செய்திகள், துணுக்குகள்,சமூகம், கருத்துக்கள்


ஆனைக்கு அடி சறுக்குவதெல்லாம் இல்லை...சறுக்குவது எல்லாம், வனத்துறைக்கும், சரிவதெல்லாம் அவர்கள் கட்டிய மின்சார வேலிகளும்தான்





        பாலக்காடுவாளையார் வனப்பகுதியில்காட்டானைகளால்  பெரும் பிரச்சினையாக நீண்ட காலமாக இருந்து வருகின்றது. வனப்பகுதியொடு சேர்ந்து வாழும் மக்களின் வயல்களும் , வாழை மற்றும் தென்னை மரங்களும் காட்டானைகளால்  அழிக்கப்படுவது இடையிடையே நடந்து கொண்டுதான் இருக்கிறது.  பாவம், மனிதர்களும் பலியாவதும் உண்டு.










       


அது போல், ரயில் என்ஜினில் மோதி இடையிடையே யானைகளும், யானைக் குட்டிகளும் இறப்பதும் உண்டு. 





வனத்துறைக்கு, இங்கு, காட்டானைகளை உள்  வனப்பகுதிக்கு விரட்டி விடச், செய்யமுடிகின்ற ஒன்றே  ஒன்று, அவை வரும் வழிகளில் மின்சார வேலிகளைக் கட்டுவது என்பதுதான்.  அதிசயம் என்னவென்றால், வேலி  கட்டிய பின் ஒரு வாரம் வரை யானைகள் நல்ல பிள்ளைகளாக  வேலிக்கு இப்புறம் வராமல் விலகிப் போகுமாம்.  



பிறகு அவை கூடி ஆலோசிக்குமோ என்னமோ தெரியவில்லை.  ஒரு வாரத்திற்குப் பின் கூட்டமாக வந்து வேலிக்கு அருகே உள்ள மரங்களை, வேலிகளின் மேல் சாய்த்து வேலிகளைத் தகர்த்து, அது வழியாகக் கடத்தி விடப்படும் மின்சாரத்தை பூமிக்குள் போக வைத்த பின், எந்த வித ஷாக்கும் தங்களைத் தாக்காதவாறு, ஷாக்கை முழுவதுமாக வனத்துறைக்குக் கொடுத்து (என்ன ஒரு புத்திசாலித்தனம்! புன்னகை செய்யத் தெரியாததால் ஆனை நகை செய்து) எப்போதும் போல் வயல்களிலும், தோப்புகளிலும் மேய்ந்து தங்கள் பசியைப் போக்கிக் காடேறுகின்றனவாம்.  

வனத்துறையினரும் தங்கள் தலையைப் பிய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியாமல் தவிக்கின்றார்கள். மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன், பன்றிமடையில், ஒரு யானை ரயில் என்ஜினில் மோதி, கால் ஊனமானதன் பின் அவ்வழியாக யானைகள் வருவதே இல்லையாம். (அதற்கு வேறு மாநாடு அல்ல 'மா'காடு கூடியிருக்கலாம்)






காட்டை மனிதர்கள் அழிப்பதால் தான் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையே போராட்டம் வருகின்றது.  காட்டை விழுங்கிய மனிதர்கள், யானைகள் தங்களுக்குத் தீனி கிடைக்காத வேளைகளில் மனிதர்கள் வாழும் பகுதியிலுள்ள யானைகளின் தீனிகளைத் தின்ன விடாமல் செய்கின்றனர். அப்படி அவர்கள் யானைகளை விரட்ட, செய்யும் ஒவ்வொரு தந்திரத்தையும் எப்படி முறியடிப்பது என்றுத் தீவிரமாகச் சிந்தித்து தீர்மானங்களை அந்த யானைகள் எடுக்கின்றனவோ? வனப்பகுதிகளில் இனி, ஆனைக் கிடங்குகளைத் தோண்டி, யானைகளிடமிருந்து மனிதர்களைக் காக்கத் திட்டம் தீட்டி, அதிகக் கோடிக் கணக்கானப் பணத்தை எப்படி விழுங்குவது என்று சிந்திக்காமல் வேறு பயனுள்ள, யானைகளைப் பாதுகாக்கும் வழிகளை ஆராய்வதுதான் நல்லது.












மனிதன் அவன் தேவைகளுக்காகப் புதிய, புதிய அதிக விளைச்சல் தரும் பயிர்களை எல்லாம் கண்டு பிடித்து விவசாயம் செய்து சுகமாய் வாழும் போது  யானை போன்ற வன விலங்குகளுக்கு, வருடம் முழுக்க உண்டு வாழ, காடுகளை அழிக்காமல் பாதுகாத்து, உள் வனத்தில் ஏன் மூங்கில் மற்றும் கற்றைக் காடுகளை மனிதன் வளர்த்துக் கொடுக்கக் கூடாது?  யானைகள்,தங்கள் பகுதிக்குள் வரும் போது  மின் வேலி கட்டி அவற்றை விரட்டுவதை விட, அவை நாட்டுப் பகுதிக்கு வர வேண்டிய அவசியம் நேரா வண்ணம் வனத்தில் அவர்களது பசிக்குத் தேவையானவற்றை நட்டு வளர்க்கக் கூடிய ஒரு திட்டம் தீட்டி யானைகள், அவற்றின் இடத்திலேயே தங்கக் கூடிய சூழலை ஏன் ஏற்படுத்தக் கூடாது? இந்த பூமி மனிதர்களாகிய நமக்கு மட்டும் சொந்தமான ஒன்று அல்லவே!  


படங்கள் : courtesy google


தெய்வம் தந்த பூவே.............மரணம் மீண்ட ஜனனம் நீயே!




பாலேட்டன் - ஆஷா சேச்சி

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை விளம்பரத்தின் பாகமாக திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படும் பாலேட்டன் மற்றும் ஆஷா சேச்சி வாசிக்கும் கடிதங்கள் எனும் நிகழ்ச்சியில் இன்று மனதை நெகிழச் செய்யும் ஒரு சம்பவம்.


ஃபௌசியாவுக்குச் செய்யப்பட்ட ஒரு அறுவை சிகிச்சையில் நேர்ந்த தவறு, அவரைத் தன் கை, கால்களை முன்பு போல் எளிதாக இயக்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளிவிட்ட்து.  பல மருத்துவர்களிடம் மாறி, மாறி மருத்துவம் செய்து வரும் அவருக்குத் திருப்தி அளிக்கத் தக்க ஒரு மாற்றமும் உண்டாக வில்லை. வயநாடு மாவட்டத்தில்மாநந்தவாடி எனும் இடத்திலுள்ள ஒரு மருத்துவமனை பற்றி யாரோ சொல்லிக் கேட்ட அவர், தன் கணவன், அண்ணன், மற்றும் அண்ணியுடன் திருச்சூரிலிருந்து பஸ் ஏறி கோழிக்கோடு KSRTC பேருந்து நிலையத்தை அடைந்த போது நேரம் இரவு 11.30.  மாநந்தவாடிக்கு இனி அடுத்தப் பேருந்து 12.30 க்குத்தான்.  1 மணி நேரம் அங்கு பயணியர் அமரும் இடத்தில் உட்கார முடிவு செய்து, ஆண்கள், ஆண்கள் பகுதியிலும், பெண்கள், பெண்களுக்கானப் பகுதியிலும் உட்கார்ந்தனர். 


பெண்களுக்கான இருப்பிட அறை ஒரு நான்கு அடி சுவரால் சுற்றிலும் கட்டப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டிருந்தது.  அதன் ஒரு மூலையில், ஒரு வேட்டியால் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருந்தது. நல்ல வெளிச்சமில்லை என்றாலும், யாரோ அந்த மறைவில் படுத்திருப்பது போல் தோன்றியது.  ஒரு சிறு குழந்தையின் சிணுங்கலும் கேட்டது.  சிறிது நேரத்திற்குப் பின், சற்றுத் தொலைவிலிருந்தக் கழிப்பறையிலிருந்து ஒரு பெண் மிகவும் தளர்ந்த நிலையில் மெதுவாக சிரமத்துடன் நடந்து, ஃபௌசியாவையும், அவரது அண்ணியையும் தாண்டி அவர்கள் அருகில் இடம் இருந்தும் உட்காராமல், துணியால் மறைத்த அந்த இடத்தை நோக்கி நடந்தார்.  உடனே அந்த மறைவிலிருந்து யாரோ எழுந்ததும் தெரிந்தது.  பார்த்த போது ஃபௌசியாவிற்கு அதிர்ச்சி! 


பெண்கள் மட்டுமே இருக்க வேண்டிய பகுதியில் ஒரு ஆண்!  என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த போது, அம் மனிதன், சிரமத்துடன் நடந்து வரும் பெண்ணைத் தாங்கிப் பிடித்துக் கீழே உட்கார உதவினார்.  உட்கார்ந்த அந்தப் பெண் அப்படியே தரையில் படுத்தார்.  மீண்டும் குழந்தையின் சிணுங்கல்கள். இப்போதுதான் புரிந்தது அந்த சிணுங்கல்களுக்குச் சொந்தக்காரரான குழந்தை இவ்வுலகிற்கு வந்து ஒரு சில மணி நேரங்களே ஆகியிருக்கிறது என்று.  எவ்வளவோ வசதிகள் உள்ள மருத்துவமனைகளில், உடன் பிறப்புகள், உறவினர்கள் ஆவலுடன் பிறந்த குழந்தையைக் கையில் வாங்கக் காத்திருக்கும் காட்சிகளைக் கண்ட, அதைப் பற்றிக் கேட்ட, வாசித்த நமக்கு, வேறு வழியின்றிப் பயணம் செய்து கொண்டிருக்கும் ட்ரெயினில், காரில், ஏன் ஆட்டோவில் கூட பிறந்த குழந்தைகளைப் பற்றிக் கேட்ட நமக்கு, இதோ, இப்போது இரவில் வேறு வழியின்றி, பயணத்திடையே ஒரு பேருந்து நிலையத்தில் தன் கணவனின் உதவி மட்டும் கிடைக்கப் பெற்ற நிலையில் தன் குழந்தையை ஈன்றெடுத்த ஒரு தாயைப் பற்றிக் கேட்கக் கூடிய வாய்ப்பு. தாய்க்கும், சேய்க்கும் எந்த வித தொற்றும் பற்றாது இருக்க எல்லாம் வல்ல இறைவன்தான் அருள் செய்ய வேண்டும்!

இதையெல்லாம், கண்டும் வாயடைத்து நின்ற ஃபௌசியாவை, அவள் கணவனும், அண்ணனும் வந்து “பஸ் வந்து விட்ட்து என்று கூறி கூப்பிட, எல்லாம் மறந்து நால்வரும் ஓடி பஸ் ஏற, உடனே பஸ்ஸும் புறப்பட்டும் விட்டது.  சற்று முன் தான் கண்ட காட்சிகளை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்த ஃபௌசியா, தன் அருகே இருந்த கணவனிடம் விவரிக்க, அவர், “அவர்களைப் பற்றி விசாரித்து அவர்களுக்கு வேண்டிய உதவி ஏதாவது செய்திருக்கலாமே என்றதும் தான், ஃபௌசியாவுக்கு “ஐயோ! தவறு செய்து விட்டோமே என்று தோன்றியிருக்கிறது.!

கடிதத்தை முடித்த ஃபௌசியா, அவர்களைப் பற்றி வேறு எந்த விவரமும் சொல்லாததால், நமக்கு ஒன்றும் ஊகித்துப் பார்க்க முடியவில்லை. அவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? பயணிகளா?  நாடோடிகளா?  எப்படியோ, KSRTC  ஊழியர்கள், காவலர்கள், நல்ல மனம் படைத்த மனிதர்கள் யாரேனும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கலாம்.  இறையருளால் தாய்க்கும், சேய்க்கும், பிரச்சினை இல்லாமல் பிரசவம் நடந்தது போல, இறையருளால் தாயும், சேயும் நோயற்ற வாழ்வு பெற்று, எங்கிருந்தாலும் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை நாம் வேண்டுவதைத் தவிர, நமக்கு இங்கு செய்வதற்கு ஒன்றுமில்லை.  இருந்தாலும், இந்தச் சம்பவம் மனதிற்கு இனம் புரியாத ஒரு வலியை ஏற்படுத்துகிறது. அந்தக் கணவனும், மனைவியும் அனுபவித்த வேதனையையும். அல்லல்களையும், மன உளைச்சல்களையும் எண்ணிப் பார்க்கும் போது, இது போன்ற வலிகள் நம்மை நல்ல ஒரு மனிதனாகச் சிந்திக்க வைத்து, செயல்பட்டு வாழ உதவுகிறது.  மட்டுமல்ல “உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற கண்ணதாசனின் வரிகளை நினைக்க வைத்து, நமக்கு கிடைக்கப் பெற்ற நல்ல வாழ்க்கைக்கும், வாழ்க்கைச் சூழல்களுக்கும், இறைவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது!



குடியைக் கெடுக்கும் குடி, குழந்தைகளின் உயிரையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.



     கடந்தவாரம் கொல்லம் அருகே 8 வயது சிறுவன் தன் வீட்டில் வைப்பட்டிருந்த மதுவை, அமிதமாக அருந்தி இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீளும் முன் மீண்டும் ஒரு பேரிடி.  


திருச்சூர் அருகே உள்ள இடக்களத்தூரில் ஒருவாரம் முன்பு தன் வீட்டருகே உள்ள காலியிடத்தில் விளையாடப் போன 6 வயது சிறுவன், புதருக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் கண்ட மது பாட்டிலில், மீதமிருந்த மதுவைக் குடித்து மயங்கிக் விழ, நீண்ட நேரம் மகனைக் காணாது தேடிவந்த தாய், மது பாட்டில் அருகே மயங்கிக் கிடந்த அவனை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று எப்படியோ அவனது உயிரைக் காப்பாற்றி விட்டார் என்ற செய்தி, இடி விழுந்தவன் காத்லில் பான்பு கடித்ட் அகதை போல் மனதை நிம்மதி இழக்கச் செய்துவிட்டது.  திருச்சூர் பையன் வேறு எங்கேனும் மது பாட்டில் இருக்கிறதா என்று தேடிய போது அவனை ஒரு பாம்பும் கடித்திருந்ததாம்.  எப்படியோ எட்டு வயது சிறுவன் குடித்த அளவுக்கு மது குடிக்காததாலும், பாம்பு கடித்ததற்கான சிகிச்சை மருத்துவமனையில் தாமதமின்றிக் கொடுக்கப்பட்டதாலும், அந்த 6 வயது சிறுவன் உயிர் பிழைத்தான் என்று மருத்துவர்கள் கூறினார்கள்.


     தனக்கு வந்திருகும் நோய் குணமாகக் கசப்பான மாத்திரைகளைச் சாப்பிடவோ, மருந்தைக் குடிக்கவோ மறுக்கும் வயதில் இப்படிக் குடிக்கச் சிரமமுள்ள திரவத்தை எப்படிச் சிறுவர்களால் குடிக்க முடிகிறது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.  பெரியவர்கள் குடிக்கிறார்களே?! இதில் ஏதேனும் சுகம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஆர்வம் அந்தக் குழந்தைகளுக்கு வர வேண்டும் எனில், அவர்கள் குடிப்பவர்களையும், குடித்தபின் அவர்கள் பேசுவதையும் செய்வதையும் (திரப்படங்களில் மது அருந்துவது உடலுக்குக் கேடு என்று எழுதிக் காண்பித்தபின் கதாநாயகர்களும், வில்லன்களும் குடிப்பதையும், அதன் பின் அவர்கள் போடும் ஆட்டத்தையும் எத்தனை ஆங்கிளில், அருமையான ஷாட்டுகளில் கச்சிதமான இசையுடன் காண்பிப்பது போதுமே!) நுணுக்கமாகக் கவனித்து அதிலுள்ள சுகத்தை அறிந்தே தீர வேண்டும் என்ற அடங்காத ஆசை அவர்களுக்கு ஏற்படுவதுதான் காரணமாக இருக்க வேண்டும்.  






குழந்தைகள் வீட்டிலுள்ள, அக்கம்பக்கத்திலுள்ள பெரியவர்கள் செய்வதை, எப்போதும் அது போல் செய்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள். அப்பாவின்/அம்மாவின், தாத்தாவின்/பாட்டியின் கண்ணாடியை மாட்டி நடப்பது, அவர்களைப் போல் பேசுவது, இப்படி எல்லாம் செய்வது போல், அவர்கள் தன் வீட்டிலோ, அடுத்த வீட்டிலோ, டி.வி.யிலோ, குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவற்றைக் காண நேர்ந்தால் அதை நிச்சயமாகச் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆர்வம், ஆசை பெரும்பான்மையான குழந்தைகளுக்கு வரத்தான் செய்யும்.


இது போலத்தான், திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்படும் வன்முறைக்காட்சிகளும், ஆபாசக் காட்சிகளும். அவற்றை எல்லாம் ஓரளவாவது அவர்கள் பார்க்காமல் இருக்கக் கூடியchச் சூழல்களை-உதாரணமாக கலைகளை வளர்க்கும் வகுப்புகள், விளையாட்டு, பெர்சானலிட்டி வளர்ப்பது-பெற்ரோர்கள் குறைந்தபட்சம், அவரவர் வீடுகளிலாவது கடைபிடிக்க வேண்டும். 

அதுமட்டுமல்ல, உடலையும், மனதையும் பாதிக்கும் அவற்றை, குழந்தைகள் பார்க்காமல் இருக்க உதவும் மனக் கட்டுப்பாட்டை அவர்களுக்கு உருவாகும் விதத்தில், அவர்களுக்குப் புஇரியும் விதத்தில் அன்பாகச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்.  “அதற்கெல்லாம் எனக்கு/எங்களுக்கு நேரமில்லை என்ற காரணமெல்லாம், வாதமெல்லாம் வேண்டாம். குழந்தைகள் நம்மவர்கள். அவர்களின் நன்மைக்காக நாம் எப்படியாவது னேரம் ஒதுக்கி (இங்கு குழந்தைகளின் மூடுக்குத்தான் முக்கியத்துவம்.  அவர்கள் நாம் சொல்வதை ஆர்வத்துடன் கேட்கக் கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்) அவர்களை நல்வழிப்படுத்த முயல வேண்டும்.  அப்போதுதான் இது போன்ர விபரீத சம்பவங்களைத் தவிர்க்க முடியும். அது நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையோ, உதவியோ மட்டுமல்ல, நம் அமைதியான, மகிழ்ச்சியான பிற்கால வாழ்க்கைக்கு இடையூறு நேராது இருக்க எடுக்கும் தற்காப்பு நடவடிக்கையும் மூட!.
----------------------------------------------------------------------------------------------------

கேரளத்தில் கம்யூனிஸத்திற்கு கால் இடறுகிறதா?




     கடந்த 28.01.2014 அன்று T.Pசந்திரசேகரனின் கொலை வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட்து.  அரசியல் காரணமாகத்தான் T.P. சந்திரசேகரன் கொல்லப்பட்டார் என்றும், அரசியல் விரோதிகளும் அவர்களுக்கு உடந்தையான கொலையாளிகளும் தான் நடந்தக் கொலைக்கு உத்தரவாதிகல் என்றும், ரகசியப் பேச்சு வார்த்தை நட்த்திய 3 CPI (M) கட்சி உறுப்பினர்களுக்கும், 7 கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட்து.  2012, மே 4 ஆம் தேதி, உடலில் 51 வெட்டுக் காயங்களுடன், T.P. சந்திரசேகரன் மரணமடைந்த சம்பவம் கேரளத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று.  கோழிக்கோடு, வடகரை அருகே, ஒஞ்சியம் பஞ்சாயத்து தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸக் கட்சிக்கு ஏற்பட்ட்த் தோல்வி, மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து தொடங்கிய RMP (Revolutionary Marxist Party) கட்சித் தொண்டர்களுக்கும், CPI (M) தொண்டர்களுக்கும் இடையே பல முறை ஏற்பட்ட மோதல்களும், வடகரையில் கிடைக்க வேண்டியிருந்த பாராளுமன்றத் தொகுதி CPI (M)  க்கு கிடைக்காமல் போனதற்கு T.P. தான் காரணம் என்பதும், கொலைக்குப் பின்னிலுள்ளக் காரங்களாகக் கருதப்படுகின்றன.


     T.P. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவும் நேர்மையான, திறமை மிக்கத் தலைவராக நீண்டகாலம் தொண்டாற்றியவர்.  கட்சியில் அவருக்கும், கட்சியின் மேல் தட்டு தலைவர்களுக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடுகளும்,

V.S. அச்சுதானந்தன்


அவர், V.S. அச்சுதானந்தனின் ஆதரவாளர் என்பதும், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழல் உண்டாக்கியது.  மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து, முன்பும் இது போல் பல தலைவர்கள், பல காரணங்களுக்காக வெளியேறவோ, வெளியேற்ப்படவோ வேண்டியச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கே.ஆர். கௌரி அம்மா


எம்.வி.ராகவன்

திருமதி கே.ஆர். கௌரி அம்மாவும், திரு. எம்.வி. ராகவனும், மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி சொந்தமாகக் கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து அமைச்சர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள். அதுபோல், அப்துல்லாக் குட்டியும், செல்லராஜுவும் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்து, தேர்தலில் வெற்றியும் பெற்ரு, காங்கிரகாரகளாகவும்,  மஞ்சளாம்குழி அலி என்பவர் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்று, இப்போது அமைசராகவும் இருக்கிறார்.

T.P. அப்படியெல்லாம் செய்யாமல் தனியே கட்சி ஆரம்பித்து, அவர் பின்னில் மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் அணிவகுத்தும், மேடைப் பேச்சுக்களில் அஞ்சா நெஞ்சம் படைத்த அவர் வெளிப்படுத்திய பல விஷயங்களும், மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும், கட்சியின் வட்ட, மற்றும் மாவட்டத் தலவர்களுக்கும் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம்.  அவர்களுக்கு T.P. ஒரு தீராத தலைவலியாக மாறியே விட்டார்.  அவருடைய புதிய கட்சியும், அதற்கு கிடைக்கும் ஆதரவும், அது போல் மாநிலத்தின் பலபாகங்களிலும் வி.எஸ். அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலதும் நஷ்டமாவதைக் கண்டு, கொந்தளித்த பலரும் கட்சித் தலைமைக்கு,  T.Pயைப் போல் எதிர் குரல் கொடுக்கத் தொடங்கியதும், பெரும் பிரச்சினையாக ஆனது.  ஷோர்னூரில் முரளி, T.P. போல் கட்சிக்கு எதிரே தெர்தலில் தன் ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றியும் பெற்று விட்டார்.  பாலக்காடு முண்டூரில் கோகுல்தாசன் எதிர்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  விளைவோ, கட்சியின் எதிர் அபிப்ராயம் சொல்லும் தொண்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமயத்தை வீணாக்குவதை விட, அதிரடி நடவடிக்கை எடுக்க கட்சி செயலாளர் பினராயி விஜயன் தீர்மானித்தார். 
T.P. குடும்பம்

ஸ்டாலினைப் போல் மார்க்ஸிஸ்ட் கட்சியை கட்டிக் காக்க முகம் பாராது எந்தவிதக் கடினமான நடவைக்கையும் எடுக்கத் தயங்காத அவர் கட்சித் தலைமையை எதிர்ப்பவர்க்கு எதிரே, பதவிப் பறிப்பு, சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.  இதற்கிடையில், T.P. மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் பிரச்சினையும் ஆகிவிட்டார்.  தொழிலாளர் நலம், சமத்துவம், சமூக நன்மை, போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி, கேரளத்தில் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகித்த மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்தியாவில் முதன் முறையாக உழுதவனுக்கு நிலமும், உரிமையுடன் வாழும் வீடும், நிலக் கிழார்களிடமிருந்து ஏழைகளுக்குப் பெற்றுத் தந்த கட்சி, சாதிமதம் பேதம் பாராது கொடுமைக்காரர்களான நிலக் கிழார்களையும், சாதிமத வெறியர்களையும் ஆயுதமேந்தி அழித்த மார்க்ஸிஸ்ட் கட்சி தான், கட்சியைவிட்டு வெளியேறும் முன்பு வரை மார்ஸிஸ்ட் கட்சிக்காக அயராது பாடுபட்ட, கம்யூனிஸத்தைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்த, பெரும்பான்மையானோரின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான, மஞ்சேஸ்வரம் முதல் பாரசாலை வரையுள்ள மலையாளிகளால், “முதுகெலும்புள்ள நல்ல நேர்மையான ஒரு அரசியல்வாதி” என்று பாராட்டப்பட்ட ஒரு நல்ல கணவனும், தந்தையும், மகனுமாய் குடும்பத்தினருக்கு அன்பும், பாசமும் காட்டி வாழ்ந்து வந்த T.P. எனும் கம்யூனிஸ்டை, ஏசுநாதரை சிலுவையில் ஏற்றப் போகும் போது, தனக்கு இதில் பங்கில்லை என்று கை கழுவிய மன்னனைப் போல் வட்டம் அம்ற்றும் மாவட்டக் கட்சித் தலைமைப்  பொறுப்பிலுள்ள சிலர், T.P. யை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற போது, கட்சித் தலைமை தன் கைகளைக் கழுவி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் கேரளத்திலுள்ள  மனசாட்சி உள்ள மக்களுக்கு வரத்தான் செய்யும்,  போதாதற்கு, தீர்ப்புக்குப் பின் குற்றவாளிகளைக் கண்ணூர் மத்திய சிறைச் சாலிக்குக் கொண்டு போன வாகனங்களின் பின்னே, “செங்கொடியுடன் ஒரு வாகனம் அவர்களைப் பின் தொடர்வதையும், கடந்த தினம், திரு. கொடியேரி பாலகிருஷ்ணன், சிறைச்சாலைக்குச் சென்றுக் குற்றவாளிகளைக் கண்டதும், கண்டதற்கானக் காரணங்களை விவரித்ததையும் சானல்கள் வழியாக ஏராளமானவர்கள் பார்க்கவும் செய்தபின்.

கேரளத்தில், கட்சிகள் மத அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்று சொன்னாலும், முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத்தினரின் ஓட்டுக்களால் உயிர் வாழும் கட்சிகளான முஸ்லிம்லீக் மற்றும் கேரளா காங்கிரஸ்களின் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மிக அவசியம். அது மார்க்ஸிஸ்ட் கட்சியால்தான் முடியும்.  நிகழ்ந்த தறுகளுக்கு என்னென்னக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையாக ஒரு கம்யூனிஸ்டைக் கொன்றது  பாவமே!  வேலியே பயிரை மேய்வது போல் அது சம்பவிக்கக் கூடாதுதான்.  நீதியை நிலை நாட்டவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் தவறக் கூடாது என்பதற்கு பதிலாகச், சில நேரங்களில் கம்யூனிஸ்ட், சில சம்பவங்களை “காணவில்லை, கேட்கவில்லை” என்றிருக்க வேண்டும் என்றால், Capitalism முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே இடைவெளி குறைய ஆரம்பித்து விட்டது என்ற எண்ணம் சாதாரண மக்களின் மத்தியில் உண்டாகத்தான் செய்யும். அது தவிர்க்கப்பட வேண்டும்.  இது போல் தவறுகள் இனியும் உண்டாகாமல் இருக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியேறியவர்களைத் திரும்பக் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.  மேலும், கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயக முறையில் தீர்மானங்கள் எடுக்கபட்டு, இது போல் இனி ஒரு T.P. கட்சிக்கு எதிராக கட்சியில் இருந்து வெளியேறி கொல்லப்படுமரு நிலை கேரளத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  கடந்த வாரம் 1000க் கணக்கான பி.ஜே.பி.க்காரர்கள் தங்கள் கட்சியை உதறி மார்க்ஸிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதால், கட்சிக்கு உண்டான ஒரு லாபத்தை விட, நம் இந்த ஒரு T.Pயின் இழப்பு மார்க்ஸிஸ்ட் கட்சிக்குரு பெரும் சேதம் என்பதை மறக்கக் கூடாது
-------------------------------------------------------------

கொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகாமல் இருந்தது மனதிற்கு இதமாக இருந்தது




50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பெரும்பான்மையான கோயில்களுக்குக் காளைகள் நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. (கன்று குட்டிகள் வளர்ந்து கோயில் காளையாகும்.  முழு சுதந்திரமுள்ள கோயில் காளையாகத் திரியும்.)  அன்றெல்லாம் அவிழ்த்து விடப்படும் பசுக்கள், காளைகள், ஆடுகள் போன்றவை நம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல.  வழியோரங்களிலும், தரிசு பூமிகளிலும் அவற்றிற்கான புல் பூண்டுகள் முளைப்பது சகஜமே.  ஆனால், இப்போதைய சூழலில் காண்க்ரீட் கட்டிடக் காடுகளுக்கிடையே ஒரு கோயில் காளை நகர வீதிகளில் உலாவருவதை (சினிமா போஸ்டர்களைத் தின்று கொண்டு.)..சற்று சிந்தித்துப் பாருங்கள்!. அது எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகும்? எத்தனை பேர்களுக்கு தன நஷ்டத்தை ஏற்படுத்தும்?



கேரளாவில், காஞ்சிரப்பள்ளி எனும் இடத்திலுள்ள ஸ்ரீ கணபதியார் கோயிலிலும், இது போல் ஒரு காளை முன்பு எப்போதோ நேர்ந்து விடப்பட்டிருக்கிறது.  கணேஷ் என்று அழைக்கப்பட்ட அந்தக் காளையாலும் சிலப் பிரச்சினகள், சில விபத்துக்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.  பல மதங்களைச் சேர்ந்த, பல தெய்வங்களை வழிபடும் மனிதர்களிடையே, இது போன்ற சம்பவங்கள், ஒரு சில பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கலாம்.  எப்படியோ, கடந்த ஞாயிறு அன்று (22.12.2013) அக் கோயில் காளை, கை, கால்கள் கட்டப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீ கணபதியார் கோயிலருகே காணப்பட்டது.  இக்கொடிய செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மறு நாள் திங்கட் கிழமை, முற்பகல் 11 மணி முதல், மாலை 6 மணிவரை அப்பகுதியில் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது.  கோயில் காளையுடன் ஊர்வலம் செல்ல சிலர் முயன்ற போது, சமயோசிதமாக போலீஸாரும், கணபதியார் கோயில் நிர்வாகிகளும் ஈடுபட்டு அதைத் தடுத்தனர்.  ஒருவேளை அதைத் தடுக்காமல் இருந்தால் ஊர்வலத்தினிடையே சில அசம்பாவித சம்வங்கள் நிகழ்ந்து அது அரசியல் லாபத்திற்காக மதக் கலவரமாக மாற்றப்படவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  காலத்திற்கேற்ற சில மாற்றங்களை எல்லா மதத்தில் உள்ளவர்களும் உட் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் மத சார்பற்ற இந்தியாவில் எல்லோரும் சமாதானத்துடன் வாழ முடியும்.  சமூகத்தில் இது போல் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் காளைகளை, யானைகளை, பசுக்களை பராமரிப்பது போல், பராமரிக்க கோயில் நிர்வாகிகளும் தயாராக வேண்டும். அப்போதுதான் இவற்றால் சமூகத்திற்கு உண்டாகின்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சமூகத்தில் அமைதியானச் சூழலை ஏற்படுத்த, முக்கியமாக, இது போன்ற ஏதேனும் ஒரு மதத்தினரை வருத்தும் சம்பவங்கள் நடக்கும் போது, எல்லோரும் ஒரு மனதாய் நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று தங்கள் சொல்லாலும், செயலாலும், தங்கள் ஆதரவையும், வருத்தத்தையும் வெளிப்படுத்துவது நல்லது. 


தாலிபன்,  பாமியான் குன்றுகளில், 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட புத்தரது சிலைகளை எல்லாம், டைனமைட் வைத்துத் தகர்த்தெறிந்த போது
மௌன ஊர்வலம் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த புத்த மதத்தவரின் சகிப்புத் தன்மையுடன், காஞ்சரபள்ளி மக்களின் சகிப்புத் தன்மையை ஒப்பிடும் போது சிறிதுதான் என்றாலும் பாராட்டத்தக்கதே.


----------------------------------------------------------------------

ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவுவதுதான் நீதி வழுவா நெறி முறையோ?

கடந்த சில நாட்களாக, இந்திய துணை தூதர் கைதைப் பற்றிய விவகாரத்தில், அமெரிக்கப் போலீசாரின் நடவடிக்கையைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து கர்ஜனை செய்யும் நம்மவர்கள், இங்கு சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில்,, போலீசாரிடம் வாக்குவாதம் செய்து சட்டையைப் பிடித்த ஒருவரை, போலீசார் பரலோகத்துக்கே அனுப்பிய சம்பவத்தைப் பற்றியும் நம் அரசோ, காவல் துறையோ சிந்திக்குமா? 





விஷயம் மிகவும் வருத்தமான ஒன்று. சென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கைது செய்யப்பட்ட 29 வயது நபர் (25 என்றும் 29 என்றும் சொல்லப்படுகிறது.  எத்தனை வயதாக இருந்தால் என்ன) போலீஸ் கஸ்டடியில் இறந்து விட்டார். 

நடந்த சம்பவம் இதுதான். அந்த நபர் காய்கறி விற்பவர். சென்ற ஞாயிறு (15-12-2013) அன்று பொது இடத்தில் தொந்தரவு செய்ததாக, அந்தப் பகுதியில் ரோந்து வந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும், அந்த நபரைக் கேள்வி கேட்கப்போக, போலீசுக்கும், அவருக்கும் இடையே நடந்த வாக்கு வாதத்தில், போலீசார் அவரை அடித்து, அற்ப காரணங்கள் சொல்லி போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் புழல் சிறைக்குக் கொண்டு சென்றிருந்திருக்கின்றனர். 


போலீஸ் ஸ்டேஷனிலேயெ முடிந்திருக்க வேண்டிய பிரச்சினையைப் புழல் சிறைக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு அவர் அப்படி என்ன குற்றம்தான் செய்தாரோ?! புதிர்தான்! அந்த சப் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் அவரைக் கொஞ்சம் நன்றாகவே ‘கவனித்திருந்திருக்கின்றனர்.

புதன் கிழமை(18-12-2013) அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு வர, cardiac arrest ல் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக ஆஸ்பத்திரியில் சொல்லிவிட்டனர். அவருக்கு ஏற்கனவே ஒரு சில உடல் உபாதைகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தப் பகுதி மக்களும், அவர் குடும்பத்தாரும், – ஏறத்தாழ ஒரு 300 பேர் - அரசு மருத்துவமனையின் முன்பு போராட்டம் செய்தனர். பின்னர், வேன்களில் வந்து போலீஸ் ஸ்டேஷன் முன் மறியலும் செய்தனர். இறந்தவருக்குத் திருமணம் ஆகி 1 வருடமே ஆகிறது என்றும், அவருக்கு, ஒரு கைக்குழநதை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அன்று மாலை, அவரது குடும்பத்தாரும், அப்பகுதி மக்களும்,  போலீஸ் மீது நடவடிக்கை  எடுக்கவேண்டும் எனறும், இறந்தவரின் மனைவிக்கு வேலை வாய்ப்புத் தரவேண்டும் என்றும் ரோடை ப்ளாக் செய்து போராடினர். மறு நாள், அதாவது வியாழக் கிழமை அப்பகுதியில் கடை அடைப்பு நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஏதோ சில லட்சங்கள் தந்துவிடுவதாகவும், இந்தக் கேஸை இப்படியே விட்டு விட வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வியாழன் மாலை வரை பிணத்தை சம்பந்தப்பட்டோர் வாங்கவில்லை. நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று சொல்லி. நேற்று (20-12-2013) வெள்ளியும் கடை அடைப்புதான். நேற்று பிரேத பரிசோதனை. வணிகர் சங்கத் தலைவரும், அந்த இரு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அந்த இரு போலீசாரும் தற்போது அப்பகுதி ஸ்டேஷனிலிருந்து மாற்றப்பட்டு விட்டனர். இப்போது, இந்த வழக்கு நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.


இது போன்று நம்மூரில் போலீஸ் கஸ்டடியில் உயிர் போவது என்பது சகஜமாக நடக்கும் ஒன்றுதான். போன உயிர் போனதுதான். ஒரு சாதாரணக் குடிமகனுக்கு, அவர் தவறு சிறிய குற்றமாக இருந்தாலும் பெரிய குற்றமாக இருந்தாலும் அவரை கஸ்டடியில் எடுத்து குற்றத்திற்கேற்ற தண்டனைதான் கொடுக்கப்படவேண்டும்.  ஆனால், கைது செய்து, அடித்து இப்போது பரலோகத்திற்கே அனுப்பி விட்டனர்! நம் போலீசார்! நம் நாட்டில், எப்போதுமே சட்டமும் சரி, காவல் துறையும் சரி, ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் தடவித்தான் நீதித் தராசை தூக்குகின்றன.  இல்லையேல்,  நீதித் தாய் கண்ணைக் கட்டியிருப்பது போல தங்கள் கண்ணையும் கட்டிக் கொள்கின்றன. நீதிக்கு முன் பணக்கார வர்கமும், பாமர வர்கமும் ஒன்றுதானே? தேவயானி போன்ற மேலதட்டு வர்கத்திற்கும், அதிகார வர்கத்திற்கும் நம் நாட்டில் தீவிரமாகக் கொடுக்கப்படும் ஆதரவு, சங்கீதா மற்றும் இது போன்ற பாமர மக்களுக்கு இல்லாதது மிகவும் வேதனைக்குறிய ஒன்று. நம் நாட்டில் தான் இது போன்ற இரு வகையான நீதிகள், சட்டங்கள்! பணமிருந்தாலும், அதிகாரமிருந்தாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற போக்கு! சாதாரண மனிதனை நன்றாக "கவனிக்க"த் தெரியும். அதிகார, மேல்தட்டு வர்கத்தை அவர்கள் என்ன தவறு செய்தாலும் சமுதாயத்தில் சுதந்திரமாக நடமாட விடவும் தெரியும்!!  அவமானம்! நம் நாட்டில், நீதித் தேவதையின் தராசு சமமாக நிற்பதில்லை, பதிவர் திரு ரமணி அவர்கள் தன் பதிவாகிய “அனுமார் வாலில் சந்தர்ப்பங்கள் தர்மத்தை முடிவு செய்ய.......செல்வமும் செல்வாக்கும் நீதியை முடிவு செய்ய என்று குறிப்பிட்டுள்ளதைப் போல!! இந்த நிகழ்வுகளை எல்லாம் உற்று நோக்கும் போதுநம் நாடு சோஷியலிச ஜனநாயக நாடா இல்லை bourgeoisie நாடா என்ற சந்தேகம் வருகிறது.  முதலாளித்துவ/மேலை நாடுகளில் கூட, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், சாதாரணக் குடிமகனுக்கும் ஒரே சட்டம்தான்.! ஆனால், இங்கு சோஷியலிச ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில், அதிகாரத்திலும் செல்வாக்கிலும் உள்ளவர்களுக்கும், சாதாரண குடிமகனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாக உள்ளது. இதுதான் நம் போலீஸ்!  நம் நாட்டுச் சட்டம்!! அப்படி இல்லை என்றாலும், சுயநலவாதிகள் சிலரது குறுக்கீட்டால் இப்படியெல்லாம் சட்டமே திருத்தப்பட்டு நடக்கிறதோ? அந்த சிலருக்காக ஏன் மற்றவர்கள் மௌனம் சாதிக்கின்றார்கள் என்பதுதான் விளங்கவில்லை?! அவர்களுக்குச் சட்டம் பெரிதா இல்லை அவர்களுடன் பணியாற்றுவோரின் நலன் பெரிதா? இது மாற வேண்டும்.  இது போன்ற இடைவெளிகள் இல்லாமல் எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமாக நடத்தப்பட வேண்டும்!! நடக்குமா? இனியொரு விதிசெய்யப்படுமா? எந்த நாளும் காக்கப்படுமா? காத்திருப்போம் கண்கள் இரண்டும் நோகும் வரை?!!






--------------------------------------------------------------------------

அருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேசிய சாகித்திய அக்காடமி விருது!!





“கதையில்லாத்தவண்ட கதா (கதையில்லாதவனின் கதை) எனும் சுய சரிதத்திற்கு அதில் கதை இருந்ததால் மட்டும், பணமோ அரசியல் செல்வாக்கோ, அதிக சாமர்த்தியமோ (பழைய டூரிங் டாக்கீஸ்களில் முண்டியடித்து சின்ன ஓட்டையில் கையை நுழைத்து டிக்கெட் எடுப்பது போல்) இல்லாத கவிஞரும் எழுத்தாளருமான, எர்ணாகுளம் பரவூர் காரரும், மும்பையில் இந்தியன் ஏர்லைன்ஸில் இருந்து ஓய்வு பெற்ற M.N. பாலூருக்கு (பாலூர் மாதவன் நம்பூதிரி) தேசிய சாகித்திய அக்காடமி விருது கிடைத்திருக்கிறது. 22 மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளுக்கு, நேற்று (18.12.2013) சாகித்திய அக்காடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட போது, தனக்கும் விருது கிடைத்ததை அறிந்த அவர், “விருது கிடைத்ததில் சந்தோஷம்தான்.  இது போன்ற விருதுகள் பணமும், செல்வாக்கும் உள்ளவர்களுக்குத்தான் சாதாரணமாகக் கிடைப்பது வழக்கம்.  இங்கு, இது ஒன்றும் இல்லாத எனக்கு எப்படிக் கிடைத்தது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை.” என்றார்.  இதை வாசிக்கும் நமக்கு விளங்கியதோ ஒருவேளை அத்தி பூத்தாற் போல் சில நேரங்களில், சில நடுவர்கள் வரும் போது, உரியவர்களுக்கு இது போன்ற விருதுகள் கிடைக்கலாம்.. இல்லையேல் பணமும், அரசியல் செல்வாக்கும் உள்ள பலர் முயலும் போது, ஒருவருக்குக் கொடுத்தால், மற்றவர்கள் விரோதத்திற்கு பாத்திரம் ஆக வேண்டி இருக்கும் என்பதால், முண்டியடித்தவர்களின் படைப்புகளை எல்லாம் மூலையில் தள்ளி மூலையிலிருந்த, 1983 ல் அவர் எழுதிய கலிகாலம் எனும் புத்தகத்திற்கு கேரள சாசித்திய அக்காடமி அவார்ட் கிடைக்கப்பெற்ற, “கதையில்லாத்தவண்ட கதா தேர்ந்தெடுக்கப்பட்டதா தெரியவில்லை. எப்படியோ “கதையில்லாத்தவண்ட கதைக்கு பின்னால் எனென்ன கதைகள் பின்னப்பட்டாலும், “கதையில்லாத்தவண்ட கதையில் சாகித்திய அக்கடமி விருது பெறும் அளவுக்கு உள்ள கதை இருந்திருக்கத்தான் வேண்டும்.

---------------------------------------------------------------
ஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிகள் தருவதோ 36 லட்சம்......



எப்படி இருந்த நான் கீழே பாருங்கள் இப்படி  ஆயிட்டேன்!!!!

15 வருடங்களுக்கு முன்பு வரை பம்பை நதியில் குளித்துத் தங்கள் பாவங்களை கழுவும் பக்தர்கள்தான் இருந்தார்கள். தாங்கள் உடுத்தியிருக்கும் துணிகளில் அந்த பாபங்கள் ஒட்டிக் கொண்டு தங்களைத் தொடரும் என்ற எண்ணம் உண்டாதாலோ என்னவோ,
1990 க்குப் பிறகு தாங்கள் உடுத்தி இருக்கும் துணிகளை ஒழித்து விடும் வழக்கம் ஐயப்ப பக்தர்களிடையே அதிகமாகி விட்டது. இது பம்பா நதி நீரை மாசு படுத்தி, குளிக்கும் ஐயப்ப பக்தர்களுக்கு அரிப்பும், அதனால் உண்டாகும் தடிப்பும் ஏற்படத் தொடங்கியது.  எனவே தேவசம் போர்ட் துணிகளை நீக்க முடிவெடுத்து நீக்கி பம்பா நதியைச் சுத்தப்படுத்தியது.
நீக்கப்பட்ட்த் துணிகளில், நல்லவைகளை விற்ற, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நல்ல ஒரு தொகை கிடைக்க, அடுத்த வருடமே அவர் ரூ. 11,000 க்கு, துணிகளை பம்பா நதியில் இருந்து எடுக்க டெண்டர் எடுத்து விட்டார்.

என்னை வைத்தும் வியாபாரம் நடக்கிறது!! கேடுகெட்ட விந்தையான உலகம்!!



      ஒவ்வொரு வருடமும் ஏலத் தொகை கூடிக் கூடி வந்தது. போன வருடம் அது 30 லட்சம் ரூபாயானது.  இவ்வருடமோ அது 36 லட்சமாகி இருக்கிறது. இப்படி செய்பவர்களில் முதலிடம் வகிப்பவர்கள் ஆந்திர மாநிலத்தையும், இரண்டாம் இடம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களுக்காம். போகிறப் போக்கைப் பார்த்தால் பாபம் செய்தவர்களின் துணிகளை மூட்டைக் கட்டிக் கொண்டு வந்து, பம்பா நதியில் போடவும் வாய்ப்புண்டு.  தேவசம் வருமானம் கூட்ட இப்படி விடப்படும் துணிகளுக்கு டிக்கெட் வைக்கலாம். நல்ல நேரங்களில் நதியில் விட்டால் நல்ல பலன் உறுதி என்று யாரேனும் சொல்லக் கேட்டால், பின் பம்பா நதியில் நல்ல நேரத்தில் ஒழிக்கி விட நீண்ட க்யூ.  இப்படி அந்தத் துணிக் கதை, ஒழிகிக் கொண்டே இருக்கத்தான் செய்யும்.  நம் நாட்டில் இப்படித்தான் எப்போதும் இறை உணர்வும் மூட நம்பிக்கைகளும் முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சு இடுவது போல் சம்பந்தப் படுத்தப்படும்.  படித்தவர்களும் பாமரர்களும் கண்முடித்தனமாக இதைப் பின்பற்றத்தான் செய்வார்கள்.  இதை விட, சபரி மலைக்கு வரும் முன், இப்படிச் செய்பவர்கள், ஒரு ஜோடி ஆடைகளை ஏழைகளுக்குக் கொடுத்து, பின்னர் ஐயப்பனை தரிசிப்பது இதை விடச் சிறந்தது.  அன்ன தானம் ஐயப்ப பக்தர்களால் மிகச் சிறப்பாகச் செய்யப்படுவது போல் ஆடை தானம் செய்யப்பட்டால், கலியுக வரதனின் அருள் நிச்சயம்!!

--------------------------------------------------------------------
பொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்...... The last straw that broke the camel’ back,




தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டு விலங்கு அணியப்பட்டு அதுவும் தன் குழந்தையை டே கேரில் விட்டு வரும் போது, போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் செல்லில் அடைக்கப்பட்டு, பரிசோதனை எனும் பெயரில் ஆடைகள் அவிழ்கப்பட்டு, DNA டெஸ்டுக்கும் உட்படுத்தப்பட்டு...... இப்படிப்பட்டச் சட்டங்கள் அமெரிக்காவுக்கு இன்றியமையாததாக இருக்கலாம்தான்.  இவை எல்லாம்தான் ஒருவேளை அமெரிக்காவை அமெரிக்காவாக ஆக்கி இருக்கலாம்தான். என்றாலும், இந்திய அமெரிக்க நட்புறவிற்காக அமெரிக்காவில் இயங்கி வரும் இந்திய தூதரகத்தில் பொறுப்புள்ள பதவியில் சேவை செய்யும், இந்தியாவில் மிக உயர்ந்த தகுதிச் சான்றிதழான IFS பெற்ற, அதுவும், ஒரு பெண்ணிடம், தனி மனித சுதந்திரத்திற்கு வேறு எந்த நாட்டையும் விட முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்கா இப்படி நடந்து கொண்டது அதிர்ச்சியைத் தருகிறது. இந்தியர்களான நமக்கு, இலை மறை காயாக அரசியல் வாதிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் இரண்டு தரப்பட்ட சட்டங்கள் உள்ளது போல், அங்கும் சிறப்புச் சலுகை வேண்டும் என்பதல்ல எங்கள் வாதம். இதற்கு முன், முன்னாள் குடியரசுத் தலைவர் Dr.அப்துல்கலாம் அவர்களுக்கும், டிஃப்ன்ஸ் மினிஸ்டர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்க்கும், ஷாருக்கான் உள்ளிட்ட ஏராளமான கலைஞர்களுக்கும் இது போல் ஏற்பட்ட அவமானங்களுக்குப் பழிவாங்கும் நோக்கமும் எங்களுக்கு இல்லை.  அமெரிக்க சட்ட்த்திற்கு விரோதமாகத், தன்னுடைய வீட்டு வேலைக்கு உதவும் சங்கீதா ரிச்சர்டுக்கு விசாவில் குறிப்பிட்டுள்ளதை விட குறைவான ஊதியம் கொடுத்து வந்த தேவயானி செய்தது அவ்வளவு பெரிய குற்றமல்ல என்றோ கைது செய்வதோ, விசாரணை செய்யவோ கூடாது என்பதும் அல்ல எங்கள் வாதம். (இது போன்ற பதவி வகிப்பவர்கள் சட்டத்தை மீறாமல் இருப்பது மிக மிக அவசியம்தான்.  தாங்கள் செய்யும் சிறிய ஒரு பிழை கூட மிகப் பெரிய பிரச்சினைகளுக்குக் காரணம் ஆகலாம் என்ற எண்ணம் வேண்டும்). இதற்கு முன்பும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த, இது போன்ற வேதனைக்குறிய சம்பவங்களை மனதில் கொண்டு குறைந்த படசம், அவர், தான் இந்திய தூதரகத்தில் துணை தூதர் என்று சொன்ன போதாவது அவருக்கு எதிரே நடவடிக்கை எடுத்த போது இந்திய நாட்டிற்கும் அரசிற்கும் வேதனைப்பட வாய்ப்பில்லாத விதத்தில் அவர் கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே நம் கருத்து. தவறு செய்பவர்கள் தண்டிக்கப் படவேண்டியதுதான்.  ஆனால் தண்டிக்கப் படுபவ்ர்களுக்கும் இதைக் காண்பவர்களுக்கும் தண்டனை கொஞ்சம் கூடிவிட்டதோ என்று தோன்றினால், அங்கு நீதியல்ல அநீதி நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம். 
 ---------------------------------------------------------------------------

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங்கத்திலே.....



சமீபத்தில் கேள்விப்பட்ட 4 மரணங்கள், அதுவும் தற்கொலைகள் சற்று வியப்பைத் தந்தது. செய்தித் தாளில் வராத தற்கொலைகள். நான்குமே பெண்கள். படித்தவர்கள், நல்ல வேலையில் இருந்தவர்கள். சொல்லப்பட்டக் காரணம் இந்த நூற்றாண்டிற்கு, அதுவும் சமீபத்திய சமூகம் போகும் போக்கிற்கு சற்றும் ஒவ்வாத காரணமாக எனக்குப் பட்டது.  காரணம் கறுப்பு நிறமும், சற்று குறைவான அழகும், மாற்றுத் திறனாளிகளாக இருந்ததுனாலும், அதனால் திருமணம் தடை பட்டதும் தான். இதற்காகத் தற்கொலையா?  நம் சமூகம் இன்னும் மாறவில்லையா? என்னை யோசிக்க வைத்தது. இந்த அழகு இந்த சமூகத்தை என்ன பாடு படுத்துகிறது? சற்று கூடுதலோ என்று! இப்போதெல்லாம் இந்த அழகு என்பது மிகவும் இன்றியமையாதது என்பது போல் ஆகிவிட்டதோ? இல்லையென்றால், தெருவிற்கு தெரு, ஏன் கிராமங்களிலும் கூட அழகு நிலையங்களும், ஏகப்பட்ட அழகு சாதன விற்பனைக் கம்பெனிகளும் போட்டிபோட்டுக் கொண்டு உலகம் முழுவதுமே சிகப்பழகு க்ரீம்களையும், தலைச் சாயங்களையும் விற்க வேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்குப் படு குஷிதான்!




இதற்கும் மேலாக பலர் (பண வசதி உள்ளவர்கள்) இறைவன்/இயற்கை தந்த அழகில் மனத்திருப்தியும் அமைதியும் அடையாமல், தங்கள் மனதில் ஒரு பிம்பம் வடித்து, அறுவை சிகிச்சை செய்து தங்கள் உடலில் அழகுத் திருத்தங்களைச் செய்து கொள்கிறார்கள்! உதாரணமாக உடல் எடை குறைப்பிற்கும், உடலில் உள்ள அதீத சதையைக் குறைப்பதற்கும், மூக்கை அழகு படுத்துவதற்கும், முகத்தை அழகுபடுத்துவதற்கும், முடியை வழுக்கைத் தலையில் நட்டு(!!) வளர்ப்பதற்கும், பல் வரிசைகளை அழகு படுத்துவதற்கும், பணத்தை வாரி இரைத்து, சமயத்தையும் செலவிட்டு, அழகைக் கூட்டி வயதைக் குறைத்து சமூகத்தில் உலா வருகிறார்கள்.



அழகு என்பது என்ன? நிறம் என்பது என்ன? உடலில் ஊனம் இருந்தால் தான் என்ன? எல்லா அழகுச் சாதனங்களின், குறிப்பாக அழகு க்ரீம் விளம்பரங்களிலும் சொல்லப்படும் “சிவப்பழகு தான் அழகா? நம் உடலில் உள்ள தோல் நிறமிகள் (skin pigmentation) நம் தோலினுள் ஊடுருவும் புறஊதாக்கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துபவை. அவை ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஏற்படும் நிற மாறுபாடுகளை 10% கட்டுப்படுத்தும் வேலையையும், 90% பயோ கெமிக்கலினால் ஏற்படும் மாறுதல்களையும் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நிறம் போற்றப்படுகிறது. ஒரு சில நாடுகளில் தோல் நிறத்தின் தன்மையை அதற்கென்று உள்ள சில வார்த்தைகள், பாலின் நிறம் என்பது தொடங்கி ப்ரௌன் என்பது வரை மிக மிக ஆவேசமாகப் பேசப்படுகிறது.



நம் இந்தியாவில் வெளிர் நிறம் மிகக் கவர்ச்சிகரமானதாகவும், அதே சமயம் அடர்ந்த நிறம் தாழ்தப்பட்ட சாதியாகவும் கருதப்படுவதால், வெள்ளை நிறமாக்கும் க்ரீம்கள் என்று அழகு சாதனங்களுக்கு வியாபார ரீதியாக நல்ல சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. மட்டுமல்ல அழகான, வெளிர் நிறம் உடையவர்கள் உயர் சாதி எனவும் கருதப்படுகிறது.  என்னதான் நாம் அழகுச் சாதனங்களை உபயோகித்து நம்மை அலங்கரித்துக் கொண்டாலும், இறைவன் தந்த நம் உண்மையான சொரூபம் சொரூபம் தானே! அது மாறவா போகிறது? இல்லை நாம் யார் என்ற நமது உண்மையான அகத்தோற்றத்தையும், உள்ளத்தையும் அது காண்பிக்கப் போகிறதா?
ஒரு குழந்தை பிறந்ததுமே பொதுவாக நாம் கேட்கும் கேள்வி அது என்ன நிறம், அழகாக இருக்கிறதா, யாரைப்போல இருக்கிறது என்றும்தான். குழந்தை எப்படி இருந்தால் என்ன?  குழந்தை என்பது பூ போன்ற மென்மையான அழகுத் தளிர்தானே. பிறப்பிலிருந்தே இந்தப் பிரச்சினைகள் ஆரம்பிக்கத் தொடங்குகிறது. அழகு என்பது பெரும்பாலும் புற அழகைத்தான் நம் சமூகம் பேசுகிறது. அகத்தின் அழகை உற்று நோக்கினால் அது பல சமயங்களில் முகத்தின் அழகை விட பன் மடங்கு அழகாகத் தெரியும்!  அழகு என்பது தன்னம்பிக்கை தருவதுதான்.  என்றாலும், அதுவும் நம் மனதில்தான் இருக்கிறது.

பெண்கள் எதற்காக தாங்கள் அழகில்லை என்றோ, தங்களுக்கு உடலில் ஊனம் உள்ளது என்றோ, திருமணம் தடைபடுகிறது என்றோ வருந்த வேண்டும்? பொதுவாக, பெண்கள் சிறு வயதிலிருந்தே திருமணம் என்ற ஒரு பந்தத்தை முன்னிறுத்தித்தான் வளர்க்கப்படுகிறார்கள். திருமணம் என்பது உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவசியமான ஒன்றுதான். என்றாலும் அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் போது அந்தப் பெண்களுக்குத் திருமணம் தடை படும் சூழல் ஏற்பட்டால் மனம் தளர்ந்து தற்கொலை முடிவைத் தேடவைத்து விடுகிறது. முதிர்கன்னிகளும் நம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் ஒரு பெண் அழகாக இருந்து மணம் ஆன பின் ஒரு விபத்தில் அழகை இழந்தாலோ, உடல் ஊனமுற்றாலோ என்ன செய்ய முடியும்? அது போல் திருமணமே வேண்டாம் என்று தீர்மானித்து வாழும் அழகான பெண்கள் இல்லையா?
நம்பள்கி தன்னுடைய அழகான ஆசிரியை ஆன ஒரு “Dr.சிகப்பழகியைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.  அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும்.  நடிகை சோபனாவை எடுத்துக் கொள்ளுங்கள்.  அழகுள்ள அவர் கல்யாணமே செய்து கொள்ளாமல், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து, தனது நடனக் கலைக்காக அர்பணித்து மனம்கிழ்வுடன் வாழ்கிறார். எனவே அழகில்லை என்றோ, மாற்றுத்திறன் படைத்தவர்களாக பிறந்து விட்டோமே என்றோ திருமணம் ஆகவில்லையே என்றோ நினைத்து வருந்தி தற்கொலை முயற்சி வேண்டாம். நமக்கு நம் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள ஏற்ற வழியை கண்டுபிடித்து, அது சமூக சேவையாக இருக்கலாம், கலைத்திறன் அல்லது எழுத்தாற்றலை வெளிப்படுட்த்துவதாக இருக்கலாம் இல்லையேல் இறை உணர்வுடன் வாழும் வாழ்கையாகவும் இருக்கலாம். இவற்றில் நம் முழு கவனத்தையும் செலுத்தி பெண்கள் தங்களிடம் உள்ள திறமைகளை முன்னிறுத்தி அதில் முன்னேறி, தன்னம்பிக்கையையும், தங்கள் ஆளுமைத் திறனையும் வளர்த்துக் கொள்வதுடன், கம்பீரமானத் தோற்றமும் மரியாதையும் தரக்கூடிய உடை அணிந்து, உடல் மொழிகளையும் மற்றவர்கள், குறிப்பாக ஆண்கள், மதித்து மரியாதை கொடுக்கும்படியாக அமைத்துக் கொண்டால், அதுவே அவர்களுக்கு மிக மிக கம்பீரமான, மரியாதையான அழகைச் சேர்த்து விடும். அந்த குண அழகுடன் கிடைத்தற்கரிய இவ் வாழ்வை நமக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக்கி வாழப் பழகிக் கொண்டால் வாழும் நாளெல்லாம் இன்ப மயமே.


இங்கு நான் நேரில் கண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். எனது உற்ற நண்பர் துளசிதரனின் அக்கா ஒரு மாற்றுத் திறனாளி. (காதும் கேட்காது, வாய் பேச்சும் இல்லை. அதாவது அவரது பேச்சு அவருடன் நெருங்கிப் பழகியவருக்கு மட்டுமே புரியும். தனி அகராதி. எனக்கும் பழக்கமாகி விட்டது. எனது நண்பரின் குடும்பத்தில் நானும் ஒருவர்)



பல வருடங்களுக்கு முன்பு அவருடையத் திருமணவயதில் அவருக்குப் பார்க்கப்பட்ட ஆண்கள் எதிர்பார்த்ததோ வேறு. மாற்றுத்திறனாளியாக இருந்ததால் இரண்டாம் தாரமாகக் கேட்டு வந்திருக்கிறார்கள். அன்று அவர் எடுத்த முடிவு தைரியாமான முடிவு. திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து தன் பெற்றோருடனும், அவர்களது மறைவிற்குப் பின் தன் சகோதரனாகிய என் நண்பருடனும் மகிழ்சியாக அதே வீட்டில் எல்லோரையும் அன்புடன் கவனித்துக் கொண்டு, அம்மாவுக்கு நிகராகத் தன் ஆளுமைத் திறானால் வீட்டை நிர்வகித்துக் கொண்டு கம்பீரமாக இருந்து வருகிறார். என் நண்பர் அவரைத் தன் தாய் போலவும், அவருக்கு யாருமில்லையே என்ற மனக் குறை வரக்கூடாது என்பதற்காக தன் 3 குழந்தைகளில் ஒரு குழந்தையை தனது அக்காவிற்கும் கொடுத்து, (எல்லோரும் ஒரே வீட்டில்தான் தான் வாழ்கிறார்கள். அது வேறு!) அவர் குழந்தைகளும், மனைவியும் அவரிடம் அன்புடனும் இருந்து வருகின்றனர். அக்காவிற்குப் பாராட்டுக்கள்!! இது போன்று பல பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 
பெண்களுக்கு மட்டுமல்ல இங்கே சொல்லப்படும் பிரச்சினைகள்.  ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் உண்டுதான். ஆனால் ஆண்கள் அதனை  வேறு விதமாகக் கையாண்டு விடுவதால் பெரிதாகக் கருதப்படுவதில்லை.
ஒரு சில சந்தர்ப்பச் சூழலில் தங்கள் அழகையும், தங்கள் மாற்றுத் திறனையும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தங்களைக் குறைவாக எண்ணிக் கொள்ளலாம். எல்லோருமே இந்த உலகில் அழகானவர்கள்தான். ஒவ்வொருவரும் அவரவர் வழியில் தனித் தன்மையுடன், அழகானவர்தான். நீங்கள் அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடல் ஊனம் உங்கள் மீது, மற்றவர்களுக்குப் பச்சாதாபமோ இரக்கமோ ஏற்படுத்தக் கூடாது, உங்களையும் இந்த சமூகம் மதிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களா? ரொம்ப எளிது.  சுய கௌரவத்தையும், சுய மரியாதையையும் விட்டுக் கொடுக்காமல், தன்னம்பிக்கையுடன், உங்கள் திறமையைக் கண்டறிந்து அதை மேம்படுத்தி உங்களைத் தனித்தன்மை உடையவராக்கிக் கொண்டு ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கும் மேலாக உங்கள் முகத்தில் எப்பொழுதுமே புன்னகையை வரவழைத்துக் கொள்ளுங்கள். தன்னலமற்ற, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள். இது உங்களைச் சுற்றி ஒரு பாஸிட்டிவ் சக்தியைப் பரப்பி பிரகாசமான ஒளிக் கதிர்களைப் படரவிடும். நீங்கள் உங்களிடம் குறைபாடுகள் என்று நினைக்கும் அனைத்துமே பின்புறம் தள்ளப்பட்டுவிடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!! வெற்றி உங்களுக்கே!!!
Beauty lies in the eyes of the beholder . காண்பவரின் கண்களில் தான் அழகு இருக்கிறது. அவர் உங்கள் முக அழகை விட குண அழகைத்தான் ரசிப்பார்.  ஏனெனில் அவருக்குத் தெரியும் Beauty is skin deep என்று.
                                                   _ கீதா




-------------------------------------------------------------------------

வேலி பயிரை மேய்கிறதா?.... சுய நினைவு இழந்தவன் பசி என்று சொல்லித் தன் உடல் பாகங்களைக் கடித்துத் தின்கின்றானா?

கொடுமைகள் தொடர்கதைகள் ஆகிறது. குழந்தையின் கை வளர்கிறதா? கால் வளர்கிறதா? என்று பார்த்து வளர்க்கும் பெற்றோர்களைக் கண்டும், அவர்களைப் பற்றிக் கேட்டும், வளர்ந்த நாம் இக் கேடுகெட்டத் தகப்பனை (கையும் காலும் வளர்வதை கடித்துத் தின்னக் துடிக்கும் மிருகம் போன்றவனை) குறித்துக் கேட்கும் போது வாயடைத்துப் போகிறோம். ஒன்றும் புரிய வில்லை. இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் இருக்க யார் என்ன செய்ய வேண்டும் என்பதறியாமல் குழம்பிப் போகிறோம்.



கேரளா காசரகோடு அருகே உள்ள கும்பளையில் இருந்து +2 படிக்கும் 17 வயதுள்ள மாணவி ரயிலேறி திருவனந்தபுரம் சென்று ரயில்வே ஸ்டேஷனில் ஆட்களினிடையே பசியையும், தாகத்தையும் பொருட்படுத்தாமல் ஓரிரு நாட்கள் தங்கி இருக்கிறாள். அக் கூட்டத்தினிடையே இருப்பதுதான் பாதுகாப்பு என்று அவளுக்குத் தோன்றி இருக்க வேண்டும்.  சந்தேகித்த ரயில்வே போலீஸார் அவளை விசாரித்தப் போதுதான் தெரிய வந்தது, “உயிரீந்தத் தந்தையே கடந்த 5 மாதங்களாக, தன்னைத், தான் பாதுகாப்பாக வளர வேண்டிய வீட்டில் வைத்தே பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் சம்பவத்தைப் பற்றி.  இக் கொடுமையை சகிக்க முடியாமல், யாரிடமும் சொல்ல முடியாமல், வேறு எங்கும் போக வழியில்லாமல் பாவம் அந்தப் பெண், இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தாள்.  எப்படியோ அந்த இளம் மனதில் தற்கொலை செய்யத் தோன்றவில்லையே என்பதை நினைக்கையில் இறைவனுக்கு நன்றி சொல்லத் தோன்றுகிறது. அந்த இளம் பெண்ணைப் பாராட்டத் தோன்றுகிறது. திருவனந்தபுரம் ரயில்வே போலீஸார் 15.12.2013 ஞாயிறு அன்று அந்த மாணவியை காசரகோடு அருகே உள்ள கும்பளா போலீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று ஏற்பித்தனர். கும்பளா போலீஸ், மனித உடல் உள்ள மிருகமான அந்த ஆரிக்காடி கடவத்து அப்துல் ரஹ்மானை - 43 வயது - கைது செய்து திங்கள் அன்று நீதி மன்றத்தில் ஆஜராக்கி இருக்கிறது. 


உடலை பாதிக்கும் கான்சர் போல மனதை பாதிக்கும் இந்த கான்சர் உள்ள மன நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நம் நாட்டில் கூடி வருகிறது.  இந்த நோய் பாதித்தவர்களுக்கு தண்டனை கொடுப்பதோடு மட்டும் நில்லாமல், இந்நோய் புதிதாய் யாருக்கும் பிடிபடாமல் பார்ப்பதுடன், இந்நோயாளிகளிடமிருந்து பெண்குழந்தைகளைக் காக்கவும் வேண்டும். மன நிலை பாதிக்கப்பட்டது குழந்தையின் தாயே ஆனாலும் அக்குழந்தையை அத்தாயிடமிருந்து காப்பாற்ற வேண்டியது மற்றவர்களுடைய, மன நிலை பாதிக்கப் படாதவர்களுடைய கடமை.  பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் எல்லோரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.  பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியோ,  பாதிப்பு ஏற்படுத்துபவர்களைப் பற்றியோ ஏதேனும் சிறு தகவல்கள் கிடைக்கவோ, சிறு சந்தேகம் எழவோ செய்தால் அதை உதாசீனப் படுத்தாமல், உரியவர்களிடம் அதைப் பற்றிக் கலந்து ஆலோசித்து ஆவன செய்ய வேண்டும். வேலியே பயிரை மேய்கிறது. நாம் என்ன செய்ய? என்று சொல்லி கையைக் கட்டி நிற்காமல், அந்தப் பயிரைக் காக்க நமக்கு என்ன செய்ய முடியுமோ, அது வாக்கால் ஆனாலும் சரி, செயலால் ஆனாலும் சரி, அதை செய்யத் தவறக் கூடாது.  

------------------------------------------------------------------------------------------------------------------------


போற்றிப் பாடடி பெண்ணே....! வெளிநாட்டவர் காலடி மண்ணை.....!! 2

-தாயன்பு இல்லாத பிள்ளைகள் இல்லை என்பது போலத்தான் தாய் நாட்டுப் பற்று இல்லாத மக்களும் இருக்க முடியாது. பெற்ற தாய்க்கு பெருமை சேர்க்க விரும்பும் பிள்ளைகள், அதே போன்று தங்கள் பிறந்த மண்ணிற்கும் தங்கள் சாதனையால் பெருமை சேர்க்க விழைவது இயல்புதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர்களால் தங்கள் தாய் மண்ணில் சாதிக்க முடியாததை அந்நிய மண்ணில் சாதிக்க முடியும் போது அவர்கள் அந்த சந்தர்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.  மாற்றான் தாய் மண் அவர்களை கரம் நீட்டி அணைத்துக்கொள்ளும் அளவு, பிறந்த தாய் நாடு அரவணைக்கவில்ல என்றே கூறலாம்.



 சமீபத்தில், பாட்னாவைச் சேர்ந்த சாய்கட் குஹா என்பவர்க்கு NASA வின் மிகக் கௌரவமான NASA Tech Brief Award National Space Programme and to the mission of the Jet Propulsion Laboratory, US க்கு இவருடைய இன்றியமையாத பங்களிப்பிற்காக கௌரவிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்தியாவில் IIT கான்பூரில் எலக்ட்ரிக்கல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, பின் அமெரிக்காவில், MIT யில் மேற்படிப்பு படிக்கச் சென்று, டாக்டரேட் பட்டமும் பெற்றார். இப்போது இந்த அவார்டும் கிடைக்கப் பெற்றிருக்கிறார்..  இது போன்று நிறைய இளைஞர்களும், இளம் பெண்களும் அந்நிய நாடுகளுக்குச் சென்று அங்கு சாதனை புரிந்திருக்கிறார்கள்.  இருந்தாலும், இந்தியப் பெண்கள் நம் மண்ணில் சாதிக்க முடியாததை அந்நிய மண்ணில் சாதித்தால் அது மிகப் பெரிய சாதனைதான்.




1961 ல் ஹரியானாவிலுள்ள, கர்நலில் ஒரு இடைப்பட்ட குடும்பத்தில் பிறந்த கல்பனா சாவ்லா, எதிர்ப்புகளுக்கிடையே, சண்டிகரில் உள்ள பஞ்சாப் இஞ்சினியரிங்க் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங்க் படித்து முடித்த பின் ஒரு வருடம் கல்லூரியில் பணி புரிந்து, கிடைத்தப் பணத்துடன் USA ஐ அடைந்த அவரது திறமையையும், ஆர்வத்தையும் கண்ட அமெரிக்கா அவருக்கு உயர்கல்வி பெற அனுமதித்ததோடு மட்டுமல்லாமல், 1997ல் அவரை அவரது நிறம் பாராது, பிறந்த நாடு பாராது, அவர் பெண் எனும் பாலும் பாராது, கொலம்பியா விண்வெளிக்கலத்தில் விண்வெளிக்கு அனுப்பி அவரது கனவை நனவாக்கி, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய விண்வெளிப்பெண் என்ற புகழையும் கொடுத்தது. அதே சமயம், கல்பனா சண்டிகர் இஞ்சினியரிங்க் கல்லூரியில் ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங்க் படிப்பில் சேர, கல்லூரி முதல்வருடனும், பேராசிரியருடனும் நீண்ட போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.  ஒரு பெண்ணுக்கு உகந்ததல்ல ஏரோநாட்டிகல் இஞ்சினியரிங்க் என்பது அவர்கள் வாதம்.  சேரவிரும்பும் பெண்ணின் attitude, aptitude, interest, and efficiency, இது ஒன்றும் அவர்களுக்கு வேண்டாம்.  மனுஸ்ம்ருதியில்  பெண்களுக்கு இது போன்ற கல்வியறிவு கொடுக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருக்குமோ என்னவோ?. இப்படிப் பாரதப் பெண்ணின் பெருமையை உலகறியச் செய்த கல்பனாவிற்கே முட்டுக்கட்டை போட்டவர்கள் நம்மவர்கள்.  “முயற்சி திருவினையாக்கும் ..........” என்னும் வள்ளுவரின் வாக்கிற்கு இணங்க, முயன்ற அவருக்கு உதவிக்கரம் நீட்டிய நாட்டை, இது போன்ற நன்மைகள் செய்ததற்கு, இப்போதும் செய்வதற்கு நாம் வாழ்த்தியே தீர வேண்டும்.

இதே போன்று, கேரளா, மலப்புரம் மாவட்டத்தில் பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் 18 வயதிற்குள் குழந்தையும் கையுமாகக் திரிவதுதான் வழக்கம். (பெண்ணின் திருமண வயது 18 என்பதைக் குறைக்க வாதாடிக் கொண்டிருக்கும் மத பண்டிதர்கள் உள்ள பிரதேசம்.  சில நேரங்களில், இதை விட வேடிக்கையாக எல்லாம் பேசுவார்கள்.  ஒருமுறை, ஆணுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருக்க வேண்டிய அவசியம் பற்றி பேசும் போது, பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை வரும்போது ஆண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு ஒன்றோ, அதிலும் கூடுதலாகவோ மனைவிகள் வீட்டிலிருக்க வேண்டியது அவசியம் என்று ஒரு மத பண்டிதர் கூறினார் என்றால் பாருங்களேன்) இப்படிப்பட்ட சமூகத்திலிருந்து, கல்பனாவைப் போல் நெஸ்லி நீலன் கோடன் எனும் பெண், இடக்கரை என்னும் சின்ன கிராமத்திலிருந்து (அடுப்பூதும் பெண்களுக்கு கல்வி அறிவு எதற்கு என நினைக்கும் சமூகத்திலிருந்து) அயர்லாந்து சென்று ஆராய்ச்சிப் படிப்பை மேற் கொண்டிருக்கும் போதே விண் வெளியிலுள்ள ஒரு புதிய நீல நட்சத்திரத்தைத் தன் நண்பர்களுடன்  சேர்ந்து கண்டுபிடித்திருக்கிறாள். அந்தக் கண்டுபிடிப்பிற்கு உதவி செய்த அயர்லாந்து நாட்டை நாம் பாராட்டத்தானே வேண்டும்!!  இப்படியாக திறமை உள்ளவர்களுக்கு இங்கு நம் நாட்டில் கிடைக்காத வாய்ப்பும், உதவியும், பாதுகாப்பும் வெளி நாட்டில் கிடைத்தால், அதுவும் சாதி பாராது, மதம் பாராது, இனம் பாராது, அரசியல் பாராது கிடைத்தால், எல்லாவற்றிற்கும் மேலாக மனித குல நன்மைக்கு உதவிகரமாக அமையும் ஒன்றிற்குத்தான் நம் திறமை பயன்படப் போகிறது என்றும் தெரிந்த பின், நம் முனோர்கள் சொன்ன, “யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் வாக்கை மனதில் கொண்டு மனித இனத்திற்கு வெளிநாடு சென்று தொண்டாற்றுவதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?  இப்படிப்பட்ட, சாதிக்கவும், வாழவும் ஒரு நல்ல சூழல் அந்நிய மண்ணில் கிடைக்கும் போது நம்மூர் இளைஞர்களும், இளைஞிகளும் வெளிநாட்டுக்குச் செல்லத் துடிப்பதில் தவறில்லையே! இந்தியாவில் Brain drain என்று கூப்பாடு போடவும் தேவை இல்லை!



---------------------------------------------------------------------------------------------------------------------------


கடவுள் ஏன் கல்லானார்? 2................இந்தக் கல்லில் தங்கள் தலையால் முட்டிக் கஷ்டங்களைத் தீர்த்துவிட நினைப்பவர்களைக் காணாது இருக்கத்தானோ?!  


ஏறத்தாழ 35 வருடங்களுக்கு முன், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஓரிடத்தில், நிலத்தை உழுதபோது ஒருகல் தென்பட்டது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  “இந்தக் கல்லில் மூன்று முறை தன் தலையால் முட்டி தன் துயரங்களையும், ஆசைகளையும் சொன்னால், துயரங்கள் மாறும்: ஆசைகள் நிறைவேறும்,”
என்ற வார்த்தைகள் கொத்தப்பட்ட அந்தக் கல் உடனே கடவுளானது.  தேனி, போடி, தேவாரம், கம்பம் அருகே உள்ள சகல பட்டி தொடிகளில் இருந்தும், இந்த “முட்டுக் கோவிலுக்கு பக்த கோடிகள் நடந்தும், மாட்டுவண்டிகளிலும், சைக்கிள்களிலும், வந்து முட்ட ஆரம்பித்து விட்டார்கள்! பிரத்யேகமான, PRC (பாண்டியன் ரோடு ட்ரான்ஸ்போர்ட் கார்பொரேஷன்) கோயில் ஸ்பெஷலாக ஓடின. 
நீண்டக் கயூ.  ஆங்காங்கே “காணிக்கை அண்டாக்கள். சுற்றிலும் ஓலை கட்டி மறைத்த டீக்கடைகள் வளையல் கடைகள் முளைத்தன.  விவசாயத்திற்குக் கூட உபயோகப்படாத தரிசு பூமி இப்படி பலருக்கும்,
திடீரென வருமானம் தேடித்தந்தது. உண்மையான இறையுணர்வு உள்ளவர்களும், பகுத்தறிவு வாதிகளும் முட்டப் போகாமல் இருந்ததோடு மட்டுமல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் மூடநம்பிக்கையை கேலி செய்யும் வகையிலும், இது போல் கல்லில் கொத்தி வைக்கப்பட்டப் பலதிலும் அன்றைய மனிதர்களின் விருப்பு வெறுப்புகள் ஒளிந்திருக்கும் என்று மறை முகமாக மக்களுக்கு வெளிப்படுத்த நினைத்த ஏதோ ஒரு உண்மையான பக்தன், அல்லது சீர்திருத்த வாதியின் செயல்தான் இந்த முட்டுக் கல் என்று உரக்கச் சொல்லவும் எழுதவும் செய்தார்கள்.  அதற்கெல்லாம் செவி சாய்க்காது இருந்த பாமர மக்கள் பலமுறை முட்டியும் பலனில்லாமல் போகவே, தனியே தங்கள் முட்டல்களை ஒரு சில மாதங்களுக்குள் நிறுத்தி விட்டார்கள்.  தாமதமின்றி அங்கிருந்த காணிக்கை அண்டாக்களும் கடைகளும் மறைந்து, அது மீண்டும் கல்லும் முள்ளும் நிறைந்த காட்டுப் பிரதேசமானது.

மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடுபவர்கள், நாம் வாழும் இந்தக் கால கட்டத்தில் மட்டுமல்ல, நூற்றாண்டுகளுக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கானத் தெளிவுதான் அந்த ‘முட்டுக்கல் கல்வெட்டு.  அன்றும், இன்றும், மூடநம்பிக்கைகள் எதிர்க்கப்பட்டுக்கொண்டுதான் இருந்தன, இருக்கின்றன.  இதில் மிகவும் வேடிக்கையான சம்பவம் என்னவென்றால், வரும் தலைமுறைக்கு ‘விழிப்புணர்வு உண்டாக்கக் குழித்திடப்பட்ட "முட்டுக்கல்லும்" இறைவன் ஆனதுதான். இப்படித் தங்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் எந்த ஒரு ஆயுதத்தையும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் லாப நோக்கு உள்ளவர்களையும், தாங்கள்தான் இறைவனின் “ப்ரைவட் செக்ரட்டெரிகள் என்று சொல்லித் திரியும் கபட பக்தர்களையும் நாம் தத்துவம் பேசித் திருத்த முடியாது. அவர்களிடம் சிக்கி சீரழியக் கூடாது என்று பொது மக்களை எச்சரிக்கத்தான் முடியும்.  இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டிய மற்றொரு உண்மை என்னவென்றால், கல்வெட்டுக்களிலும், ஓலைகளிலும் எழுதப்பட்ட எல்லாவற்றையும் நாம் கண்ணை மூடிக் கொண்டு நம்பக்கூடாது என்பதும்தான்.  அவற்றில் பலதும், சமூகத்தை எளிதாக ஏமாற்றும் திறனுடைய சிலர், தம் குடும்பத்தாரும், இனத்தாரும் சுகமாய் வாழ அவர்களுக்குச் சாதகமாக அவர்களே எழுதி வைத்த புரணங்களும், உப புராணங்களும், ஸ்ம்ருதிகளும், ஆகமங்களும், வேத வியாக்யானங்களும் தான். இத்தகைய இடைச் செருகள்களில்தான் சாதி விவஸ்தையும், பிராமணர்களுக்கு பசு, பொன், மற்றும் பூமி தானம் செய்தால் விஷ்ணு பகவான் வைகுண்ட பதவி தருவார் போன்றவை எல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே நம் முன்னோர்கள் இப்படி சொன்னதாகச் சொல்லப்படுவதில் எது  பொது நலம் கருதி சொன்னது, எது சுயநலம் கருதி சொன்னது என ஆய்வு செய்து அறிந்து அதில் பொது நலம் கருதி சொன்னதை மட்டும் உட்கொள்ளவேண்டும். இங்கு,

“எப்பொருள் யார்யார்வாய் கேட்பினுன்- அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு



என்ற வள்ளுவன் வாக்குத்தான் நமக்கு வேதவாக்காக இருக்க வேண்டுமே ஒழிய, "இது உண்மையிலேயே வேதவாக்குகள்தான்” என்று சொல்லப்படுபவையை  அல்ல.


-------------------------------------------------------------


போற்றிப் பாடடி பெண்ணே??....! வெளிநாட்டவர் காலடி மண்ணை??.....!!

ஒவ்வொரு வருடமும் நோபல் பரிசு அறிவிக்கபடும்போது இந்தியாவில் எழுப்பப்படும் ஒரு கேள்வி, இந்திய அறிவியலாளர்களுக்கு, ஏன் நோபல் பரிசு கிடைப்பதில்லை? “தாய் மண்ணே வணக்கம் என்று பாடும் தேசப்பற்று மிக்கவர்களே இதைப் படித்தவுடன் வெகுண்டு எழுந்து சண்டைக்கு வந்து விடாதீர்கள். இந்தியருக்கும் நோபல் பரிசு கிடைத்துள்ளது என்று! கேள்வி இதுதான், ஒரு இந்தியர், சுதந்திர இந்திய மண்ணில் இருந்து கொண்டு, வாழ்ந்து கொண்டுவேலை செய்து கொண்டுஆராய்ச்சி செய்து, நோபல் பரிசு, வாங்கியதாகச் சரித்திரம் இருக்கிறதா? தகுதி இல்லையா? ஆராய்சிகள் இல்லையா? ஆர்வம் இல்லையா? அரசியலா? அறிவியல் தரம் தாழ்ந்து விட்டதா? மேலே கொட்டை எழுத்துக்களை மறு முறை படியுங்கள். சொல்லவருவது சுதந்திர(?) இந்தியாவில்! 1947 க்குப் பிறகு.  இப்போதும், நீங்கள் உங்கள் வாக்குவாதத்தை விடவில்லை என்று தெரியும். 


பொருளாதாரத்தில் நோபல் பரிசு வாங்கிய  திரு. அமர்த்யா சென் (Amartya Kumar Sen அவர்களைச் சுட்டிக் காட்டுவீர்கள் என்று தெரியும்.   உங்களுக்கு, ‘விக்கியைப் போய் பார்க்க என்பதுதான் வேண்டுகோள். அவர் இந்தியக் குடியுரிமை பெற்றவர்தான்.  ஆனால், அவர் பணியாற்றிய இடங்களைச் சற்று ஆராயுங்கள், நோபல் பரிசு வாங்கிய போதும்!  



அது போல 1983ல் பௌதீகத்தில் நோபல் பரிசு வாங்கிய சுப்பிரமணிய சந்திரசேகரையும் (October 19, 1910 – August 21, 1995),[  சுட்டுவீர்கள்.  ஆனால் அவர், அமெரிக்ககுடியுரிமை பெற்று அங்கிருந்துதான் ஆராய்சி செய்து நோபல் பரிசு வாங்கியவர்!  அந்நிய மண்ணில்! இந்திய மண்ணில் அல்ல. http://en.wikipedia.org/wiki/Subrahmanyan_Chandrasekhar




மதர் தெரசாவைதாகூரை நீங்கள் சொல்லுவீர்கள். தெரியும்.  அவர்களுக்கும் இந்தத் தலைப்புக்கும் சம்பந்தம் கிடையாது. மதருக்கு நோபல் பரிசு கிடைத்தது அவரது தன்நலமற்ற சேவைக்கு.தாகூருக்குஇலக்கியத்திற்கு. மற்ற எல்லா இந்திய நோபல் laureates ஐயும் எடுத்துக் கொண்டால் அவர்கள் பிறப்பினால் இந்தியர்களாக இருந்தாலும் அவர்களால் சாதிக்க முடிந்தது அந்நிய மண்ணில்தான்!!

இந்தியர் ஒருவர் நோபல் பரிசோ, சர்வதேச அளவில் ஒருவரது ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டாலோ, அவார்ட் வாங்கினாலோ, பட்டிதொட்டி வரை ஊரில் இருக்கும், நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் எல்லாம் போட்டி போட்டு, “இந்தியரின் சாதனை என்று அவரது புகைப்படங்கள், அவர் இங்கு பிறந்த வீடு, பள்ளி, ஆசிரியர்கள், (அவர்கள் மறந்து கூடப் போயிருக்கலாம்), கில்லி விளையாடிய மண்ணு, கிராமம், அவர் படித்த மண்ணெண்ணை விளக்கு, தெரு விளக்கு, அவர் சைக்கிளில் செல்லும் மிக எளிமையான மனிதர் என்ற ஃபோட்டோ, அவரது பெற்றோர், உறவினரிடம் இன்டெர்வ்யூ, அவர் இங்கு இருக்கும் போதோ, வந்த போதோ உபயோகித்த அறைகள் வரை க்ளிக்கி படம் போட்டு, ஏதோ அவருக்கு இந்த தேசம் இந்த சாதனைக்கு உதவியது போல, நம் மண்ணில் சாதித்தது போல வெட்கம் இல்லாமல் பக்கம் பக்கமாகக் கட்டுரை எழுதுவார்கள். கொஞ்சம் நின்றோ, உட்கார்ந்தோ, நிதானமாக யோசித்தால், அவர்களுக்கு இந்த தேசம் எந்த வகையில் உதவியது? யாராவது யோசித்தார்களா? என்று கேட்கவும் வழியில்லை, யோசித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்!! ஏன் என்றால் நம் மூத்தக் குடிமகனும், (அதாங்க நம்ம குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி) பிரதமருமே இதைப் பற்றி யோசித்து, அங்கலாய்த்துக்  கொண்டுதான் இருக்கிறார்கள். இருவருமே, “நம் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவர்களது ஆராய்சிகளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தாலும், நோபல் பரிசு கிடைத்திருந்தாலும்,
சர். சி.வி. ராமனுக்குப் பிறகு, இன்னும் இந்தியர் எவருமே நமது நாட்டிலேயே ஆராய்ச்சி மேற்கொண்டு நோபல் பரிசு வாங்கவில்லை என்று அங்கலாய்த்திருக்கின்றனர். இந்த ஆய்வைப் படியுங்கள்.- by Thomson Reuters

2010 ஆம் ஆண்டு கொடுக்கபட்டுள்ள புள்ளியியல் படி இந்தியாவிலிருந்து 3.5% of global research output தான் எல்லாத் துறைகளிலிருந்துமே சராசரிக்கும் குறைவாகவே வெளியீடுகள்உதாரணமாக clinical medicine - 1.9%psychiatry (0.5%), neurosciences (1.4%), immunology (1.8%), molecular biology (2.1%) and environmental research (3.5%). Mathematics (2%) in 2010, while it was 17% for China. materials sciences, 6.4% in 2010, while China's stood at 26% — a rise from 5% in 1996.
            இந்தியாவில், பல்கலைக்கழகங்களில் நடக்கும் ஆராய்சிகள் கழிந்த 20 வருடங்களாக ஒரு தேக்க நிலையில் இருந்துவருகின்றது எனலாம்.  என்னதான் இப்போது அது சிறிது முடுக்கிவிடப்பட்டிருந்தாலும், இன்னும் பல காலங்கள் எடுக்கலாம் அது எல்லாம் திரண்டு அறிவுக் களஞ்சியமாக மாற. அதற்கு காரணங்கள், முரண்பாடுகள் ஏராளமாக உள்ள நம்நாட்டின் உயர்கல்வியும் (எல்லாமே கறிக்கு உதவாத ஏட்டுச்சுரைக்காய்தான்), சர்வதேச தரத்திற்கு உயராத நம்முடைய நாட்டவரின் ஆராய்சிக் கட்டுரைகளும் தான்.

நம் விஞ்ஞானிகளுக்கு, அரசியல், சமூக, கலாச்சார, பண ரீதியான ஆதரவு கிடைப்பதில்லை என்பதும் ஒரு உண்மை. அடுத்து மிக மிக வேண்டிய ஒன்று நம் ஊரில் சுத்தமாகக் கிடையாது. Peer review. இதை நம் நம்பள்கி சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்இது மிக மிக அவசியம் நோபல் பரிசுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்கு. (Peer review  is the evaluation of work by one or more people of similar competence to the producers of the work (peers). It constitutes a form of self-regulation by qualified members of a profession within the relevant field. Peer review methods are employed to maintain standards of quality, improve performance, and provide credibility. In academia peer review is often used to determine an academic paper's suitability for publication.).  ஆனால், அங்கும், நோபல் பரிசுக்குப் போட்டி போடும் கட்டுரைகளை அங்கீகரித்தலிலும், இந்த Peer review  வில் தனிமனித வெறுப்பு விளையாடுவதாக, அதாவது நம்மூர் விஞ்ஞானிகளின் பேப்பர்கள் ஒரிஜினலாகவே இருந்தாலும் அங்கீகரிக்கப்படாமல் போகவும் வாய்ப்புண்டு.  அவ்வாறு நடந்துள்ளதாக சில குரல்கள் எழுந்தது உண்டு. 

இதில் சில நியாயங்கள் இருப்பதாகவும் படுகிறது. ஏனென்றால் இவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர் எல்லோரும் அமெரிக்கவாசிகள்தான்.


ஜகதீஷ் சந்திரபோஸ்: (30 November 1858 – 23 November 1937)   இவர் தான் முதலில், wireless signaling in 1895அதன் பின் radio wave receiver called the 'coherer' from iron and mercury நிரூபித்தவர். 1978 ல் Sir Neville Mott,  பௌதீகத்திற்கு நோபல் பரிசு வென்றவர். சொல்லப்போனால், அவர், 'n' and 'p' type semiconductors, முதன் முதலில் போஸ்தான் அறிமுகப்படுத்தியவர், அதுவும் 60 வருடங்களுக்கு முன்பே என்று சொன்னார்.  ஆனால், நோபல் பரிசோ Guglielmo Marconi in 1909 வழங்கப்பட்ட்து. (14 வருடங்கள் கழித்து அதாவது போஸ் அதற்கு முன்பே நிரூபித்துவிட்டார்).



Satyendranath Bose: Born1 January 1894,Calcutta, British IndiaDied 4 February 1974 (aged 80)Calcutta, India.  இவர்  Albert Einstein. க்கு statistics of quanta of lightphotons என்னும் ஆராய்சிக் கட்டுரையை அனுப்பினார். Einstein அதை ஊக்குவித்து, ஆதரவு தெரிவித்து Zeitschrift der Physik  ல் in 1924வெளியிடச் செய்தார். இதன் பின் Bose-Einstein statistics and the term 'Bosons' என்ற பெயரில் நிறைய வெளிவந்தன. நோபல் பரிசும் கிடைத்த்து ஆனால் அதற்கு மூல காரணகர்த்தாவான சத்யேந்திர போஸிற்கு அல்ல.

G N Ramachandran: Born: October 8, 1922, Ernakulam; Died: April 7, 2001, Chennai-bio-molecular structures in general and, more particularly, the triple helical structure of collagen ல் செய்த ஆராய்சி முன்னோடியானமுதன்மையான) நோபல் பரிசுக்கு தகுதி வாய்ந்தாக இருந்தாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

E C George Sudarshan: 16 September 1931 (age 82) Pallam, Kottayam, India pioneering contributions to Quantum Optics and coherence, ஆனால் இவரது ஆய்வுகள் நிராகரிக்கப்பட்டு, அதே ஆராய்சிக்கு Roy Glauber என்பவருக்கு பௌதிகத்தில் 2005 ல் நோபல் பரிசு கொடுக்கப்பட்டது.


Narinder Kapany, the Father of Fibre Optics: October 12, 1926 (age 87) (இவரைப் பற்றி தெரிந்து கொள்ள http://news.rediff.com/report/2009/oct/08/how-india-missed-another-nobel-prize.htm) அவருக்குக் கொடுக்கப்படாத Nobel Prize2009ல் அதே ஆராய்சிக்கு Charles K Kao,  என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. இதற்கு என்ன காரணங்கள் இருக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்? அங்கும் தனிமனித காட்டம்? இல்லை அரசியல்? அல்லது இந்தியர் என்ற ஒரு இளக்காரம்? 
இவ்வாறு பல சர்ச்சைகள் இருந்தாலும், நம் இந்தியாவின் அறிவியல் ஆராச்சிகளின் தரம் குறைந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை.  அதாவது, புதியதாகவும், ஒரிஜினலாகவும் இல்லை என்றும், நிறைய ஆராய்சிகள் காப்பியடிக்கப்படுகின்றன என்றும், நம் ஊரில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் கூட திருடு போவது உண்டு, திருடி தான் எழுதியாதாக வெளியிடும் வழக்கமும் உண்டு என்றும், இணையதளத்தில்  இருந்து சுட்டு cut and paste” செய்து plagiarism செய்பவர்களும் உண்டு என்ற கருத்துக்களும், நம்மூர் ஆராய்சிகள் பற்றி நிலவுகின்றன.

அமெரிக்காவில்லும், ஐரோப்பிய நாடுகளிலும், பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகளுக்கு உதவுவதோடு, அந்த்த் தொழில் நுட்பத்தை பேட்டன்ட் செய்து விளைபொருளாக சந்தைக்குக் கொண்டுவரவும் உதவுகின்றன.  சுதந்திரத்திற்கு முன் நம் இந்தியாவிலும், பல்கலைக்கழகங்கள் தேசீய ஆராய்ச்சிக் கூடங்களுடன் இணைந்து பணி புரிந்து ஆராய்சிகளுக்கு உதவியது போன்ற ஒரு சூழல் சுதந்திரத்திற்குப் பிறகு இல்லாது போனது ஒரு அவல நிலை.  அதிலும் Red Tape”  இருக்கும் வரை ஒரு மண்ணுக்கும் பிரயோஜனமில்லை. நம் பிரதமரே இதை,

துரதிர்ஷ்டவசமாக, ஒரு கசப்பான உண்மை, நம் நாட்டில் சி.வி. ராமனுக்குப் பிறகு அறிவியலின் தரம் பின்னோக்கிச் சென்றாதற்கு ரெட்  டேப்பிஸம்மும், அரசியல் தலையீடும், நல்ல ஆராய்சிகளுக்கு முறையான அங்கீகாரமும் கிடைக்கப்பெறாத்துதான் காரணங்கள் என்று சொல்லியிருக்கிறார்.  சொல்லி என்ன பிரயோஜனம்?  செயலில் இல்லையே. இவ்வாறு பேசுவதை செயலில் காட்டுங்களேன்.  உங்கள் கையிலும், குடியரசுத்தலைவர் கையிலும் தானே அதிகாரம் இருக்கிறது?! நீங்கள் எவ்வளவோ செய்யலாமே.

 The secretary general of the Nobel Committee Goran K Hannson had a simple message for Indian youngsters. "In the end, individuals win Nobel prizes, not governments. Governments definitely play a major role in making things possible for an individual but it is ultimately upto a person to work towards a Nobel. It is time Indian youngsters started to dream of one," (courtesy Times of India Oct 7, 2013)

நோபல் கமிட்டியின் செக்கரெட்டரி ஜெனரலும், நமதுபிரதமரும் கூறியதிலிருந்து நமக்குத் தோன்றுவது என்னவென்றால் இந்தியா இன்னும் போட்டி போடும் அளவு உயரவில்லை என்பது மட்டுமல்ல உயரவைக்கப்படவேண்டிய முயற்சிகள்  எதுவும் எடுக்கபடவில்லை என்பதுதான். அறிவியலுக்குத் தேவையான ஆக்கமும், ஊக்கமும் பள்ளிக் காலத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும்.  இங்கு எல்லாமே மதிப் பெண் அடிப்படையிலும், ராங்க் அடிப்படையிலும், படித்த எல்லாவற்றையுமே அப்படியே வாந்தி எடுக்கின்ற அடிப்படையிலும் தானே அறிவு நிர்ணயிக்கப்படுகிறது.  இதற்கு நம் கல்வித் துறை, ஆசிரியர்கள், பெற்றோர்கள் எல்லோருமேதான் காரணம். வாந்தி எடுப்பதுதான் கல்வியே என்ற சூழ்நிலையில் வளரும் ஒரு குழந்தை  எப்படி, சுயமாக சிந்தித்து, கேள்வி கேட்டு, ஆராயும் மனப்பான்மைக்கு உட்படும்? அடிப்படையில் மாற்றம் தேவை.  குழந்தைகள் சுயமாக்ச் சிந்தித்து, கேள்வி கேட்டு ஆராயும் மனப்பான்மைக்கு அவர்களைக் கொண்டுவர அரசும், கல்வித்துறையும், ஆசிரியர்களும், சமுதாயமும், பெற்றோர்களும் ஆவன செய்ய தாயாராகி முன்வர வேண்டும். அப்போதுதான் நோபல் பரிசு இந்தியர்களுக்குக் கைஎட்டும் தூரத்தில் அமையும்!








---------------------------------------------------------------------------------------------------------------

கடவுள் ஏன் கல்லானார்?......இந்த மடேஸ்னானம் செய்யும் பாழாய் போன மனிதர்களைப் பாராது இருக்கத்தானோ?




பிராமணர்களின் எச்சில் இலையில் படுத்து உருண்டால் தங்களுடைய மாறாத தோல் வியாதிகள் மாறும் என்றும், வியாதி இல்லாதவர்களுக்கு ஒருபோதும் தோல் வியாதிகள் வரவே வராது என்றும், மோக்ஷம் கிடைக்கும் என்றும் நம்பும் ஆயிரக்கணக்கான பிற்பட்ட மற்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் கர்நாடகத்தில் மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடத்தும் இந்த முட்டாள் தனத்தைப் பற்றி நினைக்கையில் இதயம் வலிக்கின்றது. 2012 ல், கர்நாடக உயர் நீதி மன்றம் அருவருக்கத்தக்க இந்த மூட நம்பிக்கையை நிறுத்தக் கூறி ஆணை பிறப்பித்ததை, உச்ச நீதி மன்றம் ஸ்டே செய்ததுதான் இந்தக் கேவலமான எச்சில் இலையில் உருளும் வழக்கம் மீண்டும் நடக்கக் காரணம்.  ஓட்டுக்களில் மட்டும் கவனம் செலுத்தும் அரசியல் வாதிகளின் மௌனம் இது போனற சம்பவங்களுக்கு உரமாவதால், இந்தக் காட்டுமிராண்டித்தனம் தடையின்றி நடக்கின்றது. அதுவும், சைவக் கடவுளான சுப்ரமணியன் முன்.(வைஷ்ணவ மதம்தான் விஷ்ணுவின் நெற்றியிலிருந்து பிறந்த பிராமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மதம்).  எதிர்கால சந்ததியினர் இது போன்ற சம்பவங்களை காணவும், கேட்கவும் செய்யும் போது அவர்களுடைய அறிவாற்றல், சிந்திக்கும் திறன் இவை எல்லாம் ஆவியாகி மூடநம்பிக்கைகள் நிறைந்த மூட சமூகத்தின் பாகமாக அவர்களும் மாறித்தான் போவார்கள்.



இது போன்றவை தமிழகத்தில் நடக்காமல் இருப்பதற்கு நம் பெரியார்தான் காரணம்.  




அது போல் கேரளாவிலும் சம்பவிக்காமல் இருக்க ஸ்ரீ நாராயண குரு தான் காரணம்.  இல்லையேல் பிற்பட்ட, தாழ்த்தப்பட்டத் தமிழர்களும், மலையாளிகளும் இது போல் உருண்டுகொண்டுதான் இருந்திருப்பார்கள். 




இதில் என்ன முரண்பாடு என்றால், சாதிகளை எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், தாழ்தப்பட்ட மக்களும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று போராடிய பசவண்ணா என்னும் சமூக சீர்திருத்தவாதி வாழ்ந்த கர்நாடகாவில் இது போல் நடப்பது அவமானமாகத்தான் கருதப்படவேண்டும். இந்த மடத்தனமான மடேஸ்நானம் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது.  இங்கு நம் மௌனம் தற்கொலைக்குச் சமம்.  இதை ஒரு ஜோக்காக எடுக்காமல், ஒவ்வொரு இந்தியனும் தனக்குக் கிடைத்த ஒரு ஷாக்காக எடுத்து, ஆத்திக, நாத்திக வித்தியாசம் பாராமலும், சாதிமத வித்தியாசம் பாராமலும் அரசியல் லாபம் பார்க்காமலும், இது போன்ற மூட நம்பிக்கைகளை வேரோடு பிடுங்கி எறிய உறுதி எடுத்து அதற்காகச் செயல்படவேண்டும். 


பின் குறிப்பு: இன்னும் ஓரிரு சம்பவங்களை இத்துடன் இணைத்தால் இந்த இடுகை பெரிதாகிவிடும் என்ற காரணத்தினால் அடுத்த இடுகையில் இதன் தொடர்பான சம்பவங்களை எழுதவிருக்கிறோம். தயவு செய்து வாசிக்க மறக்க வேண்டாம்.


----------------------------------------------------------------------------------------------------

இப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்றன



       நாட்டிற்கும், நாட்டார்களுக்கும், நன்மை பயக்கும் லட்சியங்களுக்காக வாழ்ந்து, போராடி, இறுதி வரை வெற்றி கண்டு, தென்னாப்பிரிக்க நாட்டையும், சில காலம் ஆண்டு, நம்மை விட்டுப் பிரிந்த நெல்சன் மண்டேலா........அவரது தியாகத்துக்குத் தலை பணிவோம்.  ஆத்மாவிற்காக பிரார்த்தனை செய்வோம்.  இது போன்ற நன்மை மரங்கள் தான் உலகெங்கும் தன்னலம் கருதாது, பிறர்க்கென வாழ்ந்து, மனித குலத்திற்குத் தொண்டாற்றி வருகின்றன. ஆனால், இப்போதெல்லாம், இது போன்ற நன்மை மரங்கள் இறுதி வரை வளர விடப்படாமல், லாப நோக்குள்ள சாதி, மத, அரசியல் வியாபாரிகளால் இடையிடையே வெட்டி சாய்க்கப்படுகின்றன. வேரோடு பிடுங்கி எறியப்படுகின்றன
.        

        அப்படிப்பட்ட ஒரு நன்மை மரம்தான் மஹாராஷ்ட்ராவின் “பெரியாரான” நரேந்திர அச்யுட் தபோல்கர். Narendra Achyut Dabholkar (1 November 1945 – 20 August 2013)“மஹாராஷ்ட்டிரா அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி (MANS, "Committee for Eradication of Superstition in Maharashtra" or "Maharashtra Committee for Eradication of Blind Faith") என்ற இயக்கத்தை உருவாக்கிய நாத்திகரான அவர், பெரியாரின் சமூக சீர்திருத்த வாதங்கள் பலதை, மக்கள் மனதில் பதிய வைக்க, மருத்துவரான அவர், தனக்கு மீதமிருந்த 12 வருட ஸர்வீசை உதறி விட்டு சமூக சேவைப் பணியை மேற்கொண்டார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மன நோயாளிகளை, விலங்குகளை விடக் கேவலமாக நடத்தும், ஸ்தாபனங்களுக்கு எதிராகவும், சாதி மாறி திருமணம் நடத்துதலை எதிர்க்கும், சாதிப் பஞ்சாயத்துக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு சமநீதி கிடைப்பதற்கும், பால்ய விவாகத்திற்கு எதிராகவும், போராடியவர்.  அதனாலேயே, ஏராளமான எதிரிகளைச் சம்பாதித்தவர்.  .  என் சொந்த நாட்டிலேயே என் சொந்த மக்களிடமிருந்தே நான் போலீஸ் பாதுகாப்பை ஏற்கவேண்டும் என்றால்ஏதோ என்னிடம் தவறு இருக்கிறது என்று அர்த்தம். நான்இந்திய அரசியல் நிர்ணயத்தின் வரையறைக்கு உட்பட்டுயாருக்கும் எதிராக அல்லாமல் எல்லாருக்காகவும் தான் போராடுகிறேன் என்று சொல்லி தனக்குத் தரப்பட்ட பாதுகாப்பை ஏற்றுக் கொள்ளாதவர். அந்த நன்மை மரம் கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூனாவில் சாய்க்கப்பட்டது. மஹாராஷ்டிரத்தில், மந்திரவாதம் போன்ற மூடநம்பிக்கைகளுக்கு எதிராக சட்டம் கொண்டு வர தீவிரமாக முயன்றவர். ஆனால், சட்டம் கொண்டுவரும் முன் கயவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.


       சில வருடங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதத்தில், இப்போது பின்பற்றப்படும் பலதும தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவை என்று குரல் கொடுத்த, சேகன்னூர் மௌலவி என்ற ஒரு நன்மை மரம் வேரோடு பிடுங்கப்பட்டு எங்கு மறைக்கப்பட்ட்து என்று கூடத் தெரியவில்லை.  அவரது உடல் கூட கிடைக்கவில்லை.

        கம்யூனிசம் பேசும் பலரும் அதை செயலில் காண்பிப்பதில்லை என பயமின்றிப் பேசிய C.P. சந்திரசேகரன் எனும் நன்மை மரம் கண்ணூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்டது கடந்த வருடத்தில். 




        நேர்மையான காவல் துறை அதிகாரியான ஹேமந்த் கார்கரே, என்ற நன்மை மரம், மும்பையில் 2008 ல் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலின் போது, கலவரத்தின் மறைவில் சூழச்சிகரமாக வெட்டி சாய்க்கப்பட்டது.





       இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடிய வேலுப்பிள்ளைப் பிரபாகரனை, கைது செய்து விசாரணை செய்வதற்குப் பதிலாக அந்த நன்மை மரத்தை வேரோடுப் பிடுங்கியது மட்டுமல்லாமல்லாமல், கள்ளங்கபடமற்ற அவரது மகன் உட்பட, குடும்பத்தினரையே கொன்று ஒடுக்கிய சம்பவம் நடந்தது இலங்கையில். அதற்கு மௌன அனுமதி கொடுத்ததோ இலங்கை அதிபரான ராஜபக்ஷே. 



      அது போல சில வருடங்களுக்கு முன்பு, ஒடிசாவில்,  ஆஸ்திரேலிய கிறித்தவ மிஷினரியைச் சேர்ந்த கிரஹாம் ஸ்டேன்ஸ்,  Evangelical Missionary Society of Mayurbhanj உடன் இணைந்து, மலைவாழ் ஏழை ஆதிவாசிகளின் கல்விக்காகவும், லெப்ரசி நோயாளிகளுக்காகவும் உழைத்தவர். அந்த நன்மை மரத்தையும், குழந்தைகள் அடங்கிய குடும்பதோடு தீக்கிரையாக்கினர் நம் நாட்டில்.

      இப்படி, நன்மை மரங்களெல்லாம் வேரோடு சாய்கப்பட்டால், நம்நாடும் இவ்வுலகும், சமூக நன்மையாம் தாவரங்கள் வாழத் தகுதியற்ற பாலைவனமாகித்தான் விடும். அப்படியாகாமல் இருக்க அந்த நன்மை மரங்களின் நன்மை விதைகள் விதைக்கப்பட்டிருக்கும் நல்ல மனங்களில் அந்த நன்மை மரங்கள் மீண்டும் செழித்தோங்கி வளர எல்லாம் வல்ல இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம். 
---------------------------------------------------------------------------------------------------------

பாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடிக் கண்மணி....என் கண்மணி!!..


திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் டூரிஸ்ட் ரிசார்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பெண் ஊழியரைக் கற்பழித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லக்கிநாத்  (20 வயசு) பெர்SOசோநாகம் (22வயசு) நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  ரிசார்ட்டில் க்ளீனிங்க் வேலைகளைச் செய்யும் கோட்டயதிலுள்ள பெஸ்ட் மனஜேமென்ட்(Pest Management) கம்பெனியின் ஊழியர்கள் தான் இந்த இருவரும்.  கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கிடையில் ஜாமீன் கிடைத்துப் போனால் மீண்டும் கண்ணில் படப்போவதே இல்லை.  கேரளாவில் ஏறத்தாழ 25 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  கட்டிட வேலை, ரோட் இடல், ஹோடல்கள், இப்படி எல்லா இடத்திலும், நகரங்கள் மட்டுமல்ல கிராமங்களிலும், அவர்கள் இன்றியமையாதவர்கள் ஆகி விட்டார்கள். இவர்களில் கணிசமான சத விகிதத்தினர் குற்ற வாசனை உள்ளவர்கள். லாப நோக்கம் உள்ள பல கம்பெனிகளிலும், குறைந்த கூலிக்கு சுலபமாக கிடைக்கும் இவர்கள் பணியாற்றுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒரு கம்பெனி, ரிசார்ட்டுக்குச் சப்ளை செய்த க்ளீனிங்க் ஊழியர்கள் தான் இருவரும்.

31 பேர் அடங்கிய கம்ப்யூட்டர் வல்லுனர்களின் ஒரு conference ல் பங்கெடுக்கத்தான் இந்த பெண்மணி வந்திருந்தார்.  28.11.2013 அன்று, அவர் தங்கி இருந்த அறைக்கு பகலில் ரூம் சுத்தம் செய்ய வந்த இவர்கள் பின் கதவின் ஸ்க்ரூவை லூசாக்கி வைத்துச் சென்ற பின், இரவு 2 1/2 மணிக்கு முகமூடி அணிந்து அறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். அதனிடையே, அவர்கள் மலையாளத்தில் பேசவும் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி பெங்களூர் சென்று அங்கு புகார் கொடுத்த போதுதான் விவரம் கேரளா போலீசுக்குத் தெரிய வந்தது. (அவருடைய தைரியத்தையும், சம்யோஜித புத்தியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.. However, she avoided adding insult to her injuries). இப்படிப்பட்ட குற்றவாளிகள் கேரளத்தில் மட்டுமல்ல, தென்னகமெங்கும் பரவலாகப் பல இடங்களில் பணி புரிகிறார்கள்.


2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம், ஓடிக் கொண்டிருந்த ரெயிலில், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 15 பேர் அடங்கிய வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்த ஒரு இளைஞரை ஓடும் ரெயிலிலிருந்து வெளியேத் தள்ளி இருக்கிறார்கள்.  கைகால்கள் ஒடிந்த அவர் இப்போதும் படுத்த படுக்கையில். (இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்கக் கூடத் தயாராகவில்லையாம்!!)

அது போல் போன மாதம் பெரிந்தல்மன்ன அருகே தன் பலசரக்குக் கடையை அடைத்து இரவு வீட்டிற்கு நடந்து சென்ற ஒருவரை, வட இந்திய கட்டிட வேலைத் தொழிலாளர்கள் கொன்று பணத்தை அபகரித்துச் சென்றனர். 2 மணி நேரத்திற்குள் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் என்றாலும் போன உயிர் போனது தானே. அது போல் திருச்சூர் அருகே உள்ள காரளம் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆசிரியையும், மகனையும் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி அவர்களுடைய நகைகளையும், பணத்தையும் அபக்ரித்த வட இந்திய தொழிலாளர்கள் 3 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த ஆசிரியையின் கணவர், அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த இந்த வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தங்க, அவர்கள் வீட்டின் அருகே வாடகைக்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியவர் என்பது குறிப்பிடத் தக்கது.  ஆசிரியையும், மகனும், இப்போதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார்கள்.  இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருதிறது. அரசும், காவல்துறையும், பொது மக்களும் இதை உணர்ந்து ஆவன உடனே செய்ய வேண்டும்.  இல்லையேல்,

“வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
 வைத்தூறு போலக் கெடும்


காவல் துறையினர் இது போன்ற குற்றங்கள் நடக்கும் போது, அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்கள் பணிபுரியும், தங்கும் இடங்களில் இடையிடையே சென்று அவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணதையேனும் உண்டாக்க வேண்டும். ஹெல்மெட் இடாதவர்களையும், சீட் பெல்ட் இடாதவர்களையும் விரட்டி, விரட்டிப் பிடிக்கும் நம் காவல் துறையினரின் கவனமும் நேரமும், இது போன்ற பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்த  உண்மையான உழைப்பாளர்களுகிடையே உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து விரட்டுவதிலும், செலவிடப்படவேண்டும். 


------------------------------------------------------------------------------------------------------------



சட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா

செய்தித் தாளில், “பணியிடங்களில் பாலியல் வன்முறை-நெருங்கி வரும் ஆபத்து என்ற ஒரு நல்ல அருமையான செய்திப் பதிவு. இதைப் பற்றிய விவகாரத்திற்கு பின்னர் வருகிறேன். அதற்கு முன், அதைப் படித்த போது எனக்குத் தோன்றியது இதுதான். சட்டத்தின் முன் நம் சமுதாயம் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் ஆண்களுக்கு இல்லையோ?  என்று தோன்றியது.  பெண்களுக்கு எதிரானதாக இதைச் சொல்லுவதோ எழுதுவதோ என் நோக்கம் அல்ல. ஆண்களின் மனதையும் கொஞ்சம் கருத்தில் கொள்ளுங்கள் என்று இந்த சமுதாயத்திடம் ஒரு வேண்டுகோள்.  அவ்வளவே! ஏன், எப்போதுமே ஆண்கள் தவறானக் கண்ணோட்டத்தில் பார்க்கப் படுகிறார்கள்?  ஏதோ, ஒரு சில இடங்களில் நடக்கும் ஒரு சில சம்பவங்களை வைத்து, “எல்லா ஆண்களுமே மோசமானவர்கள்,  ஆண்களே இப்படித்தான் போன்ற நோக்கு சமுதாயத்தில், ஏன் பெண்களிடையே ஏற்பட்டுள்ளது?  இதற்குக் காரணம் என்ன? பொதுவாக பெண்களுக்குக் கொடுக்கப்படும் அதீதமான முக்கியத்துவம்?  ஊடகங்களும் அதைத்தானே செய்கின்றன? பெண்களைப் பற்றிய செய்திகள் பரபரப்பாகப் பேசப்படும் அளவு, வாசிக்கபடும் அளவு, ஆண்களைப் பற்றிய நல்ல செய்திகள் பேசப்படுவதில்லை. அதே சமயம் ஆண்களைப் பற்றிய அவதூறு வெகு எளிதில் காட்டுத்தீ போல பரவுகிறதே?  பெண்களுக்காக வக்காலத்து வாங்க ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால், ஆண்களுக்காக வக்காலத்து வாங்க பெண்கள் இருக்கிறார்களா? யோசியுங்கள்.சட்டம் கூட பெண்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறது. எதனால்? பெண்கள் வலுவற்றவர்கள், நலிந்தவர்கள் என்ற காரணத்தினால்? அப்படியென்றால் அதுவே, பெண்களை வலுவற்றவர்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது அல்லவா? பெண்கள் உண்மையிலேயே வலுவற்றவர்களா? அவர்கள் சட்டம் என்கின்ற போர்வையில் ஒளிகிறார்களா? இது அவர்களது தன்னம்பிக்கையை உயர்த்துமா? இல்லை தாழ்த்துமா? இதே சட்டம், பெண் என்ற நோக்கில் “மனைவி என்ற உறவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.  அதே பெண் தான் கணவனின் அம்மா, சகோதரி.  ஆனால், சட்டம் இந்தப் பெண்களுக்கு எதிராக திரும்ப வாய்ப்புகள் அதிகம்.  மனைவியும் பெண்தான்.  கணவனின் அம்மா, சகோதரிகளும் பெண் தான். அதே மனைவி அவரது வீட்டில் நாத்தனார் என்ற உறவிலும், எதிர்காலத்தில் மாமியார் என்ற உறவுக்கும் உள்ளாவார்.  அப்போது இதே சட்டம் அவர்களுக்கு எதிராக மாறும் வாய்ப்புகள் அதிகம்.  எனவே சட்டம் இங்கு “பெண் என்பதை விட உறவுகளுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறதோ?! இதிலும் அவதிப்படுவது அதாவது தன் அம்மா, சகோதரிகள் ஒரு பக்கமும், மறு பக்கம் மனைவியுமாக, இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் சூழல் ஒரு ஆணுக்கு.  இரு தரப்பினருக்கும் நடுவில் சமநிலையோடு இருக்கத் தெரிந்த ஆண் பிழைத்தான்.  இல்லை என்றால், மத்தளத்திற்கு இரு பக்கமும் மொத்துதான்.

ஆண்களுக்கும் மனம் உண்டு. அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. எல்லா ஆண்களும் மோசமானவர்கள் அல்லர். அவர்களும் பெண்களை மதிப்பவர்கள் தான். அவர்களிலும் நல்லவர்கள் கணிசமான விகிதத்தில் உண்டு என்ற  பார்வை சமுதாயத்திற்கு வரவேண்டும்.  ஆண்களுக்கும், பெண்களுக்கு நிகராக பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கும் வலிகள் உண்டு.  சமுதாயத்திலும் சரி, குடும்பத்திலும் சரி.

ஒரு ஆணின் பிரச்சினை பெரும்பான்மையான குடும்பங்களில் சிறு வயது முதலே ஆரம்பமாகிறது.  அதுவும் பெண் குழந்தகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பங்களில் ஆண் குழந்தையின் வலிகள் அதிகமாக இருக்கும்.  “அவ பொம்பளைப் பிள்ளைடா. நீ ஆம்பிளை. அவளுக்கு நீ விட்டுக் கொடுத்துதான் ஆகணும் என்ற ரீதியில் ஆரம்பிக்கும். இது உளவியல் அடிப்படையில் ஒரு ஆணின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் ஒரு செயலாகி விடுகிறது.  அதுவும் பருவ வயதில் இது போன்ற வார்த்தைகள் ஆணை இன்னும் சீண்டிப் பார்க்கிறது.  இவை எல்லாம் தான் ஒரு ஆண் சமூகத்தில் பல குற்றங்கள் செய்ய அடிப்படைக் காரணமாகிவிடுகிறது. பெற்றோர் காரணமா?  சமூகம் காரணமா? சிறு குழந்தையாக இருந்தாலும், குழந்தைக்கு என்ற மரியாதை உண்டு. அந்தக் குழந்தைக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுக்கத்தான் வேண்டும்.  அது தவறும் போதுதான் குற்றங்கள் நடக்கும் சூழல் உருவாகிறது.

அடுத்து ஆண் பருவ வயது அடையும் போது இந்த சுயமரியாதை அதிகமாகும் ஒரு பருவம். இந்தப் பருவ வயதில்தான் ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களினால், வாழ்க்கையை அணுகும் முறையிலும், கருத்துக்களிலும், சிந்தனைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றது. அந்த வயதிலும் அந்த ஆணுக்குக் கிடைக்கும் மரியாதை மிகக் குறைவு. பருவ வயதில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பாதுகாப்பும், உடல் ரீதியான படிப்பினையும், அறிவும்  ஒரு ஆணுக்குக் கிடைக்கிறதா என்றால் இல்லை.  இல்லாவிட்டால் குறைவு என்பதுதான். கிடைக்கும் அறிவும் அறைகுறைதான். அதனால் தான் ஆண் அந்த வயதில் பெண்களிடம் ஈர்ப்பு வந்து  பாதை மாறும் சம்பவங்களும், தான் விரும்பும் பெண் தன்னை விரும்ப வில்லையென்றால் ஒன்று தற்கொலை செய்துகொள்ளுதல் இல்லை என்றால், தீய பழக்கங்கள், வக்கிர புத்தி இவை அவர்களை ஆக்கிரமிக்க வாய்ப்புண்டு. பாலியலைப் பற்றிய சரியான அறிவு இல்லாததால் விளைவு பாலியல் குற்றங்கள், நீலப்படங்கள் பார்த்தல் முதலியவை.  அந்த வயதில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும், அன்பும், அவர்களைப் புரிந்து கொள்ளுதலும், அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்களைப் பற்றிய புரிதலும் இருந்தால் சமுதாயத்தில் ஆண்களால் ஏற்படும் குற்றங்கள் கணிசமான அளவில் குறையும்.  பெரும்பாலான குடும்பங்களில் இந்தப் பருவ வயதில் ஆண்கள் கவனிக்கப்படுவதில்லை எனலாம்.  இந்த வயதுதான் ஒரு ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி மிக மிக முக்கியமான பருவம்.  ஒரு ஆண், ஆணாக, தனி மனிதனாக, மரியாதையுடன் இந்தப் பருவ வயதில் கையாளப்பட்டால் ஆண்களைப் பற்றிய சமுதாயப் பார்வையும் மாறும். ஒரு ஆணைப் பற்றிய பெண்ணின் புரிதலும், ஒரு பெண்ணைப் பற்றிய ஆணின் புரிதலும் இந்த வயதில்தான் ஆரம்பிக்கிறது. இந்தப் புரிதல் இரு பாலாருக்கும் சரியான விகிதத்தில், சரியான முறையில், அறிவியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கற்பிக்கப்படவேண்டும். வாழ்க்கையைப் பற்றிய, சுற்றி நடக்கும் சம்பவங்களைப் பற்றிய ஒரு பெண்ணின் பார்வைக்கும்paarvaikkum, ஒரு ஆணின் பார்வைக்கும் உள்ள வித்தியாசமும் புரியவைக்கப்பட்டால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். 
    
     மேலே சொல்லப்பட்ட ஆரம்பம், அந்தப் புரிதலில் ஏற்படும் வேறுபாடு, அடுத்ததாக மணவாழ்க்கையில், கணவன் மனைவி உறவில் ஏற்படத் தொடங்குகிறது. பொதுவாக, பெண் என்பவள் ஒரு பிரச்சினையை எளிதாகப் புரிந்து கொள்ளுபவள் ஆனால் உணர்வு பூர்வமாகப் பிரச்சினையை ஆணுகுபவள்.  ஆனால், பொதுவாக, ஆண் ஒரு பிரச்சினையைப் புரிந்து கொள்ள சிறிது தாமதிப்பவனாக இருக்கலாம் ஆனால் முடிவு உணர்வுபூர்வமாக இல்லாமல், யதார்த்த ரீதியில் இருக்கும். அதனால், பெண் தனது எண்ணங்களையும், வருத்தங்களையும் வெளிப்படுத்துவதை தன் கணவன் செவி மடுத்துக் கேட்க வேண்டும் என நினைப்பவள். ஆனால், அந்த ஆணுக்கு இது ஒரு புலம்பலாகப் படும்.  ஜுஜுபி எனத் தோன்றும்.  ஏனென்றால் பெரும்பான்மையான ஆண்கள் தங்களது மன அழுத்தத்தையோ, மன வலியையோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையாதலால் அதைப் பற்றி வெளியில் பேசுவதோ, மனைவியிடம் பகிர்ந்து கொள்வதோ கிடையாது.  ஆண் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசி பகிர்ந்து கொள்வது கிடையாது. அதை ஒரு பெண் தான் சொல்வதை அவன் கேட்க வேண்டும், அவனும் தன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது பிரச்சினை வெடிக்கிறது. பெண்ணிற்கும் ஆணிடம் பகிர முடியாத ரகசியங்கள் இருக்கலாம்.  அதை அவள் வெளிப்படுத்தாத போது, ஆண் எல்லாம் பகிரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமாகப் படவில்லை. அவனும் சில விஷயங்களை வெளியில் சொல்லாமல் பாதுகாக்க நினைப்பதில் என்ன தவறு? ஆனால், அவனும் வெளியில் ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி மாட்டிக் கொள்ளும் சந்தர்ப்பங்களும் உருவாகும்.

     பொதுவாகப் பெண், தனது கணவனின் பண விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருப்பவள் (அதாவது தூண்டித் துருவுபவள்) என்றால், ஆணுக்குச் சில பிரச்சினைகள் உருவாக வழி உண்டு. பண விஷயத்தில் ஆணின் செலவுகளை அறிய விரும்பினாலும் பிரச்சினைகள்தான்.  பெண்ணின் சுதந்திரத்தில் ஆண் தலையிட்டால் பெண் வெகுண்டு வெடிக்கும் பிரச்சினை, ஆணுக்கென்று சில சுதந்திரங்கள் இருக்கும், அதில் பெண் தலையிட்டால் அந்த ஆண் அடங்கிவிடுவான் இல்லை என்றால் மறைக்கத் தொடங்குவான்.  இரண்டுமே அவனது சுயமரியாதையை சீண்டும் விஷயம். குழந்தைகள் வளர்ப்பிலும் கூட ஒரு பெண்ணிற்கும், ஆணிற்கும் வித்தியாசம் இருக்கிறது. இங்கு சொல்லப்பட்ட எல்லாவற்றிலும் விதி விலக்குகள் உண்டு.


     விவாகரத்து என்பது வந்து விட்டால் சட்டம் பெண்ணின் பக்கமே.  ஆண் தான் அதுவரை சம்பாதித்ததைக் கூட இழக்க நேரிடலாம்.  சட்டம்  ஒருதலை பட்சமாக, ஆணிற்கு எதிராகவே இருக்கிறது எனலாம். athuvum Section 498a of IPC  ன் படி ஒரு ஆணையும் அவன் குடும்பத்தாரையும் பற்றி ஒரு மனைவி குற்றப்படுத்தினால் அவர்கள் உள்ளேதான்.  அது பொய்யாக இருந்தாலும். 2005 ல் 58,200 கேஸ்கள் ஃபைல் பண்ணப்பட்டதில், 80% பொய்யாக இருந்ததாம். அதாவது இந்த Section 498a of IPC தவறாகப் பயன்படுத்தப்படுகிறதாம். ஏனென்றால், இதில் ஆண்களுக்கு ஜாமீன் எடுக்கமுடியாதபடியும், உடன் நடவடிக்கை எடுக்கம்படியாகவும், சமரசத்திற்கு வாய்ப்பு இல்லாததாகவும் உள்ள குற்றமாகக் கருதப்படுவதால், இதை முன் ஜாமீன் எடுக்கம்படியாகவும் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டு, கோர்ட்டில் நீதிபதி, இது தவறாகப் பயன் படுத்தப்பட்டால் அது சட்ட வன்முறையைத் தூண்டுவதாக அமைந்து விடும் என்று எச்சரித்திருக்கிறார்.
    
     ஒரு ஆணின் மீது adultery வழக்கு போடப்பட்டால் அது கோர்ட்டில் செல்லுபடியாகும்.  ஆனால், அதே adultery வழக்கு  ஒரு பெண்ணின் மீது போடப்பட்டால் கோர்ட்டில் செல்லுபடியாகதாம்.  என்ன வேடிக்கை பாருங்கள்?!! பெண்ணியம் மட்டும் பேசும் பெண் சமூக ஆர்வலர்கள், பாலியல் குற்றத்திற்குப் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால், விபச்சாரத்திற்கு எதிராக ஏன் போராடுவதில்லை? (ஓரளவு பெண்கள் மீது உள்ள ஆக்கிரமிப்பு குறைவதற்கு காரணம் விபச்சாரம் என்ற கருத்தும் இருக்கிறது).  ஒரு பெண் தன் உடலை வெளிப்படுத்தி சினிமாவிலும், ஊடகங்களிலும், விளம்பரங்களிலும் நடித்தால், அதுவும் தேவை இல்லாமல் நடித்தாலும் இந்த பெண் சமூக ஆர்வலர்கள் ஏன் போராடுவதில்லை? அது பணம் ஈட்டும் தொழில் என்பதாலா?  அப்படியென்றால் இங்கு மட்டும் மானத்தை விட பணம் முக்கியப் பங்கு வகிக்கிறது இல்லையா? பெண்ணியம் பேசும் பெண் சமூக ஆர்வலர்கள் ஒரு ஆண் குடித்தால், புகைத்தால் அதைக் குற்றப்படுத்துகிறார்கள். ஆனால் அதே குடி, புகை எல்லாம் பெண்களும் தான் நகரங்களில் உள்ள pub களில் செய்கிறார்கள். அது எப்படி இவர்கள் கண்ணில் படாமல் போகிறது? ஏன் ஆணை மட்டும் சட்டம் வதைக்கிறது?


     ஆண் குழந்தையையும், பெண் குழந்தையையும், பேதம் பார்க்காமல், வாழ்க்கையை எப்படி நோக்க வேண்டும் என்றும், எப்படிக் கையாளவேண்டும் என்றும், உளவியல் ரீதியாக ஒரு பெண்ணின் தன்மை என்ன, ஒரு ஆணின் தன்மை என்ன, பெண், ஆணை எப்படிப் புரிந்து கொள்ளவேண்டும், ஒரு ஆண் பெண்ணை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்று பருவ வயதிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கலாம். ஒரு ஆணிற்கும், அந்த்தந்த வயதில் கொடுக்கப்படவேண்டிய மரியாதையைக் கொடுத்து, அவன் தன் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளத் தக்க வகையில் பெண்ணும், இந்த சமூகமும் செயல்பட வேண்டும். எனவே, ஒரு ஆணிற்கும் உணர்வுகள் உண்டு, அவனுக்கும் மனது உண்டு. உளவியல் ரீதியாகவும், பயாலாஜிக்கல் ரீதியாகவும் ஒரு ஆணின் தன்மையை மனதில் கொண்டு, அதை ஆணிற்கும், பெண்ணிற்கும் தக்க வயதில், வீட்டில் பெற்றோரும், பள்ளியிலும், கல்லூரியிலும் உளவியல் ஆலோசகராலும் பகிரப்பட்டு  உணர்த்தி, இந்த சமுதாயத்தில் உள்ள ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் புர்ந்து கொண்டு வாழ்ந்தால் ஒரு நல்ல சமுதாயம் உருவாகும்.

பின் குறிப்பு :

நான் இந்தப் பதிவை அடித்து முடித்து விட்டு என் நண்பர் துள்சிதரனுடன் கலந்து பேசி அவரது கருத்துக்கள், மாற்றங்கள் எல்லாம் எடிட் செய்து கொண்டிருந்த போது, என் மகனின் நண்பர்கள் வருகை. அவர்கள் கேட்க நான் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்ல, அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னபோது “Men are from Mars, Women are from Venus” – John Gray.   வாசித்தேன்.  நல்ல புத்தகம்.  ஏராளமான நல்ல கருத்துக்களைக் கொண்ட புத்தகம். இதை வாசிக்காதவர்கள் இதை வாசித்துப் பார்க்கலாம் என்பதற்காக இங்கு கொடுத்துள்ளேன்.

-------------------------------------------------------------------------------------------------------------------


WEDNESDAY, 27 NOVEMBER 2013


ஜெகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன்(மக்கள்) எந்திரம் சிவ சம்போ!!!!!



 “Breaking news  என்று ஒரு ஆங்கிலச் சானலில், ஆங்கிலத்தில் செய்தி வாசித்த ஒரு பெண், தமிழ் பெயரை தத்தக்கா பித்தக்கா என்று கடித்துக் குதறி, 2004 ஆம் ஆண்டு, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதியான காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியும், அவருக்கு அடுத்து மடாதிபதியாகவிருக்கும் விஜயேந்திர சரஸ்வதியும், சங்கர ராமன் கொலைவழக்கில் சிக்கி, அந்த வழக்கிலிருந்து, இன்று, அந்தக் காஞ்சி காமாட்சியின் கடைக்கண் பார்வை பட்டு, அவளது அருளால் விடுதலையானார் என்று காஞ்சி மடத்து மடாதிபதியின் சிஷ்யகோடிகளுக்குக் காதில் தேன் பாயும் செய்தியைச் சொல்லிக்கொண்டிருந்தார்!  அவர் குற்றவாளியா, இல்லையா என்பதை நான் இங்கு ஆராயவில்லை. அது என் தொழில் அல்ல. ஆனால், ஆன்மீகம் என்ற பெயரில், ஒரு மடாதிபதியாக இருக்கும் ஒருவர் இது போன்ற செய்திகளில் இடம் பெறாமல், தன் எல்லைக் கோட்டுக்குள் இருப்பது அவசியம். நெருப்பில்லாமல் புகையாது என்பர். அவர் தன் எல்லைக் கோட்டைக் கணக்கில் கொண்டு சிவனே என்று, அரசியலில் தலையிடாது, மூக்கை நுழைக்காது, தான் என்ன பொறுப்புள்ள இடத்தில் இருக்கிறோம் என்பதை மனதில் கொண்டு இருந்திருக்க வேண்டும். எப்பொழுது அவர் அந்தக் கோட்டைத் தாண்டினாரோ, அன்றிலிருந்து, அவர் செய்திகளில் வரத் தொடங்கிவிட்டார். அதுவும் பெண்கள் தொடர்பாகவும். அது உண்மையா, பொய்யா என்பதை விட, அது போன்ற ஒரு செய்தி வருவதற்கு இடம் அளித்தது,  ஒரு மடாதிபதிக்குத் தேவையில்லாத ஒன்று.  ஆன்மீகத்திற்கே இழுக்கு.


     ஆன்மீகம் என்ற போர்வையில் உலவும் சாமியார்களும் நம் நாடும் இரண்டறக் கலந்தவை. அதில் நம் நாடு வல்லரசு! பெண்ணரசு, பொன்னரசு, நிதியரசு, காமஅரசர்களைச் சுமக்கும் புண்ணிய பூமி??!!. கேரளாவில், சந்தோஷ் மாதவன் என்னும் ஒரு சாமியார், அமிர்தா சைதன்யா எனும் பெயரில் உலவினார். இவர் கொஞ்சம் இன்டெர்நாஷனல் ஃப்ராட் சாமியார். UAE தேடிய சாமியார்.  இவர் சாந்திதீரம் எனும் ட்ரஸ்டை தன் பெயரிலும், தன் பெற்றோர் பெயரிலும் நடத்தி வந்திருக்கிறார்.  இந்த நூதனச் சாமியார் வயதுக்கு வராதா பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம்(pedophilia or paedophiliaசெய்து அதை வீடியோவும் எடுத்துத் தான் கண்டு களிப்பதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களான தன் சீடர்களுக்குக்(?!) கொடுத்தும் இருக்கிறார்.  இப்போது, அவர் சிறையில் கம்பி எண்ணுகிறார்.

     இதைப் போலவே, தினமும்(?!!) ஆனந்தமாக இருக்கும் ஒரு சாமியார், பெண்கள் கேஸில் சிக்கி மாமியார் வீட்டில் இருந்தவர் இப்போது பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டார். நம்மூர் சாமியார்கள் எல்லாரும் பெண்கள் விஷயத்தில் படு கில்லாடிகளாக  இருப்பார்கள் போல. இதற்கு எதற்கு சாமியார் என்ற போர்வை? இவரை முழுவதுமாக கார்பொரேட் சாமியார் என்று, சகுனி படத்தில் வருவது போல சொல்ல முடியா விட்டாலும், அந்தக் கூட்டத்தில் ஒருவர்தான்.

தினமும் டி.வி. யில் வந்து மானாட மயிலாட போன்று, தனியாகவும், க்ரூப் நடனமும் புரிந்து, மாறுவேஷம் கூட பூண்டு பரவசமாக்கிய அந்தச் சாமியாரை இப்போது காணமுடிவதில்லை. அதே போன்று, விஷ்ணுவின் அவதாரங்கள் என்றுக் கருதப்படும் ஒரு அவாதாரப் பெயரில் தம்பதி சமேதராய், தாயார், பெருமாள் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் ஒரு சாமியார். பல வருடங்களுக்கு முன், இவரது குழுவில் சிஷ்யராய் சென்று ஒரு சில ஆயிரங்களையோ, லட்சங்களையோ இழந்தவரும் உண்டு. இவரைப் பற்றி பெண்கள் சம்பந்தப்பட்டு எதுவும் வரவில்லை.  ஒருவேளை தம்பதி சமேதராக இருப்பதால் இல்லையோ என்னமோ! 

இது போன்ற ஆன்மீகப் போர்வையில், நடமாடும் தெய்வங்களாக, முக்கியமாகப் பெண்களை ஈர்க்கும் சாமியார்களுக்குப் பஞ்சமில்லை.  மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருக்கும் மக்களை குறிப்பாகப் பெண்களை பேச்சாலும், மந்திரத்தாலும், கட்டுண்டுக் கிடக்கச் செய்யும் சாமியார்கள் கையாள்வதும் கூட ஒருவித மன உளவியலைச் சார்ந்ததுதான்.  அதாவது, ஒருவரது வீக்னஸைப் படித்து குறி வைத்து அடிப்பது, வசியப்படுத்துவது. பெரும்பான்மையாக பெண்கள்தான் இந்த வலையில் விழுகிறார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், I.T. துறையில் உள்ளவர்களும், பெரிய இடத்தைச் சேர்ந்தவர்களும்,  படித்தவர்களும், பணக்காரர்களும் இது போன்ற சாமியார்களின் காலடிகளில்!! ஆம்! விட்டமின் “M” இல்லை என்றால் இச் சாமியார்கள் எல்லாரும் உயிர் பிழைப்பது கஷ்டம்தான்! எத்தனை ஈ.வே. ராக்களும், விவேகானந்தர்களும் வந்தாலும், இப்படி ஆன்மீகம் என்ற பெயரில், இது போன்ற சாமியார்களின் காலடியில் போய் விழும் மக்களைத் திருத்த முடியுமா என்பது கேள்விக் குறியாகி விட்டது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை!

இது போன்ற சம்பவங்கள் மற்ற மதங்களிலும் நடக்கத்தான் செய்கிறது. இப்படிப்பட்ட மத குருமார்களும், மதப் பண்டிதாகளும் மற்ற மதங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். கேரளாவில் உள்ள கோட்டயத்தில், ஸிஸ்டர் அபயாவின் கொலையும், கேரளாவில் மத்திரஸாவுக்குச் செல்லும் சிறுமிகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதால் கைது செய்யப்படும், மத்திரஸா ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது போன்ற செய்திகளுக்கும், சம்பவங்களுக்கும் மத பேதம் கிடையாது.!

விவேகானந்தர் என்னும் ஒரு மஹான், எளிய வாழ்கையை மேற்கொண்ட ஒரு துறவி, வாழ்ந்த இந்த பூமியில் இப்படிப்பட்ட சாமியார்களும் வாழ்கிறார்கள் என்று நினைக்கும் போது வெட்கமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. விவேகானந்தர் அமெரிக்காவிற்குச் சொற்பொழிவு ஆற்றப் போயிருந்த போது, அவரின் பேச்சிலும், அறிவிலும் மயங்கிய ஒரு பெண் அவரிடம் சென்று,

 “எனக்கு உங்களை மணம் செய்ய விருப்பமாக உள்ளது என்றார்.  அதற்கு நம் சுவாமி, எதற்கு? எது உங்களை அப்படி நினைக்க வைத்தது?” என்று கெட்க, அவர், “உங்கள் அறிவு. எனவே எனக்கு உங்களைப் போன்ற  அறிவைக் கொண்ட ஒரு குழந்தை வேண்டும் என்று சொல்ல, அதற்கு சுவாமி,

“ உங்கள் ஆசை புரிகிறது.  கல்யாணம் செய்து, நீங்கள் விரும்புவது போன்ற ஒரு குழந்தை இந்த உலகிற்கு வந்து அது ‘அறிவுள்ளதா என்று பார்க்க வெகுநாட்கள் ஆகும்.  அதற்கு உத்தரவாதமும் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் ஆசை எளிதே நிறைவேற உத்தரவாதமுள்ள ஒன்றை பரிந்துரை செய்கிறேன்.  இதோ, என்னை உங்கள் மகனாகப் பாவியுங்கள்.  நீங்கள் என் அம்மா.  நீங்கள் விரும்பிய படியே அறிவுள்ள குழந்தை. உங்கள் எண்ணம் ஈடேறியது.  அந்தப் பெண்மணி வாயடைத்துப் போனார்.

ஒருமுறை, பரமஹம்சரிடம், ஒருவர்,  “ஏன் விவேகானந்தைப் பற்றி மட்டும் மற்றவர்களை விட அதிகமாகப் புகழ்ந்து பேசுகிறீர்கள்.  எந்த வகையில் அவர் எல்லா சீடர்களையும் விட உயர்ந்தவர்? என்றதும்,.

“அவன் (விவேகான்ந்தர்) ‘தீ.  பரிசுத்தமான அக்னி. யாரும் அவனை நெருங்க முடியாது.தகாத எண்ணங்களுடன் நெருங்குபவர்கள் பஸ்பமாக்கப்படுவர் என்றார்.

இத்தகைய, அதிசயிக்க வைக்கும் சிறப்புகளை உடைய விவேகானந்தர் போந்ற ஆன்மீகவாதிகள் வாழ்ந்த நாடு இது. இப்போதும், உலகறியாமல் நூற்றுக்கணக்கான ஆன்மீகத்துறவிகள் உலக நன்மைக்காக தியானத்திலும், பிரார்த்தனயிலும் இமயமலையில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அதே சமயம் நம்மிடையே பல எண்ணற்ற கபட சந்நியாசிகள் பசுத்தோல் போர்த்திய காமப்புலிகளாக, ஆன்மீகம் என்ற பெயரில் ஆட்டம் போடுகிறார்கள்.  அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து நாம் நம்மைக் காப்பாற்றினால் மட்டும் போதாது, பாமர மக்கள் அவர்களுக்கு பலியாடாகாமல் இருக்க, ஒரு விழிப்புணர்வை உருவாக்க நாம் ஆவன செய்ய வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------------------

வேண்டும் விழிப்புணர்வு

நேற்று இந்தப் பதிவை upload  செய்யிம் போது சரியாக ஏறவில்லை. வாசகர்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்காக வருந்துகிறோம்.   இப்போது அதை சரி செய்தாகி விட்டது.  இனி இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்.

வேண்டும் விழிப்புணர்வு

ஹலோ, கீதா என்ன சூடான நியூஸ் இன்னிக்கு?

என்ன துளசி?  குரல் என்னவோ மாதிரி இருக்கு?  க்ளாஸ்ல கத்தினியா!!!? உன்ன டெய்லிgargle பண்ணுனு சொல்லிட்டே இருக்கேன்ல...கேட்டாத்தானே?  ஒழுங்கா இன்னிக்கு பண்ணு.  என்ன? ம்ம்ம்ம்

O.K. O.K. எல்லாம் செய்யறேன்...நியூஸ் என்னனு சொல்லு..


கொஞ்சம் பழைய நியூஸ் தான். ஞாயித்துக் கிழமை நடந்தது. அறுவை சிகிச்சையை மாத்தி செஞ்சதுனால ஒரு நோயாளி இறந்துட்டாருனு சொல்லி அவரு சொந்தக்காரங்க எல்லாம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைல ஆர்பாட்டம் பண்ணிருக்காங்க.

என்னது?  சர்ஜரிய மாத்தி பண்ணிட்டாங்களா.....ஹேய் என்ன சொல்ற நீ?

ஆமாம். அதான் நியூஸ். இறந்தவர், சென்னைல எழும்பூர், டாக்டர் சந்தோஷ் நகரைச் சேர்ந்தவராம். பேரு ஏழுமலை.  47 வயசு. அவரு திடீர்னு மயங்கி விழுந்துருக்காரு. காப்பீட்டுத்திட்டத்தின் மூலமா ரூ.50,000 மதிப்புள்ள ஒரு ஊசி போட்டுருக்காங்க.  அதுக்கு அப்புறம் CT scan எடுத்துருக்காங்க. மூளைல ரத்தம் உறைஞ்சுருக்குனு தெரிஞ்சுருக்கு.  அதுக்கு அப்புறம் எடுத்த    CT scan ல மூளைப் பகுதி வீங்கி இருந்ததைக்  கண்டு பிடிச்சுருக்காங்க.  உடனே சர்ஜரி. திரும்பவும் scan. அப்போ கொஞ்சம் உடல் நிலைல முன்னேறம் இருக்கறதா சொல்லிருக்காங்க. ஆனா ஞாயிறு மதியம் அந்த ஆளு இறந்துட்டாராம். அவருக்கு எடுத்த அந்த ஸ்கானப் பார்த்த அவரு சொந்தக்காரங்களுக்கு அதுல 3 வதா எடுத்திருந்த ஸ்கான்ல ‘ஏழுமலை வயசு 17” னு இருந்துச்சாம்.  ஸோ, 17 வயசுப் பையனுக்குச் செய்ய வேண்டிய சர்ஜரிய இவருக்குச் செஞ்சுட்டாங்கனும் அதனாலதான் அவரு இறந்துட்டாருன்னும் போராடியிருக்காங்க.  அந்த உடலை நேத்து பிரேத பரிசோசனை செஞ்சுருப்பாங்க.  அதை வீடியோவுல பதிவும் செய்யப் போறதா சொன்னாங்களாம்.  சொந்தக்காரங்க தரப்புல என்ன சொல்றாங்கனா, அந்த ந்ரம்பியல் கட்டிடத்துல ஏற்கனவே 47 வயசுல ஏழுமலைனு ஒருத்தரும், 17 வயசுல ஏழுமலைனு ஒரு பையனும், 3 வதா இந்த இறந்தவரும் இருந்தாங்களாம். அதான் இந்தக் குழப்பம்னு சொல்றாங்க.  ஆதாரம் ஸ்கான் அப்படினு சொல்றாங்க. டாக்டர் தரப்புல என்ன சொல்றாங்கனா, இவரைத் தவிர வேற யாரும் ஏழுமலைன்ற பேருல சேரல, இவர் மட்டும்தான் அப்படினும்...ஸ்கானில வயச டைப் செய்யும் போது தவறுதாலா 47க்குப் பதிலா 17னு டைப் செய்யப்பட்டு இருக்கலாம், மத்தபடி ஸ்கான் மாற வாய்ப்பில்லைனும், சர்ஜரியும் மாத்தி செய்யலனும் சொல்றாங்க.  

எது உண்மைனு தெரியாட்டாலும், இதுலருந்து என்ன தெரியுதுனா நாம கொஞ்சம் விழிப்புணர்வோட இருக்கணும்னு.  நாம எப்ப இந்த மாதிரி டெஸ்ட் எடுத்துக்கிட்டாலும் ரிப்போர்ட் வாங்கும் போது அது நம்முடைய ரிபோர்ட்தானா என்றும், எல்லா details உம் சரியாக உள்ளதானும் செக் செய்யறது நல்லது.

இதுல முக்கியமான ஒரு விஷயம், ஒரு ஆஸ்பத்திரில டாக்டர்ஸ் மட்டுமில்லாம அங்க வேலை செய்யற எல்லாருமே மெயினா லாப் டெனிஷியன்ஸ் ரொம்ப பொறுப்பா இருந்தாதான் இந்த மாதிரியான தப்பெல்லாம் நடக்காம இருக்கும்.  டாக்டர்ஸ் அந்த அளவுக்கு மோசமா இருப்பாங்களா என்ன? எனக்கென்னமோ அப்படித் தெரில.....ம்ம்ம்ம்

சரி, இது படிப்பறிவு, விவரம் உள்ளவங்களுக்கு ஓகே.  படிக்கத் தெரியாதவங்க, விவரம் இல்லாதவங்க என்ன செய்வாங்க?

ம்ம்ம்ம்..ஆமாம் நீ சொல்றதும் கரெக்டுதான்...நம்ம நாட்டுக்கு இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்....ஸோ டாக்டர் கையிலதான் இருக்குனு சொல்லு......சரி அப்பஅன்பேசிவம்ல நாஸர் சொல்றா மாதிரி...தென்நாடு சிவனே போற்றி எல்லாம் அவன் செயல்!!!!???  சரி வேற என்ன நியூஸ்?

அதை ஏன் கேக்கற நாம, தமிழ்நாட்டின் (நெடுஞ்)சாலைகள் படுகொலைச் சாலைகளா? என்ற இடுகையை நம்ம வலைப்பூவுல இட்டு 24 மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள்ள ஞாயிறு செய்தித்தாள்ல வெளியான அந்தச் செய்தியைப் பார்த்ததும் அரண்டுட்டேன்!  “சினிமா பாணியில் சேசிங்க்: நடுரோட்டில் கவிழ்ந்த ஆட்டோ: அதிர்ஷ்டவசமக உயிர்தப்பிய பொதுமக்கள். அப்படின்னு!

ஹேய்! நானும் அதப் படிச்சேன். அதப் பத்திதான் இப்ப உங்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன் அதுக்குள்ள நீயே சொல்லிட்ட அப்ப நாம அதுக்கு முந்தின நாள் இந்தத் தலைப்பை பத்தி discuss பண்ணி எழுத ரெடி பண்ணிகிட்டு இருந்த நேரம்னு சொல்லு.....

ஆமாம். ஞாயிற்றுக் கிழமைச் சென்னையில மதியம் 2 மணி அளவில வேப்பேரி ஈ.வி.கே சம்பத் ரோடுபூந்தமல்லி ஹை ரோடு சிக்னல்லஒரு லோடு ஆட்டோவை ஒரு டாட்டா இன்னோவா கார்சினிமா பாணியிலசினிமாவையே மிஞ்சும் அளவுக்கு துரத்தியிருக்கு. அதுக்கு முன்ன புரசைவாக்கத்திலஇந்த லோடு ஆட்டோ அந்த இன்னோவாவை உரசினதுல ஏற்பட்ட தகராறுதான் சண்டையா மாறிசேசிங்கில முடிஞ்சிருக்கு பாத்துக்க!. சேசிங்கில அந்த ஆட்டோ பூந்தமல்லி நெடுஞ்சாலையில திரும்பும் சமயம் தலைகீழாக் கவிழ்ந்துருக்கு. அந்த இன்னோவா காராரு ஆட்டோவை விரட்டுற வேகத்துலஇத்தன பேரு ரோட்டுல வண்டி ஓட்டறாங்களேனு எல்லாம் யோசிக்காம மறந்துட்டு துரத்திருக்காரு பாரு.My God!  நல்ல காலம் பொது மக்கள் யாரும் விபத்துல சிக்கல. உயிர் பொழச்சாங்க. ஆட்டோ ஓட்டுநர், தான் குடிச்சுருந்ததா ஒப்புக் கொண்டிருந்திருக்காரு. ரெண்டு தரப்பும் போலீசார் முன்னாடியே சண்டைபோட்டுருக்காங்க. இதில அந்த இன்னோவா காருக்குப் பக்கத்துல வந்த மற்றோரு காரோட்டி என்னை மோதிக் கொன்றிருப்பாயேநல்ல வேளை உயிர்பிழைத்தேன் அப்படின்னு திட்டிவிட்டு போயிருக்காரு. ஆட்டோ டிரைவர் கை எடுத்துக் கும்பிட்டு அழுதிருக்காரு என் குடும்பமே பாதிக்கப்படும்குழந்தைங்க எல்லாமே பாதிக்கப்படும் அப்படினு. அத குடிச்சுட்டு வண்டி ஓட்டறதுக்கு முன்னமேயே யோசிக்க வேண்டாமா?  போலீசு அந்த ஆட்டோ டிரைவரைக் கொண்டு போயிட்டங்களாம்.  ஆனா ரெண்டு தரப்பினர் மேலயும் வழக்கு போடலயாம். இது எப்படி இருக்கு?

அப்ப நம்ம நம்பள்கி திருந்துவாங்களா ன்னு சொன்னது சரிதான்னு சொல்லு

ஆமாம். இது போல தினமுமே  வாகன ஓட்டிகளிடையே நடக்கத்தான் செய்யுதாம்.  ஞாயிறு அன்னிக்கு எல்லை மீறிடுச்சாம்.  இது எப்படி இருக்கு?! இது மாதிரி சம்பவங்களில யாரேனும் ஒருத்தர் பொறுமையைக் கடைப்பிடிச்சிருந்தா பிரச்சினை முற்றியிருந்திருக்காது. வாகன ஓட்டிகளுக்கு நிதானமும்பொறுமையும் தேவை என்பதுதான் இதிலிருக்கும் பாடம். கற்றுத் திருந்துவார்களா நம் மக்கள்மக்கள் சற்று விழிப்புணர்வோடு இருந்தாதான் அவங்கவங்க உயிரக் காப்பாத்திக்க முடியும்.  



நீ இத சொல்லும் போது இன்னிக்கு, இங்க நம்ம ஏரியாவுல ஒரு பொண்ணு வண்டி ஓட்டிட்டு போயிட்டுருக்கும் போது ஒரு லாரி ஓவர் டேக் செஞ்சுருக்கு.   அந்தப் பொண்ணு “ட்துப்பட்டாவ இழுத்துக் கட்டியோ, பின் பண்ணியோ வைச்சுக்காம இருந்துருக்கா.  ஸோ,லாரியொட பின் பக்க ஹூக்ல அந்தப் பொண்ணோட “ட்துப்பட்டா”  மாட்டி இழுத்து, பொண்ணு விழுந்து on the spot out.

ஐயோ! ஏன் அந்தப் பொண்ணு அப்படி பண்ணிச்சு.? வண்டி ஓட்டும் போதும் சரி, வண்டி பின்னாடி உக்காந்து போகும் போதும் சரி, ட்துப்பட்டாவானாலும், சேலைத் தலப்பானாலும் நல்லா இழுத்து கட்டிக்கிட்டுதான் போகணும்.  இல்லனா டேஞ்சர்தான்....

ஏதோ! நம்ம மக்கள் விழிப்புணர்வோடு இருந்து நல்லது நடந்தா சரி! ம்ம்ம்ம்......சரி...BSNLலைன கட் பண்ணறதுக்குள்ள நாம முடிச்சுக்குவோம்.  ஏதாவது நல்ல டாப்பிக் அடுத்த பதிவுக்கு ரெடி பண்ணு.  ஆனா வேற டாப்பிக்கா இருக்கட்டும்.  அப்புறம் அதப் பத்திப் பேசி எடிட் பண்ணலாம். இப்ப, பை! பை!!

-----------------------------------------------------------------------------

மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமையைக் கொளுத்துவோம்







அன்றே குரல் கொடுத்துவிட்டார் பாரதி. இன்று 25/11, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம். நவம்பர் மாதம் 25ஆம் தேதி ஒவ்வொரு வருடமும் உலக அளவில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை ஒழிப்பு தினமாக, UN ஆல் அனுசரிக்கப்படுகிறது.
1960 ஆம் வருடம் இதே நாளில், டொமினிகா ரிபப்ளிக்கில், அரசியல் ஆர்வலர்களான Hermanas Mirabal-Mirabal சகோதரிகள் 3 பேர், Rafael Trujillo வின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததனால்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். எனவே, 1999 ஆம் வருடத்திலிருந்து அந்தச் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. (விவரம் Wikipedia). 
இந்நாளில், நாம், சமீபத்தில் தாலிபன் தீவிர வாதிகளால் மிருகத்தனமாக்க் கொல்லப்பட்ட மேற்கு வங்க எழுத்தாசிரியை, சுஷ்மிதா பானர்ஜியை  மறக்கக் கூடாது. தான் உயிருக்கு உயிராய் நேசித்த ஜான்பாஸ்கானை மணம் முடித்து அவருடன் இன்பமான இல்லற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த போது, தலிபான் தீவிரவாதிகள் அவரை மதம் மாற வற்புறுத்திய போது அஞ்சாது அதற்கு எதிராகப் போராடி உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலையில் 18 வருடங்களுக்கு முன்பு, மேற்கு வங்கத்திற்குத் திரும்பியவர். பெண் சுதந்திரத்திற்கு எதிரான சமூக அநீதிகளைத் தான் எழுதிய “A Kabuli Man’s Bengali Wife” என்ற புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியவர்.  சமீப காலத்தில் மீண்டும் தன் கணவருடன் சேர்ந்து வாழ ஆப்கானிஸ்தான் சென்ற சில நாடளுக்குள்ளாகவே தீவிரவாதிகளின் வெடி குண்டுகளுக்குப் பலியானவர். அந்த வீராங்கனை, இந்த நாளில் பெண் சுதந்திரத்திற்காகப் போராடும் பெண்களுக்கு ஒரு நல்ல முன்னோடி.  WHO வின் 2013 ன் ஆய்வின் படி உலகெங்கிலும் உள்ள 35%, பெண்கள் உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.  ஆனால்,நமது நாட்டின் ஆய்வின் படி, 70% பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் வன்முறைக்கு உள்ளாகிறார்கள். 

பெண்கள் இன்று உலகளவில் எத்தனையோ துறைகளில் சாதனைகள் படைத்து வரத்தான் செய்கிறார்கள். ஓவையார், ஹெலன்கெல்லர், காலத்திலிருந்து, இதோ சமீபத்தில் விண்ணில் பறந்த, (மறைந்த) கல்பன சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க வெளியுறவு இணையமைச்சராக பதவி ஏற்றிருக்கும்
நிஷா தேசாய், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் பெண் எம்.பி, பிரித்தி பட்டேலுக்கு ஆசிய வர்த்தக ஆசிரியரின் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது வரை பெண்களின் நிலைப்பாடும், சாதனைகளும் எண்ணில் அடங்காதவை. மலாலா யோசப்சையி என்பவர் பாகிஸ்த்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி. இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். மறைமுகமாக பெண்களுக்கு எதிரான செயல்பாடுகளை எழுதிவந்தவர், அண்மையில் தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். மலாலா அவர்களை அக்டோபர் 9,2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது. 
இவர் படு காயம் அடைந்தைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மத, இன, வயது பாகுபாடின்றி கல்வி உரிமையை நிலைநாட்டவும் மனித உரிமைகளை பாதுகாக்கவும் அருந்தொண்டாற்றியமைக்காக பல விருதுகள் பெற்ற மலாலாவிற்கு பாக்கிஸ்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. 



இவர்களைப் போல், வறுமையிலும், அன்றாடங்காய்ச்சிகளாக, வயலில் கூலி வேலை செய்தும், வெயிலிலும், மழையிலும், தன் தோளிலும், தலையிலும், முதுகிலும், மனதிலும் சுமைகளைச் சுமந்து கூலி வேலை செய்து, குடிகாரக் கணவனின் வருமானத்தை எதிர்பாராது, தன் வருமானத்தை மட்டுமே நம்பி தன் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளின் சாதனையும மேலே சொலப்பட்ட பெண்களின் சாதனைகளுக்கு இணையாகத்தான் கருதப்பட வேண்டும்.  எப்படி பெண்களின் சாதனைகளைக் கூற ஒரு பதிவு பத்தாதோ,  அதே போன்று பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகளைச் சொல்ல ஒரு பதிவு போதாது.  ஒரு பக்கம் பெண்கள் சாதனைகள் படைத்தாலும், மறு பக்கம் அவர்கள் பல வன்முறைகளைச் சந்திக்கத்தான் செய்கிறார்கள் ஏன் கருவிலேயே அழிக்கப்படும், பெண் சிசுக் கொலைகள் இன்னும் நடக்கத்தான் செய்கின்றன. இந்த வன்முறைகளில் கொலைகளும் பாலியல் வன்முறைகளும் மட்டுமல்ல, கணவனால் நிகழும் வன்முறையும் அடங்கும். பெண்களுக்கு எதிரான ஆண்களின் வன்முறைகள் மட்டுமல்ல, பெண்களே, பெண்களுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபட்டால் என்னவென்று சொல்லுவது? (மாமியார்களே! நீங்களும் ஒரு காலத்தில் மருமகள்களாக வாழ்ந்தவர்கள்தான்.  நீங்களும் பெண்கள்தான்! மருமகள்களே! உங்களது பெற்றோரைப் போலவே உங்கள் கணவன்மார்களின் பெற்றோர்களுக்கும், அன்பும் பாசமும் கொடுக்க நீங்கள் கடமைப்பட்டவர்கள்தான்!)

நம் நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவிற்கான சுற்றுலாவுக்கான குறிப்பில், “இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடு என்று பதிவாகி உள்ளது. இந்தப் பதிவு இந்தியவைப் பற்றிய மதிப்பை சர்வதேச அளவில் வெகுவாகப் பாதித்துள்ளது. 

பெண்குழ்ந்தைகள் முதல் வயதான மூதாட்டி வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பெண்கள் வன்முறைகளுக்கு உள்ளாவது வருத்தத்திற்கும், வேதனைக்கும் உரியது.  சமீபத்தில் டெல்லியில் நடந்த பாலியல் வன்முறை ஒன்று போதும்.  என்ன சொல்ல?  இந்த ஒரு நாள் மட்டும் அனுசரிக்கப்பட்டால் போதாது, எல்லா நாளுமே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாகத்தான் விடிய வேண்டும். அனுசரிக்கப்படவேண்டும். 

--------------------------------------------------------------
திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் டூரிஸ்ட் ரிசார்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த தகவல் தொழில் நுட்ப பெண் ஊழியரைக் கற்பழித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த லக்கிநாத்  (20 வயசு) பெர்SOசோநாகம் (22வயசு) நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  ரிசார்ட்டில் க்ளீனிங்க் வேலைகளைச் செய்யும் கோட்டயதிலுள்ள பெஸ்ட் மனஜேமென்ட்(Pest Management) கம்பெனியின் ஊழியர்கள் தான் இந்த இருவரும்.  கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கிடையில் ஜாமீன் கிடைத்துப் போனால் மீண்டும் கண்ணில் படப்போவதே இல்லை.  கேரளாவில் ஏறத்தாழ 25 லட்சம் வட இந்திய தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  கட்டிட வேலை, ரோட் இடல், ஹோடல்கள், இப்படி எல்லா இடத்திலும், நகரங்கள் மட்டுமல்ல கிராமங்களிலும், அவர்கள் இன்றியமையாதவர்கள் ஆகி விட்டார்கள். இவர்களில் கணிசமான சத விகிதத்தினர் குற்ற வாசனை உள்ளவர்கள். லாப நோக்கம் உள்ள பல கம்பெனிகளிலும், குறைந்த கூலிக்கு சுலபமாக கிடைக்கும் இவர்கள் பணியாற்றுகிறார்கள்.  அப்படிப்பட்ட ஒரு கம்பெனி, ரிசார்ட்டுக்குச் சப்ளை செய்த க்ளீனிங்க் ஊழியர்கள் தான் இருவரும்.

31 பேர் அடங்கிய கம்ப்யூட்டர் வல்லுனர்களின் ஒரு conference ல் பங்கெடுக்கத்தான் இந்த பெண்மணி வந்திருந்தார்.  28.11.2013 அன்று, அவர் தங்கி இருந்த அறைக்கு பகலில் ரூம் சுத்தம் செய்ய வந்த இவர்கள் பின் கதவின் ஸ்க்ரூவை லூசாக்கி வைத்துச் சென்ற பின், இரவு 2 1/2 மணிக்கு முகமூடி அணிந்து அறைக்குள் புகுந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர். அதனிடையே, அவர்கள் மலையாளத்தில் பேசவும் செய்திருக்கிறார்கள். அந்தப் பெண்மணி பெங்களூர் சென்று அங்கு புகார் கொடுத்த போதுதான் விவரம் கேரளா போலீசுக்குத் தெரிய வந்தது. (அவருடைய தைரியத்தையும், சம்யோஜித புத்தியையும் நாம் பாராட்டத்தான் வேண்டும்.. However, she avoided adding insult to her injuries). இப்படிப்பட்ட குற்றவாளிகள் கேரளத்தில் மட்டுமல்ல, தென்னகமெங்கும் பரவலாகப் பல இடங்களில் பணி புரிகிறார்கள்.


2 மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம், ஓடிக் கொண்டிருந்த ரெயிலில், ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட 15 பேர் அடங்கிய வட மாநிலத் தொழிலாளர்களைக் கண்டித்த ஒரு இளைஞரை ஓடும் ரெயிலிலிருந்து வெளியேத் தள்ளி இருக்கிறார்கள்.  கைகால்கள் ஒடிந்த அவர் இப்போதும் படுத்த படுக்கையில். (இதில் மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசாரிடம் புகார் கொடுக்கக் கூடத் தயாராகவில்லையாம்!!)

அது போல் போன மாதம் பெரிந்தல்மன்ன அருகே தன் பலசரக்குக் கடையை அடைத்து இரவு வீட்டிற்கு நடந்து சென்ற ஒருவரை, வட இந்திய கட்டிட வேலைத் தொழிலாளர்கள் கொன்று பணத்தை அபகரித்துச் சென்றனர். 2 மணி நேரத்திற்குள் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார்கள் என்றாலும் போன உயிர் போனது தானே. அது போல் திருச்சூர் அருகே உள்ள காரளம் வொக்கேஷனல் ஹையர் செகண்டரி ஸ்கூல் ஆசிரியையும், மகனையும் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி அவர்களுடைய நகைகளையும், பணத்தையும் அபக்ரித்த வட இந்திய தொழிலாளர்கள் 3 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த ஆசிரியையின் கணவர், அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த இந்த வட இந்தியத் தொழிலாளர்களுக்குத் தங்க, அவர்கள் வீட்டின் அருகே வாடகைக்கு ஒரு வீடும் ஏற்பாடு செய்து கொடுத்து உதவியவர் என்பது குறிப்பிடத் தக்கது.  ஆசிரியையும், மகனும், இப்போதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார்கள்.  இத்தகைய சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருதிறது. அரசும், காவல்துறையும், பொது மக்களும் இதை உணர்ந்து ஆவன உடனே செய்ய வேண்டும்.  இல்லையேல்,

“வரும்முன்னர் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
 வைத்தூறு போலக் கெடும்


காவல் துறையினர் இது போன்ற குற்றங்கள் நடக்கும் போது, அதில் ஈடுபடுபவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவர்கள் பணிபுரியும், தங்கும் இடங்களில் இடையிடையே சென்று அவர்களும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற எண்ணதையேனும் உண்டாக்க வேண்டும். ஹெல்மெட் இடாதவர்களையும், சீட் பெல்ட் இடாதவர்களையும் விரட்டி, விரட்டிப் பிடிக்கும் நம் காவல் துறையினரின் கவனமும் நேரமும், இது போன்ற பிற மாநிலங்களிலிருந்து பிழைப்புத் தேடி வந்த  உண்மையான உழைப்பாளர்களுகிடையே உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் கண்டு, அவர்களை இங்கிருந்து விரட்டுவதிலும், செலவிடப்படவேண்டும். உயிரா மானமா





 சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம்.  பகல் 1 மணி.  பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது.  கத்தியுடன் 4 பேர் உள்ளே.  வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக.  கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள்.  ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும்.  அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும்.  அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும்  நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய். விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான். 

வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல்,  இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும்.  இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான்.  நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.

---------------------------------------------------------------------------------------------------

அதிசயம் ஆனால் உண்மை



ஆல்பெர்ட் ஷ்வெய்ஷரைப் (Albert Schweitzer) பற்றிக் கேள்விபட்டிருபீர்கள். தன் 21 அம் வயதில் தனக்கு மிகவும், மகிழ்சிகரமான வாழ்வு தந்த இறைவனுக்கு நன்றி சொல்ல, உதவியற்று உழலும் மனிதர்களுக்கு உதவுவதே சிறந்த வழி என்பதை உணர்ந்தவர்.  பின்பு ஒரு போதும் வருந்தக் கூடாது என்று ஒன்பது வருடங்கள் தன் மகிழ்சிகரமான வழ்க்கையைத் தொடர்ந்த பின், தன் 30 வது வயதில் ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவர்களின் அவசியத்தை உணர்ந்து 7 ஆண்டு காலம் மருத்துவம் பயின்று, 
தன் மனைவியை செவிலியும் ஆக்கி ஆப்பிரிக்கா சென்று மருத்துவச் சேவை புரிந்த மஹான்.  அது போல் ஒரு மஹான் காசரகோடு (கேரளா ) அருகே உள்ள பதிஅடுக்கா எனும் இடத்தில்.  பெயர்  சாய்ராம் பட் என்று அழைக்கப்படும் 
K.N. கோபாலகிருஷ்ண பட்.


 ஒரு சாரண விவசாயி.  சாதித்ததோ வியக்க வைக்கும் சாதனை. கடந்த மாதம், மற்றவர்களின் உதவி ஏதும் இன்றி, தான் கட்டிய 208 வது வீட்டின் சாவியை வீடில்லாத ஒரு ஏழைக்குக் கொடுத்தார். அன்றைய தினம், காசரகோடு மாவட்டத்திற்கு மட்டுமல்ல, கேரள மாநிலத்துக்கு மட்டுமல்ல, தென்னகத்துக்கே ஒரு பொன்னாள்.  அரசியல்வாதிகளும், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் என்று எல்லாத் துறையிலும் உள்ளவர்கள் அவரைப் பாராட்டிப் பேசவும், எழுதவும் செய்தார்கள்  தனி ஒரு மனிதனுக்கு தன் வாழ்நாளில் 208 வீடுகள் வீடில்லாத ஏழைகளுக்குக் கட்டிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த ஒரு மஹான். இவருடைய இந்தச் சேவை ஏராளமான மனிதர்களுக்கு ஊக்கம் தரும் ஒன்றாக மாறியிருக்கிறது.  பெரும்பான்மையான பள்ளிகளில் பயிலும் குழந்தைகள், தங்களுடன் பயிலும் வீடில்லாத ஏழைக் குழந்தைகளுக்கு வீடு கட்டி கொடுக்கும் சம்பவங்கள் ஏராளமாக நடந்து வருகிறது.  சமூக்சேவையில் ஈடுபட்டிருக்கும் ஸ்தாபனங்களும் இது போன்ற சேவையில் ஈடுபடத் தொடங்கி இருக்கின்றன.  அப்படி இந்த தனிமனிதனின் சாதனை எல்லோருக்கும் ஒரு முனுதாரணாமாக மாறியிருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

யிரா? மானமா?


சிந்திக்க வைத்த ஒரு பூதம்!.நம்பள்கி திறந்துவிட்ட பூதம்.  நம்பள்கி சில நாட்களுக்கு முன்பு தன் வலைப்பூவில், ஒரு பாட்டிலில் இருந்து ஒரு பூதத்தைத் திறந்து விட்டது நினைவு இருக்குமே எல்லோருக்கும்? துப்பாக்கி முனையில் நீங்கள். நீங்கள் ஆணாக இருக்கலாம் பெண்ணாக இருக்கலாம்.  படு இல்லையேல் சாவு.  Yes or No.  இந்தக் கேள்விக்கு பதில் சொல்பவர்கள், பலவிதமான சிந்தனைகளை மனதினில் ஓடவிட்டாலும் கேள்வி ஒன்றுதான். வாழ்வா? சாவா?  சாகத் தயாராகும் ஒருவர் என்னதான் நியாயங்கள் சொன்னாலும் அவர் தன் உடலை முழுவதுமாக உதறிவிட்டுத்தான் சாகிறார். ஆனால், அதற்காக அவர் சொல்லும் காரணமோ? என் உடலை என் சம்மதத்துடன் தரமாட்டேன் என்பது. கற்பழிக்கப்படும் பெண்களில் பலரும் உயிருக்குப் பயந்த நிலையிலோ, போராடி வலு இழந்த நிலையிலோ, அடியும் உதையும் பட்டு மயங்கிய நிலையிலோதான் ஆணுக்குக் கீழ் படுக்கிறார்கள்.  இங்கு தவறு செய்பவன் ஆண்.  அவனுக்கு இல்லாதக் குற்ற உணர்வு, அவனுக்கு வர வேண்டியக் குற்ற உணர்வு அவசியம் இல்லாமல் பெண்ணுக்கு வர வேண்டுமா?  தன் சம்மதமின்றி, வலுக்கட்டாயமாக தன் வாழ்வில் ஒரு காமப் பிசாசு அதன் உமிழ் நீரைத் துப்பி விட்டது. உடனே அதை வெளியேத் துப்பி, வாயைப் பலமுறைக் கழுவியாகி விட்டது.  என்றாலும் மனம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.  உடலும்தான். ஏதோ குடலைப் புரட்டி வாந்தி வருவது போல். “வேண்டாம்!  அவனுடைய எச்சிலில் ஒரு துளியின் ஒரு சின்ன அளவாவது என் உடலுக்குள் சென்று விட்டது.  இனி இந்த உடல் வேண்டாம்.  இந்த சமூகம் என்னை ஏற்கவும் செய்யாது.  இந்த வாழ்க்கை வேண்டாம். என் அப்பா வேண்டாம். ஏன் அம்மா வேண்டாம். கணவர் வேண்டாம். குழந்தைகள் வேண்டாம்.  இதோ நான் உயிரை விடுகிறேன். இது தான் நடக்கிறது. இதுதான் நடக்க வேண்டும் என பெரும்பான்மையான ஆணகளும் பெண்களும் எதிர்பார்க்கிறார்கள்.
நான் என் இளம் வயதில், உடலுறவை அனுபவ ரீதியில் அறியாது இருந்த கல்லூரி நாட்களில் ஒரு கதை எழுதினேன்.  எங்கள் வலைப்பூவில் இட, தூசி தட்டி எடுத்த சில பழைய கதைகளில் அதுவும் இருந்தது.  வாசித்த நான் அதைக் கிழித்தே போட்டு விட்டேன். கதை சுருக்கம் இதுதான். ஹனிமூன் போகும் கணவனும், மனைவியும். வழியில் கார் பஞ்சராகிறது.  இருள் படரும் நேரம். டயர் மாற்றிக் கொண்டு இருந்த போது வந்த ஒரு ஜீப்பிலிருந்த சிலர் மனைவியைக் கற்பழிக்க முயல, காப்பாற்ற பல வழிகளில் முயன்றும் முடியாத கணவன் வேறு வழி இன்றி, “சுதா மன்னிச்சிரு, என்று மனைவியின் தலையில் ஒரு பெரிய கல்லைப் போட்டுக் கொன்று விடுகிறான். (இச் சிறு துரும்பும் இப்படி பல் குத்த உதவும் என்று நினைக்கவே இல்லை!)  இந்த ஐம்பது வயது வரை நான் கண்டதும், கேட்டதும், வாசித்தவைகளும், புரிந்து கொண்டவைகளும், என்னை, அந்தக் கணவன் சுதாவைக் கொலை செய்ய இப்போது அனுமதிக்க வில்லை. 






சில வருடங்களுக்கு முன்.  காசரகோடு அருகே பேக்கல் கோட்டை( Bekal Fort).   இளம் கணவனும் மனைவியும்.  மாலை நேரம். இருவரும் இருட்டு வரும் வரை கோட்டைக்குள்ளே பல இடங்களையும் சுற்றிப் பார்த்துத் திரும்பும் நேரம். 


திடீரென்று நான்கைந்து இளைஞகள் முன்னால்.  எவ்வளவோ கூச்சல் போட்டும் யாரும் உதவிக்கு வரவில்லை.  இருவர், கணவனை அடித்து உதைத்து அவன் கை கால்களைக் கட்டி போட்ட பின் ‘இருவரையும் கொன்று கடலில் எறிந்து விடுவோம் என்று அச்சுறுத்தி அந்தப் பெண்ணைக் கற்பழித்து விட்டார்கள்.  நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலை பாவம் அந்தப் பெண்ணிற்கு.  எனவே இருவரும் தங்களை அன்று இரவு தங்க ஏதேனும் ஒரு நல்ல ஹோட்டலிலாவது கொண்டு சென்று விடவேண்டும் என முறையிட ‘கல்லுக்குள் கொஞ்சம் ஈரம் இருந்திருக்க வேண்டும். கயவர்கள், பாதிக்கப் பட்டவர்கள் காரிலேயே டவுணில் உள்ள லாட்ஜுக்குக் கொண்டு சென்றனர்.  தந்திரமாகக் கயவர்களை அறைக்குக் கூட்டிக் கொண்டு போய் (இரவு மீண்டும் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கூட அந்தக் கயவர்களுக்கு இருந்திருக்கலாம்) அவர்களை அறையில் ஆக்கிய பின், வெளிக் கதவைப் பூட்டி அந்தப் பெண் கூச்சல் போட்டு ஆட்களைக் கூட்டினார். போலீஸ் வந்தது.  கையோடு கயவர்கள் பிடிபட்டார்கள்.  நாளிதழ்கள் பாதிக்கப்பட்ட்வர்களின் பெயரை வெளியிடாம்ல் அவர்கள் கண்ணியத்தை வெளிப்படுத்தினார்கள்.  பாதிக்கப்பட்ட அந்த கணவனும் மனைவியும் இன்றும் அந்தப் பயங்கரமான நாளை மறக்க முயற்சி செய்து வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.


அதுபோல் சில வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த மற்றொரு சம்பவம்.  பகல் 1 மணி.  பரபரப்பான தெருவில் உள்ள ஒரு துணிக் கடை. திடீரென ஷட்டர் இறக்கப் படுகிறது.  கத்தியுடன் 4 பேர் உள்ளே.  வெளியே ஒருவன். யாரையும் உள்ளே விடாமல் இருக்க ஏதாவது காரணம் சொல்வதற்காக.  கடையில் இருந்த பத்து பதினைந்து பேரில், ஒரு இளம் பெண்ணின் கையைப் பிடித்து கடைக்குள்ளேயே மறைவான ஒரு இடத்திற்கு இழுத்துக் கொண்டு போனார்கள். கூச்சல் போட்டவர்களை கத்தியால் மிரட்டியும் அடித்தும் மௌனமாக்கினார்கள்.  ஆனால், ஒரு 45 வயதுள்ள தாய், அழுவதை நிறுத்தாமல் அந்தக் கயவனிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டாள். (வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் பேரிடி.) கெஞ்சினாலும் பலனில்லை என்று தெரிந்ததும் “என்னை உபயோகித்துக் கொள் என் குழந்தையை விட்டு விடு என மன்றாட, அந்தக் 'கல்லுக்குள்ளும் கொஞ்சம் ஈரம்' இருந்த்திருக்க வேண்டும்.  அவனது காமப் பேய்க்கு அந்தத் தாய் தீனி போட்டாலும் போதும்னு நினைத்திருப்பான் போலும்.  அந்த சம்பவத்தைப் பற்றி வாசித்த போதும், இப்போதும்  நான் இறைவனிடம் வேண்டுகிறேன், “இறைவா அவர்களுக்கு விபரீத சிந்தனைகள் ஏதும் வராமல், நடந்ததெலாம் ஒரு பெரும் விபத்து என்று எண்ணி வாழச் செய். விவரிக்கப்பட்ட இரு சம்பவங்களிலும், பெண்கள் எடுத்த முடிவு அந்தச் சந்தர்பத்தில் எடுக்கப் படவேண்டிய முடிவுதான். 

வாகன விபத்தில் காயமடையும் போது ஒருவரை எப்படியேனும் காப்பாற்றி அவர் மனதுக்கும் உடலுக்கும் தெம்பேற்றி அவரை மீண்டும் அவரது வாழ்க்கையைத் தொடரச் செய்வது போல்,  இது போன்ற சம்பவங்களையும் ஒரு விபத்தாக நினைத்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இந்தத் தவறு செய்யும் கயவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுக்க முடியும்.  இது போன்றத் தவறுகளைச் செய்யும் கயவர்களுக்கு, துணிச்சல் தருவது, அவர்களுக்கு இறையாகும் பெண்கள், ஒன்று, தற்கொலை செய்து கொள்வார்கள் இல்லையேல் வெளியே சொல்லாமல் நான்கு சுவர்களுக்கு இடையே வாழ்வை வாழ்ந்து தீர்ப்பார்கள் என்ற எண்ணம் தான்.  நம்பள்கியும் தன்னுடைய பதிவின் மூலம் சொல்ல வருவது ஒருவேளை இந்தக் கருத்தாக இருக்கலாம். உயிரா, மானமா என்றக் கட்டம் வரும் போது உயிர்தான் பெரிது என்ற யாதாத்தமான முடிவை எடுக்கத் தயங்கக் கூடாது.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே

சில விஷயங்களைக் கேட்கும்போது, நம் மனதில் யாரோ தீக்கங்குகளை வாரி இறைத்தது போல் இருக்கும்.  அந்தத் தீப்புண் ஆற நிறைய நாட்கள் வேண்டிவரும்.  அது போன்ற ஒரு சம்பவம் நேற்று கேட்க நேர்ந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணிக்கு திருச்சூர் வானொலி நிலையத்திலிருந்து ஒலி பரப்பப்படும், ஜோய் ஆலூக்காஸ் ஸ்பான்ஸ்ர் செய்யும் ஒரு நிகழ்ச்சி. நேயர்கள் அனுப்பும் கடிதங்களை, பாலேட்டனும், ஆஷா சேச்சியும், வாசித்து வானொலி நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சி. இறுதியில் அவர்கள் விரும்பும் ஒரு திரைப்படப் பாடலும் ஒலிபரப்பப்படும்.  வித்தியாசமான, சுவாரசியமான பல சம்பவங்களையும் நேயர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நிகழ்ச்சியானதால் நான் இதைப் பெரும்பாலும் கேட்பதுண்டு.  நேற்று ஒரு கடிதம் வாசிக்கப்பட்டது.

கோழிக்கோடு அருகேயுள்ள ஒருவர் அனுப்பியது. அவர் ஒரு சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி எழுதியிருந்தார்.  கடந்த சில மாதங்களாக, பாவம், மனதில் போட்டுக் குமுறிக் கொண்டு இருந்திருந்தார் போலும்.  அவர் தன் மனதில் இருந்ததை இறக்கி வைத்துவிட்டார்.  இதோ, நானும் இங்கு இறக்கி பதிந்து விட்டேன். இதை வாசிக்கும் உங்கள் மனதில் ஏற்றி விட்டேன்.



சில மாதங்களுக்கு முன், கோழிக்கோடு அருகே, கன்னியாஸ்த்ரீகள் நடத்தி வரும் விடுதிக்கு, வழக்கமாக உதவித்தொகை வழங்கும் வழக்கம் உள்ள ஒரு நண்பருடன், அவர் தற்செயலாகச் சென்றிருக்கிறார். அங்கு தங்கியிருப்போர் பெரும்பாலும் வயதான அம்மாக்கள். அப்போது, கையில் ஒரு துணிப் பையுடன் யாரையோ ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு வயதான தாய்  இவருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறார்.  இவர் அவரைப் பற்றி விசாரித்தபோது அங்கிருந்த கன்னியா ஸ்த்ரீகளிடமிருந்து  அறிந்து கொண்டது,



“அந்தப் பெண் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். கணவன் மற்றும் 4 குழந்தைகளுடன் நல்ல மேம்பட்ட, குறையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை. குழந்தைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, எந்தக் கஷ்டமும் இல்லாத நல்ல குடும்ப வாழ்க்கை.  திடீரென்று எதிர்பாராத விதமாக கணவனின் மறைவு. அதனால் இந்தப் பெண்ணின் மனநிலை பாதிப்பு.  மன நோயாளியான அம்மாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற மனது ஏனோ அந்த 4 பிள்ளைகளுக்கும் இல்ல்லாமல் போனது இந்த அம்மாவின் துரதிர்ஷ்டம். மன நிலை சரியில்லாததால்   அம்மாவினால் ஒரு சில பிரச்சினைகள் வந்திருக்கலாம், அக்கம்பக்கதிலிருந்து புகார்கள் வந்திருக்கலாம். பிள்ளைகளின் மனைவிகள் இதை எல்லாம் மன்னிக்க முடியாதக் குற்றமாக நினைத்திருக்கலாம், சொல்லியிருக்கலாம். இந்த 4 பிள்ளைகளும் அம்மவை அழைத்துக் கொண்டு ரயிலில் ஏறியிருக்கிறார்கள். அம்மாவுக்கு சாப்பாடு வாங்கி அதை சாப்பிடக் கொடுத்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் அம்மா மயங்கி விட்டார். உடனே 4 பேரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.வீரியமுள்ள மயக்க மருந்தாக இருந்திருக்க வேண்டும்.  அவருக்கு நினைவு வந்த போது, அவர் கோழிக்கோடு ரயில்வே ஸ்ட்ஷனில். பதட்டத்துடன் இறங்கி அவருக்குத் தெரிந்த பாஷையில் ஏதேதோ சொல்லி அலைந்திருக்கிறார். பகல் நேரத்தில் அவரைப் பார்த்த பரிதாபக் கண்கள் சிலதில் எங்கோ காமப் பேய் ஒளிந்திருந்திருக்க வேண்டும்.


கைகளிலும், கால்களிலும் வெண்குஷ்ட்த்தால் பாதிக்கப்பட்ட அந்த 55 வயது அம்மாவை, இரவில், சில காமவெறியர்கள், மறைவில் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சமயம், நல்ல மனதும், சமயோசிதமும் உள்ள ஒருவர் தலையிட,  ரயில்வே போலீஸ் வந்து அந்த அம்மாவை மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்று காப்பாற்றி உள்ளார்கள்.  அதன் பின் இங்கு கொண்டுவந்து சேர்த்தனர். (பாருங்க, எந்த அளவுக்கு இருக்கு நம்ம சமூகம்! ஒரு மிருகத்த விட கேவலமான மனோநிலை. 5, மாசமோ, 5 வயசோ, 50 வயசொ 75 வயசானாலும் இந்தக் காமவெறியர்களுக்கு கொத்திக் கிழிப்பதில் என்னதான் கிடைக்கிறதோ?)  பாவம், மன நிலை சரியில்லாததால் அந்த அம்மாவிற்கு இப்போதும் தெரியாது தன் பிள்ளைகள் தன்னை கொல்லாமல் கொன்றிருக்கிறார்கள் என்று. இப்போதும், அவர்கள் வருவார்கள், திரும்பக் கொண்டு போவார்கள் என்று அந்தத் தாய் மனம் காத்துக் கொண்டே இருக்கிறது.


எனக்கு இதைக் கேட்டவுடன், இதோ, இப்போது இதை எழுதும் போது, என் வாயில் “தூய தமிழில் கெட்டவார்த்தைகள் வருகிறது.  ஆனால், தில்லைஅகமும், தமிழ்மணமும் நாறிவிடக் கூடாது என்று மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு எழுதுகிறேன்.  அந்த 4 நாய்களும் என்னதான் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் நல்ல வாழ்க்கை வாழ்வதாகச் சொல்லப்பட்டாலும், தெரு நாய்களை விடக் கேடுகெட்ட வாழ்க்கைதான் அது.

“டேய், அயோக்கிய ராஸ்கல்களா, நீங்கள் மனுஷங்களாடா? எப்படிடா உங்களுக்கு மனசு வந்திச்சு, இந்த மாதிரி செய்ய? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்காடா? உங்களால் நிம்மதியா தூங்க முடியுதாடா? சாப்பாடு தொண்டைக்குள்ள இறங்குதாடா? உங்களுக்கும்தானேடா குழந்தைங்க இருக்காங்க?  அவங்க, உங்க வயசான காலத்துல உங்களுக்கு வைக்கப் போறாங்கடா ஆப்பு.  தன் வினை தன்னைச் சுடும். ஞாபகம் வைச்சுக்கோங்க  .....டேய் பாவிங்களா உங்கள்ல கொஞ்சமாவது மனசாட்சி உள்ள ஒருத்தனாவது வந்து உங்க அம்மாவைக் கூட்டிட்டு போங்கடா.  மனநிலை சரியில்லாத, அழக்கூடத் தெரியாமல் தவித்து, உங்களின் வருகைக்காகக் காத்திருக்கும் அந்தத் தாயின் ஏக்கம், உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பொசுக்கிவிடும். மன நிலைக்கு நல்ல சிகிச்சை கொடுத்து உங்க கூட வைச்சுக் காப்பாத்த முடியலனாலும், உங்கள் பக்கத்துல உள்ள முதியோர் இல்லத்துலயோ, மனநிலை காப்பகத்துலயோ வைச்சாவது காப்பாத்துங்கடா? தாயிற் சிறந்தக் கோயிலும் இல்லை!!....அது தெரியுமா உங்களுக்கு? .........



நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மகன்களை நினைக்கையிலே!!!!
------------------------------------------------------------------------


சாதிகள் இல்லையடி பாப்பா

சாதி அடிப்படையிலான மயானங்களைப் பொதுவாக்க மாநகராட்சி நடவடிக்கை.

செத்தப்பிறகும் சாதியா?  ஏங்க இருக்கும்போதுதான் சாதி பார்த்து, பார்த்துச் சீரழிந்துகொண்டு இருக்கிறோம். ஜப்பான்காரனும், அமெரிக்காகாரனும் என்னெல்லாமோ ஆராய்ச்சி பண்ணிக், கண்டுபிடித்து எங்கேயோப் போய்கொண்டு இருக்கும்போது  நாம் மட்டும் என்னடானா, இருக்கின்ற  சாதிகள் பத்தாது என்று இன்னும் புதுசா ஏதாவது சாதி சேர்த்துக்கலாமானு ஆராய்ச்சி பண்ணிக்கொண்டு இருக்கிறோம். சாதிகள் பேரில் புதிய, புதிய கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. சாதி, மதச் சண்டைகளுக்கு குறைச்சலே இல்லை.  இதுல வேற நாம் கட்டுரை எழுதும்போது, இந்தியாவில் பல சாதிகளும், மதங்களுமிருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையாக சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகின்றோம்னு சும்மானாலும் ஜம்பம் அடித்துக் கொள்ள வேண்டியது. காதுல பூ சுத்தும் வேலை.


இன்றைய சூழலில் (ஓரளவிற்கு) நகரங்களைத் தவிர, இன்னும் கூட இந்தியக் கிராமங்களிலும், டவுண்களிலும், வேற வேற ஜாதிப் பெண்ணும், பையனும் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றால் அந்தப் பையனுக்கும், பெண்ணிற்கும் சரி, அவர்கள் குடும்பத்தாருக்கும் சரி, உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதில் ஒருவர் முற்பட்டவராகவோ, மற்றொருவர் பிற்பட்டவராகவோ, இல்லை, ஒருவர் பிற்பட்டவர், மற்றொருவர் தாழ்த்தப்பட்டவர் (எல்லாம் நம் சமூகம் வைத்தப் பெயர்கள்தான்) என்றாலோ, பிரச்சினை அம்மா, அப்பாவின் உயிர் பலியோடு முடிவதில்லை. இரண்டு கிராமங்கள், இரண்டு சமுதாயங்களின், உறாவினர்களின் சண்டையில் முடிந்து பல உயிர்களின் பலியில்தான் முடிகிறது. இதைத்தான் நாம் சமீபத்தில் இளவரசன், திவ்யாவிற்கு நடந்த சம்பவத்தின் மூலம்  அறிந்தோமே.  எத்தனையோ இளவரசன் திவ்யாக்கள் பலியாகித்தான் இருக்கிறார்கள்.  உயிருடன் இருக்கும்போது சாதி பார்த்து, அதனால் உயிரழந்து, பொதுவாக்கப்படப்போகிற மயானத்தில்(!?) எரிக்கப்படுதல், இல்லைப் புதைக்கப்படுதல்.!!!  என்ன ஒரு முரண்பாடு!!? விந்தையான சமூகம்!!!


உயிரோடு இருக்கும் போது நடக்கின்ற சாதி வெறியை, சாதிச் சண்டைகளையும், சாதியையும் ஒழிக்காதவர்கள், ஏதோ செத்தப்பிறகாவது, எரிப்பதற்கான சாதி அடிப்படையில் இருக்கும் மயானங்களைப் பொதுவாக்க நடவடிக்கை எடுக்கிறார்களே என்று மனதை சமாதானப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும் போல.  எரித்தபின்னோ, புதைத்து அழுகிய பின்னோ கிடைக்கும் எலும்புத்துண்டுகள் எந்த சாதியைச் சேர்ந்தவை?  யாராலும் சொல்ல முடியுமா?


பிறக்கும் போதே சாதி ஒட்டிக்கொள்கிறது.  அதற்குப் பிறகு அது விடாக்கண்டனாக பள்ளியில், கல்லூரியில், வேலையில் சேரும்போதும் சாதி கர்ணகவசம் மாதிரி ஒட்டிக் கொண்டுதான் வருகிறது.  இங்கெல்லாம் அரசு இந்த சாதி வேற்றுமையை ஒழித்து, பொதுவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கலாமே? முளையிலேயேக் கிள்ளி எறிந்தார்போல ஆகுமே.



கமலஹாசன் தன் குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்த போது “சாதி என்று இருந்த இடத்தில், பள்ளி நிர்வாகம் சாதியைத்தான் குற்ப்பிட வேண்டும் என்று சொன்னபோதும் கூட ‘மனித சாதி என்றுதான், தான் எழுதுவேன் என்று குறிப்பிட்டதாக எங்கோ படித்த நினைவு. இது போன்ற ஒரு சிந்தனை உள்ளவர்கள் தமிழகத்தில் பெருகி வரவேண்டும். சாதியைக் குறிப்பிடாதவர்களுக்கு இடஒதுக்கீடு, கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும்  இடஒதுக்கீடு என்று அரசே செய்ய முன்வந்தால் கண்டிப்பாக இனிவரும் காலத்தில் சாதி ஒழிந்து போக வாய்புண்டு. ஒன்று, அரசு சாதியைக் கிள்ளி எறியவேண்டும்.  இல்லையென்றால் மக்கள் புரட்சி எழ வேண்டும்.  அப்பொழுதுதான் இதற்கு ஒரு முடிவு வரும்.  ஆனால், அரசாட்சி செய்யும் அரசியல் வாதிகளும், மக்களுமே இந்தச் சாதியை வைத்து சித்து விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கும்போது, அரசியல் சட்டம் வேடிக்கப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறதே தவிர நாடு உருப்படுவதற்கானப் பாதையைக் காட்டுவதாகத் தெரியவில்லை.  ஜோக்காளி, நடிகர் சூர்யா பேசியதைப் பதிவு செய்து பதிவில் கேட்டது போல் “இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது”?   ஒளிமய(யான)மான எதிர்காலம்??!!

-----------------------------------------------------------------------


“லல்லு ப்ரசாத் யாதவ் ஜெயிலில்.  அவருக்கு என்ன வேலை தரலாம் என்று அதிகாரிகள் யோசித்து, லாலுசட்டம் படித்தவர் என்பதால் மற்ற கைதிகளுக்கு பாடம் சொல்லித் தரும் பணியை அவருக்குத் தரலாம் என தொடக்கத்தில் நினைத்தனராம். ஆனால்கைதிகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பால்லாலுவுக்கு பாதுகாப்பு பிரச்சனை வரலாம். மேலும்லாலு அவர்களுக்கு அரசியல் பாடம் எடுக்கிறார் எனப் புகார்கள் வரவும் வாய்ப்புண்டு. எனவேசெடிகளுக்கு நீர் ஊற்றும் பணியை அவருக்குத் தந்ததாகச் செய்தி.

சட்டம் படித்தவரே இப்போது ஜெயிலில்.!!  அப்படி இருக்க அவர் எப்படி கைதிகளுக்குப் பாடம் கற்பிக்க முடியும்?!  ஒருவேளை சட்டம் படித்திருப்பதால் அதில் உள்ள ஓட்டைகளைப் புரிந்து கொண்டு தப்பித்துவிடலாம் என்பதால் ஊழல்கள்?  ஆனால் அதே சட்டம்தானே அவரை இன்று ஜெயிலில் போட்டிருக்கிறது என்று நீங்க கேக்கலாம்....அடேயப்பா என்ன ஒரு புத்திசாலித்தனமான கேள்வி!....Good Question… அப்படி எல்லாம் நடந்திருச்சுனா நம்ம நாடு எங்கேயோ போயிருக்கும்ல... அவர் இன்று உள்ளே இருப்பது சட்டம் தன் கடமையை செய்ததால் அல்ல......அரசியல் காரணங்களினால், விரோதங்களினால் தான்.......அரசியலப்பா...அரசியல்! அது சரி, இவரு பாடம் கற்பித்தால் அந்தச் சட்டத்தினால் எப்படித் தப்பிக்கலாம்னு சொல்லிக் கொடுப்பாரோ?!!!


அது போகட்டும், லல்லு மட்டுமா என்ன? எத்தனையோ அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்கி ஜெயிலுக்குப் போனதுண்டு. சமீபத்தில் 2ஊழல், குவாரி  ஊழல் இப்படி பல. நாம் அறியாததா என்ன? போனமா, வந்தமா என்று வெளியில் வந்தவர்களும் உண்டு. பெயர் அடிபட்டாலும் ஜெயிலுக்குப் போகாதவர்களும் உண்டு. பெரிய ஊழல், கொலைகள் செய்யும் நபர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாட, வறுமையில், அன்றாடம் காய்சிகளாக, பசியின் கொடுமையால், ஏதோ ஒரு கணத்தில் திருடுபவர்கள் ஜெயிலில். அதைவிடக் கொடுமை எந்தத் தவறுமே செய்யாத பலர் ஜெயிலில் இருக்க நிஜக் குற்றவாளிகள் வெளியில் உல்லாசமாக.  நலிந்தவர்களுக்கு ஒரு சட்டம்; வலியோருக்கு ஒரு சட்டம். இப்படிக் குற்றமே செய்யாதவர்கள் ஜெயிலுக்குப் போய் பல வருடங்கள் ஜெயில் வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, வருடங்களுக்குப் பிறகு நிரபராதிகள் என்று தீர்ப்பு எழுதப்பட்டு வெளியில் வருவது எவ்வளவு கொடூரமானது? எத்தனை வருடங்கள் அவர்களது வாழ்வில் இழப்பு! குடும்பத்திலிருந்து பிரிந்து, மன வேதனை. நிரபராதி என்று சட்டம் தீர்ப்பு சொல்லும் முன்போ, சொல்லும் சமயமோ அந்த நிரபராதி ஜெயிலிலேயே இறப்பதும் உண்டு.

இந்த இடத்தில், லியோ டால்ஸ்டாயின் ஒரு அருமையான கதை நினைவுக்கு வருதிறது. “GOD SEES THE TRUTH, BUT WAITS”.  கதையின் நாயகன் அக்ஸியோனோவ், அவன் செய்யாத ஒரு கொலைக் குற்றத்திற்காக, அவன் பையில் ரத்தக் கறை படிந்த ஒரு கத்தி இருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அவன் தான் குற்றவாளி என்று சட்டம் அவனை ஜெயிலில் தள்ளுகின்றது.  26 வருடங்கள் ஜெயில் வாழ்க்கை. ஜெயிலிலும் நல்லவனாகவே இருக்கிறான். ஜெயில் அதிகாரிகளுக்கும் அவனைப் பிடித்து விடுகின்றது.  என்ன பிரயோஜனம்?  சில வருடங்களில் ஜெயிலுக்கு புது குற்றவாளிகள் வரும்போது அதில் ஒருவனாக வரும் மாகர்செமியோனிச்சும் இவனுடைய ஊராக இருப்பதால் அவனுடன் பேசும் போது அவன் தான் உண்மையானக் கொலைக் குற்றவாளி என்பதைத் தெரிந்து கொள்கிறான். கோபம் வருகிறது. ஆனால், பிரார்த்தனை செய்து மனதை அடக்குகிறான். இனி வெளியில் போயும் பயன் இல்லை என்பதால். மாகர் ஜெயிலில் இருந்து தப்பித்துச் செல்ல மண்ணைத் தோண்டி வழி உண்டாக்குகின்றான்.  ஜெயில் அதிகாரிகளுக்கு இது தெரியவர, அந்த மண்ணைத் தோண்டியது யார் என்று அறிய, நேர்மையான அக்ஸியோனோவிடம் அது பற்றி விசாரிக்கின்றனர். ஆனால், அவனுக்கு அது மாகர் தான் என்று தெரிந்திருந்தாலும் காட்டிக் கொடுக்கவில்லை. இதை அறிந்த மாகருக்குக் குற்ற உணர்வு வந்து அவன் அக்ஸியோனோவிடம் மன்னிப்புக் கோரி, தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒப்புக் கொள்ளப் போவதாகவும், அதனால் அக்ஸியோனோவ் விடுதலையாகலாம் என்றும் கூறுகிறான்.  ஆனால், அக்ஸியோனோவ் மறுத்துவிடுகிறான்.  மனைவி இறந்தாயிற்று, குழந்தைகளுக்கு அவனை நினைவு இல்லை என்று இருக்கும் போது இவன் வெளியில் போய் என்ன செய்வது என்பதால் மறுத்து “கடவுள் உன்னை மன்னிப்பாராக என்றுக் கூறிவிடுகிறான். ஆனால், மாகர் தன் குற்றத்தை அதிகாரிகளிடம் ஒத்துக் கொண்டு, அதிகாரிகள் அக்ஸியோனோவை விடுதலை செய்யும் ஆர்டருடன் அக்ஸியோனோவைக் காண வரும்போது இறந்து கிடக்கும் அக்ஸியோனவைத்தான் அவர்களால் காணமுடிகிறது. இதற்குப் பெயர்தான் “அரசன் அன்று கொல்லும்; தெய்வம் நின்று கொல்லும்?

மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை ஒருவனுக்குக் குற்ற உணர்வை வரவழைத்து அவனைத் திருந்தச் செய்கிறது என்றால் அந்த வார்த்தையும், அந்த மனம் உள்ளவர்களும் மிகச் சிறந்தவர்கள்தான். மன்னித்தல்தான் சிறந்த தர்மம்; மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவத்துடன் அக்ஸியோனோவைப் போல வாழ்பவர்கள் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

http://www.readbookonline.net/readOnLine/5322/.  “GOD SEES THE TRUTH, BUT WAITS”.

  சட்டம் சொல்லுவதென்னவோ, குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது என்றுதான்.  இதைத் தானேயா நமது திரைப்படங்களில் ஹீரோக்கள் வசனமாகப் பேசி வருகிறார்கள். நிரபராதிகளில் ஒரு சிலர், நமது திரைப்படங்களில் வருவது போல் பழிவாங்கும் உணர்வுகளோடு வெளியில் வந்து, தான் ஜெயிலுக்குப் போக காரணமாக இருந்தவரை பழிவாங்குகிறார்கள். இல்லையேல், தான் நிரபராதியாக இருந்தும் தண்டிக்கப்பட்ட காரணத்தால் சமுதாயத்தின் மேல் உள்ளக் கோபத்தால் குற்றங்கள் செய்து, திரும்பவும் ஜெயில் வாழ்க்கைக்குப் போகவும் செய்கிறார்கள்.  யோசிக்கவே மாட்டார்களா இவர்கள்? யாருக்கு பாதிப்பு? நமது கேப்டன் ரமணாவில் சொல்லுவாரே “எனக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘மன்னிப்பு’” என்பதைப் போல். இதைக் கேட்கும் போது இதுவும் சரிதான் என்று தோன்றுகிறது. அக்ஸியோனோவ் போல் இருப்பவர்கள் அப்படி இருக்கட்டும்.  கேப்டன் போல் உள்ளவர்கள் இப்படிச் செய்யட்டும். இங்கே இரு தரப்பினருக்கும் தண்டனைக் கிடைக்கத்தான் செய்கிறது.  ஒருவனுக்கு மரண தண்டனை.  ஒருவனுக்கு மரணம் வரை தண்டனை. (குற்ற உணர்வுடன் வாழ்ந்து).


   சட்டத்திலும் பல ஓட்டைகள் இருக்கத்தான் செய்கின்றன.  குற்றம் செய்தவர் எந்த அளவிலான குற்றம் செய்திருக்கிறார் என்பதைப் பொருத்துத்தான் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  இதோ இந்தச் சம்பவத்தைப் படித்தால் உங்களுக்கே புரியும்.  அருணா ஷன்பாக் என்னும் ஒரு பெண் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். 40 வருடங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்ஸாக வேலை செய்து வந்தார்.  அங்கு பணிபுரிந்த ஒரு டாக்டரைக் காதலித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்த சமயம், ஒரு நாள் இரவு, அந்த ஆஸ்பத்திரியில் பணிபுரியும் வால்மீகி என்ற மொள்ளமாரி – இந்த நாய்க்கெல்லாம் வால்மீகினு ஒரு பேரு-வார்ட் பையன் (சுத்தம் செய்பவன்?!) அருணா உடை மாற்றும் ரூமிற்குச் சென்று, அவரை நாயைக் கட்டும் செயினால் கழுத்தை இறுக்கி, மிகவும் குரூரமாகக் கற்பழித்தான். கழுத்தை இறுக்கியதால், அருணாவிற்கு மூளைக்கு  ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிப்பு அடைந்ததாலும், செர்விகல் கார்ட் பாதிபடைந்ததாலும் அவள் கழிந்த 40 வருடங்களாக “Living Vegetable” ஆக – ஒரே பெட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். அந்த ஆஸ்பத்திரியில் உள்ள கருணை உள்ளங்களின் அரவணைப்பில் இருந்து வருகிறார். அவரது கண்கள் இயல்பாக இருந்தாலும் பார்வை இழப்பும் உள்ளது. The asphyxiation cut off oxygen supply to her brain, resulting in brain stem contusion injury and cervical cord injury apart from leaving her cortically blind.  அந்த கேடுகெட்ட மொள்ளமாரிக்கு 7 வருடங்கள்தான் தண்டனை.  அதன் பிறகு வெளியில் வந்து, இந்த வெட்கம் கெட்டவன், மனசாட்சி இல்லாத மனித மிருகம் அவன் தன் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். இங்கு தண்டனை யாருக்கு? ஒரு குற்றமும் செய்யாத, வாழ்வைத் தொலைத்த அந்தப் பெண்ணிற்கு. அதுவும் 40 வருடங்கள். படுத்த படுக்கையாக.......  இப்படிப்பட்ட ஓட்டைகளுடன் சட்டம் இருப்பதால்தான், மக்களுக்குக் குற்றம் செய்வதில் பயம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது.  குற்றங்களும் பெருகுகிறது என்பதுதான் மிக்க் கேவலமான, கசப்பான உண்மையும் கூட.  சட்டங்கள் இறுக்கப்பட வேண்டும். 

 பத்திரிகையாளரான அந்தப் பெண்ணின் தோழி, பிங்கி விரானி, அருணாவின் அவஸ்தையைக் கண்டு அவரைக் கருணைக் கொலை (Mercy Killing/Euthanasia) செய்ய அனுமதிக்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிற்கு மனு கொடுக்க, கோர்ட்டோ அதை நிராகரித்து விட்டது.  ஆனால், கோர்ட் Passive Euthanasia வை அனுமதித்ததாகத் தெரிய வருகிறது.  இது போன்ற சித்திரவதைகளை அனுபவிப்பவர்களை அதிலிருந்து மீட்கக் கூட விடாமல் நம் சட்டம் தடையாக இருக்கிறது. ஆனால், கருணைக் கொலையைச் சட்டமாக்குவது நம் நாட்டிற்குச் சரிப்பட்டு வராது. ஒன்று, நம் மக்கள் இன்னும் அந்த அளவிற்கு மனப்பக்குவம் அடையவில்லை. ம்ற்றொன்று, அந்தச் சட்டத்திலும் ஏதாவது ஓட்டைகளைக் கண்டுபிடித்து, இல்லையென்றால் ஓட்டை போட்டு தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புகள் நம் நாட்டில் அதிகம். நம் மக்கள் புத்திசாலிகள் என்று பெயர் எடுத்தவர்களாயிற்றே.


ஊழல்கள் செய்வது யாருக்கும் தெரியாத வரை எல்லாம் சரி.  ஆனால், ஊர், உலகம் அறியும்போதாவது, ஊடகங்களில் பெயர் அடிபட்டு கிழிபடும்போதாவது, ஜெயிலுக்குப் போகும்போதாவது, அவர்களது மனசாட்சி அவர்களோடு சிறிதாவது பேசாதா? உயர்நீதி மன்றங்களையும், உச்சநீதி மன்றங்களையும் விடுங்கள். இவர்களின் மனதிற்குள்ளும் இருக்கும் மனசாட்சி என்ற கோர்ட்டில் கூடவா, படங்களில் வரும் கோர்ட் ஸீனில் எல்லாம் நீதி தேவதைகளின் கண்கள் கட்டியிருப்பது போல, மனசாட்சித் தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருக்கிறது?!
எப்போது இவர்கள் எல்லோரும் திருந்துவார்கள்? இத்தனை அட்டூழியங்களுக்கிடையிலும் “இந்தியா வல்லரசு நாடாகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று புளுகிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சட்டத்தின் பிடியில் சிக்காத, மனசாட்சி இல்லாதவர்கள், ஊழல் செய்பவர்கள், கொலைகாரர்கள், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை உள்ள மனித மிருகங்கள், பொறம்போக்குங்க அதிகமாக உள்ள இந்த நாடு வல்லரசானால், அது உலகிற்கே ஏற்படும் ஒரு சாபக்கேடு.  நாம வல்லரசு எல்லாம் ஆக வேண்டாம். ஜப்பான், நார்வே, ஸ்வீடனில் எல்லாம் ஒரு லட்சத்தில், 50 பேர்தான் குற்றவாளிகளாம். அது போல ஒரு நல்லரசானாலே போதும்.


சட்டத்தில் உள்ள இந்த ஓட்டைகளை அடைக்க சட்ட வல்லுநர்களும், அரசும், காவல் துறையினரும், பொது மக்களும், நேர்மையுடன் முயன்றால், நம் நாடு நீதிக்குத் தலை வணங்கும் நாடாக மாறுவது உறுதி. Idealistic Thought and Dream???!!!!.  கேக்க நல்லாத்தான் இருக்கு. அதெல்லாம் சரி, இந்தச் சட்டத்தில உள்ள ஓட்டைகளை அடைக்கச்  சட்டம் எங்கருக்குது? சட்டம் யார் கையில?  தேடுங்க!  தேடிப் பாருங்க!  தேடிக்கிட்டே........... இருங்க!!!!!........கிடைக்குன்றீங்க????!!!!!!!

-------------------------------------------------------------

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ; அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்!

இந்த சம்பவத்தைப் படியுங்கள்.  இந்தத் தலைப்பின் அர்த்தம் புரியும் உங்களுக்கு.  பெண்களுக்கான ஓர் எச்சரிக்கை!!  ஆண்களுக்கும்தான், உங்கள் வீட்டுப் பெண்களை ஜவுளிக் கடைக்கோ, தையல் கடைக்கோ அழைத்துச் செல்லும்போது அவர்களிடம் எச்சரிக்கை மணி அடிப்பதற்கு.

திருச்சூரின் அருகே உள்ள ஒரு தையல் கடை.  அதை ஒரு பெண்மணி நடத்தி வந்தார்.  பெண்களால் பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு கடை.  அந்தப் பெண்மணியின் மகன் இப்போது போலீஸ் பிடியில்.  எதற்கு?  அந்தப் பையன் பெயர் சிஜேஷ்.  வயது 27.  சாஃப்ட்வேர் இஞ்சினியர் (Software Engineer).  ஆனால், செய்த குற்றமோ மகாக் கேவலமான ஒரு குற்றம்.  நீங்கள் புத்திசாலிகள்!! ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
அங்கு தைக்கக் கொடுக்கும் பெண்கள், தைத்ததை வாங்க வரும் போது தைத்த அளவு சரியாக இருக்கிறதா என்று போட்டுப் பார்ப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. (இப்போது இது புதிய பழக்கம் போல.  பண்டெல்லாம், பெண்கள் வீட்டுக்கு வந்துதான், தைத்ததைப் போட்டுப் பார்ப்பது வழக்கம், என் அறிவுக்கு எட்டிய வரை).  அப்படி அவர்கள் துணி மாற்றும் இடத்தில், இந்தக் கேடு கெட்டப் புண்ணியவான், அதுவும் தொழில் நுட்பம் தெரிந்தவன் ஆகையால், தனது மூளையை வக்ரபுத்திக்கு அடிமையாக்கி அங்கு ஒரு கேமராவை, அம்மா உட்பட, யாருக்கும் தெரியாமல் ஃபிக்ஸ் செய்திருக்கிறான்.  இத்தனை நாட்களும் அதன் வழியாக பதிவாகும் படங்களைக் கண்டு களித்திருக்கிறான். எப்படி இப்படிச் செய்யத் தோன்றியது அவனுக்கு?  அவனுக்குக் கூடப் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையா?  ஏன் அவன் அம்மாவே ஒரு பெண்தானே!  இது அங்கு வேலை செய்யும் பெண்களுக்குத் தெரிய வர, அவர்கள் போலீஸுக்குத் தெரியப்படுத்த, இப்போது அவன் அம்மாவை விட்டு, விய்யூரில் மாமியார் வீட்டில் (விய்யூர் போலீஸாரின் பிடியில்).
பெண்களே!  ஜாக்கிரதை!.  இது போல, தைத்தத் துணிகளை அளவு சரியா என்று கடையிலேயே போட்டுப் பார்க்க நேர்ந்தால், சுற்றும் முற்றும் ஏதாவது சந்தேகப்படும்படி உள்ளதா என்று நன்றாகச் சோதித்து விடுங்கள்.  எந்தப் புத்துல என்ன பாம்பு இருக்கோ! பாம்புதானே படம் எடுக்கும்...அதான்......இது தையல் கடைகளுக்கு மட்டுமல்ல, பெண்களாகிய நீங்கள் ஜவுளிக் கடைகளுக்கும் அடிக்கடி போகக் கூடியவர்கள் தானே!  அங்கும் இப்போதெல்லாம் “Trial Room” என்று ஒன்று இருக்கிறதே.! அங்கும், நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்காக இந்தப் பதிவு. பொது இடங்களில் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஆண்களுக்கு எந்தப் பாம்பைப் பற்றியும் கவலை இல்லை.  எந்தப் பாம்பும் அவர்களைப் படமும் பிடிக்காது.

இந்தச் சம்பவம், தையல் கடை நடத்தும் பெண்களுக்கும் ஒரு எச்சரிக்கை மணிதான்.  பெண்களே நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்.  உங்கள் வீட்டிலுள்ள எந்த ஆண் வேண்டுமென்றாலும் பாம்பாக இருக்கலாம். ‘புத்து இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொளுத்திப் போட்டுவிட்டேனோ?!! பரவாயில்லை நாரதர் கலகம் நன்மையில்தான் முடியும். பெண்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் இல்லையா?! Trial Rooms உள்ள ஜவுளிக் கடைகளை நடத்தும் ஆண்களுக்கும் இது ஓர் எச்சரிக்கைதான். இந்த லோகத்துல எதையுமே, யாரையுமே நம்ப முடியலையேப்பா!!



ஏமாறாதே......ஏமாற்றாதே..


இதுவரை நம்முடைய மின் அஞ்சல்(E.mail) வழியாகவும், மொபைல் வழியாகவும் வந்து கொண்டிருந்த இணையக் குற்றங்கள் (cyber crimes) இப்போது முகநூல் (Face Book) வழியாகவும் நிறையவே வர ஆரம்பித்து விட்டது.  நம் மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை என் நண்பர் ஒருவருக்கு முகநூல் வழியாக வந்த இந்த மின் அஞ்சலும் அதற்கு அவர் கொடுத்த பதிலும், தப்பித்ததையும் என்னால் முடிந்த வரை தமிழில் மொழி பெயர்த்து இங்கு கொடுத்துள்ளேன்.



மாக்ஸ் ப்ரிசியஸ்


ஹலோ, மை டியர், இந்த நாள் இனிய நாளாகட்டும். நீங்கள் அங்கு நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  உங்களிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். என் பெயர் ப்ரிசியஸ் மாக்ஸ்வெல்.  உங்கள் profile பார்த்துப் பிடித்து உங்களுடன் நட்பு கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் உங்களுக்கு எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுக்கும் ஆர்வம் இருந்தால் நாம் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உதவியாக எனது இந்த இமெயில் முகவரிக்குத்  ************* தொடர்பு கொள்ளலாம். நான் எனது ஃபோட்டோக்களை அனுப்பி என்னைப் பற்றி எல்லாம் தெரியப்படுத்துகிறேன்.  நன்றி, கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக.

***************************************************************************

ப்ரிசியஸ் மாக்ஸ்வெல்,  உங்கள் மெயில் பார்த்தேன். இனி வரும் நாட்களில் நாம் நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வோம். உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள். உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்திற்காகவும் இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்

********************************************************************************

அன்புள்ள,

என்னுடைய வேண்டுகோளை ஏற்று பதில் கொடுத்ததற்கு மிக்க நன்றி. இன்று நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அங்கு உங்கள் சூழலும், எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். என் பெயர் ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல். நான் சென்ட்ரல் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவைச் சேர்ந்தவள்.  எனது வயது 24. 5 அடி 8 இன்ச் உயரம். மணமாகவில்லை. நல்ல நிறம்..  கறுப்புத் தலைமயிர்.  பழுப்பு நிறக் கண்கள்.

அரசியல் சூழல் காரணமாகவும், உள்நாட்டுப் போர் காரணமாகவும் கடந்த சில வருடங்களாக நான் செனகல் என்னும் ஊரில் இருக்கிறேன். எனது தந்தை ************* ருவாண்டாவின் தலை நகரமாகிய சிகாலியில் உள்ள ஒரு Steel Industrial Company யின் மானேஜிங்க் டைரெக்டராக வேலை பார்த்து வந்தார்.  என் அன்பான அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் ஒரு நாள் காலை புரட்சியாளர்களால் கொல்லப்பட்டனர். நான் மட்டும்தான் தப்பிப் பிழைத்து செனகலுக்கு வந்து, இங்கு (United Nation Refugee Camp) அகதிகள் முகாமில், Reverend Pastor ன் கவனிப்பில் இருந்து வருகிறேன்.  இப்போது அவருடைய கணிணியை உபயோகப்படுத்தித்தான் இந்த மெயிலை உங்களுக்கு அனுப்புகிறேன்.

நான் எனது எந்த உறவினரையும் அணுக முடியாத நிலையில் இருக்கிறேன்.  ஏனென்றால் அவர்களும் போரின் இடையில் ஊரை விட்டு ஓடி விட்டார்கள்.  இப்போது எனக்கு இருக்கும் ஒரே நபர், இந்த அகதிகள் முகாமில் இருக்கும் MISSION SAVIOR CHURCH ன்  pastor  Reverend ***************அவர் மிகவும் நல்லவர். என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டாலும் நான் அவருடன் வசிக்கவில்லை.  காரணம் இங்கு ஆண்களுக்குத் தனி விடுதி, பெண்களுக்குத் தனி விடுதியாக உள்ளதால் நான் பெண்களின் விடுதியில் இருக்கிறேன்.

The Pastors Tel number is ******************* நீங்கள் இந்த நம்பருக்கு அழைக்கலாம். அவர்தான் எடுப்பார்.  அவரிடம், என்னுடன் பேச விரும்புவதாக்ச் சொன்னால் என் விடுத்திக்கு அந்த அழைப்பை அனுப்புவார். இங்கு நான் அகதியாக இருப்பதால் எனக்கு எந்த உரிமையும் கிடையாது. அகதிகளாகிய எங்களுக்கு இந்த முகாமை விட்டு மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல் வெளியே செல்ல முடியாது. இது ஜெயில் போலத்தான்.  ஆனால் நான் இறைவனின் அருளால் இந்த முகமை விட்டு சீக்கிரமே விடுவித்திக்கொள்வேன் என்று நம்புகிறேன்.  இதை தயவு செய்து உங்களைப் புண்படுத்துவதாக நினைத்து கொள்ளாதீர்கள். எனக்கு இங்கு இந்த முகாமில் மிக வேதனையான சூழலாக இருப்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன். நாம் இதற்கு முன் சந்தித்ததில்லைதான்.  ஆனால் உதவி பெறவேண்டி தேடியபோது உங்கள் profile பார்த்து நீங்கள் மிகவும் பொறுப்பானவர் என்பதை அறிந்து, நான் உங்களை மிகவும் நம்புவதால், நீங்கள் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள்தான் சரியான நபர் என்பதால்தான் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்.

நான் உங்களிடம் எனது பரம ரகசியத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.  தயவு செய்து நீங்கள் என்னிடம் பொறுப்புடனும், வெளிப்படையாகவும் உங்கள் profile ல் உள்ளது போல் இருக்க வேண்டுகிறேன். உங்களுக்கு இப்படி நான் எழுதுவது வியப்பாக இருக்கலாம்.  ஆனால், மிக மிக அவசரத் தேவையாக இருப்பதால் நீங்கள் இதில் உடனேயே தலையிட்டு எனக்கு உதவுமாறு வேண்டுகிறேன். கடவுளின் அருளால், நீங்கள் நேர்மையாகவும், பொறுப்பாகவும் இருப்பீர்கள், என்னை ஏமாற்ற மாட்டீர்கள் என்று உங்களை மிகவும் நம்புகிறேன்.

எனது தந்தை, லண்டனில் ஒரு பெரிய வங்கியில் (Royal Bank Of Scotland) ல் அவர் உயிரோடு இருந்த போது பணம் சேமித்திருந்தார். என்னுடைய பெயரைத்தான் அவர் அடுத்த nominee ஆகக் கொடுத்திருந்தார். இதைப் பற்றி நான் யாரிடமும் கூறவில்லை. Reverend ***************** இடம் மட்டும், அவரின் பாதுகாப்பில் உள்ளதால் கூறியுள்ளேன். நான் எனது பாதுகாப்பிற்கு வேண்டியும், பணத்தை மோசமானவர்களிடம் இழந்துவிடக் கூடாது என்பதற்காகவும் இதை ரகசியாமாக வைத்துள்ளேன். அதனால்தான் உங்களையும் யாரிடமும் இதைப் பற்றித் தெரிவிக்கக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.  அந்த வங்கியில் டெப்பாசிட் ஆன தொகை 6 மில்லியன் 700 ஆயிரம் அமெரிக்க டாலர்கள். ($6.7 million).

எனக்கு இந்தப் பணம் திரும்பக் கிடைக்க நீங்கள் உதவ வேண்டும்.  நான் இதை ஏற்கனவே முயன்று விட்டேன்.  ஆனால் நான் இங்கு அகதியாக இருப்பதால் அந்தப் பணத்தை வங்கி தருவதற்கு மறுத்துவிட்டது. அவர்கள், என்னை ஒரு உறவினரையோ, அயல்நாட்டு பார்ட்னரையோ, ட்ரஸ்டியையோ என் சார்பாக கொண்டுவர வேண்டும் என்று அறிவுரைத்தனர். தயவு செய்து உங்கள் நாட்டில், உங்கள் வங்கிக் கணக்கிற்கு இந்தப் பணத்தை மாற்றி எனக்கு உதவ வேண்டுகிறேன்.  இப்படிச் செய்து எனக்கு பணம் நீங்கள் அனுப்பினால், அதை வைத்து நான் இந்த முகாமை விட்டு வெளியேறவும், எனது பயணத்திற்கு வேண்டிய ஆவணங்களை எல்லாம் பெற்று உங்கள் நாட்டிற்கு வந்து நல்லதொரு வாழ்வை வாழ வழி செய்யுங்கள்.

அங்கு வந்து எனது படிப்பைத் தொடர வாய்ப்புக் கிடைக்கும், காரணம், எனது படிப்பு இப்போது முதல் வருடத்தோடு பாதியில் நிற்கிறது.  எனது பணத்தை நல்ல முறையில் ஏதாவது நல்ல தொழிலில் முதலீடு செய்து அதைக் காப்பாற்ற உதவலாம். நீங்கள் உதவ ரெடியாக இருந்தால், எனது தந்தையின் மரணச் சான்றிதழ். வங்கி கணக்கு விவரங்கள் எல்லாவற்றையும் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் பெயர், தொடர்பு கொள்ள உதவும் நம்பர், உங்கள் நாடு பற்றிய விவரங்களை எனக்கு அனுப்பினால் போதும்.

இதை உங்களை நம்பித்தான் கொடுக்கிறேன்.  எனக்கு, நேர்மையான, உண்மையான, புரிந்துகொள்ளக் கூடிய, நல்ல உழைப்பாளியான, கடவுள் நம்பிக்கையும், கடவுளுக்குப் பயபடுபவராக உள்ள ஒருவரைத்தான் பிடிக்கும்.  அதற்கு முன் நீங்கள் நான் மேலே குறிப்பிட்டுள்ள்து போல் கூப்பிட வேண்டும் ஏனென்றால் எனக்கு உங்களிடம் இன்னும் நிறைய பேச வேண்டும்.  இதனுடன் எனது புகைப்படங்களை இணைத்துள்ளேன்.  இன்னும் நிறைய புகைப்படங்களை அடுத்த மெயிலில் அனுப்புகிறேன்.  உங்களைப் பற்றியும் சொல்லுங்கள்.  நானும் உங்களைப் பற்றி அறிந்து கொள்வேன். இந்த நாள் நல்ல நாளாகட்டும்..என்னைப் பற்றியும் சிறிது சிந்தியுங்கள்.  உங்களிடமிருந்து பதிலை சீக்கிரமாக எதிர்பார்க்கிறேன்.

உங்கள் உண்மையான தோழி

ப்ரிஷியஸ் மாக்ஸ்வெல்

***************************************************************************

நான் உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இருப்பதற்கு மிகவும் வருந்துகிறேன் மாக்ஸ். பழைய மது, புது பாட்டிலில் விற்பது எங்கள் நாட்டில் இது போல் பல பாமர மக்கள் அதேசமயம் பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாந்துள்ளார்கள்.  அதனால் ஐ ஆம் வெரி ஸாரி.  நான் உங்களுக்குச் செய்ய முடிந்தது ப்ரார்த்தனை ஒன்றுதான்.  காலமும், பொறுமையும் உங்களுக்கு நல்ல முடிவுகளைத் தரும். எனது நண்பர் ஒரு போலீஸ் ஆபீஸர்.  அவரிடம் உங்களது செய்தியையும், ஃபோன் நம்பரையும் கொடுத்துள்ளேன்.  அவர் உங்களைத் தொடர்பு கொள்வார். தொடர்பு கொண்டால் நாம் நல்ல நண்பர்கள் (!?) என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்.  கடவுள் உங்கள் அருகில் இருக்கிறார்.  மனம் தளராதீர்கள்.  நான் உங்களுக்காக இறைவனை வேண்டுகிறேன்.



எனது நண்பர் “போலீஸ்: என்ற வார்த்தையை தட்டியாதால் அதற்குப் பின் அந்த மாக்ஸிடமிருந்து மெயில் எதுவும் இல்லை.  தப்பித்தார்.  நல்லவேளை.


ஆமா, அம்மணி எத்தனை வருஷமா இந்த ஒரே கதைய சொல்லி ஏமாத்தப் போறீங்க?  கொஞ்சம் கதைய மாத்துங்கப்பா.   போரடிச்சுப் போச்சு.  எங்க ஊர்ல இன்னும் உங்க கதைய கேட்டு எத்தனை பேரு ஏமாறப் போராங்களோ?  ஏற்கனவே நாங்க இளிச்சவாயங்க, எங்க நாட்டுல, நாங்க நேரடியா பார்த்துக்கிட்டே இருக்கற அரசியல்வாதிங்க கதைய கேட்டே ஏமாந்துகிட்டுத்தான் இருக்கோம்.  அப்ப கண்ணுக்கே தெரியாம எங்கேயோ உக்காந்துகிட்டு, கம்ப்யூட்டர் வழியா கதையத் தட்டிவிட்டா எங்க மக்கள் ஏமாறாமயா இருப்பாங்க?!! அதுவும் நீங்க டாலர்னு தட்டினீங்கனா எங்க மக்கள் வாயப் பொளந்துடுவாங்களே அதுவும் ஒரு பொண்ணு வழியா!!! அம்மணி, நாங்களும் இப்ப முழிச்சுக்கிட்டோம்.  இந்தா இப்ப இங்க தட்டிவிட்டாச்சு.  உங்க பருப்பு இனி இங்க வேகாது அம்மணியோவ்.!!




----------------------------------------------------------------------------------------------------

திருடாதே பாப்பா (தம்பி) திருடாதே/ஹாட்ஸ் ஆஃப் டு (குருவாயூர்) போலீஸ்

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே – பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை (பெற்றோர்) வளர்ப்பதிலே
-கவிஞர் புலமை பித்தன். படம்: நீதிக்குத் தலை வணங்கு

23-10-2013 அன்றுகுருவாயூர் பகுதியில் உள்ள கோவில்களில் ஒரு வாரமாக போலீஸுக்கு சவாலாக இருந்த உண்டியல் திருடும் குற்றவாளிகள் பிடிபட்டனர். குற்றவாளிகள் யாரென்று அறிந்தால் அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம் இல்லையேல் இதெல்லாம் இப்ப சகஜமப்பா என்றும் இருக்கலாம். 
ஆனால்ஆசிரியனாக இருக்கும் எனக்கு அது அதிர்ச்சி. குற்றவாளிகள்9ஆம் வகுப்பு10ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். ஐந்து பேர் அடங்கிய குழு.  பகலில் கோயிலுக்குச் சென்று, உண்டியல்களைப் பார்த்து வைப்பது, இரவில் சென்று, திருட்டுக் கலையில் கைதேர்ந்தவர்களுக்குக் கூட ஆச்சரியத்தை உண்டாக்கும் விதத்திலான திருட்டு நடத்துவது.  கையிலுள்ள பணம் தீரும் வரை, அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் வாங்குவது. பெரும்பாலும் புதிய மொபைல்கள் வாங்குவதுதான். வீட்டில் உள்ளவர்கள் கேட்டால் ஒரு நண்பன் தந்தது என்று சொல்வார்கள். பிடிபட்டவர்களை விசாரித்தப் போதுஅவர்களில் அப்பா இல்லைஅப்பா வெளியூரில் வேலை செய்பவர்அப்பா இந்தியக் குடி மகன்அப்பா ஓடிப்போனவர்,. இப்படிப் பல குடும்பச் சூழலில் இருக்கும் பையன்கள்.  பிடிபட்டதும்அவர்களின் பெற்றோர் வரவேண்டிய காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் 10 மாதம் சுமந்து பெற்று வளர்த்தத் தாய்கள் மட்டுமே. அவர்களெல்லாம் தங்கள் குழந்தைகள் செய்த குற்றத்தையும் அதன் காரணத்தையும் அறிந்தவுடன் மனம் தளர்ந்துமிகவும் கூனிக் குறுகி அழுத நிலை மிகவும் வருத்தத்திற்குறியது.  அப்படி என்னய்யா காரணம் என்று கேட்கிறீர்களா?  எல்லாம் இந்த மொபைல் ஃபோன்தாங்க.  நவீன புது மாடல் மொபைல் ஃபோன் வாங்க வேண்டும் என்ற காரணத்திற்காக இந்தத் திருட்டு.

நான் காரணங்களை ஆராயத் தொடங்கினேன். எனது மாணவர்களும் கூட அதி நவீன மொபைல் ஃபோன்கள் உபயோகிப்பதைப் பார்க்கிறேன்.  பருவ வயதில் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்கத் தவறுவதை இதற்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம்.  பெரும்பான்மையானப் பெற்றோர்களில்இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் இது போன்றவை நடந்தாலும்மற்றச் சூழலிலும் நடப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.  தந்தை வெளியூரிலுள்ள சூழலில்தாயின் கவனிப்பில் வளரும் பிள்ளைகளின் மாற்றங்கள்நடவடிக்கைகள் சில சமயம் தாயின் கண்ணில் படாமல் போவதற்கு வாய்ப்புண்டு.  மட்டுமல்ல பிள்ளைகளும் தாய்/பெற்றோர்கள் நம்பும்படியான பல பொய்களைச் தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க சொல்வதுண்டு.  தாய் தன் மகனை நம்பத்தானே செய்வாள். ஏன் தகப்பனும்தான். “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்றுதானே பழமொழி!

.  பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஏற்படும் இடைவெளி,  பருவ வயதில் ஏற்படும் புதிய நட்புகள்நண்பர்கள் உபயோகிக்கும்  அதிநவீன மொபைல் ஃபோன்களால் ஏற்படும் ஈர்ப்புஊடகங்களின் வாயிலாக காண நேரும்ஈர்க்கும் விளம்பரங்கள்நன்றும்தீதும் ஆராயத் தெரியாதபெற்றோர்களின் பொருளாதார நிலைமையை எண்ணிப் பார்கத் தோன்றாத முதிர்ச்சியின்மைஆடம்பர வாழ்கையின் மேல் ஏற்படும் மோகம் போன்றவையும் இங்கே காரணங்களாக அமையலாம்.  எதுவாக இருந்தாலும் இதில் பெற்றோரின் பங்குதான் அதிகம் எனலாம். அவர்கள் கவனிக்கத் தவறுவதால் தான் இவற்றில் பலதும் நிகழக் காரணம்.

இந்தச் செய்தியை படித்த போது,  எனக்கு, என் நண்பர் ஒருவரது குடும்பத்தில்  நடந்த  நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.  நண்பரின் மனைவியும் குழந்தைகளும் ஒரு இடத்திலும்நண்பர் வேறு ஒரு இடத்திலும் வேலை நிமித்தம் இருக்கின்றனர். மனைவி பள்ளி ஆசிரியை.  மனைவியின் பள்ளியிலேயே குழந்தைகளும் படிக்கின்றனர்.   மனைவி குழந்தைகளைப் பள்ளிக்குக் காரில் அழத்துச் செல்வார். இவர்களுடன் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் வருவதுண்டு.  பள்ளியில்  பேருந்து கட்டணம்மற்ற பல நிகழ்சிகளுக்காக  சேகரிக்கபடும் பணம் இவரது மனைவி சேகரித்து தன் கைவசம் வைப்பது வழக்கம்.   அப்படி, தன்னிடம் வரும் பணத்தை அவர் தனது கைப்பையில் வைத்துக் கொண்டு வருவது வழக்கம்.  ஒரு தினம் அப்படி அவர் கொண்டுவரும் போது சிறிய தொகை குறைந்தது தெரியவில்லை.  ஆனால்  மறு நாள் ரூ.2000 குறைந்தது தெரிய வந்தது.  எங்காவது கை மாறி வைத்திருக்கலாம் என்று நினைத்தார்.  இரண்டு தினம் கழித்து ரூ. 3,500 காணாமல் போனது.  பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு காணவில்லை. அதிர்ச்சி.  ரூ.2000 காணாமல் போன பிறகு அவர் மிகவும் கவனமாகத்தான் கையிலுள்ள பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தார்.  இருந்தாலும் பணம் காணாமல் போனது அவருக்கு மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் தந்தது. அடுத்தா நாளே, மறுபடியும் ரூ.2000 காணாமல் போனது. பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் தான் காணாமல் போயிருக்கிறது என்று தெரிய வந்ததும் தன்னுடன் வரும் மற்ற குழந்தைகள் மீது சந்தேகம் வரவே  தன் குழந்தைகளுடன்  அதைப் பற்றிப் பேசினார்.  எனது நண்பரின் மூத்த மகன் 9 ஆம் வகுப்பிலும்,  கூட வரும் பெண் குழந்தைகள்  இரண்டு பேர் 10 ஆம் வகுப்பிலும் படிப்பவர்கள்.  அந்தப் பெண்களில் ஒரு பெண் கைப்பையை தனது மடியில் வைத்திருந்து அப்புறப்படுத்தியதை தான் பார்த்ததாகவும் ஒருவேளை அவள் எடுத்திருக்கலாம் என்றும் மகன் கூறினான்.  இவர் அந்தப் பெண்ணைப் பற்றி சக ஆசிரியைகளிடம் விசாரித்தார்.  அவர்களின் கருத்துப் படி அந்தப் பெண் குழந்தைக்கு ‘ரூ 6000ரூ 7000 க்கு என்ன அவசியம்.  எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றனர்.  இவர்களது மகனின் கையில் ஒரு நவீன மொபைல்.  தனது நண்பன் தந்ததாகக்  கூறியுள்ளான்.  என் நண்பருக்கு விஷயம் சொல்லப்பட்டது.  அவர் உடன் தன் மகனை சந்தேகம் எழாதவாறு விசாரித்தார்.  தான் ஒரு புது மொபைல் வாங்கித் தருவதாகவும் அவன் அந்த மொபைல அவன் நண்பனிடம் கொடுத்துவிடவேண்டும் என்றும் சொன்னார்.  மகன் பேசியதிலிருந்து அவருக்கு சின்ன சந்தேகம் வந்தது.  அவன்  தனது குற்றத்தை மறைக்க நிறைய அடுக்கடுக்காகப் பொய்கள் சொல்லுவது போல் அவருக்குத் தோன்றியது. அவன் பலமுறை அவரிடம் தனக்கு ஒரு மொபைல் வேண்டுமென்று சொன்னபோதெல்லாம், தான் மொபைல் வாங்கித் தர மாட்டேன் என்று சொல்லியதால் அவன் இப்படி நடந்து கொண்டுவிட்டானோ என்று வருந்தினார்.  அவரது மகன்தான் பணம் காணாமல் போனதற்குக் காரணம் என்று தெரிந்ததும் மனம் மிகவும் தளர்ந்து துடித்து விட்டார்.  அவர் மனம் துடித்ததைப் பற்றி  இப்போது நினைத்தாலும் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.


அவர் உடன் தன் ஆஃபீஸிற்கு லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டார்.  அவனைமிகவும் அன்பாகஅவன் மனம் நோகாதபடிஅன்புடன் அவனை எப்படித் திருத்துவது என்பதை யோசித்து அவரும் அவரது மனைவியும் மகனை  ஒரு அமைதியான இடத்திற்கு அழைத்துச் சென்று அவனை அடிக்காமல்கடும் சொற்கள் உபயோகிக்காமல்  அன்புடன் பேசி அவன் தான் காரணம் என்பதை அவன் வாயிலிருந்து  அறிந்தார்கள்.  மிகவும் உடைந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எனது நண்பர் தன் கையோடு கொண்டுவந்திருந்த புது மொபைலை மகனுக்குக் கொடுத்தார். 
அவனுக்கு மிகுந்த குற்ற உணர்வு உண்டாயிற்று.  அவன் தான் இனி  இப்படிச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தான்.  நண்பர் அவனை அந்தக் குற்ற உணர்விலிருந்து வெளியே கொண்டுவர இதமாகப் பேசிஎல்லோருமே சிறு வயதில்,  அறியா வயதில் இது போன்ற தவறுகளைச் செய்ய நேரலாம்.  ஆனால் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று அன்புடன் பேசிய போது அவனுக்கு சமீப காலத்தில் கிடைக்கப்பெற்ற புதிய நண்பர்களின் சகவாசம் தெரியவந்தது.  நண்பர் அவனிடம் ஒரு நண்பனைப் போல பேசி அந்த சகவாசம் நல்லதல்ல என்று புரிய வைத்து அவனை மெதுவாக அதிலிருந்து மீட்டு வந்துவிட்டார்.  இப்போது அவன் அந்த நண்பர்களிடமிருந்து விலகி தனது தவறை உணர்ந்து நல்லவிதமாக மாறி விட்டான்.  நண்பர் மற்ற குழந்தைகளையும் அழைத்து நடந்த சம்பவங்களைப் பற்றி பேசி அவர்களும் இது போல் செய்யக் கூடாது என்றும்அவர்களது தேவை எதுவாக இருந்தாலும் தங்களிடம் கேட்க வேண்டும் என்றும் அன்புடன் சொல்லி, அவர்களது அண்ணனைப் பற்றி ஒருபோதும் தவறாகவோகேலி செய்தோ பேசக் கூடாது என்றும் சொல்லி அறிவுறுத்தினார். செய்த தவறை உணர்ந்த ஒருவரை அதன் பிறகும் அவரை அவர் செய்த தவறைப் பற்றி பேசி அவர் மனதைப் புண் படுத்தக் கூடாது என்பதையும் வலியுறுத்தினார். அப்படி அந்தக் குழந்தைகள் எல்லோரும் நல்ல குழந்தைகள் ஆனார்கள்.


முதலில் நடந்த, செய்தித் தாளில் வெளியான சம்பவத்தில்போலீசாரின் நடவடிக்கையும் என் ந்ண்பர் செய்ததுபோல மிகவும் பக்குவமானஇதமான ஒரு நடவடிக்கைதான் என்பது இங்கு நம் எல்லோருக்குமே மிகுந்த மகிழ்சியைத் தருகின்ற ஒன்றுதான். குற்றம் செய்த மாணவர்களை குற்றப் படுத்தாமல், குற்றவாளிகளைப்போல் கருதிக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல், அவர்களது பெற்றோர்களை அழைத்துப் பேசிஅந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பாமல்
அவர்களுக்கு நல்ல விதமாகமன ஆலோசகரைக் கொண்டு கவுன்சலிங்க் கொடுத்துகருத்துரை வழங்கிபின்னர்  பழையபடி அவர்கள் படித்த அதே பள்ளியிலேயே படிப்பைத் தொடர வைக்க முடிவு செய்திருக்கிறார்கள்.  சமூகம் இந்த மாணவர்களை புறம்தள்ளாமல்,
அவர்களும் தங்களது தவறைத் திருத்தி மறு வாழ்வு வாழ அனுமதிக்க வேண்டும் என்பதைபோலீசாரின்  இந்த முடிவு தெரியப்படுத்துகிறது.  மிக மிக வரவேற்கப்படவேண்டிய ஒரு நல்ல முடிவு. போலீசாரைப் பற்றி பல தவறானக் கருத்துகளையும், நையாண்டியையும், நகைச்சுவகளையும் நாம் அள்ளித் தெளித்து உலா வரச் செய்யும் இந்நேரத்தில், இப்படிப்பட்ட நல்ல மனம் உள்ள போலீசாரும் இருக்கின்றனர் என்பதை, நாம் இச் சம்பவத்திலிருந்து அறிய முடிகிறது. மனதுக்கு இதமாக இருக்கிறது. போலீசாருக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.  ஹாட்ஸ் ஆஃப்  டு  குருவாயூர் போலீஸ்.!!
----------------------------------------------

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதீங்கப்பா
       

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல ஒரு சம்பவம்க.  திருவனந்தபுரத்துல உள்ள ஒரு IAS அதிகாரிக்கு நடந்திருக்குது.  பெண்கள் மட்டும்தான் கழுத்துல செயின் போடலாம்னு ஏதாவது சட்டம் இருக்காங்க? இல்லைல? அரசு ஊழியர்கள் உடம்புல இத்தனை பவுன் தான் போடலாம்னு, சர்வீஸ் ரூலும் கிடையாதுதானே? பிறகு என்னங்க?  ஒரு IAS அதிகாரி சின்னதா 11 பவுன் செயின் கழுத்துல போட்டா என்னங்க?  பார்க்கிறவங்க சின்னதாவோ, பெரிசாவோ ஏக்கப் பெருமூச்சு விடலாம்...... வருத்தப்படலாம்.......வருத்தமோ, வயிற்றெரிச்சலோபடுறவங்களோட சேர்ந்துகிட்டு அவருக்குத் தெரியாம...அவர் காதுல கூட விழாம.........கொடுமைய பாருங்க.........“11 பவுன் செயின், அதுவும் ஒரு ஆம்பிள கழுத்துலனு சொல்லி வருத்தத்தையும், வயிற்றெரிச்சலையும் கொஞ்சம் குறைச்சுக்கலாம்....போனா போகுது....ஆனா ஏதோ ஒரு திருட்டு ராஸ்கல் அத அபேஸ் பண்ணிட்டு, 2 லட்சத்துக்கு மேல விலை மதிப்புள்ள அந்தச் செயின திருடிட்டு போன பிறகும் கூட, “இவரு இப்படி ஒரு செயின கழுத்துல போட்டது சரியா? இப்படிப்பட்ட நகை ஆசை ஒரு IAS அதிகாரிக்கு பொருந்துமா, வேணுமா? ....அவரு சின்னதா ஒரு 3 பவுன் செயின் போட்டிருக்கலாமேனு போஸ்ட் மேல போஸ்ட்....கமெண்டுக்கு மேல கமெண்ட்ஸா, ஃபேஸ் புக், ட்விட்டர், ப்ளாகுனு (?!) எல்லாத்துலயும் எழுதி, பாவம் அந்த மனிதரை சித்திரவதை செய்வது நியாயமா? இந்த மனுஷனோட வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுரதுல உங்களுக்கெல்லாம் என்ன அப்படி ஒரு சந்தோஷம்?  (அப்பாடா!....இப்பதான் மனசுக்கு சந்தோஷமா இருக்குதுங்க....நல்லபடியா போஸ்ட் பண்ணியாச்சு.....இனி நிம்மதியா மத்த வேலைகளை பாக்கலாம்!?)


----------------------------------------------------------------------------------------------------------


புதிய பாடகி சந்திரலேகா...



http://www.youtube.com/watch?v=6znBLiA_ui8

       சமையலறையில் தன் குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டே பாடிய "ராஜஹம்ஸமே" என்ற பாடலைத் தன் மைத்துனர் மொபைலில் எடுத்த போது, பாவம் சந்திரலேகா ஒரு போதும் நினைத்திருக்க வழியில்லை, இந்த சம்பவம் தன் வாழ்வில் ஒரு திருப்பு முனையாகும் என்று.


        கேரளா, பத்தம்திட்ட ஜில்லாவில், வடசேரிக்கரையில். பரங்கிமாமூட்டில் ரகுநாதனின் மனைவிதான் சந்திரலேகா.  தன் கணவனுடனும், மற்றும் மூன்று வயதாகிய தன் மகன் ஸ்ரீஹரியுடனும் ஒரு சிறிய,உட்புறம் தேய்க்கப்படாத சுவர்கள் உள்ள வீட்டின் சமையலறையிலிருந்து திரைப்படப் பாடல்களைத், தன் குழந்தைக்குச் சோறூட்டும்போது பாடுவதுண்டு.  B.A. படித்திருந்தாலும், தன் குழந்தையைக் கருதி வேலைக்குச் செல்லாமல், கணவனின் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் திறமைசாலி.  தன் பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் ஒரு நல்ல பாடகி என்று எல்லாராலும் பாராட்டப்பட்டவள். 



        மைத்துனன் ரதீஷ் பல நேரங்களில் தன் அண்ணியின் நல்ல குரல்வளத்தோடு பாடும் பாடல்களைக் கேட்டு அதிசயப்பட்டிருக்கிறான். பாட வாய்ப்புத் தேடிப் போக முடியாதபடி பொருளாதார நிலை. டி.வி. சானல்களில் கூட பங்கெடுக்க, திருவனந்தபுரம், கொச்சி என்று போகமுடியாது என்பதால், அவற்றிற்கான வாய்ப்புகளை எல்லாம் வேதனையோடு தவறவிட்ட அண்ணியின் திறமையை வெளிப்படுத்த Youtube உதவியாக இருக்கும் என்று நினைத்து, குழந்தையை இடுப்பில் வைத்து சமைத்துக் கொண்டிருந்த அண்ணியைப் பாடச் சொல்ல, சந்திடலேகா மிக அருமையாக "ராஜஹம்சமே" என்ற சிதிராவின் பாடலைப் பாட, அதனைத் தன் மொபைல் ஃபோனில் முழுமையாக ரெக்கார்ட் செய்து தன் நண்பர்களிடம் காட்ட, அப் பாடலைக் கேட்ட ஒவ்வொருவரும் தந்த ஊக்கத்தினால், ரதீஷ் அந்தப் பாடலை youtube ல் upload செய்ய, பின்பு நடந்ததெல்லாம், வரலாற்றின் பாகமாக்கப் பட வேண்டியதற்கு சமமான நிகழ்சிகள். இலட்சக்கணக்கான நேயர்கள் Youtube ல் சந்திரலேகாவின் பாடலைக் கேட்டு, மகிழ்ந்ததோடுமட்டுமல்லாமல், அதைப் பகிர்ந்து கொள்ளவும் மறக்கவில்லை.  கடந்த வாரம் மிகுந்த பரபரப்பைச் சந்திரலேகா கேரளாவில் ஏற்படுத்தியேவிட்டார்.


        விளைவோ, அந்தப் பாடலைக் கேட்ட அனைவருக்கும் காதில் தேனாய்ப் பாய்ந்தது அவரது குரல்.  17.10.2013 அன்று கொச்சியிலுள்ள Freddy ஸ்டுடியோவில், பிரஷாந்த் இயக்கும் 'லவ் ஸ்டோரி' என்னும் திரைப்படத்திற்கானப் பாடலை, டேவிட் ஷோன் என்பவரின் இசையமைப்பில், பிரபல இயக்குனரான சிபிமலையிலின் முன்னிலையில் சந்திரலேகா பாடினார். உடனே 'ஈஸ்ட்கோஸ்ட்' விஜயன் தம் அடுத்த ஆல்பத்திற்காகச் சந்திரலேகாவை ஒப்பந்தமும் செய்தார்.  அப்போதே வேறு  ஒரு திரைப்படத்திற்கும் பாட வேண்டும் என அழைப்பும் வந்தது.  இதை நீங்கள் வாசிக்கும் போது சந்திரலேகாவுக்கு எத்தனையோ படங்களில் பாட வாய்ப்புக் கிடைத்திருக்கலாம்.  இது போல் குப்பையில் கிடக்கும் மாணிக்கங்களை அடையாளம் கண்டு அதற்குறிய இடத்தை அளிக்கப்படவேண்டிய சந்தர்பங்களுக்காக நாம் அனைவரும் இறைவனிடம் மன்றாடுவோம்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்து தமிழ் நாளிதழிலிருந்து........இந்து டாக்கீஸ்

தமிழ் ஸ்டுடியோ, தமிழில் குறும்பட முயற்சிகளைச் செறிவாக்கும் நோக்கில் குறும்படத் திரையிடல் மூலம் 2008ல் தன் பணியைத் தொடங்கியது. சென்னை திரைப்படக் கல்லூரி மாணவரான அருண் இந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர்.

சினிமா ஆர்வம் உள்ள இளைஞர்கள் பலருக்கும் தமிழ் ஸ்டுடியோ பயிற்சி அளித்து வருகிறது. எடிட்டிங், இயக்கம், ஒளிப்பதிவு போன்ற துறைகளில் குறுகிய காலப் பயிற்சிகளை அளித்துவருகிறார்கள். சென்னை மட்டும்மல்லாது, கோவை, திருச்சி போன்ற நகரங்களிலும் பயிற்சிப் பட்டரைகள் நடத்தி வருகிறார்கள். சினிமா என்பது தொழில் நுட்பத்திற்குள் நின்று விடக்கூடாது என்பதற்காக எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களளுடனான உரையால்களைப் பயிற்சியின் ஒரு அம்சமாகச் சேர்த்துள்ளார்கள்.  ஆர்வமுள்ளோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்குடன் இதை இங்கு பதிவு செய்துள்ளோம்.  இதன் இணயதள முகவரி இதோ கீழே




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக