திங்கள், 14 அக்டோபர், 2019

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 2

முந்தைய பதிவில், அடுத்த பதிவில் கோபுரங்கள் படம் போடுவதாகச் சொல்லியிருந்தேன். அதற்குச் செல்லும் வழியைக் காட்ட வேண்டாமா உங்கள் எல்லோருக்கும்? இதோ படங்களுடன் விவரமாகச் சொல்கிறேன். 


நாம் டிக்கெட் வாங்கியதும் கோபுரம் பார்க்க ஏறும் இடத்திற்கு இடப்புறம் திரும்பும் போது எதிரே இதோ இந்தப் படத்தில் முதல் படம் அழகான தூண்களுடன் இருக்கிறதில்லையா இதுதான் தெரியும். இங்கு ஒரு சன்னதி இருக்கிறது ஆனால் அது பார்க்கப் போகவில்லை. இந்தத் தூண்கள் இருந்த இடம் அத்தனை அழகு. இன்னும் இந்த இடத்தின் சில படங்கள் அடுத்த பதிவில் வரும். இது திரும்பும் முன் டக்கென்று ஒரு க்ளிக். 

இரண்டாவதாக இருக்கும் அந்தச் சிற்பங்கள் முதல் படத்தில் உள்ள சன்னதியின் சைட் காட்சி. அதையும் ஒரு க்ளிக் அவசரத்தில். கோபுரம் பார்த்து இறங்கிய பின் க்ளோஸப் எடுத்தேன் அது கீழே வரும். 

கொலாஜ் 1

மூன்றாவதாக இடப்புறம் உள்ள படத்திலும், நான்காவதாக வலப்புறம் உள்ள படத்திலும் வலது புறம் வெளி வரும் பகுதி தெரிகிறதில்லையா? டிக்கெட் வாங்கியதும் இடப்புறம் திரும்பினால் முதல் படம், இரண்டாவது படத்தில் உள்ளவற்றைப் பார்த்தவாறே மீண்டும் இடப்புறம் திரும்பினால் நான்காவது படத்தில் கூட ஒரு மூதாட்டி திரும்பி நடக்கிறார் இல்லையா அவ்வழியில் திரும்பி சைடில் படிகள் (8-10) உள்ளன. ஏறியதும் நம்முடன் வரும் கோயில் பணியாளர் அங்கிருக்கும் சிறிய கேட் போன்றதைத் திறந்து விடுவார். அப்புறம் மொட்டை மாடியும் கோபுரங்களும் தான் இதோ அந்தப் படங்கள். 

இந்தப் படங்களை நன்றாகப் பார்த்துக்கோங்க. கோபுரம் பார்த்துவிட்டு வந்ததும் இந்தப் படங்களின் க்ளோஸப் படங்களும், மூன்றாவதாக இடப்புறம் புள்ள படத்தின் இரு புறம் உள்ள சிற்பங்கள் க்ளோஸப் கீழே. அப்புறம் எங்கிட்ட யாரும் இது என்ன ரிப்பீட்டா? இது என்ன படம் அது என்ன படம்னு எல்லாம் கேட்கப்படாது!!!!!!!! ஹா ஹா ஹா (எனக்கும் இதெல்லாம் என்ன சன்னதிகள் என்றெல்லாம் தெரியாதாக்கும். ஹிஹிஹி. கீதாக்கா டிப்பார்ட்மென்ட் அதெல்லாம். ஹா ஹா ஹா!!!!!! 

சரி என் கூட எல்லாரும் மொட்டை மாடி ஏறி வாங்க, கோபுரம் பார்க்கலாம். உங்களுக்கு ஃப்ரீ காட்சி!!


முதல் படம் பாருங்க ராஜகோபுரம் அதைத் தொடர்ந்து இருக்கும் கோபுரங்கள். கீழே அதே படம் தான் அடுத்த படமும் முன்னுள்ள கோபுரம் இன்னும் சற்று க்ளியராக..கில்லர்ஜி ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுனு சொல்லக் கூடாது ஓகேயா. நம்ம மக்கள் எல்லாரும் க்ளியரா பார்க்கணும்ல.



இந்த இரு படங்களிலும் நடுவில் அரங்கனின் பொன்வேயப்பட்ட விமானம் இருக்கு பாருங்க. (அதிரா நீங்க கேட்டிருந்தீங்களே உங்கள பதிவில் அதுக்கு நான் சொன்னது இதுதான்..)



மாடியின் நடுவில் இப்படி ஒரு சிறிய மாடமும் அதற்குள் ஆஞ்சுவும் (என்று நினைக்கிறேன்.) என் கேமராவில் சரியாகப் பதியவில்லை. இருந்தாலும் இப்படி ஒன்று இருக்கிறது என்று உங்களுக்குக் காட்டுவதற்காகப் படத்தைச் சேர்த்தேன்.





வெள்ளை கோபுரம்....இந்தக் கோபுரம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் ஈர்த்தது.

இது மேலே நான் நன்றாகப் பார்த்துக்கங்கனு சொல்லியிருந்த கொலாஜ் தொகுப்பில் இருக்கும் மூன்றாவதாக இடப்புறம் உள்ள கோபுரத்தின் மேற்பகுதி பின்புறம்...இடப்புறம் தெரியும் சன்னதி ஆண்டாள் சன்னதி. வலப்புறம் தெரியுதே கேட் அதுக்குள்ளதான் நம்ம ஆண்டாள் செல்லக் குட்டி (கீதாக்கா அடிக்கடி சொல்லும் செல்லக் குட்டி) இருக்கிறாள்  அவள் படம் அடுத்த பதிவில் வரும் பாருங்க. கூடவே வீடியோவும்..வரும்..


இது அக்கோபுரத்தின் சைடில் உள்ள மற்றொரு கோபுரத்தின் வியூ.


இப்போது மாடியிலிருந்து இறங்கி வருகிறோம். மேலே கோபுரம் பார்க்கச் செல்லும் முன் இடப்புறம் திரும்பும் போது பார்த்த கொலாஜ் 1 ல் இரண்டாவதாக இருக்கும் படத்தின் முழு நேர் வியூ. அதன் க்ளோசப் இருக்கிறது ஆனால் இப்போது படங்கள் அதிகமானதால் பகிரவில்லை இத்னுடன்.


இது மேலே கொலாஜ் 1 ல் உள்ள நான்காவதாக உள்ள படத்தின் க்ளோசப்..வலப்புறம் கோபுரம் பார்க்கச் செல்லும் பகுதி தெரியுதுதானே..இப்படத்தின் இரு புறம் உள்ள சிற்பங்கள் கீழே.


கொலாஜ் 2 - கொலாஜ் ஒன்றின் தொடர்ச்சி

இப்படம் இதற்கு முந்தைய படத்தின் தொடர்ச்சி எனலாம். அதற்குத்தான் கொலாஜ் 1 நன்றாகப் பார்த்துக்கங்கனு சொன்னது. முதல் படம் வலப்புறம் உள்ள சுவறில் இருக்கும் சிற்பங்கள். 2,3,4 எல்லாம் இடப்புறம் உள்ள சிற்பங்கள் கொஞ்சம் க்ளோசப் என்று..

இத்துடன் இப்பகுதியில் படங்களின் தொடர்ச்சி விட்டுவிடக் கூடாதே என்று கொஞ்சம் அதிகமாகப் படங்கள் ஆகிவிட்டன. அடுத்த பகுதி ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு முதலில் பார்த்த மண்டபம் - அதன் புகைப்படங்களுடன், உள்ளே அடுத்தடுத்த மண்டபம் வழியாகச் சென்று பார்த்துக் கொண்டே வெளியெ வருவோம். நான் முக்கியமாக சென்ற வழியில் உள்ள மண்டபங்கள், சிற்பங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டு சென்றேன். அடுத்த பகுதியில் தொடர்வோம்.

படங்கள் பிடிச்சிருக்கா, நான் சொல்லியிருப்பது தெளிவாக இருக்கிறதானு சொல்லுங்க. 

----கீதா

83 கருத்துகள்:

  1. கோபுரங்களின் படங்கள் வெகு அழகு. காலை நேரம் கோபுர தரிசனம்.  கோடிபுண்ணியம் கிடைக்கிறதோ இல்லையோ..  லட்சங்கள் கிடைத்தால் சரி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம். இனிய காலை வணக்கம்.

      ஹா ஹா ஹா ஹா அதானே! லட்சத்தோடு கூடவே நிம்மதியையும் சேர்த்துக்குவோம்....அது கிடைச்சா எல்லாமே பின்னாடி ஒட்டிக் கொண்டு வந்துவிடுமே...!!!!!!

      கீதா

      நீக்கு
    2. ஆஆஆஆஆஆ இங்கு மீத 1ஸ்ட்டாக இல்லையோ மீ கர்ர்ர்ர்ர்:))

      நீக்கு
  2. கொலாஜ் முறையில் படங்களை வெளியிடும் முறை நன்றாக இருக்கிறது.  முன்னர் சொல்லியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம் நீங்க முன்னாடி சொல்லியிருக்கீங்க. அதுதான் கொஞ்சம் நேரம் எடுக்குது..எபிக்கு அனுப்ப 4 இருக்கு...படங்கள் சேர்க்க வேண்டுமே..படங்கள் நிறைய இருக்க்ம் போது இப்படிச் சிலதை சேர்த்துவிடலாம் என்று தோன்றியது.

      மிக்க நன்றி நன்றி (முதல் கருத்துக்கும் சேர்த்து!!!!!!) ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  3. அந்த வெள்ளை கோபுரம் என்னையும் ஈர்க்கிறது.  மிக அழகாய் இருக்கிறது.  கொலாஜ் 1 இல்  இரண்டாவதுபடம் - கொஞ்சம் வடநாட்டு பாணியில் இருக்கிறதோ!  கோபுரம் இலலாமல் செவ்வகமாய் இருப்பதால் அப்படித் தோன்றுகிறதோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வெ கோ என்ன அழகு இல்லையா?!!!

      ஸ்‌ரீராம் அந்த இரண்டாவது படம் அந்த கோபுர மதில்கள் உள்ள சிற்ப வடிவங்கள். அதன் தொடர்ச்சி கொலாஜ் 2லும் அப்படத்திற்கு முன்னரும்..//மேலே கோபுரம் பார்க்கச் செல்லும் முன் இடப்புறம் திரும்பும் போது பார்த்த கொலாஜ் 1 ல் இரண்டாவதாக இருக்கும் படத்தின் முழு நேர் வியூ. //

      இதோ இதைப் பார்த்தீங்கனா தெரியும்....அதே படம் தான். வடநாட்டு வடிவம்? ஆனால் பெரும்பான்மையான மண்டபங்கள் சிற்பங்கள் எல்லாம் விஜயநகர நாயக்க மன்னர்களால் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்று தான் தெரிகிறது ஸ்ரீராம். திருப்பதி கோயிலில் இருக்கும் மன்னர் சிலைகள் போல இங்கும் இருக்கின்றன. அப்படமும் வரும் கடைசியில்.

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
    2. இவை அரைகுறையான கட்டிடங்கள் (அதாவது கட்டிடம் எழும்ப ஆரம்பிக்கும்போது ஆட்சி மாறுவது போல). ரசனை இல்லாமல் அதன் மேலே சிமெண்ட் பூசி சாதாரண வீட்டுக் கட்டிடமாக ஆகியிருப்பதைப் பார்த்தீர்களா?

      நீக்கு
  4. தஞ்சாவூர் கோவில் கோபுரத்தின்மேல் ஏறிப்பார்க்கலாம் என்று சொல்வார்கள்.  நான் அங்கு இருந்தவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை எனக்கு.  இப்போது அனுமதிக்கிறார்களா, தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியா ஸ்ரீராம் நான் அங்கும் சென்றிருக்கிறேன் ஆனால் கோபுரத்தில் ஏறிப் பார்த்ததில்லை. வேறொரு கோயிலில் கோபுரத்தில் ஏறி ஒவ்வொரு நிலையாக ஏறி ஒவ்வொரு நிலையிலும் இருக்கும் ஜன்னல் போன்ற வாயில் வழி பார்த்திருக்கிறேன் அது இப்ப என்ன கோபுரம் என்று நினைவில் வர மறுக்கிறது. ஆனால் இங்கு ஸ்ரீரங்கத்தில் கோபுரத்தில் இல்லையே மொட்டை மாடி போன்ற இடத்திலிருந்து எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது

      மிக்க நன்றி ஸ்ரீராம்

      கீதா

      நீக்கு
  5. படங்கள் எல்லாம் வெகு அழகு.
    அடுத்த முறை செல்லும் வாய்ப்பு கிடைத்தால் மேல் தளம் சென்று பார்க்க வேண்டும்.
    தங்க விமானத்தை தனியாக எடுத்து இருக்கிறீர்களா?
    கோபுரங்கள் படம் எல்லாம் அழகு.
    கோபுர தரிசனம் செய்து வைத்த உங்களுக்கும் கோடி புண்ணியம் தரிசனம் செய்த எங்களுக்கும் கோடி புண்ணியம்.
    போட்டோ கொலஜ் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா அடுத்த முறை போனா உங்கள் கால் வலி எதுவும் இருக்கக் கூடாதுனு நினைத்துப் பிரார்த்தித்தேன் ஏறிப் பாருங்க அக்கா.
      தங்க விமானத்தை தனியாக எடுக்கலைக்கா...அது மற்ற கோபுரங்கள் அடுத்து அடுத்து வந்திருக்கு இல்லையா...மற்றும் கொஞ்சம் ஜூம் செய்தப்ப என் கேமரா லென்ஸ் எரர் செய்யத் தொடங்கிவிட்டது. நல்ல காலம் வெள்ளை கோபுரத்தை ஜூம் செய்து எடுத்துவிட்டேன் நன்றாக வந்தது. அப்புரம் கொஞ்ச நேரம் கேமரா படுத்தியது...அவ்வப்போது படுத்துகிறதுதான்.

      மிக்க நன்றி கோமதிக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  6. எங்கள் ஊர் பெருமையை எங்களுக்கு காட்டியதில் மகிழ்ச்சி. பிறந்த வீட்டு பெருமை பேசவும் கேட்கவும் பிடிக்காதவர்கள் உண்டா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுக்கா வாங்க உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே நம்ம ஊர்ல உள்ளத பல சமயங்கள்ல மத்தவங்க வெளியூர்க்காரங்க வந்து பார்த்து சொல்லும் போதுதான் நமக்கே தெரியும். நாம் நம்ம ஊர்ல இருப்பதைப் பார்ப்பதை விட்டு வெளியூரில் பார்ப்பதைத்தான் பெரும்பாலும் விரும்புகிறோம் நம் அருகிலேயே இருக்கும் இயற்கையை அருவி விட்டு பிற இடங்களுக்குச் செல்வோம் அது போலத்தான் நம் பிறந்த வீட்டுப் பெருமையை மற்றவர் சொல்லும் போது அது கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சியைத் தரும் இல்லையா...!!! நாமே சொன்னா அப்புறம் அது தம்பட்டம்!!!!!!!! ஹா ஹா ஹா ஹா அக்கா உங்க ப்ளாக் பெயர் வந்துவிட்டது!!! சும்மா சும்மா....நம் ஊர்ப்பெயரை அதன் புகழைத் தம்பட்டம் செய்வது நல்லதுதானே நிறையப்பேர் தெரிந்து பார்க்க வருவாங்கதானே

      பெரும்பாலும் முற்றத்து முல்லையின் மணம் தெரியாமல் போகிறதுதான் அக்கா. நாகர்கோவிலில் நிறைய விஷயங்கள் இருக்கு. நானுமே பார்த்ததில்லை...

      மிக்க நன்றி பானுக்கா

      கீதா

      நீக்கு
  7. முதல் படம் பார்த்ததும் மயங்கிட்டேன் கீதா, இனி மிகுதியை எப்படிப் பார்ப்பேனோ:)).. என்னா ஒரு அழகிய வேலைப்பாடு.. அம்மா அண்ணனாட்கள் அங்கு வந்திருக்கினம், இன்று ஸ்ரீரங்கம் போவினமோ தெரியாது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் படம் பார்த்ததும் மயங்கிட்டேன் கீதா, இனி மிகுதியை எப்படிப் பார்ப்பேனோ:)).. //

      வொய் வொய் வொய் அதிரா? ஓ உங்க பதிவுல பிஸினு சொல்லிருந்தீங்களே அடுத்த இரு வாரம் அதனாலோ?

      பரவாயில்லை ஒன்னு செய்யுங்க கருத்து போடலைனாலும் படங்கள் போட்டதும் பார்த்துக்கோங்க...இல்லை அப்புறமா பார்த்துக்கோங்க. நான் அப்படித்தான் மிஸ் செய்த பதிவுகளை நோட் செய்து கொண்டு மெதுவாகப் பார்ப்பது வழக்கம். சிலதுக்கு மட்டும் கருத்து போடுவேன்...அது பதிவைப் பொருத்து!!!!!!!

      ஓ அம்மா அண்ணன் எல்லாரும் போயிருக்காங்களா நீங்களும் போவீங்க மனசுல நினைச்சுக்கோங்க...அப்பத்தான் கீதாக்கா வீட்டு மொட்டை மாடியையும் பார்க்கலாமே!!!!!!!!!அங்கிருந்து காவிரி யும்!! ஆனா தண்ணி ஓடணும்!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. இல்லை கீதா இரண்டு வாரம் எனக்கு விடுமுறை எனத்தான் சொன்னேன்.. பிஸி எனச் சொல்லவில்லை, ஆனா காலையில் பொதுவா வீட்டில் நிற்க மாட்டேன்ன்...

      //வொய் வொய் வொய் அதிரா?//
      ஹையோ கீதாவுக்குப் புரியவில்லை... அவ்ளோ அழகாக இருக்குது எனச் சொன்னேன்.

      நீக்கு
  8. //ஏறியதும் நம்முடன் வரும் கோயில் பணியாளர் அங்கிருக்கும் சிறிய கேட் போன்றதைத் திறந்து விடுவார். அப்புறம் மொட்டை மாடியும் கோபுரங்களும் தான் இதோ அந்தப் படங்கள். //

    ஓ இதுக்கு ரிக்கெட் வாங்கித்தான் உள்ளே போக வேண்டுமோ..

    ராஜகோபுரம் ரெட்டையாக இருக்கே கீதா? உள்ளே இரு மூலஸ்தானம் ஒன்றாக இருக்கோ..

    நீங்க ராஜகோபுரம் எனச் சொன்னது.. விமானமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா டிக்கெட் வாங்கித்தான் போக வேண்டும் முதல் பதிவில் சொல்லியிருந்தேனே...ஒரு நபருக்கு 20 ரூ கேமரா என்றால் 50 ரூ

      ராஜகோபுரம் ரெட்டையாக இல்லை....அது தெற்கு திசையில் உள்ள கோபுரம் இங்கு அரங்கன் தெற்கு அதாவது இலங்கை நோக்கிப் பார்த்துதானே சயனம் அதனால். தங்க நிறத்தில் இருக்கிறதே அதுதான் அரங்கனின் கருவறைமேல் இருக்கும் விமானம் சொல்லியிருக்கேனே படத்தின் கீழ் பாருங்க...

      கோபுரங்கள் ஒவ்வொன்றும் கோயிலில் இருக்கும் ஒவ்வொரு திருச்சுற்றிலும் இருக்கும் நுழை கோபுரம் எனலாம் 7 திருச்சுற்று உண்டு.

      ராஜகோபுரம் என்பது விமானம் அல்ல. விமானம் என்பது தங்கம் வேயப்பட்டது அரங்கனின் கருவறை மேல் இருப்பது அதுதான் விமானம். மற்றவை எல்லாம் கோபுரங்கள்...கருவறைதான் மூலஸ்தானம்.

      கொலாஜ் கிழே வரும் முதல் கோபுரம் படம் பாருங்க அங்கு தூரத்தில் முதலில் தெரியும் கோபுரம் தான் ராஜ கோபுரம் அதிரா. இரு படங்கள் இருக்கு பாருங்க..
      ஒவ்வொரு திருச்சுற்று கோபுரமும் அடுத்தடுத்து தெரிவதால் அதாவது படத்தில் அப்படித் தெரிவதால் உங்களுக்கு அது ரெட்டையாகத் தெரியுது அதிரா....

      மிக்க நன்றி அதிரா..

      மற்ற உங்கள் முக்கிய கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு மிகுதி கருத்துகளை நாளை கொடுக்கிறேன் ஓகேயா அதிரா..

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. பதில் பார்த்துப் படம் பார்த்தேன் கீதா.

      நீக்கு
    3. ஸ்ரீரங்கம் கோயிலில் எல்லாப் பிராகாரங்களிலும் கோபுரங்கள் உண்டு. வெள்ளைக்கோபுரம் கிழக்குக் கோபுரம். அவ்வளவு உயரம் கிடையாது. ராஜகோபுரம் எனத் தற்போது அழைக்கப்படும் பெரிய கோபுரம் தெற்கு வாசலில் உள்ளது. அரங்கன் தெற்கே முகத்தைத் திருப்பிய வண்ணம் படுத்திருப்பதால் (விபீஷணனுக்குக் கொடுத்த வாக்கு) தெற்கு கோபுரம் ராஜ கோபுரம் என அழைக்கப்படுகிறது. இந்த கோபுரம் எண்பதுகளில் தான் முழுக்கக் கட்டப்பட்டது. இதுக்குத் தான் அந்த நாளில் இளையராஜா ஒரு லக்ஷம் நன்கொடை கொடுத்தார். இந்த கோபுரம் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்த போது பற்பலவிதமான சர்ச்சைகள், எதிர்ப்புக்கள் அனைத்தையும் மீறி இது கட்டப்பட்டது. இப்போது இந்த கோபுரம் கட்டப்பட்டு சுமார் 30 வருஷங்கள் இருக்கலாம்.

      நீக்கு
    4. ஆமாம் கீதாக்கா நிறைய சர்ச்சைகள் எதிர்ப்புகள் வந்ததன. 44 ஆம் பட்டத்து அழ்கியசிங்கர் ஜீயர் இருந்தப்ப அவர்தான் இதனை முன்னெடுத்துச் செய்தார் என்று நினைக்கிறேன்.34,35 வருடங்கள் ஆகிறது என்றும் நினைக்கிறேன்..

      கீதா

      நீக்கு
    5. /இதுக்குத் தான் அந்த நாளில் இளையராஜா ஒரு லக்ஷம் நன்கொடை கொடுத்தார்// - அப்படி இல்லை கீசா மேடம்... ஒவ்வொரு நிலையையும் ஒருவர் ஏற்றுக்கொள்ள ஜீயர் கேட்டுக்கொண்டார். அதன்படி ஒரு நிலைக்கான பணத்தை ஏற்றுக்கொண்டவரிடம் பணம் பெறுவது சிக்கலானபோது, அதற்குண்டானதையும் தனக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு என்று எண்ணி இளையராஜா ஏற்றுக்கொண்டார். இதைப்பற்றி ஆர்.எம்.வீ மற்றும் இன்னொரு புத்தகத்திலும் விரிவாகப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
  9. ராஜ கோபுரத்தில் முழுவதும் சிலை வடிவமாக இருக்கு, ஆனா பின்னால் தெரியும் கோபுரத்தில், வாசல்கள் போல கட்டப்பட்டிருக்கே.. அதுதான் வரவேற்புக் கோபுரமோ? கீசாக்கா விளங்கப் படுத்திய பின்னர் இப்போதான் அனைத்தையும் அவதானிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாக்கோபுரங்களிலும் வாசல்கள் போலத் தான் கட்டப்பட்டிருக்கும். அதிலிருந்து நாம் வெளியே பார்க்கலாம். இதிலே ஏழு நிலை, ஐந்து நிலை, மூன்று நிலை, ஒன்பது நிலை என்றெல்லாம் உண்டு.

      நீக்கு
    2. அதிரா நான் சொல்ல வந்ததை கீதாக்கா சொல்லிட்டாங்க...அதே...

      கீதா

      நீக்கு
  10. //இந்த இரு படங்களிலும் நடுவில் அரங்கனின் பொன்வேயப்பட்ட விமானம் இருக்கு பாருங்க. (அதிரா நீங்க கேட்டிருந்தீங்களே உங்கள பதிவில் அதுக்கு நான் சொன்னது இதுதான்..)
    //

    யேஸ்ஸ்ஸ் பார்த்திட்டேன் கீதா, இப்படிக் குட்டிக் குட்டியாக கோயில் மண்டபக் கூரைக்குக் கீழே பார்த்திருக்கிறேன், ஆனா என் படத்தில், மண்டப கூரைக்கு வெளியே கட்டி எழுப்பியிருப்பதால அது கோபுரம் என தவறாக நினைச்சிட்டேன் கர்ர்ர்ர்ர்:)..

    தங்க விமானம் அழகாக இருக்கு.. தொட்டுச் சுரண்ட விடுவினமோ கீதா?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்க விமானம் தான் கருவறைக்கு மேலே எழுப்பப்பட்டது அதிரா. அதைத் தான் விமானம் என்பார்கள். மற்றவை எல்லாம் கோபுரங்கள்.

      நீக்கு
    2. அதே அதிரா கீதாக்கா சொல்லியிருப்பதை நான் மேலே உங்கள் கருத்திற்கும் சொல்லிருக்கேன்...

      ஹா ஹா ஹா தொட்டு சுரண்ட//கர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஹா தங்க விமானத்தைச் சுரண்ட என்றதும் எனக்கு பழனி முருகன் நினைவுக்கு வருகிறார்!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
  11. //மாடியின் நடுவில் இப்படி ஒரு சிறிய மாடமும் அதற்குள் ஆஞ்சுவும் (என்று நினைக்கிறேன்.)//

    ஒ பார்க்க ஆஞ்சு மாதிரி தெரியாமல் ஆரோ முனிவர்போல தெரியுதே.. அனைத்தும் அழகிய வேலைப்பாடுகள், எனக்குப் படம் பார்க்கவே மெய் சிலிர்க்குதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா முனிவர் போலவும் என் கண்ணுக்குத் தெரியவில்லை.ஆஞ்சு கை கூப்பிக் கொண்டு நிற்பதைப் போலவும் அவரது வால் பகுதியும் இருப்பது போலத் தோன்றியது அத்தனை க்ளியராக இல்லை ஆனால் பெருமாள் கோயில் என்றால் பெரும்பாலும் கருடன் அல்லது ஆஞ்சுதானே இருப்பாங்க என்று அப்படி ஒருவேளை கருடனாகவும் இருக்கலாம்...

      கோமதிக்கா அல்லது பானுக்கா அல்லது நெல்லை யாராவது போனால் இன்னும் பார்த்து கன்ஃபெர்ம் பண்ணச் சொல்லலாம்...

      அதிரா நேரில் பார்த்தால் அத்தனை அழகான வேலைப்பாடுகள் இன்னும் பராமரித்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது...

      இங்கு நான் போட்டிருக்கும் முகப்புப் படம் பற்றி நீங்க அன்று சொல்லியிருந்தீங்க...அதைப் பற்றி அந்தப் படம் இங்கு பகிரும் போது சொல்கிறேன். உங்களால் அது எந்த இடம் என்று கண்டுபிடிக்க முடியலை இல்லையா..

      ஸ்ரீராமும் சொல்லலை சரி அந்தப் படத்தை இங்கு பகிரும் போது ஸ்ரீராம் அல்லது பானுக்கா சொல்லிடுவாங்க...கோமதிக்காவும்...ஆனா கீதாக்காவால இந்த ஒன்று மட்டும் ஜொல்ல முடியாது ஹெ ஹெ ஹெ ஹெ...அந்த ரகசியம் அப்புறம் ஹிஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    2. முகப்புப்படமா?  மேலே உச்சியிலுள்ளதா?   நானா?

      என்னடா அது?

      நான் சொல்லக்கூடிய படம்?  நம்ம அறிவைப்பற்றி ஓவரா கற்பனை பண்ணி வச்சிருக்கீங்களோ!

      நீக்கு
    3. ஹா ஹா ஹா ஸ்ரீராம், அந்தப் படமே தான் அதுவும் இன்னும் அதனுடனான படங்களும் வரும் இங்கு. அப்ப உங்களுக்குத் தெரிஞ்சுரும்.

      க்ளூ தரேன்....கோயில் பெயர், இறைவி பெயர்.....ம்ம்ம் அப்புறம் கீதாக்காவுக்குப் பிடிக்காத ஒரு விஷயம்....இந்த மூணையும் கலந்து கட்டி கொஞ்சம் கெஸ் பண்ணிப் பாருங்க...கெஸ் பண்ணி வைச்சுக்கோங்க...அது வர டைம் இருக்கே...இந்த மூன்றுடன் இன்னொன்னு க்ளூ கொடுத்துட்டேன்னு வையுங்க நீங்க ஈசியா கண்டு பிடிச்சுருவீங்க...அதனலா அது மட்டும் இப்ப இல்லை...சரி சரி அதிராவின் தமிழ் டி ல சொல்லறேன்.. உங்க கிட்னிய ஊஸ் பண்ணி வையுங்க...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    4. ஊ....ஹூம்...    சுத்தம்.   அபுரி!

      நீக்கு
    5. ஸ்ரீராம் சொல்றேன்....இந்த மண்டபம் படம் வருமே...ஆனா நான் சொல்ல இருப்பது எத்தனை தூரம் உண்மைனு தெரியலை...பார்ப்போம்..

      கீதா

      நீக்கு
    6. அதிரா கண்டுபிடித்துவிட்டேன்...அந்த தளத்தின் மேல் இருக்கும் தூண் மாடத்தில் உள்ளே இருப்பவர் கருடரேதான் கை கூப்பிக் கொண்டு அவர் இறக்கை தான் இருபுறமும் சுற்றி...ஆனால் ஏன் என்னால் டக்கென்று சொல்ல முடியலை என்றால் மூக்கு ஷார்ப்பாக இருக்கும் இல்லையா இந்த வடிவத்தில் அது க்ளியராக இல்லை.

      கீதா

      நீக்கு
  12. //இருந்தாலும் இப்படி ஒன்று இருக்கிறது என்று உங்களுக்குக் காட்டுவதற்காகப் படத்தைச் சேர்த்தேன்.
    //

    ஹா ஹா ஹா இது கீசாக்காவுக்கும் நெ.தமிழனுக்குமாகத்தானே ஜொள்றீங்க?:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹிஹிஹிஹி அதிரா அப்படியும் கொள்ளலாம்!!! எல்லாருக்கும் என்றாலும் கூட....

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  13. //வெள்ளை கோபுரம்....இந்தக் கோபுரம் எனக்கு மிகவும் பிடித்தது. மிகவும் ஈர்த்தது.//

    வாவ்வ்வ்வ்வ் கீதா உண்மையில் சூப்பரோ சூப்பர்.. சொல்ல வார்த்தையில்லை வேற லெவல்... மிக அழகாக படமெடுத்திருக்கிறீங்க... ரொம்ப நல்லா தேறிட்டீங்க படம் எடுப்பதில்.. உண்மையைச் சொல்லுங்கோ எடுத்தது நீங்கள்தானே?:) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெள்ளைக் கோபுரத்துக்கு ஓர் கதை இருக்கு அதைத் தனியாச் சொல்றேன். ஆண்டாள் இருக்கும் இடத்தைப் படம் பிடித்திருக்காங்களே அதன் வலப்பக்கம் தெரியும் ஆண்டாள் சந்நிதியில் குடிகொண்டிருக்கும் ஆண்டாளிடம் நாம் எதை வேண்டிக்கொண்டாலும் செய்து கொடுப்பாள். நாங்க இவளிடம் தான் முறையிடுவோம். இப்போவும் முறையிட்டுக்கொண்டிருக்கேன்.

      நீக்கு
    2. ஆமாம் அதிரா வெள்ளை கோபுரம் அது ரொம்ப அழகு அதற்கு ஒரு கதை உண்டு...

      கீதாக்கா அந்தக் கதை தெரியும்...அதையே வேறு ஒரு விதமாக காலச்சக்கரா நரசிம்மா ரங்கராட்டினத்தில் சொல்லியிருக்கிறார் இல்லையா..கீதாக்கா..

      நானும் வெள்ளை கோபுரக் கதை கேட்டிருக்கிறேன் கீதாக்கா

      ஆமாம் கீதாக்கா ஆண்டாள் சன்னதி எதிரில்தான் நாம் ஏறிப் பார்க்கும் படிகள் இருக்கு மொட்டை மாடி போன்ற பெரிய தளத்திற்குச் செல்லும் படிகள். அத்தனை படிகள் ஒன்றும் இல்லை அக்கா....

      ஆண்டாள் செல்லம் அடுத்த பதிவில் வருவாள் பாருங்கள்...வீடியோவும் வரும்..

      மிக்க நன்றி கீதாக்கா

      கீதா

      நீக்கு
    3. @ கீசா மேடம் - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      //வலப்பக்கம் தெரியும் ஆண்டாள் சந்நிதியில் குடிகொண்டிருக்கும் ஆண்டாளிடம் நாம் எதை வேண்டிக்கொண்டாலும் செய்து கொடுப்பாள்.//

      எனக்கு இதை இதுவரை சொன்னதே இல்லையே.... மீண்டும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    4. நேரிலேயே மாமா சொன்னார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அப்போக் குறட்டை விட்டுத் தூங்கினீங்களோ, இல்லைனா புளியோதரை ஞாபகமோ?

      நீக்கு
    5. ஹா ஹா ஹா நெ.தமிழன் அது அதிராவுக்குத்தான் கீசாக்கா சொல்லுவா.

      நீக்கு
    6. கீதாக்கா ஹா ஹா ஹா ஹா..பார்த்தீங்களா அக்கா உங்க பதிவையும் நெல்லை ஒழுங்கா வாசிக்கறதில்லை.....மாமா நேர்ல சொன்னதையும் கவனிக்கலை....பாத்தீங்களா...

      விடாதீங்க நெல்லையை!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    7. எப்படி இது நினைவில் இல்லாமல் போனது? ஆனாலும் சொன்னமாதிரி நினைவில் இல்லை. வந்து கேட்கலாம்னா, இவங்க அம்பேரிக்காவில் இருக்காங்க.

      கீசா மேடம்... எனக்கு எப்போதுமே புளியோதரை நினைவு கிடையாது. சர்க்கரைப் பொங்கல் நினைவு மட்டும்தான். (ஆனா, ச.பொங்கல் நான் ரொம்ப ரொம்ப நல்லாச் செய்வேன்னு நானே நினைத்துக்குவேன்.... வீட்டுல சொல்லிட்டாலும்...)

      நீக்கு
  14. //இது மேலே நான் நன்றாகப் பார்த்துக்கங்கனு சொல்லியிருந்த கொலாஜ் தொகுப்பில் இருக்கும் மூன்றாவதாக இடப்புறம் உள்ள கோபுரத்தின் மேற்பகுதி பின்புறம்..//

    இங்குதான் என்னைக் குழப்புறீங்க கர்:)
    இது கோபுரமோ கோபுரவிமானமோ??

    மேலே மொட்டை மாடியில் ஏறி எடுப்பதனால் இவ்ளோ அருகில் சூப்பராக தெரியுது.. இப்படி இடங்களுக்குப் போனால் எனக்கு ஒருவித உணர்ச்சிப்பிரவாகம் ஊற்றெடுக்கும்.. என்ன பண்ணுவதென்றே தெரியாத ஒரு நிலைமை வரும் ஹா ஹா ஹா. அவ்ளோ அழகோ அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபுரம் அதிரா. விமானம் என்பதற்கு நானும் சொல்லியிருக்கிறேன் கீதாக்காவும் சொல்லியிருக்காங்க பாருங்க..

      நிஜமாகவே எனக்கும் அன்று அத்தனை பரவசம். இப்படி எடுக்க வாய்பு கொடுத்த என் மைத்துனருக்கும் என் அவர்களின் சித்தப்பா பெண்ணிற்கும் தான் நன்று சொல்ல வேண்டும்....

      நான் பொதுவாக எங்கு சென்றாலும் அங்கு என்ன ஸ்பெஷல் என்று கூர்ந்து நோக்குவது உண்டு. என்னெல்லாம் இருக்கிறது என்று கொஞ்சம் ஆராய்வது உண்டு. அது நான் உடன் செல்லும் நபர்களைப் பொருத்து..இவர்களும் நம் அலைவரிசை ஸோ..

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
  15. அனைத்து சிற்ப வேலைப்பாடுகளும் அழகோ அழகு கீதா, மிக அழகாகப் புனிதமாகவும் பாதுகாக்கிறார்கள்.. ஊத்தை பட்டிடாமல்.. அதுதான் இன்னும் மனதை அள்ளுது.

    வெளித்தோற்றம் பார்த்து எனக்குப் பிடிச்சுப்போச்சுப் பொம்பிளையை:)).. பார்ப்போம்ம்.. இனி உள்மண்டபம் பார்த்துத்தான்[மனதை] பொம்பிளையை முடிவு செய்வேன்:)) ஹா ஹா ஹா.. தொடருங்கோ.. விடுமுறை என்பதால் ரிலாக்ஸ் ஆக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா ரசித்ததிற்கு மிக்க நன்றி

      பாதுகாக்கிறார்கள் தான் இன்னும் கொஞ்சம் செய்யலாம் என்றும் தோன்றியது.

      பெரிய கோயில் அதிரா. உள்ளே சுற்றவே அரை நாள் வேண்டும். பார்த்து ரசிக்க என்று.

      ஹா ஹா ஹா ஹா உள்ளே பார்த்து முடிவு செய்யுங்க அதிரா...

      ஏதோ பிஸி என்று சொன்னீங்களே..அடுத்த இரு வாரம்...

      மிக்க நன்றி அதிரா

      கீதா

      நீக்கு
    2. //இனி உள்மண்டபம் பார்த்துத்தான்[மனதை] பொம்பிளையை முடிவு செய்வேன்:)) // - இதுக்குத்தான் இளையராஜா உங்களைப்போன்றவர்களுக்குப் பாடியிருக்கிறார்.

      பெண் மனசு ஆழமென்று ஆம்பளைக்குத் தெரியும்..அது பொம்பளைக்கும் தெரியும்
      அந்த ஆழத்துல என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும்.............

      இவங்க மனசைப் புரிஞ்சுக்கிட்டு டிசைட் பண்ணுவாங்களாம். ஹா ஹா..அதுக்கு பல கோடி வருஷம் ஆகுமே

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர் நெல்லை இந்த பாயிடை விட மாட்டார் போல!!!! ஹா ஹா ஹா

      நாங்களும் விட மாட்டோம். ஒரு பஞ்சாயத்து போட்டுருவோம்....

      கீதா

      நீக்கு
    4. ஹா ஹா ஹா கர்ர்ர்:)) இப்போ நெல்லைத்தமிழனுக்கு என்ன பிரச்சனை:)) அவசரமாக ஒரு ராஜசபை கூட்டி இதுக்கொரு முடிவு கட்டோணும் விரைவில்:))

      நீக்கு
    5. அதிரா அதுக்குத்தான் அடுத்த புதன் எபியில் கே ப வில் வரும் பஞ்சாயத்து இருக்கு!!! ரெடியா இருங்க...ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
  16. வணக்கம் சகோதரி

    கோபுரங்கள் மிக அழகாக இருக்கின்றன. ஒவ்வொன்றையும் மிக நிதானமாக படமெடுத்துப் போட்டு அழகாக விபரங்களையும் தொகுத்து சொல்லியுள்ளீர்கள்.கோபுரங்களின் உள்ள சிற்பங்கள் ஒவ்வொன்றும் கலை நயத்துடன் செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிரஹ தங்க விமான தரிசனமும் கண்ணுக்கு நிறைவாக அழகாக உள்ளது.

    எப்போதோ இருபது வருடங்களுக்கு முன் சென்னையிலிருக்கும் போது ஒருதடவை ஸ்ரீரங்கம் போனது. அதன் பிறகு செல்லும் சந்தர்ப்பம் வரவில்லை. அங்கு இப்போது உறவு வீடு இருக்கிறது. (மருமகனின் அம்மா வீடு) நம் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களும், இங்கு வரும் போது நம் வீட்டிற்கும் வாருங்கள் என அழைப்பு விடுக்கிறார். இப்போதும் அங்கு போக ஆசையாக நினைக்கிறேன். ஆனால் ரங்கநாதன் இன்னமும் நினைக்கவில்லை போலும்...! சமயம் வரட்டும்.!

    தங்கள் கோபுர படங்களை கண்டு ரங்கநாதனை மனதாற தரிசித்துக் கொண்டேன். கோபுர தரிசனம் கோடி பாவங்கள் விலகும் என்பார்கள். பாவங்கள் விலகி அவன் தரிசனம் கிடைக்கும் நாட்கள் அருகில் வரட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா, ஆமாம் அக்கா கோயில் சிற்பங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. நான் பல முறை போயிருக்கிறேன் கோயிலுக்கு ஆனால் அப்போதெல்லாம் சன்னதிகள் குறிப்பாக முக்கியமான சன்னதிகள் என்று பார்த்துவிட்டு வந்துவிடுவது. ஆனால் இம்முறைதான் இந்த வாய்ப்பு கிடைத்தது கமலாக்கா

      போய்ட்டு வாங்க கமலா அக்கா. கீதாக்கா வீடு கோயில் சமீபத்தில்தான் இருக்கிறது.

      மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  17. அன்பு கீதாமா.
    எத்தனை அழகான படங்கள். எவ்வள்வு கோபுரங்கள்.
    எத்தனை உழைப்பு உள்ளே போயிருக்கு.

    கொலாஜ் படங்கள் சிறப்பா இருக்குமா. ஒரு சின்ன மாடத்தில் ஆஞ்சனேயரா.
    அழகையுமித்தனை சிறப்பா எடுத்திருக்கீங்களே.

    மிக மிக நன்றி.ராஜா. அத்தனை புண்ணியமும் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா உங்க கருத்துக்கு.

      புண்ணியம்? சரி சரி அது பத்தி இங்க நான் பேசலை..ஹா ஹா ஹா ஹா...

      கீதா

      நீக்கு
  18. படங்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது அதேபோல் தெளிவும் அருமை.

    சில படங்களை எடுத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி.

      எடுத்துக் கொள்ளுங்கள் கில்லர்ஜி!

      கீதா

      நீக்கு
  19. கீதாக்கா மெதுவா உங்க ட்யூட்டி முடிச்சுட்டு வந்து கருத்து சொல்லுங்க...

    இப்ப நெட்டும் படுத்துது...நான் தூங்கும் சமயம். இனி நாளை மீதி எல்லா கருத்துகளுக்கும் பதில் சொல்கிறேன்..கோமதிக்கா, வல்லிம்மா, பானுக்கா, கமலா அக்கா....பொருத்துக்கோங்க..

    கீதா

    பதிலளிநீக்கு
  20. நல்ல விளக்கமாகச் சொல்லியிருக்கீங்க. ஆனால் எப்படிச் சொன்னாலும் நாம நேர்ல பார்த்தப்பறம்தான் நன்றாகப் புரியும்.

    நிறைய படங்கள் போட்டிருக்கீங்க. நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நெல்லை....

      ஆமாம் நேர்ல பார்த்தாதான் நன்றாகப் புரியும்....

      கருத்துக்கு மிக்க நன்றி

      கீதா

      நீக்கு
  21. நீங்க என்னதான் விளக்கமாச் சொன்னாலும், படங்கள் (கோபுரப் படங்கள்) ஒரே மாதிரி இருப்பது போலத்தான் தோன்றும். ஆனா இவை நான் இதுவரை பார்க்காதவை.

    அப்புறம் அந்தத் தங்க விமானம் அருகில் செல்ல முடிந்ததா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை ஒரு கோபுரம் படம் பெயரில்லாமல் போட்டுவிட்டு இது எந்தக் கோயில் கோபுரம் என்று கேட்டால் சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா நாம் நிறைய தடவை பார்த்த கோபுரம் அல்லது ஸ்பெசிஃபிக்காகத் தெரியும் கோபுரம்னா மட்டுமே சொல்ல முடியும். மற்றொன்று கோபுரத்தில் இருக்கும் சின்ன சின்ன சிலை உருவங்கள் வைத்து அப்புறம் போடப்படும் குறியீடு வைத்து இன்ன கோயில் என்று மட்டும் சொல்லலாம் என்றாலும் இந்த ஊர்க் கோயில் என்று சொல்வது கடினம் தான் அதாவது என்னைப் போன்றோருக்கு. நான் ரசித்து எடுப்பதோடு சரி...நுண்ணிய விளக்கம் எல்லாம் சொல்லத் தெரியாது!!!!!!!! ஹிஹிஹிஹி.....

      போய்ப் பாருங்க நெல்லை சூப்பரா இருக்கு உள்ளே யும் எனக்கு நேரம் பத்தவில்லை. கண்டிப்பாக அரை நாள் வேண்டியிருக்கும்...

      தங்கவிமானம் அருகே செல்ல முடியவில்லை நெல்லை.

      நெல்லை தங்கவிமானம் கருவறை மேல் உள்ள விமானம் இல்லையா அதன் மேல் நாம் நிற்பது சரியாகுமா என்று என் மனதில் தோன்றியது. செல்ல முடியுமாக இருந்திருந்தாலும் நான் சென்றிருக்க மாட்டேன் நெல்லை. என் மனம் அதற்கு உடன்படாது.

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    2. தங்க விமானம் அருகில் என்றால், கொஞ்ச தூரத்தில். தங்க விமானத்தின் பக்கத்தில், கும்பாபிஷேகம் சமயத்தில்தான் முக்கியஸ்தர்கள் செல்வார்கள்.

      ஸ்ரீரங்கம் கோவில் - பல தடவை சென்றிருக்கிறேன், ஆனால் ஒவ்வொரு தடவையும் 5-8 சன்னிதிகளுக்கு மேல் சென்றதில்லை. அங்கே 100+ சன்னிதிகள் உண்டு. ப்ராப்தம் இருந்தால் டிசம்பர் 3வது வாரம் 3 மணி நேரம் செல்வேன். அப்போதும் 4 சன்னிதிகள்தான் தரிசிக்க இயலும் (பெரிய பெருமாள் 1 மணி நேரம் ஆயிடும். தாயார் 1/2-3/4 மணி. இராமானுசர், சக்கரத்தாழ்வார்)

      நீக்கு
    3. தங்க விமானம் அருகில் என்றால், கொஞ்ச தூரத்தில்.//

      புரிந்தது நெல்லை!!

      அந்தக் கொஞ்ச தூரம் தான் நெல்லை நாங்கள் நின்றதும். நாம் நிற்கும் இடம் ஒன்றுதான் தளம் நெல்லை. இரண்டாவது படத்தில் பார்த்தீங்கனா நான் அந்தக் குட்டைச் சுவர் இருக்கு இல்லையா அதன் பக்கத்தில் நின்று எடுத்தது. அந்தக் குட்டைச் சுவர் அப்புறம் கொஞ்சம் கேப் இருந்த நினைவு. ஆனா அடுத்த தளத்துக்குக் குதிச்சு போலாம்னு தோனுது. ஆனால் எங்களுடன் வந்த பணியாளர் இந்த இடத்தில் மட்டும்தான்னு சொன்னதாக நினைவு. அடுத்து நேரமும் இல்லை. டக் டக்கென்று எடுத்துச் செல்ல வேண்டுமே...என் கேமரா வேறு அவ்வப்போது லென்ஸ் எரர் சொல்லும். ஸோ கிடைத்த வாய்ப்பில் எடுத்ததுதான் நெல்லை. அப்புறம் தோன்றியது வீட்டுக்கு வந்து படங்களை கணினியில் காப்பி செய்தப்ப ச்சே இன்னும் கொஞ்சம் கூட எடுத்திருக்கலாம்னு. ஆனால் தளம் நாம படம் எடுக்கும் ஆர்வத்தில் கவனக் குறைவாக இருந்தால் ஏதாவது நேரிட உண்டு என்பதால் நானும் கொஞ்சம் கவனமாகவே இருந்தேன். தளத்தில் கொஞ்சம் படிகள் தடுப்புச் சுவர் என்று இருந்ததால்...

      நெல்லை நானும் நிறைய முறை போயிருக்கேன் கோயிலுக்கு ஆனால் இப்படிப் பார்த்ததில்லை. இந்தக் குழுவுடன் எனது அலைவரிசையுடன் ஒத்த குழுவுடன் சென்றதால் முடிந்தது. பெரும்பாலும் நான் சென்ற போது பெருமாள், தாயார், ஆண்டாள், ராமானுஜர் இன்னும் ஓரிரு சன்னதிகள் உள்ளே அவ்வளவுதான்...அது கூட எனக்கு அத்தனை நினைவில்லை பல வருடங்களுக்கு முன் என்பதால். இதுதான் முதல் முறை இப்படிப் படம் எடுத்துக் கொண்டே மண்டபங்கள் எல்லாம் அவசர அவசரமாகவேனும் சென்றது. இன்னும் படங்கள் வரும்...நெல்லை போகும் போது ப்ளான் செஞ்சுகொஞ்சம் நிதானமாகப் பார்க்கும்படி போங்க...ரொம்பப் பெரிய கோயில் நிறைய அழகு சிற்பங்கள் இருக்கு. நான் எடுத்ததும் கொஞ்சமே கொஞ்சம் தான்...

      மிக்க நன்றி நெல்லை

      கீதா

      நீக்கு
    4. யாத்திரை குழுவிலெல்லாம் 'நிதானமா' லாம் முடியாது. சென்றதடவை கீசா மேடத்தை 5 நிமிடங்களாவது சந்திக்கணும்னு நினைத்து முடியலை. அவங்க, 2 மணி நேரம் கொடுத்து இதை இதை தரிசிச்சிட்டு வந்து சேருங்க என்பார்கள். கூடவே ஒருத்தர் பார்த்துப்பார் (கியூவில் நிற்காமல்).

      கோவில் சிற்பங்கள் சில எடுத்திருக்கிறேன். எனக்கு கோவில் செல்லும்போதெல்லாம் வரலாறுதான் நினைவுக்கு வரும். ஆழ்வார்கள் நடமாடிய இடம். இராமானுசர் மற்றும் ஆச்சார்யர்கள் உலாவின இடம். அப்புறம் கீசா மேடம் எழுதும் கதையும் நினைவுக்கு வரும்.

      நீக்கு
  22. நெல்லை மூன்று மணி நேரம் எல்லாம் பத்தவே பத்தாது. நீங்கள் சொல்லுவது போல்.

    ஒவ்வொரு சுற்றையும் நிதானமாகச் சுற்றி வந்தால் தான் நிறைய பார்க்க முடியும். அதற்கு கண்டிப்பாக இரு நாட்களேனும் வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  23. கொலாஜ் ஒன்றில் நாலாவதாக உள்ள படம், நானும் எடுத்துப் போட்டிருக்கேன். தேடணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போடுங்க கீதாக்கா!!! பதிவுல இருக்கா? என்னனு லிங்க் பெயர் கொடுத்திருந்தீங்கனு சொல்லுங்க கீதாக்கா பார்த்துவிடுகிறேன்..

      கீதா

      நீக்கு
  24. இறை பக்தியும், புகைப்பட ரசனையும் எங்களை அதிகம் ஈர்த்தது.

    பதிலளிநீக்கு
  25. அழகான படங்கள்... இங்கே படம் எடுக்க ஒரு நாள் போதாது கீதாஜி. நிறைய சிற்பங்கள், காட்சிகள் உண்டு.

    படங்கள் அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வெங்கட்ஜி. ஆமாம் ஒரு நாள் போதவே போதாது ஜி. இன்னும் படங்கள் கொஞ்சம் எடுத்திருக்கிறேன் ஆனால் அவை ஜஸ்ட் மண்டபங்கள் வழியாக வேக வேகமாகப் போன போது எடுத்தவை மட்டுமே...

      மிக்க நன்றி வெங்கட்ஜி

      கீதா

      நீக்கு
  26. அற்புத காட்சிகள் ...

    பார்க்க பார்க்க தெவிட்டாத தரிசனம் ...அரங்கன் அருள் புரியணும் நாங்களும் இது போல காண ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனு ரிலாக்ஸ்டாக போய்ப் பாருங்க. அப்ப நின்று நிதானமா பார்க்கலாம். நான் வேக வேகமா போய் எடுத்தது. ஒரே ஒரு சுற்றுத்தான் போனது அனு. நிறைய இருக்கு...

      மிக்க நன்றி அனு கருத்திற்கு

      கீதா

      நீக்கு
  27. பூலோக் வைகுண்டம்...
    புண்ணிய தரிசனம்...

    மனம் மகிழ்கின்றது.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  28. அன்பிற்கினிய நண்பர்களே,

    வாழ்க்கை என்பது நடு கடலின் பயணம் என்பது எவ்வளவ் சரியோ அதுபோல இந்த உலக உருண்டை கடலில் மிதக்கும் ஒரு படகுதான் என்பதும் சரிதான் . பின்னே வேறு எப்படி;, மூன்று பங்கு கடல் ஒருபங்குதானே நிலம்.
    எப்போதும் நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞனடா எனும் நினைப்பு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நேர்வழி சென்றால் வரவிருக்கும் பாதகங்கள் பாதை மாறி சென்றுவிடும், காலம் நிச்சயம் வென்றுவிடும் கொரோனாவை சீக்கிரம் கொன்றுவிடும் .

    மறந்திருக்க மாட்டீர்கள் என மனமார நம்புகிறேன்.

    கோ

    பதிலளிநீக்கு
  29. அன்பிற்கினிய நண்பர்களே,

    வாழ்க்கை என்பது நடு கடலின் பயணம் என்பது எவ்வளவ் சரியோ அதுபோல இந்த உலக உருண்டை கடலில் மிதக்கும் ஒரு படகுதான் என்பதும் சரிதான் . பின்னே வேறு எப்படி;, மூன்று பங்கு கடல் ஒருபங்குதானே நிலம்.
    எப்போதும் நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா தினம் நாடகம் ஆடும் கலைஞனடா எனும் நினைப்பு நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து நேர்வழி சென்றால் வரவிருக்கும் பாதகங்கள் பாதை மாறி சென்றுவிடும், காலம் நிச்சயம் வென்றுவிடும் கொரோனாவை சீக்கிரம் கொன்றுவிடும் .

    மறந்திருக்க மாட்டீர்கள் என மனமார நம்புகிறேன்.

    கோ

    பதிலளிநீக்கு