புதன், 6 டிசம்பர், 2017

அழகிக்கும் அழகி கிரீட ஆசைகண்ணழகிக்கு திடீரென்று அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் ஆசை வந்து விட்டது போலும். ஊரிலுள்ள பலரும்  ஆசைப்படும் போது என் கண்ணழகிக்கு ஏன் வரக்கூடாதா என்ன? சரி எப்படி வந்தது? அதை ஏன் கேட்கின்றீர்கள்?! 

ஒரு ஞாயிற்றுக் கிழமை. தினமும் என்னுடன் நெடுந்தூரம் நடக்கும் கண்ணழகிக்கு ஒரே இடம் சலித்துப் போயிருக்குமே! பாவம் கண்ணழகி! மேல்தட்டுக்காரர்கள் மட்டும்தான் அவர்களின் செல்லங்களைக் கடற்கரைக்கு அழைத்து வரவேண்டுமா என்ன? நாமும் அழைத்துச் செல்வோமே என்று ஒரு மாறுதலுக்காகக் கடற்கரை ஓரம் சென்றேன். கடல், கடற்கரை, அங்கு வரும் செல்லங்கள் எல்லாவற்றையும் என் செல்லமும் பார்க்கட்டுமே!

கண்ணழகிக்கு இயற்கை உபாதைகளைக் கழிக்கவே தினமும் புதுப் புது இடம் வேண்டும். முகர்ந்து முகர்ந்து நேரமும் அதிகம் எடுத்துக் கொள்வாள். குப்பை, புல், செடிகள் இருக்கும் இடத்தில் மிகவும் ஓரமாக ஓதுங்கித்தான் தன் வேலையை முடித்துக் கொள்வாள். சாப்பாட்டை விட ஊர் சுற்ற ரொம்பவே பிடிக்கும். தாயைப்(என்னைப்) போல் சேய்!

அப்படியானவளுக்குப் புது இடம் என்றால் கேட்கவா வேண்டும்! அதுவும் முகர்வதற்கும் நிறையவே இருக்கப் பீடு நடை போட்டு வந்தாள். குப்பைகளும் செடிகளும் நிறைந்த இடத்தில் அவளது இயற்கை அழைப்பை முடித்துக் கொள்ள, நடந்தோம். கண்ணழகி கொஞ்சம் ராங்கிக் காரி. எதிரே வந்த பல செல்லங்களைப் பார்த்து. வடிவேலுவைப் போல் “நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்” என்று அவ்வப்போது உறுமிக் கொண்டு வந்தாள்.

(அவள் என் கைப்பிடியில் இருக்கும் வரைதான் அந்த உறுமல். தனியாக ஓடிப் போன சமயத்தில் எல்லாம் வால் பின் கால்கள் இரண்டிற்கும் இடையில்தான் இருக்கும். பயம் உள்ளுக்குள். ஆனால் உடம்பையும், காதையும் விரைப்பாக வைத்துக் கொள்வாள். வடிவேலுவின் ஸ்டைலில் பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக். ஓடு காலியாக இருந்தவள் இப்போது வீட்டை விட்டு ஓடுவதில்லை. புத்தி தெளிந்துவிட்டது!)

Image result for rampur hound

அப்படி வந்தவள் திடீரென்று நின்றாள். வாலை வேகமாக அசைத்தாள்.  வாயிலிருந்து ஜொள்ளு வேறு!  பார்த்தால் எதிரில் மிகவும் அழகான பெண்மணி! அவரைப் பார்த்து இவள் எதற்குப் பரபரக்க வேண்டும் என்று பார்த்தால் அவரது பின்னால் மிகவும் உயரமான அழகான கம்பீரமான இளைஞன்! ராம்பூர் க்ரே ஹௌன்ட்!

ஓ! கண்ணழகியின் ஜொள்ளின் ரகசியம் புரிந்தது! அவனும் இவளைப் பார்த்து அருகில் வர முயற்சி செய்ய, கண்ணழகி ரஜனி ஸ்டைலில் “மகிழ்ச்சி”! அவன் ஆண் ஆயிற்றே! அங்கு வரும் மற்ற பெண் செல்லங்களைப் பார்க்காமல் இருப்பானா? தன்னைப் பார்க்கவில்லையாம், கண்ணழகி ஏக்கத்துடன் தீனக் குரல் எழுப்பினாள். இத்தனைக்கும் கண்ணழகியின் தலைமுறை பெருக்க உறுப்புகளை எல்லாம் மகன் வெளியில் எடுத்துப் போட்டு வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவள் அவனைத் தோழமைப்படுத்த முயன்றாள்!

போனால் போகட்டும் என்று அண்ணலும் நோக்கினான்! இவளும் நோக்கினாள் இருவரும் முகர்ந்து பார்த்துக் கொண்டதும் அவனது எஜமானி மேல்தட்டுத் தோரணையுடன் கடுப்பானார். அக்மார்க் தமிழ்நாட்டுக்காரர் என்பதை அடையாளப்படுத்த ஆங்கிலத்தில் பேசினார். “உங்கள் நாயை சற்றுத் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.”

ஓ! என் கண்ணழகி தெரு சாதி!  அவரது செல்லத்திற்கு ஏதாவது வியாதி வந்து விடுமோ என்ற பயம் இருக்கலாம். இந்திய பைரவர்களுக்கும் தெருசாதிக்கும் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் என்று சொல்லப்படுவதும், என் செல்லத்திற்கு அனைத்து ஊசிகளும் போட்டிருக்கிறோம், தினமும் வெளியில் போய் வந்தால் கால்கள் கழுவி விடப்படும் என்பதும் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே! பொதுவாகவே நம் மக்களுக்கு “இனம்(breed) என்றால் “ஓ! என்றும் (இதை நீங்கள் புருவங்களை உயர்த்தி, கண்களை விரித்து, உதடுகளைக் குவித்து உதரவிதானத்திலிருந்து(diaphragm) சொல்லிப் பார்க்க வேண்டும்!) நாட்டு வகை என்றால் கொஞ்சம் அடக்கமான “ஓ” (இது தொண்டையிலிருந்து டெசிபல் குறைவாக) அல்லது “ம்ம்” என்ற பதிலாகத்தான் இருக்கும். “ஐ லவ் டாக்ஸ்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். சரி விஷயத்துக்கு வருகிறேன்..

எங்களைப் பார்த்துக் கொண்டே அருகில் வந்தார் மற்றொரு பெண் தன் பொமரேனியன் செல்லத்துடன். அவர்கள் இருவரும் தோழிகள் போலும். அந்தப் பெண் என்னையே பார்த்தார். ஏதோ யோசிப்பது போல் தோன்றியது. இவரும் அக்மார்க் தமிழ்க்காரர்தான். நான் மெதுவாக நகரத் தொடங்கியதும், “நீங்க “.....” க்ளினிக் வந்துருக்கீங்க இல்லையா? உங்க பெட்டின் டாக்டர் “.....”? ஆனா, உங்க பெட் கொஞ்சம் குண்டா வேற மாதிரி இருந்துச்சே! இப்ப அந்த டாக்டரும் வரதில்லையே” என்று என் மகனின் பெயரைச் சொல்லித் தொடர்ந்து பேசியதால், “ஆம். அந்தச் செல்லம் இறந்துவிட்டாள்” என்று சொல்லிவிட்டு, விடு ஜூட் என்று நகர்ந்துவிட்டேன்.

Image result for sippiparai dog
                                     சிப்பிப்பாறையனின் உறவுக்காரன் கன்னி

                                              Image result for kombai dog       
                      கோம்பை
                         
              
கண்ணழகி வர மறுக்கவும் அவளைக் கொஞ்சம் தூக்கியபடி இழுத்துக் கொண்டு சற்றுத் தூரம் வந்து  “கண்ணி. அவன் வட நாட்டுக் காரன். ஹிந்திதான் பேசுவான். உனக்கோ தமிழ் மட்டும்தான் தெரியும். அவன் அம்மாவுக்கோ உன்னைப் பிடிக்கலை. மதுரைக்காரன் சிப்பிப்பாறையனோ, அவன் உறவுக்காரன் கன்னியனோ, இல்ல நல்ல வீரசாலியான கோம்பையனோ கிடைக்காமலா போவான். இவங்க எல்லாம் அந்தக்கால ராஜாக்கள்கிட்ட வளர்ந்த இனம்! ஏன் கண்ணழகி நம்ம தெரு ராஜபாளையத்துக்காரன் நல்லாத்தானே இருக்கான்” என்று இவர்களின் ஜாதகத்தைச் சொல்லிக் கூட்டிக் கொண்டு எங்கள் தெருவிற்குள் நுழைந்த போது தினமும் எதிர்க்கொள்ளும் அந்த ராஜபாளையத்துக்காரன் வந்தான். இவனும் ஒரு வீட்டில் வளர்க்கப்படுபவன். கழுத்துப்பட்டையுடன் அவிழ்த்துவிடப்பட்ட கழுதை! ஓ! மன்னிக்கவும்! பைரவர்! அப்படி வரும் போது சீஸனாக இருந்தால் அப்படியான வேலைகளையும் முடித்துவிட்டுப் போவான். பாவமான நல்ல பையன்தான்.

Image result for rajapalayam dog

இந்த ராஜபாளையத்துக்காரனுக்கு ரொம்ப நாளாகக் கண்ணழகி மேல் ஒரு கண். ஆனால், கண்ணழகி அவனை இதுவரை கண்டுகொண்டதில்லை. நான் தனியாகப் போகும் போது பாளையத்துக்காரன் என் பின்னால் வந்து என் கையில்  ஒரு முத்தம் கொடுத்துக் கண்ணழகிக்குத் தூது விடுவான். என்னை முகர்ந்து பார்க்கும் கண்ணழகியும் சில சமயம் “உர்” என்று சிறிதாக உறுமிவிட்டுக் கொஞ்ச நேரம் விலகி இருப்பாள். பொஸசிவ்னெஸ்!

அப்படியான கண்ணழகி சமீபகாலமாக ராஜபாளையத்துக்காரன் எதிரில் வந்ததும் வாலை ஆட்டுகிறாள். நின்று நிதானித்து அவனைப் பார்க்கிறாள். குரல் எழுப்புகிறாள்! அவன் தூது விடும் போது என்னை முகர்ந்து வாலை ஆட்டிப் பரபரக்கிறாள். உடனே பால்கனிக்குச் சென்று ஓட்டை வழியாகத் தலையை நுழைத்துத் தெருவில் இருக்கிறானா என்று எட்டிப் பார்க்கிறாள். அவனும் எங்கள் குடியிருப்பின் வாயிலில் உச்சா அடித்துவிட்டுச் செல்கிறான். பால்கனியைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான்! கடற்கரையில் அந்த இரு பெண்மணிகளும் தங்கள் செல்லங்களை அழகி/அழகன் போட்டிக்கு அழைத்துச் செல்வது பற்றிப் பேசியது கண்ணழகியின் காதில் விழுந்துவிட்டது போலும். அதனால்....

கண்ணழகி

ராஜபாளையத்துக்காரனின் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டாலும், அழகிப் போட்டிக்குச் சென்றால் ராம்பூர்க்காரனையும் பார்க்கலாம் என்று நினைத்தாளோ என்னவோ இப்போது ஸீரோ டயட்டில்! ஸ்லிம் ப்யூட்டியாய் பைரவர்க்கே உரிய வடிவத்துடன் இருக்க வேண்டித் தன் சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு, புல், பூஷணி, கோவைக்காய் இலைகளைத் தின்னத் தொடங்கியிருக்கிறாள்!!!!   


பின் குறிப்பு 1: பைரவர்கள் இலைகள், புற்கள் இவற்றைத் தின்னால் வயிறு சரியில்லை என்று அர்த்தம். ஆனால் கண்ணழகி சாப்பாடும் சாப்பிடுகிறாள் அவற்றையும் உண்கிறாள் என்பதால் சும்மா சொன்னது! இவள் ஒரு வீட்டின் முன் இருக்கும் புற்களைச் சாப்பிடுவாள். அவர்களிடம் நான் சொல்லவும் செய்தேன் இவள் இங்குப் புற்களை மட்டும் சாப்பிடுவாள் வேறு எதுவும் செய்ய மாட்டாள் என்று. அடுத்த நாள் அந்த வீட்டு வாசல் வெற்றிடமாக இருந்தது. பாவம் கண்ணழகி!

பின் குறிப்பு 2: இந்தச் சுட்டிகளையும் வாசிக்கலாம் நன்றாக இருக்கின்றன. முதல் இரு சுட்டிகளில் கதைகள், நாடகங்கள் அழகாக இருக்கின்றன. அந்தப் பதிவர் வேறு தளங்களும் வைத்திருப்பதாகத் தெரிகிறது. மூன்றாவது சுட்டி தகவல் தளம்!!! அருமையான தளம்!


-கண்ணழகியின் படங்களைத் தவிர மற்றவை இணையத்திலிருந்து. எங்கள் தெரு ராஜபாளையத்துக்காரனை எடுக்க நினைத்தால் முடியவில்லை. அதனால் இணையத்திலிருந்து.

---------------கீதா
103 கருத்துகள்:

 1. கண்ணழகி என்று நீங்கள் சொல்லும் போது கண்ணில் கண்ணீர்தான் வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மதுரை. மறைந்த ப்ரௌனி இவள் மூலம் நினைவுக்கு வருகிறாள் தான். இவள் அவளுடன் பிறந்தவள்தானே...இப்போது இவள் இருப்பது சற்று ஆறுதல். இன்னும் இரு மாதத்தில் 9 வயது ஆகப் போகிறது. ஆனால் ரொம்ப ஆக்டிவ். துறு துறு என்று...இருப்பாள்.....

   கீதா

   நீக்கு
  2. பரெளனிகூட விளையாடிக் கொண்டி இருந்தவள் இப்போது எப்படி தனியாக இருக்கிறாள்......நினைக்க நினைக்க மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது நாமாவது துயரத்தை வாய்விட்டு சொல்லியோ அல்லது இப்படி எழுதியோ தீர்த்து கொள்கிறோம் ஆனால் வாயில்ல ஜிவன்கள் என்ன செய்யும்

   நீக்கு
  3. இல்லை மதுரை சகோ...ரெண்டும் பங்காளிங்க...ஒரே அம்மா...ஒரே வெல்பிங்க்ல பிறந்தவங்க...ஆனா ரெண்டும் வயசுக்கு வந்தப்ப யாரு தலைவினு முடிவு பண்ணறதுல ரெண்டும் கொஞ்சம் சண்டை போட்டுச்சு. அப்ப எங்களுக்குத் தெரியலை இவங்க சைககலஜி..நாங்க ரொம்ப நம்ம பிள்ளைங்கள வளர்க்கறா மாதிரி பஞ்சாயத்துப் பண்ணி அப்ப கடிவாங்கின ப்ரௌனிக்கு சப்போர்ட் பண்ணிட்டோம்...கண்ணிய கோச்சுக் கிட்டோமா...ப்ரௌணிக்கு தைரியம் வந்துருச்சு கண்ணழகிய சாலஞ்ச் பண்ண ஆரம்பிச்சுட்டா...ரெண்டும் ஒருத்தருத்தர் பாத்துக்க மாட்டாங்க...ஸோ தனித் தனி ரூம்லதான் கட்டி போட்டுருப்பேன். ஒருத்திய ஃப்ரீயா விட்டா மத்தவ இருக்கற ரூமை அடைச்சு வைக்கணும். அப்படி ரெண்டு பேரையும் மாத்தி மாத்தி ஃப்ரீயா விட்டு...கட்டிப் போட்டு அபப்டினு இருந்துச்சு. இப்ப இவ மட்டும் தான் ஆட்சி..ஆனாலும் இவ பல சமயத்துல என்னவோ போரடிக்கறா மாதிரி காமிச்சுக்கறா அப்ப என்னைய வந்து நக்கிடுவா...உடனே நான் அவகூட பேசணும்...அப்புறம் கொஞ்ச நேரம் தடவிக் கொடுத்துப் படுத்துக்கணும்...செம துரு துரு இவ...

   ஆமா இவங்களுக்குப் பல சமயங்கள்ல அவங்க என்ன சொல்ல வராங்கன்றது தெரியாது பாவம்...சொல்லத் தெரியாது ஏதாவது அவங்க பாடி லாங்குவேஜ் வைச்சுத்தான் நான் புரிஞ்சுக்க முயற்சி செஞ்சு பேசி அவ என்ன சொல்ல வரானு புரிஞ்சுக்குவேன்...

   கீதா

   நீக்கு
  4. ஆனா ரெண்டும் ரொம்ப சமர்த்துக் குட்டிங்க சகோ!!! ப்ரௌனி ஒரு வித சமர்த்துனா கண்ணழகி வேறு விதமா...ரெண்டுமே அப்படி ஒரு அன்பு...நோ சான்ஸ்...அந்த அன்பைப் பார்க்கும் போது அப்படியே மயங்கிடுவோம்...கட்டிப் போட்டுருவாங்க நம்மள...இல்லையா மதுரை சகோ..
   'கீதா

   நீக்கு
 2. "மகிழ்ச்சி" சினிமாக்காரன் வசனம் பைரவர்களையும் மயக்கி வைத்துள்ளது

  கண்ணகிக்கு மிஸ் சென்னை ஆக எமது வாழ்த்துகள்.

  பதிவை இரசித்தேன்.
  த.ம.பிறகு கணினி வழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா வாங்க கில்லர்ஜி!! வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

   ஆனா பாருங்க பாவம் கண்ணி...அவளை நாங்க அழகுப் போட்டிக்கு எல்லாம் அழைத்துப் போவது இல்லை. ரசித்தமைக்கு மிக்க நன்றி கிலல்ர்ஜி...

   கீதா

   நீக்கு
 3. எனக்கு பெட் அனிமல் எதிலும் இன்டெரெஸ்ட் இல்லை. உங்கள் ஆர்வத்தைப் பாராட்டறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதனால் என்ன நெல்லை. ஒவ்வொருவர் விருப்பம் இல்லையா...

   மிக்க நன்றி நெல்லை கருத்திற்கு

   கீதா

   நீக்கு
  2. நெல்லைத்தமிழன் ஒன்று வளர்த்துதான் பாருங்களேன் அதன் பின் மனிதர் மீதான ஈடுபாடு உங்களுக்கு குறைந்துவிடும்...ஐ லவ் மை டாக் மோர் தென் எனிதிங்க்... நம்பினால் நம்ம்புங்கள் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் அதிகமாக அதனிடம் ஐ லவ் யூ என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.... என் மனைவியை காதலித்த போது கூட ஒரு சில தடவைக்கு மேலே சொல்லி இருக்க மாட்டேன்.....

   நீக்கு
 4. எங்கள் வயலில் பணிபுரிந்தவர்கள் நாய் வைத்திருந்தார்கள். சொன்னது சொன்னது தான். எலிகளை கவ்விக் கொண்டு வரும். சிறுவனமாக இருக்கும் என்னை பயம் காட்டுவார்கள். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். எங்கள் வீட்டுக்கருகே ஒருவர் வைத்திருக்கும் நாய் குறித்து விரைவில் எழுதுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணழ்கியும் எலி, அணில் பிடிப்பதில் சாகஸக்காரி. அதுவும் எலிகளை மிக அருமையாக வேட்டை ஆடுவாள். என் மைத்துனர் வீட்டில் காரின் அடியில் பெருசாளிகள் வயர் எலலம் கட் செய்து ஏசி எல்லாம் வேலை செய்யாமல் இருந்தது. இவள் அங்கு ஒரு வாரம் இதற்கென்றே அங்கு இருந்து இரவு அவிழ்த்துவிடப்பட்டு எலி வேட்டை ஆடினாள். கவ்வுவாளே தவிர கடிக்க மாட்டாள். இவளுக்கும் ரேபிஸ் ஊசி போட்டிருக்கோம். கழுத்தைப் பிடித்ததும் கொஞ்ச நேரத்தில் அவை உயிரை விட்டுவிடும். பின்னர் அவற்றை காவல் காப்பாள்.

   எனக்கு எலியும் பாவம் என்று ரொம்ப மனசு கஷ்டப்படும். ஆனால் மைத்துனர் கேட்டுக் கொண்டு இவளை அழைத்துச் சென்றார். பாண்டிச்சேரியில் இருந்த போது இவள் வீட்டில் நாங்கள் தூங்கிய பிறகு எலியைப் பிடித்துவிட்டு காவல் காத்துக் கொண்டிருப்பாள்...இதைப் பற்றியும் தனியாக எழுத நினைத்திருந்தேன்..ஜி

   மிக்க நன்றி ஜோதிஜி நீங்கள் எழுதுங்கள்.

   கீதா

   நீக்கு
 5. பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துவதும் அதைப் பற்றி.எழுதுவதும் ஆச்சரியமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி விமலன் சகோ தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 6. எனக்கு பிடிச்ச ப்ரீட்ஸ் :) ராஜபாளையம் சிப்பிப்பாறை கோம்பை செங்கன்னி கருங்கன்னி ..
  எவ்ளோ அழகையும் அன்பும் தெரியுமா கீதா அவங்க ..ஆனால் கலப்பு நாட்டு இனங்களும் அன்பு வைப்பதில் குறையற்றவை .
  சர்ச் போயிட்டு மிச்ச பின்னூட்டங்களுக்கு வரேன் .படங்களை பார்த்ததும் குடுகுடுன்னு வந்திட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் ரொம்பவே அன்பா இருப்பாங்க. இங்க இருக்கற ராஜபாளையக்காரன் ரொம்பத் துள்ளி எல்லாம் ஓடி கவரப் பார்ப்பான். ரொம்ப க்யூட் அவன் சரியான தருணத்தில் வரும் போது படம் எடுக்கறேன் அவனையும் எடுத்துப் போடறேன்...சர்ச் போய்ட்டு வாங்க...இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கு இனிய கிறிஸ்த்மஸ்க்கு....நாங்கள் - நானும் எனது ஸிஸ்டெர் இன் லாவும் கேக் எல்லாம் செய்வோம் கிறித்துமஸுக்கு....சரி ..வலது கை கொடுப்பது இடதுகைக்குத் தெரியக் கூடாது என்பதால் சொல்லவில்லை...

   வாங்க அப்புறமா...

   கீதா

   நீக்கு
 7. @ KILLERGEE Devakottai..
  >>> கண்ணகிக்கு மிஸ் சென்னை ஆக எமது வாழ்த்துகள்..<<<

  @ Thulasidharan V Thillaiakathu..

  >>> ஆனா பாருங்க பாவம் கண்ணி...அவளை நாங்க அழகுப் போட்டிக்கு எல்லாம் அழைத்துப் போவது இல்லை.. <<<

  ஓ.. அப்படியா!..
  இந்த விஷயமெல்லாம் கண்ணழகிக்குத் தெரியமா!?...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா துரை சகோ...அவளுக்குத் தெரியாதே! அதான் அவள் தன் முயற்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள். மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 8. கண்ணளகி கடலோரம் நடக்கும் விதம் படிச்சேன்ன்.. மிகுதிக்கு வருவேன் கீதா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க மாஸ்டர் செஃப்!!! அதிரா!!! படிச்சதுக்கு நன்றி...அப்புறம் வாங்க...ஹையோ இந்த ஏஞ்சல் சர்ச்சுக்கு போயிருக்காங்க...கண்ணழகியை கண்ணளகினு சொன்னதுக்கு கண்ணழகி சொல்றா இந்த பூஸார கூட்டிட்டுவா நான் அவங்களை துரத்தி விளையாடுறேன்னு சொல்லுறா...ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கீதா பப்ளிஸ் பட்டினில் கையை வைக்கும்போதுதான் சுர்ர்ர்ர்ர் என பட்டுது ஹையோ ள போட்டிட்டமே என:).. சரி விடுங்கோ இதெல்லாம் எனக்கென்ன புதுசா என்ன?:) ஹா ஹா ஹா இதுக்குப் போய் எதுக்கு சேர்ஜ் க்குப் போனவங்களை டிசுரேப்புப் பண்ணிக்கொண்டு:))

   நீக்கு
  3. ஹா ஹா ஹா அதிரா...அவங்க இதப் பார்க்கலை...சரி சரி போனாபோகுது...இது எல்லாருக்கும் வரும்..எனக்கு நிறையவே அரும் அதிரா. கம்ப்யூட்டரில் தட்டும் போதும் வரும்..ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 9. ஹாஹா //நானும் ரௌடிதான், நானும் ரௌடிதான்” என்று அவ்வப்போது உறுமிக் கொண்டு வந்தாள்.//
  இதை பார்க்கும்போது யாரோ ஒருவர் நினைவுக்கு வராங்க :)
  லவ் யூ செல்லம் கண்ணழகி :)
  கீதா ..ஆயிரம் வெளிநாட்டு வகை செல்லங்கள் இருந்தாலும் நம் நாட்டு வெதர் மற்றும் நோய் எதிர்ப்புசக்தி இதெல்லாம் இந்த கண்ணழகி நீங்க மேலே படம் போட்டுள்ள ராஜபாளையம் சிப்பிபாறை கோம்பை கன்னி வகை இனங்களுக்கு மட்டுமே .ஆனான் எனக்கு நம்மூர் பல பெட்ஸ் ஓனர்ஸ் மேலே அவ்வளவு பிரியமில்லை நம்பிக்கையுமில்லை ..ஏதேனும் பிரச்சினைன்னா பலர் ரோட்டில் அபாண்டன் செய்யறாங்க :(
  எத்தனையோ ஹைபிரிட் வெரைட்டிஸ் இப்படி அலையுதுன்னு கேள்விப்பட்டேன் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்ணழகி இன்னும் நிறைய செய்வாள் வீட்டுல...அவள் சாப்பாடு கேட்கும் அழகு...அப்புறம்தனக்கு ஏதேனும் வேண்டும் என்றால் கேட்கும் அழகு...ஒவ்வொன்றாகச் சொல்லலாம். அப்புறம் சிப்பிபாறை ரொம்ப டெடிக்கேட்டட். ராம்பூரும் ஆப்படித்தான்னு போட்டுருக்காங்க, என் ஸிஸ்டர் இன் லா வீட்டுல ராம்பூர் க்ராஸ் இருக்கு. ரெஸ்க்யூ பண்ணி வளர்க்கறாங்க. சிப்பியின் உறவுக்காரன் கன்னி கூட ரொம்ப டெடிக்கேட்டட் தான்.

   ஹை யாரு நினைவுக்குவ் வராங்க!!!! ஹா ஹா ஹா எனக்குத் தெரியுமே அது யாருனு...ஆனா சொல்ல மாட்டேனே....பூஸார் ரொம்ப பிஸியா இருக்கறதுனால கண்டுக்க மாட்டாங்க..ஸோ சொல்லிக்குவோம். ஹா ஹா ஹா..

   எஸ் ஏஞ்சல் நம்மூர் பெட் ஓனர்ஸ் கேக்காதீங்க....இங்கயுமே நிறைய பாவம் அபாண்டன் பண்ணிடறாங்க...என் பையன் திட்டித் தீத்துருவான் இங்க இருக்கும் போது. அப்புறம் சில ஓனர்ஸ் கேக்கற கேள்வியே....இவங்க எல்லாம் ஏன் பெட் வைச்சுக்கறாங்க...சும்மா ஸ்டேட்டஸ் சிம்பலுக்கா...நும் கேப்பான்...ரொம்ப அலையுதுப்பா இங்க க்ராஸ் ப்ரீட்ஸ் பேப்பர்ல வரும் பாருங்க அடாப்ட்ஷனுக்குனு அட் வரும்....பாவமா இருக்கும்...உங்க கருத்துக்கு ஹைஃபைவ்...

   கீதா

   நீக்கு
 10. அப்புறம் கீதா ..இந்த சிப்பிப்பாறை வகை செல்லங்கள் ஓனருக்காக உயிரையும் தரும் .
  ஒரு முறை நண்பர்கள் இருவருக்கு நடந்த விளையாட்டு சண்டையில் ஒருவரின் செல்லம் சிப்பிபாறை விளையாடடு என புரியாமல் நிஜம்னு நினைச்சி தன் ஓனரை விளையாட்டுக்கு தள்ளிவிட்டவரை புரட்டி எடுத்து விட்டதாம் நல்லவேளை கடி பலமில்லை :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கான பதில் மேலேயே கருத்துல வந்துருச்சு ஏஞ்சல்...ஓ!! செம இல்ல...அந்தக் காலத்துல சிப்பி, கோம்பை, சின்னி எல்லாம் ராஜாக்கள் வேட்டைக்கு வைச்சுருந்தாங்களாம். ராஜபாளையமும் தான்...ஆனா எங்க தெரு ராஜபாளையத்துக்காரன் ரொம்ப ஸாதுவா பயந்து ஓடுறான்..ஆனா என் பின்னாடி வந்து டச் பண்ணிட்டுப் போவான்.....ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 11. கண்ணழகிக்கு புல் சாப்பிட விடாம செய்தவர்களை கம்பளி பூச்சி நல்லா கடிக்கட்டும் ..சிலர் மட்டும் ஏன்தான் இப்படி முசுட்டுக்குணத்துடன் திரிகிறாரகளோ :(
  பைரவர்கள் புல்லு சாப்பிடுவது தாங்களே intestinal பிரச்சினைகள் உள்ளே இருக்கும் புழுக்களை இயற்கையா வெளியே தள்ள
  அப்புறம் அதுங்களுக்கு fiber சத்து வேணுமே அதுக்காகவும் தான் அதுங்களுக்கு சாலட் சாப்பிட ஆசையா இருக்குமில்லையா :) அப்படிதான் புல் weed சாப்பிடறது அவங்க .
  நீங்க pet grass தொட்டியில் வளர்த்து வைங்க அவ சாப்பிடுவா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல்...பைரவர்கள் தங்கள் பிரச்சனைகள் சிலவற்றைத் தாங்களே சரி பண்ணிக்குவாங்க. என் மகனும் அநாவசியமாக மருந்து கொடுப்பதில்லை. ஆமா ஃபைபர் சத்து கிடைக்கவும் தான்....

   நீங்க pet grass தொட்டியில் வளர்த்து வைங்க அவ சாப்பிடுவா .// ஹையோ ஹையோ ஏஞ்சல் அதையேதான் நான் செய்ய நினைச்சுருக்கேன்...அது போல பூஷணியும் வளர்க்கறேன்...அவ அந்த இலைகளை வீட்டிலேயே சாப்பிடட்டும்னு..

   நாம எல்லாம் தான் புழு செடிக்கு வந்தாலே பாவம் அது திங்கட்டும் நு விட்டுடுவோம் இல்லையா ஏஞ்சல்...என் மகனும் அப்படித்தான்/...சரி அந்தக் கதை அடுத்த பதிவு...

   ஹா ஹா ஹா கம்பளிப்பூச்சி கடிக்கட்டும்...அதை ஏன் கேக்கறீங்க எங்க தெருல சிலர் இருக்காங்க...இப்படி..இத்தனைக்கும் கண்ணழகிய நான் ரொம்ப தூரம் கூட்டிட்டுப் போய்டுவேன். என் கூட நிறைய தூரம் நடப்பா..எவ்வளவு தூரம் வேணாலும் ந்டப்பா...

   கீதா

   நீக்கு
 12. கண்ணழகி நீ குண்டா இரு அதுதான் உனக்கு அழகு :) டயட்டிங் எல்லாம் வேணாம் :)
  ஹாஹ்ஹா :) ராஜபாளையத்துக்காரன் முத்தம் குடுத்தானா :) ஹையோ ஹையோ அவங்க குணம் மாறலியே :)
  உண்மையில் அந்த இனம் கொஞ்சம் ஜொள்ளுப்பார்ட்டிஸ் தான் கீதா :) இதுக்கு மேலே ஏதாச்சும் சொன்னா என்னை எல்லாரும் அடிக்க வருவாங்க :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா...அதை ஏன் கேக்கறீங்க ராஜபாளையத்துக்காரன் ரொமபவே அழகு!! அவன் செயல்பாடுகள் ...முடிஞ்சா படம் எடுத்துப் போடறேன்...

   இன்னொருத்தன் இருக்கான் வெள்ளையன்னு பேரு வைச்சுருக்கேன். அவனுக்கும் கண்ணழகிக்கும் ஆகாது. அவன் நான் தனியா போனா எங்கிட்ட நல்லாருப்பான் ஆனா கண்ணி கூட வந்தா ரொம்பப் பாய்வான். இவளும் லேசுப்பட்டவ இல்லை..ஸோ..அந்த வெள்ளையன் செம க்யூட். குப்பை அள்ளறவங்க வந்தா அவங்க கூடவே வருவான் ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து குரைப்பான். கேட் திறந்திருந்தா உள்ள வந்து குப்பை போடுறாங்களானு பார்ப்பான். குப்பை போட்டுட்டாங்கனா அடுத்த வீட்டுக்குப் போவான்...அப்புறம் யாரும் தெருல குப்பை மூட்டைய தூக்கிட்டு நடக்க முடியாது பிடிச்சு இழுபான் ரொம்ப பொறுப்பான பையன்...ஹா ஹா ஹா...ரொம்ப ப் பொருப்பா குப்பை அள்ளறவங்க இருக்கற வரைக்கும் அவங்க கூடவே சுத்துவான் அப்புறம் அவன் தான் வளரும் வீட்டுக்குப் போய்டுவான்...

   கீதா

   நீக்கு
  2. /// ராஜபாளையத்துக்காரன் முத்தம் குடுத்தானா :) ஹையோ ஹையோ அவங்க குணம் மாறலியே :)
   உண்மையில் அந்த இனம் கொஞ்சம் ஜொள்ளுப்பார்ட்டிஸ் தான் கீதா//

   என்னாதூஊஊஊஊ ராஜபாளையக்கரர் ஜொள்ளுப்பாட்டியோ?:) ஹையோ இருங்கோ இப்பவே என் சிஐடி வேலையை ஆரம்பிக்கிறேன்ன்ன்ன்:))ஆரார் எல்லாம் ரா.பா :)) எனத் தேடப்போறேன்ன்:)).. அநேகமா அஞ்சுக்கு சங்கிலி வரும்.. கழுத்துக்கல்ல கைக்கு:))

   நீக்கு
  3. அப்படித் தேடறவங்களை ரா பா விடமாட்டாராம்...எங்க ரகசியத்தை எல்லாம் இப்படி வேவு பார்க்கக் கூடாதுனு துரத்துவார் ஜாக்கிரதை பூஸாரே!!

   கீதா

   நீக்கு
 13. /பொதுவாகவே நம் மக்களுக்கு “இனம்(breed) என்றால் “ஓ! என்றும் (இதை நீங்கள் புருவங்களை உயர்த்தி, கண்களை விரித்து, உதடுகளைக் குவித்து உதரவிதானத்திலிருந்து(diaphragm) சொல்லிப் பார்க்க வேண்டும்!) நாட்டு வகை என்றால் கொஞ்சம் அடக்கமான “ஓ” (இது தொண்டையிலிருந்து டெசிபல் குறைவாக) அல்லது “ம்ம்” என்ற பதிலாகத்தான் இருக்கும். “ஐ லவ் டாக்ஸ்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்//

  pets விஷயத்திலும் இவர்களின் அட்டூழியம் :( சே ..
  அதுங்கள அதான் வாயை குவிக்கும் மனுஷங்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கணும் இங்கே எல்லாரும் எல்லா இனத்தையும் கலப்பினமாக இருந்தாலும் வளர்க்கிறாங்க ..இன்சூரன்ஸ் எல்லாம் எடுத்து ராஜ மரியாதைதான் .
  ஒரு இயக்குனர் பெயரை சொல்ல விரும்பலை ..அவர் வீட்டு லாப்ரடார் ஹீட் டைம் வீட்டை விட்டு போய் விட்டது ..அதன் பிறக்கப்போகும் குட்டிகள் நாட்டினம் கலப்பு என்றதும் அவர் வாயும் வயிறுமாக இருந்த அந்த செல்லத்தை ஆசையுடன் வளர்த்ததையும் மறந்து அப்படியே யாருக்கோ கொடுத்திருக்கார் .. :( இதுதான் எனக்கு நிறைய பேர்கள் மீது கோபம் வருவது .இஷ்டம் இருந்தா மட்டும் போதாதது மனதால் டெடிகேஷனும் இருக்கணும் ஒரு ஜீவராசியை வீட்டில் வளர்க்கும்போது அதன் கடைசி மூச்சு வரை காப்பாற்றணும் .
  அந்த வகையில் கண்ணழகி மகாராணி வீட்டில் வளரும் இளவரசி :) நான கொடுக்கிறேன் இளவரசிக்கு அழகி பட்டம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமா ஏஞ்சல் அங்க எல்லாம் செம மரியாதை இந்தக் குழந்தைகளுக்கு. தங்கள் குழந்தைகளையும் பெட்ஸோட நல்லா பழக விடுறாங்க...

   அது யாரு ஏஞ்சல் அந்த இயக்குநர்...ஹீட் டைம் அதைப் பார்த்துக் கொள்ல வேண்டியதுதானே...அது பாவம்..கொடும்பாவி/...இதெல்லாம் சும்மா ஏஞ்சல் இவங்க எல்லாம் வளர்க்கறது எல்லாம் சும்மா. யெஸ் மனசுல டெடிக்கேஷனும் இருக்கணும்...

   அன்னிக்கு ப்ரௌனியின் கடைசி ஜஸ்ட் 10மினிட்ஸ் அவள் உயிர் பிரியும் சமயம் நான் அவளுக்கு ஐஸ் கட்டிகள் பேக் செய்ய எடூக்கப் போனதையே என் மகனால் ஏற்றுக் கொள்ல முடியலை...என்னைத் திட்டிவிட்டான். உனக்கு கிச்சன்ல போய் சமைக்கலைனா என்ன இப்ப ஒரு நேரம் சாப்பிடலைனா என்னா அகப் போகுது...ஏன் அப்பாட்டயும், தாத்தாகிட்டயும் சொல்லிட்டு நீ அவ கூடயே இருந்திருக்க வேண்டியதுதானே... அப்படி என்ன உனக்கு அவள் பக்கத்துல அவள உன் மடில வைச்சுத் தடவிக் கொடுக்காம அந்தக் குழந்தைய அனாதை மாதிரி விட்டு என்னமா நீ..போமா என்று குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான். என்னோடு பேசவே இல்லை. அப்புறம் அவன் சமாதானம் அடைஞ்சப்புறம் ஏண்டா நான் அவளுக்காகத்தானே ஐஸ் கட்டி எடுக்கப் போனேன் அப்பத்தானே அவ பிரிஞ்சுட்டா...என்றதும்...சரி இனி இப்படியான சமயத்துல அவங்க பக்கத்துலேயே இருக்கணும்மா நானா இருந்தாலும் சரி நீயா இருந்தாலும் சரினு சொல்லி...அந்த இயக்குநர் யாருனு எனக்கு ரகசியமா சொல்லுங்க...

   கீதா

   நீக்கு
  2. ஆமாம் ஏஞ்சல் ரெண்டு பேருமே இளவரசிகள் தான்...அதுவும் ப்ரௌனி எங்க மாமியார் வீட்டுல கொஞ்ச நாள் இருந்தா. என் ப்ர்தர் இன் லா வுக்கு ரொம்பப் பிடிக்கும்னு அங்க இருந்தா. அவதான் அந்தப் பெரிய வீட்டைப் பாதுகாத்தா. அவர் சொல்லுவார்...எங்க அம்மா இல்ல இந்த வீட்டுக்கு ஓனர் அது ப்ரௌனிதான் இந்த வீட்டு ஓனர்...ராணியம்மா...என்று...அந்த அளவுக்கு அவ செல்லம் எங்க வீட்டு பெட் ப்ரியர்களுக்கு எல்லாம். என் ஸிஸ்டர் இன் லா வீட்டுல இருக்கும் செல்லம் பெயர் உங்க செல்லம் பெயர்தான்... ஜெஸி (ஃபுல் நெம் ஜெஸிகா)..ராம்பூர் க்ராஸ்..அபாண்டண்டா புண்ணோடு இருந்தத ரெஸ்க்யூ பண்ணி வளர்க்கறாங்க..இப்ப சூப்பரா இருக்கா அந்தவீட்டு இளவரசி...அவ ஜம்ப் பண்ணறத பார்க்கணும் செமையா இருக்கும்..

   தாங்கஸ் ஏஞ்சல் உங்க பட்டத்துக்கு!! கண்ணிக்கிட்ட சொல்லிடறேன்...!!!

   கீதா

   நீக்கு
  3. ///நான கொடுக்கிறேன் இளவரசிக்கு அழகி பட்டம் :)///

   நோ அஞ்சு.. கண்ணழகிக்கு இங்கு மாப்பிள்ளை பார்த்து.. மிஸிஸ் பிரித்தானியா பட்டம் வாங்கிக் கொடுக்கப் போறேன்ன்:)...

   இங்கே பல இடங்களில், பல இனங்களை ஒன்று சேர்த்து.. புதுவகை நாய்க்குட்டிகளைப் பெறப் பண்ணுகிறார்கள்.. ஒவ்வொன்றும் 1000 அல்லது அதுக்கு பவுண்ட்சுகள்.. எங்களிடத்துக்கு கிட்டவும் இருக்கு... ஒவ்வொன்றும் புசுபுசு என டோல் போன்ற பப்பீஸ்... எங்களுக்கும் வளர்க்க ஆசை... ஆனா எங்கும் பயணம் போக முடியாதே... எங்கள் டெய்சியை கட்டரியில் விட்டிட்டுப் போய் நான் பட்ட துன்பம்... அவவும்தான் பாவம் களைச்சு மெலிஞ்சு போயிருந்தா.

   ஆனா பப்பியை விடுவதாயின் விலையும் அதிகம்.. 25 பவுண்டுகளுக்கு மேல் வரும் ஒருநாள் வாடகை மட்டும்.... அதனால்தான் வாங்காமல் இருக்கிறோம்.

   அஞ்சு வீடு மாறி எங்கள் வீட்டருகில் வந்தா:) நான் உடனேயே பப்பி வாங்கிடுவேன்:))

   நீக்கு
  4. கீதா அந்த செல்லம் ஒரு அட்டெண்டர் மூலம் எங்களுக்கு கிடைத்தது எங்க உறவினர் வேறொருவர் வீட்டுக்கு அனுப்பி வளர்ந்து 10 வருஷம் இருந்தது ..அன்பில்லாதவங்க வீட்டில் இருப்பதைவிட அது புது இடத்தில சந்தோஷமாவே இருந்தது ..மன்னித்து தொலைப்போம் அந்த கேர்லெஸ் பிரபலத்தை

   நீக்கு
  5. //எங்கள் டெய்சியை கட்டரியில் விட்டிட்டுப் போய் நான் பட்ட துன்பம்... அவவும்தான் பாவம் களைச்சு மெலிஞ்சு போயிருந்தா.//
   இரண்டு முறை வேண்டுமென்றே பயணத்தை தவிர்த்தேன் நான் ஜெசிக்காக ..இந்தமுறை பாஸ்போர்ட் டிலே :) எப்படியோ ஒவ்வொருமுறையும் எனக்கு சாதகமா அமையுது இனி எப்டியோ ? தெரில

   நீக்கு
  6. கீதா என் வலைப்பூவின் ரைட் சைட் ஒரு ஹாம்ஸ்டர் இருக்கானே அவன் இப்போ இல்லை அந்த வகையினதுக்கு லைப் 3 வருஷம்தான் இது தெரியாம வாங்கிட்டோம் மகனேன்னா கூண்டைபிடிச்சி நிப்பான் அவ்ளோ ஆசை . 2அரை வயசு இருக்கும்போது அவனுக்கு வாயில் ஒரு கட்டி வந்தது வெட் அவனை உறங்க வைக்கப்போறேன் என்றார் நானா விடலை ..தூக்கிட்டு வந்து வீட்டில் கவனிச்சேன் அந்த கட்டி உடையும் வரை நானே சன்ப்ளவர் சீட்ஸை உடைத்து கொடுப்பேன் பிறகு சரியாகி அப்புறம் தூக்கத்தில் போனான் .
   எல்லா petsum நாம இருக்கும்வரை கடவுள் நம்மோட அவற்றை வச்சிருக்கலலாமேன்னு உணரவைச்ச தருணம் ஆனால் இறுதி வரை சந்தோஷமாவச்சேன் .அதுபோலத்தான் நீங்களும் நல்ல அன்புடன் கவனிச்சிருக்கீங்க அது நிறைவு . ஷி ஐஸ் இன் எ பெட்டெர் பிளேஸ் .
   மகனுக்கு இளகின மனசு என்று தோணுது :)

   நீக்கு
  7. கீதா அந்த செல்லம் ஒரு அட்டெண்டர் மூலம் எங்களுக்கு கிடைத்தது எங்க உறவினர் வேறொருவர் வீட்டுக்கு அனுப்பி வளர்ந்து 10 வருஷம் இருந்தது ..அன்பில்லாதவங்க வீட்டில் இருப்பதைவிட அது புது இடத்தில சந்தோஷமாவே இருந்தது ..மன்னித்து தொலைப்போம் அந்த கேர்லெஸ் பிரபலத்தை//

   சூப்பர் ஏஞ்சல் உங்கள் உறவினர்களிடம் வந்தது...ஆமாம் நல்ல இடத்தில் வந்ததே!! ஹும் மன்னித்து விடுவோம் வேற வழி...

   கீதா

   நீக்கு
  8. ஆமாம் அதிரா நம்ம செல்லத்தை விட்டுட்டுப் போனா அவங்க வாடிவிடுவாங்க...இப்ப கண்ணழகி மட்டும் தான் இருக்கா. இது வரை ப்ரௌனி இருந்த வரையிலும் ஒன்றை என் மைத்துனர் வீட்டுல விட்டுட்டுப் போவேன் அதான் ப்ரௌனிய...இங்க எங்க அப்பா இருந்தார் அதனால ரெண்டுபேருக்கும் பிரச்சனை இல்லை. இப்பவும் கண்ணழகிய மைத்துனர் வீட்டுல விட்டுட்டுப் போலாம் ஆனா அவர் ஊர்ல இருக்கணும். இல்லைனா நானும் பயணம் செய்வதில்லை. இனி பார்ப்போம்...

   ஹான் ஹாம்ஸ்டர் பார்த்தேன்...சூப்பர் ஏஞ்சல் உங்க கூட இருந்ததுநால பாருங்க நீங்க அவனை அவன் இயற்கையா போற வரை அன்பு கொடுத்திருக்கீங்க...லக்கி செல்லம்...ரொம்ப க்யூட் போல அழகா புரிஞ்சுக்கிட்டு பார்த்துருக்கான் பாருங்க.

   என் மகன் ரொமப்வே இளகிய மனசு. ஆனா அது அவன் தொழிலுக்கு ஆகாது. நோ செண்டிமென்ட்ஸ் இல்லையா...தினமும் இறப்பதையும், அவங்களே யுத்தனேசியா பண்றதையும் அவனுக்கு ஏற்க முடியலை பெர்சனலா...ஆனா euthanasia சில சமயம் அதுங்க பாவம் அவஸ்தைப் படக் கூடாதுனு கொடுக்க வேண்டிய சூழல், அது போல ரேபிட் நு தெரினுருச்சா உடனே அப்படிச் செய்தல் என்று...இப்பலாம் பழகிடுச்சு. ஆனா இதுங்க இவங்க அம்மா கண்ணம்மாவின் கடைசி வெல்பிங்கல அதுங்க வெளிய வரும் போது கீழ ஒரே மழை பெஞ்சு சகசியா இருந்துச்சுனு இவன் கைல வாங்கினான். அந்தக் கண்ணமா எங்க ரெண்டு பேரை மட்டும் கிட்ட அலவ் பண்ணிச்சு. கண்ணம்மா பகக்த்து வீட்டுல வளர்ந்தவ..ஆனா எங்க வீட்டுலதான் இருக்கும்...அவளுடைய மூணு வெல்பிங்கும்நம்ம வீட்டிலதான். மகன் அப்புறம் அவளுக்கு அது நல்லதல்லனு வீட்டுலயே ஆப்பரேட் பண்ணிட்டான் அப்பவே அவளுக்கு 10 வயசு. ஸோ ஆப்பரேட் பண்ணிட்டான். இதெல்லாம் பாண்டிச்சேரில இருட்நப்ப. ஒவ்வொரு வாட்டி அவ குட்டி போடும் போதும், அப்புறம் அவ கூட இருக்கற அவ பொண்ணு குட்டி போடும் போதும் எங்க வீட்டுல கிட்டத்த 13 பப்பிகள் இருக்கும். சும்மா தட்டைக் கரண்டியால தட்டினா அத்தனையும் ஓடி வரும் பாருங்க...ஹையோ...அந்த் அழகு...செமையா இருக்கும்...அப்ப அவங்களுக்கு செரிலாக் தான்...அப்புறம் ஒரு சில இறந்துரும். சில ஆண் குட்டிகளை யாராவது தூக்கிட்டுப் போவாங்க. மீதி இருக்கறத அப்ப சென்னைக்குக் கொண்டு வந்து ப்ளூக்ராஸ்ல கொடுத்துருவோம். அப்புறம் லாஸ்ட் வெல்பிங்க்ல தான் கண்ணி அண்ட் ப்ரௌனி..பொண்ணூங்க அதனால நாங்க வளர்க்க ஆரம்பிச்சு இங்க சென்னைக்கும் கொண்டு வந்துட்டோம்.....இவங்க அம்மா 17 வயசு வரை இருந்தா!!!!!

   இப்ப்படி ஒவ்வொரு செல்லத்துக்கும் ஒவ்வொரு கதை..

   கீதா

   நீக்கு
  9. ஆமாம் ஏஞ்சல் எல்லா செல்லமு நம்ம கூட கடைசிவரை இருக்கணும்னு ...ஆனா இப்பல்லாம் ஒன்னு வளர்க்கும் போதே இதுக்கும் ஒரு நாள் வரும் நம்மைவிட்டுப் பிரியும் நாள் எனவே அதுக்கு மனசை ப்ரிபேர் பண்ணிட்டு வளர்க்கணும்னு நினைச்சுக்குவேன்..

   கீதா

   நீக்கு
 14. கண்ணழகி.... அழகி தான்!

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அதன் இயல்புகளை அழகாக பட்டியலிட்டுச் சொல்லியிருப்பதை ரசித்தேன். நான் வளர்த்த பிரௌனி பெண் என்பதால்தான் அதைக் கொண்டு விட்டு வந்தேன். அவளுமே கண்ணழகிதான்! இப்போது மார்கழி சீசன் என்பதால்தான் இவர்கள் ரொம்ப அலைபாய்கிறார்கள் போலும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஸ்ரீராம் உங்கள் ப்ரௌனி அழகு என்றால் மிக மிக அழகு! கண்ணழகிதான்!!! ஆம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் அலை பாயத்தொடங்குகிறார்கள். கண்ணழகிக்கு அந்த உறுப்புகள் எதுவும் இல்லை, ஹீட் பீரியடும் இல்லை என்றாலும் கூட சில சமயங்களில் சில பைரவ்ர்ளைக் கண்டால் ஒரு தோழமை உணர்வுடன் குரல் எழுப்புகிறாள்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  2. இதென்ன புதுக்கதை? ஸ்ரீராம் வளர்த்ததும் பிரெளனி எனும் பெயரிலோ??

   நீக்கு
  3. ஹையோ அதிரா ஸ்ரீராமின் ப்ரௌனி செம கண்ணழகி!! ரொம்ப அழகா இருப்பாள். என்னிடம் படம் இருக்குனு நினைக்கிறேன் இல்லைனா ஸ்ரீராம போடச் சொன்னாப் போச்சு. முன்னரே போட்டுருக்காரே...

   கீதா

   நீக்கு
 16. //பொதுவாகவே நம் மக்களுக்கு “இனம்(breed) என்றால் “ஓ! என்றும் (இதை நீங்கள் புருவங்களை உயர்த்தி, கண்களை விரித்து, உதடுகளைக் குவித்து உதரவிதானத்திலிருந்து(diaphragm) சொல்லிப் பார்க்க வேண்டும்!) நாட்டு வகை என்றால் கொஞ்சம் அடக்கமான “ஓ” (இது தொண்டையிலிருந்து டெசிபல் குறைவாக) அல்லது “ம்ம்” என்ற பதிலாகத்தான் இருக்கும். “ஐ லவ் டாக்ஸ்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்//

  நன்றாக சொன்னீர்கள்.

  நானும் கவனித்து இருக்கிறேன்.

  ஆதரவற்ற நாய்களையும் பொது இடங்களில் இங்குள்ளவர்கள் தடவி கொடுப்பதையும் அவை அவர்கள் மேல் இடித்துக் கொண்டு உரசி உரசி கொஞ்சுவதும் மேலே குழந்தையை போல் ஏறி கொஞ்சுவதையும் பார்த்தேன். அவைகளும் அன்புக்கு அடிமை, அன்புக்கு ஏங்குபவர்கள்.
  அருமையான பதிவு.
  கண்ணழகிக்கு வாழ்த்துக்கள்.

  பதிவர்கள் சுட்டி குறிப்பு அருமை.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோமதிக்கா...ஆமாம் அக்கா அங்கு எல்லாம் மக்கள் எல்லாவற்றையும் ஒரே போலத்தான் பாவிக்கிறார்கள். ஆமாம் அவை அன்புக்கு அடிமையேதான். உங்கள் வாழ்த்துகளைக் கண்ணழகியிடமும் சொல்லிவிடுகிறேன். இன்று உங்கள் எல்லோரது குரல்களையும் அவளுக்குச் சொல்லிக் கொஞ்சினேன். பாரு உன்னை எத்தனை பேர் அன்புசெய்கிறார்கள் என்று சொன்னேன்.

   கீதா

   நீக்கு
 17. கீதா சிஸ் ஹா ஹா கண்ணழகி பற்றி சொல்லிவிதம் மிகவும் சுவரசியாமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நீங்க சொல்லியது எல்லாம் இசைத்து படித்தேன் என்கின்றாள் என் வீட்டிலும் கண்ணழகர் ஒரு செல்லம் ஒருவர் இருக்கிறார் ஆனால் இவர் கிராஸ் இனத்தை சேர்ந்தவர் நானும் இவரை பற்றி எழுதணும் நினைப்பேன் உங்கள் பதிவை பார்த்தவுடன் நிறைய சொல்லணும் விஷயம் வருகிறது ஆனால் இரவு ஆகிவிட்டதால் இங்கு இப்பொது முடிக்கிறேன் லெட்டவந்துவிட்டேனே குறையாக உள்ளது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூவிழி மிக்க நன்றி கருத்திற்கு. ஹை உங்கள் வீட்டிலும் செல்லம் இருக்கிறாரா?!! கண்ணழகன். என்ன க்ராஸ்?!! பதிவு போடுங்களேன்...ஏஞ்சல், அதிரா, மதுரை, கரந்தை சகோ(அவர் வீட்டிலும் இளவரசி இருக்கிறாள்) பதிவர்களின் செல்லங்கள் நு ஒரு ஃபோட்டோ செஷன் போட்டுருவோம்...

   இங்குச் சொல்வதை விட உங்கள் விஷயங்களைப் பதிவாகப் போடுங்கள். என்ன சொல்றீங்க பூவிழி...பரவாயில்லை...லேட்டானாலும் ..

   மிக்க நன்றி பூவிழி

   கீதா

   நீக்கு
  2. நம்மளோட கிராஸ் தான் நான் நாமளோடதுதான் வேண்டுமென்று அடமாய் நின்றுவிட்டேன் பசங்களுக்கு ரொம்ப குறை அடங்காது அவ்வ்ளவு சீக்கிரம் இதே breed என்றால் அடங்கும் சொன்னதை கேட்டு என்று அது எதற்க்கு நமக்கு சண்டி தனம் பண்ணவில்லையென்றால் நாமெல்லாம் பிள்ளைகளை வளர்க்கவே மாட்டோம் நாம ஜீன் அப்படி என்ன சொல்லுறீங்க சிஸ்

   நீக்கு
 18. கீதா சிஸ் ஹா ஹா கண்ணழகி பற்றி சொல்லிய விதம் மிகவும் சுவராசியாமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் நீங்க சொல்லியது எல்லாம் ரசித்து படித்தேன் என் வீட்டிலும் கண்ணழகர் ஒரு செல்லம் இருக்கிறார் ஆனால் இவர் கிராஸ் இனத்தை சேர்ந்தவர் நானும் இவரை பற்றி எழுதணும் நினைப்பேன் உங்கள் பதிவை பார்த்தவுடன் நிறைய சொல்லணும் விஷயம் வருகிறது ஆனால் இரவு ஆகிவிட்டதால் இங்கு இப்பொது முடிக்கிறேன் லேட்டா வந்துவிட்டேன் குறையாக உள்ளது

  பதிலளிநீக்கு
 19. //(அவள் என் கைப்பிடியில் இருக்கும் வரைதான் அந்த உறுமல். தனியாக ஓடிப் போன சமயத்தில் எல்லாம் வால் பின் கால்கள் இரண்டிற்கும் இடையில்தான் இருக்கும்.///

  ஹா ஹா ஹா இது பொதுவா பப்பீஸ் வளர்க்கும் எஜமானர்கள் எல்லோரும் சொல்லும் கதைதான் கீதா, கையை விட்டால் ஓடி வந்து காலுக்குள் நிற்பினம், கையில பிடிச்சிருக்கும்போதுதான் அவர்களின் வீரமெல்லாம்... கேட்க நல்லாயிருக்கு:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளர்ந்தப்புறமும் அப்படித்தான் அதிரா...பப்பிகள் அப்படி..வளர்ந்தவள் ஓடிப் போனாலும் வேறு பைரவர்கள் இவளை அட்டாக் செய்ய வந்து உறுமிக்கொண்டே இருப்பார்கள் பக்கத்தில் வந்து அப்போ இவள் வால் இருகால்களுக்கிடையில் வைத்துக் கொண்டு யாரோ எதற்கோ கத்துகிறார்கள் என்று நினைப்பது போல் அசையாமல் நின்று கொண்டே இருப்பாள். ஒரு சிலரிடம் மட்டும் இவளும் உறுமுவாள்...அது அவர்களுக்கு நன்றாகத் தெரியும் யாரிடம் உறுமலாம் யாரிடம் அடங்கிப் போகோணும் என்று...மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 20. //சாப்பாட்டை விட ஊர் சுற்ற ரொம்பவே பிடிக்கும். தாயைப்(என்னைப்) போல் சேய்!//

  ஹா ஹா ஹா வருங்காலத்துக்கு உதவும் என, என் டயறியில் குறிச்சு வைத்திட்டேன்ன்:)..

  ///குப்பைகளும் செடிகளும் நிறைந்த இடத்தில் அவளது இயற்கை அழைப்பை முடித்துக் கொள்ள,//

  ஹா ஹா ஹா நல்லாத்தான் தமிழ் துள்ளி விளையாடுது கீதாவிடம்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஹா ஹா ஹா வருங்காலத்துக்கு உதவும் என, என் டயறியில் குறிச்சு வைத்திட்டேன்ன்:)..//

   ஹா ஹா ஹா இதை அடிக்கும் போது மாஸ்டர் செஃப், கவிப்புயல், ஆஷா போன்ஸ்லே அதிராவை நினைத்துக் கொண்டேதான் அடித்தேனாக்கும்....இன்று கூட எ பியில் உங்களுக்குக் பொறுக்கி எடுக்க ஒன்று இருக்கு...ஹா ஹா ஹா

   அதிரா ஐயோ ஒரே வெக்கமா போச்சு என் தமிழ நல்லாருக்குனு சொன்னது....துரை சகோ, கரந்தை சகோ எல்லாம் புகுந்து விளையாடுவாங்க..நமக்கு அப்படி எல்லாம் வராது..சரி போட்டும் நம்ம சர்க்கிள்ல சொல்லிக்கிட்டாத்தானே ஆச்சு ஸோ உங்களுக்கு நன்றி..ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. இல்லை கீதா சிஸ்உங்க தமிழ் நிஜமா மிக நன்றாக கோர்வையாக வருகிறது ஹீ ஹீ திரும்பவும் கண்ணழகி பற்றி படிக்கச் வந்துவிட்டேன் நேற்று இரவில் படித்தது திருப்தியாக இல்லை

   நீக்கு
  3. ஆ!!! மிக்க நன்றி பூவிழி!!! மீண்டும் வந்து படித்தமைக்கு....எழுதுங்க பூவிழி உங்க செல்லம் பத்தியும் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை எல்லாம் எழுத எழுத வந்துரும்....

   உங்கள் பாராட்டுக்கு நன்றி... அதிராவின் மொழியில் சொல்லணும்னா..ஷை ஷையா வருது!!!! இப்ப அதிரா சொல்லறது எல்லாம் நான் என் கஸின்ஸோடு இருக்கும் போது ரொம்ப ஜாலியா இருக்கும் அப்ப நான் இப்படித்தான் நிறைய பேசி அவங்க எல்லாம் சிரிப்பாங்க.சினிமாவைக் கேலி செய்யறாது...முகத்தை அந்தக் காலத்து நடிகைகள் வெட்கப்படும் போது செய்வது போல செய்து சிரிக்க வைப்பது என்று அப்புறம்..கிண்டல் செய்து டான்ஸ் ஆடுவேன் நிறைய அதெல்லாம் கோல்டன் டேய்ஸ்...

   மிக்க நன்றி பூவிழி...

   கீதா

   நீக்கு
 21. //ஓடு காலியாக இருந்தவள் இப்போது வீட்டை விட்டு ஓடுவதில்லை. புத்தி தெளிந்துவிட்டது!)//

  ஓடுகாலி என்றால், வீட்டில் இருக்காமல் அலைபவர்கள் என அர்த்தமோ கீதா?:).. இருப்பினும் கண்ணழகியை ஓடுகாலி எனச் சொன்னமைக்காக, பிரி டபிள்யூ 324 ஆம் சட்டப்படி.. இன்னொரு குட்டிக் கண்ணழகன்:) உடனேயே வாங்கி, அது கண்ணழகிக்குத் தம்பி எனச் சொல்லி வளர்க்கோணும் என பிரித்தானிய நீதிமன்றம் ஆணையிடுகிறது:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோமிங்க் அல்ல...ஓடு காலி என்றால் பொதுவாக, வீட்டை விட்டு ஓடிப்போகும் நபர்களைச் சொல்லுவார்கள்..என் கண்ணழகி அப்படி சில முறை வீட்டுக் கதவு தெரியாமல் திறந்திருந்தால் ஓடிப் போயிருக்காள். போவதில் ஒன்றுமில்லை. இங்கெல்லாம் பப்ளிக் ஹெல்த் நன்றாக இல்லை. இவள் குப்பையில் கண்டதைத் தின்னாமல் வரணும், அப்புறம் தெருவில் வாழும் மற்ற செல்லங்களுக்கு இவள் பழக்கம் இல்லைலயா அப்போ சில கடித்துவிடுவார்கள். அவர்களுக்கு ஊசி போட்டிருக்காதே ஸோ ரேபிஸ் வந்துவிட்டால்??!! அதனால்..ஓடிப் போனால் அவளைத் தேடிக் கண்டுபிடிக்க முதலில் ரொம்ப சிரம்ப்பட்டோம். இரண்டு மூன்று தெருக்கள் சென்றுவிடுவாள். முடியாத போது...எப்படியும் இங்கு வந்து தானே ஆகணும்னு விட்டுருவோம். அப்போ திரும்ப வந்து கீழே எங்கள் குடியிருப்பின் கேட் மூடியிருந்தால் அங்கேயே இருப்பாள். நான் பால்கனி வழியாகப் பார்த்துவிட்டால் ஓடிப் போய் தூக்கிக்கொண்டு வந்துவிடுவேன். சில சம்யம் தேடும் போது எங்களைக் கண்டு விட்டால் கூடக் கொஞ்சம் ஓடிப் போவாள். அப்புறம் கொஞ்சம் திட்டி வீட்டிற்குக் கொண்டு வந்தால் குற்ற உணர்வில் அப்படியெ பாவமாகப் பார்த்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நல்ல பிள்ளை போல் உடம்பை வளைத்துக் கொண்டு இருப்பாள். அதெல்லாம் 2 3 நாள் தான் ஹா ஹா அப்புறம் மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் போது ஓடிடுவாள். அப்புறம் தெரிந்துவிட்டது அவள் எங்கு போயிருப்பாள் என்று நேராக அந்த வழியே சென்று என் மகன் அல்லது நான் லபக் என்று அவளைப் பிடித்துக் கொண்டு வந்துவிடுவோம்...இப்ப எல்லாம் போவதில்லை...

   ஹா ஹா ஹா உங்கள் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் அவள் விட மாட்டாளே...ஆல்ஃபா டாக் அவள்....ஆனால் இனி வளர்த்தால் அப்படி இரண்டு மூன்று சண்டை போடாமல் இருக்கப் பழக்கி வளர்க்கணும்னு மகன் சொல்லுவான்..

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எங்கள் டெய்சியும் அப்படித்தான், சிலநேரங்களில் வாங்கோ டெய்சி என்றால் ஓடுவா.. ஓடி மரத்தில் ஏறுவா.. முயல்போல குறுக்க குறுக்க ஓடுவா.. அது அவர்களுக்கான ஒரு விளையாட்டு.

   நீக்கு
  3. ஆஹா வெரி க்யூட் டெய்ஸி!!!! என்னோட அன்பை அவளுக்குச் சொல்லிடுங்க!! ஆமாம் அவங்க விளையாட்டு!!

   கீதா

   நீக்கு
 22. //ஓ! கண்ணழகியின் ஜொள்ளின் ரகசியம் புரிந்தது! அவனும் இவளைப் பார்த்து அருகில் வர முயற்சி செய்ய//

  ஓ அண்ணலும் நோக்கிங்:) .. ஐ அழகியும் நோக்கிங்:) ஆ?:) ஹா ஹா ஹா இதுக்குத்தான் பொம்பிளைப்பிள்ளைகளை அடக்கொடுக்கமா.. பத்திரமா வீட்டில வச்சிருக்கோணுமென்பது:)... அம்மாவே பிள்ளையைக் கூட்டிக் கொடுத்த கதையாகிடப்போகுதே முருகா.. நான் இப்போ என்ன பண்ணுவேன்ன்ன்ன்:)).

  /// “உங்கள் நாயை சற்றுத் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள்.”//

  ஓ மை கோட் நிஜமாவோ கீதா? இப்படிச் சொல்லுவார்களோ? என்ன மனிதர்கள்.. தன்னுடையதைப் போலத்தானே அடுத்த வீட்டுச் செல்லமும்..

  உண்மைதான் கீதா, நம் நாடுகளில், தம்மைப்போல அடுத்தவர் இருந்தால் பிடிக்காது.. வீடு, கார், உடை, நகை, அனைத்திலும் தம்மிடம் தான் உயர்வானது இருக்கோணும் எனும் நினைப்பு...

  அவரிடம் நீங்க சொல்லியிருக்கலாம்.. ஐயா பெரியவரே நீங்க பஞ்சு மெத்தை போட்ட பெட் ரூமில் பூட்டி வச்சு வளர்த்தாலும், அதுக்கு நோய் நொடி வரோணும் என விதியில் எழுதியிருந்தால் அது வந்துதான் தீரும், இப்படி அடுத்த வீட்டுச் செல்லம் முட்டுவதால் ஒன்றும் ஆகிடாது என...

  நம் செல்லங்களுக்கு தம் போன்ற பிறரைக் கண்டால் பேசோணும் விளையாடோணும் எனும் ஆசை இயல்பா வரும்தானே... எனக்கு அந்த ஆளை நினைச்சால் கெட்ட கோபம் வருதூஊஊஊஊ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா இதுக்குத்தான் பொம்பிளைப்பிள்ளைகளை அடக்கொடுக்கமா.. பத்திரமா வீட்டில வச்சிருக்கோணுமென்பது:)... அம்மாவே பிள்ளையைக் கூட்டிக் கொடுத்த கதையாகிடப்போகுதே முருகா.. நான் இப்போ என்ன பண்ணுவேன்ன்ன்ன்:)).//

   ஹா ஹா ஹா ஹா ஆமாம் அதிரா அதான் அவளை அடக்க ஒடுக்கமா வீட்டுல வைச்சுருக்கேன்....ஹிஹிஹி..

   //ஓ மை கோட் நிஜமாவோ கீதா? இப்படிச் சொல்லுவார்களோ? என்ன மனிதர்கள்.. தன்னுடையதைப் போலத்தானே அடுத்த வீட்டுச் செல்லமும்..

   உண்மைதான் கீதா, நம் நாடுகளில், தம்மைப்போல அடுத்தவர் இருந்தால் பிடிக்காது.. வீடு, கார், உடை, நகை, அனைத்திலும் தம்மிடம் தான் உயர்வானது இருக்கோணும் எனும் நினைப்பு//

   யெஸ் ப்ரீட் வளர்ப்பதும் ஒரு ஸ்டேட்டஸ் சிம்ம்பல் அதிரா....பூஸாரிலும் அப்படித்தான்.. பைரவரிலும் அப்படித்தான்...நீங்கள் சொல்லியிருக்கீங்களே நகை எட்ஸற்றா...யெஸ் புடவை ..எல்லாமே.

   நான் இந்தப் பக்கமே போக மாட்டேன்.

   அப்புறம் அவங்க ஒரு பெண்மணி அதிரா...அப்ப்டி ஒரு சிலர் உண்டு. என் மகனும் சொல்லுவான் முன்பு...இங்கு க்ளினிக்கில் வேலை செய்தப்ப...

   //நம் செல்லங்களுக்கு தம் போன்ற பிறரைக் கண்டால் பேசோணும் விளையாடோணும் எனும் ஆசை இயல்பா வரும்தானே... எனக்கு அந்த ஆளை நினைச்சால் கெட்ட கோபம் வருதூஊஊஊஊ..//

   ஆமாம் அதிரா...வரும்.. ஆனால் எனக்குக் கோபம் வரலை..."அவங்களுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்..கடவுளே அவங்களுக்கும் நல்ல மனதைக் கொடுனு " ப்ரேபண்ணிக்கிட்டேன்...இதுவும் என் வழக்கங்களில் ஒன்று...அதிரா

   கீதா

   நீக்கு
  2. நானும் சொல்கிறேனெ தவிர நேரில் எனில் பொயிங்க மாட்டேன்:) ஒரு ஸ்மைல் அண்ட் சொறி.. அத்தோடு விலகிடுவேன்..

   ஆனா ஒரு ஐடியா சொல்கிறேன் கீதா, நெக்ஸ்ட் ரைம் கண்ணழகியை அவவின் டோக்ஸ் க்கு கிட்ட கொண்டு போயிட்டு:) டக்கென பெரிசா சொல்லுங்கோ... ஆஆஆ கண்ணழகி ஆரையும் தொட்டிடாதே உனக்கு அலர்ஜி ஆகிடும்.. என ஹா ஹா ஹா மிரண்டு போயிடுவா:)) எப்பூடி என் ஐடியா?:)... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதுக்காகவே எனக்கு நீங்க இன்னொரு பட்டம் வழங்கலாம்:))

   நீக்கு
  3. ஹைஃபைவ்!!! அதிரா முதல் லைனுக்கு...

   உங்க ஐடியா ஹா ஹா ஹா ஹா நல்லாருக்கே!!! ஹா ரசித்தேன் நல்ல ஐடியா...அதிராவா கொக்கா!!

   அப்ப இனி புது அடைமொழி....ஐடியாபாட் அதிராவா??!!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 23. சிப்பிப்பாறை.... கேட்கும்போதே நல்லா இருக்கு.. ஆனா என்னமோ எனக்கு இவ்வகை பிரீட் விருப்பமில்லை கீதா... கோம்பையன் ஹா ஹா ஹா நல்ல பெயர்கள்.. அந்த வகை பிடிக்கும்.

  /// கழுத்துப்பட்டையுடன் அவிழ்த்துவிடப்பட்ட கழுதை! ஓ! மன்னிக்கவும்! பைரவர்! //
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்*956743

  ///அப்படியான கண்ணழகி சமீபகாலமாக ராஜபாளையத்துக்காரன் எதிரில் வந்ததும் வாலை ஆட்டுகிறாள். நின்று நிதானித்து அவனைப் பார்க்கிறாள். குரல் எழுப்புகிறாள்! அவன் தூது விடும் போது என்னை முகர்ந்து வாலை ஆட்டிப் பரபரக்கிறாள். உடனே பால்கனிக்குச் சென்று ஓட்டை வழியாகத் தலையை நுழைத்துத் தெருவில் இருக்கிறானா என்று எட்டிப் பார்க்கிறாள். ///

  ஆஹா ஆரம்பமாகிட்டுது லவ்வூஊஊ:)).. கீதா நான் கண்ணழகிக்கு ஊக்கேல மாப்பிள்ளை பார்க்கட்டோ.. ஸ்பொன்சரில கூப்பிடுவார்... நீங்க மகனிடம் போக வரும்போது எட்டிப் பார்க்கலாம்:).. என்ன வைர நெக்லெஸ், வைர சங்கிலி:) அப்பூடி எதிர்ப்பார்ப்பார் ஊக்கே மாப்பிள்ளை:)) ஓகே எனில் சொல்லுங்கோ:).. நகையை என்னிடம் தாங்கோ மீ லொக்கரில் பத்திரமா வச்சிருந்து குடுப்பன்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ தாரளமா பாருங்கோ அதிரா...ஆனா என் கண்ணழகி நட்புடன் மட்டுமே இருக்க முடியும். குடும்பம் நடத்த முடியாது. அவள் தலைமுறை பெருக்கும் உறுப்புகள் எல்லாம் என் மகன் எடுத்துப் போட்டாச்சே. முதலில் நாங்கள் நினைத்தோம் ஒரு முறை அவள் இந்த இயற்கை உணர்வை அனுபவிக்கட்டும் என்று. அப்புறம் ஏனோ என் மகன் வேண்டாம் அவர்களுக்குச் சில சமயம் இந்த உறுப்புகளினால் மிகவும் காமணாக இருக்கும் கான்சர் வந்துவிடும் என்று ப்ரொனிக்கும் இவளுக்கும் எடுத்துவிட்டான்.

   ஹா ஹா ஹா நகையா?!!!! ஆ!!! சரி எனக்குப் போடும் பழக்கம், ஆசை எதுவும் இல்லைனாலும் கண்ணழகிக்கு வாங்கிக் கொடுத்துடறேன்...ஹா ஹா ஹா ஹா அதிராவுக்கு இல்லாததா...சொல்லுங்கோ...

   கீதா

   நீக்கு
 24. ////அவர்களிடம் நான் சொல்லவும் செய்தேன் இவள் இங்குப் புற்களை மட்டும் சாப்பிடுவாள் வேறு எதுவும் செய்ய மாட்டாள் என்று. அடுத்த நாள் அந்த வீட்டு வாசல் வெற்றிடமாக இருந்தது. பாவம் கண்ணழகி!///

  ஹையோ முருகா சிரிப்பதா அழுவதா.. இந்தச் சனங்களைச் சுனாமி வந்து அள்ள:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதை ஏன் கேக்கறீங்க இங்க இதெல்லாம் ரொம்ப சகஜம். என்ன செய்ய...ஆ சுனாமியா அது எங்களையும் இழுத்துப் போய்டுமே...ஸ்ரீராமும் இருக்காரே..கௌதம் அண்ணா பங்களூஉரில் தான். பானுக்காவும் இங்க தான் இருக்காங்க...

   கீதா

   நீக்கு
 25. கண்ணழகி எனச் சொல்லிப்போட்டு கடசிவரை கண்ணைக் காட்டவே இல்லையே கர்:).. ஆனா இவவுக்குத்தானே உண்மையில் பிரெளனி எனப் பெயர் வச்சிருக்கோணும்...

  கண்ணழகியை.. மிஸிஸ் யூக்கே ஆக்கிடுவோம்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ சரிதான் நான் போட்டிருக்கணும்...சரி விசனம் வேண்டாம் அடுத்த பதிவில் இருவரின் படங்களையும் போட்டுடறேன். அது ஃபோட்டோ செஷன் தான் பெரும்பாலும்...

   ஹா ஹா ஹா ஹா...மிஸ் யுகே ஆக்கிடுவோம்...பூசாரே எங்களுக்கு மிஸிஸ் சொல்லப் பிடிக்காதாக்கும். மிஸ் தான் ஹிஹிஹிஹி
   கீதா

   நீக்கு
 26. ஹா ஹா ஹா //நானும் ரௌடிதான்// அழகா வர்ணிச்சிட்டீங்க
  புல் சாப்பிட்டது கூட இப்படியா ??என்ன சிஸ் இது ?ஆனா நிஜமா நம் நாட்டு குழந்தைகளை பார்த்தால் ரொம்பதான் பண்ணுவாங்க சிலர் ஆஸ்ப்பிடல் போகும் போது பார்த்திருக்கிறேன் லவ் வந்துடுச்சா சூப்பர் ஹா ஹா பிரன்ஷிப் தேடும் சிஸ்
  //கழுத்துப்பட்டையுடன் அவிழ்த்துவிடப்பட்ட கழுதை! ஓ! மன்னிக்கவும்! பைரவர்!// சூப்பர் சூப்பர் உங்க எழுத்து நடை
  /“இனம்(breed) என்றால் “ஓ! என்றும் (இதை நீங்கள் புருவங்களை உயர்த்தி, கண்களை விரித்து, உதடுகளைக் குவித்து உதரவிதானத்திலிருந்து(diaphragm) சொல்லிப் பார்க்க வேண்டும்!) நாட்டு வகை என்றால் கொஞ்சம் அடக்கமான “ஓ” (இது தொண்டையிலிருந்து டெசிபல் குறைவாக) அல்லது “ம்ம்” என்ற பதிலாகத்தான் இருக்கும். “ஐ லவ் டாக்ஸ்” என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள்.//செம நடை
  //ஸீரோ டயட்டில்! ஸ்லிம் ப்யூட்டியாய் பைரவர்க்கே உரிய வடிவத்துடன் இருக்க வேண்டித் தன் சாப்பாட்டை அளவோடு சாப்பிட்டு, புல், பூஷணி, கோவைக்காய் இலைகளைத் தின்னத் தொடங்கியிருக்கிறாள்!!!! // அட பாருடா
  மிகவும் ரசித்தேன் திரும்பவும் படித்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மிக்க நன்றி பூவிழி ரசித்ததற்கும்....மீண்டும் படித்து ரசித்தமைக்கும்...

   கீதா

   நீக்கு
 27. கண்ணழகி குறித்த பதிவு பாராட்டத்தக்கது. சாதி பார்க்கும் "நாய்களை" என்ன சொல்வது?

  உங்கள் பதிவை வாசிக்கும்போது "பாபியும் அதன் பேபியும்" பதிவு ஞாபகத்திற்கு வருகிறது.

  கண்ணழகிக்கு சுத்திப்போடுங்க ஊர் கண்ணு உலக கண்ணு எல்லாம் பட்டு இருக்கும்.

  கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கோ! ரொம்ப நாள் ஆகிவிட்டதே தங்களைப் பார்த்து. ஆமாம் இவர்களிடம் கூட இனம் பார்க்கிறார்கள். "பாபியும் அதன் பேபியும்" தங்கள் பதிவு இப்போ வாசித்துவிட்டேன். மனம் கனத்துப்போனது. நல்லதொரு அன்பான மனிதர்களிடம் தான் வந்திருக்கிறது. பாருங்கள்...தன் இறுதி நாட்களை அன்பு மிக்க மனிதர்களுடன் கழித்திருக்கிறது. பாவம் பாபி! வளர்க்கும் வரை சந்தோஷமாக இருக்கும். பிரியும் போதுதான் வேதனை...

   சுத்திப் போட்டுடறேன்..ஹா ஹா ஹா ஹா...

   மிக்க நன்றி கோ..

   கீதா

   நீக்கு
 28. கண்ணழகிக்கு வாழ்த்துக்கள்
  எங்கள் வீட்டிலும் ஒரு பமரேனியன் இருக்கிறது
  பதிவை ரசித்தேன்
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் சகோ உங்கள் வீட்டிலும் இருப்பது தெரியும். அழகு செல்லம். அதன் புகைப்படமும் கூடப் பார்த்திருக்கேன்...

   மிக்க நன்றி கரந்தை சகோ ரசித்தமைக்கு

   நீக்கு
 29. உங்களின் ஆர்வத்தையும், ரசனையையும், மனிதாபிமானத்தையும் புரிந்துகொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்கள் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 30. பதில்கள்
  1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 31. கண்ணழகி காவியத்தைப் படித்துமுடிதேன்- இன்னொரு காபியைப் போட்டுவைத்துக்கொண்டு.. நன்னாப் பாத்துக்கங்க.

  நகர்வாழ் மனிதர்கள் பலரிடம் நளினம், நாகரிகம் என்பது இல்லை. காசு இருக்கிறது. கல்மிஷம் நிறையவே இருக்கிறது. கனிவு அறவே இல்லை. இவர்கள் நாய் வளர்ப்பது நாலுபேருக்குத் தெரியணும்ங்கறதுக்காக. ஒருவேளை – என்னவிட என் நாய் நல்லது, எவ்வளவோ மேல்ன்னு தெரியப்படுத்த வெளில கூட்டிகிட்டு வர்றாங்களோ…?

  உங்கள் புண்ணியத்தில் நமது நாட்டுவகைகளின் படங்கள் பார்க்கமுடிந்தது. நாட்டு நாய்களே என்னைப் பொறுத்தவரை உயர்ந்தவை. அவைகள் நம் மண்ணுக்கெனக் கடவுளின் ஃபேக்டரியில் தயாரானவை. ராஜபாளையம் என்றதும் என் இருபதுகள் ஞாபகத்தில். டிஎன்பிஎஸ்சி-யை முதல் அட்டெம்ப்ட்டில் தூக்கிப்போட்டவுடன், ராஜபாளையம், கிருஷ்ணன்கோவிலுக்கருகிலுள்ள குன்னூரில் சப்-ரிஜிஸ்த்ரார் அலுவலகத்தில் பணியை ஆரம்பித்தேன். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து டவுன் பஸ்ஸில் வந்துசெல்வேன். அது ஒரு கனாக்காலம்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன் ஸார்... குன்னூரா? குன்னத்தூரா? டி கல்லுப்பட்டிக்கும், திருமங்கலத்துக்கும் நடுவே சிறு ஊர். அருகே சேடப்பட்டி. நான் வத்றாப், ஸ்ரீவில்லிப்புத்தூரில் பணிபுரிந்திருக்கிறேன்.

   நீக்கு
  2. ஏகாந்தன் சகோ பைரவர் வளர்ப்பதிலும் ஸ்டேட்டஸ் சிம்பல் இருக்கு...ஆனா திரிஷா அவங்க நாட்டு பைரவர்களைத்தான் காப்பாற்றி வளர்க்கறாங்க..மகன் வேலை செய்த க்ளினிக்கில்.அவங்க அம்மா வருவதைப் பார்த்திருக்கேன்.

   //அவைகள் நம் மண்ணுக்கெனக் கடவுளின் ஃபேக்டரியில் தயாரானவை. //

   ஆமாம்!!!! வரிகள் செம...

   ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து டவுன் பஸ்ஸில் வந்துசெல்வேன். அது ஒரு கனாக்காலம்..!// எல்லோருக்குமே அப்படியான பீரியட் அதாவது இளம் வயது கனாக்காலம் தானோ...இன்னும் வயது கொஞ்சம் ஏறினால் 2017 ஐயும் நாம் கனாக்காலம் என்போமோ என்னமோ?!!!!!!

   ஸ்ரீராம் கேட்டிருக்கும் கேள்வி எனக்கும் எழுந்தது குன்னூரா? டி குன்னத்தூரா என்று..என் நண்பனின் மனைவியின் ஊர் அங்குதான்...அதானால்தான் ..இல்லைனா ஊர்ப் பெயர் எல்லாம் தெரியாதே!! குன்னூர் நாலே மேட்டுப்பாளையம் ஊட்டி வழி ஊர் தான் நினைவுக்கு வரும்...அதுவும் ஒரு காரணம்..

   ஒரே அட்டெம்ப்ட்!!! வாவ்! நான் எல்லாம் நிறைய செய்தும் கிடைக்கலை அதே சமயம்அ எம் ஏ முடித்ததும் எல்டிசி ஸ்டாஃப் செலெக்ஷன் கமிஷன் தேர்வில் இரண்டாவது முறையில் க்ளியர் செய்து டைப்ரைட்டிங்க் டெஸ்ட் எல்லாம் பாஸ் செய்து... வேலை நார்த்தில் ஏதேனும் ஊர் செலக்ட் செய்யலாம்னு நிறைய கொடுத்திருந்தாங்க தில்லி, பஞ்சாப் என்று...தமிழ்நாட்டைத் தவிர....நான் ரெடி எங்கு செல்லவும். ஆனால் சரியாகத் திருமணம் ஃபிக்ஸ் அந்த சமயத்தில்...அதுவரை காத்த பிடிவாதம்..வேலையில் தான் சேருவேன் நோ திருமண்ம் என்று அடம்பிடித்து இருந்ததை அச்சமயம் முடியய்வில்லை என் பிடிவாதத்தையும் தாண்டியது என் அம்மாவின் கெடுபிடிகள், மிரட்டல்கள்...ஆர்டர் வரும் ஒருமாதம் முன் கல்யாணம். ஆர்டர் வந்ததும் அப்பா அனுப்பி வைத்தார் சென்னைக்கு. வீட்டில் வேண்டாம் என்று சொல்லிவிட. ஹும் ..என்ன செய்ய..அப்புறம் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டினேன்!! ஹா ஹா ஹா...

   மிக்க நன்றி சகோ கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 32. @ ஸ்ரீராம் / @ கீதா:

  டி.கல்லுப்பட்டி, திருமங்கலம் எல்லாம் இப்போதுதான் நினைவுக்குவருகிறது. நான் சொல்வது குன்னூர் எனும் வயல்சூழ்ந்த கிராமம். மதுரை-ராஜபாளையம் ரூட்டில் கிருஷ்ணன்கோவில் என்றொரு ஸ்டாப். அதில் இறங்கி செல்லவேண்டும். 1 1/2 கி.மீ தூரத்தில் இருக்கிறது கிராமம். அங்கு ஆறுமாதம். பின்னர் விருதுநகர் ஹெட் ஆஃபீஸ் மாற்றம். அதற்கப்புறம் ராஜிநாமா. டெல்லியில் எக்ஸ்டர்னல் அஃபேர்ஸ். 7 வருடம் டெல்லி. பின் உள்நாட்டு சர்வீஸ் முடிந்து வெளிநாடுகள்- இந்திய தூதரகங்கள் - உலகம் சுற்றிய வாலிபன்.. எனச் செல்கிறது நம் கதை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் க்யூபா தொடர் வாசித்தப்பவே நீங்கள் இந்திய தூதரகம்/எக்ஸ்டெர்னல் அஃபேர்ஸ் சொன்றிருக்கீங்கனு புரிந்து கொள்ள முடிந்தது. இன்னும் இரண்டாவது பார்ட் படிக்கலை...இனிதான் படிக்கணும். நிறைய அனுபவங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்குமே! க்யூபா பத்தி எழுதினது போல் வேறு தொடர்வேறு நாடு பற்றி எழுதியிருக்கீங்களா? இருந்தா லிங்க் கொடுங்களேன்...எனக்குப் பல நாடுகளைப் பற்றி அறிய ரொம்ப ஆவல். அதுவும் நேரில் சென்றவர்கள் சொல்லும் போது...நல்லா இருக்கும்...

   கீதா

   நீக்கு
  2. குன்னூர் அழகான கிராமம் போலத் தெரியுதே..

   மிக்க நன்றி சகோ

   கீதா

   நீக்கு
 33. ஸ்விட்ஸர்லாந்து, சோமாலியாபற்றியும் எழுதியிருக்கிறேன். Countries poles apart. வித்தியாசமான அனுபவங்கள் . படியுங்கள் :
  உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா http://solvanam.com/?p=46967
  ஸ்விட்சர்லாந்து: ஸ்வர்க்கத்தில் சிலவருடங்கள் http://solvanam.com/?p=47138


  ஏகாந்தனில் ‘ப்ராப்தம்’ கவிதையில் ‘வெந்ததா ..வேகாததா..’ என்பதின் சந்தத்தைக் கவனித்தீர்களா? ரவிச்சந்திரன் படமான நினைவில் நிறைந்தவளில் வரும் ‘தொட்டதா..தொடாததா.. தென்றலே படாததா..என்னதான் கன்னமோ..மின்னலாய் மின்னுமோ..’ என்கிற பாடலின் மெட்டில் அமைந்திருக்கிறது எனப் புரியவில்லையா ?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை ஸ்விஸ் அண்ட் சோமாலியா!!! சூப்பர் வாசிக்கிறேன் சகோ...ரொம்ப நன்றி...கண்ணழகி காவியத்தில் (!!!!-கண்ணழகி காவியத்தை!! உங்களின் இந்த வரியையும் ரசித்தேன்!!!) சொல்லியது போல் ஊர் சுற்ற ரொமப்ப் பிடிக்கும்..

   வெந்ததா வேகாததா சந்தம் கவனித்தேன் சகோ ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் தெரியாதே...அது நினைவுக்கு வரலை...அந்தப் படமும் தெரியாதே...ஸாரின...எனக்கு நினைவுக்கு வந்தது...முறைக்காதீங்க....கம்யூனிஸ்ட் ஆளுங்க/இந்த ஸ்ட்ரைக் பண்ணுவாங்க இல்லையா அவங்க போடற கோஷம் தான் நினைவுக்கு வந்தது..அப்புறம் விஸ்வநாதா வேலை கொடு - காதலிக்க நேரமில்லையில் ரவிச்சந்திரன் பாடல்.. அது நினைவுக்கு வந்தது... அதை அங்க சொல்ல அடித்து வழக்கம் போல தகராறு வேர்ட் பெரெஸ் சரி அப்புறம் வந்து போடலாம்னு போய்ட்டேன்...

   கீதா

   நீக்கு
 34. அருமையான புராணம். கண்ணழகிக்கு உடல் நலம் பரிபூரணமாய் நன்றாக இருந்து வரப் பிரார்த்திக்கிறேன். ஒன்பது வயசு ஆயிடுச்சுனு சொல்றீங்களே! அதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா ஹா ஹா...,மிக்க நன்றிக்கா...ஆமாம் அக்கா ஃபெப்ருவரி 9 ஆம் 2018 ல் 9. இறந்த ப்ரௌனிக்கும் இதே தான்...

   மிக்க நன்றி அக்கா பிரார்த்தனைகளுக்கும், கருத்திற்கும்

   கீதா

   நீக்கு
 35. ஆச்சரியமா இருக்கு கீதாக்கா...

  எவ்வளவு அழகாக அவங்களை பத்தி சொல்ரீங்க...

  எனக்கெல்லாம் ஒன்னும் தெரியாது...இவங்க எல்லாம் பக்கத்துல வரும் போதே பயமா இருக்கும்...இப்பவெல்லாம் இங்க பதிவுகளில் படிப்பதை வைத்து வாக்கிங் போகும் போது கொஞ்சம் பயப்படாம கவனிக்கிறேன்...

  ஆன ரொம்ப உற்சாகமான அனுபவம் இல்ல..!

  so bleesed you r....

  have a nice day..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனு நீங்க சொல்லாததா....நீங்களும் அழகா சொல்றீங்க...அதெல்லாம் நான் சொல்லுவதில்லையே!!!

   நீங்க வளர்க்கணும்னு கூட இல்லை....பயம் வேண்டா. சும்மா பார்த்தாலே போதும்...அவங்க பண்றத கொஞ்சம் அப்ஸேர்வ் செய்தால் ரொம்ப காமெடியய இருக்கும் சில சமயம். ஸ்வாரஸ்யமா இருக்கும்.

   ஆமா ரொம்ப உற்சாகமான அனுபவம் தான் அனு. என் கண்ணழகியின் சில ஆக்ஷன்ஸ் மற்றும் காட்டும் அன்பு அதைச் சொல்ல வார்த்தைகள் இல்லை அனு

   நாம் எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்தான் அனு..எல்லோருமே...

   மிக்க நன்றி அனு கருத்திற்கு..

   கீதா

   நீக்கு
 36. கண்ணழகி என்ன என்று படிக்கப்போனால் எவ்வளவு விஷயங்கள். எவ்வளவு தெரிந்து கொள்ள முடிந்தது. இம்மாதிரி விஷயங்கள் எதுவுமே தெரியாது. அன்பிற்கு எல்லையில்லை. திரும்பவும் படிக்கிறேன்.அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி காமாட்சி அம்மா....ஆமாம் அன்பிற்கு எல்லையே இல்லைதான். இது போன்று வளர்ப்பதால் தெரிகிறது அம்மா இல்லை என்றால் எனக்கும் எப்படித் தெரியும்...

   மிக்க நன்றி காமாட்சி அம்மா...கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 37. அழகிக்கும் அழகி கிரீட ஆசை.. தலைப்பே அள்ளுதே.. கண்ணழகியின் நடவடிக்கைகளை அணு அணுவாக ரசித்து எழுதியிருக்கீங்க.. வாசிக்கும்போதே அவள் மேல் அன்பு பெருகுகிறது. பின்னூட்டங்கள் அதி சுவாரசியம். எங்கள் வீட்டில் வளர்ப்புச்செல்லம் எதையும் வளர்க்கமுடியாதபடி எனக்கு ஒவ்வாமைப் பிரச்சனை இருப்பதால் என் பிள்ளைகளுக்கு பெரும் வருத்தம். அவர்கள் வளர்ந்து தனி வீடுகளில் வசிக்கும்போது விருப்பம் போல வளர்க்கச் சொல்லியிருக்கிறேன். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழி கீதா தலைப்பை ரசித்தமைக்கு. ஆமாம் ஒவ்வாமைப் பிரச்சனை இருந்தால் கஷ்டம்தான். நல்ல யோசனை பிள்ளைகள் தனித்தனி வீடுகளில் வசிக்கும் போது விருப்பம் போல வளர்க்கச் சொன்னது...உங்களுக்கும் ஆசை உண்டு என்பது தெரியும்...நீங்கள் எத்தனை இயற்கைக் காட்சிகளை, மலர்களை, செடிகளை, விலங்குகள் பறவைகள் என்று படம் பிடித்துப் போடுகின்றீர்கள்...

   மிக்க நன்றி கீதா மதிவாணன்...

   கீதா

   நீக்கு
 38. நாயைப் பற்றி மன்னிக்கவும், கண்ணழகி பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்கள். எங்கள் வீட்டில் என் மகளைத் தவிர மற்றவர்களுக்கு பெட் அனிமல்கள் வளர்ப்பதில் ஆர்வம் இல்லை. என் மகளிடம் தெரு நாய்கள் கூட ஒட்டிக் கொள்ளும், அவளும் அவற்றை அன்போடு கொஞ்சுவாள். தனக்கு ஒரு நாய் வாங்கித் தரும்படி பல முறை அவ கேட்டிருக்கிறாள், நான்தான் அபார்ட்மெண்டில் நாய் வளர்ப்பது கடினம் என்று மறுத்து விட்டேன். எனிவே பெஸ்ட் விஷஸ் டு கண்ணழகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா முதல் வரிக்கு இந்தச் சிரிப்பு..ஹை உங்கள் மகளும் எங்கக் கட்சியா...சூப்பர். கண்ணழகியை அழகிப் போட்டிக்கு எல்லாம் கொண்டு செல்வதில்லை பானுக்கா...சும்மா ஒரு கற்பனைதான்...அதில் சில நிகழ்வுகளையும் கலந்துள்ளேன்

   மிக்க நன்றி பானுக்கா கருத்திற்கு

   நீக்கு