சனி, 12 ஏப்ரல், 2014

இப்படித்தான் இருக்க வேண்டும் பெண் பிள்ளைகள்......ஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்த 15 வயதுப் பெண், கோழிக்கோட்டில் தன் சமயோஜித புத்தியால் கயவர்களிடமிருந்துத் தப்பியிருக்கிறார்.  தன் தாய் மரணமடைந்ததாலும், தன் தந்தை பங்களாதேசத்தில் உள்ளதாலும், வேறு வழியின்றி அனாதையான அந்தப் பெண், தன் தந்தையின் சகோதரரின் மகன் மற்றும் அவரது மனைவியின் பாதுகாப்பில் மும்பையில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்திருக்கிறது.  பெங்களூரில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி, அதுவரை பாதுகாத்த அண்ணனும், அண்ணியும், அப்பெண்ணை பெங்களூருக்குக் கொண்டுவந்து, ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் அடங்கியக் குழுவிடம் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.  உடனே அவர்கள் அப்பெண்ணைக் காரில் ஏற்றி, கோழிக்கோடு கொண்டு சென்று, 03.04.2014 அதிகாலை, 1 மணி அளவில் கோழிக்கோடுபாளையத்தில் உள்ள ஒரு விடுதிக்குக் கொண்டு சென்றிருந்திருக்கிறார்கள். அதுவரை புதிய வேலை பற்றியும், கிடைக்கப்போகும், சம்பளத்தை வைத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் கனவு கண்டு வந்த பெண்ணுக்கு, மூவரில் ஒரு ஆண் திடீரென மிருகமாய் மாறிதன் கற்பை சூரையாடிய போதுதான், தான் கயவர்களிடம் சிக்கியிருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது.  அடுத்த மிருகம் தன்னைத் தாக்கும் முன், தன் சமயோஜித புத்தியால், மிகவும் தந்திரமாக அங்கிருந்துத் தப்பி ஓடி, அருகே இருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்குச் சென்று, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் முறையிட, கேரளாவில் நல்ல ஆட்டோ ஓட்டுநர்கள் அதிகமாக உள்ள இடம் கோழிக்கோடு ஆனதாலோ என்னவோ, பாராட்டப்பட வேண்டிய, அந்த முகம் தெரியாத நல்ல ஆட்டோ ஓட்டுநர் அப்பெண்ணை அடுத்துள்ள மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க, அப்பெண் தனக்கு நேரவிருந்த பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருக்கிறாள்.
வருடங்களுக்கு முன், மூணார் சூரியநெல்லியைச் சேர்ந்த ஒரு 16 வயதுப் பெண், இது போல் சமயோஜிதமாகச் சிந்தித்துச் செயல்படாததால், 1996 ஜனவரி 16 முதல் பிப்ரவரி 26 வரை, அப்பெண்ணை 37 கயவர்கள் 67 முறை, பாலியல் பலாத்காரத்திற்கு இரையாக்கி, அச்சுறுத்தியும், போதை மருந்துகளைக் கொடுத்தும், பாவம் அந்தப் பெண்ணின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைச் சேதப் படுத்தி, அப்பெண்ணின் வீட்டின் அருகே விட்டுச் சென்றிருந்திருக்கிறார்கள் (கொல்லாமல்). பாவம் அந்தப் பெண்ணும் பெற்றோரும், நீதிக்காகப் போராடிக், கடந்த வாரம்தான் அதில் குற்றவாளிகளாகிய 24 பேருக்குத் தண்டனைக் கிடைத்திருக்கிறது.(5 பேர் உயிரோடு இல்லை, 7 பேர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.  ஒருவர் இன்னும் பிடிபடவில்லை). இப்படி 18 ஆண்டுகள் போராடி நீதி பெற வேண்டிய சந்தர்ப்பத்தை அந்தப் பெண் ஏற்படுத்தாமல் தப்பியது ஒரு விதத்தில் நமக்கு மன நிம்மதியைத் தருகிறது. அப்பெண்ணைக் காக்க உதவிக் கரங்கள் பல பாகங்களிலிருந்தும் வர வாய்ப்புண்டு.  நடந்ததை ஒரு கெட்ட கனவாக எண்ணி இனியுள்ள வாழ்வைத் தொடரத் தைரியமும், மன உறுதியும் அபெண்ணுக்குக் கிடைக்க நாம் அனைவரும் எல்லா வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம். 


“absolutely shocking” Samajwadi Party chief Mulayam Singh’s statement that rapes are mistakes committed by boys and does not warrant hanging as prescribed in the amended anti-rape legislation.Whether hanging is justified or not can be a personal opinion but his opinion on crimes against women is shocking -  "The Hindu"

ஒரு வேடிக்கை என்னவென்றால், கடந்த தினம் முலாயம் சிங்க் யாதவ், பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்காக வக்காலத்தே வாங்கியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு பலாத்காரம் செய்யும் இளைஞர்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கக் கூடாதாம்?! எப்படி இருக்கிறது பாருங்கள்?! நீதியையும், சட்டத்தையும் காத்து மக்களைப் பாதுகாத்து, பொறுப்புடன் ஆளவேண்டிய நமது அரசியல்வாதிகளே இப்படிப் பொறுப்பற்றுப் பேசினால் இது போன்ற அக்கிரமங்கள் கூடத்தானே செய்யும்?! இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டை ஆண்டால், நம் நாடு வெகு சீக்கிரமே வல்லரசாகி விடும்?!!!! எனவே பெண்களே ஜாக்கிரதை!  உங்களை நீங்கள்தான் காத்துக் கொள்ள வேண்டும்!

படங்கள் : courtesy- The Hindu, Google.35 கருத்துகள்:

 1. துணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்
  பெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ
  வேண்டும் என்பதே சரியான கூற்று .இந்த அரசியல் வாதியின் பேச்சுக்கு
  இனியும் ஏது மதிப்பு மக்கள் விரைவில் இவர்களைப் புரிந்து கொள்ள
  இது போன்ற பகிர்வுகளும் மிக மிக அவசியம் .பாராட்டுக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துணிச்சலான அந்தப் 15 வயதுச் சிறுமியைப் போல் தான் இக் காலத்தில்
   பெண்கள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள வல்லவர்களாகத் திகழ
   வேண்டும்//

   மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு! உண்மையே!

   நீக்கு
 2. செய்தித்தாள்களில் படிக்க விட்டுப் போன செய்திகளை உங்கள் பார்வையின் மூலம் பெற முடிகின்றது. முலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முலாயம் மட்டுமல்ல. அகிலேஷ் கூட படித்த முட்டாள். எல்லாவிதங்களிலும் எப்போதும்.//

   சரியாகச் சொன்னீர்கள் ஜோதிஜி! இவர்களின் கையில்தான் நம்நாடும், நாமும் என்ன செய்ய?! எங்கு சொல்ல? யாரிடம்? நம் வலைத்தளங்களில் மட்டுமே பகிர முடிகின்றது!

   மிக்க நன்றி! ஜி!

   நீக்கு
 3. நம் தேசத்தின் நிலைமையை பார்த்தீர்களா? பச்சிளம் பெண்களை பாலியல் தொழிலுக்கு தள்ளும் கூட்டம் ஒரு பக்கம், கற்பழிப்பு இயல்பானது என கொக்கரிக்கும் அரசியல்வாதியர் ஒரு பக்கம், பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றஞ்சொல்லும் மத, கலாச்சார கூட்டம் ஒரு பக்கம், 18 ஆண்டுகள் போராடி நீதிவாங்கிய பெற்றோர் ஒரு பக்கம், சமயோத புத்தியால் தப்பிய இளம் பெண் மற்றும் உதவிய ஆட்டோ ஓட்டுநர் ஒரு பக்கம். அண்மையில் லக்ஷ்மி என்ற இந்தி/தெலுங்கு படம் பார்த்தேன், தம்மை பாலியல் தொழிலுக்குள் தள்ளிய நபர்களை விடாது நின்று, வழக்குமன்றத்தில் தண்டனை வாங்கி தந்த உரமான பெண்ணின் கதை. அதே போல, கடத்தப்படும் பெண்களை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மையப்படுத்திய "திரை" என்ற மலையாளப்படம். இரண்டும் சொல்லும் சங்கதிகள் ஒன்று தான் ஏழை எளிய பெண்களை கட்டாயப்படுத்தி தனது பாலியல் இச்சைக்கு அடிமைகளாக மாற்ற நினைக்கும் ஆணாதிக்க, சாதியாதிக்க, பொருளாதார வர்க்காதிக்க சமூகத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளது என்பது மட்டுமே, பாதிக்கப்பட்டோர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நல்லெண்ணம் கொண்ட சமூகமும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அழகான, ஆழமான கருத்துக்களைத் தெர்வித்தமைக்கு மிக்க நன்றி! தாங்கள் சொல்லியிருக்கும் அனைத்துமே உண்மைதான்!

   நீக்கு
 4. முலாயம் சிங்க் யாதவ் எல்லாம் ஒரு மனிதப் பிறவியா...? படுபாவி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படுபாவிதன்! இதைப் போன்று எத்தனை படுபாவிகள் இருக்கின்றார்கள் பாருங்கள் DD! நாட்டின் எதிர்காலம் இவர்கள் கையில்!! எதை நினைத்து நொந்துகொள்ள?

   மிக்க நன்றி!

   நீக்கு
 5. மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கும் இதே முலாயம்தான்கட்டைப் போட்டார் ,இப்போது கற்பழிப்பது ஆணின் உரிமைஎன்றே சொல்லுவார் போலிருக்கிறது .சமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் !
  த ம 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமுதாயத்தில சரிபாதியான பெண்கள் இவரைப் போன்றவர்களை ஒதுக்கி தள்ளினாலே காணாமல் போய் விடுவார் !//

   சரிதான் பகவான் ஜி! ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், பெண்கள் இது போன்ற சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகின்றார்கள்!

   நீக்கு
 6. நேற்று அவரது கட்சியைச் சேர்ந்த இன்னுமொருவர் கருத்து தெரிவித்திருக்கிறார் - பெண்களுக்கும் தண்டனை தரவேண்டும் என.....

  ஆட்டோ ஓட்டுனர்கள் பாராட்டப் பட வேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் இடுகையிலும் இந்தக் கருத்து குறித்து தாங்கள் பகிர்ந்துருப்பதை வாசித்தோம்!

   ஆம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாராட்டுக்கு உரியவர்தான்...இவர்களைப் போன்று ஒரு சில நல்ல ஆத்மாக்களும், சேற்றின் நடுவில் செந்தாமைரை ப்ப்ன்று இருப்பது மனதுக்கு ஆறுதலாகத்தான் இருக்கிறது!

   மிக்க நன்றி!

   நீக்கு
 7. பாதிக்கப்பட்ட பெண் நல்ல முறையில் வாழ பிரார்த்திக்கிறேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் ஆவி! இவரைப் போன்று, ஊடங்களின் பார்வைக்கக் கிடைத்து நமக்கும் தெரிய வராமல் எத்தனை பேர் உள்ளனரோ!

   நீக்கு
 8. துணிச்சலான அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள்! முலாயம் சிங் போன்றவர்களை ஒரு தலைவராக உருவாக்கிய நாம் வெட்கப்பட வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்கப்படுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாமல்தானே இருக்கிறோம்! வெட்கக்கேடுதான்!

   மிக்க நன்றி!

   நீக்கு
 9. பெண்களுக்கு எதிராய் இன்னும் எத்தனை தடைகள் !
  புதுவை சம்பவத்தின் முடிவு தெரியவில்லை?!
  என்னை கேட்டால் பெண் சாதிமத பேதம் இல்லாமல் அடிமைபடுத்த படுகிறாள் என்றே சொல்வேன்! உங்களை போன்ற whistle blowers வரவேண்டும் நண்பர்களே! நல்ல முயற்சி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமக்குமே ஊடகங்களின் வாயிலாதத்தானே தெரியவருகின்றது! பெண்களுக்கு எதிராக நிறையத் தடைகள் இருக்கத்தான் செய்கின்றது! ஒரு சில வளர்ந்து வரும் நாடுகளைக் காணும் போது நம் நாடு எவ்வளவோ மேல் என்றுதான் சொல்ல வேண்டும்! வேடிக்கை என்னவென்றால், பெண்களே அந்தத் தடைகளுக்கு ஆதரவாகவும், சம்பவங்கள் நடக்கும் போது குரல் கொடுத்துவிட்டு பின்னன் அமைதி காத்து உறங்கிப் போவதும் நடக்கத்தானே செய்கின்றது! என்ன செய்ய சகோதரி!

   நீக்கு
 10. ஆண்டவன் அருள் பூரணமாக அந்தப் பெண்ணுக்கு கிடைத்துள்ளது அதனால் தப்பிவிட்டார்.
  இதைப் போன்று தைரியமும் சமயோசித புத்தியும் அனைத்துப் பெண்களுக்கும் அவசியம்.அதை ஆண்டவன் நமக்கு நல்க வேண்டும். .இப்படி பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதை பார்த்து ஏனையோர் தவறு செய்யவே பயப்பட வேண்டும். நல்ல பதிவு! நன்றி வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தைரியமும், சமயோசித புத்தியும் இருந்தால்தான் பெண்கள் வாழ முடியும்! என்பது நல்லதுதான் என்றாலும், கொஞ்சம் சிந்த்திக்க வைக்கிறது இல்லையா?! சகோதரி!

   நீக்கு
 11. பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை அடிக்கடி இம்மாதிரி வலைப்பதிவுகளில் எழுதுவதன் மூலம் சமுதாயத்திற்கு மிகவும் நல்லது செய்கிறீர்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார்! மிக்க நன்றி! எழுதத்தான் முடிகின்றது! வேறு என்ன செய்ய முடிகின்றது! இது போன்ற அரசியல்வாதிகளை!?

   நீக்கு
 12. வணக்கம் ...
  ஒரு விழிப்புணர்வு பதிவு ...வாழ்த்துக்கள் ...
  முலாயம் வீட்டில் மகளிர் யாரும் இல்லை ... அவர்கள் சோதனைக் குழாயில் பிறந்தவர்கள் என்று நினைக்கிறன்... சரிதானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சோதனைக் குழாயில் பிறந்த பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள் கூட இப்படிப்பட்ட அபிப்ராயம் சொல்ல மாட்டார்கள்....இது தத்து எடுத்தது போல் தெரிகிறது. அதுவும் தத்து எடுத்தபின் குழந்தை பிறந்தால் எப்படி இருக்கும்...அது போல் தோன்றுகிறது...முலாயம் இப்படி சமூகத்திற்கு ஒரு முள் ஆய மனிதராகிவிட்டார்...

   நீக்கு
 13. அந்தப் பேமானிய உத்துப் பாத்துக்கினா... "எங்க இந்தாமாரி ஒரு லா காண்டி போட்டுக்கினா... மொதல்ல நம்பளப் புட்ச்சி தூக்ல போட்டுருவாய்ங்க.." ன்னு... ஒரு பயம் தெர்துல அத்து மூஞ்சில...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெர்யுதுங்கற!!??? தெர்ஞ்சா அப்படிப் பேச மாட்டானுவ.....அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...ஆர்க்கு? இங்க தானே? அவனுக்கு இல்லல!?? போட்டுறாத நைனா!!

   நீக்கு
 14. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   துளசிதரன், கீதா

   நீக்கு
 15. செய்திகளை பகிர்ந்தமைக்கு நன்றி சார்

  நம் நாடு இப்படிப்பட்ட அரசியவாதிகளிடம் சிக்கி தவிப்பது என்னவென்று சொல்வது

  பதிலளிநீக்கு
 16. இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   துளசிதரன், கீதா

   நீக்கு
 17. இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்
  உரித்தாகட்டும் .

  பதிலளிநீக்கு
 18. நல்ல எச்சரிக்கைப் பதிவு
  முலாயம்சிங் என்ன தைரியத்தில் இப்படிப் பேசினார் ?
  அவரின் இந்தத் திமிர் பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை

  பதிலளிநீக்கு