில்லை.
எனக்கும் தன்னம்பிக்கை வந்தது. என்
மகனுக்கும், லீலாவதி ஆசிரியையின் வழிமுறையில்தான் கற்பித்தேன்.
ஆங்கிலப்
பாடங்களைக் கூட செயல்பாட்டு வழி முறையிலும், எடுத்துக்காட்டு, பயிற்சி
முறைகளுடனும் தான் கற்பித்தார். ஒரு சிறு உதாரணம். அதே பள்ளியில் 1, 2 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி
முடிந்த பிறகு Mary
had a little lamp ரைம்ஸ் சொல்லித் தருவதற்கு என்னையும், என்
வகுப்பில் நன்றாகப் படிக்கும் புனிதா எனும் என் தோழியையும் அழைத்துச் சென்று
புனிதா மேரியாகவும், நான் ஆட்டுக் குட்டியாகவும் நடிக்கச் செய்து
விளக்குவார். அப்படித்தான் எங்களுக்கும்
வகுப்பு. பள்ளியில் நடத்தப்படும் ஆங்கில நாடகங்களில்
எனக்கு முக்கியப் பங்கு இருக்கும்..ஆங்கில உச்சரிப்பிற்காக. அதே போன்று தமிழ் உச்சரிப்பிற்காகவும்
நாடகளில், பேச்சுப் போட்டு என்று பங்கேற்கச் செய்வார். அப்படியாக எனது கலையார்வமும்
பெருக்கெடுத்து வளரக் காரணமாகவும் இருந்தார் என்றால் அது மிகையாகாது. எனது ஆங்கில ஆர்வத்தை மிகவும் ஊக்கப்படுத்தி,
கல்லூரியில் ஆங்கில இலக்கியம் கற்க அறிவுரை சொன்னார்.
ஏழாம்
வகுப்பிலிருந்து நாகர்கோவில், புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில்
படிப்பு. தமிழ் வழிக் கல்வி. அங்கும் எல்லா கலைகளிலும், கட்டுரை, கவிதைப் பேச்சுப்
போட்டிகளில் எனது பங்கு இருக்கும். அங்குதான்,
வளரும் பருவத்தில் எனக்கு வாழ்வியல் கற்றுக் கொடுத்து என்னை மேம்படுத்திய ஆசிரியைகள்,
மேரிலீலா, ஸ்டெல்லா மேரி எனது காட்மதர்கள் என்று சொல்லும் அளவு, எனது வாழ்வைச்
செம்மைப்படுத்தியவர்கள். கல்லூரியில் ஆங்கில இலக்கியப் பாடப் பிரிவு எடுக்கலாம்
என்றும், அதனூடே தமிழ் இலக்கியமும் கற்கலாம் என்றும், எனது விருப்பமாகிய ஆசிரியைப்
பணியியை எடுத்துக் கொள்ளலாம் என்ற எனது கனவு தகர்ந்தது எனது வீட்டாரால். இன்றும்
நினைப்பதுண்டு, வீட்டில் உள்ளோரை எதிர்த்து, ஆங்கில இலக்கியம்/தமிழ் இலக்கியம்
படித்திருக்கலாமோ என்றும், ஆசிரியைப் பணிக்கு முயன்றிருக்கலாமோ என்றும்.
கல்லூரிக்
காலத்தில், உஷா வர்கீஸ், நாகம்மாள் எனும் பேராசிரியைகள் எனது காட்மதர்கள். என்னை
வளர்த்து, என்னை ஆளாக்கி, நல்ல எண்ணங்களை என் மனதில் விதைத்து, என்னை ஆளாக்கிய என்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, எனது வாழ்த்துக்களையும், பிரார்த்தனைகளயும் சமர்ப்பிக்கின்றேன்.
பதிவர்களில்
பெரும்பான்மையானோர் ஆசிரியப் பெருமக்கள் என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது
எங்களுக்கு! எல்லா ஆசிரியப்
பதிவர்களுக்கும், இந்த ஆசிரியர் தினத்தில் தங்களது ஆசிரியப் பணி செவ்வனே வளர
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஒரு
ஆசிரியர் தான் ஒரு சிறந்த சமுதாயம் வளர்வதற்குக் காரணமாக அமைகின்றார்!
Teaching
Profession is a Noble Profession! வாழ்க ஆசிரிய
சமுதாயம்!
ஆசிரியர் தினமான இன்று இந்த வலைப்பதிவு
பதிலளிநீக்குஆசிரியருக்கு எமது தலை சாய்ந்த வணக்கம்
ஆசிரியரே...பள்ளியில் கல்வி கற்றுக்கொடுத்த
ஆசிரியரை நினைவு கூர்ந்து ஒரு பதிவிட்டு
ஆசிரியருக்கு முதல் மரியாதை செலுத்திய
ஆசிரியரே உமக்கும் எமது முதல் மரியாதை
ஆசிரியரே... இதன் காரணமாய் நானும் எனது
ஆசிரியருக்கு கொடுக்கப்போகிறேன் பதிவிட்டு
ஆசிரியர்களுக்கெல்லாம் கொடுப்பேன் மரியாதை.
ஆசிரியராக... படிக்காமல் ஆசைப்பட்ட ஆசாமி.
ஆஹா! என்ன அ;ருமையான ஒரு பின்னூட்டக் கருத்து! கில்லர் ஜி! ஆசிரியர் ஆவதற்கு படிக்க வேண்டும் என்பதில்லை கில்லர் ஜி! அது ஊதியம் பெறுவதற்கே!..தெருவில் போகும் ஒரு சாதாரண மனிதன் கூட நமக்கு ஆசிரியராக இருக்கலாம்....அவனும் நமக்கு ஏதோ ஒரு சந்தர்பத்தில் நம் வாழ்வில் ஒரு பாடம் கற்றுத் தந்திருக்கலாம்...அனுபவ ரீதியாக....எனவே அப்படிப்பட்ட எண்ணம் வேண்டா, ஜி!
நீக்குஅண்ணா என்னைபோலவே ஆங்கில இலக்கியத்தை விரும்பி படித்திருக்கிறீர்கள்:))
பதிலளிநீக்குசிறந்த ஆசிரியருக்கு உங்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள் அண்ணா!
ஆஹா! தோழி உங்களுக்கும் கணக்கோடு பிணக்கா?:))))
அருமையா எழுதிருக்கிங்க தோழி:))
மிக்க நன்றி சகோதரி! ஒரு நல்ல, அறிவு பூர்வமான, நல்ல சிந்தனைகள் உடைய ஆசிரியைக்கு, எங்கள் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!
நீக்குஎன்னைத் தவிர எல்லோரும் ஆங்கில இலக்கியம் படிச்சிருக்காங்க.. நான் ப்ள்ஸ் டூவுல அட்வான்ஸ் தமிழ் எடுத்து படித்தேன், இப்ப பாருங்க தமிழும் வரமாட்டேங்குது இங்கிலீசும் புரிய மாட்டேங்குது இந்த மதுரைத்தமிழனுக்கு வந்த சோதனையை பார்த்தீங்களா?
நீக்குஇனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஐயா.
பதிலளிநீக்குதங்கள் அனுபவத்தை அழகாக எடுத்துரைத்தீர்கள்..
மிக்க நன்றி ஐயா! தங்களுக்கும் ஆசிரியர் திங்க வாழ்த்துக்கள்!
நீக்குஇனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகொதரி!தங்கள் வாழ்த்திற்கு!
நீக்குவிரிவான கட்டுரை! நன்று!
பதிலளிநீக்குமிக்க நன்றி புலவர் ஐயா! தங்கள் பாராட்டிற்கு!
நீக்குசார், பல மாணவர்களுக்கு கல்விக்கண் திறக்கும் ஆசிரியரான உங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஆவி! நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் அசத்திவிட்டீர்கள்! ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லி!
நீக்குஉங்கள் இருவரின் ஆங்கில ஆசிரியர்கள் வீரையா ,லீலாவதி ஆகியோரைப் போன்றே எனக்கும் திரு ,ஆர் .கிருஷ்ணராஜன் (RK) அவர்களையும் ,தமிழில் சொந்தமாக கட்டுரை எழுதியதை பாராட்டி ஊக்குவித்த திரு .கணபதி ஆசிரியரையையும் என்னால் மறக்கவே முடியாது !
பதிலளிநீக்குத ம 1
மிக்க நன்றி தாங்களும் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்ததற்கு! ஆம் நம் ஆசிரியர்களை எப்படி மறக்க முடியும் அதுவும் நமக்கு வாழ்வு தந்தவர்களை! மிக்க நன்றி ஜி!
நீக்குதிரு.துளசிதரனுக்கும் திருமதிகீதாவுக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியாரப் பணி புரிபவருக்கு அர்ப்பணிப்பு முக்கிய தேவை. அம்மாதிரி dedicated teachers அமைவது இறைவன் கொடுக்கும் வரமே. வாழ்க்கையின் வழிகாட்டிகள் அவர்கள்.எனக்கு அம்மாதிரியான ஆசிரியப் பெருமக்கள் அமைந்தனர். “பள்ளி நாட்கள்’’ என்னும் தலைப்பில் ஆசிரியர் பற்றிய சில நினைவுகளை எழுதி இருக்கிறேன் நேரம் இருந்தால் விருப்பப் பட்டால் படித்துப் பார்க்க சுட்டி தருகிறேன். வலை உலகில் இருக்கும் எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குgmbat1649.blogspot.in/2011/12.blog-post_26.html
மிக்க நன்றி சார்! துளசிதரன் தான் ஆசிரியர்! கீதா .....ஹோம் மேக்கர்! இப்போது எங்கள் வலைத்தளத்தில் எழுதுபவர்!...
நீக்குதங்களுக்கும் மிக நல்ல ஆசிரியர்கள் அமைந்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது! சார்! கண்டிப்பாக வாசிக்கின்றோம்! அடுத்த வாரம் ஆகிவிடும் சார்வாசிக்க! சாரி சார்! நிச்சயமாக வாசிக்கின்றோம்.
மிக்க நன்றி!
திருவாளர் அவர்களுக்கு, வணக்கம்.
பதிலளிநீக்குஆசிரியர் தினத்தில் அருமையான பதிவு.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும், வாழ்த்திற்கும்! தொடர்கின்றோம் தங்களையும்!
நீக்கு
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு
தொடருங்கள்
இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! உங்களின் நினைவுகளில் நின்ற ஆசிரிய பெருமக்களை எங்கள் நினைவுக்கு தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி சுரேஷ்! தங்கள் வாழ்த்துக்களுக்கு!
நீக்குமுதலில் இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் துளசி சார்.
பதிலளிநீக்குபட்டிக்காட்டான் பட்டினத்தை சுத்திப்பார்த்த மாதிரி, நான் தங்களின் இந்த பதிவில் இரண்டாம் பத்தியில் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஆங்கிலத்தில் எழுதியிருந்த வாசகங்களை , வாசித்தேன்.
நீங்கள் உங்கள் ஆசிரியரை மறக்காமல் நினைவு கூர்ந்தததற்கு, தங்களையும் நினியாவு கூர்ந்திருக்கிறார் தங்களின் மாணவி.
இந்த பதிவை படிக்கும்போது, நீங்கள் கூறியது போல், எனக்கு 9ஆம் வகுப்பிலும், 10ஆம் வகுப்பிலும் அறிவியல் பாடத்தை எடுத்த திரு. நாகராஜன் சார் அவர்கள் நியாபகத்துக்கு வந்தார். அவரிடம் அந்த இரண்டு வருடங்களும் நான் கணக்கும், அறிவியலும் தனிப்பாடமாக (tution) படித்திருக்கிறேன். அந்த அனுபவங்களையெல்லாம் "என் டைரி" என்ற தொடரில் (ஆஸ்திரேலியா - வழிகாட்டித் தொடர் முடிந்தவுடன்) எழுதலாம் என்று இருக்கிறேன்.
மிக்க நன்றி சொக்கன் சார்! தங்கள் வாழ்த்துக்களுக்கு! சார் பட்டிக் காட்டான் என்றெல்லாம் இல்லை! எல்லோருமே பட்டிக்காட்டான் தான் அப்படிப் பார்த்தால் எதைப் புதிதாகப் படித்தாலும்! ஊமைக்கனவுகள் பிஜு ஐயா எழுதும் தமிழையும், அவரது இலக்கண ஆராய்ச்சியையும் வாசிக்கும் போது நாங்களும் பட்டிக்காட்டான் தான் சார்! இன்னும் கற்க வேண்டியது எவ்வளவோ இருக்கின்றதே! கற்றது கடுகு அளவு கூட இல்லையே!
நீக்குதங்களது ஆசிரியரைப் பற்றி நினைவுகூர்ந்ததும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. எழுதுங்கள் சார்....காத்திருக்கின்றோம்!
நீங்கள் பல விஷயங்கள் சைவ சித்தாந்தத்தில் பகிர்ந்து கொள்கின்றீர்கள்! அது எங்களுக்குப் புதியதுதானே!
நீக்குமிக்க நன்றி சுரேஷ்! தாங்களும் ஒரு ஆசிரியர்தானே! பல மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்திருக்கின்றீர்களே! தங்களுக்கும் வாழ்த்துக்கள் சுரேஷ்!
பதிலளிநீக்குநானும் ஆசிரியனாக இருந்தே வங்கிப் பணிக்கு வந்தவன். என் மனைவி முப்பது வருடங்களுக்கு மேல் ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அவளின் தந்தை ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், நல்லாசிரியர் விருது பெற்றவராகவும் இருந்தவர். அந்த இருவருக்கும் இந்த ஆசிரியர் தினத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்! தங்களது அனுபவப் பகிர்வுக்கு! வாழ்த்துக்கள் சார்!
நீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோதரரே!
பதிலளிநீக்குஉங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து பல இனிய நினைவுகளுடன் பகிர்விட்டது அருமை..
மிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கு!
நீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களுக்கும் வாழ்த்துக்கள்! தங்கள் தளத்திற்கு வந்து வாழ்த்த முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்!
நீக்குஎதிர்காலத்தை ஒளிர்விடச் செய்வது இவர்கள் கைகள்தான் !http://avargal-unmaigal.blogspot.com/2014/09/teachers-day.html
பதிலளிநீக்குஆம்! உங்கள் இடுகையை வாசித்து விட்டோமே....பயணத்தின் இடையிலும்..... பதில் அளித்த நினைவு! பார்க்கின்றோம்!
நீக்கு///கல்லூரி மாணவனாக இருந்த போதே சாசரின் காண்டர்பரி டேல்ஸ் முதல் (chaucer’s canderbury tales) ராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) ஸ்டாப்பிங்க் பை வுட்ஸ் ஆன் அ ஸ்னோயி ஈவினிங்க் (Stopping by Woods on a snowy evening) வரையும், டானியல் டீஃபொ (Daniel Defoe) வின் ராபின்ஸன் க்ருசோ, (Robinson Crusoe) முதல் எர்ன்ஸ்ட் ஹெம்மிங்க்ஸின் (Ernest Hemingway) ஓல்ட் மேன் அட்ன் த் சீ (Old man and the sea) வரையுள்ள இலக்கியப் படைப்புகளைப் படித்து////
பதிலளிநீக்குசாரி இப்படி எல்லாம் சொல்லி என்னை பயமுறுத்தாதீர்கள்.... நிஜமாவே பயமாக இருக்கு.......
என்ன தமிழா .....ஆமா...அதனாலதானே அமெரிக்காவுல போய் உக்காந்துகிட்டு தமிழ்ல எழுதி இந்த உலகத்தையே அதிரவைச்சுகிட்டு இருக்கீங்க...... லட்சக் கணக்கான வாசகர்களின் இதயத்தைக் கொள்ளை கொண்ட கள்வா......நீங்க பயப்பட்டீங்களா?!!!! தமிழ் தெரொய்யாது....ஆங்கிலம் தெரியாது!!!! யாரப்பா அங்கே அந்தப் பூரிக்கட்டையால தமிழன் தலைல ணங்குனு ஒண்ணு வைங்கப்பா....
நீக்குணங்குனு சொன்ன உடனே பயந்துராதீங்க....அது செல்லக் ணங்குதான்!
நீக்குஆசிரியர் தின வாழ்த்துக்கள் சகோ ..! திரும்ப வாசித்து விட்டு கருத்து போடுகிறேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்கள் வாழ்த்துக்களுக்கு! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா போடுங்க சகோதரி!
நீக்குஉங்களுக்கு எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎனது ஆசிரியர்களையும் நான் நினைவு கூர்கிறேன்....
மிக்க நன்றி வெங்கட் ஜி! தங்கள் வாழ்த்துக்களுக்கு!
நீக்குஇந்தப் பதிவை எப்படி நான் தவற விட்டேன்? நீங்கள் பெற்ற கல்வி அனுபவமும், நீங்கள் கற்பிக்கும் அனுபவமும் உண்மையிலேயே பாராட்டத் தகுந்தது. என் ஆசிரியர்களும் கட்டாயம் நினைவுக்கு வந்தனர். குறிப்பாக தஞ்சை அந்தோணியார் பள்ளி ஆர் ஜே எர்னஸ்ட்.
பதிலளிநீக்குபரவாயில்லை சார்! அதான் வந்துட்டீங்களே! மிக்க நன்றி தங்கள் பாராட்டுக்களுக்கு...தங்கள் ஆசிரியர்களும் தங்களுக்கு நினைவுக்கு வந்து இங்கு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க ந்ன்றி!
நீக்குஅன்பு நண்பரே..
பதிலளிநீக்குஇன்று தங்கள் பதிவை வலைச்சரத்தில் நன்றியுடன் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_11.html
நன்றி.
வலைச்சரத்தில் திருமதி மனோ சாமிநாதன் தங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
மிக்க நன்றி ஐயா! தகவல் தந்ததற்கு. நிச்சயமாகச் சென்று பார்க்கின்றோம். அவர்களைத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றோம்.
நீக்கு