ஞாயிறு, 9 மே, 2021

இந்த அன்னையரையும் வாழ்த்துவோமே

வலையுலக நட்புகள் அனைவருக்கும் வணக்கம். சமீபமாக வலையில் அவ்வப்போது கருத்துகள் போட்டாலும் எங்கள் தளத்தில் பல மாதங்களுக்குப் பிறகு எட்டிப் பார்க்கிறோம். தொடர வேண்டும் என்றும் முயற்சி, நம்புகிறோம். இன்று அன்னையர் தினம் என்று அறிந்ததும் ஒரு பதிவு போட்டு தொடங்கலாமோ என்று எண்ணி இதோ..

எல்லாவற்றிற்கும் விவரங்கள் கொடுக்க முடியவில்லை. ஒரு சிலவற்றிற்கு மட்டும் கொடுத்திருக்கிறேன். 

அன்னையர் தினம் என்றால் அன்னையர் மட்டுமல்ல, தாயுமானவராய் இருக்கும் தந்தைகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகளைச் சொல்லிக் கொள்வோம். 

மனித குல அன்னையர் மட்டும் தானா?! தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், அசாதாரண நடவடிக்கைகளை எடுப்பவர்கள் மனிதர்கள் மட்டுமல்ல. செல்லங்களிலும் அன்னையர் தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் உணவைத் தேடிக் கொள்வது முதல், தங்களைப் பாதுகாத்துக் கொள்வது வரையான பாடங்களைப் புகட்டுகின்றனர். தன்னையே தியாகம் செய்யும் அன்னைகளும் இருக்கிறார்கள். இதோ சில உதாரணங்கள். இய்ற்கையில் தான் எத்தனை எத்தனை ரகசியங்கள்!






முட்டை இட்டதும் அம்மா பெங்க்வின் ஆண் பெங்க்வினிடம் பாதுகாக்க விட்டுவிட்டு கடலில் மீன் பிடிக்க 50 மைல் தூரம் பயணம் செய்யும். அவற்றைப் பிடித்துக் கொண்டு தன் குஞ்சுகளுக்குக் கொண்டுவரும். இங்கு ஆணும் தாயுமானவர் ஆகிறார்!!!!



ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? குட்டிகள் பிறந்ததும் பாதுகாப்பிற்காக அவற்றை தாடையில் சுமந்து கொண்டு மீன் பூச்சிகள் நத்தைகள் என்று அவற்றின் உணவைப் பழக்கத் தண்ணீரில் பழக்கப்படுத்துமாம் இப்படி ஒரு வருடம் ..

ம்மா ஹார்ன்பில் தன் பசி வலி எல்லாம் மறந்து அடைகாக்கும் காலமான இரு மாதங்கள் தன் பொந்திலேயே இருந்து அடைகாத்து குஞ்சு பொரிக்குமாம்.



இதுவும் ஆச்சரியமான விஷயம். கொஞ்சம் கூட சுயநலமற்ற அம்மாக்கள் எனலாம். ஆக்டோபஸ் 50 ஆயிரத்திற்கும் மேல் முட்டையிடும். அவற்றின் மீது அமர்ந்து முட்டைகளின் கூடவே இருந்து எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும், 14 லிருந்து 53 மாதங்கள் வரை. அவற்றிற்கு ஆக்சிஜன் கிடைப்பதற்கு அவற்றின் மீது நீரோட்டங்களை வீசிக் கொண்டே இருக்கும் (வாட்டர் கரன்ட்) தனது உணவைப் பற்றிக் கூட கவலைப்படாமல். குஞ்சுகள் பொரியும் போது அம்மா இறந்துவிடுமாம்!

Meerkats - கீரிப்பூனை
இவை கூட்டுக் குடும்ப உதாரணம். குட்டிகளைப் பேணுவது அவற்றிற்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது சகோதரிகளும் அத்தைகளுமாம்


Earwigs - விட்டில் பூச்சிகள் / மூலைவிட்ட பூச்சிகள்
பல இனங்களில் பூச்சிகளில் இல்லாத தாய்க்கவனிப்பு இவற்றில் காணப்படுகிறது. இவற்றின் பெண் பூச்சிகள் முட்டைகளைப் பொரித்த பிறகும் இள உயிரிகளை இரண்டாவது தோலுரிப்பு வரை காப்பாற்றுகின்றன. (முதிரும் முன்பாக 5 முறை தோலுரிக்கின்றன)

இவை சில உதாரணங்கள். எப்போதோ இப்படி ஒரு பதிவு எழுத எடுத்து வைத்திருந்த படங்கள் நினைவுக்கு வர தேடி எடுத்து இங்கு பகிர்ந்துள்ளேன்.

நன்றி அனிமல் ப்ளானட், விக்கி, கூகுள்

----கீதா

44 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள். வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் தளத்தில் வந்திருக்கும் பதிவு அன்னையர்களின் சிறப்பைப் பற்றியது என்னும் போது மிக,மிக சந்தோஷமாகவும், பெருமையாகவும் உள்ளது. தொடர்ந்து நிறைய பதிவுகள் இட ஒரு அன்னை ஸ்தானத்தில் என் வாழ்த்துக்களும் எப்போதும் உங்களுக்கு உண்டு.

    நீங்கள் இங்கு திரட்டி தந்துள்ள அன்னையர்கள் படங்கள் நன்றாக அழகாக உள்ளது. அதன் விஷயங்களும் பிரமிப்பூட்டுவையாக உள்ளது. குறிப்பாக தான் இட்ட முட்டைகளை நீண்ட மாதங்கள் பாதுகாத்து அவை குஞ்சுகளாக பொரியும் காலத்தில் மரணமடைந்து விடும் ஆக்டோபஸ் பற்றிய தகவல் மனதை கனக்கச் செய்து விட்டது. எவ்வளவு தியாகமான தன்மையுடன் அதை இறைவன் படைத்துள்ளான்.

    எல்லா படங்களும், அதன் அன்னை என்ற மனோபாவ சிறப்புகளும் படிக்க நன்றாக இருந்தது. தந்தை இல்லாவிடில் தாய் ஏது? இன்றைய தினத்தில் தாயுமானவர்களாக இருந்து அன்புடன் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் அனைத்து மனிதர்களுக்கும், மற்ற ஜீவன்களுக்கும் அன்பான வாழ்த்துகள். உங்கள் பகிர்வு மனதுக்கு சந்தோஷம் அளித்தது. மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்றைய தினத்தில் தாயுமானவர்களாக இருந்து அன்புடன் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் //

      இப்படிச் சொல்லிச்சொல்லியே, குழந்தைகளை வளர்க்கும் வேலையையும் ஆண்கள் தலையில் கட்டிவிட்டு, இந்தப் பெண்கள், தொலைக்காட்சி சீரியல்களில் ஆழ்ந்துவிடப் போடும் திட்டம் எங்களுக்கும் தெரியும். நாங்கதான் பெண் தெய்வம், அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ என்று வசனங்கள் பேசி (புத்திசாலித்தனமாய்) வீட்டு வேலைகள் முழுவதையும் பெண்கள் தலையில் கட்டுகிறோம். இதனை இப்போது புரிந்துகொண்டு, எங்களை 'தாயுமானவர்' என்று சொன்னால், உடனே மகிழ்ந்து, குடுகுடுவென கிச்சனுக்குள் போய், சமையல் வேலை, பிறகு வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் செய்துவிடுவோம் என்று கனவு காணாதீர்கள். ஹாஹா

      நீக்கு
    2. தொடர்ந்து நிறைய பதிவுகள் இட ஒரு அன்னை ஸ்தானத்தில் என் வாழ்த்துக்களும் எப்போதும் உங்களுக்கு உண்டு.//

      கமலாக்கா மிக்க நன்றி அக்கா தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு!

      கீதா

      நீக்கு
    3. நெல்லை ஹா ஹா ஹா ஹா நினைச்சேன் நீங்க கண்டிப்பா இப்படிச் சொல்லுவீங்கன்னு நினைத்துக் கொண்டேதான் பதிவில் அதை எழுதினேன்!!!!

      கீதா

      நீக்கு
    4. ஹா.ஹா.ஹா.
      /எங்களை 'தாயுமானவர்' என்று சொன்னால், உடனே மகிழ்ந்து, குடுகுடுவென கிச்சனுக்குள் போய், சமையல் வேலை, பிறகு வீட்டுவேலைகள் எல்லாவற்றையும் செய்துவிடுவோம் என்று கனவு காணாதீர்கள்./

      ஹா.ஹா.ஹா. உண்மைதான் நெல்லை சகோதரரே. என்னைப் பொறுத்த வரை அது கனவாகத்தான் போய் விட்டது.:)

      நீக்கு
  2. எபி-யின் ஞாயிறு ஸ்டைலில், படங்களைப் பரப்பிக் கதையை முடித்துவிட்டீர்கள்.. வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    அதுக்கு நீங்க எடுத்துக்கொண்ட கான்சப்ட் பாராட்டுக்குரியது.

    முதலை, முட்டைகள் பொரிந்ததும் தன் குஞ்சுகளை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடமான தண்ணீரில் கொண்டுபோய்விட்டுவிட்டு திரும்பவும் மீதி உள்ள குஞ்சுகளைக் கவ்வ வரும். இதற்கிடையில் பறவைகள் போன்றவை, முதலைக் குஞ்சுகளைக் கவ்விக்கொண்டு செல்லும். 70 குஞ்சுகள் வந்தால் அதில் 30 சதவிகிதம்கூட நீரைப் போய்ச் சேராது, அதிலும் 3-4தான் பெரிதாக வளரும்.

    அது சரி...எப்படி ஆமையை விட்டுவிட்டீர்கள்? 120 முட்டைகளில் 5-10 ஆமைக்குஞ்சுகள் கடலை அடைந்தாலே ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லை...முதலையைப் பற்றியும் ஆமையைப் பற்றியும் இன்னும் பல தகவல்கள் கொடுக்கவில்லை. ஆமை முட்டைகள் 3, 4 தான் தேறும் என்பதால்தான் சென்னையில் டர்ட்டில் வாச் நு ஒரு குழாம் முட்டைகளைக் கலெக்ட் செய்து நீலாங்கரையில் உள்ள ஹாச்சின் சென்டரில் அவற்றை மண்ணிற்கடியில் பாதுகாத்து பொரிந்ததும் அவற்றை கடலில் விடுவாங்க. நானும் மகனும் அவர்களோடு சென்று ஆமைக்குஞ்சுகளைக் கையில் எடுத்துக் கடலில் சேர்த்த அனுபவம் கடல் மணலிலேயே படுத்து செம அனுபவம் அது பற்றி பதிவு எழுதினேனா நினைவில்லை படங்கள் எதுவும் இல்லை.

      மிக்க ந்னறி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. எழுதினீங்க, ஆரம்ப காலத்தில்.

      நீக்கு
    3. மிக்க நன்றி கீதாக்கா நினைவு வைத்திருந்து இங்கு சொன்னமைக்கு.

      பார்க்கிறேன் அந்தப் பதிவு என்ன என்று தலைப்பு என்ன என்பதும் நினைவில்லை பார்க்க வேண்டும்.

      கீதா

      நீக்கு
  4. அன்னையர் தினவாழ்த்துகள்
    அரிய விடயங்களை தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி வாழ்த்துகளுக்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  5. தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துகள் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரை உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  6. அற்புதமான படங்களுடன் சுவாரஸ்யமான விவரங்கள்.  அன்னையர் தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  7. முதலை தாடையில் குட்டி இருக்கிறதா?  எவ்வளவு உற்று உற்றுப் பார்த்தும் என் கண்ணில் படவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் இன்னொரு படம் இருந்தது முதலை தன் தலையின் மேல் குட்டியை வைத்துக் கொண்டு ஆனால் ஏனோ அந்தப் படம் அப்லோட் ஆக மறுத்தது இது அப்லோட் ஆனது...

      தாடையில் வைத்திருக்கும் படமும் இல்லை என்னிடம்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  8. அழகான படங்கள் - தகவல்களும் சிறப்பு.

    அனைத்து அன்னையர்களுக்கும், தாயுமானவன்களுக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி உங்கள் வாழ்த்திற்கும் கருத்திற்கும்

      கீதா

      நீக்கு
  9. எல்லாமே புதிய விஷயங்கள். அறியாத அரிய தகவல்கள். அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆக்டோபஸின் தியாகம் மெய்சிலிர்க்க வைக்கிறது. படங்களும் தகவல்களும் பிரமாதம். தொடர்ந்து வாருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா, அக்டோபஸ் போன்று இன்னொரு கடல்வாழ் உயிரினம் மிகச் சிறிய உயிரினம் கடல் லௌஸ் (sea louse) அதைப் பற்றி வேறொரு பதிவில் சொல்கிறேன். அதுவும் பாவம். இயற்கையின் படைப்பில் பல அதிசயங்கள்

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
  10. முதலில் அன்னையர் தின வாழ்த்துகளைப் பிடியுங்கள்.

    மிக அருமையான தாய் சேய்ப் பதிவு அற்புதம்.
    எவ்வளவு விரிவான தகவல்கள் அன்பு கீதாமா.
    முதலை, ஆமை, மீர்காட் ,ஆக்டோபஸ் என்று எத்தனை அருமையான
    செய்திகள்.

    எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காது.
    அதுவும் பாவம் ஆக்டோபஸ் உயிரை விட்டு விடுமா:(
    என்னப்பா நியாயம் இது!!
    இறைவன் இது போல நியமம் வைக்கிறாரா.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா உங்கள் வாழ்த்திற்கு

      அதுவும் பாவம் ஆக்டோபஸ் உயிரை விட்டு விடுமா:(
      என்னப்பா நியாயம் இது!!
      இறைவன் இது போல நியமம் வைக்கிறாரா.
      //

      ஆமாம் வாசித்த போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

      மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
    2. படங்கள் அருமை. சிறப்பான எழுத்து நடை.

      நீக்கு
  11. எனக்கும் டர்ட்டில்வாட்ச் பற்றி நீங்கள் எழுதியது நினைவில் இருக்கிறது.
    இப்பொழுதும் நடக்கிறது.
    நம் ஸ்ரீராமின் கசின் சுஜாதா எனக்குப் படம் அனுப்பி இருந்தார்.
    உங்களை நினைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ உங்களுக்கும் நினைவு இருக்கா எனக்குத்தான் சரியாக நினைவில்லை..

      ஆம் இப்போதும் நடக்கிறதுதான் அம்மா...ஓ சுஜாதா அனுப்பிருந்தாங்களா படங்கள்! என்னையும் நினைத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி அம்மா

      கீதா

      நீக்கு
  12. அருமையான படங்கள், அழகான விளக்கங்கள்...

    அன்னையர் தின வாழ்த்துகள் என்றும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டிடி

      கீதா

      நீக்கு
  13. அறிய செய்திகளும் அழகிய படங்களும் தங்களின் வருகையும் அன்னையர் தின சிறப்பு.

    கோ

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு. நானும் ஒவ்வொரு அன்னையர் தின பதிவிலும் தாயுமானவர்களுக்கும் வாழ்த்து சொல்லுவேன். இந்த முறை அவசர பதிவு மீள் பதிவாக போட்டு விட்டேன்.
    தங்கை அதை பகிர்ந்து விட்டீர்கள்.

    எல்லா ஜீவன்களுக்கும் தாய் பாசமுண்டு, அவை தன் குழந்தைகளை வள்ர்க்க பாதுகாக்க எவ்வளவு கஷ்டபடுகிறது என்று படிக்க படிக்க வியப்புதான். படங்களும், அவை சொன்ன செய்திகளும் அருமை.

    இரண்டு நாளாக ஊரில் இல்லை அதனால் பதிவை இப்போதுதான் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா நீங்களும் எப்பவும் சொல்லுவீங்க தெரியும். தாயுமானவர்களுக்கும்..

      //தங்கை அதை பகிர்ந்து விட்டீர்கள்.//

      மிக்க நன்றி கோமதிக்கா...சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த முறை விரிவாகப் போட்டுவிடுங்கள் கோமதிக்கா...

      எல்லா ஜீவன்களுக்கும் தாய் பாசமுண்டு, அவை தன் குழந்தைகளை வள்ர்க்க பாதுகாக்க எவ்வளவு கஷ்டபடுகிறது என்று படிக்க படிக்க வியப்புதான். //

      ஆமாம் கோமதிக்கா. இன்னும் நிறைய வியப்பான செய்திகள் இருக்கின்றன. பின்னர் பகிரலாம் இதுவே பெரிதாகிவிட்டதே என்று விட்டுவிட்டேன்.

      //இரண்டு நாளாக ஊரில் இல்லை அதனால் பதிவை இப்போதுதான் படிக்கிறேன்.//

      அதனால் என்ன கோமதிக்கா. எப்ப நேரம் கிடைக்கிறதோ அப்போது வாசித்துக் கொள்ளலாமே இங்கேதானே இருக்கப்போகிறது. இப்பவும் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா


      நீக்கு
  15. //குட்டிகளைப் பேணுவது அவற்றிற்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பது சகோதரிகளும் அத்தைகளுமாம்//

    மிகவும் பிடித்த செய்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா எனக்கும் இந்தச்செய்தி ரொம்பப் பிடித்துப் போனது. என்ன அழகான கூட்டுக் குடும்பம் இல்லையாக?

      மிக்க நன்றி கோமதிக்கா

      கீதா

      நீக்கு
  16. படங்கள் மனம் கவர்கின்றன
    அன்னையர் தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. அழகான படங்களோடும், அரிய தகவல்களோடும் வித்தியாசமான அன்னையர் தின பதிவு. 

    பதிலளிநீக்கு
  18. நான் வலைப்பூ தளத்தில் கத்தரிக்காய் வியாபாரம் செய்கிறேன். ஆனால் நீங்கள் வைர வியாபாரம் செய்கிறீர்கள். ஒரு தேனீயைப் போல தகவல்களைக் தொகுத்துத் தந்துள்ள பாங்கு பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகான, பல தகவல்கள், மற்றும் அழகிய தமிழில் பதிவுகள் தரும் நீங்கள் என்னை இப்படிப் புகழ்ந்திருப்பது சற்று கூச்சமாக இருக்கிறது ஐயா. இத்தனைக்கும் நான் அதிகம் தரவுமில்லை. இருந்தாலும் உங்களிடமிருந்து இப்படியான கருத்து மிகுந்த ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது ஐயா.

      மிக்க மிக்க நன்றி ஐயா

      கீதா

      நீக்கு
  19. அன்னையர் தின வாழ்த்துகள். அனைத்து படங்களிலுமே அந்த தாய்மையின் பரிவு மற்றும் தியாகம் எட்டிப்பார்க்கின்றது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு