செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 6 - பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ!!!!

இந்த அன்புத் திருநாள் மட்டுமின்றி எந்நாளும் எப்போதும் உங்கள் எல்லோருக்கும் அன்பார்ந்த மலர்க்கொத்து
பூப்பூவாய்ப் பூத்திருக்கும் ஆயிரம் பூ 
பூவிலே சிறந்த பூ என்ன பூ
அன்பு!!














                                    மலர்களே! மலர்களே ஏன் இந்த மௌனம்?! 
                                                    அன்பிற்கு மொழி உண்டோ?
                                                                           இல்லை!
                                                   அதனால் தான் இந்த மௌனம்

அன்பெனும் இறைவனிடம் படைக்கையிலும் கூட இயற்கையால் படைக்கப்பட்ட எங்களிடம் சாதி பார்க்கிறார்கள் மனிதர்கள்! ஆனால், ஆர்பாட்டமில்லாத அன்பு! சுயநலமற்ற அன்பு! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு! கட்டளைகள் இல்லாத அன்பு! உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் அன்பு! என்று அதனைச் சொல்லும் விதமாய் மலர்ந்திட்ட மலர்கள் நாங்கள்! அதுவே இயற்கை படைத்திருக்கும் பூக்களாகிய எங்களின் வாசம்! இயற்கை ஆட்சி செய்யும் இயற்கையால் படைக்கப்பட்ட இவ்வுலகின்  நேசம்! ஆதலால் அன்பு செய்வீர்! இயற்கையையும், இவ்வுலகம் முழுவதையும்!

அன்பெனும் பூவாசம் தொடரும்!

------கீதா


45 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி செல்வா சகோ!! எங்கள் வாழ்த்துகளும் தங்களுக்கு!!

      நீக்கு
  2. படங்களும், பதிவும், அன்புடன் சொல்லியுள்ள செய்திகளும் அழகோ அழகு.


    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் ரசனையான கருத்திற்கு!

      நீக்கு
  3. போகன் வில்லாவுக்கு மேலே (கடைசிப் படத்துக்கு முந்தையது) உள்ள பூவை, தாய்லாந்தில் லீலாவதி என்று கூறுவார்கள். படங்கள் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன். அந்தச் சின்ன பிங்க் பூக்களா இல்லை அதற்கும் மேலே ஒற்றைப் பூவாய் பெரிதாய் பிங்க் வயலெட் கலந்த ஒரு பூ இருக்கிறதே அதுவா??!!! பெயர் அழகாய் இருக்கே லீலாவதி!!!

      இன்றும் முதலில் பூவின் கீழ் அன்பு பற்றியது வரிகள் கமென்டாய் எழுதியிருந்தேன். அப்புறம் எடுத்துவிட்டேன்... வேறு ஒரு வருத்தமான செய்தி வந்தது அதையும் இதையும் இணைத்துப் போடலாமா என்று நினைத்து ஏனென்றால் பொருந்தி வரும் போன்ற நிகழ்வு....அதனால் நீக்கினேன். அப்புறம் ஒற்றையா இரட்டையா போட்டு அந்த வரிகள் சரியாக நினைவுகக்கு வராமல் இப்போதைய நிலையில் போட்டுவிட்டேன்.

      மிக்க நன்றி நெல்லைத் தமிழன் கருத்திற்கு

      நீக்கு
  4. அருமையான பூவாசம். ரசனைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவாசத்தை நுகர்ந்தமைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா!

      நீக்கு
  5. கண்ணைக் கொள்ளை கொள்ளும் அழகிய மலர்கள்... அந்த பெரிசாக இருக்கும் மரம்.. வேப்பம் பூப்போல இருக்கிறதே அது என்ன மரம்? இங்கு அப்படி ஒரு மரம் இருக்கு எல்டலிபிளவேர்ஸ் என்பார்கள்.. இதில் எழுதியுள்ளேன் அம்மரம் பற்றியும் , நேரம் கிடைத்தால் பாருங்கோ...
    http://gokisha.blogspot.com/2011/08/blog-post_5.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த மரம் வேப்பமரம் இல்லை அதிரா. உங்கள் பதிவையும் வாசித்தேன். அந்த மரமும் இல்லை இது. கேட்டிருக்க வேண்டும் ஆனால் கேட்க முடியவில்லை அது என்ன மரம் என்பதை...மிக்க நன்றி அதிரா தங்கள் கருத்திற்கு

      நீக்கு
  6. கடதாசி ரோசா எங்கள் ஊர் வீட்டிலும் இருந்துதே... டார்க் மரூண் கலரில்.

    காதலர் தின வாழ்த்துக்கள் கீதா...

    துளசி அண்ணனுக்கு அன்பான வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடதாசி ரோசா பொதுவாகச் சீக்கரம் வளரும் பூ. எல்லா இடங்களிலும் பூத்திடும்.ஆம் அது பல கலரில் வரும். இன்னும் இருக்கிறது அவை வரும் அடுத்த இது பற்றிய பதிவில்...வாழ்த்துகளை துளசியிடமும் சொல்லி விடுகிறேன் அதிரா. மிக்க நன்றி. எனக்குக் கூறிய வாழ்த்துகளுக்கும் நன்றி!!

      நீக்கு
    2. அச்சச்சோ என்னா இப்பூடிச் சொல்லிட்டீங்க... கடதாசி ரோசாவை உருவாக்கப் பட்டபாடு எங்க அம்மாவுக்கே தெரியும், ஊரில் வரவே வரமாட்டேன் என்றிட்டுது, ஆனா நன்கு வேரூன்றி வளர்ந்ததும் பின்பு பெரிசா நின்றது.

      நீக்கு
  7. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் . படங்கள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜிஎம்பி சார் கருத்திற்கு! ஆமாம் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!!

      நீக்கு
  8. பூப்பூவாய்ப் பூத்திருக்கும்
    ஆயிரம் பூக்களில் அழகிருக்கும்!
    பூவிலே சிறந்த பூ - அந்த
    பூ அன்பு - அந்த
    அன்பில் நம்மாளுங்க
    உறவுகள் வலுவடையுமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் தங்களின் அழகான கருத்திற்கு.ஆம் அன்பில் உறவுகள் மலர்ந்திடும்!

      நீக்கு
  9. பதில்கள்
    1. மிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. இரண்டு கண்களால்கூட இத்தனை நெருக்கத்தில் பூக்களை பார்த்திருக்க மாட்டேன் !மூன்றாவது கண் வழியே பார்ப்பது ரசிக்க வைக்கிறது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! பகவான்ஜி!!! புல்லரிக்குது ஜி!!! பூக்களைப் போன்ற அழகான கருத்திற்கு மிக்க நன்றி ஜி!

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாங்க கோயில் பிள்ளை ரொம்ப நாளாகிவிட்டது! மிக்க நன்றி பாராட்டிற்கு!

      நீக்கு
  12. வழக்கமாகப் புதிய பூக்களே மணம்பரப்பும் உங்கள் தளத்தில் இப்படிப் பழைய பூக்களைப் பதிவிடுவது சரியா? அக்டோபர் 2௦16 இல் எடுத்த படங்கள் என்று முத்திரை இருக்கிறதே! என்றாலும் பூக்களை வெறுக்கலாமா? போகட்டும், சசிகலா என்னும் பூவையரைப் பற்றி எழுதுங்கள் சீக்கிரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ்ஹஹ்ஹ் செல்லப்பா சார்!!! சசிகலா பூவையரைப் பற்றி எழுத ஆர்வம் இல்லை சார்!

      மிக்க நன்றி நகைச்சுவையான கருத்திற்கு

      நீக்கு
  13. .

    காதலர் தின பதிவான அன்பு!! மிக அட்டகாசம்

    பதிலளிநீக்கு
  14. எல்லாமே அம்பத்தூர் வீட்டில் ஒரு காலத்தில் பூத்துக் குலுங்கியவை! :) பழைய நினைவுகள் அலை மோதின.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா இவை அனைத்துமா! சூப்பர்! மிக்க மகிழ்ச்சி! கீதாக்கா உங்கள் பழைய நினைவுகள் மலர்ந்திட இந்தப் பதிவு காரணமாக இருந்தமைக்கு..

      நீக்கு
  15. பூவில் சிறந்து பூ எதுவென்று கணிக்க முடியாதபடி எல்லாமே அழகு !!
    பிங்க் செம்பருத்தி சூப்பர் ..அந்த மஞ்சள் வித் யெல்லோ சென்டர் காட்டுப்பூவா இல்லை வெண்டைக்காய் பூவா ?
    ஸ்ரீராம் கூட எங்கள் ப்லாகில் இந்த பூவை படமெடுத்து போட்டு பேர் கேட்டிருந்தார் :) in 2012

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுகாட்டுப்பூ தான்! வெண்டைக்காய் பூ அல்ல! நானும் முதல்ல வெண்டைக்காய் பூ நு தான் நினைச்சேன்... ஆனா ரொம்ப அழகா இருக்குதுல

      மிக்க நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  16. அந்த மஞ்சள் காட்டுப்பூ ஹைபிஸ்கஸ் குடும்பம் அதை ஹெர்பேரியம் கலெக்சனுக்கு எடுத்தோம் 12 ஆம் வகுப்பில்
    அந்த மலர்களை ப்ரெஸ் செய்து காயவைத்து பிரேம் போட்ட அழகா இருக்கும் ..நானும் செஞ்சேன் அழகா ஓபன் பிரேமில் கண்ணாடி இல்லாம ஒட்டி வச்சி அடுத்த நாள் பார்த்தா பூவை காணோம் :)அப்போ மைதா க்ளூ தானே கராப்பின் பூச்சி சாப்பிட்டுடிச்சி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஹெர்பேரியம் கலெக்ட் பண்ணி ஒட்டிய அனுபவம் உண்டு. எனக்கும்.நீங்கள் சொல்லியிருக்கும்படி ஒட்டி ப்ஃப்ரேம் போட்டும் செய்திருக்கேன். க்ரீட்டிங்க் கார்ட் அனுப்பியதும் உண்டு. இப்படிப் பல ..

      ஹஹஹ் ஆமாம் அப்போல்லாம் மைதா க்ளூஉதானே கரப்பான் பூச்சியா உங்களுக்கு எனக்கு எறும்பு கூட வந்து அரித்துவிட்டது..

      நன்றி ஏஞ்சல்

      நீக்கு
  17. அத்தனையும் அழகாக இருக்கின்றன. விதம் விதமாக, நிறம் நிறமாக கண்ணைக்கவர்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்! கருத்திற்கு!!

      நீக்கு
    2. ஸ்ரீராம் இன்னும் இருக்கின்றன! வரும் அடுத்த பதிவில்

      நீக்கு
  18. மிக்க நன்றி நண்டு@நொரண்டு! கருத்திற்கு

    பதிலளிநீக்கு
  19. அசத்தும் அழகு மலர்கள்... மலர்களால் மௌனமாக இருக்கமுடியுமா... வண்ணமும் வாசமும் பேசாத பேச்சுக்கள்தான் உண்டா? :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! ஆமாம்ல!! அழகான வரிகள்! வண்ணமும், வாசமும் பேசிடும்தான் இல்லையா !! ரசனை மிக்க வரிகள் கீத மதிவாணன் அக்கா....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  20. அதிரா கேட்ட பூ தேக்குமரபூ.
    அனைத்து மலர்களும் அழகு.
    அன்பு செய்து வாழ்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கோமதிக்கா அது என் மண்டையில் அப்போது உரைக்கவில்லை...இப்போதுதான் உரைக்கிறது. தேக்கு மரம் என்று. இத்தனைக்கும் தேக்குமரம் நன்றாகவே தெரியும்...எப்படி இப்படி அந்த சமயத்தில் நினைவுக்குச் சட்டென்று வராமல்....ம்ம்ம் ம

      மிக்க நன்றி கோமதிக்கா...தங்களின் கருத்திற்கு

      நீக்கு

  21. அன்பெனும் பூவாசம்...

    ஆஹா...

    வண்ண வண்ண அழகில்...

    தொடரட்டும்..

    பதிலளிநீக்கு