சனி, 3 ஜூன், 2017

திருவிளையாடல்

Image result for திருவிளையாடல்
படம் இணையத்திலிருந்து

சிவபெருமான் பல அவதாரங்கள் எடுத்தும், பலரது மனதிலிருந்து அவர்களை ஆட்டுவித்தும் மனித இனத்திற்குப் பல படிப்பினைகளை உணரச் செய்த ஏராளமான சம்பவங்களடங்கிய திரைப்படம் தான் திருவிளையாடல். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் அற்புதமான நடிப்பு! நினைக்கையில் இப்போதும் உடல் சிலிர்க்கிறது. கடந்த சனியன்று (27-05-2017) காலை நிலம்பூர் அருகே பூக்கோட்டும்பாடம் எனுமிடத்திலுள்ள வில்வத்து சிவாலயத்தில் சிவலிங்கமும், விஷ்ணு சிலையும் தகர்க்கப்பட்ட செய்தி காட்டுத் தீயாய் நாடெங்கும் பரவியது. தொலைக்காட்சிகளிலும், முகநூலிலும் வந்த செய்திகளும், அவை ஏற்படுத்திய பரபரப்பும் மீண்டும் மலபாரில் 1921ல் ஏற்பட்ட கலாபம் (மதகலவரம்) போல் ஒன்று ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தை எல்லோரது மனதிலும் ஏற்படுத்தியது. பல அரசியல் கட்சிகளும், அரசியல் பிரமுகர்களும் பல கருத்துகளுடன் வலம் வந்தனர்.

சில தினங்களுக்கு முன் வாணாபுரம் அம்மன் கோவிலிலும் இது போல் ஒரு சம்பவம் நடந்திருந்தது. அம்மனின் விக்ரகம் தகர்க்கப்படவில்லை. ஆனால் அம்மனின் விக்கிரகத்தின் மீது உடுத்தப்பட்ட பட்டாடை தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் என்ற கருத்துடன் சிலர். இடையில் மாட்டிறைச்சி கேரள மக்களுக்குக் கிட்டாக் கனியாகும் என்ற செய்தி எரிகிற தீயில் எண்ணை ஊற்றியது போல். பா.ஜ.க கட்சியின் பிரமுகர்களும், அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி பிரமுகர்களும் காரசாரமாக வாக்குவாதம் செய்வதைப் பார்த்த சாதாரணக் கேரள மக்கள் என்னாகுமோ? ஏதாகுமோ என்று அஞ்சி நிலை குலைந்த நேரம். திறமையுள்ள போலீஸ்காரர்கள் இதற்கெல்லாம் செவி கொடுக்காமல் வலை வீசி அடுத்த நாளே நிலம்பூர் அருகேயுள்ள மம்பாடு எனுமிடத்தில், கட்டிட வேலை செய்துவரும், திருவனந்தபுரம் கிளிமானூரைச் சேர்ந்த மோகன் குமாரைக் கைது செய்தேவிட்டனர்.
படம் இணையத்திலிருந்து
கையில் விலங்குடன், போலீசாருடன், சேதமாக்கப்பட்ட சிவலிங்கம் மற்றும் விஷ்ணு விக்கிரகங்களுள்ள கோயிலுக்குக் கொண்டு வரப்பட்ட மோகன் குமாரை சானல்களில் கண்ட சமாதான விரும்பிகளான கேரள மக்களுக்கு அப்போதுதான் போன உயிர் திரும்பவந்தது. நெற்றியில் குங்குமமும், முறுக்கிய மீசையுடனும் மனநிலை சரியில்லாதவர்கள் பார்க்கும் பார்வையுடன் தென்பட்ட மோகன் குமாரைக் கண்டதும் எனக்கு என்னவோ திடீரென திருவிளையாடல் படம் தான் நினைவுக்கு வந்தது. ஏன் என்பது இடுகையைப் படித்து முடித்ததும் உங்களுக்கே புரிந்துவிடும்.

அப்போது மோஹன் குமாருக்கு 13 வயது. சர்க்கரை திருடியதால் அவனது தாயார் அடி கொடுக்க, கல்லெடுத்து எறிந்து தாயைக் காயப்படுத்தி ஓடிய மோஹன் குமார் அதன் பின் வீட்டிற்குப் போனதே இல்லை. நாடோடியாய்த் திரிந்த மோஹன் குமாருக்கு இப்போது வயது 45. இதனிடையே சந்தா பணம் தரவில்லை என்ற காரணத்தால் ஒரு வயதான பெண்மணியைக் குளத்தில் தள்ளிவிட்டு கொலையும் செய்து தப்பியிருக்கிறார். இடையில் எப்போதோ ஒரு சோதிடனைக் கண்டு தன் வாழ்வில் ஏன் இப்படி நிம்மதியில்லாதிருக்கிறது என்று கேட்க, சோதிடன் “அது பிராமண சாபம்” என்று சொல்ல, மோஹன் குமார் முதலில் பூசாரிகளை வெறுக்க ஆரம்பித்திருக்கிறார். பின் படிப்படியாக அந்த வெறுப்பு பூசாரிகளுக்கு ஒரு நீதியும், சாதாரண மக்களுக்கு வேறு நீதியும் வழங்கும் இறைவன் மீது திரும்பியிருக்கிறது.

அவர் தங்குமிடத்தில் யாராவது இறைவனின் படம் வைத்து வணங்குவதைக் கண்டால் இறைவனையும், வணங்குபவரையும் ஏசுவதுண்டாம். இப்படிப்பட்ட மோஹன் குமார் கடந்த வெள்ளிக்கிழமை பூக்கோட்டும்பாடம் வில்வத்து கோயிலுக்குச் சென்று அர்ச்சனைச் சீட்டு வாங்கி அர்ச்சனை செய்து, கோயிலுக்குள் நுழைய எளிதான வழி ஓட்டைப் பிரித்து இறங்குவது என முடிவும் செய்துவிட்டார் சனி நள்ளிரவு தன் கைவரிசையைக் காண்பித்து, கோயில் முன்பிலுள்ள ஒரு கொட்டகையில் உறங்கியிருக்கிறார். அதிகாலை எழுந்து கோயிலுக்குச் சென்ற ஒருவரிடம், “கோயில் எப்போது திறப்பார்கள்? அங்கு ஏதோ அசம்பாவிதம் சம்பவித்திருக்கிறது” என்று சொல்லியும் இருக்கிறார். எப்படியோ? இப்படித் நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல் நடந்து கொண்டதால்தான் போலீசார் அவரை எளிதாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய முடிந்திருக்கிறது.

வில்வத்து கோயில் என்றழைக்கப்படும் அச்சிவாயலத்தில் ஓரிரு வருடங்களுக்கு முன்பு “தேவ பிரஸ்னம்” வைத்துப் பார்க்கையில் அக்கோயிலில் சிவன் மட்டுமல்ல, விஷ்ணுவின் சைதன்யமும் உண்டு என்று கண்டுபிடித்து விஷ்ணுவுக்கு ஒரு கோயில் கட்டி, சிவனுக்குச் சமமான முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கடந்த ஓரிரு வருடங்களில் சப்தாகம் போன்ற விஷ்ணுவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஆராதனை முறைகள் அதிகமாக நடந்து வருகிறது. இப்படிப்பட்ட புதிய சம்பிரதாயங்கள் தேவையற்றது என்று சிலர் கருத்துச் சொன்னதைச் செவிகொள்ளாமல் சைவ, வைணவ சம்பிரதாயங்களைக் கூட்டிக் குழைத்தவர்கள் இப்போது நடந்த இச்சம்பவங்களால் நிலை குலைந்து போயிருக்கிறார்கள்.

“இது சிவனின் திருவிளையாடலாக (சிவலீலை) இருக்குமோ? சிவனுக்குச் சமமாக விஷ்ணுவைக் கொண்டு வந்தது பிடிக்காமல் போனதால் மோஹன் குமாரது மனதில் இத்தகைய எண்ணத்தை விதைத்துத் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாரோ” என்று சிலர் கேட்க மற்ற சிலர், “இது கேரளம். இங்கு தந்திரிதான் கோவிலுக்குத் தந்தை. இறைவனை கோயிலில் பிரதிஷ்ட்டை செய்தவர். இறைவனுக்கும் மேலே! ‘தேவப்பிரஸ்னம்’ வைத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு குருவாயூரில் சிவனையும், பார்வதியையும் மம்மியூருக்குக் குடிபெயர்த்தது போல், வில்வத்து சிவனை அமரம்பலத்திற்குக் குடிமாற்றி, விஷ்ணுவை வில்வத்து நாதனாக்கி விடுவார்கள்” என்கிறார்கள்!


ஆமாம், கேரள மக்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. மாட்டிறைச்சிக்கு ஒரு தீர்மானம் வேண்டும். மாணி (மாணி காங்கிரஸ் தலைவர்-கேரளத்தில் மூன்றாவது பெரிய கட்சி) ஒரு தீர்மானம் உடனே எடுக்க வேண்டும். அவர் காங்கிரஸ் கூட்டணியுடனா? அல்லது கம்யூனிஸ்ட் கூட்டணியுடனா? இல்லை பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறாரா?.... நீட் பரீட்சை ரிசல்ட் 8 ஆம் தேதி வெளியிடப்படுமா?…..ஸ்வாமி கங்கேஸானந்தாவின் துண்டிக்கப்பட்ட மர்ம உறுப்பின் நிலை என்ன?.... அவரைக் காக்க பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஏதேனும் செய்வாரா?... போன்ற ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கிடையில் சிவனாவது, விஷ்ணுவாவது!?!



47 கருத்துகள்:

  1. மீதான்ன்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஉ:) துண்டு போட்டு இடம் பிடிச்சிட்டேன்ன்.. பின்பு வருவேன் கொமெண்ட்ஸ்க்கு:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அதிரா சகோ! முதலில் துண்டு போட்டு இடம் பிடித்தமைக்கும் ஓட்டு போட்டதற்கும்...

      நீக்கு
  2. நானே டமில் மணத்தில் இணைச்சு.. நானே வோட்டும் முதலாவதா போட்டு விட்டேன்ன்.. நீங்க நன்றி சொல்வது கேய்க்குது:) இருக்கட்டும் இருக்கட்டும் இட்ஸ் ஓகே:).

    பதிலளிநீக்கு
  3. //சிவபெருமான் பல அவதாரங்கள் எடுத்தும், பலரது மனதிலிருந்து அவர்களை ஆட்டுவித்தும் மனித இனத்திற்குப் பல படிப்பினைகளை உணரச் செய்த ஏராளமான சம்பவங்களடங்கிய திரைப்படம் தான் திருவிளையாடல். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் அற்புதமான நடிப்பு! நினைக்கையில் இப்போதும் உடல் சிலிர்க்கிறது.//

    உண்மை. மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிகவும் அருமையான படம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல வேளை மதக்கலவரத் தீ
    பற்றி எரியவிடாதுத் தடுத்த
    காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
    இல்லையெனில் மன நிலை சரியில்லாதவன்
    செயலால் பலர் மன நிலை பாதிக்கப்பட்டவர்களாய்
    மாறிவிட இது ஒருகாரணமாயிருந்திருக்கும் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் மதக்கலவரம் உண்மைதான் மிக்க நன்றி ரமணி சார்

      நீக்கு
  5. மோடியை டம்மியாக்க ஆதித்யா வந்ததுபோல் இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹஹ் அப்படியும் இருக்கலாமோ..மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. ஆம் டிடி அவர் மன நிலை சரியில்லாதவர்தான்...பாவம்..

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  7. தந்திரிதான் கோவிலுக்குத் தந்தை. இறைவனை கோயிலில் பிரதிஷ்ட்டை செய்தவர். இரைவனுக்கும் மேலே

    ஆகா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சொல்லிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்....மிக்க நன்றி நண்பர் கரந்தையார்...

      நீக்கு
  8. நுழலா? நுணலா?

    கடவுள் மோகன் குமார் மனதில் நுழைந்து.... ஹா... ஹா.... ஹா...

    சுவாரஸ்யமான ஒரு சம்பவத்தை படிக்கக் கொடுத்ததற்கு நன்றி.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நுழல் என்று வந்துவிட்டதா...ஓ! துளசி வாட்சப்பில் அனுப்பியதை அடித்துவிட்டுத் திருத்தி வாசித்துக் காட்டியும் அப்போது திருத்தியும் பல கண்ணில் விட்டுப்போய்விடுகிறது...துளசி வேறு திரும்பத் திரும்ப தன் ஆசிரியர் குணத்தைக் காட்டுவார் திருத்தம் பார்த்தாயா பார்த்தாயா என்று....நானும் எல்லாம் ஓவர் என்று ரொம்பவே மெத்தனமாகச் சொல்லி...இதோ நுணலும் என்று..திருத்தி விடுகிறேன். மிக்க நன்றி ஸ்ரீராம்..சுட்டிக்காட்டியமைக்கு...

      கீதா

      நீக்கு
    2. திருத்திவிட்டேன் ஸ்ரீராம். மேலும் பல பிழைகள் இருந்தன. அதையும் திருத்திவிட்டேன். இன்னும் இருக்கலாம்....பார்க்க வேண்டும். மிக்க நன்றி ஸ்ரீராம்...

      கீதா

      நீக்கு
  9. TM 5

    போலீஸ்மட்டும் விரைந்து செயல்பட வில்லை என்றால் அங்குள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு விசா எடுத்துதான் ஒடி இருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக மதுரைத் தமிழன். அபப்டித்தான் நடந்திருக்கும் மட்டுமல்ல எங்கள் பகுதி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. எனவே நல்ல காலம் மதக்கலவரம் வராமல் போலீஸார் விரைவில் கண்டுபிடித்துவிட்டனர். கலவரம் வந்துவிடுமோ என்ற பயமும் கூட போலீசாரை துரிதப்படுத்தியிருக்கலாம்...எப்படியோ கலவரம் நிகழாமல் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  10. //போன்ற ஏராளமான முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளுக்கிடையில் சிவனாவது, விஷ்ணுவாவது!?!//

    உண்மைதான் இப்போது மக்கள் பல பிரச்சனைகளில் தவிக்கும் போது சிவனாவது விஷ்ணுவாவது? என்று தான் நினைப்பார்கள்?

    கடவுள் எல்லோரும் தாங்களே யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கடவுள் என்று சொல்லித் திரிபவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்களே நம் சமூகத்தில். உண்மைதானே பல பிரச்சனைகள் மக்களை ஆட்டுவிக்கும் போது இதை எல்லாம் அவர்கள் நினைக்கப் போவதில்லை. ஒரு விதத்தில் நல்ல காலம் கலவரம் ஏற்படாமல் போயிற்றே என்று தோன்றியது...

      மிக்க நன்றி கோமதி அரசு சகோதரி

      நீக்கு
  11. மோஹன் பாவம் .படத்தில் பார்க்க குழப்பமான மனநிலை உள்ளவர் போலிருக்கார் .காவல்துறை நல்லவேளை பிரச்சினைகளை பெரிதாக்காமல் துரிதமாக கண்டுபிடிச்சிட்டாங்களே ..இறைவன் யாரையட்டும் கஷ்டப்படுத்த மாட்டார் எல்லாம் மனுஷங்கதான் இறைவனின் பெயரை தவறா யூஸ் செய்றாங்க ..மோகனின் கஷ்டங்களுக்கு சாபத்தை சொல்லி குழப்பி விட்ட ஜோசியர் தானே குற்றவாளி ...சிறுவயது நிராகரிப்புக்களும் இயலாமைகளும் ஜோஸ்யரின் முட்டாள்தனமான அறிவுரையும் மோகனை hyper ஆக்கி சூழ்நிலைக்குற்றவாளி ஆக்கி விட்டிருக்கு ..இதில் இறைச்சி விஷயமும் சேர்ந்து கொண்டதா ..வேதனை ..மனுஷங்க எதையும் யோசிப்பதேயில்லை ..சாமி சிலை பற்றி வதந்தி பரப்பினவங்க வாயில் சூடு போடணும் ..இது மட்டுமில்லை எதற்கெடுத்தாலும் குழப்பத்தை விளைவிக்க சுயநலவாதிகள் இப்படித்தான் செய்வார்கள் .உண்மையில் ஏதாவது தீப ஆராதனையின்போது சாமி சிலையின் உடை எரியும்போது அல்லது வேறெதனா காரணத்தால் பாதிப்புன்னா இறைவன் மேல் அன்பு இருக்கிறவங்க அணைக்க ஓடுவாங்களா அலறி அடிச்சிட்டு தன்னை காப்பாற்றிக்க ஓடும் சுயநல கூட்டம் தான் இப்படி வதந்திகளை வகைதொகையின்றி பரப்பி ஆனந்தம் கொள்வார்கள் .இது மனுஷங்களின் திரு(ட்டு)விளையாடல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மனுஷங்களின் திரு(ட்டு)விளையாடல்// உண்மைதான் ஏஞ்சலின் சகோ! மோஹன் குமார் பாவம்! அவருக்கு இனியேனும் நல்ல ட்ரீட்மென்ட் கிடைத்து அவர் குணமானால் நல்லது. பார்ப்போம். நம் சமூகத்தில் விழிப்புணர்வு மிகவும் குறைவாயிற்றே...என்ன செய்ய...மிக்க நன்றி ஏஞ்சலின் சகோ.

      நீக்கு
  12. கேரள மக்களைப் புரிந்து கொள்வதே சிரமம் நேரெதிர் முனைகளில் இருப்பார்கள் அதே சமயம் மிகுந்த சிந்தனையோடும் செயல் படுவார்கள் தேவப் பிரசன்னம் பார்த்தார்களா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜிஎம்பி சார்.

      அதன் பின் தேவப்ப்ரஸ்னம் பார்த்ததாகத் தெரியவில்லை.

      மிக்க நன்றி சார் கருத்திற்கு

      நீக்கு
  13. கேள்விப்படாத செய்தி! விரைவில் சுமுகமான சூழ்நிலை ஏற்பட அந்தச் சிவனும், விஷ்ணுவுமே அருள் புரியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் செய்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டதால் நிலவரம் சரியாகிவிட்டது. மிக்க நன்றி கீதாசாம்பசிவம் சகோதரி.

      நீக்கு
  14. //பின் படிப்படியாக அந்த வெறுப்பு பூசாரிகளுக்கு ஒரு நீதியும், சாதாரண மக்களுக்கு வேறு நீதியும் வழங்கும் இறைவன் மீது திரும்பியிருக்கிறது.// ஹிஹிஹிஹி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதாசாம்பசிவம்! அப்படித்தானே பல மக்கள் சொல்லுகிறார்கள்.

      நீக்கு
  15. முழுவதும் இரண்டு மூச்சு விட்டுப் படிச்சு முடிச்சிட்டேன்ன்...

    “ஆல் இந்தியா ரேடியோ.. கேரளா வானலை நிலையம்.. செய்திகள் வாசிப்பவர்கள்.. துளசி ... கீதா “.. என்பதுபோல இருக்கு.

    பாருங்கோ, ஒரு விசயத்துக்கு கண்ணு காது மூக்கெல்லாம் வச்சு யார் யாரை எல்லாம் சந்தேகப் படும்படி ஆச்சு... இன்னும் கொஞ்ச நாள் தாமதமாகியிருப்பின்.. மதச் சண்டை சாதிச்சண்டை எல்லாம் வந்திருக்குமே சிவனே...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் ஏன் இரண்டு மூச்சு? அவ்வளவு பெரிதாகவா இருந்தது பதிவு?

      ஹஹஹ்ஹ் வானொலி நிலையம் செய்திகள்...இது கீதாவின் செய்தி அல்ல. எனது செய்தி. ஆனால் அதை கணினியில் அடித்துப் பதிவு ஏற்றியவர் கீதாதான்.

      நிச்சயமாக மதச்சண்டை ஏற்பட வாய்ப்பிருந்தது ஆனால் நல்ல காலம் கண்டுப்பிடிக்கப்பட்டதால் சரியாகிவிட்டது.

      மிக்க நன்றி அதிரா சகோ

      நீக்கு
  16. போலீசாரை பல இடங்களில் திட்டுறாங்க.. இருப்பினும் அவர்களும் தங்களால் முடிந்தவரை பாடுபட்டுக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
    2017 ஆம் ஆண்டின் மிகக் கஸ்டமான முதல் பத்துத் தொழில்களில், பொலீஸ் உம் இடம்பிடித்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தானே செய்யும் இல்லையா.அதைத்தான் மக்கள் திட்டுகிறார்கள். போலீசாரில் திறமை உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதோ அது நிரூபணம் ஆகிவிட்டது. அதுவும் மதக்கலவரம் வந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணமும் துரிதப்படுத்தியிருக்கலலாம்...போலீஸ் தொழில் கஷ்டமான தொழில்தான்..மிக்க நன்றி அதிரா சகோ..

      நீக்கு
  17. அந்த மோகன் குமாரின் படம் பார்க்க தெரிகிறது மனநிலை பாதிப்பானவர் என, ஆனா ஏன் இதுவரை யாராலும் சந்தேகப் படமுடியவில்லை அவரை. 45 வருடங்களை நகர்த்தி விட்டாரே இப்படியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா சகோ நம் சமூகத்தில் இவரைப் போன்றவரை அடையாளம் கண்டு அதற்கு உரிய தீர்வுகள் கிடைத்திட வழிவகுக்கும் அளவிற்கு விழிப்புணர்வு இல்லை. இது போன்றோரை பைத்தியம் என்று சொல்லிக் கடந்து செல்பவர்களே அதிகம். படித்த பெற்றோருக்கே அந்த விழிப்புணர்வு இல்லாத போது என்ன சொல்லுவது?

      மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  18. அடிமனதில் தவறாகப் பதியும் பதிவுகள் சிலரை இந்நிலைக்கு ஆக்கிவிடுகின்றன என்பது வேதனையே. இருப்பினும் இயல்பான நிலைமைக்கு உரியோரைப் பாராட்டவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! முனைவர் ஜம்புலிங்கம் ஐயா! மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

      நீக்கு
  19. காவற்றுறையின் பணியைப் பாராட்டுகின்றேன்.
    மக்களுக்குத் தேவை மோதலல்ல
    அமைதி தான்

    பதிலளிநீக்கு
  20. சமூகத்துல பிரச்சனை எப்படியெல்லாம் வருகிறது பாருங்கள். த ம +1

    பதிலளிநீக்கு
  21. சிவனின் சாயல் மோகனிடம் தெரியுதே ,இவன் சிவனின் அவதாரம்தான் ஜி :)

    பதிலளிநீக்கு
  22. இந்துக்கள் மீதோ இந்து அடையாளங்கள் மீதோ ஏதாவது தாக்குதல் நடந்தால் உடனே அது முசுலீம்கள் வேலையாகத்தான் இருக்கும் எனப் புரளி கிளப்பப்படுவதும், ஏன்... நினைக்கப்படுவதுமே கூட வாடிக்கையாகி விட்டது. அதே அளவுக்கு, இப்படிப்பட்ட 90% வழக்குகளில் இறுதியில் குற்றவாளிகள் இந்துக்களாகவே இருந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

    தனி மனித வாழ்வில் பிரச்சினை என வந்தால் இறை நம்பிக்கை தலை தூக்கும். அதுவே, சமூக அளவில், மனித குலத்துக்கே பெரும் பிரச்சினை, பேரிடர் என வந்தால் பூசைகளும் வழிபாடுகளும் காணாமல் போகும். கலைகள், பொழுதுபோக்கு, அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றைப் போலத்தான் கடவுள் நம்பிக்கையும். மனித குலம் நன்றாக இருக்கும் வரைதான் எல்லாம். ஒட்டுமொத்த சமூகத்துக்கே பிரச்சினை என வரும்பொழுது கடவுளைக் கவனிக்க ஆள் இருக்காது. இதைத்தான் அன்றே சொன்னார் வள்ளுவர், "தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்காதெனின்" என்று. தானம், தவம் மட்டுமில்லை வழிபாடுகளும் அதில் அடக்கம். :-)

    பதிலளிநீக்கு
  23. சுவாரஸ்யமான பதிவு! அது சரி நீங்கள் குமுதம் ரசிகரா? திருவிளையாடல் படத்தை சாமர்த்தியமாக இணைத்து விட்டீர்களே!!

    பதிலளிநீக்கு
  24. மனநிலைபாதிக்கப்பட்டவருக்கு அந்த கடவுளே மறுமலர்ச்சி கொடுக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  25. உங்கள் பகுதியில் நடப்பவற்றை அறிந்துகொள்ள உதவிய பதிவு ..
    தொடர்க

    பதிலளிநீக்கு
  26. பணச்சண்டை,மதச்சண்டை,பதவிச்சண்டை எத்தனையொ இந்த நாட்டிலே.....

    பதிலளிநீக்கு
  27. adada ippidi vera seirangkala. erkanavey neruppu eriyuthu. ithula enna oothinamathiri irukku hmm.

    naduvula scroll pannumpothu Sriram ,Geeths comments padichu sirichen. haha

    பதிலளிநீக்கு