திங்கள், 16 டிசம்பர், 2013

கிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம் Statue of unity க்குத் தோரணம் கட்டுகிறது


     கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல் ஒரு சம்பவம்.1948 IAS பாட்சைச் சேர்ந்த திரு. M.K.K. நாயர் தன் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக வெளியிட்டதும், அதில் மறைந்த நம் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவையும், உதவி பிரதமரும், ஹோம் மினிஸ்டருமான இரும்பு மனிதர் பட்டேலைப் பற்றிய சில சம்பவங்கள் தான் இந்தியாவை கடந்த சில மாதங்களாகக் குலுக்கிக் கொண்டிருக்கிறது.  சர்தார் பட்டேலின் பிறந்த நாளான டிசம்பர் 15, முன் வருடங்களைப் போல் அல்லாமல் இந்தியாவெங்கும் மிகவும் சிறப்பாக்க் கொண்ட்டாடப் பட்டதற்கு இதுவும் ஒரு காரணம்.  திரு. M.K.K. நாயர் தன் வாழ்க்கை வரலாற்றில் பட்டேல் மறைந்த போது இறுதிச் சடங்கில் அன்றையப் பிரதமரான நேரு பங்கெடுக்க வில்லை என்றும், அன்றைய காபினெட் செக்ரெட்ரியான V.P. மேனன், தன் சொந்தப் பணத்தில் அவருடைய அலுவலகத்தில் இருந்த 12 பேரை பம்பாயில் நடந்த பட்டேலின் இறுதிச் சடங்கில் பங்கெடுக்க அனுப்பி வைத்தார் என்பதும்தான் விவாதமானது. குஜராத்தில் பிறந்த பட்டேல், சுதந்திர இந்தியாவை உருவாக்கிய பின் தன் இறுதிக் காலத்தில் ஒரு சாதாரண மனிதரைப் போல் வாழ்ந்து மறைந்தார். பட்டேலுக்குப் பின் வந்த அவரது தலை முறையினர் எவருமே அரசியலுக்கு வந்து பிரகாசிக்கவும் இல்லை.  அதற்காக அவர் எந்தவித முயற்சியும் எடுக்கவும் இல்லை..  எப்போதும் முதல் இடத்தைத் தவறவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடிப்பவர்கள் வரலாற்றில் மறக்கப்பட்டுத்தான் விடுவார்கள் என்பதற்கு சர்தால் பட்டேல் நல்ல ஒரு உவமையே.
காந்திஜியின் இடப்பக்கமும், வலப்பக்கமும் நின்று சுதந்திரம் கிடைக்கப் போராடிய இருவரில், அன்றையப் பிரதமர் நேருவின் பங்கை விட பட்டேலின் பங்குதான் கூடுதல் என்று வாதிப்பவர்களும் உண்டு. 


இருப்பினும் காந்திஜி, 1946 ல் நேருவை காங்கிரசின் பிரசிடென்ட் ஆக்கினார்.  அதுவும், நேருவுக்கு ஆதரவு தெரிவித்த மாநில காங்கிரஸ் பிரசிடென்டுகளை விட அதிகமானோர் பட்டேலுக்கு ஆதரவு தெரிவித்த பிறகும், காங்கிரஸ் பிரசிடென்ட் ஆன நேரு 1947 ல் பாரதப் பிரதமர் ஆகவும் செய்தார்.  பட்டேலோ உதவிப் பிரதமர் ஆனார்.  குஜராத்தில் உள்ள ஜூனாக்குட்டையும, ஹைதராபாத்தையும் இந்திய யூனியனுடன் சேர்த்தப் பெருமை பட்டேலையேச் சேரும்.  அதே சமயம் காஷ்மீர் விஷயத்தில் அன்றைய பிரதமர் நேரு, பட்டேல் செய்தது போல் செய்யாமல் போனதுதான்  காஷ்மீர் இந்தியாவுக்குப் பிரச்சினையாக இப்போதும் இருக்கக் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. இப்படிப்பட்ட சூழலில்தான் பட்டேலுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்காமல் போனது என்று சொல்லப்படுகிறது. மட்டுமல்ல, பட்டேல் எப்போதும் முகம் பராமல் நடவடிக்கை எடுப்பவர் என்பதும் எலோருக்கும் தெரிந்ததே. 


காந்திஜி RSS  ஐச் சேர்ந்த கோட்சேயால் கொல்லப்பட்டவுடன் இந்தியாவில் RSS ஐயே தடை செய்தார்.  நேருவுக்குப் பின்னர் வந்த பாரதப் பிரதமர்கள் எல்லோருமே சர்தார் பட்டேலுக்காக ஒன்றும் செய்யாமல் இருந்த போது, முன் பிரதமர் நரசிம்மாராவ் தான் அவருக்குப் பாரதரத்தினா வழங்கினார் என்றும் வாதிக்கபடுகிறது.  கடந்த மாதம் குஜராத்தில் நர்மதா அணைக்கட்டுக்கு அருகே, அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட உயரத்தில் உயரவிருக்கும் சர்தால் பட்டேலின் 597 அடி உருவ சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில்  பங்கெடுத்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், பாரதப் பிரதமர் மன்மோஹன் சிங்கும், இப்பிரச்சினை பற்றிப் பேசிய போது வாக்குவாதம் உண்டானது எல்லோருக்கும் தெரிந்ததே.


காங்கிரசும், பாஜக வும் முன்பு செய்ததையும், இப்போது செய்வதைப் பற்றியும் என்னென்ன காரணங்கள் சொன்னாலும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தன் சுயநலம் கருதித்தான் பட்டேலுக்குச் சிலை வைக்கிறார் என்று சொன்னாலும், சர்தார் பட்டேலுக்குச் சிலை வைப்பது நல்ல காரியமே.  பலரது விரோதத்திற்குப் பாத்திரமான போதும், பினவாங்காமல் 500 க்கும் மேற்பட்ட சிற்றரசுகளை ஒருங்கிணைத்து நம் இந்தியாவை உருவாக்கியவர்களில்  மிக முக்கியமானப் பங்கு வகித்த இரும்பு மனிதரை இதுவரை மறந்திருந்தக் குற்றத்திற்காக, இப்போதாவது இது போன்ற ஒரு நல்ல காரியம் செய்தது வரவேற்கத் தக்கதே.  அதை குஜராத் முதல்வர் மோடி செய்கிறார் என்பதற்காக அரசியல் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை. பட்டேல் இதற்குத் தகுதி உடையவரே என்பதைத்தான் திரு M.K.K. நாயர் வெட்டிய கிணற்றிலிருந்து வந்த பூதம் உணர்த்தி இருக்கிறது. 2,074 கோடி ரூபாய் செலவிட்டு, 35,000 டன் சிமென்டும், 3,750 டன் இரும்பும், 1,500 டன் வெண்கலமும் உபயோகித்துச் செய்யும் இந்த சர்தார் பட்டேலின் உருவச் சிலை உலக அதிசயங்களில் ஒன்றாகுமாம். நர்மதா நதியின் நடுவில், சிறிய பாறையின் மீது, சர்தார் சரொவர் அணைக்கட்டை நோக்கியபடி எழுப்பப் படுகிறதாம். அமெரிக்காவில் உள்ள லிபர்டி சிலையை விட இருமடங்கு உயரமாகவும், பிரேசிலில் உள்ள Christ the Redeemer in Rio de Janeiro சிலையை விட ஐந்து மடங்கு உயரமாகவும், நம் இரும்பு மனிதரின் statue of unity உயர்ந்து நிற்கும் என்று கேட்கும் போது காதில் தேன் பாய்கிறது.  

14 கருத்துகள்:

 1. சர்தார் பட்டேலுக்குச் சிலை வைப்பது நல்ல காரியமே.பட்டேலைப்போல் சிறந்த மனிதர்களையும் அரசியல் பழிவாங்கி விட்டது என்பதும் உண்மையே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பழிவாங்கும் படலம் இன்னும் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது! வருகைக்கும், கருத்திற்கும் நன்றி!!

   நீக்கு
 2. உலக அதிசயமாகப் போகிறது என்னும் தகவல் மகிழ்ச்சியை அளிக்கிறது...

  பதிலளிநீக்கு
 3. தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

  விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்த்துவிட்டோம். பின்னூட்டம் உங்கள் பதிவில். பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!!!

   நீக்கு
 4. இரும்பு மனிதர் மறக்கப்பட்டது மாபெரும் குற்றம்.

  அவருக்கு மாபெரும் சிலை எழுப்புவது மனதுக்கு ஆறுதல் தரும் செயல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிதான்!! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!!

   நீக்கு
 5. வணக்கம்
  பதிவு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  (என் உடல் நலம் சரி இல்லாத காரணத்தால் இணையப்பக்கம் வர முடியாமல் ஆனது.. இப்போ சரியாகிவிட்டது.)நண்பரே

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே!! வருகைக்கும், கருத்திற்கும்!!

   (உங்கள் உடல் நிலை இப்போது எப்படி உள்ளது? நன்றாகி விட்டதா? கவனித்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியத்தை)

   நீக்கு
 6. வணக்கம்
  த.ம5வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு