புதன், 12 ஆகஸ்ட், 2015

தலைநகரில் நாலடியாரும், ஆறடியாரும் - 3

தில்லி ரயில் நிலையத்தில் தொட்டியில் தண்ணீர் தேங்கி தண்ணீர் பாட்டில்கள் மிதந்தன. 

தில்லிப் பயணத்தின் நிறைவுப் பகுதி. எனது முதல் பதிவில் எங்களுடன் பயணித்த உதவிப் பேராசிரியர் திரு தவசிலிங்கமும் அவரது மாணவர் குழு பற்றியும் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா அவர்களைப் பற்றி இதோ.

திரு தவசிலிங்கம், மதுரை சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். இளைஞர். அவருடன் அவரது மாணவர்கள் 25 பேர் கொண்ட குழு தில்லியில் நடைபெற்ற பைக் ராலி போட்டியில் கலந்து கொள்ள பயணித்தார்கள்.  நிகழ்வின் பெயர் க்வாட் டார்க். மேலும் தெரிந்து கொள்ள இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்.  தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம்.  இங்கே நான் சுருக்கமாக?! தருகின்றேன்.

படமும் தகவலும் http://quadtorc.in தளத்திலிருந்து
"Quad-TORC" is an off-road design challenge for undergraduate and diploma students of engineering. Quad is a four-wheelers bike, which was initially developed as a farm-to-town vehicle in isolated and mountainous areas. This competition is to design and fabricate a QUAD BIKE under some rules and regulations specified in rule book. This complete work will be done by the students without direct/indirect involvement of the professionals. This competition is a direct entry event i.e., there will be no selection round. Teams are allowed to start manufacturing from the day they register their team. The registered teams will be allowed to manufacture the vehicle while various reports will be asked in between. All the teams will be awarded the points on the basis of their performance in the reports and in the FINAL ROUND.

"Indian Society of New Era Engineers என்பது, இளம்கலை பொறியியல் பட்டதாரிகளுக்கு அவர்களது திறமையை ஊக்குவிக்கும் வகையிலும், திறம்பட செப்பனிடவும், வேலை வாய்ப்புகள் பெற்றிடவும் உதவும் நிறுவனம்.  இவர்கள் கோடைகாலத்தில் பயிற்சிப்பட்டறையும் நடத்துகின்றார்கள்.  இந்த பைக் ரேலி போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள் குழுவாகத்தான் பங்கு பெறுகின்றார்கள்.  பைக் என்றால் இரண்டு சக்கரம் அல்ல.  நான்கு சக்கரங்களுடன் கூடிய பைக் போன்று மாணவர்களே வடிவமைத்து, அதைப் போட்டியில் ஓட்ட வேண்டும்.

பாகங்கள் வாங்குவது, வடிவம் அமைப்பது, சோதனை செய்வது என்று 4 நாட்கள் போட்டி நடக்குமாம். இந்தப் பாகங்கள் மிகவும் எடை உள்ளதாக இருக்குமாம். அதை எல்லாம் வாங்கி, சுமந்து கொண்டு, வடிவமைத்து என்று ஒரு குழு சார்ந்த போட்டி என்பதால் 25 பேர் கொண்ட அணி. தொழில் முறைக் கல்வியாகவும் இருப்பதால், 2 ஆம் வருட மாணவர்களும் இந்த 25 பேரில் அடக்கம். பொருட்களைத் தூக்கி வருவதில் உதவி புரிவதோடு, இதைப் பற்றிய முன் அனுபவமும் கிடைக்கும் என்பதாலும்.

இப்படி வடிவமைப்பதில் வெற்றி பெறுபவர்களின் வடிவங்கள் ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் உபயோகப்படுத்தப்படுமாம். வேலை வாய்ப்பிற்கும் வழி வகுக்குமாம். அதே போன்று திறமையான அணித்தலைவருக்கும் பரிசு உண்டு. இப்படி பைக்கை மாற்றியமைக்க 5 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.  இதற்கான செலவுகளைத்தான் மேலே சொன்ன இந்த  Indian Society of New Era Engineers நிறுவனம் ஏற்றுக் கொள்கின்றது. இதற்கு 2014 நவம்பர் மாதமே விண்ணப்பித்து, இறுதிப் போட்டியில் கலந்து கொள்ளத்தான். இந்தக் குழு, தில்லிக்கு எங்களுடன் பயணம். சேது பொறியியல் கல்லூரி, இயந்திரவியல் துறையிலிருந்தே இரு குழுக்கள் கலந்து கொண்டன. இதுதான் முதல் முறையாம் இந்தக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வது. நாங்கள் அவர்களுக்கு வெற்றி வாகை சூடி வர வாழ்த்தினோம். இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.  http://quadtorc.in

4 ஆம் தேதி சென்னையை நோக்கிப் பயணம். நிஜாமுதினிலிருந்து மாலை 3.45க்குப் புறப்படும் துராந்தோ ரயிலில் சாதாரணப் பெட்டியில் பயணம் பதிவு செய்திருந்தோம். குளிரூட்டப் பெட்டி என்றால் இயற்கையை ரசிப்பது அவ்வளவாக முடியாது என்பதால். அன்றும் மகனுக்கு வேலை வந்ததால், நாங்கள் காலையிலேயே என் தங்கையின் வீட்டிலிருந்துப் புறப்பட்டுவிட்டோம். அவனது வேலையை முடித்துவிட்டு அப்படியே நிஜாமுதீன் ரயில் நிலையம் வந்துவிடலாம் என்று. அப்போது தங்கையின் கணவரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு. அவர்கள் வீட்டுச் சாவிகளில் ஒன்று எனது பையில். எங்கள் உபயோகத்திற்காகத் தந்ததை வீட்டில் கொடுக்க மறந்துவிட்டோம். எனக்குக் குற்ற உணர்வு.

அங்கிருந்து நிஜாமுதின் செல்ல பெருநகர் ரயில் பிடித்தால் கண்டிப்பாக 11/4 மணி நேரம் ஆகும். சாலை வழி என்றால் நாம் 2 மணி நேரம் முன்பே புறப்பட வெண்டும். சாவியைக் கொடுத்துவிட்டு பெருநகர் ரயிலைப் பிடிக்க ஆட்டோ பிடிக்க முயற்சித்த போது தங்கையின் கணவர் அழைத்து, பெருநகர் ரயில் வேண்டாம் என்றும், தனியார் வண்டி அனுப்புவதாகவும் சொல்ல, நாங்கள் தயங்கினாலும், நேரம் இல்லாததால் மறுக்க முடியாமல் சரியென, அந்த வண்டி 5 நிமிடம் தாமதிக்க, போக்குவரத்து நெரிசலைக் கடந்து நிஜாமுதின் நிலையத்தை அடைந்து படிகளில் ஏறி நடைபாதைக்கு இறங்கும் போது, நடை மேடையிலிருந்து துராந்தோ தூரமாகி எங்கள் கண் முன் நகர்ந்து கொண்டிருந்தது. அப்படியே ஒரு நிமிடம் அங்கேயே உட்கார்ந்து விட்டோம்.

அப்போது வெங்கட்ஜி என்னை அழைத்து “ஹேப்பி ஜெர்னி” என்று வாழ்த்த நான், வெங்கட்ஜியிடம் ரயிலைத் தவறவிட்டு விட்டோம் என்று சொல்ல அவர் ஒரு நொடி அதிர்ச்சியாகி எப்படி என, நான் காரணத்தைச் சொன்னேன். தங்கையின் கணவர் எங்களை அலைபேசியில் தொடர்ந்து கொண்டிருந்ததால், அதே வண்டியில் எங்களை மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி, அன்று இரவே தமிழ்நாடு விரைவு வண்டியில் ஏசி பெட்டியில் பதிவு செய்துவிட்டதாகச் சொன்னார். ஆர்ஏசி. வெங்கட்ஜி, உறுதியாவதற்கு உதவுவதாகச் சொன்னார். ஆனால் கூட்டம் இல்லாததால்,  பதிவு உறுதியாகி விட்டிருந்தது. நாங்கள் தீர்மானித்தபடி பெருநகர் ரயிலைப் பிடித்திருந்தால் நிச்சயமாக 2 நிமிட இடைவெளியில், சரியாக துராந்தோ ரயிலில் ஏறியிருந்திருக்கலாம் என்றும் தோன்றத்தான் செய்தது.

துராந்தோ ரயில் என்றால் அதிலேயே உணவு வழங்கப்படும். வெங்கட்ஜி குறிப்பிட்டிருந்த “பனீர் சாம்பார்”???!!!! ஏற்கனவே அனுபவம் உண்டு என்றாலும் மிஸ் ஆகிவிட்டது!? இல்லை தப்பித்தோமா?!

இட்டார்சியில் நின்றபோது ஒரு துண்டறிக்கையை ஒருவர் எல்லா பெட்டிகளிலும் வைத்துவிட்டுச் சென்றார்.  அதில் இருந்ததை இதோ நான் புகைப்படம் எடுத்துத் தந்துள்ளேன். அதைப் பற்றிக் குறிப்பிட்டால் பதிவு இன்னும் நீண்டுவிடும் என்பதால் அதைச் சொடுக்கிப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். IRCTC - இணையம் வழியாக நம் பிஎன்ஆர் எண்ணைக் கொடுத்து கொடுக்கப்பட்ட உணவுப் பட்டியலில் என்ன வேண்டும் என்று தேர்ந்தெடுத்துப் பதிவு செய்தால் சரியாக அந்த நேரத்தில் உணவு நமக்கு வந்து விடும். எந்தெந்த ரயில் நிலையங்களில் இந்த வசதி உள்ளது என்ற பட்டியல் இதோ...


வரும் வழியில் எடுத்த சில படங்கள்வரும் போது வழியெங்கும் நல்ல மழை. போபாலில் 24% அதிகப்படியான மழை ஆதலால் வெள்ளம். அதனால், சில உயிரிழப்புகள், மும்பை வாரணாசி ரயில் தடத்தில் இரு ரயில்கள் தடம் புரளல் என்ற செய்திகள். அதனால் எங்களுக்கு அலைபேசி அழைப்புகள். ஆனால் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. அதுவரை இல்லாத பிரச்சனை சென்னையை நெருங்கும் போதுதான்.  வழக்கமானதுதான். ரயில் முன்னதாகவே சென்னையைச் சமீபத்திருந்தது. சேர வேண்டிய நேரம் காலை 7.10. சரியாக வந்த ரயில் கொருக்குப் பேட்டையை 6.50க்குத் தொட்ட வண்டி அதைத் தாண்டியதும் நின்றுவிட்டது. பின்னர் பேசின்பிரிட்ஜிலும் 20 நிமிடம். அதன் பின் மெதுவாக சென்ட்ரலுக்குள் வந்து சேரும் போது 7.55. சற்று ஆயாசமாக இருந்தாலும், தங்கை குடும்பத்தார் மற்றும் தில்லி வலை ராஜாவைச் சந்தித்த நல்ல நினைவுகளுடன், மீண்டும் சென்னை போக்குவரத்து நெரிசலினூடே, சென்னைக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கியாயிற்று!

--கீதா

38 கருத்துகள்:

 1. >>> வரும் போது வழியெங்கும் நல்ல மழை. போபாலில் 24% அதிகப்படியான மழை ஆதலால் வெள்ளம்.<<<

  ரயில் தாமதமாக வந்தாலும் - நல்லபடியாக வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செலவராஜு ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி ...ரயில் தாமதமாக வந்தது மழையினாலோ இல்லை அந்த ரயில்களின் தடம் புரளலினாலோ அல்ல....சரியாக வந்த ரயில் சென்னையைச் சமீபத்ததும் தான் மிகவும் தாமதமாகிவிட்டது....

   மிக்க நன்றி ஐயா..

   நீக்கு
 2. மதுரை சேது பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் திரு தவசிலிங்கம் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
  டெல்லி பயணப்பதிவுடன் பயனுள்ள தகவல்களும் வெக்கட் ஜி அவர்களுக்கும் வாழ்த்துகள் நலமுடன் சிங்கார சென்னை வந்தமைக்கும் வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 3. சாவியை சென்னை வந்ததும் விரைவு தபாலில் அனுப்பி வைத்திருக்கலாமே, மனதளவிலும் அலைச்சல் இல்லாமல் இருந்திருக்கும்.

  தலைநகர் பயணம் இனிதே அமைந்ததில் மகிழ்ச்சி கீதா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுப்பி இருக்கலாம் சித்ரா ஆனால் என் தங்கை கணவர் அது அப்போதே வேண்டும் என்று சொல்லியிருந்ததால்....அவர்கள் வீட்டில் விருந்தினர் வருகை இருக்கும் எனவே ஒன்று எப்போதுமே வேண்டியிருக்கும் என்பதால்...

   எப்படியோ வந்தாயிற்று...மிக்க நன்றி சித்ரா

   நீக்கு
 4. உங்களோடு நானும் கொஞ்சம் டெல்லி பார்த்த அனுபவம் கிடைத்து! வரும் வழி எங்குமே மழை என்ற போது பொக்கிஷம் பாடல் நினைவில் தாலாட்டு வரும் வழி எங்குமே உன் முகம் காண சென்னை நோக்கி ஆவலுடன் திருபியிருப்பீர்கள் என்பது போல[[[!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் தங்களுக்கு. அருமையான பாடலை நினைவுப் படுத்தியதற்கும் .....ஆம்...

   நீக்கு
 5. சேது பொறியியல் கல்லூரி - அட, நம்ம ஊரு! வெற்றி பெற வாழ்த்துகள்.

  ரயிலைத் தவர் விட்டது ஏதாவது ஒரு வகையில் நல்லது செய்திருக்கும்! எல்லாம் நன்மைக்கே. வெற்றிகரமாக பயணத்தையும், கட்டுரையையும் முடித்து விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம்...உங்கள் ஊரேதான்...அவர் சொன்னபோது உங்கள் நினைவும் வந்தது...அவர்கள் வென்றார்களா என்பது பற்றி அறிய முடியவில்லை....

   ம்ம்ம் இருக்கலாம் எல்லாம் நன்மைக்கே என்று ..
   ஆமாம் கட்டுரையை முடித்துவிட்டேன் ஹப்பாடா என்று..ஹஹஹ்

   மிக்க நன்றி ஸ்ரீராம்...

   நீக்கு
 6. அருமையாய் ஓர் பயணம் சென்று வந்த
  உணர்வு எங்களக்கும்
  ந்ன்றி சகோதரியாரே
  தம+1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 7. போக்குவரத்து நெரிசலைக் கடந்து நிஜாமுதின் நிலையத்தை
  அடைந்து படிகளில் ஏறி நடைபாதைக்கு இறங்கும் போது, நடை மேடையிலிருந்து துராந்தோ தூரமாகி எங்கள் கண் முன் நகர்ந்து கொண்டிருந்தது. அப்படியே ஒரு நிமிடம் அங்கேயே
  உட்கார்ந்து விட்டோம்.///

  ஐய்யோ. துராந்தோல ட்ராவெல் செய்திருந்தா 27ஹவர்ஸ் ல சென்னை வந்தடைந்திருப்பீங்க.
  நான்ஸ்டாப் வண்டி ஆச்சே. ஒரு புது எக்ஸ்பீரியன்ஸ் ஆ இருந்திருக்கும்.

  ம்ம்ம் இப்போ அதைவிடவும் வாழ்க்கைக்கு தேவையான ஒரு அனுபவ பாடம் கிடைச்சிருக்கு...
  உங்களுக்கு மட்டும் இல்ல படித்த எங்களுக்கும்...

  அழகாக ஒவ்வொரு நிகழ்வையும் தொகுத்து எழுதியவிதம் தொடர் முழுவதும் ரசிக்கவைத்தது மேடம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் மகேஷ்...பரவாயில்லை...நல்லதொரு பாடம்தான்....அனுபவப்பாடம்...மிக்க நன்றி மகேஷ் தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 8. வெங்கட்ஜி அவர்களின் சந்திப்பையும் உதவிகளையும் மறக்க முடியாத இனிய பயணம்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக டிடி .....மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 9. சாவியைத் தர மறந்த உங்கள் பயண அனுபவம்

  போல எனக்கும் ஒரு அனுபவம் இருக்கிறது.  1984 என நினைக்கிறேன். அவசர அவசரமாக

  ராமேஸ்வரம் எக்ச்ப்ரசை பிடித்தால் போதும் என்று

  வீட்டில் இருந்து ஆட்டோ பிடித்து தஞ்சை ரயில் நிலையம்

  அடைந்தேன்.

  ரயில் வரும்போது தான் கவனித்தேன். எடுத்து வந்த பெட்டி

  எனது பெட்டி போல் இருந்தாலும் அது என் மனைவி தனது

  புடவை ரவிக்கை போன்றவற்றை வைத்திருக்கும் பெட்டி.

  இரண்டு பெட்டிகளும் ஒரே சைசில் கலரில் இருந்ததால் மாற்றி எடுத்து வந்து விட்டேன்.

  அந்த காலத்தில் செல் கிடையாது. எங்கள் வீட்டில் தொலை பேசியும் இல்லை.

  நான் சென்னைக்கு சென்று அடுத்த மறு நாள் இரவு சென்னையில் இருந்து அலுவலக தொடர்பாக தார்வார் செல்லவேண்டும். ஆக பயணத்தையும் ரத் து செய்ய முடியாது. .


  போனால் அதை பத்திரமாக திருப்பி கொண்டு வருவதும் கடினம். எனக்கும் மாற்று உடுப்பு இல்லை.

  ரயில் பிளாட்பாரத்தில் வந்து கொண்டு இருக்கிறது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறேன்.

  திடீர் என எங்கிருந்தோ வீட்டுக்காரி பிரசன்னமானாள் .

  "என்னோட புதுப்புடவை பட்டு புடவையை எடுத்துக்கிட்டு போயிட்டீங்களே.. நாளைக்கு எதித்த வீட்டு கல்யாணத்துக்கு நான் எதக்கட்டிக்கிட்டு போறது? அதனாலே தான் ஓடி வந்தேன். " என்று சொல்லி என்னுடைய பெட்டியை என்னிடம் கொடுத்துவிட்டு, நான்கொண்டு வந்திருந்த அவள் பெட்டியை வாங்கிச் சென்றாள்.
  Daivam Manushya roopena enbathu vaakiyam.
  No. Daivam pathni roopaena.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட சுப்புத் தாத்தா உங்களுக்கும் கிட்டத்தட்ட அதே போன்ற அனுபவம்....பரவாயில்லை மாமி அவர்கள் கொண்டு வந்து தந்து விட்டார்களே....

   தெய்வம் பத்தினி ரூபேன...அஹஹ்ஹஹ உண்மைதான்...அருமையான??!! உங்கள் அனுபவ பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தாத்தா

   நீக்கு
 10. பயணத்தில் நல்லகாற்றை சுவாசித்த தாங்கள் திரும்பவும் சென்னை காற்றை சுவாசிக்க வைத்த பயணம்.. அறிந்ததில் மகிழ்ச்சி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் கருத்திற்கு...பயணத்தில் நல்ல காற்றை எங்கு சுவாசித்தேன்...காட்டின் வழி பயணித்த போது மட்டும்...டெல்லியிலும் இங்குள்ள இதே காற்றுதான்....

   நீக்கு
 11. துரந்தோ டிக்கெட் கான்செலா. பணம் ஏதாவது கிடைத்ததா. ? நல்ல அனுபவம். ஒரு வாக்கியம் சொல்ல விரும்புகிறேன் இந்த இடத்துக்கு சேராவிட்டாலும் small things make perfection but perfection is no small thing.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பணம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்..மகனின் அக்கவுண்டிற்கு வரும் ..துராந்தோவிலும் ஏசி புக் செய்யவில்லை...நானேசிதான் .....சார்..இனி மறக்கமாட்டேன் இந்தப் பயணத்தில் நல்ல படிப்பினை...

   நல்ல வாசகம் சார்...மிக்க நன்றி..

   நீக்கு
 12. நாங்கள் காசி சென்றபோது பெற்ற அனுபவங்கள் நினைவிற்கு வந்தன. நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா! தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 13. பதில்கள்
  1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு

   நீக்கு
 14. இந்தப் பயணக் கட்டுரை படித்ததில் நிறைய அறியமுடிந்தது!
  பல ஆ்டுகளுக்கு முன் டெல்லி சென்று வந்த ஞாபகம் மீண்டும் வந்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முகம்மது நிஜாமுத்தீன் நண்பரே! தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 15. நல்ல சுவாரஸ்யமான பயணம்தான். மீண்டும் மீண்டும் மலரும் நினைவுகளாக இந்த டில்லி பயணம் உங்களுக்கு அமைந்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் தமிழ் இளங்கோ ஐயா....நல்ல மறக்க முடியாத பயணமே...மிக்க நன்றி ஐயா..தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 16. #“பனீர் சாம்பார்”???!!!! ஏற்கனவே அனுபவம் உண்டு என்றாலும் மிஸ் ஆகிவிட்டது!? இல்லை தப்பித்தோமா?!#
  என் அனுபவத்தில் சொல்கிறேன் நிச்சயமா தப்பித்து விட்டீர்கள் :)

  பதிலளிநீக்கு
 17. அன்புடையீர்,

  தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

  http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

  அன்புடன்,
  எஸ்.பி.செந்தில்குமார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்தோம் நண்பரே! பதிலுரைத்தோம்..மிக்க நன்றி..

   நீக்கு
 18. மூன்று பதிவுகளாக தலைநகர் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டது நன்று.

  சில சமயங்களில் இப்படி ரயிலை தவற விட நேர்கிறது. இருந்தாலும் எது நடந்தாலும் அது நல்லதற்கே என நம்புவோம்.

  உங்களை தில்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட் ஜி! நல்லதற்கே என்றுதான் எடுத்துக் கொண்டோம்.... எங்களுக்கும் உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...வெங்கட் ஜி!

   நீக்கு