வியாழன், 3 ஜூலை, 2014

நக்கீரா!...உமக்குப் பெண்களின் கூந்தலின் ரகசியம் பற்றித் தெரியவில்லையே!

"நக்கீரரே! நாம் சந்திக்க வேண்டும்!  உமக்குப் பெண்களின் கூந்தலின் ரகசியம் பற்றித் தெரியவில்லை!" என்ற ஒரு குறுஞ்செய்தி நக்கீரற்கு அவரது ஓலைச்சுவடியில்(ஹைடெக் ஓலைச்சுவடி) வந்திருந்தது!

"இது என்ன புதுக்கதையா இருக்குது! என்று நினைத்தவாறே, "ஈசா! இது தான் அன்றே, பல நூற்றாண்டுகளுக்கு முன் முடிந்து போன கதை ஆயிற்றே! தாங்கள் என்னைத் தங்கள் நெற்றிக் கண்ணிலிருந்து வெளியேற்றிய கதிரியக்கக் கதிர்களால்(?) பொசுக்கிட, நானும் தங்கள் கருத்தை ஒத்துக் கொண்டேனே! இப்போது திரும்பவும் ஏன் அந்தக் கதை?" என்று பதில் செய்தி அனுப்பினார்.

"(கதிரியக்கக் கதிர்கள் என்றெல்லாம் என்னென்னவோ சொல்லியிருக்கிறாரே நக்கீரர்!  தமிழ் பாட்டு எழுதுவதைத் தவிர்த்து விஞ்ஞானம் கற்றுத் தேறிவிட்டாரோ? சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!!!) இல்லை நக்கீரரே! இல்லை! நான் ஈசன் என்பதாலும், நெற்றிக் கண்ணைத் திறந்ததாலும் தாங்கள் ஒத்துக் கொண்டீர். எந்தக் கருத்தையுமே நமக்கு வேண்டியவர்கள், நம்மை விட உயர்ந்தவர்கள் சொல்கின்றார்கள் என்று ஒத்துக் கொள்ளக் கூடாது! அதைப் போன்று ஆதாரம் இல்லாமல் எதையும் எடுத்துரைக்கவும் கூடாது! நான் அன்று சொன்னது சரி என்பதற்கு, எனது கருத்திற்கு ஆதாரங்கள் வைத்திருக்கின்றேன்!  எனவே நாம் சந்திக்க வேண்டும்!"

"என்னய்யா இது... நான் பாட்டுக்கு சிவனேனு கிடக்கறேன்...!  விட மாட்டாரு போலருக்கே....சரி போய்தான் பாப்பமே" என்று எண்ணியவறே "வருகின்றேன். எங்கு சந்திக்கப் போகின்றோம்?! தமிழ் சங்கம் வளர்த்து தமிழை ஓங்கச் செய்த மதுரையில்தானே?  அன்று போல்?" என்று பதில் செய்தி அனுப்பினார்."

"ம்ம்ம் அதுவும் சரிதான்.  அங்கேயே சந்திப்போம்" என்று ஈசன் பதில் அனுப்ப, இருவரும் சந்தித்தனர்!"ஈசனே! வணக்கம்!  சொல்லுங்கள் ஈசனே!"

"நமது அன்றைய வாதத்தை எல்லோரும் அறிவர்! அன்று எமது பாடல்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.

என்பதில் பொருட்பிழை இருப்பதாகச் சொன்னீர்!  அதாவது பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டு என்பதுதான் எமது பாடலின் உட் பொருள்.  ஆனால், நீர் "ஒருபோதும் இல்லை பெண்களின் கூந்தலுக்கு எக்காலத்தும் இயற்கையில் மணம் இல்லை. வாசனைத் திரவியங்களையும், மலர்களையும் தம் கூந்தலில் சூடுவதாலேயே கூந்தல் மணம் பெறுகின்றது. அன்றி கூந்தலுக்கு இயற்கையில் ஏது மணம்?" என்று வாதிட்டீர்!

"மறுபடியும் டொட்டடைய்ங்க்னு ஃப்ளாஷ்பாக்கா....விளங்கினாப்புலதான்" ஈசனே திரும்பவுமா?.....அன்று உமது நெற்றிக் கண்ணால் என்னைப் பொசுக்கியதால், பின்னர் மீண்டபின் தங்களது கருத்தை, ஒத்துக் கொண்டேன்! உண்மைதான்!  ஆனால், என் வாதம் இன்றும் அதேதான்.  ஆனால், "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என்று நான் இங்கு வாதிட வரவில்லை! மறுபடியும் தங்களது நெற்றிக் கண்ணின் கதிர்களைத் தாங்கும் சக்தி எனக்கில்லை!"


"ஹாஹாஹா....தாங்களும் நவீன விஞ்ஞானச் சொற்களை உபயோகிப்பதில் முன்னேறி விட்டீர்கள்! கதிரியக்கம் என்று என்னவெல்லாமோ சொல்லுகின்றீர்...ம்ம்ம் அதிருக்கட்டும்.  நான் கூற வந்ததைச் சொல்லுகின்றேன்!  பூலோகத்து ஆராய்சிகள் சொல்லுவது என்னவென்றால், பெண்களின் கூந்தலில் 90% இயற்கையான நறுமணம், ஃபிரோமோன்ஸ் (Pheromones) என்னும் வேதியல் மணம் வெளிவருவதால்தான்.  இது காதல் அன்பு உணர்வைத் தூண்டும் சக்தி உள்ளது. அதனால்தான் பெண்கள், ஆண்களை விட சற்று உயரம் குறைவாக இருக்கின்றார்கள்.  மட்டுமல்ல ஆண்களும், அதைத்தான் விரும்புவார்கள்!!!!!  அப்போதுதானே காதலி/மனைவியின் உச்சியை முகர முடியும்!!!!.....அப்படியே காதல் உணர்வில் மயங்க முடியும்......காதலிக்க முடியும்...." "varying amounts of hair growth, which makes perfect sense, as the extremely large surface area of a tuft of hair is a very effective means of spreading an odor by evaporation.Pheromones are the chemical messengers found on our skin, especially trapped in thick hair".  இதைத்தான் நான் அன்றே சொன்னேன்!  நீர் அதை ஒத்துக் கொள்ளவில்லை!"

"அப்படியென்றால் தாங்கள் அன்று என்னிடம் கேட்ட அதே கேள்வியை உம்மிடம் இப்போது கேட்கின்றேன்!  இந்த இயற்கை நறுமணம், உயர்ந்த குலப் பெண்கள், தேவ குலப் பெண்கள்,  நான் தினமும் வணங்கும் உமை அம்மைக்கு மட்டும்தானா?... இல்லை...  பூலோகத்தில் வாழும் சாதாரணப் பெண்களுக்கும் உண்டா?"

"இது என்ன கேள்வி!? எல்லா பெண்களுக்கும்தான்!  பூலோகத்து சாதாரணப் பெண்கள் உட்பட"

"ஓ! அதனால்தான் பூலோகத்தில் மக்கள் தொகை பெருகி உள்ளது போலும்!  ஆனால், தாங்கள் சொல்லுவது போல் என்றால் தேவ லோகத்திலும் தேவர்களின் தொகை கூடி இருக்க வேண்டுமே!"

"நக்கீரா..!  காதல் உணர்வுக்கும், மக்கள் தொகை பெருக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை! மட்டுமல்ல மக்கள் தொகை பெருகாமல் இருக்க வேறு வழிகள் எல்லாம் இருக்கின்றன.....என்பதை அறிந்து கொள்ளும்"


"என் அறிவுக்கு எட்டிய வரை பூலோகத்தில் சூரியனின் வெப்பக் கதிர்களினால் விளையும் வியர்வையும், தூசியும் அதிகம் ஆதலால், தலை முடியில் துர்நாற்றம் வருமே என்று எல்லோரும் ஷாம்பூ, ஜெல், க்ரீம் என்று பல நறுமணப் பொருட்களை உபயொகப்படுத்தித்தான் கூந்தலை மணமுடன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!  இயற்கையாக இல்லை! நீங்கள் சொல்லும் ஃபிரோமோன்ஸ் (PHEROMONES) என்பது, நறுமணப் பொருள்களில், வேதியல் பொருளாகக் கலந்திருப்பதால், காதல் உணர்வு பெருகுவதாகக் கேள்வி!..ஆண்கள் அந்த மணத்தினால் கவரப்படுகின்றார்கள்!

நம்மைப் பற்றி, 1965ல் வெளி வந்த திருவிளையாடற்புராணம் திரைப்படம், சமீபத்தில் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் போட்டார்கள். நான் அதைப் பார்க்க நேர்ந்தது.  நமது காட்சி 5 நிமிடம் கூடத் தொடர்ச்சியாக வரவில்லை, அதற்குள் 15 நிமிடம்.... விளம்பரங்கள்!  அதில் பெரும்பான்மையானவை பெண்களின் கூந்தல் விளம்பரம்தான்......வகை, வகையான ஷாம்பூ....க்ரீம், ஜெல்.... உபயோகித்து பெண்கள் தங்கள் கூந்தலை அலை போல விரிக்க, அருகில் வரும் ஆண் அதை நுகர்ந்து அப்படியே மயங்குவதாகத்தான் காண்பித்தார்கள்.

பல திரைப்படங்களிலும் கூட தலைவன், தலைவியை நேரே பார்க்கும் முன்னேயே அவளின் கூந்தல் காற்றில் பறக்க, அதை நுகர்ந்து மயங்கிக் காதலிக்கத் தொடங்குவதாகத்தான் காட்டுகின்றார்கள். இதிலிருந்து என்ன தெரிகின்றது?  பெண்களின் கூந்தலில் இயற்கையான நறுமணம் கிடையாது! தேவலோகப் பெண்களுக்கும், பூ, நறுமணப் பொருட்கள் போன்றவை உபயோகிக்கவில்லை என்றால் முடி துர்நாற்றம் அடிக்கத்தான் செய்யும்! முடி நாறினால் எந்தக் காதலனுக்கும், கணவனுக்கும் காதல் உணர்வா வரும்? எனவே எனது கருத்தில் மாற்றம் இல்லை!"நக்கீரரே! அந்த விளம்பரங்களைக் காண நேர்ந்ததால்தான்.... நான் சொல்ல வருவது என்னவேன்றால்....அதே ஆராய்சிகள் ஒரு கருத்தையும் சொல்லுகின்றன....ஃபிரோமோன்ஸ் இயற்கையாக வெளிவரும் ஒன்று. பெண்கள் இப்படி அடிக்கடி ஷாம்பூ, சோப்பு, ஜெல், என்று உபயோகித்தால், இயற்கையாக வரும் ஃபிரோமோன்ஸ் குறைந்து, காதல் உணர்வை மங்கச் செய்துவிடுமாம். 


அதனால், பெண்களே!  கவனமாக இருங்கள்! நறுமணப் பொருட்களை குறைவாகப் பயன்படுத்துங்கள்!  அப்போதுதான், தங்கள் கணவன்மார்களும், காதலர்களும், "சுற்றி சுற்றி வர்ரீக" அப்படின்னு நீங்கள் பாடுவதற்கு ஏற்றார் போல் உங்களையே சுற்றி சுற்றி வந்தால்....உங்கள் பொன்னான, மலர் போன்ற கைகளும், வலுவான தோள்களும் பூரிக்கட்டையையும், விளக்குமாற்றையும் தூக்கி அடித்து புண்ணாகாமால், வலுவிழக்காமல் இருக்கும் அல்லவா!  பூரிக்கட்டைகளும் உடையாமல், தங்கள் கணவன்மார்கள் உங்களுக்கெல்லாம் பூரி, சப்பாத்தி செய்து தரவும் உபயோகமாக இருக்குமே! WIN WIN SITUATION!!! அப்படிச் சிந்தித்துப் பாருங்கள்! என்பதே எனது கனிவான யோசனை"

"இப்பத்தான் புரியுது....நாம மதுரைன்னு சொன்னதுமே ஏன் இவரு ஓகேனு சொல்லிட்டாரு.......ம்ம்ம்ம் இவரு சொல்ற யோசனைய பெண்கள் ஏத்துகிட்டா அவ்வளவுதான்.....முடி ஒரே நாள்ல நாறிடும்!........ தலைமுடி நாரிச்சுனா எவன் வருவான் பக்கத்துல.......
ஈசனே!  தாங்கள் சொல்லும் யோசனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!!  இயற்கையான மணம் இல்லாததால்தான் பெண்கள் நறுமணப் பொருட்களை உபயோகிக்கின்றார்கள்! அதில்தான் ஃபிரோமோன்ஸ் இருக்கின்றதே! அதற்கான ஆதாரம் என் கையில்..."Schwarzkopf & Henkel, a Division of Henkel Consumer Goods, Inc, which owns the popular Schwarzkopf brand of hair care products, has signed a licensing agreement with Human Pheromone Sciences, Inc. to use their pheromone technology in their hair products."  அதுவும் இப்போது "லாவண்டர்" மணம் மிகவும் மயக்குமாம்....அதனால் அது மிகவும் பிரபலமாம்......அந்த ஆராய்ச்சியும் நான் படித்துவிட்டேன்! எனவே எனது வாதம்தான் சரி!"

"ம்ம்ம் சரி நக்கீரா...நான் கோபப்படவில்லை!  எனது நெற்றிக் கண்ணையும் திறக்கவில்லை!  நாம் நமது வாதத்தை இங்கு ஏதோ வலையாமே.....அதில் எழுதுகின்றார்களாமே! அவர்களிடமே விடுவோம்!...அவர்கள் சொல்லட்டும்! பின்னர் வருவோம் முடிவிற்கு!  நான் சொல்லுவது சரியா...இல்லை நீர் சொல்லுவது சரியா என்று!


படங்கள் : கூகுள் தளம்

42 கருத்துகள்:

 1. உங்கள் வலை திருவிளையாடலை மிகவும் ரசித்தேன் !
  சென்ட் தயாரிக்கும் பன்னாட்டு கம்பெனிகள் தேவலோகத்திலும் வியாபாரத்தை தொடங்க ஆயத்தம் ஆகியிருப்பதாக கேள்வி பட்டேன் !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரசித்ததற்கு மிக்க நன்றி பகவான் ஜி! சென்ட் தயாரிக்கும் பன்ன்னாட்டு கம்பெனிகள்......ஷாம்பூக்கள்...ஹாஹாஹா.....அதை நாங்களும் கேள்விப்பட்டோம்....??!!! அதை இடுகையில் சேர்த்திருந்தோம் ஜி! பின்னர் இடுகை இன்னும் நீண்டு விடும் என்று நீக்கி விட்டோம்!

   மிக்க நன்றி ஜி! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 2. அடேங்கப்பா இன்னொரு திருவிளையாடலை நடத்தி மிக அற்புதமாக சொல்ல
  வந்த விசயத்தைச் சொல்லிச் சென்றுள்ளீர்கள் சகோதரா வாழ்த்துக்கள்
  கருத்துச் சொல்ல வரும் ஏனைய நக்கீரகளை வைத்து நானும் முடிவைத்
  தெரிந்து கொள்கின்றேன் :)))))) (எனக்கெதுக்கு வம்பு :) )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா....சகோதரி நக்கீரர்கள்முடிவைச் சொல்லுவார்களா?!!!...நண்பர் சுரேஷைத் சொல்லியிருக்கிறார்...போலும்......

   தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! சகோதரி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஹாஹாஹா ஓ நீங்கள் அப்படி வருகின்றீர்களா DD?!!! ம்ம்ம் இப்போதுதானே எல்லோரும் பரீட்சை எழுதி ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்!

   நீக்கு
 4. நவீன திருவிளையாடல் அருமை, ஐயா வித்யாசமான சிந்தனை வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிவியலில் சொல்லுவதைத்தான் கொஞ்சம் சேர்த்து சொல்லியுள்ளோம் கில்லர் ஜி! மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 5. ஆகா மீண்டும் திருவிளையாடலா
  அருமை
  அருமை
  நண்பரே
  நன்றி
  தம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவிளையாடல் நக்கீரருக்கும், இறைவனுக்குமா இல்லை பூலோக மாந்தருக்கா?

   மிக்க நன்றி கரந்தையாரே!

   நீக்கு
 6. நவீன திருவலையாடல்!

  அந்தந்தக் காட்சிகளுக்குத் தகுந்தாற்போல் விளம்பரங்கள் வருவது நல்ல முயற்சிதான் இல்லை? அப்படி வருகிறதா என்ன? அல்லது கற்பனையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நவீன திருவலையாடல்!// நல்ல சொற் விளையாடல்!

   எங்கள் கற்பனை? ம்ம்ம்ம் அது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.....ஃபிரோமோன்ஸ் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் படித்து அதிலிருந்து தெரிந்து கொண்டவற்றை அதுவும் தலைமுடிக்கு வேண்டிய தகவலை மட்டுமே இங்கு சொல்லி உள்ளோம். படைப்பாளர்களின் கற்பனை என்று சொன்னாலும், அறிவியலும் அதைச் சொல்லுகின்றது. இந்த ஆய்வுக்கான டேட்டாவும் கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் எவ்வளவு தூரம் யாதார்த்தம் என்று தெரியவில்லை! ஆனால் நறுமணப் பொருட்கள் அப்படித்தான் தயாரிக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. விளம்பரங்கள் உள்ளன!

   மிக்க நன்றி நண்பரே! தங்கள் அழகிய கருத்துரைக்கும், கேள்விக்கும். எங்களையும் சிந்திக்க வைத்தது!

   நீக்கு
 7. இதுவரை அறியாத விஞ்ஞானத் தகவல்
  சொல்லிச் சென்றவிதம் வெகு வெகு சுவாரஸ்யம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. உங்கள் பதிவில் உள்ள நையாண்டி(Satire)யை ரசித்தேன்!
  த.ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும், ரசித்ததற்கும் மிக்க நன்றி! ஐயா!

   நீக்கு
 9. இந்த பதிவு முழுவதும் நான் திருவிளையாடல் படத்தை கற்பனை செய்து கொண்டே படித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்த்த உணர்வு வந்தது. பூரிக்கட்டைகளைப் படித்தவுடன் சிரிப்பு தாங்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே ரசித்ததற்கு! தங்கள் ரசனையான கருத்திற்கும்!

   நீக்கு
 10. இந்தத் திருவிளையாடல்
  எந்தப் படத்திலும் வரேல்லை
  சொந்தப் படைப்பான
  தங்கள் தளத்தில் வந்ததே
  சிந்திக்கச் சிறந்த ஒப்பீடாக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே தங்கள் கருத்திற்கு!

   இதே கருத்தை அழகிய தமிழில் முனைவர் ரா. குணசீலன் அவர்கள் அவரது தளத்தில் அப்பொழுதே பதிந்துவிட்டார். ஆனால், நாங்கள் தற்போதுதான், இதைப் பதிவிட்ட பிறகுதான், அவர் தளத்திற்குச் சென்ற போது வாசித்தோம்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 11. திருவிளையாடல் தொடருகிறதோ! கற்பனை நன்று!

  பதிலளிநீக்கு
 12. அருமையான கேள்வி.
  இதற்கு ஆண்கள் தான் பதில் சொல்ல வேண்டும். துளசிதரன் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹாஹா....ஆண்கள்?!!! ம்ம்ம் பார்ப்போம்! சொல்கின்றார்களா என்று! சுரேஷ் அவர்கள் சொல்லியிருக்கின்றார்...கீழே!

   மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 13. எதுக்குங்க இத்தனை ஆராய்ச்சி அவங்க வீட்டு அம்மணி கூந்தலை முகர்ந்து பார்த்து முடிவு பண்ணிட வேண்டியதுதானே! ஹாஹாஹா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹாஹா....சூப்பர்! சுரேஷ்! தங்களின் ஐடியா ...ம்ம்ம்...தாங்கள்?!!!!!!

   மிக்க நன்றி நகைச்சுவைப் பதிலுக்கு!

   நீக்கு
 14. நகைச்சுவையுடன் எழுதி கவர்வது கடினம். என்னால் முயற்சிக்க முடியவில்லை. உங்களுக்குஅடிப்படை கட்டுமானம் தெளிவாக இருக்கின்றது. முயன்றால் தெளிவாக வரும் என்றே நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நகைச்சுவையுடன் எழுதி கவர்வது கடினம்.// சரிதான் நண்பரே! ஆனால், வலைப்பூவில் நிறைய பேர் மிகவும் அருமையான நகைச்சுவையுடன் எழுதுகின்றார்கள். மதுரைத் தமிழன் அவர்கள் பின்னி பெடலெடுக்கின்றார்...சீரியஸ் பதிவுகள் கூட நையாண்டி, நகைச்சுவையுடன் அழகாகச் சொல்லுவார்!

   தங்களால் முயற்சிக்க முடியவில்லை என்று சொல்லுவதை விட தாங்கள் எவ்வளவு நல்ல நல்ல அறிவுபூர்வமான, கனமான கருத்துகளுடன் சிந்திக்கக்கூடிய பதிவுகள் எழுதுகின்றீர்கள்! அதை விடாவா ஜி?! இல்லை ஜி!

   எங்களை ஊக்குவித்ததற்கு மிக்க நன்றி! ஜி! கண்டிப்பாக முயற்சி செய்கின்றோம்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 15. மிக அழகாக பழம்பாடலையும் பழந்தமிழர் அறிவையும் எடுத்துரைத்தீர்கள். நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழந்தமிழர் நிச்சயமாக அறிவியலில் நிறைய சாதித்துள்ளார்கள்! மறைமுகமாகச் சொல்லப்பட்டவை பல....அதைச் சொல்லும் பல புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன. அதிலிருந்து எடுத்ததுதான் இந்தக் கருத்து...அதை இந்தக் காட்சியுடன் ஏதோ எங்கள் அறிவிற்கு எட்டியபடி சொல்லி உள்ளோம்!

   தாங்கள் இதனுடன் உள்ள சில பாடல்களையும் அழகாகப் பொருத்தி விளக்கங்களுடன் அழகிய தமிழில் சொல்லி உள்ளீர்கள்! அதை விடவா?!!

   மிக்க் நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 16. ஆஹா மீண்டும் திருவிளையாடல்......

  பதிவு முழுவதும் இழையோடும் நகைச்சுவையை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்! தாங்கள் ரசித்ததற்கும், கருத்திற்கும்!

   நீக்கு
 17. நல்ல நகைச்சுவையான கற்பனை ...ஹா...ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் பரிதி! தங்களு வருகைக்கும், கருத்திற்கும், பாராட்டிற்கும்!

   நீக்கு
 18. ஆசானுக்கு வணக்கம்!
  ஆயிரம் முறை நேர்ந்தாலும் கையைக் கட்ட முடியவில்லை.
  அறிவியலும் தமிழும் நகைச்சுவையோடு கைகோர்க்கும் அற்புதப் பதிவென்று ஒரு வரியில் சொல்லி விடுகிறேன்.
  கூடுதலாய்,
  நக்கீரனிடம் சிவன் எல்லாப் பெண்களையும் வரிசையாக நிறுத்தி இவர் கூந்தலுக்கெல்லாம் மணமில்லையா எனக் கேட்டுக்கொண்டே வருவான். கடைசியாய் “ பார்வதியின் கூந்தலுக்கு ?“ என்பான். அதையும் நக்கீரன் மறுக்கும் போதுதான் தன் மூன்றாவது கண்ணைக் காட்டுகிறான். அதன் பொருள், நான் அவள் கணவன்!
  அவளை என்னை விட நன்றாக அறிந்தவன் யார் ?“ என்பது தான்.
  நீ அவள் கணவனானாலும் அவள் கூந்தலுக்கும் மணமில்லை என்னும் போதுதான்,
  தன் மனைவியை தன்னை விட இன்னொரு ஆடவன் அறிந்திருப்பதாகக் கூறுவதா என சினக்கும் சிவத்தீ யில் பட்டு நக்கீரன் சாம்பலாகிறான்.
  பாண்டியனுக்குத் தோன்றி, இறைவனலும் தீர்க்க முடியாமல் போன பெண்களின் கூந்தலின் வாசனை பற்றிய சந்தேகத்தைச் சீவக சிந்தாமணியில் எளிதாகத் தீர்க்கிறான் திருத்தக்க தேவன். காய்ந்து கிடக்கும் நிலத்தின் மீது மழைபொழியக் கிளம்பும் மண்வாசம் தான் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் உள்ள மணம் என்கிறான் அந்தப் பெண்வாடை அறியா சன்னியாசி!
  நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் ஊமைக்கனவுகள், முதலில், தங்கள் முதல் வருகைக்கும், பாராட்டிற்கும், மிக அழகான, விளக்கமான புதிய தகவலுக்கும் எங்கள் முதற்கண் நன்றி!

   நக்கீரன், சிவன் வாதத்தில் தாங்கள் சொல்லி இருக்கும் கருத்து மிக அழகான, யதார்த்தமான இதுவரை அந்த கோணத்தில் சிந்தித்துப் பார்க்காத ஒரு கருத்து! அவர் நெற்றிக் கண்ணைத் திறந்ததற்கான காரணம்!

   சீவக சிந்தாமணியில், பெண்வாடை அறியா சன்னியாசியான திருத்தக்கத் தேவண் தீர்த்துவைத்ததாகச் தாங்கள் சொல்லியுள்ள கருத்து அறிந்திருக்கவில்லை! புதியதாக இருந்தது எங்களுக்கு! மிக்க, மிக்க நன்றி! இந்தத் தகவலுக்கு. நூலகத்தில் தேடிப் படிக்க வேண்டும் நிச்சயமாக! இது போன்ற, அறிந்திராத, அறிவையும், வாசிப்பதையும் தூண்டும் கருத்துகள் எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது நண்பரே! மிக்க மகிழ்சி, நன்றி!

   நாங்கள் தங்களைத் தொடர்கின்றோம்!

   நீக்கு
 19. வாவ்.. தற்போதைய நிலவரத்தில் திருவிளையாடல் நடந்தால் இப்படித்தான் இருக்கும் என நல்ல சிந்தனை. அதில் சில உண்மைக் கூற்றுகளையும் உள் வைத்து அசத்திவிட்டீர்கள்.. ஒரு நாடகம் பார்ப்பது போல் இருந்தது..

  //"மறுபடியும் டொட்டடைய்ங்க்னு ஃப்ளாஷ்பாக்கா..// ஹஹஹா விழுந்து விழுந்து சிரித்தேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஆவி சார்! ரசிச்சதுக்கும் சேர்த்துதான்!

   நீக்கு
 20. பதில்கள்
  1. மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா! தங்கள் கருத்திற்கும் முதல் வருகைக்கும்! தொடர்கின்றோம் தங்களை!

   நீக்கு