ஞாயிறு, 28 ஜூலை, 2013

மாதவன் மாமா

மாதவன் மாமா

ஒருவரது இறந்த செய்தியை நாம் கேட்கும்போது, நமது மனம் அவரைப் பற்றியும், அவருடன் நமக்கு எற்பட்ட அனுபவங்களையும் அசைபோட ஆரம்பித்து விடும்அப்படித்தான் சில நிமிடங்களுக்கு முன்னால் எனது அக்கா இந்துவிடமிருந்து மாதவன் மாமா இறந்த செய்தி வந்ததும்  அவருடைய நினைவுகள் என் மனதில்   வந்தது.  அவரது இறுதிச் சடங்கு பத்தனம்திட்டா என்னும் இடத்திற்கு அருகிலுள்ள கோன்னி என்னும் இடத்தில் நடந்ததுஎனது அக்கா அதில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த போது இச்செய்தியை என்னிடம் கூறினாள்இப்பொது மாதவன் மாமா உயிருடன் இல்லைஅவர் இன்னும் சில காலங்கள் ஒரு சிலர் மனதில் வாழ்வார்பின்னர், இந்த உலகில் பிறந்து, இறந்து மறக்கப்பட்ட எத்தனையோ மனிதர்களைப் போல இவரும் மறக்கப்படுவார்எனக்கு மாமாவை சென்ற முப்பத்தைந்து வருடங்களாகத் தெரியும்என்னால் ஒரு சில சம்பவங்களை, அதுவும் ஒரு பத்து வருட இடைவெளிகளில் நடந்தவற்றை மட்டும்தான் நினைவுகூற முடிந்ததுஇருப்பினும், என்னுடைய உறவினர்களை நான் சந்திக்கும்போது மாமாவைப் பற்றி பேசுவதும், அவரைக் குறித்துக் கேட்பதும் உண்டுஒரு சிலர் வாழ்க்கையை பல கோணங்களில் இருந்து பார்க்கும் போது நாம் புரிந்திருக்காத பல விஷயங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும், வாழ்வியல் தத்துவங்களையும் அறிய முடிகிறது. அந்த வகையில் மாமாவின் வாழ்க்கை சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால், வாழ்க்கை, விதி, இறப்பு, போன்றவற்றை மிகவும் ஆழத்தில் புரிந்துக் கொள்ள முடியும்.
எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது முதல் தடவையாக மாதவன் மாமாவைச் சந்தித்தேன்அது என் மனதில் மிக ஆழமாகப் பதிந்த ஒரு சம்பவம்அவர் என் அப்பாவைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தார்மற்றவர்கள் பயன்படுத்தும் மரியாதைக் குறைவான, இழிவான வார்த்தைகளை, ஒருவர் என் அப்பாவைப் பார்த்து உபயோகப்படுத்தியதைக் கேட்பதும், பார்ப்பதும் அதுவே முதல் தடவையாக இருந்ததுஎன் அம்மா, மாமாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். பக்கத்து வீடுகளில் உள்ள சிலர் வந்து தலையிட்டவுடன், சிறிது நேரம் கத்தி விட்டு மாமா சென்று விட்டார்.
மாமா தன் மனைவியையும், மகனையும் பத்தனம்திட்டாவிலுள்ள கோன்னியில் கைவிட்டுவிட்டு வேறு ஒரு செவிலியுடன் தமிழ்நாட்டிலுள்ள கம்பம் அருகில் அனுமந்தன்பட்டி என்னும் ஊரில் தன் வைத்தியசாலையில்  வாழ்ந்து வந்ததாக என் பெற்றோர் அருகில் இருந்தோரிடம் சொன்னபோது தெரிந்து கொண்டேன்
தமிழ்நாட்டில், மதுரை, தேனீ மாவட்டங்களில் இப்பொதும் கூட R.I.M.P. சான்றிதழ் வைத்திருப்பவர்களையும், ஹோமியோபதி மருத்துவர்களும் ஆங்கில ரீதியிலான மருத்துவத் தொழில் செய்வது இயல்பு.  மாதவன் மாமாவும் அதில் ஒருவர்எனது அப்பாவும், உறவினர்கள் பலரும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள் தான்.  மாமா அப்பாவைப் பார்த்துக் கத்திய சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு, ஒரு பெண்மணியும், அவளது பதினேழு வயது மகனும் எனது வீட்டிற்கு வந்திருந்தனர்அப்போதுதான் எனக்குத் தெரிந்தது அவர்கள் மாமாவின் மனைவியும், மகனும் என்றுஎனது அப்பா அவர்களுக்கு மாமாவின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவியிருந்திருக்கிறார். மாமா என் அப்பாவைப் பார்த்துக் கத்தியதற்கு அதுதான் காரணமாக இருந்திருக்கும்அந்த அத்தையும், மகனும் சிறிது நாட்கள் மாமாவுடன் தங்கி இருந்திருந்தனர், பிறகு கோன்னிக்குச் சென்றுவிட்டனர்அந்த அத்தையும் பத்தனம்திட்டாவில், ஒரு மருத்துவமனையில்செவிலியராக வேலை செய்துவந்தார்
அதன் பிறகு, ஒரு நாள், மலையாளி செவிலி ஒருவர் என் அப்பவைச் சந்திப்பதற்காக வந்திருந்தார்அந்தப் பெண்மணி மாதவன் மாமாவைப் பற்றி குறைகள் கூறினார்மாமா அப்பெண்மணியையும் கைவிட்டுவிட்டு, வேறு ஒரு செவிலியை கேரளாவிலிருந்துக் கூட்டிக் கொண்டு வந்திருந்தார் என்பதை அவர்கள் உரையாடலில் இருந்து அறிய முடிந்ததுஎனது அப்பா அப்பெண்மணிக்கு எதாவது ஒரு மருத்துவமனையில் வேலை வாங்கிக் கொடுத்திருந்திருக்கலாம்
மாமா கேரளாவிலிருந்து நிறைய இளம் செவிலியரைக் கூட்டிக் கொண்டு.வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.எனது அப்பா அவரது உடன் பிறப்புகளின் பிள்ளைகள் பலரையும் அவர்களது பள்ளிப் படிப்பு முடிந்ததும், அழைத்து வந்து அவரது வைத்திய சாலையில் பயிற்சி அளித்து அவர்களுக்கு திருநெல்வேலியில் சித்தமருத்துவக் கல்லூரியில் R.I.M.P. சான்றிதழ் வாங்க உதவி செய்து வந்தார்அவர்கள் மதுரை, தேனி மாவட்டங்களைச், சுற்றி உள்ள தொலைதூர கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர்
மாதவன் மாமா, வைத்தியசாலை வைத்திருந்த என் உறவினர்கள் சிலருக்கு செவிலியரை வரவழைத்துக் கொடுத்ததாக என் பெற்றோர் பேசிக் கொண்டிருந்த போது அறிந்தேன். அதன் பிறகு, அவர்களில் ஒருவர் மாமாவால் அளிக்கப்பட்ட ஒரு செவிலியை பெற்றோரின் விருப்பத்துக்கு எதிராக மணந்ததாகவும் கேள்விப்பட்டேன்இதனால் ஒரு சிலர்க்கு மாமா வேண்டாதவராகவும், ஒரு சிலர்க்கு ன்றியமையாதவராகவும் ஆனார்
மாதவன் மாமாவும் என் உறவினர்களும் கம்பம், தேனி, ஊர்களைச் சுற்றியுள்ள கிராமங்களில்
தங்கள் வைத்தியசாலைகளை தொடர்ந்து நடத்தி வந்தனர்அதன் பிறகு, நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு புலம் பெயர்ந்ததால் தொடர்பில் இடைவெளி வந்தது.
மாதவன் மாமாவின் மகன் விஜயன் கொச்சியில் நிறுவிய நிதி நிறுவனத்தின்  முழு உரிமையாளர் ஆனார்நான் எனது முதுநிலைப் படிப்பை முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம், இந்து அக்கா திரு. விஜயனைச் சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்அவரும் தனது நிறுவனத்தில் என்னை ஸ்டொர்கீப்பராக நியமித்தார்அப்போதெல்லாம் மாதவன் மாமாவை எர்ணாகுளத்தில் பார்க்கமுடியா விட்டாலும், அவர் அனுமந்தன்பட்டியில், ஒரு செவிலியுடன் தனது வைத்தியசாலையை தொடர்ந்து நடத்தி வந்தார். 1986 ஆம் வருட மத்தியில், திரு.விஜயன் எனக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்து அவரது அப்பா மாதவன் மாமாவைச் சந்தித்து, அதிகாரப் பத்திரத்தில் (Power of Attorney) அவருடைய கையொப்பம் வாங்கி வரச் சொன்னார்மாமாவும் திரு. விஜயனின் பல நிறுவனங்களில் பங்குதாரர் என்பது அப்போதுதான் தெரிந்தது
மாமாவைச் சந்திக்கும்போது என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்று என்னால் அனுமானிக்க முடியவில்லைஎன்னுடைய நினைவில் பல வருடங்களூக்கு முன்னால் அவர் என் அப்பாவிடம் கத்திய சம்பவம்தான் நிழலாடியது.
ருப்பினும், நான் அனுமந்தன்பட்டி சென்று அவருடைய வைத்தியசாலையை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.  ‘அமுதா வைத்தியசாலை’, மருத்துவர், மாதவன், R.I.M.P.  என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தேன்கதவு மூடியுருந்ததுஅதனால், அழைப்பு மணியை அழுத்தினேன்கதவு திறந்ததுஒரு முப்பதுவயதொத்தப் பெண்மணி வெளியே வந்தார்இந்தப் பெண்ணும், மாமாவும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படம் அங்கு உள்ளே இருந்தது. அதனால் அது அமுதாவாகத்தான் இருக்க வேண்டும் என்று ஊகித்தேன்
நான் அந்தப் பெண்ணிடம் என்னை எர்ணாகுளத்திலிருந்து திரு. விஜயன் அனுப்பியதாகக் கூறிக் கொண்டிருந்தபொழுது, மாமா வெளியில் வந்தார்அறுபதுகளில்  இருந்த மாதவன் மாமா யாரையும் அதிசயக்க வைக்கும்  ஆரோக்கியத்துடன் இருந்தார்நான் அவரிடம் வந்த விஷயத்தைக் கூறினேன்அவர் என்னிடம் கோபப்படுவார் என்று நினைத்தேன்ஆனால் அவர் மிகவும் மென்மையாக நடந்து கொண்டார்தான் திரு. விஜயனின் நிறுவனத்தில் பணம் எதுவும் முதலீடு செய்யவில்லை என்றும், அந்த நிறுவங்கள் எல்லாம் திரு விஜயனுடையதுதான் என்றும் அதனால், தான் அந்த அதிகாரப் பத்திரத்தில் (Power of Attorney) கையொப்பம் இடுவதற்குத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்.
  அது எனக்கு ஒரு இனிய ஆச்சரியாமாக இருந்ததுபிறகு, நாங்கள் என் குடும்பத்தைப் பற்றிப் பேசத்தொடங்கினோம்எனது பெற்றோரைப் ற்றி மிகவும் அன்பாக விசாரித்தார்அமுதா அத்தை தேநீர் கொண்டுவந்து தந்தார்மாமா திரைப்படங்களைப் பற்றி பேசுவதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்அந்தக் கால கட்டத்தில் தொலைகாட்சிப் பெட்டிகள் பெருநகரங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது
இரவு உணவு சாப்பிட்டதும் நாங்கள் இருவரும் அருகிலுள்ள திரைப்பட கொட்டகைக்குச் சென்று பாரதிராஜாவின் முதல்மரியாதை என்னும் தமிழ்த் திரைப்படம் பார்த்தோம்
மறுநாள், மாமா அனைத்து ஆவணங்களிலும் கையொப்பம் இட்டுக் கொடுத்ததும் நான் அங்கிருந்துப் புறப்பட்டு எர்ணாகுளம் சென்று எல்லா ஆவணங்களையும் அவர் மகன் திரு. விஜயனிடம் சேர்ப்பித்தேன்.
அதன் பிறகு நிறைய எதிர்பாராத சம்பவங்கள் நடந்தனதிரு. விஜயனின் நிறுவனங்கள் சரிந்தனஅவர் பணத்தைக் கையாடல் செய்த்தாகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்அவர் ஒரு வீடையும், ஒரு சிறிய ரப்பர் தோட்டத்தையும் தவிர மற்ற எல்லா சொத்தையும் விற்கவேண்டியதானது. அதன் பின் அவர் கோட்டயத்திலுள்ள ரப்பர் தோட்டத்திற்குச் சென்றுவிட்டார்எனக்கும் ஒரு வங்கியில் வேலை கிடைத்ததால் நானும் எர்ணாகுளத்தை விட்டு வந்துவிட்டேன்வருடங்கள் உருண்டோடினஇரண்டு மாதங்களுக்கு முன், நான் எர்ணாகுளம் சென்றிருந்த போது, இந்து அக்கா மாதவன் மாமாவைப் பற்றிக் கூறினாள்அதிலிருந்து நான் தெரிந்து கொண்டதாவது, நான் செல்வதற்குச் சில நாட்கள் முன்பு, மாதவன் மாமா மிக நலிந்த நிலையில் அக்காவின் வீட்டிற்கு வந்திருந்திருக்கிறார்
அனுமந்தன்பட்டியிலிருந்து திரு. குமரேசன் என்பவர் மாதவன் மாமாவின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அவருடன் துணைக்காக வந்திருந்திருந்தாராம்மாமாவை, அவருடன் இருந்த அமுதா என்ற அந்தப் பெண்மணி, வைத்தியசாலையிலிருந்து வெளியே துரத்தியிருந்திருக்கலாம். மாமா வீட்டின் அடுத்திருந்த திரு. குமரேசன்   நல்ல மனம் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்அதனால் தான், அவர் மாமாவை பாதுகாப்பான கைகளில் ஒப்படைப்பதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்திருந்திருக்கிறார். சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் மாமாவை அவர் குடும்பத்தில் ஒப்படைக்க வழிப்பயணச் செலவுகளை திரு. குமரேசனிடம் கொடுத்திருந்திருக்க வேண்டும்மாமா அவர் சகோதரி மகள் இந்து அக்கா சிறிது ஏழ்மை நிலையில் இருந்தாலும், தன் மகனுடன் இருப்பதை விட அக்காவுடன் இருப்பதையே விரும்பி இருந்திருக்கிறார். இருப்பினும், அக்கா, அவரது மகன் மாமாவை இந்தக் கடைசி காலத்தில் அதுவும் உடல்நிலை சரியில்லாத இந்த நிலையில் புறக்கணிக்கமாட்டார் என்று சமாதானப்படுத்தியுள்ளார்அதுவுமல்லாமல் மாமா வேறு யாருடனாவது தங்கினாலும் அவர் மகனுக்குக் கெட்டப் பெயர் வந்துவிடும் என்றும் சொல்லியிருந்திருக்கிறார்அதனால் மாமா வேறு வழியின்றித் தயக்கத்துடன், திரு. குமரேசன் துணையுடன் தன் மகன் வீட்டிற்குச் சென்றிருந்திருக்கிறார்
ஆனால், மிக வருத்தமான விஷயம், அவரது மகன் அவரைப் புறக்கணித்து விட்டிருந்திருக்கிறார்தன் அப்பாவை நிராகரித்ததற்கு திரு. விஜயனுக்கு வலிமையான காரணங்கள் இருந்திருக்கலாம். தந்தை, தன் மகனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் பலவற்றைச் செய்யாமல் போயிருந்திருக்கலாம்  ஆனாலும் திரு.விஜயன் செய்தது நியாயமில்லை.  அவர் செய்தது மிகவும் வேதனைக்குறியது.  உடலாலும், மனதாலும் தளர்ந்து போயிருந்த மாமா, தான் அவ்வயதில் செய்யக்கூடாத பலவற்றையும் செய்தது போல் தன் மகனும் இப்போது தன்னிடம் செய்வதை நினைத்துத் தளர்ந்து போயிருந்திருக்கலாம்.  குற்ற உணர்வு அவரை மிகவும் மோசமாகத் தாக்கி இருந்திருக்கலாம். வேறு வழியின்றி அவர் திரு. குமரேசனிடம், தன்னைத் தன் பிறந்த வீட்டிற்கே கொண்டுச் சென்று விட வேண்டியிருந்திருக்கலாம்அங்கும் அவர் பல வீடுகள் ஏறி இறங்கி இருந்திருக்கலாம்
அவர்களில், மனிதாபிமானமும், நல்ல உள்ளமும் படைத்த அவரது மூத்த சகோதரியின் மகன், மாமாவின் மிக மோசமான உடல் நிலையை மனதில் கொண்டு மாமாவை அங்குத் தங்க அனுமதி அளித்திருந்திருக்கிறார். மாதவன் மாமாவை பாதுகாப்பான கரங்களில் ஒப்படைத்ததும் திரு. குமரேசன் அவர்களுக்கு உண்டாகி இருந்திருக்கக் கூடிய  மனநிறைவையும், மகிழ்ச்சியையும் என்னால் மிக எளிதாக ஊகிக்க முடிந்தது
எப்படியோ, அதன் பிறகு ஒரிரு வாரங்களே உயிர் வாழ்ந்த மாதவன் மாமாவின் மனதில் தோன்றிய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்? தான் செய்த தவறுகளை நினைத்து வருந்தி இருக்கலாம்இறுதிக் காலத்தில் தனக்கு ஏற்பட்ட துயரத்தை எண்ணி நொந்திருக்கலாம்அவர்க்கு ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் கூட சொல்ல முடியாமல் போன நான், எல்லாம் வல்ல இறைவனிடம் அவரது ஆன்மாவிற்கு நித்ய சாந்தியும், சமாதானமும் நல்க வேண்டத்தான் முடிந்தது. 
இதிலிருந்து நான் தெரிந்து கொண்டது, நாம் சிறு வயதில் பின் விளைவுகளை யோசிக்காமல், அறிவில்லாமல், நமது சொந்த விருப்பு, வெறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பிறரது மனதை பாதிக்கும் அளவில் செய்யும் தவறுகள், நாம் முதிய நிலை அடையும் போது அது நமக்கே திரும்பும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லைஆதலால், நாம் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் மதித்து எல்லோரையும் நேசிக்கக் கற்றுக் கொண்டால் இவ்வுலகமே நம்மை நேசிக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக