வெள்ளி, 20 மார்ச், 2020

மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! பாராட்டுகள்!

இந்த இக்கட்டான தருணத்தில் நம் நாட்டிலும் மற்றும் உலகம் முழுவதும் மக்களைக் காப்பாற்ற தங்கள் உயிரையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவச் சேவகர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள் அனைவரையும் நாம் மனமார்ந்து பாராட்டி வாழ்த்துவோம்! நன்றி நவில்வோம்! தினமுமே! அவர்கள் நலனுக்குப் பிரார்த்திப்போம்! அவர்கள் குடும்பம் எல்லாம் தழைத்தோங்க வேண்டும்! நம் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அவர்களை ஊக்கப்படுத்தவும் உதவுமே! 

மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்திப்போம். விழிப்புணர்வுடன் அரசுடன் ஒத்துழைப்போம்! விரைவில் நலமே விளைந்திடட்டும்.  விளைந்திடும்!


Image result for thanking all medicos with flowers

----கீதா

25 கருத்துகள்:

  1. வாழ்த்துவோம் ஒருங்கிணைந்து...

    பதிலளிநீக்கு
  2. ஆமாம். அவர்களின் தியாகம், தன்னலமற்ற சேவை பாராட்டுக்கும் நன்றியறிதலுக்கும் உரியது.

    பதிலளிநீக்கு
  3. அதுக்காக கொரோனா போல் இன்னொன்று வந்தால்தான் அடுத்த இடுகை எழுதுவேன் என்று காத்திருக்காமல், அவ்வப்போது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நெல்லை....எழுத ஆசைதான். மனதில் நிறைய வருகிறது. எழுத முடியுமா எழுதுவதற்குள் எல்லாம் மறந்து, சுரத்து இல்லாமல் போய்விடக் கூடாதே என்றும் உள்ளது. பார்ப்போம். கணினி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எவ்வளவுதான் செய்ய முடியும்..?

      கீதா

      நீக்கு
    2. இனியும், மகனையும் அம்பேரிக்காவில் வைத்துக் கொண்டு கணணி இல்லை எனப் பேசிக்கொண்டிருந்தால், கொரொனாவையும் பார்க்காமல் ரிக்கெட் போட்டு வந்து காவேரியில் தள்ளுவேன் கீதாவை.. ஒன்று வாங்குங்கோ வலையுலகில் கலக்குங்கோ...

      நீக்கு
  4. //தங்கள் உயிரையும் பணயம் வைத்து அயராது உழைக்கும் மருத்துவர்கள், மருத்துவச் சேவகர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள், சேவகர்கள் அனைவரையும் நாம் மனமார்ந்து பாராட்டி வாழ்த்துவோம்!//

    வாழ்த்துவோம் .
    நல்ல பதிவு.
    நலமே விளைக

    பதிலளிநீக்கு
  5. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரையும் வாழ்த்துவோம் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  6. ஆஆஆஆஆஆஅ கொரொனா அங்கிள் கீதாவை வலையுலகுக்குக் கூட்டி வந்திட்டாரே:).. உண்மைதான் கீதா, இங்கு யூகே, கனடாவில் எல்லாம், றிரயேட் ஆகிவிட்ட மருத்துவர்களை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைப்பு விட்டிருக்கிறது அரசாங்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவி.... ரிடயர்ட். என்பதை. றிரயேட் என்று எழுதி. படிப்பவர்களைக் குழப்பலாமா?

      நீக்கு
    2. ஆ ஆ கொரோனா அங்கிளா!!!! ஏன் கொரோனா ஆன்டீ இல்லையா ஹா ஹா ஹா...இது ஏதோ சொல்லுதே..சரி இப்ப எதுவும் சொல்லலை...ஆமாம் அதிரா. இங்கும் கூட ரிட்டயர்ட் மருத்துவர்களை அழைத்திருப்பதாக அப்படித்தான் சொல்லப்படுகிறது.

      நிலைமை கொஞ்சம் தீவிரமாகத்தான் போகிறது. நல்லது விளைந்திடட்டும்.

      பிஞ்சு எழுத்தாளர்...இப்ப பிஞ்சு பேச்சாளர்....'பிஞ்சு' இது வேறு அர்த்தமும் வெளிப்படுது...ஹா ஹா ஹா

      நன்றி பிஞ்சு பேச்சாளரே!

      கீதா

      நீக்கு
    3. இது எப்போது ’றிரயேட் கொரோனா’- வாக ஆகும்? இன்னும் எத்தனை வாரங்கள்.. மாதங்கள்..? மாதவா, கேசவா, நந்த கோபாலா !

      நீக்கு
    4. //
      நெல்லைத்தமிழன்21 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 6:58
      அடப்பாவி.... ரிடயர்ட். என்பதை. றிரயேட் என்று எழுதி. படிப்பவர்களைக் குழப்பலாமா?//

      ஹா ஹா ஹா இங்கு ஆரும் குழம்பவில்லையாக்கும்:)) எல்லோரும் ஸ்ரெடியாகவே நிக்கினம்:)).. தமிழ்ப்புரொபிஸர்தான் குழம்பிட்டார்ர் ஹா ஹா ஹா..

      நீக்கு
    5. //ரிட்டயர்ட்// - கீதா
      //ரிடயர்ட்// நெ தமிழன்
      //றிரயேட்// அதிரா:)) ஹா ஹா ஹா re-tired:))

      நீக்கு
  7. நலமே விளையட்டும்.

    இந்தப் பேரிடர் காலத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "உழைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும்"

      சூப்பர் ஜி!!! ஆமாம். சரியான வார்த்தைகள்!! அனைவருக்கும் வாழ்த்துகள் சொல்லிடலாம்!

      மிக்க நன்றி வெங்கட்ஜி.

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி

    வைரஸிடமிருந்து அனைவரையும் பாதுகாக்கும் மருத்துவர்களுக்கு இன்றைய தினத்தில் வாழ்த்துகள், பாராட்டுக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கமலாக்கா

      இனிதான் உங்க வீட்டுக்கு வரணும்...அட்டெண்டன்ஸ் வைச்சுடுறேன்.

      கீதா

      நீக்கு
  9. நிச்சயம் இணைந்து வாழ்த்துவோம்! பாராட்டுவோம்!

    பதிலளிநீக்கு
  10. கீத்து!!!!!!! Hope you are fyn.அண்ணா எப்டி இருக்கார். கேரளா ரொம்ப பாதிப்பாஹொமே? How is our vet?? Stay safe da

    பதிலளிநீக்கு
  11. உயிருக்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை என்று தெரிந்தும் ... காலன் தன் கையருகில்தான் குந்திகொண்டு இருக்கிறான் என்று தெரிந்தும் கூட உயிர் காக்க பணியாற்றும் இவர்கள்தான் உண்மையிலேயே நடமாடும் கடவுள்கள் .... இல்லாத கடவுளுக்கு கும்பிடு போடுவதை விட நம் கண்முன்னால் சேவையாற்றும் மருத்துவ கடவுளர்களின் பாதம் பணிவோம் ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    பதிலளிநீக்கு