வெள்ளி, 9 நவம்பர், 2018

சொல்முகூர்த்தம்


Image result for bird saying thanks to god

என்னவோ தெரியவில்லை இந்தச் சொல்லை ஸ்ரீராம் எந்த மூகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை மனதை லபக் என்று பற்றிக் கொண்டுவிட்டது. அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு. ஏனென்றால், எனது அனுபவங்கள் அப்படியானவை. ஸ்ரீராமின் பதிவின் தொடர்ச்சி எனவும் கொள்ளலாம் அல்லது கோமதிக்காவின் கருத்திற்கு அதை ஆமோதித்து வந்த எனது கருத்திற்கு அங்கு ஸ்ரீராம் பறவைக் கதை என்ன என்று கேட்டிருந்தற்கு பதில் எனவும் கொள்ளலாம். இப்போதைய எனது அனுபவங்கள் பற்றிய பதிவுகள் காத்திருக்கட்டுமே.

குழந்தைகளிடம் பேசுவது எப்படி? இந்த சொல்முகூர்த்தம் எப்படிப் பயனளிக்கும் என்பதையும் சொல்வதாகச் சொல்லியிருந்தேன். ஸ்ரீராமும் எதிர்பார்க்கிறேன் என்று சொல்லிட இங்கு எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகளிடம் இந்த சொல்முகூர்த்தம் எப்படி வேலை செய்தது என்பதையும் சொல்கிறேன். ஆனால் அது இனி வரும் பதிவுகளில். எச்சரிக்கை: எனவே ஸ்ரீராமிடம் இருந்து காவிக்கொண்டு வந்த சொல்முகூர்த்தம் மற்றும் வெல்லும் வார்த்தைகள் கொல்லும் வார்த்தைகள் கொஞ்சம் தொடரும்! 

என் இள வயதில் பள்ளியில் எனது காட்மதர் மேரிலீலா மற்றும் ஸ்டெல்லா டீச்சர்கள். (YSM-Young Students Movement) இதில் மேரி லீலா டீச்சர்தான் அதிகமாக என்னை வழிநடத்தியவர். அவர் அடிக்கடி சொல்லியது. பிரார்த்தனையிலும் கூட நல்லதே பேச வேண்டும். நேர்மறை எண்ணங்கள் மிக மிக அவசியம். கடுஞ்சொற்கள் கூடா என்பதுதான். 

எபியில் நேற்று நான் இட்ட ஒரு கருத்து. என் இள வயதில் நான் என் ஆசிரியை மேரிலீலாவிடம் கேட்ட கேள்வி. “இறைவனிடம் பிரார்த்தித்தால் நடக்கும் என்று சொன்னீர்களே ஆனால் எனக்கு நடக்கவில்லையே” என்று. அதற்கு அவர் அளித்த பதில்.

ஒன்று நீ அவசரகதியில், பிரார்த்தித்த நொடியில் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். சில விஷயங்கள் நடக்கும் சில விஷயங்கள் நடக்காது. கடவுள், உனக்கு எப்போது அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் அதற்காக மனம் சோர்ந்து பிரார்த்தனையைக் கைவிடக் கூடாது.

நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை  உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு.  இறைவனை தூற்றக் கூடாது.

ஒரு பெரியவர் - நாங்கள் அவரை தாடி ஜோஸ்யர் என்போம். அவர் சொல்லுவார். இறைவனை தொழும் போது மனசு சிதறாம இருக்கணும். அம்மை அப்பனை நினைச்சு சந்தோஷப்பட்டு அழகை ரசிச்சு ஐக்கியமாகி தொழு மக்கா. அப்பத்தான் நம்ம தொழுதலுக்கு அர்த்தம் உண்டு. நல்லது நடக்கும் என்று. இதை அடிக்கடிச் சொல்லுவார்.

அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.

சிறு வயது என்பதால் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது இவை. அதாவது நம் பிரார்த்தனையில் மனம் சிதறாமல் அது ஒரு நிமிடமானாலும், இருக்க வேண்டும் என்பதும் மகிழ்ச்சியுடன் நன்றி உரைக்க வேண்டும் என்பதும். இதை ஒட்டியதுதான் அந்தப் பறவையைப் பற்றிய கதை. கதை வாட்சப்பில் வந்ததுதான். பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள் இருந்தாலும் அதை இங்கு தருகிறேன்.

Related image

பாலைவனத்தில் ஒரு பறவை மிகவும் நோய்வாய்ப்பட்டு, சிறகுகளை இழந்த நிலையில் சாப்பாடு, தண்ணீர், வாழுமிடம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் இரவு பகலாக தன் வாழ்வை நினைத்து தன்னைத் தானே சபித்துக் கொண்டிருந்தது. ஒரு நாள் வானில் ஒரு புறா பறந்து இப்பறவையைக் கடக்க நேரிடுகையில் இப்பறவை புறாவை நிறுத்தி கேட்டது.

“எங்கு செல்கிறாய்?”

“நான் சொர்க்கத்துக்குச் செல்கிறேன்”

“சொர்கத்துக்கா செல்கிறாய்? அப்படி என்றால், என்னுடைய துன்பங்கள் எப்போது முடிவுக்கு வரும் என்று கேட்டுச் சொல்கிறாயா, தயவாய்”

“கண்டிப்பாகக் கேட்டுச் சொல்கிறேன்.”

புறா சொர்கத்திற்குச் சென்றதும் சொர்கத்தின் வாசலில் இருந்த காவல் தேவதையிடம் அப்பறவையின் துன்பங்களை எடுத்துரைத்து அத்துன்பங்கள் எல்லாம் எப்போது தீர்வுக்கு வரும் என்று கேட்டது.

“அதன் வாழ்வில் அடுத்த 7 வருடங்கள்  துன்பங்கள்தான். அந்த 7 வருடங்கள் முடியும் வரை மகிழ்ச்சி என்பதே கிடையாது” என்றதும் புறாவுக்கு வருத்தம். (இதுதான் செவன் பாயின்ட் ஃபைவ்??!!!!)

“அப்பறவை இதைக் கேட்டால் மிகவும் மனம் உடைந்துவிடுவான். இதற்கு ஏதேனும் வழி சொல்ல  முடியுமா?”

“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)

புறா இதை அப்பறவையிடம் தெரிவித்தது.

ஏழு நாட்கள் கழித்து புறா அப்பறவை இருக்கும் இடத்தைக் கடந்து பறந்த போது அப்பாலைவனத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. சின்ன குளம் ஒன்று தோன்றியிருந்தது. பறவைக்கு இறக்கைகள் வளர்ந்திருந்தது. பறவை ஆடிப் பாடிக் களித்துக் கொண்டிருந்தது.

புறா மிகவும் வியந்து போனது. அடுத்த 7 வருடங்கள் இப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாது என்றல்லவா தேவதை சொன்னது! இது எப்படி இந்த 7 நாட்களில் சாத்தியமானது என்று தேவதையிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றது. தேவதையிடம் கேட்கவும் செய்தது.

“உண்மைதான்! அடுத்த 7 வருடங்களுக்கு அப்பறவைக்கு மகிழ்ச்சி என்பதே கிடையாதுதான். ஆனால், அப்பறவை ஒவ்வொரு கடினமான நிலையிலும் “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டே இருந்ததால் அதன் நிலைமை மாறத் தொடங்கியது.

அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது. எப்படியான கடுமையான சூழலிலும் அது திரும்ப திரும்ப “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொல்லிக் கொண்டே இருந்தது. அதனால், 7 வருடங்கள் என்பது ஏழே நாட்களாகி அதன் துன்பங்கள் ஒவ்வொன்றாகக் குறையத் தொடங்கின” என்றது.

இக்கதை அறிவுறுத்துவது ஒன்றுதான். நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.

இது சற்றுக் கடினமாகத் தோன்றினாலும் மனதில் பதிந்த ஒன்று. மேரிலீலா டீச்சர் சொன்னதும், அந்தப் பெரியவர் சொன்னதும் இதையேதானே என்றும் நினைவிற்கு வந்தது. எனக்கு பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே!

நன்றி ஸ்ரீராம் உங்கள் வார்த்தைகளைக் காவிக்கொண்டேன்!

படங்கள் : நன்றி கூகுள்

--------கீதா


77 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி நேரம் கிடைக்கும் போது...

      கீதா

      நீக்கு
    2. பறவைக்கதை அருமை.

      உண்மைதான் எல்லோரும் இறைவனிடம் கேட்கவே தயாராகின்றனர் நன்றி சொல்பவர் குறைவே.... சிலர் நன்றி செலுத்தும் வகையில் நேர்த்திக்கடன் செய்வர்.

      நெடுங்காலமாக இறைவனிடம் எனது பிரார்த்தனை ஒன்றேதான்

      "உலக மக்கள் அனைவரும் நலமாக வாழவேண்டும்"

      இதில் உள்ளவர்கள் எனது எதிரியும், எனது நண்பனும், பின்னே நானும்.

      நான் எப்பொழுதுமே தர்மம் செய்வதில் தயங்கியதே இல்லை. காரில் போகும்போது தர்மம் கேட்டால் நிச்சயம் கொடுக்கிறேன் இதற்காகவே காரில் சில்லறைகள் இருக்கும். அப்பொழுதெல்லாம் நான் மறவாது நினைப்பது இந்நிலையை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி, இவர் நிலையை எனக்கு கொடுக்காத இறைவனுக்கு நன்றி.

      எனக்கு துரோகம் செய்தவர்களை நான் திட்டுவதில்லை, மாறாக எனது மரணகாலம்வரை நான் அவர்களை விட்டு விலகிச் செல்கிறேன்.

      "நல்லதை நினை நன்மை நடக்கும், தொண்டு செய் மேலான நிலை" அடைவாய்.
      - சிவமுத்தர் ஸாது ஸ்வாமிகள்
      குடமுருட்டி

      நீக்கு
    3. கில்லர்ஜி நல்ல கருத்துகள், செயல்கள். உங்கள் மனதிற்கும் செயல்களுக்கும் பாராட்டுகள்! வாழ்த்துகள் ஜி.

      நல்லதை நினைப்போம்....நல்லதே நடக்கட்டும்...நடக்கும்...

      மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  2. இன்றைய பாடம் எனக்கு இதுதான் கீதா மா.
    மிக மிக நன்றி என்றும் வாழ்க வளமுடன். இனி+++++++++++++++++ மட்டும் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வல்லிம்மா உங்களுக்கும் பாடமா?!!!!!!!!!!!!!

      உங்கள் வார்த்தைகள் எல்லாமே நல்ல சொல்தானே...

      மிக்க நன்றி அம்மா...

      கீதா

      நீக்கு
  3. கீதா காலை வணக்கம் , வாழ்க வளமுடன்.
    தேவதை கதை அருமை.

    “இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)//
    கீதா, நன்றி. அருமையாக இருக்கு.
    இறைவனைக்கு எப்போதும் நன்றி சொல்லி கொண்டு இருப்போம்.

    இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார்
    பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
    மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
    அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார் //

    காரைக்கால் அம்மையார் போல் அவரை என்றும் மறவாத நிலை வேண்டும்.
    அவரிடம் எப்போதும் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க.
    அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்.
    இன்றைய பொழுதை இனிமையாக்கிய கீதாவிற்கு நன்றி.
    மீண்டும் வருகிறேன்.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா நன்றி நன்றி அருமையான பாடலை இங்கு எடுத்து சொல்லியிருக்கீங்க...

      கீதா

      நீக்கு
  4. சிறு வயதில் நல்லான் கதை பாடத்தில் வந்தது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.
    நல்லான் பாதையில் நட்ந்து சென்று கொண்டு இருக்கும் போது களைப்பு ஏற்பட்டு ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்து இளைப்பாறுவான். அப்படியே தூங்கி போய்விடுவான். அப்போது மரத்தின் ஆலங்காய் அவன் மேலே விழும் விழித்துக் கொள்வான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தை நன்றி இறைவா!, இறைவா மிக பெரியவன் ! என்பதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அக்கா...கேட்டிருக்கிறேன்...இந்த அருமையான கதையை இங்குள்ள குழந்தைகளுக்குச் சொன்னேன். அதை அடுத்த பதிவில் எழுதுவதாக இருந்தேன்...நீங்களே சொல்லிட்டீங்க இங்க..அடுத்து பறவையின் கதையைச் சொல்ல உள்ளேன் இங்குள்ள குழந்தைகளுக்கு....

      .மிக்க நன்றி கோமதிக்கா நல் வார்த்தைகளுக்கு!

      கீதா

      நீக்கு
  5. நாரதர் எப்போதும் தான் மட்டுமே நாராயணரை நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்று நினைப்பவர். அவர் கர்வத்தை போக்க இறைவன்
    நாரதரை எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகத்தை சுற்றி வர சொல்லுவாரே நாராயணர். கிண்ணத்தில் உள்ள எண்ணெய் சிந்தாமல் கொண்டு போக வேண்டும் என்ற நினைவில் எப்போதும் சொல்லும் நாராயணாமந்திரத்தை மறந்து விடுவார்.
    ஆனால் காலை ஒரு முறை இறைவனை வேண்டி தன் கடமையை செய்யும் ஏழை விவாசயி
    மீண்டும் படுக்க போகும் போது இறைவனை நினைத்து படுப்பார் அவரே உயர்ந்தவர் என்று தீர்ப்பு வழங்குவார் நராயணர். சம்சார கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டு இருக்கும் போது கரை சேர்க்க தோணியாக வருபவர் இறைவன் ஒருவரே!
    கதைகள் நம்மை நல்வழி படுத்தவே!

    நாளும் நன்றி சொல்லி வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே அக்கா இந்தக் கதையை இங்கு வலைப்பக்கத்தில் யாருடைய பதிவு என்று நினைவில்லை அங்கு இக்கதையை முழுவதும் சொல்லாவிட்டாலும் ஜஸ்ட் ஓரிரு வரிகள் மட்டும் சொன்ன நினைவு....

      இப்ப மீண்டும் நினைவு படுத்திட்டீங்க அக்கா...குழந்தைகளுக்குச் சொல்லும் லிஸ்டில் சேர்த்துக் கொண்டுவிட்டேன்...ஆனால் குழந்தைகளில் எல்லா மதக் குழந்தைகளும் இருப்பதால் இறைவன் என்று பொதுவாகச் சொல்லிச் செல்லலாம் என்று நினைக்கிறேன்...இல்லையா அக்கா...

      இதுவும் நான் மேரிலீலா டீச்சரிடம் கற்றுக் கொண்டது. அவர் கிறித்தவராக இருந்தாலும் எப்போதுமே இறைவன் என்று பொதுவாகத்தான் சொல்லுவார். எந்த ஒரு மத இன்ஃபுளுயென்ஸும் இருக்காது. கதை மாந்தர்களையும் அப்படியேதான் சொல்லுவார். ஏனென்றால் யங்க் ஸ்டூடன்ட்ஸ் மூவ்மென்டில் பெரும்பான்மையோர் இந்து மதத்தவர்...

      கீதா

      நீக்கு
  6. பல கடின நிலைகளிலும் கடக்க உதவியது இந்த மந்திரம். முயற்சி செய்து பார்க்கலாமே!///

    kaalaiyilaiye nalla oru positive vaana oru karuthodu aarampikkiren. mikka nandri madam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை வாங்க மகேஷ்...

      சூப்பர் மகேஷ்...தினமுமே இப்படி ஆரம்பிங்க....நீங்க பாசிட்டிவானவர் தானே மகேஷ்..

      மிக்க நன்றி மகேஷ் உங்க கருத்துக்கு....

      நீக்கு
  7. // நமக்கு என்ன இல்லை என்பதையும், துன்பங்களையும் நினைத்து இறைவனிடம் மன்றாடுவதை விட அவர் நமக்கு அளித்திருக்கும் நல்லதை நினைத்து, நம்மிடம் இருப்பவற்றை நினைத்து மகிழ்ந்து நன்றி உரைப்போம் எனும் ஒரு நல்ல நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையே.//

    உண்மை உண்மை கீதா.
    நேர்மறை எண்ணத்தை வளர்த்துக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா...வளர்த்துக் கொள்வோம்...
      மிக்க நன்றி அக்கா..
      கீதா

      நீக்கு
  8. குட்மார்னிங் கீதா.. எங்கள் பதிவின் தொடர்ச்சி நல்லபடியாய் ஆரம்பித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல படியாய் அடுத்து ஒரு பதிவும் கே வா போக்கு இதே கருத்தில் இரு கதைகளும் எழுதணுமே நான்....மனதில் உதித்துவிட்டது ஆனால் இன்னும் எழுத்தாக்கலை...இந்த கீதா வேலைகளில் கட கட என்றாலும் எழுத்தில் ரொம்பவே ஸ்லோ கோச்...

      நீக்கு
  9. உண்மையில் நான் கோவில் செல்லும்போது எனக்கு எந்தப் பிரார்த்தனையும் தோன்றுவது இல்லை.இறைவனைப்பார்த்து விட்டு வருவேன். வேண்டிக்கொள்ளவில்லையா, வேண்டிக்கொள்ளவில்லையா என்று பாஸ் கேட்கும்போது எல்லோரையும் காப்பாத்து... எல்லாம் நல்லபடி நடக்கவேண்டும் என்ற வரி மட்டும் மனதில் ஓடும். கேட்காமலேயே நமக்கு வழி வைத்திருப்பவன் இறைவன் என்றால் கேட்டுப் பயனில்லை. நமக்கு எது நல்லதென்று அவனுக்குத் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் ஹைஃபைவ் ஹைஃபைவ் ஹைஃபைவ்.......

      இதே இதே இதே தான்....ஸ்ரீராம், நானும்....இறைவன் முன் போயாச்சுனா எனக்கு ஒன்னுமே தோன்றாது அப்படியே பார்த்து ரசித்து நீங்கள் சொன்னதே எல்லாரும் மகிழ்வுடன் இருக்கணும் என்ற வரிகள் மட்டுமே...

      கீதா

      நீக்கு
    2. மற்றொன்று சொல்ல விட்டுப் போனது....பிறருக்காக பிரார்த்திப்பேன் அதுவும் எப்போனா அவங்களுக்கு ரொம்பவே டென்ஷனான விஷயம் என்றால் கண்டிப்பாகப் பிரார்த்திப்பேன். சமீபத்தில் நண்பர் ஒருவருக்கும், என் தங்கையின் மகளின் தோழியின் இரண்டாவது குழந்தை இன்னும் ஒரு வயது கூடப் பூர்த்தியாகலை...6 வது மாதத்தில் லூக்கெமியா வந்து ஹீமோ எல்லாம் கொடுக்கிறார்களாம்...ஏஎல் எல்...அம்பேரிக்காவில்...அக்குழந்தையின் முகம் கூடத் தெரியாது ஆனால் குழந்தை நன்றாக வரவேண்டும் என்று பிரார்த்த்க்கிறேன். அதனாலேயே என் தங்கை மகள் தன் குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடவில்லை...

      கீதா

      நீக்கு
  10. நமக்கும் கீழே உள்ளவர் கோடி அவர்களை நினைத்து நாம் பரவாயில்லை என்கிற எண்ணம் ஆறுதல் தரும். இதற்கு ஒரு குறள் உண்டு. சட்டென நினைவுக்கு வரவில்லை. டிடி சொல்லி விடுவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே ஸ்ரீராம் நான் அடிக்கடி நினைப்பதும் சொல்வதும்....நம்மை விடத் துன்பப்படுபவர் எத்தனியோ பேர் உள்ளனர்...நமக்கு ஒன்றுமே இல்லை இறைவா நன்றி சொல்லிக் கொள்வதுண்டு....அவர்களுக்கும் நல்லது நடக்கட்டும் என்றும் சொல்லிக் கொள்வதுண்டு...

      நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
  11. பொதுவாக 'எல்லாம் நன்மைக்கே' என்கிற எண்ணம் மனதில் இருந்தால் போதும். குறைகள் இருக்காது. "ஒன்றும் குறையில்லை மறைமூர்த்தி கண்ணா" என்று மனம் தழுதழுக்கப் பாடி விடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே அதே ஹைஃபைவ்...நான் தினமும் ஒரு முறையேனும் இந்தப் பாடலை பாடிவிடுவதுண்டு ஸ்ரீராம்....

      அருமையான பாடல்...வரிகளும்...

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  12. இதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    ஒவ்வொரு நாளும் வாழ்க நலம் என்று முதல் பின்னூட்டமிடும் துரை செல்வராஜூ ஸாரின் சொல்வாக்கு செல்வாக்கு மிகுந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் யெஸ் யெஸ் யெஸ்....சரியாகச் சொன்னீர்கள்...ஸ்ரீராம்...இங்கு இதை எடுத்துக் காட்டியதற்கும் நன்றி...

      நீக்கு
  13. பாருங்க அம்மாவை மறந்துட்டேன்...

    "எல்லோரும் இனிதாக வாழவேண்டும்" இந்த வரிகள் இல்லாமல் வல்லிம்மாவின் பதிவுகள் இருக்காது. அதுவும் வெல்லும் அன்பு வார்த்தை.

    அன்பு மனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நான் முந்தைய கருத்தில் சொல்ல வந்து இதைப் பார்த்ததும் இதுக்கு ரிசர்வ் செய்துட்டேன்...அம்மா, கோமதிக்கா எல்லாரும்....

      நான் அம்மாவைச் சொல்வதும் அதே...அவர் பதிவுகள் பத்திரிகையில் வர வேண்டும் பலரையும் பாசிட்டிவாகச் சென்றடையும் என்றே தோன்றியது ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
    2. வல்லிம்மா மட்டுமல்ல, கோமதி அக்கா கூட பதிவை முடிக்கும் பொழுதும், பின்னூட்டங்களின் இறுதியிலும் 'வாழ்க வளமுடன்' என்றுதான் முடிப்பார். படிக்கும் பொழுதே அமைதி தரும் வார்த்தைகள்.

      நீக்கு
  14. ஆழ்மனத்தின் அற்புத சக்திகள் என்றொரு புத்தகம் உள்ளது. படித்துப் பாருங்க. நீங்க சொன்னதை அப்படியே அறிவியல் பூர்வமாக எழுதி உள்ளார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜோதிஜி. நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகத்தைக் கண்டிப்பாக வாசிக்கிறேன்.

      மிக்க நன்றி ஜோதிஜி..

      நீக்கு
    2. மெய்ஞாமும் விஞ்ஞானம் சொல்லுகிறதுதான்...பொதுவாக மக்களுக்கு விஞ்ஞானம் மட்டும் பற்றி பேசும் போது புரியாதது மெய்ஞானம் கலந்து கொடுக்கும் போது விஞ்ஞானம் தெரியாவிட்டாலும் கூட மறைமுகமாக அதைப் பின்பற்றுகிறார்கள் என்றும் சொல்லலாம்...அதற்காகவே கூட மெய்ஞானம் உதவுதிறது என்றும் சொல்லலாம் தான்...என்று எனக்குத் தோன்றுவதுண்டு..ஜி

      கீதா

      நீக்கு
  15. கதை அருமை...

    சுருக்கமாக இதுவும் கடந்து போகும்...

    உங்களின் மந்திரச் சொல் என்ன...?

    இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2011/12/blog-post_23.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொருத்தம். ரொம்பப் பொருத்தம். முன்னரே இதை எல்லாம் எழுதி வைத்திருக்கிறீர்கள்.

      நீக்கு
    2. வாங்க டிடி

      ஆமாம் இதுவும் கடந்து போகும்

      உங்கள் பதிவை பார்க்கிறேன் டிடி...

      மிக்க நன்றி...

      நீக்கு
    3. டிடி செமையா இருந்துச்சு பதிவு....யெஸ் நீங்க சொல்லிருக்கறதே தான் ...

      ஸ்ரீராமின் கருத்தையும் டிட்டோ செய்கிறேன்

      மிக்க நன்றி டிடி

      நீக்கு
  16. ஆஹா.,.. மிகவும் சிறப்பாக சொல்லி இருக்கீங்க ஜி. நமக்கு நடப்பது எல்லாமே நல்லதற்காகவே என்ற எண்ணம் இருந்தால் மகிழ்ச்சி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்ஜி!

      ஆமாம் நடப்பது எல்லாம் நன்மைக்கே...என்ற எண்ணம் இருந்துவிட்டால் மகிழ்ச்சிக்குக் குறைவேது...

      மிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு

      நீக்கு
  17. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் மந்திரசொற்கள் படித்தேன்.
    நடப்பது எல்லாம் நன்மைக்கே!
    இதுவும் கடந்து போகும்
    மெளனம் நல்லது.

    இறைவனை நம்பும் போது அவன் கொடுப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே !
    சந்தோஷ்ம் கொடுக்கும் போது மகிழ்வதும், துன்பம் கொடுக்கும் போது அவரை திட்டுவதும் கூடாது தானே !
    நமக்கு என்ன கொடுக்க வேண்டுமோ எப்போது கொடுக்க வேண்டுமோ கொடுப்பார் கொடுப்பதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்ள வேண்டியது தான்.

    வேண்டத் தக்க தறிவோய் நீ வேண்டமுழுதுந் தருவோய் நீ
    வேண்டும் அயன்மாற் கரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்
    வேண்டி நீயா தருள் செய்தால் யானும் அதுவே வேண்டின் அல்லால்
    வேண்டும் பரிசொன் றுண்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே.

    - திருவாசகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா நீங்கள் கொடுத்திருக்கும் பாடல் அருமை அக்கா...

      மிக்க நன்றி

      நீக்கு
  18. பறவைக்கதை கேட்டிருக்கேன். நான் படிச்சதும் கிறித்துவப் பள்ளியே என்றாலும் அங்கேயும் பாகுபாடுகளெல்லாம் பார்த்தது இல்லை! பொதுவாகக் கடவுள் என்றே சொல்லுவார்கள். அவரவர் கடவுளிடம் நம்பிக்கை இருந்தால் போதும் என்கிறாப்போல் சொல்வார்கள். எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கணும்னு என் பெரியப்பா எப்போதும் சொல்வார். சிறு வயதில் படிச்ச ஒரு கதையும் நினைவில் வந்தது. மன்னன் ஒருவனின் அமைச்சர் எதற்கெடுத்தாலும் "இதுவும் நன்மைக்கே" என்று சொல்லுவார். ஒரு நாள் மன்னன் தன் கை விரலில் ஆழமான காயம் ஏற்படுத்திக் கொண்டு விட்டான். அப்போதும் மந்திரி "இதுவும் நன்ம்மைக்கே" என்றார். அவரை உடனே நாடு கடத்தி உத்தரவிட்டான் மன்னன். ஆனால் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் நரபலிக்கு ஆளாகாமல் தப்பித்தது அந்த வெட்டுக்காயத்தினாலும், மந்திரியின் உதவியினாலும் என்று வரும். சரியா நினைவில் இல்லை. ஆனால் எது நடந்தாலும் அது நன்மைக்கே என நினைக்க வேண்டும் என்பார்கள். ஆனாலும் இந்தக் குரங்கு புத்தி கொண்ட மனசு அப்படி எடுத்துக்காதே! குறை, குற்றம், புகார்னு சொல்லிக் கொண்டு திரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாக்கா நான் படித்த பள்ளியும் சரி, கல்லூரியும் சரி எந்தப் பாகுபாடும் கிடையாது. ஆமாம் கடவுள் என்றுதான் சொல்லுவார்கள்,

      நீங்கள் சொல்லியிருக்கும் கதை எனக்கும் கேட்ட நினைவு இருக்கு. இதே கதைதான் அக்கா.

      மனம் ஒரு குரங்கே...அது இஷ்டத்துக்கு ஆடுகிறதுதான் பிடித்து நிறுத்துவதுதானே கடினமா இருக்கு...எவ்வளவு வாசித்தாலும்...

      மிக்க நன்றி கீதாக்கா

      நீக்கு
  19. //மெளனம் நல்லது.// இருக்கலாம். ஆனால் தேவையான நேரங்களில் வாயையும் திறக்கலைனா அந்த மௌனமே பெரும் தண்டனையாக மாறி விடுகிறதே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் அக்க ஹைஃபைவ். பேச வேண்டிய நேரத்தில் யார் மனதும் புண்படாதபடி பேசிடவேண்டும். மௌனமா இருந்துட்டா சில சமயம் சரியாகிவிடுகிறது ஆனால் சில சமயம் தண்டனைதான் எனக்கும் அந்த அனுபவம் உண்டு..

      மிக்க நன்றி கீதா அக்கா

      நீக்கு
  20. உளவியல்ரீதியாக சற்றே அதிகமாக சிந்திக்க வைத்துவிட்ட பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  21. வார்த்தை என்னும்பதிவு எழுதி இருந்தேன் இதற்கு பின்னூட்டமாக கடவுளோடு ஒரு உரையாடல் என்னும்பதிவில் நான் எழுதி இருந்தது இது
    நான்:- மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

    கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
    என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்றுகேட்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார்...கருத்திற்கு

      நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகச் சரியே...

      மிக்க நன்றி சார்

      நீக்கு
  22. ////அவரது தலைப்பு - வெல்லும் வார்த்தையும் கொல்லும் வார்த்தையும் தாக்கம் ஏற்படுத்தியதால் உடனே சூட்டோடு சூடாக இதைப் போட்டுவிடலாம் என்று இப்பதிவு.///

    ஹா ஹா ஹா அதேதான் குட் ஜொப்:) விடாதீங்கோ கீதா:) இப்பூடித்தான்.. ஆரம்பிக்க வேணும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஹா ஹா நன்றியோ நன்றி

      போஸ்ட் போடுவதில் தான் சில சமயம் ஒரு சுணக்கம் வருது. மனதில் இருந்தாலும் அதை எழுத்தாக்க ஒரு சுணக்கம்...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  23. //நான் சொன்ன பிரார்த்தனை என்பது நன்றி உரைத்தல். அப்பிரார்த்தனை உனக்கு நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும். பாசிட்டிவாக எண்ண வைக்கும் வலிமை தரும். இறைவனுக்கு நன்றி உரைத்துக் கொண்டே இரு. நீ மன்றாடுவதை விட இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அது உன்னை மேலும் நேர்மறையாக மாற்றும் ஏனென்றால் ..மன்றாடுதல் என்பது உன் கண்ணீரைப் பெருக்கும். நீ நன்றி உரைப்பது சந்தோஷத்தோடு. இறைவனை தூற்றக் கூடாது.
    //

    இது உண்மைதான் கீதா, ஆனா நான் நிறைய நன்றியும் சொலுவேன்ன்.. நிறைய திட்டவும் செய்வனே ஹா ஹா ஹா.. உரிமை இருக்கும் இடத்தில மட்டும்தானே.. திட்டவோ சண்டை போடவோ முடியும்.. உரிமை இல்லை எனில் மெளனமாகப் போய் விடுவேனெல்லோ.. அந்த வகையில் கடவுளுக்கு திட்டும் உரிமை நமக்கு உண்டுதானே?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் சிறு வயதில் அப்படி எல்லாம் செய்ததுண்டு. திட்டியதுண்டு...எல்லாம் ஆனா அதுக்கு அப்புறம் அதை விட்டுவிட்டேன்....நன்றி உரைப்பது என்பது எல்லாவற்றிற்கும் உரைக்கும் வழக்கம் வந்துவிட்டது....

      ஆமாம் அதிரா உரிமை உள்ள இடத்தில் ஆமாம் இறைவனை நம்ம ஃப்ரென்ட் போல எடுத்துக் கொண்டுவிட்டால்...நான் நிறைய பேசுவேன்...மனதிற்குள்.ஹா ஹா ஹா ஹா

      நீக்கு
  24. ///அதே போல எனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் கோயிலில் இறைவன் முன் அழுவார். அதற்கு இதே பெரியவர் சொல்லுவார். இறைவன் முன்ன எதுக்கு கரையற. உன் கஷ்டம் எல்லாம் அவனுக்குத் தெரியும். நீ சொல்லித்தான் அவனுக்குத் தெரியனும்னு இல்லை. காலைல சாப்டியா, இன்னிக்கு பொழுதுல நல்லாருக்கியா. அப்ப அவனுக்கு நாலு வார்த்தை நல்லது சொல்லி துதிச்சுட்டுப் போ. உன்னால எனக்கு நல்லது நடக்குது நான் நல்லாருக்கேனு சொல்லிட்டுப் போ. அதை வுட்டுப் போட்டு கரைஞ்சு கரைஞ்சு கெட்டத வரவழைச்சுக்குவியா. நல்லத நம்ம மனுசங்க பார்க்கறதேல்லை. கெட்டதைத்தான் அதிகம் நினைச்சுகிடறோம். நல்லத பாரும்மா என்பார்.///

    இதுவும் உண்மைதான், ஆனால் சொல்வது சுலபம், அதை அனுபவிப்பவருக்கெல்லோ வேதனை புரியும்.... சிலருக்கு இறைவன் முன்னால் மட்டும்தான் அழத் தோணும், மக்கள் முன்னால் அழக்கூடாது எனும் வைராக்கியத்தோடு இருப்பார்கள்.. அது அழுது காட்டுவதல்ல, தானாக வருவது தானே.. ஆனா கொஞ்சம் ஞானி ஆகிட்டால்ல் இந்தப் புரிதல் கொஞ்சம் வந்திடுமோ என்னமோ:)) ஹா ஹா ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா கொஞ்சம் நாம் தெளிந்துவிட்டால் வந்துவிடும்....ஞானியான உங்களுக்கு அதைச் சொல்லவும் வேண்டுமோ!!!!!!!! ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  25. //“இறைவா எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி! மிக்க நன்றி! - இந்த மந்திரத்தை எப்போதும் தவறாது சொல்லச் சொல்” (ஏழரை சனிக்கான பரிகாரம்!!!!!)//

    ஆவ்வ்வ்வ் ஹா ஹா ஹா இது உண்மையோ கீதா? இக்கதை எனக்கு முன்பு தெரியாது.

    இப்போ மீக்கும் செவிண்ட் பொயிண்ட் ஃபைஃப் நடக்குதெல்லோ:)).. சொல்லிட வேண்டியதுதான்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல்லிப் பாருங்கோ அதிரா..கதையில் அந்த அடைப்புக் குறிக்குள் கொடுத்த்து நம்ம வேர்ட்ஸ் கதியயில் அப்படிக் கிடையாது...தேவதை 7 என்று சொன்னதால் நானாக அப்படி போட்டேன்...ஆனால் அது நல்லதே அதிரா...எனக்கு அது ரொம்பவே வொர்க் அவுட் ஆகுது.....ஆனால் 7.5 எப்போதும் கெட்டதைத் தருவார் என்றில்லையே அதிரா அப்படித்தான் சொல்லுகின்றார்கள். நான் அந்தப் பக்கம் போவதில்லை எனவே இந்த ஜோஸ்யம் பற்றி எனக்குத் தெரியது...நெல்லை, பானுக்கா போன்றோர் தான் சொல்லணும்...

      ஆனா நீங்க சொல்லுங்க....நல்லதுதானே

      மிக்க நன்றி அதிரா

      நீக்கு
  26. ///அப்பறவை அனல் தெறிக்கும் மணலில் வீழ்ந்த போது “இறைவா எல்லாவற்றிற்கும் உனக்கு நன்றி” என்று சொன்னது. தாகம் எடுத்த போது தண்ணீரில்லாத போது “இறைவா உனக்கு மிக்க நன்றி” என்று சொன்னது.//

    இது ஞான நிலை எனத்தான் சொல்ல முடியும், சாதாரண மக்களால் இது எப்படி முடியும்:)).. கெட்ட வார்த்தையால திட்டத்தான் மனம் வரும் ஹா ஹா ஹா:))

    உண்மையில் நல்ல அழகிய பதிவு கீதா. அழகிய அலசல்.. பல அலசல்களுக்கு காரணகர்த்தா ஸ்ரீராமோ?:) ஆனா அவர்தான் இன்னமும் ஞானி ஆகாமல்:) நுளம்பை அடிச்சுக் கொல்வதோடு விடாமல்.. குளோசப்பில படமெடுத்து தன் கோபத்தைத்தணிக்கிறாரே ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் இன்னொன்று உண்டு அதிரா....

      ஞான நிலை என்பதை விட....ஒருவர் நல்லது சொல்லும் போது அதைச் சிலர் அப்படியே யோசிக்காமல் ஏற்றுக் கொண்டு செய்து வருவர்...ஒரு சிலர் அதை மனதில் உள் வாங்கி நல்லதுதானே சொல்கிறார் என்று ஆராய்ந்து பின்பற்றுவர்...ஸோ எப்படி ஃபாலோ செய்தாலும் நல்லதுதானே...ஆனால் அதையும் மீறி ஆராய்ந்து இது வேலைக்காவாது என்று செல்வோரும் உளர்...நீங்கள் சொல்லுவது போல் ஞானம் வரணும்...நல்லது என்ற எண்ணம்...

      ஸ்ரீராம் பற்றிய கருத்து...ஹா ஹா ஹா ஹா
      அதிரா நம்மில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் ஞானி எனலாம்...முழு ஞானி என்று சொல்வதற்கில்லைதான்...எனவே ஸ்ரீராமும் ஞானிதான்...அவரிடம் உள்ள ஞானத்தை நாம் கற்றுக் கொள்வோம்..என்ன சொல்றீங்க...ஹா ஹா ஹா

      நீக்கு
  27. ஈ என இரத்தல் இழிந்தன்று என்று கூறினான் சங்கப்புலவன் கழைதின்யானையார். கடவுளிடமும் இரத்தலைத் தவிர்த்து நன்றி கூறுவதே நன்று. சிந்திக்க வைத்த அரும்பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி முனைவர் கோவிந்தராஜு ஐயா. தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  28. ஆஹா ! மிக அருமையாக எழுதியிருக்கீங்க ..எந்த சூழலிலும் தாங்க்யூ சொல்ல பழகிட்டா !! வாழ்வே சொர்க்கம் .
    பறவை கதை இங்கே தான் அறிந்துகொண்டேன் .ஆனாலும் உயிர் ஊசலாடும் நிலையிலும் தாங்க்யூ சொல்ல ஒரு மன திடம் வேண்டும் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் ஏஞ்சல் மனதிடம் வேண்டும்...எனக்குத் தெரிந்து என் உறவினர் ஒருவர்...சொல்லுவது...இறைவா நீ என்னை இந்த உலகில் நல்லவிதமாக வாழவைத்தாய் அதுக்கு ரொம்ப நன்றி...இப்ப இந்தக் கஷ்டமும் ஏதோ ஒரு பாடத்தைதான் தருகிறது...நன்றி இறைவா..என்னை அழைத்தால் அதற்கும் நன்றி...என்று சொல்ல்வுஆர். ஆனால் எல்லோருக்கும் உயிர் ஊசலாடும் நிலையில் இறைவனை நினைக்கும் பக்குவம் வரணுமே...இல்லையா..

      நன்றி சொல்ல்ம் போதேல்லாமும் எப்போதும் எந்த நிலையிலும் எனக்கு என் மேரிலீலா டீச்சர்தான் நினைவுக்கு வருவார்..ஏஞ்சல் .அருமையான டீச்சர் அவங்க..

      நீக்கு
  29. இன்னொன்று நாம் சொல்வதும் நினைப்பதும் நடந்தே விடும் என்பது மறுக்க முடியாத உண்மை ,,ஒரு பள்ளிக்கால நட்பு 16 வயதில் வீட்டை விட்டு ஓடிட்டா ..காரணம் அப்பெண்ணின் தாயார் ..ஒவ்வொரு நேரமும் 16 வயதில் ஓடிப்போன அவரது உறவுப்பெண்ணை பற்றி சொல்லி (காரணம் உறவுக்காரப்பெண்ணின் பேர்தான் இந்த பெண்ணுக்கும் ) அதோடு பெண்ணின் தாயார் சிறுவயதில் தவறான வழியில் குடும்பத்தை ஏற்படுத்தியவர் தனது தவறை மகளும் செய்யக்கூடாதுன்னு நினைச்சி செஞ்சாரோ என்னவோ ஒவ்வொரு நேரமும் டவுட்டிங் தாமஸ் போல் அந்த சிறுபெண்ணை பாடாய் படுத்தி வீட்டை விட்டு ஓடிஏ வைச்சிட்டார் .இது பின்காலத்தில் கேள்விப்பட்டது .
    பிள்ளைங்களிடம் பேசும்போது பாசிட்டிவ் ஆன விஷயங்களையே பேசணும் .அருமையான பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் யெஸ் ஏஞ்சல் இதற்கு அதாவது இந்த சொல்முகூர்த்தம், அது எப்படி நடக்கிறது என்பது பற்றி இரு கதைகள் மனதில் இருக்கு...எழுதனும்....அதுதான் எப்போனு தெரியலை..

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
    2. ஏஞ்சல் நேற்று எபி கோர்ட்டில் நீங்கள் வரணும்னு நீங்க வந்தாதான் தீர்ப்பு வழங்கப்படும்னு சொல்லி கேஸ் அட்ஜோர்ன்ட்னு சொல்லி ப்ரித்தானிய நீதிபதி ஞானியார் அவங்களை சைலன்ஸ் நு சொல்லி வைச்சு ரகளை...நீங்க வரலைனா கேஸ் அப்புறம் கண்டினியூ ஆகும்னு வேற...சொல்லி கொஞ்சம் இழுத்தடிச்சு...ஹா ஹா

      கீதா

      நீக்கு
  30. மனதில் பதியவைக்க ஏராளமான கருத்துகள். அருமை.மிக்க நன்றி. அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ காமட்சியம்மா..நல்லாருக்கீங்களா...

      மிக்க நன்றி காமாட்சிம்மா...கருத்திற்கு

      நீக்கு
  31. நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாமே சூப்பர். ஆனா குரங்கு மனசா பழக்க தோஷமா தெரியலை கவலைப் படறதுக்கே எப்பப் பாரு மேட்டர் தேடுதே என்ன செய்ய உங்க இந்த பதிவைப் பார்த்தாவது மனசு திருந்துதான்னு பாக்கணும்

    பதிலளிநீக்கு
  32. நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாமே சூப்பர். ஆனா குரங்கு மனசா பழக்க தோஷமா தெரியலை கவலைப் படறதுக்கே எப்பப் பாரு மேட்டர் தேடுதே என்ன செய்ய உங்க இந்த பதிவைப் பார்த்தாவது மனசு திருந்துதான்னு பாக்கணும்

    பதிலளிநீக்கு
  33. நவம்பர் ஆ ஃ பர் !ஒரு காமெண்ட் போட்டா இன்னொரு காமெண்ட் ஃ பிரீயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா அருணா வாங்க ஸாரி உங்க கருத்துக்கு இப்பத்தான் பதிலே கொடுக்கறேன்....மிக்க நன்றி கருத்துக்கு மேல சொன்ன கருத்துக்கும் சேர்த்துதான்

      கீதா

      நீக்கு
  34. மிக அருமை கீதா க்கா..


    தீபாவளி நேரத்தில் போட்டு இருக்கீங்க்க் அதனால் நான் தவற விட்டுட்டேன் ..



    ரொம்ப அருமையான நேர்மறை எண்ணங்கள் ..

    எல்லாம் நன்மைக்கே ..ஏன் எதற்கு என்று நமக்கு தெரியாது அவனுக்கு தெரியும் ...முழு நம்பிக்கையும் ,பக்தியும் எப்பவும் வேணும் நம்மை வழிநடத்த...


    ரொம்ப சிறப்பான பதிவு ..


    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு மிக்க நன்றிமமா....அதனால என்ன தாமதமா வந்தா...நானுமே இப்பல்லாம் எல்லா பதிவுகளுக்கும் போக முடியலை....மெதுவாத்தான் போறேன்...

      கீதா

      நீக்கு