சனி, 4 ஏப்ரல், 2015

தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா

       தேக்குமரம் – தாவர அறிவியல் பெயர் – டெக்டோனா க்ராண்டிஸ் (Tectona grandis L.f. ) – வெர்பனெசிய (Verbanaceae)  குடும்பத்தைச் சார்ந்தது. உலகிலேயே, வெப்பமண்டலக் காடுகளில், இயற்கையாகவே வளரும், மகுடம் சூட்டும் பெருமைக்குரிய மரங்களின் இனவகையில், தேக்கு மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகின்றது.

      நம் நாட்டிலும், மையன்மார், தாய்லாந்து, லாவோஸ், போன்ற நாடுகளிலும் இயற்கையாகவே காணப்படுகின்றன. நம் நாட்டில் முக்கியமாகக் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மத்யப்ரதேசம், மஹாராஷ்ட்ரா, ஆந்திரப்ரதேசம் (ஆந்திராவிலா? தெலுங்கானாவிலா?) குஜராத், ராஜஸ்தான், மணிப்பூர், உத்தரப்ரதேசத்தின் சில பகுதிகளில் (இதுவும் தெரியவில்லை பிரிக்கப்பட்டுள்ளதால்) ஒரிசா போன்ற மாநிலங்களில் இயற்கையாகவும் அந்தமான் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் நட்டும் வளர்க்கப்படுகின்றது. 

தேக்கு மரத் தோட்ட வரலாற்றில், பல மைல்கல் அளவிலான விரிவாக்கங்கள், வளர்ச்சித்திட்டங்கள் கேரளத்தில்தான் எடுக்கப்பட்டது. 1840 களில், உலகிலேயே முதல் தேக்குமரத் தோட்டம்   கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில், நிலம்பூரில் தான் வளர்க்கப்பட்டது. இயற்கையாக வளரும் காடுகளில் அழியத் தொடங்கிய வேளையில், இப்படி உருவானத் தோட்டம்தான், நிரந்தரமாக, நிலையாகத் தேக்குமரங்கள் வளர்வதற்கு உதவியிருக்கின்றது.  நம் நாட்டில் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களிலும் தேவையை ஈடுகட்டுவதற்கும், வளர்ப்பதற்கும் வழி வகுத்திருக்கின்றது.


1995, மே மாதம், கேரள வன ஆராய்சிக் கல்வியகம், கேரள வனத்துறையுடன் இணைந்து தேக்குமரத்திற்கான அருங்காட்சியகம் ஒன்றை, நிலம்பூரில் வடிவமைத்தது. நிலம்பூரில் தான் 160 வருடங்களுக்கு முன்னர் தேக்குமரத் தோட்டத்திற்கான  வளர்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்தன. இந்த அருங்காட்சியகம் தான் உலகிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்று.  இந்த அருங்காட்சியகம் தேக்குமரத்தின் வரலாறு, பயிரிடும் முறை, அதைப் பாதுகாக்கும் முறை, அதன் உபயோகங்கள், சமுதாயத்தில் அதன் பொருளாதரத்தில் பங்கு போன்ற பல தகவல்களைத் தருகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நூலகமும் இருக்கின்றது.

சமீபத்தில் நான் நண்பர் துளசியின் வீட்டிற்குச் சென்றிருந்த போது (அவ்வப்போது சென்று வருவதுண்டு) இந்தத் தேக்குமர அருங்காட்சியகத்திற்குச் சென்றோம்.

வாங்க வாங்க எங்களைப் பார்க்க

முகப்பில், 55 வருட பழைமையான முதிர்ந்த தேக்குமரத்தின் வேர்கள் நம்மை வரவேற்கும் வகையில் மிக அழகாக வைக்கப்பட்டிருக்கின்றது. மிக  நுணுக்கமாகச் செதுக்கப்பட்டத் தேக்குமரக் கதவுகளின் வழியாக உள்ளே நுழையும் போது,  மிகப் பழைய, இயற்கையாக வளரக்கூடிய “கன்னிமாரா” எனும் தேக்குமரத்தின் ஓவியம் நம்மை வரவேற்கின்றது.  இந்த வகை, பரம்பிக்குளம் வன சரணாலயத்தின் கேரளத்துப் பகுதியில் உள்ள தேக்குமரத் தோட்டத்தைச் சேர்ந்தது

தரை தளம், முதல் தளம் என்று இரு தளங்களிலும் பல காட்சிப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

தேக்கில் செய்யப்பட்டப் பாரம்பரிய தானியம் சேமிக்க வைக்கும் பெட்டி வரவேற்பரையில் வைக்கப்பட்டிருப்பது எல்லோர் கண்ணையும் கவர்கின்றது. நான் எடுத்த புகைப்படம் ஷெரிக்கும் வந்நில்லா. அதனால், இங்கு தரவில்லை.

மலயட்டூர் - என் அடி பாகம் பாருங்க எம்புட்டுக் குண்டுல!

அப்படியே நடந்து செல்லும் போது, மலயட்டூர் வனப்பிரிவினில் வளரும், நிஜமான மிகப் பெரிய தேக்குமரத்தின் அடிபாகம் வைக்கப்பட்டிருக்கின்றது.

மற்றுமொரு, மிகப்பெரிய தேக்குமரமான “கொனோலிஸ் ப்ளாட்” ன்(Conolly’s Plot) ஓவியம் உள்ளது. 


கன்னிமாரா தேக்கின் படமும், உரு-கப்பல்

தேக்குமரத்தில் செய்யப்பட்டச் சிறிய வடிவிலான பாய்மரக் கப்பல் “உரு”(Uru)  "மாதிரி" ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. கன்னிமாரா தேக்குமரத்தின் ஓவியத்தின் புகைப்படம் இங்கு தந்துள்ளேன்.

116 வயதான 4 மரக்கட்டைகள்-ம் வயசாச்சுப்பா


நிலம்பூர் வனப் பிரிவில் உள்ள “Kanakuthu”  வன பீட்டில் இருந்து எடுக்கப்பட்ட, 116 வருட வயதான தேக்குமரக் கட்டைகள் 4, 1860 களில் தேக்குமர வளர்ப்பு முறைகள் பற்றி, சுவரில் வரையப்பட்ட சித்திரங்களின் பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றன.தகவல்கள் அறிந்து கொள்ள தொடுதிரை வைக்கப்பட்டுள்ளது.  அதில் தேக்குமர வரலாறு முதல் தேக்குமரத்தைப் பற்றியத் தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.

Teak poles of different sizes and qualities obtained during thinning of teak plantation
எம்புட்டு அழகா இருக்கோம்ல

தேக்குமரங்கள் முதலில் மிகவும் நெருக்கமாக, 2 மீட்டர் இடைவெளியில் வளர்க்கப்படுகின்றன.  பின்னர் வளர்ந்து வரும் சமயம், அவை நெருக்கமாக வளர நேரிடுவதால், இடையில் இடைவெளி விடுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட மரங்கள் அகற்றப்படும்.  இதற்குப் பெயர் “Thinning”இப்படி, தின்னிங்க் செய்யப்படுவதால், வெவ்வேறு அளவுகளிலும், வெவ்வேறு தரத்திலும் விளைகின்றது. கேரளத்தில், 50, 60 வருட சுழற்சி முறை பருவத்தில், 5,10,15,20,30,40, மற்றும் 50வது வருடங்களில், “தின்னிங்க்” செய்யப்படுகின்றது.  தேக்குமரத்தின் அடிப்பகுதியிலிருந்து 3 மீட்டருக்கு மேலாக, உள்ள அடிமரப் பட்டையின் சுற்றளவு, நீளம், தரம் இவற்றின் அடிப்படையில்  “போல்ஸ் (Poles)வகைப்படுத்தப்படுகின்றது. 


கோட்டயத்திலுள்ள, நகரம்பாறா வனப்பகுதியிலிருந்துக் கொண்டுவரப்பட்ட, 490 வருட வயதான தேக்குமரத்தின் பெரிய மரத்தண்டின் அடிப்பகுதி-அடிக்கட்டை பார்வையாளர்களைக் கவரும் வகையில் உள்ளது.

முதல் தளத்தில், தேக்குமரத்தின் விஞ்ஞான பூர்வமானத் தகவல்கள் தரும் வகையிலானப் படங்கள், பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

விதையிலிருந்து, பூக்கும் பருவம், மீண்டும் துளிர்க்கும் பருவம் வரையான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. விதைகளின் தரம், நன்றாக வளர்வதற்குத் தேவையானத் தகவல்கள், திசுக் கல்சர், முதலான தகவல்கள் அடங்கியப் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.    உலகின் பல பாகங்களிலிருந்தும் வெவ்வேறு வயதைக் காட்டும் தேக்குமர மாதிரிகளும்  வைக்கப்பட்டுள்ளன.மரத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளால் ஏற்படும் மாற்றங்களை, சில மாதிரிகளும், புகைப்படங்களும் வைத்துக் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.

300 வகைக்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், பிற பூச்சி வகையினங்கள் காட்சியகப்படுத்தப்படுள்ளன. தேக்குமரத்தினோடுத் தொடர்புள்ள தாவர வகைகள், விலங்குகள் போன்றவை, அதை அடுத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பருவத்திலும், அதாவது பூக்கும், காய்க்கும், இலைகள் உதிரும் பருவங்களில், காலங்களில், ஏற்படும் தேக்கு மரங்களின் உணர்வுகளை படங்களின் மூலம் காட்சிப்படுத்தி உள்ளனர்.  
வாங்க வந்து உக்காந்து ஊஞ்சல் ஆடுங்க 

தேக்கு மரத்தில் செய்யப்பட்ட பாரம்பரிய வீட்டுச் சாமான்கள், அறுவடைக்காக உபயோகிக்கும் கருவிகள், முதலானவை வைக்கப்பட்டுள்ளன.  இப்படிப்  தேக்கு மரத்தினைப் பற்றிய பல தகவல்களும், படங்களாகவும், பொருட்களாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இந்த வளாகத்தினுள், வடிவமைக்கப்பட்ட குளம், சிறிய ஓடை, செயற்கை அருவியிலிருந்து ஆரம்பித்து செல்லும் நடைபாதை, கண்ணைக் கவரும் தோட்டங்களின் வழியாகச் செல்கின்றது. 


அதன் வழி நடந்தால், கேரளாவில் காணப்படும் அரிய வகை மருத்துவ குணமுள்ள செடிகள், பல வகையான மலர்கள், மரங்கள், செடிகள், கொடிகள், கள்ளி சப்பாத்திச் செடிவகைகள், நீரில் வளரும் செடிகள், பெரணிச் செடிவகைகள், மிகவும் கண்ணைக்கவரும் வகையிலான ஆர்க்கிட்ஸ் வகைப் பூக்கள், செடிகள், வண்ணத்துப் பூச்சித் தோட்டம் என்று பார்த்துக் கொண்டே 800 மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய பூங்காவைச் சுற்றி வரலாம்.  இந்த இயற்கைப் பூங்காவில், 58 வகை பறவை இனங்கள், கேரளத்தைச் சேர்ந்தவையும், வெளியிலிருந்து வருவனவையும் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.  மட்டுமல்ல, 136 மர வகைகள் இங்கு உண்டு. பல அழிந்து வரும் மர இனங்கள் இங்கு காணப்படுகின்றன.

காலு வேதனிக்குனுண்டோ? டயர்டாயோ? சிறிய உணவகம் இருக்கின்றது. சாயாவோ? காபியோ? அங்கு கிடைக்கின்றது. 

மிக நல்ல ஒரு அனுபவம்! பல தகவல்கள் கிட்டி. நீங்களும் போய்க் காணாம். விலாசம் வேண்டே?! இந்தா இவிட உண்டு. திங்களாயிச்சா அவதியானு கேட்டோ.  ஓ!  சாரி! கேரள மண்ணில் காட்சியகத்தைச் சுத்தி வந்ததில் மலையாளம் தொற்றிக் கொண்டுவிட்டது.  அம்மொழியும் தெரியும் என்பதால்.

KERALA FOREST RESEARCH INSTITUTE
SUB CENTRE
CHANDAKUNNU, NILAMBUR
www,kfri.org
TIMING : 10.00 am to 5.00pm
( Monday Holiday )
கீதா


44 கருத்துகள்:

 1. கீதா,

  காலு வேதனிக்கில்லா, பல தகவல்கள் கிட்டிட்டுண்டு. சாயா(வுக்கு) விளிச்சிட்டுண்டு(சொல்லிடுங்கோ). பஷ பதிவு நன்னாயிட்டுண்டு & மனசிலாயிட்டுண்டு. எண்ட மலையாளம் சரியோ !

  கீழேயுள்ள பகுதியைப் படித்தபிறகுதான் 'அவதி' என்பது விடுமுறை என்பது தெரிய வ‌ந்தது. அதுவரை 'திங்கள் கிழமை போனால் கூட்டத்தினால் அவதிப்பட நேரும்' என்றே நினைத்தேன். ஹா ஹா ஹா ! முன்பு எனக்கு ஒரு மலையாளத் தோழி இருந்தார். அவர் பேசுவதை அப்படி ரசிப்பேன்.

  பல தக‌வல்கள், வித்தியாசமான பதிவு. கேரளப் பசுமை படங்களில் தெரிகிறது. நன்றி கீதா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலதகவல்கள் கிட்டியோ?!! சாயா பறைஞ்ச்சல்லோ...வந்நில்லே?!! மிக்க நன்றி பதிவு நன்னாயிட்டுண்டு என்று சொன்னதற்கு. நிங்கள்டே மலயாளம் நன்னாயிட்டுண்டு....சகோதரி! மிக்க நன்றி...

   நீக்கு
 2. வணக்கம்
  தேக்கு மரம் பற்றி மிக தெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அத்தோடு 55வருட பழமை வாய்ந்த வேர் அதிசயமாக உள்ளது...தேக்கு மரத்தினால் செய்யப்படும் பொருட்களையும் அறிந்தேன்பகிர்வுக்கு நன்றி த.ம1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. புதிய தகவல்கள். அரிய தகவல்கள், அழகிய புகைப்படங்களுடன். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. கிடைத்தற் அரிய செய்திகள்
  காணக் கிடைக்காத காட்சிகள்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கே உரிய பாணியில் மிக விரிவாக பதிவிட்டுள்ளீர்கள். தேக்கு மர அருங்காட்சியகம் இதுவரை கேள்விப்படாத அரிய தகவல்.

  கன்னிமாரா தேக்கு மரம் பற்றி நான் எழுதிய பதிவை தங்களுக்கு நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்.

  http://senthilmsp.blogspot.com/2015/02/blog-post_89.html

  அருமையான தகவல், அழகான படங்கள்.
  த ம 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! கருத்திற்கு! தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாகச் சென்று வாருங்கள். எங்கள் துளசியின் வீட்டிலிருந்து 1/2 மணி நேரம் தான் நண்பரே. சொல்லுங்கள் நான் அழைத்துச் செல்கின்றேன். அவரது வீட்டிற்குச் சென்றால் நிறைய கிடைக்கும் தங்களது ஹாலிடே நியூஸிற்கு....

   நீக்கு
 6. அருமையான படங்கள்... பல தகவல்களை அறிந்தேன்... நன்றி...

  சரி... ஒரு முறை நானும் வருகிறேன்... மறுபடியும் சென்று வருவோமா...?

  பதிலளிநீக்கு
 7. அருமையான புகைப்படங்கள்..... செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் செல்வேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. வாருங்கள் வெங்கட் ஜி துளசியின் வீட்டிற்குப் பக்கத்தில்தான் அழைத்துச் செல்வார்...

   நீக்கு
 8. அன்புள்ள சகோதரி,

  தேக்குமர அருங்காட்சியகம் – நிலம்பூர் – கேரளா 1995, மே மாதம், கேரள வன ஆராய்சிக் கல்வியகம், கேரள வனத்துறையுடன் இணைந்து தேக்குமரத்திற்கான அருங்காட்சியகம் இயங்கி வரும் செய்தியை அறியத் தந்ததற்கு மகிழ்ச்சி. படங்கள் மூலம் எழில் கொஞ்சும் இயற்கையை இரசிக்க வைத்தீர்கள்.

  நன்றி.
  த.ம. 6.

  பதிலளிநீக்கு
 9. அன்புச்சகோ,
  இதுவரை அறிந்திராத தகவல்களுடன் கூடிய சுவாரசியமான பதிவு.
  உங்களுக்கே உரிய நடையில்..!
  புகைப்படங்களுடன் பகிர்ந்தது பகிர்வை இன்னமும் துல்லியப்படுத்திற்று
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நல்லதொரு விடயங்களை அழாகாக புகைப்படங்களுடன் தொடுத்து விதம் அருமை.
  காணவேண்டிய இடமே.... ஒருநாள்.
  வனங்களை பாதுகாப்போம்
  மழை வளம் பெறுவோம்
  தமிழ் மணம் விழுந்து கொண்டே............. இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாருங்கள் பார்க்கலாம்....நிச்சயமாக....

   நீக்கு
 11. தேக்கினைப்பற்றி தேக்கு போன்றே உறுதியான பல்வேறு தகவல்கள் அளித்துள்ளீர்கள்.

  இயற்கையையும் அதன் கொடையான தேக்கினையும் அதன் பாரம்பரிய செய்திகளையும் படிக்கப்படிக்க பரவஸமாகவும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் உள்ளது.

  தேர்ந்தெடுத்துக்காட்டியுள்ள படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  இதுவரை அறியாத பல சுவையான செய்திகளை அறியத்தந்துள்ளீர்கள்.

  நேரில் சென்று கண்டுவந்தது போல மகிழ்ச்சியாக உள்ளது.

  பகிர்வுக்கு மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வைகோ சார் தங்களின் விரிவான கருத்திற்கு!

   நீக்கு
 12. தேக்கு பற்றின பல அரிய செய்திகள் நன்றி. தேக்கு என்றவுடன் நினைவுக்கு வருவது நாங்கள் ஒரு முறை சென்று வந்த செட்டி நாட்டு அரச்ர் மாளிகை. வீடே தேக்கால் ஆனது தூண்கள் கதவுகள் நிலை தாங்கிகள் மர இருக்கைகள்....... இன்னொன்று சில ஆண்டுகளுக்கு முன் தேக்கு மர தோட்டத்துக்கு முதலீடு செய்ய வேண்டிவந்த பல விளம்பரங்கள்... எத்தனை பேர் ஏமாந்தார்களோ......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு. ஆமாம் சார் அந்தக் காலத்து அரண்மனைகளில் தேக்கு மரத்தில்தான் அனைத்தும். எங்கள் ஊர் நாகர்கோவில் கிராமத்தில் கூட எங்கள் கிராமத்து வீட்டில் சிறிய வீடாக இருந்தாலும் தேக்கு மர்த்தில் தூணும் தடுப்புச் சுவர்களும் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன் இருக்கும். இப்போது அவை எல்லாம் மற்றப்பட்டு வேறுவிதமாகி விட்டது...
   ஏமாந்தவர்கள் நிறைய பேர் சார். ....

   நீக்கு
 13. நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது.. பயனுள்ள பதிவு.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 14. நேரில் சென்றால்கூட இந்த அளவு பார்க்கமுடியுமோ என்பது தெரியவில்லை. நுணுக்கமாக அனுபவித்து, எங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. திருநெல்வேலிக்கு அருகே உள்ள ஊரிலும் இது போன்ற தேக்கு மரத்தில் செய்யக்கூடிய ஊர் ஒன்று உள்ளது என்று நண்பர் சொல்லியுள்ளார். நீங்க சொல்லியுள்ள விசயங்கள் புதிது எனக்கு.

  பதிலளிநீக்கு
 16. தேக்கு ஒரு இயற்கை அற்புதம்தான் ,இரும்புகூட நாளானால் துருபிடித்து காணாமலே போய்விடும் :)

  பதிலளிநீக்கு
 17. மிக அரிய தகவல்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றிகள் அய்யா...

  பதிலளிநீக்கு
 18. பார்க்க வேண்டிய இடம் தான் ...
  நல்ல பதிவு ...
  படங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 19. பல தகவல்கள் கிட்டி கீதா ஞான் அவ்விடம் வந்து சுத்தணும்னு எனக்கி ஆசைதான் ஐயடா இது என்ன எனக்கும் தொத்திடுச்சா ம்..ம்..ம் எல்லாம் இந்த கீதாவால தான் ஆமா ஞான் மலையாளம் பறையும் அறியுமோ ம்..ம். சும்மா kidding ம்மா தேக்கு பற்றிய பதிவுக்கு நன்றி! அருமையான படங்களும் விபரங்களும் வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ இனியானா இனியாதான்! இனிமை அந்த சிரிப்பு.....!!!! ஆஹா நிங்களும் மளையாளத்தில் சம்சாரிக்குமோ..!! ஹஹஹ வாங்க சகொதரி துளசி வீட்டிற்கு நாம் எல்லோரும் போவோம். போனால் நிறைய இடங்கள் உல்ளன...அங்கு சுற்ற மிக்க நன்றி! தோழி!

   நீக்கு
 20. அழகிய புகைப்படங்கள், அருமையான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
 21. சிறப்பான தொகுப்பு ......அழகான படங்கள்...

  பதிலளிநீக்கு
 22. அருமையான படங்களுடன் தேக்கு பற்றிய பல பயனுள்ள தகவல்கள்.

  அவசர மனிதனின் அட்டூழியங்களால் அழிந்து வரும் பல இயற்கை செல்வங்களின் பட்டியலில் தேக்கும் உண்டு !

  பல வருடங்களுக்கு முன்னர் தேக்கு வளர்ப்பு என்ற ஒரு ( ஏமாற்று ) திட்டம் தோன்றியது ஞாபகம் வருகிறது.... இன்றைய ஈமுக்கோழி திட்டத்துக்கு முன்னோடி ?!

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 23. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/5.html

  பதிலளிநீக்கு
 24. அன்புடையீர்,

  தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

  http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

  அன்புடன்,
  எஸ்.பி.செந்தில்குமார்

  பதிலளிநீக்கு