இந்தக் காணொளி யூட்யூபிலிருந்து. இதுதான் அந்த ஹீரோவின் நிகழ்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஆவணப்படம். 40 நிமிடங்கள் பாருகங்கள் பொறுமையாக. வியந்து போவோம்
பிரிட்டிஷ்
ஏர்வேஸ் விமானம் 5390 (Callsign Speedbird 5390) இந்தப் பயணிகள்
விமானம் பிரிட்டிஷ் ஏர்வேஸால், இங்கிலாந்திலுள்ள பிர்மிங்காம் விமான
நிலயத்திற்கும், ஸ்பெயினிலுள்ள மலாகாவிற்கும் இடையில் பறக்கவிடப்பட்ட ஒன்று. 1990 ஆம் வருடம் ஜுன் 10 ஆம் தேதி இந்த விமானம்
வழக்கம் போல, 11,050 மணி நேரம் பறந்த அனுபவம் பெற்றிருந்த, 42 வயதான டிம் லாங்காஸ்டெரை
முதன்மை பைலட்டாகவும் (Tim Lancaster), 7,500 மணி நேரம் பறந்த அனுபவம்
பெற்றிருந்த, 39 வயதான அலாஸ்டெய்ர் அட்கிசனை (Alas Atchison)
துணை பைலட்டாகக் கொண்டு
பறக்கத் தயாராகி காலை 07.20 மணிக்கு (அந்த ஊர் நேரம்) பறக்கத் தொடங்கியது. 81
பயணிகள் பயணித்தனர். 4 பேர் கொண்ட கேபின் குழு, 2 பேர் ஃபளைட் க்ரூ. துணை பைலெட்டான
அட்கிசன் வழக்கமான டேக் ஆஃபைக் கவனித்துக் கொண்டு பின்னர் விமானம் ஏறுவதில்
நிலையான பிறகு அதன் கவனிப்பை பைலட்டான ;லாங்கேஸ்டரிடம் ஒப்படைத்தார். இருவரும்
சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
பைலட் தனது மடியோடு இணைக்கப்பட்ட பெல்டையும் தளர்த்திக் கொண்டார்.
7.33
மணிக்கு கேபின் குழுவினர் பயணிகளுக்கு காலை உணவை வழங்க ஆரம்தித்தனர். அப்போது
விமானம் ஆக்ஸ்ஃபோர்ட், டிட்காட் மேலாக 17,300 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென பலத்த பேரிடி ஓசையுடன் விமானத்தின் கட்டுமானச்சட்டம் (fuselage)
உறையும் நீராவித் துளிகளால்(condensation) நிரப்பப்பட்டது.
கேப்டன் இருக்கும் காக்பிட்டின் இடது புற முன் கண்ணாடி விமானச் சட்டத்திலிருந்து
இளகி பிரிக்கப்பட்டு, உள்ளே மோதிய காற்றின் அழுத்தத்தால், கேப்டன் அவரது
இருக்கையிலிருந்து பெயர்க்கப்பட்டு, தலை வெளியிலும், அவரது மூட்டு பாகம்
விமானத்தின் கட்டுப்பாடுத் தளத்தோடு பிணைக்கப்பட்டது. இதனால் அவரது உடலின் மேல்
பாகம் முழுவதும் விமானத்தின் வெளியிலும் இடுப்பின் கீழ் பாகம் மட்டும் உள்ளேயுமாக.
விமானத் தளத்தின் கதவு பறந்து ரேடியோ மற்றும் விமான வழி இயக்கலுக்கான
இணைப்புகளையும் தாக்கியது. அதனால் த்ராட்டில் கன்ட்ரோல் இழந்து, விமானம் கீழ் நோக்கி
வேகமாகப் பயணிக்கவும், பயணிகள் கேபினில் இருந்த காகிதங்கள் எல்லாம் காக்பிட்டை
நோக்கிப் பறக்கவும் செய்தது. விமானத்தளத்திலிருந்த நைஜெல் ஓக்டென் (Nigel
Ogden) எனும் விமானப் பணியாளர் கேப்டனின் பெல்டைப் பிடித்துக்
கொண்டார். சூசன் ப்ரைஸ் மற்றும் மற்றொரு
விமானப் பணியாளர் இருவரும் பயணிகளுக்குத் தெம்பூட்டி, அவர்களது பொருட்களை
எடுத்துக் கொடுத்து, அவசரகால நிலைமையைச் சமாளிக்கத் தயார்படுத்தினர். வெளியில் காற்று 345 மைல் வேகத்தில் விமானத்தை
நோக்கி அடித்ததால் இழுக்கப்பட்ட கேப்டன் லான்காஸ்டெர் அடிக்கப்பட்டு, உறைந்து
நினைவிழக்கத் தொடங்கினார்.
துணை
பைலட் அட்கிசன் அவசரகால விமான இறக்கத்தை மேற்கொண்டார். தற்காலிகமாக இயங்காமல் போன ஆட்டோ பைலட்டை
மீண்டும் இயக்கத் தொடங்கி அவசரகால இடர்பாட்டிற்கான ஒலியை ஒலிபரப்பினார். விமானத் தளத்தினுள் காறுமிக வேகமாக அடித்ததால்,
அவரால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையுடன் தொடர்பு கொள்ள
இயலவில்லை. அவர்கள் சொல்லுவது இவருக்குக்
கேட்கவில்லை. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸிற்கு இந்த அவசரகால இடர்பாடு தகவல்
கிடைக்காமல் செயல்பாடுகள் எல்லாமே தாமதமாகியது.
கேப்டனைப்
பிடித்துக் கொண்டிருந்த ஓட்கெனும் குளிர்ந்து மூச்சுவாங்கத் தொடங்கினார். அதனால்
மற்ற இரு பணியாட்கள் அவரை விடுவித்து அவர்கள் கேப்டனைப் பிடித்துக் கொண்டனர். அப்படிப்ப்
பிடித்துக் கொண்டிருந்தாலும் கேப்டன் இன்னும் வெளியே இழுக்கப்பட்டிருந்தார்.
உள்ளே இருந்தவர்களால் மற்றக் கண்ணாடி
வழியே அவரது உடலையும் முகத்தையும் பார்க்க முடிந்த்து. அவரது கண்கள் திறந்தே
இருந்தன இமைக்கவில்லை. அவர் இறந்தே போனார்
என்று முடிவு செய்துவிட்டனர். அட்கிசன்
அவர்களை கேப்டனைப் பிடித்துக் கொள்ளுமாறு ஆணையிட்டார், அவர் இறந்து விட்டார் என்று
யூகித்தாலும். ஏனென்றால் பிடியை நழுவ
விட்டால் அவரது உடல் இடப்புறம் உள்ள இஞ்சின் மேல் வந்து விழுந்து தீப் பற்றி
இன்னும் அதிகப் பிரச்சினைகளைக் கொடுக்கலாம்.
பயணிகளை மிகவும் பாதுகாப்பாக காப்பாற்றும் ஒரு மனப் பிரயாசத்தில் அட்கிசன்
இருந்தார்.
அட்கிசனுக்குத்
தெரிந்த விமான நிலையத்தில் விமானத்தை இறக்க விழைந்தார். இடையில் அவருக்குக்
கன்ட்ரோல் அறையின் தொடர்பு கிடைத்திட சௌதாம்டன் விமான நிலையத்தில் விமானத்தை
இறக்குமாறு அனுமதி கிடைத்திட விமானப் பணியாளர்கள் கேப்டனின் முட்டியை
விமானத்தளத்தின் கன்ட்ரோல் பேனலிலிருந்து விடுவித்தனர். ஆனால், பிடியை
விடவில்லை. 7.55 ற்கு விமானம்
தரையிறங்கியது. கேப்டன் பொதுமருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவருக்கு
சில எலும்பு முறிவுகளும், குளிர் உறைதலால் ஏற்பட்ட மன அழுத்தம் இவற்றிற்கு சிகிச்சை
அளிக்கப்பட்டு 5 மாத்த்திற்கும் குறைவான கால அவகாசத்தில் மீண்டும் விமானம் ஓட்ட்த்
தொடங்கினார். நைகெல் ஓட்கென் தோள்பட்டை
விலகலிலும், முகம் உறைந்து அதனால் கண்ணில் ஏற்பட்ட பாதிப்பும் சரியானது. பயணிகள் எந்தவித சேதமும் இல்லாமல் பாதுகாப்பாக
உயிர் தப்பினர். இந்த மாதிரியான உயிர் போகும் இக்கட்டான சூழலிலும், மனம் தளராமல்,
சமயோஜித அறிவால் பல உடனடித் தீர்வுகளை எடுத்தும், பணியாட்களுக்கு ஆணையிட்டும்
அனைவரின் உயிரையும் காப்பாற்றிய அட்கிசனுக்கு 1992ல் ஹீரோ என்று கொண்டாடப்பட்டு
போலாரிஸ் அவார்ட் கொடுக்கபட்டுக் கௌரவிக்கப்பட்டார். அதிலிருந்த பணியாளர்களும்
கௌரவிக்கப்பட்டனர்.
இந்த
விமான விபத்திற்குக் காரணம், விமானம் பழுது பார்க்கப்பட்டு, பராமரிப்பு
செய்யப்பட்ட போது கண்ணாடிகள் தகுந்த ஸ்க்ரூவினால் பொருத்தப்படாத்தே என்று கண்டு
பிடிக்கப்பட்டது.
இங்கு பகிர்ந்திருக்கும் காணொளி நேஷனல்
கியோக்ராஃபிக் தயாரிக்கும் மேடே ஏர்க்ராஷ் இன்வெஸ்டிகேஷன் என்று, நிஜமாக நடந்த
விபத்துகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தொடர்களின்
ஒன்றான ஆவணப் படம்.
என் மகன்
இன்று காலையில் (9 ஆம் தேதி) சென்னை வந்து சேர்ந்தான். அவன் ஃபிலடெல்ஃபியாவிLIRUNTHU 7 ஆம்
தேதி இரவு 10 மணிக்கு (அமெரிக்க நேரம்) லண்டனுக்கு விமானம் ஏறினான். அப்போது அங்கு நல்ல மழை பெய்து கொண்டிருந்ததாம். பறக்கத் தொடங்கி 2 மணி நேரத்தில் விமானம் மிகவும்
அதிகமாகத் தடதட என்று ஆடியதாம். அரை மணி
நேரம். அப்போது கேப்டன் பேசினார். “நான்
உங்கள் கேப்டன் அலாட்ஸ்டெய்ர் அட்கிசன் பேசுகின்றேன். நாம் ஒரு ஸ்டார்மின் நடுவில்
இருக்கின்றோம். அதனால், ரஃப் ரைட் இன்னும்
ஒரு 45 நிமிடம் இருக்கும். என் ஜன்னலில் மழை அடித்துக் கொண்டிருக்கின்றது. என்னால்
முடிந்த அளவு அதை அப்புறப்படுத்துகின்றேன். (பயணிகள் சிரித்தார்களாம் ) இன்னும்
சிறிது நேரத்தில் நிலைமை சரியாகிவிடும்.
கவலைப்பட வேண்டாம்” என்று சொன்னதைக் கேட்டதும்,
“அட!
அட்கிசன்! இவர் தானே நம்மை விமானத்தினுள் நுழையும் போது க்ரீட் செய்து வரவேற்றார்.
நம்ம ஹீரோ! அப்போ 1990 ஹீரோவையா நான் பார்த்தேன்? அவரா இந்த விமானத்தின் கேப்டன்! ஆஹா! அப்ப ஹீரோவே ஓட்டும் போது என்ன கவலை! நிம்மதியா
தூங்கலாம். இறங்கும் முன் அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேச வேண்டும்” என்று நினைத்தவாறே
உறங்கினானாம். பெருமையாக உணர்ந்ததாகச்
சொன்னான். ஆனால், அவர் இந்த நிகழ்விற்குப் பின் மீண்டும் அந்த நிகழ்வை நினைவு
கொள்ள விரும்பவில்லை என்று பேட்டி கூடக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னதால் அந்தக்
காணொளியில் அவர் இருக்க மாட்டார். அதுவும் நினைவுக்கு வர, இறங்கும் முன் அவரிடம்
பேச நினைத்ததைப் பேசாமல் கை கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, வாஹ்த்திவிட்டு
வந்துவிட்டேன் என்றான்.
“ஹீரோவே ஓட்டறாரு.அப்புறம் என்ன கவலை என்று
நிம்மதியாகத் தூங்கி வந்தேன் மா.”
மகன் அந்த ஹீரோவைப் பார்த்தேன் என்று சொல்லி இந்தச் சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து காணொளியைக் காட்டியதால் உங்களுடனும் பகிரலாமே என்ற எண்ணத்தில்தான் இந்தப் பதிவு!
கீதா
ஏர்க்ராஷ் இன்வெஸ்டிகேஷன் - எப்போது திகிலுடனே பார்ப்பேன்... எத்தனை எத்தனை நுட்பங்கள்... எத்தனை எத்தனை சிரமங்கள்...
பதிலளிநீக்குஆம்! டிடி! அருமையான ப்ரோக்ராம். ஆனால் நாங்கள் இணையத்தில் தான் பார்க்கின்றோம்.
நீக்குஅன்புள்ள சகோதரி,
பதிலளிநீக்கு‘டூப் போடாத ஹீரோ’ பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் - விமானி விபத்துக்குள்ளாகி அதிலிருந்து மீண்ட அனுபவத்தை மெய் சிலிர்க்க வைக்கும் பதிவுவாக வெளியிட்டது நன்றாகவும்... திகில் நிறைந்ததாகவும்... அந்த விமானம் தரையிரங்கி அனைவரும் காப்பாற்றப்பட்டது மகிழ்ச்சியையும் அளித்தது.
‘ இந்த விமான விபத்திற்குக் காரணம், விமானம் பழுது பார்க்கப்பட்டு, பராமரிப்பு செய்யப்பட்ட போது கண்ணாடிகள் தகுந்த ஸ்க்ரூவினால் பொருத்தப்படாத்தே என்று கண்டு பிடிக்கப்பட்டது.’ -சிறு துரும்புதானே என்று எண்ணிவிடக்கூடாது!
காணொளி காட்சி ஆவணப்படத்தை மகன் வாயிலாக காண வைத்ததற்கு நன்றி.
த.ம.2.
மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு.
நீக்குசூழலுக்கு ஏற்றாற்போல நடந்து மனத்துணிவுடன் எதையும் எதிர்கொள்பவனே கதாநாயகன் ஆகிறான். படிக்கப் படிக்க மிகவும் விறுவிறுப்பாக அடுதது என்ன நடக்கப்போகிறதோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்!
நீக்குநல்ல அனுபவப்பகிர்வு தங்களது மகனின் விமானப்பயணம் சிறப்புடன் அமைந்தமைக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாணொளி கண்டு மீண்டு(ம்)வருவேன்.
மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு! மீண்டும் வந்தீர்களா?! பார்க்கின்றேன்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
வீடியோவை பார்த்து இரசித்தேன் தங்களின் குறும் படத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.. விரிவான தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பலமுறை விமானப் பயணங்கள்.. ஆனாலும் ஒரே தடவை மட்டும் விமானம் தட தடத்துக் கீழே இறங்கியது - சிங்கப்பூர் செல்லும் போது!..
பதிலளிநீக்குதாங்கள் பதிவில் விவரித்த நிகழ்வு - படிக்கும் போதே படபடப்பை உண்டாக்கியது!..
தங்கள் மகனுக்கு நல்வாழ்த்துக்கள்!..
அந்த விமானியின் தைரியம் அசாத்தியமானது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஆகாயத்தில் விமானப் போராட்டத்தைப் பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது ,உங்கள் பையனுக்கு அந்த ஹீரோவைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அரிய பேறுதான்:)
பதிலளிநீக்குரூப் போடாத நாயகன் பாராட்டிற்கு உரியவர்
பதிலளிநீக்குஉரிய நேரத்தில், சரியான முடிவினை எடுக்கும்
ஆளுமை மிக்க நாயகனைப போற்றுவோம்
ந்ன்றி நசகோதரியாரே
தம +1
பதிலளிநீக்குதற்போது இது போன்ற ஆவணப்படங்களில் மேல் தான் எனக்கு ஈர்ப்பு. நன்றி.
பதிலளிநீக்குகாணொளி மிகுந்த பயத்தை உண்டாக்கியது உண்மையே....
பதிலளிநீக்குகாணொளி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.....
பதிலளிநீக்குஉங்கள் மகனின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி!
தைரியம் புருஷ லட்சணம் மட்டுமல்ல!
பதிலளிநீக்கு‘டூப் போடாத ஹீரோ’ பதிவினுடையதும்கூட!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
நண்பர்கள் கீதா மற்றும் துளசிதரன் இருவருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநண்பர்கள் துளசிதரன், கீதா ஆகியோருக்கு இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஒவ்வொருமுறை ஃப்ளைட் ஏறும்போது கொஞ்சம் டென்ஷனாதான் இருக்கும் ஹ்ம்ம் என்ன செய்வது. ? ஒவ்வொரு விமான விபத்தும் இந்தியாவுக்குள் போகும்போது பயமுறுத்துகிறது ஒரு மணிநேரம் இரண்டுமணி நேரம் பயணம் என்றாலும். என் பையன் ஜெர்மனியில் இருந்து வரும்போதும் இப்படித்தான் டென்ஷனோடு தூங்காமல் இருப்பேன்.
பதிலளிநீக்குகாணொளி என்னுடைய இணைப்பில் திறக்கவில்லை. இன்னொரு நாள் பார்க்கிறேன்.
திடுக்கிட வைக்கும் நிகழ்வைப் படித்த கையோடு கிட்டத்தட்ட அதில் பாதி அனுபவம் நமக்குமே வந்தால் எப்படி இருந்திருக்கும்? த்ரில்! அந்த ஹீரோவையே பார்க்கும் வாய்ப்பு வந்ததும் அதிருஷ்டம்.
பதிலளிநீக்குஅருமையான ஒரு நிகழ்ச்சியை நன்றாக ஒரு திகிலோடு பகிர்ந்து உள்ளீர்கள், நன்றி.
பதிலளிநீக்குகான்லொய்யை பார்க்கும் தைரியம் எனனக்கு கிடையாது . வருட கணக்கில் விமான பயணம் செய்து இருந்தாலும் மனதில் எப்போதும் ஒரு பயம் தான் . ஜன்னல் அருகே அமர மாட்டேன்.. உள்ளே நாடு சென்டரில் ஒரு இடத்தை பார்த்து கேட்டு வாங்கி அமர்ந்து விடுவேன்..