செவ்வாய், 30 ஏப்ரல், 2019

விவேகானந்தம்


ராகுல் ரஞ்சித்தின் புத்தகமாகிய “Confession of a drug Addict”  01-05-2019 அன்று, பாலேமாடு, ஸ்ரீ விவேகானந்தா அரங்கத்தில் வெளியிடப்படும் நிகழ்விற்கு எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வர வேற்கிறோம்.


ராகுல் ரஞ்சித், “விவேகானந்தம்” எனும் எங்கள் எட்டாவது குறும்படத்தில் ஒரு கதாபாத்திரம். இப்புத்தகம், கல்வி நிலையங்களை, போதைப் பொருள் மாஃபியாவிடமிருந்து விரைவில் விடுவிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பேசும் புத்தகமாகும்..

மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை கொண்டவரும், ஸ்ரீ விவேகானந்தா படன கேந்திரத்தின் ஸ்தாபகருமான திரு கே. ஆர். பாஸ்கர பிள்ளை அவர்களைப் பற்றிய கதையே இக் குறும்படம் “விவேகானந்தம்”

அவர் எவ்வளவு வெற்றிகரமாக விவேகானந்த படன கேந்திரத்தின் கல்வி நிலையங்களான எஸ்விஎல்பிஎஸ் (SVLPS), எஸ்விஹெச்எஸ் (SVHS), எஸ்விஹெச்எஸ்எஸ் (SVHSS), எஸ்விவிஹெச்எஸ்எஸ் (ESVVHS), எஸ்விபிகே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்வி ஆசிரியர் கல்விக் கல்லூரி, எஸ்விபிகே ஆசிரியர் பயிற்சி கல்வி நிலையம், எஸ்வி சுகாதார ஆய்வாளர் பயிற்சி கல்வி நிலையம் மற்றும் எஸ்வி ஆங்கிலப் பள்ளி எல்லாவற்றையும் ஸ்தாபித்து நிறுவுகிறார் என்பதைப் பற்றிச் சொல்லும் படம்.

1964 ஆம் வருடத்திலிருந்து இத் தனித்தன்மை வாய்ந்த கல்வி நிறுவனத்தின் ஆசி பெற்ற மற்றும் இப்போதும் ஆசி பெற்று வரும் அனைவரும் தவறாது  வந்து இந்த அரிய நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை வாழ்த்தும் உங்களின் வருகை கண்டிப்பாகப் படம் பிடிக்கப்பட்டு “விவேகானந்தத்தின்” நினைவுகளில் பதியப்படும்.

முதல் நாளான புத்தக வெளியீட்டோடு உங்கள் பங்கும், வாய்ப்பும் முடிந்துவிடும் என்று எண்ணிவிட வேண்டாம். வானமே எல்லை. அதன் பின்னும் கூட உங்களது பொன்னான வாய்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். “விவேகானந்தத்துடன் தொடர்புடைய உங்கள் அனுபவங்களை உங்கள் உறவுடகளுடன், நட்புகளுடன், வாழ்த்தும் நல் உள்ளங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 1964 ஆம் ஆண்டிலிருந்து “விவேகானந்தா” வின் கீழ் ஆசி பெற்ற அனைவரையும் இந்த “விவேகானந்தம்” இணைக்கட்டும். சாதி, மதம், இனம் என்ற எல்லா சுவர்களையும் தகர்த்தெறியும் “நாம்” என்ற உணர்வு எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்திருக்கட்டும்.

குறும்படத்தின் படப்பிடிப்பு 2019, மே 1, 2, 3 ஆம் தேதி வரை பாலேமாடு, எடக்கரா மற்றும் பூக்கோட்டும்பாடம் பகுதிகளிலும் சுற்றியும் நடைபெறும். படம் பிடிக்கப்பட்டு அதன் படத்தொகுப்பு வேலைகள் எல்லாம் முடிந்ததும், முன்னோட்டக் காட்சியாகத் திரையிடப்படும். பின்னர், 2019, ஜூன் இறுதியில் யூட்யூபில் பதிவேற்றம் செய்யப்படும்.  

ஆகவே, “விவேகானந்தம்” வெற்றிபெற உங்கள் வாழ்த்துகள், பிரார்த்தனைகள் வேண்டுகிறோம். இவ்வளாகத்தில் வாழ்ந்து அதை நேசித்த எல்லோருக்கும் உரித்தானது. இதற்கு பண உதவி எதுவும் தேவையில்லை. இதற்கு அரசியல் ஆதாயமும் கிடையாது. உங்களின் ஆளுமைத் திறனையும் அறிவையும் வளர்த்த “விவேகானந்தா” எனும் இக்கல்வி நிறுவனத்தை நினைவு கூர்ந்து அதன் தொடர்பான உங்களது பசுமையான நினைவுகளை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் விருப்பம்.


-------துளசிதரன்

10 கருத்துகள்:

  1. தங்களது விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. விவேகானந்தம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. விழா சிறக்க வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. விழா இனிதே நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. விழா சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. விழா சிறக்க வாழ்த்துக்கள்...வெல்லட்டும் உங்கள் பணி.!..

    பதிலளிநீக்கு
  8. மருமகள் 1200க்கு 1200 என்று மைதிலி சொன்னார்..மகிழ்ச்சி
    வாழ்த்துகளை தெரிவிக்கவும்

    பதிலளிநீக்கு