பிரபாகரன் மாமாவின் உடல் எரிக்கப்பட்ட அவரது வீட்டிற்குத் தென்புறம் உள்ள இடத்தில் அவரது அஸ்தி (மீதமுள்ள எலும்புகள்) சேகரிக்கும் சடங்கு நடக்கிறது. துக்கத்துடன் அவர் இரண்டு மகள்களும், அவர்களது கணவன்மார்களும், மக்களும் அவர்களது குடும்பங்களும் இப்படி அங்கே ஏறத்தாழ 25 பேர்.
மூத்த மகள் பார்வதியின் மகன் ராகுல், கால்களில் பாக்கு மரப்பாளையில் செய்த செருப்பணிந்து, கையில் இரண்டு சிறிய கம்புகளை இடுக்கி போல் உபயோகித்து, சாம்பலின் இடையே உள்ள எஞ்சிய எலும்புகளின் துண்டுகளைத் தலை, நெஞ்சு, கால் இருந்த பகுதிகளிலிருந்து எடுத்துச், சடங்குகளை நடத்தும் ரமணன் தன் கையில் பிடித்திருக்கும் பாக்கு மரப் பாளையில் செய்யப்பட்ட முறம் போன்ற ஒன்றில், இட்டுக் கொண்டிருந்தான். படுத்த படுக்கையாகும் முன், பிரபாகரன் மாமாதான் இறந்த வீடுகளில் இது போன்ற சடங்குகளை முன் நின்று செய்து கொண்டிருந்தார்.
எத்தனையோ முறை இது போல், பாக்கு மரப்பாளை முறத்தில் இறந்தவர்களின் அஸ்திகளை வாங்கி, ஒரு மண் குடத்திலிட்டு, 11 நாட்கள் பாதுகாத்தபின், "வர்க்கலா கடலில்", "நிமஞ்சனம்" (க்டலில் கலக்கும்/கரைக்கும் சடங்கு) செய்யும் வரை, மிகுந்த கவனத்துடன் செய்து வந்த அவரது அஸ்திகள் இன்று சேகரிக்கப்படுகின்றது, அதே "வர்கலா" கடலில் நிமஞ்சனம் செய்வதற்காக.
நோய்வாய்பட்ட அவருக்குக் கடந்த 5 வருடங்களாகத்தான், பொதுப் பணிகளிலும், சேவைகளிலும் பங்கெடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அதற்கு முன்பு வரை, கோயில் திருவிழா, கல்யாணம், மரணம் போன்றவை நிகழும் இடங்களில் அவர் இன்றியமையாத ஒருவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அவரும் அவரது மனைவியும், அவரது இளைய மகளுடன், இதே வீட்டில்தான் தங்கியிருந்தார்கள். திடீரென அவரது மனைவிக்குக் கால் மூட்டுத் தேய்மானத்திற்கான அறுவை சிகிச்சை செய்து Knee Cap மாற்றி வைக்க வேண்டியக் கட்டாயம் வர, நோய்வாய்பட்ட இருவரையும் கவனிக்கத் தன்னால் முடியாது என்று இளையமகள் சொல்ல, பிரபாகரன் மாமாவின் மனைவி எர்ணாகுளத்தில் உள்ள மூத்த மகளுடன் தங்க வேண்டியதானது. சொத்துக்களைச் சரிசமமாக பிரிப்பது போல் பெற்றோர்களையும் சரி சமமாகப் பிரித்துத் தங்கள் கடைமைகளை யாரும் குற்றம் சொல்ல முடியாத விதத்தில் அவரது மகள்கள் செய்யத் தொடங்கினார்கள்.
இந்த முடிவெடுக்க வேண்டிய சூழல் வந்து, பேச்சு எழுந்த போது,
"நானும், அவளும் ஒரு வாடகை வீட்டுல, ஒரு ஹோம் நர்ஸ் எங்களைப் பாத்துக்க போட்டுகிட்டு இருந்துக்கறோம்" என்றார் பிராபாகரன் மாமா.
இது மாமாவின் மகள்கள், மருமகன்களின் வெறுப்பைச் சம்பாதித்ததே ஒழிய அவர் விரும்பியது போல் மனவியுடன் ஒன்றாகத் தங்க முடியவில்லை.
"தினமும் ஃபோனில் பேசலாம், மாசத்துக்கு ஒருமுறை அப்பா அங்கேயோ, அம்மா இங்கேயோ வந்து போகலாமே" என்றெல்லாம் ஆசை வார்த்தைகள் சொல்லப்பட மட்டும் செய்தன. செயல் அளவில் ஒன்றும் நிகழவில்லை.
4 மாதங்களுக்கு முன் பிரபாகரன் மாமாவைப் பார்க்கச் சென்ற போது, வீட்டில் வேலைக்காரி மட்டும் இருந்ததால், அவர் என்னிடம் தன் மனம் திறந்து பேசினார். அவரது மனைவியைப் பற்றி பேசிய போது அவர் கண்களில் நீர் நிறைந்தது. தொண்டை அடைத்து அழுதேவிட்டார்.
"ஃபோன்ல கூடப் பேச அனுமதி இல்ல. பேசினா, நாங்க ரெண்டு பேரும் ரொம்ப உணர்ச்சிவசப் படறதுனால, அடுத்த நாளே டாக்டர்கிட்ட போகணுமா இருக்கு. அவளோடு பேசி 6 மாசத்துகு மேல ஆகிடுச்சு. என்ன வாழ்க்கை இது" என்று நொந்து கொண்டார்.
இதைக் கேட்ட எனக்கு, திடீரென, பிரபாகர் மாமாவின் அம்மா, நான் இளங்கலைப் பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்த காலத்தில், ஏறத்தாழ 25 வருடங்களுக்கு முன்பு, என்னிடம் சொன்ன வார்த்தைகள் என் நினைவுக்கு வந்தது.
"பிரபாகரன் அவங்க அப்பாகிட்ட பேசி 10 வருஷமாகுது. அவர் ஏதோ கோபத்துல பிரபாகரனோட மனைவிய அடிச்சுட்டாருதான். அது தப்புதான். அவரே பலதடவை அதை நினைச்சு வருந்திகிட்டுருக்காரு. அவனோட மனைவி, அவரோட பேசாம இருக்கலாம். ஆனால், அவன் இவரோடு பேசாம இருந்தா எப்படி? அவன் என்னோடு பேசினாலும், அவனுக்கு என் மேலயும் கோபம்தான். இவரை, ரமணிகிட்ட (பிரபாகரனின் சகோதரி) விட்டுட்டு நான் அவன் வீட்டுல தங்காததுக்கு. அதெப்படி நான் ஒரு இடத்துலயும், இவரு ஒரு இடத்துலயும் தங்கறது?"
எனக்கு, இதுதான் "தன் வினைத் தன்னைச் சுடும்" என்பதோ?! என்று தோன்றியது. சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு மாமா தொடர்ந்தார்.
"நானும் வருடங்களுக்கு முன்னாடி என்னோட மகள்கள் வயசுல என் அப்பா, அம்மாகிட்ட, அவங்க ஆசைகளத், தேவைகள கவனிக்காம, பலதையும் பேசியும், செய்தும், அவங்க மனசு நோகும்படியா நடந்துருக்கேன். இப்ப என் நிலமை அதுக்கானத் தண்டனையா இருக்கலாம்" என்றார்.
இப்படித்தான், நம் வாழ்வில், நாம் ஒவ்வொருவரும் தவறுகள் செய்யும் போது, அதைத் தவறென்று உணராமல் வாழ்வின் இறுதிக்கட்டத்தில், அது போன்ற தவறுகள் நமக்கு மற்றவர்களால் ஏற்படும் போது, நாம் செய்த தவறை எண்ணி வருந்துவோம் போல. தன் மகனின் மனைவியைக் கை நீட்டி அடித்தது தவறு என்பதை பிரபாகரன் மாமாவின் அப்பா, அவரது இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல், 10,15 வருடம் அப்பாவுடன் பேசாமலும், வயதான அம்மாவையும், அப்பாவையும், தன் தங்கையின் வீட்டில் தங்க வைத்தும், தான் இழைத்தத் தவறை, பிரபாகரன் மாமா, தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தது போல, பிரபாகரன் மாமாவின் மூத்த மகள் பார்வதியும், இளைய மகள் லக்ஷ்மியும் தங்களது இறுதிக் காலத்தில், தங்கள் பெற்றோர்களை அவர்களது இறுதிக்காலத்தில் பிரித்தும், பேசவும், பார்க்கவும் விடாமல், அவர்களுக்கு இழைத்தக் கொடுமையை எண்ணி வருந்தத்தான் செய்வார்கள். அப்படியானால், நானும் இது போல் என் பெற்றோரிடம் மனது புண்படும் விதம் நடந்திருக்கின்றேனோ?.........
சுசீந்தரம்
குமாரகோயில்
ஆம்! அப்பாவும், அம்மாவும், ரொம்ப நாட்களாகச், சுசீந்தரம், குமார கோயில், கன்னியாகுமரி போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். நானும் "பார்க்கலாம்" என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றேன், கடந்த இரண்டு வருடங்களாக. என்ன ஆனாலும் சரி, இரண்டு நாள் லீவு போட்டு, மனைவி வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, அவர்களைக் கூட்டிக் கொண்டு, அடுத்த வாரமே சுசீந்தரம் போயே தீர வேண்டும் என்று முடிவு செய்தேன். எப்படியோ, இப்போது மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறது!
அருணாச்சல முதியோர் விடுதி
கண்களில் நிறைந்த கண்ணீர் சற்றுக் கூடியதால் காரோட்ட முடியாமல் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். என் அருகே, முன் பக்க இருக்கையில், அம்மாவின் கைப்பை, துணிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டி, பேனா, மூக்குக் கண்ணாடி, புத்தகங்கள், மடிக்கணினி அதில் அம்மா இறுதி வரை தமிழில் எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள், எழுதுவதற்கான குறிப்பேடும் அதில் அம்மாவின் எழுத்துப் படைப்புகளும், டையரி, அம்மா வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை வியாதிக்கான (அது மட்டும்தான் வேறு எந்த உடல் நலக் குறைவும் இல்லை) மீந்து போன மாத்திரைகள் இவ்வளவும் இருந்ததாலோ என்னவோ, அம்மா அருகில் இருப்பதுபோல அம்மாவின் வாசனை. நரைத்த பாப் தலைமுடியுடன், பேன்ட்/சல்வார்/லெக்கிங்க்ஸ், டாப்புடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனக்கு சிறு வயது முதலே அம்மா சாரி கட்டினால் பிடிக்காது என்பதால் தன் உடை அணியும் முறையையே மாற்றிக் கொண்டவர். எனக்காகவே வாழ்ந்தவர்!
நான் காரோட்டினால் அம்மா முன் இருக்கையில்தான் அமர்வார்.maa kaarOttinaaபின் இருக்கை பிடிக்காது! அம்மா காரோட்டினால், நான்தான் முன் இருக்கையில் அம்ர்வேன், அம்மாவும் அதைத்தான் விரும்புவார். இது கார் வாங்கியதிலிருந்து பல வ்ருடப் பழக்கம். இதுதான் முதல் தடவை இந்தியாவில் அம்மா என் அருகில் இல்லாமல் நான் காரோட்டுவது. அவர் இறந்து 3 நாட்களே ஆகின்றது. வயது 85. என் வயது 60. இதோ, விடுதியிலிருந்து அவரது உடைமைகளை எடுத்து வருகின்றேன். நான் உலகறியும் மருத்துவராக இன்று அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாதான் முழு முதற் காரணம். இருந்தாலும், அம்மா என்னுடன் இருக்க மறுத்து இந்தியாவில் வசிப்பதில் பிடிவாதமாக இருந்தார். இந்தியாவில் எங்கள் வீடு, தோட்டம் என்று இருந்தும், தனிமையில் இருக்க விரும்பாமல் முதியோர் விடுதியில், அதுவும், அருணாச்சலம் முதியோர் விடுதியில் தான் இருப்பேன் என்ற பிடிவாதம். என்னுடன் இருக்க வந்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் 2 மாதம்தான். அதற்கு மேல் அவருக்கு அங்கு இருக்க முடியாமல் தவித்து விடுவார். இத்தனைக்கும் அவர் என்னை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய மனமில்லாதவர், அப்பா இருந்த போது, நாங்கள் அமெரிக்காவில் சில காலம் இருக்க நேர்ந்த போது, அமெரிக்க வாழ்க்கையை மிகவும் ரசித்தவர். appதிருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, அப்பா அடிப்படையில் நல்லவர்தான் என்றாலும், அம்மா பல மன வேதனைகளுக்கு உள்ளானார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, எனக்கு அம்மாவின் இந்த முடிவு, இந்தியாவில் இருந்தது மிகவும் வருத்தம். மட்டுமல்ல முதியோர் விடுதியில், அதுவும் மேற்சொன்ன விடுதியில். அப்படி என்ன பிடிவாதம் என்று தெரியவில்லை! புரியாத புதிர்!
கண்களில் நிறைந்த கண்ணீர் சற்றுக் கூடியதால் காரோட்ட முடியாமல் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினேன். என் அருகே, முன் பக்க இருக்கையில், அம்மாவின் கைப்பை, துணிகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டி, பேனா, மூக்குக் கண்ணாடி, புத்தகங்கள், மடிக்கணினி அதில் அம்மா இறுதி வரை தமிழில் எழுதிக் கொண்டிருந்தார் என்பதற்கான அடையாளங்கள், எழுதுவதற்கான குறிப்பேடும் அதில் அம்மாவின் எழுத்துப் படைப்புகளும், டையரி, அம்மா வழக்கமாக எடுத்துக் கொள்ளும் சர்க்கரை வியாதிக்கான (அது மட்டும்தான் வேறு எந்த உடல் நலக் குறைவும் இல்லை) மீந்து போன மாத்திரைகள் இவ்வளவும் இருந்ததாலோ என்னவோ, அம்மா அருகில் இருப்பதுபோல அம்மாவின் வாசனை. நரைத்த பாப் தலைமுடியுடன், பேன்ட்/சல்வார்/லெக்கிங்க்ஸ், டாப்புடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு. எனக்கு சிறு வயது முதலே அம்மா சாரி கட்டினால் பிடிக்காது என்பதால் தன் உடை அணியும் முறையையே மாற்றிக் கொண்டவர். எனக்காகவே வாழ்ந்தவர்!
நான் காரோட்டினால் அம்மா முன் இருக்கையில்தான் அமர்வார்.maa kaarOttinaaபின் இருக்கை பிடிக்காது! அம்மா காரோட்டினால், நான்தான் முன் இருக்கையில் அம்ர்வேன், அம்மாவும் அதைத்தான் விரும்புவார். இது கார் வாங்கியதிலிருந்து பல வ்ருடப் பழக்கம். இதுதான் முதல் தடவை இந்தியாவில் அம்மா என் அருகில் இல்லாமல் நான் காரோட்டுவது. அவர் இறந்து 3 நாட்களே ஆகின்றது. வயது 85. என் வயது 60. இதோ, விடுதியிலிருந்து அவரது உடைமைகளை எடுத்து வருகின்றேன். நான் உலகறியும் மருத்துவராக இன்று அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அதற்கு என் அம்மாதான் முழு முதற் காரணம். இருந்தாலும், அம்மா என்னுடன் இருக்க மறுத்து இந்தியாவில் வசிப்பதில் பிடிவாதமாக இருந்தார். இந்தியாவில் எங்கள் வீடு, தோட்டம் என்று இருந்தும், தனிமையில் இருக்க விரும்பாமல் முதியோர் விடுதியில், அதுவும், அருணாச்சலம் முதியோர் விடுதியில் தான் இருப்பேன் என்ற பிடிவாதம். என்னுடன் இருக்க வந்தாலும் மிஞ்சி மிஞ்சிப் போனால் 2 மாதம்தான். அதற்கு மேல் அவருக்கு அங்கு இருக்க முடியாமல் தவித்து விடுவார். இத்தனைக்கும் அவர் என்னை விட்டு ஒரு நொடி கூடப் பிரிய மனமில்லாதவர், அப்பா இருந்த போது, நாங்கள் அமெரிக்காவில் சில காலம் இருக்க நேர்ந்த போது, அமெரிக்க வாழ்க்கையை மிகவும் ரசித்தவர். appதிருமணத்திற்கு முன்னும் சரி, பின்னும் சரி, அப்பா அடிப்படையில் நல்லவர்தான் என்றாலும், அம்மா பல மன வேதனைகளுக்கு உள்ளானார். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு, எனக்கு அம்மாவின் இந்த முடிவு, இந்தியாவில் இருந்தது மிகவும் வருத்தம். மட்டுமல்ல முதியோர் விடுதியில், அதுவும் மேற்சொன்ன விடுதியில். அப்படி என்ன பிடிவாதம் என்று தெரியவில்லை! புரியாத புதிர்!
எனக்கு அம்மாவின் இந்த முடிவில் மிகவும் வேதனையும் வருத்தமும் இருந்தாலும், அம்மாவின் விருப்பதிற்கு நான் தடை சொல்லவில்லை. காரணம், அம்மா காரணம் இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார். நான் அடிக்கடி இந்தியா வந்து அவருடன் 10 நாட்களாவது தங்கிவிட்டுச் செல்லுவது வழக்கம். அப்போது அம்மாவின் உற்ற நண்பர் சிவானந்தம் அங்கிள் வீட்டில் குறைந்தது 5 நாட்களாவது அம்மாவும் நானும் தங்குவது வழக்கம். அம்மாவிற்கும், அங்கிளுக்கும் அத்தனை ஒரு ஆழமான, உண்மையான அன்பும், நட்பும். எனக்குப் பல சமயங்களில் இதைக் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டதுண்டு! அம்மாவிற்கும், சிவானந்தம் அங்கிளுக்கும் மிகுந்த ஒத்த சிந்தனைகள், ஆர்வங்கள், எண்ணங்கள், கனவுகள், வாழ்க்கைக் குறிக்கோள்கள். அவரும், அம்மாவும் சேர்ந்து எழுதி தமிழில் பல படைப்புகள் படைத்து வந்தார்கள். அவர்தான், இந்தியாவில் அம்மாவைக் கவனித்துக் கொண்டவர். என்னுடன் தினமும் தொடர்பில் இருப்பவர். நான் அம்மாவுடன் தினமும் குறைந்தது 5, 6 தடவை காமரா உதவியுடன் அம்மாவைப் பார்த்துக் கொண்டே பேசி விடுவேன் என்றாலும், அம்மாவைப் பற்றிய தகவல் எல்லாம் என்னுடன் தவறாது பகிர்ந்து கொண்டவர் அங்கிள்தான். இத்தனைக்கும் அங்கிளுக்கு ஒன்றும் சிறிய வயது கிடையாது. அவருக்கும் 88 வயதாகிறது. அம்மாவின் உடல் நிலை சற்றுச் சரியில்லை என்று சிவானந்தம் அங்கிள் ஃபோன் செய்த உடன் நான் வந்து அம்மாவை எங்கள் வீட்டிற்கு அழைத்து வ்ந்து விட்டேன். சரியாக 2 வாரம் நானும் அம்மாவும் சந்தோஷமாகச் சேர்ந்து இருந்து இறுதியில் என் மடியில் உயிர் நீத்தார். அங்கிளும் அன்று உடன் இருந்தார். இந்த வயதிலும், சிறு குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுதவரைத் தேற்றுவது எனக்கு மிகவும் கடினமாகி விட்டது. அவர் தான் எனக்கு முன் நின்று அம்மாவின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற உதவினார். அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள உண்மையான பாசத்துடனும், நேசத்துடனும் வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து மிகவும் மலைத்து விட்டேன்!
மாலை நேரம் ஆகியதால், நான் நின்ற ரோட்டோரத்தில், அருகில் இருந்த மரத்தில் இருந்த பறவைகளின் கீச் கீச் சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது. கூடு திரும்பிய பறவைகள், தங்கள் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றன போலும்?! இது போல் தான், நான் வீடு திரும்பியவுடன், அம்மாவுடன் அன்றைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட இன்பமானத் தருணங்கள் என் நினைவுக்கு வந்தன. அம்மாவுக்கு இயற்கை, விலங்குகள், கலைகள், எழுதுதல், வாசித்தல் எல்லாவற்றிலும் ஆர்வம், ரசிக்கும் தன்மை இருந்தது மட்டுமல்ல அவை எல்லாமே எனக்கும் அப்படியே வந்து விட்டது. நானும் அம்மாவும் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களே இல்லை எனலாம். சிறு வயது முதலே எனக்கு மிக நெருங்கிய தோழி. அம்மாவிற்குச் சடங்குகள், சம்பிரதாயங்கள், சாதி, மூட நம்பிக்கைகள் இவற்றில் நம்பிக்கை இருக்கவில்லை. அதுவே எனக்கும். ஆனால், இருவருமே மிகுந்த இறை நம்பிக்கை உடையவர்கள். அம்மாவின் விருப்பம் போல் அவரது அஸ்தியை எங்கள் வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு எல்லாம் தூவியதாலோ என்னவோ, எங்கள் வீட்டில் ஒவ்வொரு மரத்திலும் அம்மா இருப்பது போன்ற ஒரு உணர்வு. இப்போது இந்தப் பறவைகளின் சத்தத்திலும் அம்மாவின் குரல் கேட்பது போன்ற ஒரு உணர்வு.
மாலை மங்கியதால், வீடு திரும்பினேன். வீடு திரும்பியதும் அம்மாவின் உடைமைகளை எடுத்து வைக்கும் போது அவரின் டையரி! எனக்கு ஆச்சரியம்! ஓ! அம்மாவுக்கு டையரி எழுதும் பழக்கம் இருந்ததா?! எனக்குத் தெரிந்து அந்தப் பழக்கம் கிடையாது. இங்கு தங்கிய பிறகுதான் எழுதியிருக்க வேண்டும்! வாசிக்கலாமா கூடாதா என்ற என் மனப் பட்டி மன்றத்தின் முடிவில், அம்மா ஏதாவது என்னோடு பேசியிருக்கலாம் என்ற எண்ணத்தில் வாசிக்கலாம் என்று திறந்தேன். அப்படியே உட்கார்ந்து விட்டேன். ஆச்சரியத்தில்! ஆம், அம்மாவும், அங்கிளும் சேர்ந்து எழுத்துப் படைப்புகள் மட்டுமின்றி பல நல்ல சமூக சேவைகளும், விஷயங்களும் செய்திருந்திருக்கின்றார்கள். பல நல்ல படங்களைப் பற்றியும், புத்தகங்களைப் பற்றியும் எழுதி வைத்திருந்தார். சிலவற்றைப் பற்றி என்னிடம் பேசும் போது சொல்லியிருக்கிறார். டையரியில் அம்மா எனக்கும் செய்தி சொல்லியிருந்தார். எப்படி இது என்னிடம் பேசும் போது விட்டுப் போனது என்று தெரியவில்லை.
சிறிய வயதிலிருந்தே அம்மா எனக்கு நிறைய நல்ல தமிழ், ஆங்கிலப் படங்களையும், புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். இருவரும் சேர்ந்து பல படங்கள் பார்த்திருக்கிறோம். விமர்சிப்போம்! அவருக்கு ஏனோ காதல் படங்கள் பிடிக்காது! ஏதாவது காரணம் இருந்திருக்கும். ஆனால், ஏனோ தெரியவில்லை அவரும் சொன்னதில்லை, நானும் அதைப் பற்றிக் கேட்டதில்லை!
“குட்டிப்பூ (குட்டிமா, குட்டிப்பூ, செல்லமே, குட்டிச்செல்லம், செல்லக்குட்டி என்று என்னுடைய இந்த 60 வது வயதிலும் அழைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்) மனம் சிதறாமல் உன் படிப்பில் கவனத்துடன் இருக்க வேண்டும்! உன்னைக் காதலிக்கக் கூடாது என்று சொல்ல மாட்டேன். ஒருவேளை நீ காதல் வயப்பட்டால், நீ காதலிக்கும் பெண்ணைக் கைப்பிடிக்க முடிந்தால் மட்டுமே காதலிக்க வேண்டும்! இல்லையென்றால் காதலிக்காதே!” அம்மாவின் இந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது! எதற்காக இதை என்னிடம் சொன்னார் என்று தெரியவில்லை! ஆனால், நான் எந்த பந்தத்திலும் இல்லை.
டையரியைப் படித்தேன்! அங்கிளும் அம்மாவும் சேர்ந்து, பல முதியோர்களுக்கு மருத்துவ முகாம்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவி, மூளை வளர்ச்சிக் குறைந்த, குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு உதவி, உழவர்களுக்கு இயற்கை உர விவசாயம் பற்றிய விழிப்புணர்வு, அவர்களுக்கு உதவுதல், பெண்களுக்கு சுய தொழில் தொடங்க உதவுதல், ஏழைக் குழந்தைகளுக்குத் தமிழில் பல நல்ல பாடல்கள் கற்றுக் கொடுத்தல், ஆங்கிலத்தில் உரையாடல் பயிற்சி அளித்தல், என்று இன்னும் பல விஷயங்களைச் செய்திருக்கின்றார்கள். டையரியில் எனக்கு அம்மா சொல்லியிருந்த செய்தியைப் பற்றி என்னிடம் பேசவேண்டும் என்று நினைத்திருந்திருக்கின்றார் ஆனால் பேசாமலேயே போய்விட்டார். அங்கிளிடம் கேட்டால் அவர் கண்டிப்பாகச் சொல்லுவார். அவருக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை!
அம்மா இறந்த பிறகு, அங்கிள் மிகவும் சோர்ந்து, தளர்ந்து போய்விட்டார்! அவரை அவரது ஃபோனில் அழைத்தேன். இரு முறை அழைத்தும் பதில் இல்லை! நேரே சென்று பார்க்கலாம் என்று, அவரைப் பார்க்கக் கிளம்பினேன்! ¾ மணி நேரப் பயணம்தான். அவரது வீட்டை அடைந்தால் கதவு திறந்தே இருந்தது! அவரது குடும்பத்தாரும், வேலைக்காரர்களும் பற பறத்துக் கொண்டிருந்தார்கள்! எனக்கு ஒன்றுமே புரியவில்லை! யாரோ ஒருவர் அவர் மகனிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தார்! அவர் மகனும் என்னுடன் அமெரிக்காவில், புகழ் பெற்ற மருத்துவராக இருக்கிறான். நான் மெதுவாக அங்கிளின் அறைக்குச் சென்றேன்! எனக்கு அதிர்ச்சி! அங்கிள் சலனமற்றுப் படுத்திருந்தார்! மருத்துவன் என்பதால் அருகில் சென்று சோதித்தேன்! கையைப் பிடித்தேன்! எல்லாமும் முடிந்திருந்தது!
அங்கு கூடியிருந்தவர்களில் இரண்டுபேர் பேசுவது காதில் விழுந்தது. “ஐயாவுக்கு உடம்புல எத்தனையோ நோய்கள்! ஏராளமான நோய்கள் இருந்தும் எப்படி இத்தனை நாள் உயிர் வாழ்ந்தார்னே தெரிலனு டாக்டர்கள் சொல்லி அதிசயப்பட்டாங்க! அதுவும் அந்த அம்மாவோடு சேர்ந்து இந்த வயசுலயும், உடம்புல பிரச்சினைகளோட எவ்வளவு எழுதிருக்காரு....மக்களுக்கு நல்ல விஷயம் நிறைய செஞ்சுருக்காரு! டாக்டருங்க கூட, “அவரு மனசுல ஏதோ ஒரு லட்சியம், வேகம், ஏதோ ஒரு சக்தி இருக்கு! அந்த மனசு, அதுதான் அவரை இப்படி வழி நடத்துது!” அப்படினு ஆச்சரியப்பட்டாங்க! இப்ப கூட பாருங்க அந்த அம்மா 3 நாள் முன்னாடிதான் இறந்தாங்க! அதுக்கு அப்புறம் மனுஷன் ஆடிப் போயிட்டாரு! தளர்ந்து, சோர்ந்தே போயிட்டாரு. ஒரு வேளை இன்னும் என்னென்ன செய்ய நினைச்சாங்களோ அதெல்லாம் அவங்க இல்லாம எப்படி செய்யறதுனு மலைச்சுப் போயிருப்பாரோ என்னமோ!? அந்த அம்மா இல்லாம இவரு எதுவ்மே செய்ய மாட்டாரே! இந்த வயசுலயும் அப்படி ஒரு நல்ல தோழமை உறவோடு இல்ல இருந்தாங்க ரெண்டு பேரும்! மனசுக்குள்ள ஒரு டென்ஷனும், ஏக்கமும் இருந்துருக்கும் போல, அதான் இப்ப மூச்சே நின்னு போச்சு! இனி, இவங்க ரெண்டு பேரும் நமக்கெல்லாம் செஞ்சத யாரு தொடர்ந்து செய்யப் போறாங்களோ?! ஒருவேளை நமக்குக் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போல!”
அவர்களது பேச்சு எனக்கு எத்தனையோ விஷயங்களைப் புரிய வைத்தது! ஒருவேளை, அம்மாவும், அங்கிளும் சிறு வயது நண்பர்கள் ஆனதால், இந்த ஆழமான நட்பிற்கும், அன்பிற்கும் மேலாக, ஏதோ ஒன்று இருந்திருக்குமோ?!!! அந்த சக்திதான் அவர்களை சேர்ந்து எழுதவும், இத்தனை நல்ல விஷயங்களையும் செய்ய வைத்ததோ?!! இருக்கலாம்! ஆனால், அந்த இரு நல்ல உள்ளங்களும் இப்போது மறைந்து விட்டன! என்னால் என் அழுகையை அடக்க முடியவில்லை!
என் கை பேசி அழைத்தது! என் உதவியாளர்தான். “சார், உங்கள் ஆய்வுக் கட்டுரைப் பேப்பருக்கு அவார்டும், உங்களுக்குச் சிறந்த டாக்டர் விருதும் கிடைத்துள்ளது. அதற்கான விழா அடுத்த வாரம்! உங்கள் வருகையைத் தெரிவித்தீர்கள் என்றால், அவர்களுடன் பேச உதவியாக இருக்கும்!”
“எனது பயணம் இப்போது இல்லை! சில முடிவுகள் எடுக்க உள்ளேன்!. அதைப் பற்றி பின்பு பேசுகின்றேன்! என் வாழ்வு இனி இந்தியாவில்தான்!”
நான் அருணாச்சலம் முதியோர் விடுதியைத் தொடர்பு கொள்ள ஃபோன் பட்டனை அழுத்தினேன்! அங்கிளும், அம்மாவும் செய்த நல்ல விஷயங்களைத் தொடர நினைத்து, அம்மா இருந்த அதே அறை வேண்டும் என்று கேட்க!
சிவ சிதம்பரம்
தேதி : 18.11.2013
நேரம் : 10.30 a.m.
மோஹன், அவன் மனைவி ராதா, தங்கள் 13 வயது நிரம்பிய மகன் சிவசிதம்பரத்துடனும், 11 வயது மகள் மீனாட்சியுடனும், கண்ணூர் அருகே உள்ள முத்தப்பன் காவு கோயிலில், நெடுநாளாக முடிக்க முடியாமல் தள்ளிப் போய்க் கொண்டிருந்த கடைசிப் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் ஒரு சிறிய டவுணில், பழக் கடையில், பழங்கள் வாங்குவதற்காக காரை நிறுத்தினர்.
கடையில் பழங்கள் வாங்கிக் கொண்டிருந்த போது கடைக்குச் சற்றுத் தள்ளி ஒரு கூட்டம் கூடி கூச்சல் இடுவதைக் கண்டனர். போலீஸ் ஜீப் ஒன்று வந்து ஒரு 5 வயதுச் சிறுவனை ஏற்றிச் சென்றதையும் கண்டனர். அச் சிறுவனின் உடலில் சில காயங்களும் இருந்தன. காலும் ஊனம். இவர்களின் முகத்தில் தோன்றிய கேள்விக்குறிகளைக் குறிப்பால் அறிந்த பழக்கடைக்காரர்,
“இங்க ஒரு நாடோடிக் கூட்டம், எங்கேயோ வடக்கருந்து வந்து இங்க டென்ட் அடிச்சு, ஏதேதோ தினக் கூலி வேலை செஞ்சுகிடிருக்காங்க. வேலை மட்டும் செஞ்சா ஏதோ பொழச்சு போட்டும்னு விட்ரலாம். ஆனா, திருட்டு வேற. இவங்க கூட்டத்துக்குச் சம்பந்தமே இல்லாத குழந்தைங்க எல்லாம் திடீர், திடீர்னு முளைக்கிறாங்க. மறு நாள் பாத்தா அந்தக் குழந்தைங்க கையி, காலு ஏதாவது முறிஞ்சிருக்கும். உடம்புல காயம் இருக்கும். பிள்ளைங்க அழுதுகிட்டே இருப்பாங்க. இதப் பத்தி போலீஸ்ல கம்ப்ளயின்ட் கொடுத்தோம் முதல்ல கண்டுக்கல. தெருவோர முருகன பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க இல்ல. நிறைய இந்த மாதிரி குழந்தைங்கள எல்லாம் காப்பாத்தி குழந்தைகள் காப்பகத்துல, இல்லன அவங்க அப்பா, அம்மாவத் தேடிக் கண்டுபிடிச்சு போலீஸ் உதவியோடு ஒப்படைக்கறது இப்படி சுயநலம் பார்க்காம செஞ்சுகிட்டு இருக்காரு. இப்ப இங்க இருக்கற இளைஞர் அமைப்பு அவர கான்டாக்ட் செஞ்சு அவரு இதுல தலையிட்டுதான் போலீஸ நேர கூட்டிட்டே வந்துட்டாங்க. இப்ப நீங்க பார்த்தீங்கல்ல, அந்தப் பையனக் காப்பாத்தி, கூட்டத்துலருந்து ஆளுங்களை அடிச்சு போலீஸ் கூட்டிட்டுப் போறத...அந்தப் பையனுக்கும், இந்தா இங்க உக்கந்துருக்குதே வெத்தலய குதப்பிகிட்டு அந்த பொம்பளைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கறா மாதிரி இருக்கா பருங்க... இப்படித்தன் இந்தக் கூட்டம் பிள்ளைங்கள எல்லாம் கடத்திகிட்டு வந்து தங்க கூட்டத்தோட கூட்டிட்டு போயி பிச்சை எடுக்க வைக்கறது...நல்ல காலம் இந்தப் பையன் தப்பிச்சுட்டான்” என்று அங்கு நடந்த கதையை சொல்லி முடித்தார்.
இந்தக் கதையைக் கேட்டதும், குழந்தைகள் இருவரும் ராதாவை இறுகக் கட்டிக் கொண்டனர். அவர்கள் காருக்குத் திரும்பியதும், சிவசிதம்பரம் ஜன்னல் கண்ணாடி வழியே அந்தக் கூட்டத்தையே ஒருவித பயத்தோடு பார்த்துக் கொண்டே, தன் அம்மாவிடம், “இப்படில்லாம் கூட பிள்ளைங்களைத் திருடுவாங்களாம்மா? பாவம் இல்ல அந்தப் பையன்? அவன் அப்பா, அம்மா அவனத் தேட மாட்டாங்களாம்மா?” என்று கேட்கவும், மோஹனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். சிவசிதம்பரத்தை அணைத்து, உச்சி முகர்ந்து முத்தமிட்டு, 11 வருடங்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தனர். அதுவும் இதே தேதிதானே...
தேதி: 18.10.2002 நேரம் : 7.30 a.m.
இடம்: பாலக்காடு அருகே உள்ள கொடுவாயூர்
மோஹன் கொடுவாயூர் தட்சிணாமூர்த்தி கோவிலின் கொடிமரத்திற்கு அருகே நின்று இறைவனிடம் மௌனமாக வேண்டிக் கொண்டிருந்தான். வேண்டுதல் பட்டியல் மிகவும் நீண்ட ஒன்றுதான். அதில் அவனது transfer முதல், அவனுக்கு அடுத்து ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்பது வரையுண்டு. அவனது மகன் சிவசிதம்பரத்தின் தேக சுகத்திற்கும், ஆடோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் வேண்டி பிரார்த்தித்தபோது திடீரென கூப்பிய கைகளில் சூடான டீ ஊற்றப்பட்டது போல் உணர்ந்து கைகளை உதறியபின் பார்த்த போதுதான் புரிந்தது, காக்கை இட்ட எச்சம் அது என்று. சுற்றிப் பார்த்த மோஹன் கொஞ்சம் தொலைவில் தரையில் கிடந்த பழைய பேப்பரை எடுத்துக் கைகளைத் துடைத்தான். கோவிலுக்கு வெளியே சென்று பஞ்சாயத்துக் குழாயில் கை கழுவிய போது “குழந்தைக்காக வேண்டும் போதுதானே கையில் எச்சம் விழுந்தது. ஒருவேளை அவனுக்கு ஏதேனும் பிரச்சனை வருமோ” என எண்ணிய மோஹன் உடனே தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டான். ‘சே! அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது. எல்லாம் “அவன்” பாத்துக்குவான்’. பின் கொடிமரத்திற்கு அருகே சென்று கண்களில் கண்ணீர் கசிய வேண்டிக் கொண்டான்,
‘இறைவா! என் சிகம்பரத்திற்கு எந்த வித ஆபத்தும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’.
கோயிலைவிட்டு வெளியே வந்த மோஹன் P.H.C (Primary Public Health Centre) நோக்கி நடந்த போது, ஹார்ன் அடித்தபடி ஒரு ஸ்கூட்டர் அருகே வர திரும்பினான். ஹெல்த் இன்ஸ்பெக்டர் (Health Inspector) ஜோஸ்தான் அது.
“குட் மார்னிங்க் ஸார்” என்றான். உடனே ஜோஸ், “மோஹன், அந்த ரங்கசாமி வேலைக்குப் போவதற்கு முன் எப்படியாவது பேசி அந்த ஆளோட கையெழுத்து வாங்கணும். வா போவோம்” என்றார். மோஹன் பின்னால் ஏறி அமர்ந்தவுடன், ஸ்கூட்டர் வேகமாகப் பாய்ந்தது ரங்கசாமியின் குடிலை நோக்கி.
நேரம் : 7.30 a.m.
இடம் : பாலக்காடு-கோழிக்கோடு ரோட்டிலுள்ள பெருந்தில்மன்னயில் “அல்-ஷிஃபா மருத்துவமனை
ராதா தன் இரண்டு வயதான சிவசிதம்பரம் மற்றும் துணைக்கு வந்த ஆயிஷா உம்மாவுடன், ஸ்கானிங்க் ரூமுக்கு வெளியில் இடப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். மனமெல்லாம் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்தவித பிரச்சனையும் இருக்கக் கூடாது என்ற வேண்டுதல்தான். டாக்டரிடம் பெண்குழந்தை தானா என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். கதவைத் திறந்தபடி வெளியே வந்த நர்ஸ், கையிலிருந்த பேப்பரைப் பார்த்து “அடுத்து ராதா” என்றாள். “தண்ணீ நிறைய குடிச்சீங்களா”? என்றதும், ராதா தலையாட்டியபடி, சிவசிதம்பரத்தை ஆயிஷா உம்மாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றாள். இனி ½ மணி நேரம் இல்லை ¾ மணி நேரத்திற்குப் பின் தான் வெளியில் வரமுடியும். உள்ளேயும் ஒரு ‘க்யூ’இருக்கும். அதில் குறைந்தது 6 அல்லது 7 பேர் இருப்பார்கள். அவர்களுக்குப் பின் தான் அவளை டாக்டர் அழைப்பார்.
அருகிலிருந்த பெண் தண்ணீர் குடிப்பதன் அவசியத்தைப் பற்றிக் கேட்டதும், ஆயிஷா உம்மா அவளிடம் “அப்போதுதான் டாக்டருக்குக் குழந்தையைத் தெளிவாகக் காண முடியும்” என்று விவரிக்கத் தொடங்கினாள். திரும்பியபோது, சிவசிதம்பரத்தைக் காணாமல் திகைத்து எழுந்து ஓடினாள். 20 அடிக்கு அப்பால் உள்ள படிகளில் குழந்தை இறங்கிக் கொண்டிருந்தான். போய் வாரி எடுத்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தை நோக்கி நடந்தாள். அவனது கைகளில் 2 மிட்டாய்கள். “யார் தந்தது” என்று கேட்டதும், அவன் கை நீட்டிக் காண்பித்த படிகளில் ஒரு நர்ஸ் ஒரு கைலி கட்டிய ஆளுடன் பேசிக் கொண்டிருந்ததை ஆயிஷா உம்மா கவனிக்கத் தவறவில்லை. ஒருவேளை அந்த நர்ஸ் கொடுத்திருக்கலாம் என்று நினைத்தபடி நடந்த போது, சிவ சிதம்பரம் அதில் ஒன்றைப் பிரித்து ஆயிஷா உம்மாவின் வாயில் வைத்தான். விக்ஸ் மிட்டாய் போல் ஒரு வித்தியாசமான சுவை. திடீரெனக் கண்கள் இருண்டு தலை சுற்றுவது போல் தோன்ற ஆயிஷா உம்மா, சிவசிதம்பரத்தைக் கீழே இறக்கியபடி சரிந்ததும், எதிரில் நடந்து வந்த நர்ஸ் “ஐயோ” என்றபடி ஓடிவந்து தாங்கிப் பிடிக்க, ஆயிஷா உம்மாவுக்கு அதன் பின் வேறு ஒன்றும் நினைவில்லை.
நேரம் : 9.30 a.m.
இடம் : கொடுவாயூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை.
வாசக்டாமிக்காக (ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) ஒரு ரங்கசாமி கிடைத்த சந்தோஷத்தை, ஃபார்மஸிஸ்ட் மேரி, PHN பத்மினி மற்றும் ப்யூனிடம், ஜோஸ் பகிர்ந்து கொண்டிருந்தார்.
“டாக்டர் இதுவரை வரலை. இதைக் கேட்டா அவருக்கு ரொம்ப சந்தோஷமாகும். நாளைய Conference-ல இனி தலை நிமிர்ந்து நின்னு குரல உசத்தி பேசலாம். ரங்கசாமியோட சம்மதம் வாங்க நானும், மோஹனும் எல்லா நாளும் அவனைப் போய் பார்த்து பேசினோம். அரசோட பண உதவி மட்டுமில்லாம நானும், மோஹனும் ரங்கசாமிக்கு 500 ரூபாய் கொடுக்கறோம்னு சொன்னப்புறம்தான் ரங்கசாமி சம்மதிச்சான். எப்படியோ இனி ஆறு மாசம் வரை, வரப் போற கான்ஃபரஸ்கள்ல தைரியமா பங்கெடுக்கலாம். நர்ஸ் பத்மினியோட தயவிலதான் ரங்கசாமி கிடைச்சான். பத்மினியோட கோட்டா முடிஞ்சதால ரங்கசாமியோட மனைவிய பத்மினியோட லேப்பரோஸ்கோப்பி (Laparoscopy) லிஸ்டிலருந்து நீக்கிட்டு அவ கணவனை வாசக்டமிக்கு, எந்தப் பிரச்சினையும் இல்லாம நாம வாசக்டாமி லிஸ்ட்ல சேத்துக்க உதவியா இருந்த பத்மினிக்குத்தான் மொதல்ல தாங்க்ஸ் சொல்லணும்.” என்றார் ஜோஸ்.
“தாங்க்ஸ் மட்டும்லாம் போதாது. ராத்திரி பத்துமணிக்கு ஜோஸ் சாரோட செலவுல ஒரு சின்ன “Refreshment Party” வேணும்” என்று ப்யூன் கேட்ட்தும், ஜோஸ் ஓ.கே என்றான்.
ஃபோன் அடித்தது. ஃபார்மஸிஸ்ட் எடுத்ததும், ‘மோஹனுக்குப் ஃபோன்”என்றாள். ஜோஸ் ரிஸீவரை எடுத்துப் பேசினான். ரிஸீவரை வைத்த ஜோஸின் முகத்தில் முன்பிருந்த சந்தோஷம் காணாமற் போயிருந்தது.
“நான் உடனே மோஹனைப் போய் பார்க்கணும். மோஹனோட நண்பர் தாமோதரனுடைய ஃபோன். குழந்தையைக் காணோமாம். 2 மணி நேரத்துக்கு முன்னாடி பெருந்தில்மன்னயில ஒரு ஆஸ்பத்திரியிலருந்துதான் மிஸ்ஸிங்காம்.. மோஹன் உடனே பெருந்தில்மன்னைக்குப் போகணுமாம். டாக்டர் வந்த உடனே விபரத்தைச் சொல்லுங்க” என்றபடி ஜோஸ் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பாலக்காடு பஸ் ஸ்டாண்ட் நோக்கிப் போனார். ரங்கசாமி வாசக்டாமிக்குக் கிடைத்த சந்தோஷத்தில் ஜோஸ், ஜூனியர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் ஆன மோஹனை அப்போதே வீட்டுக்குப் போக அனுமதித்தார். டாக்டரிடம் மோஹன் வேறு எங்கேனும் ஃபீல்ட் வொர்க் செய்யப் போயிருப்பதாகச் சொல்ல முடிவு செய்திருந்தார். ஆனால், நடந்ததோ வேறு. மோஹன் பஸ் ஏறும் முன் பாலக்காடு பஸ் ஸ்டாண்டில் பார்த்து விபரத்தைச் சொல்ல வேண்டும் என நினைத்து வண்டியை விரைவாக ஓட்டினார் ஜோஸ்.
நேரம் : 9.45 அ.ம்.
இடம் : அல்ஷிஃபா ஹாஸ்பிட்டல்
ராதா அழுதபடி ஹாஸ்பிட்டல் வராந்தாவில் இடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள். அருகே பக்கத்து வீட்டு தாமோதரன், அவரின் மனைவி சாரதா, ஆயிஷா உம்மாவின் மகள் ரஹ்மத், எல்லோரும் ராதாவை சமாதானப் படுத்திக் கொண்டிருந்தனர். வருவோர், போவோரெல்லாம் வார்த்தைகளாலும் கண்களினாலும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துப் போனார்கள். ஆயிஷா உம்மாவின் மகன்கள் மூவரும் அங்கில்லை. ஹக்கிம் போலீஸ் ஸ்டேஷனுக்கும், ரஹீமும், சித்திக்கும், இரண்டு ஆட்டோ பிடித்து பெரிந்தல்மன்னா டவுணில் ஓரிடம் பாக்கி இல்லாமல், சிவசிதம்பரத்தைத் தேடவும் போனார்கள். அப்போது அங்கு வந்த வார்ட் மெம்பர் மைமுனா, கொஞ்சம்பேர் ஜீப்பில் மலப்புரம், நிலம்பூர், பாலக்காடு, பட்டம்பி ரோடு வழியாகப் போயிருப்பதாத சொன்னார். “மோஹனுக்குப் ஃபோன் செய்தாகி விட்டதா?” என்று கேட்ட்தும், தாமோதரன், தான் ஃபோன் செய்ததாகவும், மோஹன் கிடைக்காததால், ஆபீஸில் விவரம் சொன்னதாகவும் சொன்னார். எல்லோரும் ராதாவைத் தைரியமாக இருக்கச் சொன்னார்கள்.
“ராதா உன் வயித்துல இருக்கிற குழந்தையை நினைச்சாவது மனச தைரியமா வச்சுக்கணும்! சிவசிதம்பரம் எப்படியும் கிடைச்சுடுவான். போன மாசம் ஒரு 35 வயசு பொண்ணு ஒரு பெண் குழந்தையோட நடந்து போறதப் பாத்த ஆளுங்கச் சந்தேகப்பட்டு விசாரிக்க, ஏதோ ஒரு L.P. ஸ்கூலில் இருந்து “வீட்டுக்குப் போகலாம் வான்னு” கூட்டிட்டுப் போனாளாம். உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்களாம். அதனால, தைரியாமா இரு. குழந்தைய எங்கேயும் தூரதேசத்துக்கெல்லாம் கொண்டு போயிருக்கமாட்டானுங்க. எப்படியும் ஆண்டவன் அருளால கண்டுபிடிச்சுரலாம்.”என்று மைமூன தைரியம் சொன்னார்.
ஆயிஷா உம்மா ஒரே அழுகை. ராதாவின் நினைவில் சிவசிதம்பரத்தின் சிரிப்பும், அழுகையும், கொஞ்சலும், கோபமும் ஒவ்வொன்றும் மாறி, மாறி வந்து இதயத்தை என்னென்னவோ செய்தது. கடந்த நான்கு மாதங்களாக பால்குடி மறக்கச் செய்ய அவள் பாவம் குழந்தையை அவன் பாட்டியுடன் தான் தூங்க வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தை எத்தனை நாள் அழுதிருக்கிறான், ராதாவுடன் தான் தூங்க வேண்டும் என்று. “இபோது எங்கே யாருடனோ....”மனதில் ஒரு நீர் குமிழி பந்து போல் பெரிதாக, அவள் கதறி அழுதாள்.
நேரம் : 10 a.m.
இடம் : பாலக்காடு முனிசிபல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒரு ஹோட்டல்
மோஹன் நெய் ரோஸ்டின் ஒரு பாதி பாகம் சாப்பிட்ட பின் திடீரென ஒரு “முடி” தென்பட, அப்படியே அதை வைத்து விட்டு கை கழுவப் போனான். ஒரு வாசக்டமி கிடைத்த சந்தோஷம் அடியோடு போனது. வந்த கஷ்டகாலம் அந்த பாதி தோசையுடன் போகட்டும் என்று நினைத்தபடி, தான் அமர்ந்திருந்த டேபிளுக்கு வந்ததும், அங்கே திடீரென முளைத்த இரண்டு பேரைக் கண்டதும், டேபிளின் மறுபக்கத்தில் அவர்களுக்கு எதிராக அமர்ந்தான். முன்னால் அமர்ந்த இருவரில் ஒரு ஆள் கையில் கண்டக்டர் பேக். டிரைவரும், கண்டக்டரும் ஆக இருக்கலாம். மோஹன், கொண்டுவந்து வைக்கப்பட்டக் காபியை சுவைத்துக் குடித்துக் கொண்டே, அவர்கள் பேசுவதைக் கேட்டான்.
“எனக்கென்னவோ அந்த ஆளு அந்தப் பையன எங்கேயிருந்தோ கடத்திட்டு வந்த மாதிரிதான் தோணுது. பெரிந்தல்மன்னயிலருந்தே குழந்தை மயக்கம்தான். இடையில கண் தொறந்து அம்மா, அம்மானு பலவீனமா அழும் போதெல்லாம் ஏதோ ஒரு மிட்டாயை எடுத்து வாயில வைச்சானுங்க. உடனே குழந்தை கண்களை செருகி மயங்கிப் போனான். யார் பெத்த பிள்ளையோ?......நான் வண்டியை விட்டு இறங்கியதும், ஓடிப் பொய், பார்க்கிங்க் கன்ட்ரோல் பண்ணும் டைம் கீப்பிங்க போலீஸ் கான்ஸ்டபிள் (P.C.) கிட்ட விவரத்தைச் சொன்னேன்.அதுக்கு அவரு “அதெல்லாம் சும்மா நம்ம சந்தேகம்தான், விசாரிச்சுப் பார்த்தா வெங்காயத்த உரிச்சுப் பார்க்கற மாதிரி அதுல ஒண்ணுமே இருக்காது. அங்க பாரு, .அவன், “அனஸ்” 30 செகண்டு டிலே பண்ணிட்டு போகாம நிக்கிறான்......”என்று சொல்லி விசில் ஊதிக் கொண்டே “அனஸ்” வண்டியை வெளியேற்ற ஓடிவிட்டார். பிறகு நான் என்ன செய்ய...பார்த்த போது அவனையும் குழந்தையும் காணம்... நாம என்ன செய்ய?....அங்க பாரு.....அந்த ஆளு இங்க, இந்த ஹோட்டலுக்குத்தான் வர்ரான். குழந்தையோட கையில கிடந்த ஒரு தங்க வளையலக் காணோம்!. நான் நல்லா கவனிச்சேன். அவனோட மடியில படுத்திருந்தப்ப, வளையல் கையில இருந்திச்சு. நீ அவன கவனிச்சுக்க நான் இப்ப வர்ரேன்...போயி P.C ய கூட்டிட்டு வர்ரேன்”.
மோஹன் திரும்பிப் பார்க்க, கைலியுடுத்தியிருந்த ஒரு கறுத்த மனிதனும் அவனுடன் ஒரு குண்டு மனிதனும், கறுத்த மனிதனின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு 2 வயதுக் குழந்தையுடன் வந்தார்கள். பார்த்தாலே தெரிந்தது, குழந்தைக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று.
“என் சிதம்பரத்தின் உயரமும், தடியும் உள்ள குழந்தை. முகம் தெரியவில்லயே. குழந்தை அணிந்திருக்கும் சட்டையும், ட்ரவுசரும் என் சிதம்பரத்திற்கு உள்ள ஒரு ஜோடி போல இருக்கே!” என்று மோஹன் நினைத்துக் கொண்டிருந்த போது, அவன் இருப்பிடத்தை அந்த மர்ம மனிதர்கள் ‘கடந்த சென்றனர். குழந்தையின் பாதிமுகம் கண்ட மோஹன் சிலையானான். “டேய் இது என் சிதம்பரம்! என் குழந்தை, என் மகன், என் சிதம்பரம்’ என்று கத்திக் கதறிகொண்டே ஓடிச் சென்று அவர்களிடமிருந்து குழந்தையைப் பிடித்து உயர்த்தி அவர்களிடமிருந்து பிடுங்கினான். திகைத்த அவர்கள் அங்கிருந்து ஓட முயல யாரெல்லாமோ அவர்களை விரட்டிப் பிடித்தார்கள். கூட்டத்தில் திகைத்து நின்ற அந்த டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும், கண்களில் நீர் மல்கத் தலையாட்டி நன்றி சொன்னான் மோஹன். ம்யக்கத்திலிருந்து தெளியாத் சிவதிதம்பரத்தைக் கட்டிக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டான். பின்புறம் ஒரு கை தோளில் ஆறுதலாகப் படிந்தது போல் இருந்தது. திரும்பிப் பார்த்த போது கண்களில் நீர் மல்க ஜோஸ் ஸார்.
11 வருடங்களுக்கு முன், இதோ இப்போது அந்தச் சிறுவனுக்கு நடந்தது போலத்தானே சிவசிதம்பரத்துக்கும்? அந்தச் சம்பவத்தை இருவரும் நினைத்தபடி, இருவரின் கண்களும் அதைப் பேசிக் கொள்ள, மோஹன் பின் பக்கம் திரும்பி மகனின் தலையை வருடிக் கொடுத்தான். இருவரும் குழந்தையை அணைத்துக் கொண்டு “பயப்படாதடா கண்ணா அந்தப் பையன போலீஸ் அவங்க அம்மா அப்பாகிட்ட சேர்த்துடுவாங்கடா பயப்படாதடா செல்லம்.” என்று சிவசிதம்பரத்தைத் தேற்றி விட்டு, தங்களுக்கு மலை போல் வந்து பனி போல விலகியதை நினைத்து இறைவனுக்கு இருவரும் நன்றி கூறினர்.
------------------------------------------------------------------------
நானும் என் சக ஆசிரியை மீராவும் போஸ்ட் ஆபீஸில் R.D. பணம் வாங்கக் காத்திருந்த போது, மீரா ஸ்டாம்ப் கொடுக்கும் கவுன்டரில் நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் அவசரமாகப் போய்,
“ஜானு நடந்ததெல்லாம் கேள்விப்பட்டேன். சம்பவம் நடந்தது தீபாவளி லீவுக்கு நடுவில ஆனதுனால வரமுடியலை. ரெண்டுமுறை ஃபோன் பண்ணியும் நீ கிடைக்கல. இப்படியொரு பேரிடி உனக்கு வரும்னு எதிர்பாக்கவேயில்ல”
கண்களில் நீர் கசிந்தாலும் ஜானகி, “இப்ப நான் எதைப் பத்தியும் யோசிக்கறதுல்ல. என் குழந்தைங்கதான். இது போலத்தான் நான் அந்த ஆளையும் கண்ணை மூடி நம்பினேன். என் மனசில வேற எதுக்குமே இடமில்லாத அளவுக்கு அந்த ஆளை மனசு முழுசும் வைச்சிருந்தேன். இப்ப எனக்கு அந்த ஆளோட பிரிவுல வருத்தமே இல்ல. அந்த ஆளோட சாவும், சாவுக்கான காரணமும் ஒரே நேரத்துல தெரிய வந்ததுனால எனக்கு உண்மையிலேயே கொஞ்சம் கூட வருத்தமில்ல. ஒரு வேளை அந்த ஆள் சாகாம இருந்துருந்தா இதெல்லாம் தெரிஞ்ச பிறகு ஏதாவது ஒரு நிமிஷத்துல நான் சாகணும்ற முடிவு எடுத்துருப்பேன். அப்படி நடந்திருந்தா என் குழந்தைங்க அனாதையா போயிருந்திருப்பாங்க. அந்த ஆள் அடுத்த மாசமே யாராவது ஒருத்தி பின்னால போயிருப்பான். இப்படிப்பட்ட ஒரு விஷப் பாம்ப உயிருக்கு உயிரா நேசிச்சு நம்பி வாழ்ந்ததை நினைக்கும்போது எனக்கு என் மேலயே அடங்காத கோபமும் வெறுப்பும் வருது.” இப்படிப் பலதும் பேசி பிரிந்தனர்.
“விஜயா, இப்ப போனது யார்னு உனக்குத் தெரியுமா? P.M.H.S டீச்சர் ஜானகி. இதே ஸ்கூல்ல +2 டீச்சர் வரதராஜன்தான் இவளோட புருஷன். போன மாசம் ஒரு பெண்ணைக் கற்பழிக்க முயற்சி பண்ணி, பிறகு தற்கொலை செஞ்சுகிட்டார்னு பேப்பர்ல எல்லாம் நியூஸ் வந்துச்சே. அதே ஆள்தான். ஜானுவைப் பாத்தல்ல. அவளுக்கு என்ன குறைச்சல்? இந்த ஆம்பளங்களே இப்படித்தான். கிளி மாதிரி ஒரு பொண்டாட்டி இருந்தாலும் ஏதாவது ஒரு குரங்கு பின்னாடி போயி இப்படி செறுப்படி வாங்கி அசிங்கப்பட்டு கடைசில ஆளுங்களோட முகத்தப் பாக்க பயந்துகிட்டு தற்கொலை செஞ்சுக்கிறானுங்க. அப்படி என்னதான் சுகமோ? எவ்வளவு படிச்சிருந்தாலும் கொஞ்சம் கூட யோசிக்காம வாழ்க்கையையே பாழாக்கிக்கறாங்க. அந்த ஆள் சாகர வரைக்கும் ரொம்ப நல்ல மனுஷன். கௌரவமானவருதான். இதுவரை யாரும் அந்த ஆளைக் குத்தம் சொல்லிக் கேட்டதேயில்ல. இப அந்த ஆளோட சாவுக்கு அவரோட சொந்த பொண்டாட்டியே கூட வருத்தப்படலைனா பாத்துக்கயேன். எப்படி ஒரு பரிதாபமான சாவு. ஒரு குடம் பாலுல ஒரு துளி விஷம் விழுந்து அது முழுசுமே விஷமாறது போல, அந்த ஆளோட நல்ல குணம் எல்லாம் அந்தக் காமப் பேய் விழுங்கி ஏப்பம் விட்டுருச்சே!. சே!”
“யாரு அந்தப் பொண்ணு? கூட வேல பாக்கற டீச்சரா?” - இது நான்.
“அதெல்லாமில்ல பக்கது வீட்டுக்குப் புத்சா குடித்தனம் வந்த ஒருத்தி, அந்த ஆளொட பழைய ஒரு ஸ்டூடெண்டாம். கல்யாணம் ஆனப்புறமும் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் படிக்கிறாளாம். அந்த ஆளு ‘statistics’ எடுத்தாராம். சம்பவம் நடந்த அன்னிக்கு அவளோட புருஷன் இல்லாத நேரம் பாத்து அவளோட வீட்டுக்குப் போய் கற்பழிக்க முயற்சி செய்ய, எதிர்பாராம அவ புருஷன் வந்து அந்த ஆளை அடிச்சு, உதச்சு அண்டர்வெயரோட வெளியே தொரத்த, நேரா வீட்டுக்குப் போன மனுஷன் கயித்துல தொங்கிட்டான். அந்தப் பொண்ணு அந்த அதிர்ச்சியில மனநோயாளியாகி இப்ப ஆஸ்பத்திரியிலயாம்.”
***********************************************************
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். மெய் என்பது நாம் கண்ட கேட்ட சிலவற்றுடன் கேட்காத, காணாத பல சம்பவங்களும் உள்ளடங்கியதே. அன்றைய தினம் காலக் கண்ணாடியில் பிரதிபலித்த காலம் கடந்து காணாமற்போன உண்மைகள். உண்மை தேடும் ஊமை நெஞ்சங்களுக்காக.
***********************************************************
கையிலுள்ள துண்டுப் பேப்பரை மீண்டும் பார்த்தார் வரதராஜன். அதில் எழுதியிருந்தது 12 மணி. கைகடிகாரத்தில் மணி 11 a.m. தான் ஆகியிருந்தது. இன்னும் 1 மணிநேரம் இருக்க, என்ன செய்ய என்று யோசித்து, பழைய ஆல்பங்களை எடுத்து புரட்டுகிறார். கல்யாண ஆல்பம், குழந்தைகளின் தனி ஆல்பம், டூர் ஆல்பம், இப்படி ஒவ்வொன்றாய்ப் புரட்டி அந்த இனிய நாட்களை அசை போட்டார். எல்லாம் முடித்த பின் வாச்சைப் பார்த்தபோது மணி 11.45 a.m. ஆகியிருந்தது. அமுதாவுடன் தனக்கு முன்பு கிடைத்த சுகமான நிமிடங்களை நினைத்தபோது உடலும், மனமும் சில்லிட்டது. பொறுமையிழந்து ஃபோனைக் கையிலெடுத்து அமுதாவின் வீட்டு நம்பரை அமர்த்தினார். எடுத்தது அமுதா.
“அமுதா தாக்குப் பிடிக்க முடியல. இப்பவே வரட்டுமா”
“நான் நினைச்சேன். நீங்க சொன்ன மாதிரி ஒண்ணோ, ரெண்டு தடவையோட சமாதானப்படுவீங்கன்னு. ஆனா, இப்படி நாளுக்கு நாள் ஆவேசம் உங்களுக்குக் கூடுது. எனக்கென்னவோ பயமா இருக்கு, இது எதுல கொண்டு போய் விடுமோனு?”
“இதுவரைக்கும் சமாதானமா நமக்கு ஒரு அரை மணி நேரமாவது கிடச்சிருக்கா? இன்னிக்கு எந்த தொந்தரவுமில்லாம, என்னிஷ்டப்படி நடந்துக்க எனக்கு ஒரு அரை மணி நேரம் மட்டும் தந்தால் போதும். அப்பத்தான் இந்த ஆவேசம் ஓரளவு தணியும். பிறகு நாம் ரெண்டு பேரும் பழையபடி டீச்சர், ஸ்ட்டுடென்ட் ஆயிக்கலாம். இப்ப மணி 11.50 ஆயிருச்சு. கிளம்பட்டா”
“வேண்டாம்னா கேக்கவா போறீங்க, எங்க வீட்டுக்காரருக்குச் சின்ன சந்தேகம் போல. உங்க பார்வை சரியில்லன்னாரு.”
“ஐய்யோ! பிரச்சினையாகுமோ அமுதா? எப்படியோ இன்னிக்கு மட்டும்.. இனி இந்த ஏற்பாட நிறுத்திக்குவோம். வீட்ல வேற யாரும் இல்லையே? கேட்டையும், முன் கதவையும் திறந்தே வை. யாராவது வீட்டுக்கு எதிர்பாராமல் வந்திருந்தால், வெளிகேட்டைச் சாத்தி கொக்கி போட்டுடு. நான் உள்ளே நுழையாமல் நேராக நடந்து போயிடறேன்.” என்றபடி ஃபோனை வைத்தார்.
வரதராஜனின், ஸ்கூலில் 12 வருடங்களுக்கு முன் படித்தவள் அமுதா. அப்போதெல்லாம் அவளை அவர் மாணவியாக அல்லாமல் வேறு கண்ணில் பார்த்ததேயில்லை. எப்படியோ, போன வருடம் டெலிஃபோன்ஸில் வேலை பார்க்கும் குடிகாரக் கணவன் ட்ரான்ஸ்ஃபர் ஆகி அங்கு வந்ததும், குடும்பத்துடன் இரண்டு வீடு தள்ளி குடிவந்தாள். முதன் முதலாக பார்த்தபோதும் வரதராஜனுக்கு ஒன்றும் தோன்றவில்லைதான். ஆனால், இடையிடையே வீட்டிற்கு வரும்போது அவர் கவனிக்காமல் இருக்கும்போது வரதராஜனை பார்வையால் விழுங்கினாள். வரதராஜன் கவனிக்கத் தொடங்கியதும் சிறிய ஒரு புன்முறுவல். பிறகு statistics tuition வேண்டும் என்றதும் வரதராஜன் சந்தோசத்தை வெளியே காண்பிக்காமல், வேறு வழியின்றி சம்மதிப்பதுபோல் சம்மதித்தார். புத்தகங்கள் கைமாறும்போது விரல்கள் தொட்டன. 40 வயது வரதராஜனுக்கும் 28 வயது அமுதாவுக்கும் அனாவசியமாக ஷாக் அடித்த்து.
பின் கால்கள் உரசி உறவைத் திடப்படுத்தின. இடையே நேரம் கிடைத்த போதெல்லாம் வரதராஜன் சொந்த வீட்டிலேயே, குழந்தைகள் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் போதும், மனைவி சமையலில் ஈடுபட்டிருக்கும்போதும், அமுதாவைத் தழுவினார். இருவரது செயல்கள் அவர்களின் வயதைப் பாதியாகக் குறைத்தது பல நேரங்களிலும். மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு நாள் அந்த ஆசிரியன் தன் மாணவியை முதன் முதலாக ஆவேசத்துடன் அவசர அவசரமாக ட்யூஷன் எடுக்கும் அறையிலேயே அனுபவித்தார். அது போல், மீண்டும் நான்கு முறை அவரும், அமுதாவும், தங்கள் வாழ்க்கைத் துணைவி, மற்றும் துணவருக்குத் துரோகம் இழத்தனர். அவரவரது வாழ்க்கைத் துணைகளிடமிருந்து கிடைக்கும் சுகத்தை விட எந்த வித்ததிலும் வித்தியாசமான விலை மதிக்க முடியாத சுகமல்ல அவர்களது இந்தக் கள்ள்த் தொடர்பில் கிடைத்தது. என்றாலும் ஏதோ ஒரு வித்தியாசமான ஈர்ப்புத் தன்மை மனதளவில் மட்டும் அவர்களாகக் கற்பனை செய்தது, இருவரையும் எப்படியோ ஒன்று சேர வைத்தது. அவர்களது தகாத உறவின் எதிர்காலத்தைக் குறித்து இருவருமே யோசிக்கவில்லை. கண் மூடி பூனை பால் குடிப்பது போல் குடிக்கும் மட்டும் பாலைக் குடிக்க முடிவு செய்தனர்.
ஃபோனை வைத்து வாசனைப் பாக்கை வாயில் போட்டு மென்றபடி நடந்தார். பூசையறையில் ஏதோ சப்தம் கேட்க திரும்பிய அவர் சிறிய குத்து விளக்கு சரிந்து கிடந்தது தெரிந்தது. அதில் சிறிதாகக் கசிவு இருந்ததால் ஒரு சிறிய தட்டில் வைப்பது வழக்கம். அதனால் எப்போதும் சிறிதாகச் சரிந்து நிற்கும் விளக்கு எப்படியோ விழுந்து விட்டது. எடுத்து நேராக வைத்தார். மீண்டும் சரிந்தது. பொறுமையிழந்து அதை வெறுமனே கீழே வைத்து விட்டு விரைந்தார், அமுதாவின் வீட்டிற்கு.
கேட்டும், கதவும் திறந்து கிடந்தன. உள்ளே சென்றார். அமுதா சிரித்தாள். கதவை மூடியபின் இருவரும் பெட்ரூமை அடைந்தனர். அடுத்த ஐந்து நிமிடங்கள் அவர்கள் இருவரும் உலகை மறந்தார்கள். திடீரென காலிங்க் பெல் அடிக்கும் சப்தம். திடுக்கிட்ட அவள் வரதராஜனை உதறிவிட்டு கதவை மூடிவிட்டு ஓடினாள். கதவைத் திறந்த அவள் திகைத்தாள். அவளது கணவன்.
“யாரோட செறுப்பு அது? வெளில?”
உடனே அழத் தொடங்கினாள். வரதராஜன் வாத்தியார் ஒரு புத்தகம் வாங்க வந்தார். எல்லா அறைகளிலும் சென்று நோக்கிய கணவன், அவர்களது பெட்ரூமில் பதுங்கியபடி நிற்கும் வரதராஜனைக் கண்டதும் பொறுமை இழந்து,
“உங்கிட்ட படிக்க வர்ர பொண்ணுங்களோட உனக்குப் படுக்கணும் இல்லையாடா, நாயே!”
முகத்தில் அறந்து அடித்து, உதைத்து உருட்டினான். இடையிடையே வரதராஜன்,
“ப்ளீஸ், வேண்டாம்...நீங்கத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க...உங்க்க் காலப் பிடிக்கிறேன்..ப்ளீஸ் சத்தம் போட்டு ஆளுகளக் கூட்டாதீங்க”.
அவரது சட்டை, கைலியைக் கிழித்து உருவினான் அமுதாவின் கணவன். அவள் அழுதபடி நின்றாள். பிறகு அவன் அமுதாவை உதைக்கவும், அடிக்கவும் தொடங்க, அவள் கூச்சல் போட, எங்கிருந்தோ நான்கைந்து பேர் வீட்டிற்குள் நுழைய, அமுதாவின் கணவன்,
“இந்த ராஸ்கல் யாரும் இல்லாத நேரத்தில் இங்க வந்து இவளைக் கெடுக்கப் பாத்தான்” என்றான்.
வரதராஜன், “ஐயோ! அப்படியெல்லாம் இல்ல....அமுதாகிட்டயே வேணா கேளுங்க” என்றார். கீழே கிடந்த தன் கைலியை இடுப்பில் சுற்றியபடி, ப்ரிதாபமாக எழுந்து நின்றார்.
அமுதாவின் கணவன், “சொல்லுடி, உண்மையை” என்றதும், அழுதபடி தலையைக் குலுக்கினாள்.
“ராஸ்கல்! உனக்கு இனி என்னடா மானம்” என்றபடி கைலியை உருவிப் பிடித்து வெளியே தள்ள, அங்கும் பத்து பதினைந்து பேர் இந்தக் காட்சியைக் காணக் காத்திருந்தார்கள். வரதராஜன் அவர்கள் முன் அண்டர்வெயருடன், தன்மானமிழந்து எப்படியோ நடந்து வீட்டையடைந்தவர், கிணற்றில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து தன் பெட்ரூமில், குழந்தகளின் தொட்டில் கட்டப்படும் உத்தரத்தில் தொங்கினார். அவர் மனதில் கடந்த பத்து நிமிடங்களில் நடந்தவை மட்டும் அனலாக எரித்தது. தொங்கியதும் குழந்தைகளின் முகம் அவர் மனதில் தோன்றியது.
உடனே, “ஐயோ! அவசரப்பட்டுவிட்டேனே என்று நினைக்கத்தான் முடிந்தது. பிறகு ஒன்றும் நினைவில்லை.
-------------------------------------------------------------------
-------------------------------------------------------------------
சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.....
மனைவி இறந்து இரண்டு வாரம் ஓடிவிட்டது. அவளுடன் கழிந்த நல்ல நாட்களை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.
தாயில்லாக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன. 8 மாதப் பெண் குழந்தை வேலைக்காரி சுந்தரியின் மடியில் உறங்குகிறது. குழந்தைகளைக் கவனிக்க சுந்தரி இருப்பதை நினைத்து ஒரு நிம்மதி. இனி எப்படி வாழ்க்கை போகப் போகிறதோ, அதுவும் கவிதா இல்லாத வாழிக்கை, நினைக்கவே நெஞ்சில் முள்ளாய்த் தைக்கிறது. அதோ எல்.ஐ.சி. ஏஜண்ட் வருவது தெரிகிறது. அவரிடம் பாலிசியைக் கொடுத்து “அவளே போன பிறகு பணம் எதற்கு” என்கிறேன். நாளை முதல் ஆபீஸ் வழக்கம் போல் ஆனால் கவிதாவின் முத்தம் இல்லாமல். வலிக்கிறது. மூத்தவன் அம்மா எங்கே என்று அழுகிறான். பாட்டியும் (கவிதாவின் அம்மா) அழுகிறாள். நல்ல வேளை சுந்தரி மூத்தவனைச் சமாதானப் படுத்தி உறங்க வைக்கிறாள்.
அவளுக்கும் உறக்கம் வரவில்லை போலும். கண் போனதும் கண் அருமை தெரிந்தவள் போல் வ்ந்தாள். மெதுவாக என் அறைக் கதவு திறக்கும் சப்தம். சுந்தரி!. “எல்லாரும் தூங்கியாச்சு! அம்மாவும் தூங்கிட்டாங்க. ஏன் வருத்தப்படறீங்க? அதான் நான் இருக்கேனே” என்கிறாள். நெஞ்சில் தலை வைத்து அருகே சப்தமின்றிப் படுக்கிறாள். கைகள் எங்கெல்லாமோ பரவ என் இரத்தம் சூடேருகிறது. பலமுறை இந்த சுந்தரியை என் பக்கம் ஈர்க்க என்னென்னவோ பொய்கள்...’கவிதா மோசம். நீதான் எனக்கு வேண்டும். நீ எப்போதும் இந்த வீட்டிலேயேத் தங்கலாம்’ இப்படி...மனைவி இறந்த இரண்டு வாரங்களில் வேலைக்காரி சுந்தரி என் அருகில். கொஞ்சல். மனது ஒரு புறம் வலித்தாலும்......அவளை என்னோடு சேர்த்து அணைக்காமல் இருக்க முடியவில்லை.......
திடீரென தொட்டிலில் இருந்தக் குழந்தை அழ.....’சீ’ என்று கோபத்துடன் எழுந்து போகும் சுந்தரியின் வார்த்தைகள் “அம்மாவோட இதையும் சேர்த்து எரிச்சுருக்கணும்..சனியன்”....
எனக்கு மூச்சுத் திணருகிறது. கண் இறுகுகிறது. நாக்கு உள்ளே இறங்குவது போல்.....கனவு போல்...
அன்று நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது. கவிதா சுந்தரியிடமிருந்து குழந்தையை வாங்கிச் செல்ல.. திரும்பவும் சுந்தரியின் குரல் “வாடிக் கண்ணு உன்னய பாட்டிக்கிட்ட விடறேன். அக்கா, அடுப்புல பால் காய்ச்சுங்க. மழை தூறுது போல இருக்குது. துணி எடுக்கணும்” என்று சொல்ல...கவிதா அடுப்பின் அருகே சென்று தீப்பெட்டியை உரச.....
காஸ் சிலிண்டர் வெடிக்கும் சத்தம் இடி இடித்தது போல்....சமையலறை முழுவதும் தீ.... புகை.....கதறும் சத்தம்.....திடீரென புகையின் நடுவே கதறி இறந்த கவிதா.......தெளிந்த முகத்துடன் என் முன்னால் சிரித்தபடி...”என்ன இப்பதான் நடந்தது என்னனு புரியுதா.” என்கிறாள். ‘ஐயோ கவிதா என்னைய மன்னிச்சிரு. கவிதா மன்னிச்சிரு. நான் எவ்வளவு பெரிய பாவி. தேவதையப் போல இருந்த உன்னயத் தவர விட்டு தவிக்கிறேனே. இறைவா நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவா மாத்தி எனக்கு என் கவிதாவைத் திரும்பத் தா. இனி ஒரு போதும் நான் கவிதாவை ஏமாத்த மாட்டேன். எனக்கு என் கவிதா வேணும். ஐயோ! கவிதா! கவிதா! கவிதா!
“என்னங்க.....என்னங்க.....என்னாச்சுங்க உங்களுக்கு.? எதுக்கு என்னையப் போட்டு இப்படி உலுக்கிறீங்க?”
ஹா! இது என்ன? கவிதாவின் குரல் போல இருக்கு.! திடீரென கண் விழித்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதிசயம். கண்டதெல்லாம் கனவுதான். ஓ! இறைவா நன்றி! நன்றி!
“ஒண்ணும் இல்ல....ஏதோ ஒரு பயங்கர கனவு”
நான் கனவில் கண்டது போல் சுந்தரியுடன் தகாத உறவொன்றும் இதுவரை இல்லை. ஆனாலும், என் மனம் இடையில் அந்த 16 வயது சுந்தரியைக் காணும் போது தடுமாறி இருக்கிறது. சில தடுமாற்றங்களை நாம் தவிர்க்காவிட்டால் நம் வாழ்வே தடம் புரண்டு விடும். அதைத்தான் இந்தக் கனவு எனக்கு நினைவுபடுத்துகிறது.
மறு நாள் சுந்தரிக்குப் பதிலாக வீட்டில் அவளது தாய் கந்தம்மா. யாரோ கேட்டதற்கு, கவிதாவின் பதில் “என்ன செய்ய. அவருக்கு, சுந்தரியின் வேலை அவ்வளவாப் பிடிக்கலையாம். சுத்தம் போதாதாம். அதான் பழையபடி கந்தம்மாவையே வரச் சொல்லிட்டேன்”
----------------------------------------------------------------------------------------------------------
குறிக்காரி
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அந்தக் கிழமைக்கே உரிய ஓய்வு எடுக்கும் மன நிலையில் நான் T.V. பார்த்துக் கொண்டிருந்தேன். கேட் திறக்கும் சத்தம். ‘குறி பார்க்கலையோ குறி’ என்றக் குரல் கேட்டு வாணி கதவைத் திறந்து வெளியே சென்றாள். குறி என்ற அந்த வார்த்தையைக் கேட்டதும் உடனே எனக்கு நம் தமிழ் குறிஞ்சிப் பாடல்களிலும், குறிஞ்சித் திணையிலும் சொல்லப்பட்ட குறி சொல்பவர்களைப் பற்றிய பாடல்கள் நினைவுக்கு வந்தது. ‘சிவப்புப் புடவை, கைகளில் பச்சை குத்திய அடையாளம், கண்களில் மை, நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, இடுப்பில் ஒரு கூடை, கையில் மந்திரக் கோல்’ இப்படி ஒரு பிம்பம், படித்ததிலிருந்து மனதில் பதிந்திருந்ததால் இந்தக் குறிக்காரியும் அப்படித்தான் இருப்பாளோ என்று அறிய நானும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். தோளில் ஒரு போர்வையை பத்தாக மடக்கி இட்டு, கையில் ஒரு அரை அடி நீளக் கம்பு, இடுப்பில் ஒரு கூடை, நெற்றியில் பெரிய வட்டக் குங்குமப் பொட்டு என்று கிட்டத்தட்ட என் மனதில் பதிந்திருந்த அடையாளங்கள் இருந்தாலும் அவள் கையில் இருந்த கோல் மந்திரக் கோலாக இருக்க வாய்ப்புண்டா என்றுத் தெரியவில்லை.
“மலையாள பகவதி என் மனசில இருந்து சொல்றதைச் சொல்றேன் தாயி உன் கவலையெல்லாம் கேளு” என்றுத் தொடங்கினாள். என் மனதில் இலக்கியப் பாடல்களில் படித்தது நினைவுக்கு வந்தது.
சிலப்பதிகாரத்தில் கூட சாலினி என்னும் குறிக்காரி தெய்வம் ஏறிக் குறி சொல்லுவதாக வருகிறது.
வெறிபாடியகாமக்கண்ணியார் என்பவர் பாடியனவாகச் சங்கநூல்களில் (புறநானூறு, அகநானூறு, நற்றிணை) இருக்கும் இரண்டு/மூன்று பாடல்களும், குறிஞ்சித் திணை பற்றிப் பாடிய அகப்பொருள் பாடல்கள். தலைவி மெலிவுக்குக் காரணம் என்னவென்று அவளது தாய் குறிசொல்லும் முதுவாய்ப் பெண்ணைக் கேட்கிறாள். அவள் பிரம்பைத் தலைவியின் கையில் வைத்துப் பார்த்துக் குறி சொல்கிறாள். குறிக்காரி நெடுவேளாகிய முருகனைப் பேணி விழாக் கொண்டாடினால் இவள் ஏக்கம் தணியும் என்கிறாள்.
ஒளவையார் பாடிய பாடலில் கூட குறிக்காரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
ஒளவையார் பாடிய பாடலில் கூட குறிக்காரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.
அகவன் மகளே அகவன் மகளே
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்.....
(அகவல் மகள் என்பவள் குறி சொல்லும் பெண். அகவல் மகள் குறி சொல்லத் தொடங்கும்போது முதலில் முருகனையும், அவன் குடிகொண்டுள்ள மலையையும் வாழ்த்திப் பாடிவிட்டுதான் குறி சொல்லத் தொடங்குவாள்.)
ஒருவேளை இந்தக் குறிக்காரியும் வாணியின் தலையில் பிரம்பை வைத்துக் குறி சொல்லுவாளோ என்று நினைத்தேன். எனக்குத் தெரிந்தவரை குறி சொல்பவள், மேலே சொன்னபடி, தமிழ் கடவுள் முருகன் வழி வரும் குறத்தி இனத்தைச் சேர்ந்தவள் மட்டுமல்ல, அவள் முருகனை வேண்டிவிட்டுதான் குறி சொல்வாள் என்றுதான் இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இவளோ மலையாள பகவதி என்று சொல்கிறாளே? ஒருவேளை இவள், இப்போதெல்லாம் குறி சொல்லும் வேடத்தில் வந்து பெண்களையும், வீட்டையும் ஏமாற்றும் கூட்டம் இருப்பதாகச் சொல்கிறார்களே, அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவளோ என்று கூட சந்தேகம் நிழலாடியது. இவள் வேஷம் அதே போல இருந்தாலும், கண்டிப்பாக பண்டையக் காலத்துக் குறிக்காரி அல்ல. இன்றையக் காலக் கட்டத்துக்கு உட்பட்டவளே. இன்றைக்கும், விஞ்ஞானம் வெகுவாக வளர்ந்து வரும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட, குறி சொல்வது, குறி கேட்பது போன்றவை நமது சமூகத்தில் பரவலாக உள்ளது என்பது சற்று வியப்பாகத்தான் இருந்தது.
வாணி வேண்டாம் என்று சொன்னாலும், அவள் விடவில்லை. இரண்டே நிமிடத்தில் வாணி, அவள் வார்த்தைகளில் மயங்கிவிட்டாள். அவள் வாணியிடம், 'வீட்டு முகப்புத் திண்ணையில் உட்காரு தாயி’ என்றாள். வாணி அனுசரணையுடன் அமர்ந்தாள். எனக்குக் கோபம் வந்து எழுந்தேன். திடீரென மனதில் ஒரு மின்னல். இவள் என்னதான் சொல்கிறாள் என்று கேட்கலாமே என்ற எண்ணம் வந்தது. டி.வி. சப்தத்தைக் குறைத்து காதைக் கூர்மையாக்கிக் கேட்டேன். அவள் சொன்னதில் 60% எல்லோருக்கும் பொருந்துவது. 20% வீடு சுற்றுப்புறம் பார்த்துச் சொன்னதாக இருந்தது. மீதி 20% சொன்னாளில்லை. வாணி அவள் சொல்வதைக் கேட்பாள் என்பது உறுதியானதும் “தாயி இந்தக் கம்பளிக்குள்ள காணிக்கை வை தாயி. என் மனசு குளிர்ந்தாத்தான் மகமாயி என் மனசில் உட்கார்ந்து சொல்லுவா தாயி என்றாள்” – நான் மெதுவாக எழுந்து சென்றதும் இருவருக்கும் “இவர் ஏன் இப்ப வந்தார்”? என்ற எண்ணம் முகத்தில் பிரதிபலித்தது.
நான், “என்னய கவனிக்காம ரெண்டு பேரும், கேக்கறதக் கேட்டு சொல்லறத சொல்லிக்கங்க” என்றேன்.
என் வரவை எதிர்பாராததால் அவள் முகம் வாட்டம் அடைந்தது என்றாலும் தைரியமாகப் பேசினாள்.
“சாமி, அப்படி எல்லாம் சொல்லாதீங்க சாமி. நான் அந்த மலையாள பகவதி சொல்றதத்தானே சாமி சொல்றேனுங்க. பொய் இல்லைங்க சாமி. சாமி நீங்க வேணா அந்த மகமாயியையேக் கேளுங்க சாமி”
நான், “மலையாள பகவதிகிட்டக் கேளு. உனக்கு இங்கருந்து எத்தனை ரூபா கிடைக்கும்னு” என்றேன்.
பலதும் பேசிப் பேசி இறுதியாக “அம்மா சொல்றா கொடுக்கணும்னு. ஆனா, அம்மாவுக்கும், சாமிக்கும் எங்கயுமே ஜெயிக்கணும்கர மனசு இருக்கிறதால இங்கயும் ஜெயிகணும்ல. அதனால எனக்கு இங்கருந்து ஒண்ணும் கிடைக்காதுனு மகமாயி சொல்றா சாமி”. என்றபடி வருத்தத்துடன் எழுந்தாள்.
‘உட்கார்’ என்றேன். 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். சிரித்துக் கொண்டே வாங்கிய அவள் தன் கண்களில் ஒற்றி இடுப்பிலிருந்த சுருக்குப் பையில் வைத்த பின்,
“சாமி, ஆத்தா சொல்லிச்சு, எனக்கு 100 ரூபானுதான். ஆனா எங்கயும் வித்தியாசமா இருக்கணும், எல்லாத்திலயும் ஜெயிக்கணும்னு நெனைக்கற உங்க கிட்ட இப்பிடி சொன்னாத்தான் அந்த 100 ரூபா கெடைக்கும்னும் அந்த மகமாயி சொன்னதாலதான் நான் அப்பிடி ஒண்ணும் கெடைக்காதுன்னேன். உடனே நீங்க என் வாக்க பொய்யாக்க நெனைச்சு 20 ரூபா தர இருந்த நீங்க 100 ரூபாய எடுத்து நீட்டிட்டீங்க இல்லியா சாமி? இந்த கொணத்தால உங்களுக்குச் சின்ன சின்ன நஷ்டங்களு எடையிடையே வந்தாலும், அது ஒங்களுக்கு ரொம்ப நல்லதத்தான் ஒங்க வாழ்க்கைல தந்திருக்கு சாமி. யார் மனசையும் நோகடிக்காத குணமுள்ளவங்க நீங்க ரெண்டுபேரும் எல்லாருக்குமே உங்களால முடிஞ்ச ஒதவிய செய்வீங்க சாமி. அதனால ஒங்கள யாரும் வயிரெறிஞ்சுத் தூத்தாம, எல்லாரும் மனசால வாழ்த்த மட்டும்தான் செஞ்சுருக்காங்க சாமி. அதனாலதான் ஒங்களுக்கு மலபோல வார ப்ரச்செனங்க எல்லாம் பனி போல போயிடுதுங்க சாமி.
ஆறுபடைஅப்பனும், அவங்க அண்ணனும், அப்பனும், ஆத்தாளும் ஒங்களுக்கு தொணையுண்டு சாமி. சாமிக்கும், அம்மாவுக்கும் எல்லா நல்லதும் கெடைக்கட்டும்” என்று சொல்லி வாழ்த்தி விட்டுச் சென்றாள். வெற்றி யாருக்கு? அவளை அளந்த எனக்கா? என்னை அளந்த அவளுக்கா? உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது?
------------------------------------------------------------------------------------------------------------
சிங்காரவேலன்
“டேய் சிங்காரவேலா, உனக்கு இப்ப 35 வயசு ஆகுது. இனியாவது ஒரு கல்யாணம்பண்ணி வாழ்க்கையில் செட்டில் ஆகப் பாரேன்!. இப்ப என்னை எடுத்துக்க 36 வயசாகுது. எனக்கு 6 ஆவதும், 4 ஆவதும் படிக்கிற இரண்டு பையன்கள். உனக்கும் இதே வயசுலகுழந்தைகள் ஆகும்போது இப்போதைய நிலையில் 50 வயசாயிடும். இனியும் தள்ளிப் போடாமகுடும்பம், குடித்தனம்னு ஆகப் பாரேன்!”

பிரபாகரன் என்னுடன் 12 ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன். 12 ஆம் வகுப்புமுடித்ததும், அவனது அப்பா நடத்தி வந்த புத்தகக் கடையில் உட்கார்ந்தவன். நான் முதல்வருடம் முதுகலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது கல்யாணமும் செய்துகொண்டவன். பாவம், அவன் வாழ்க்கையே புதிய புத்தக மணமுள்ள இடுங்கிய கடையும்வீடும்தான். எப்போதாவது இரண்டு, மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நான் வேலை செய்யும்இடங்களுக்கு வருவான். நான் மதுக்கரை கிளைக்கு மாற்றலாகி வந்து 8 மாதங்கள் ஆகிவிட்டது.இந்த 8 மாதங்களுக்கு இடையே இந்த மலம்புழா கார்டனுக்கு நான் வருவது இது நான்காவதுமுறை. அதில் இரண்டு முறை வந்த போது எனக்கு இடையிடையே சூடு பகிர்ந்து தர சுதாஇருந்தாள்.
இரண்டு முறையும் கிராண்ட்ஹோட்டலில் தங்கினோம். 11 மணிக்குஅறை எடுத்து 3 மணிக்கு காலிசெய்வதுதான் வழக்கம். இனி அடுத்தமுறை ஹோட்டல் மாற்ற வேண்டும். பாலக்காடில் தங்க வேண்டும். இந்த சுதாநான் கோவை மேட்டுப்பாளையம் ரோட் கிளையில் இருந்த போது என்தூண்டிலில் விழுந்த அழகான, ஐந்து வயதான குழந்தையின் தாயானஒரு மீன். எல்.ஐ.சி மணி பேக், பாலிஸி, செக்கை மாற்றிப் பணமாக்க புதிதாய் அக்கவுன்ட் தொடங்க வந்த சுதாவுடன் வந்த அந்த கருத்த இடிஅமீன், அவள்கணவன் என்று தெரிந்ததும், கிடைத்த கொஞ்ச நேரத்தில், கணவன் கவனிக்காதபோது கண்களைசுதாவின் மேல் மேயவிட்டேன். என் கண்கள் கக்கிய காம ஏக்கத்தை புரிந்தும் புரியாததுபோல ஒரு கன்ஃயூஸ்ட் லுக் அவளிடமிருந்து வந்தது. அதை அப்படியே கொஞ்சநேரம் தொடர்ந்து ஒரு சிறு புன்னகையாக மாற்றினேன். இடியமீனையும், அவர்கள் வீட்டு ஃபோன் நம்பரை எழுதச்செய்தேன். பிறகு, மூன்று மாதம் விடா முயற்சி. வெற்றி எனக்கே.
“டேய்! சிங்காரவேலா! என்னடா ஒண்ணும் சத்தத்தையே காணோம்?”
இது பிரபாகரனின் வார்த்தைகள். அவன் வார்த்தைகள் என் காதில் விழுந்தால் தானே!? பத்தடிக்கு அப்புறம் திரும்பப் போய்க் கொண்டிருக்கும் ‘காப்ஸ்யூல்’ களில் ஒன்றில் ஜலஜா!!. என்னை அவளும் கவனித்து விட்டாள். நான் அதிசயத்துடன் சிரித்தபடி கை காட்டினேன்.அவளும் கை காட்டினாள். நான், அவளைக் காத்திருக்கும்படி சைகை காட்டினேன்.
பிரபாகரன் “அது யார்?” என்று கேட்டதும்,
நான், “பம்பாய்க்கு நான் கொண்டு போன ஒரு மலையாளத்து மாங்கனி அது. உனக்குஞாபகம் இருக்கா” என்றேன்.
.jpg)
.jpg)
“அதற்குப் பிறகு எப்போதாவது அந்தப் பெண்ணை நேரிலோ, கடிதம் மூலமோ தொடர்புகொண்டிருக்கிறாயா? என்று பிரபாகரன் கேட்டதற்கும் “இல்லை, இப்பதான் 7 வருடங்களுக்குப்பிறகு பார்க்கிறேன்” என்றேன்.
7 வருடங்களுக்கு முன்பு நான் கொச்சியில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில்அஸிஸ்டென்ட் மேனேஜராக வேலை பார்த்த போது, அங்கு, வேலை பார்த்த டைப்பிஸ்ட் லிசிபிரசவத்திற்காக 3 மாத லீவெடுத்த போது, லீவ் வேகன்ஸியில் வந்தவள்தான் இந்த ஜலஜா. மேனேஜர் R.K.நாயர் ஜலஜாவை எப்போதும் எதையாவது சொல்லிக் குற்றப்படுத்திக் கொண்டிருந்தது என் மனதைப் பல நேரங்களில் என்னவோ செய்தது. எனக்குத் தெரிந்த ‘கொறச்சு (கொஞ்சம்)மலயாளத்தில்’ ஜலஜாவுடன் நேரம் கிடைத்த போதெல்லாம் ‘சம்சாரித்து’ (பேசி) அவள்மனதில் நுழைந்தேன். குடிகாரக் கணவனை உதறத் தயாராக இருந்த அவள், கல்யாணத்திற்குமுன்பு, நான் அவளை அத்து மீறி தொடக்கூட அனுமதித்ததில்லை. ஏக்க பெருமூச்சுகள். தூக்கமில்லாத இரவுகள். கனவுகள். ஆப்பிள் போன்ற ஜலஜாவை அனுபவிக்காமல் விட்டால் அதுபேரிழப்பு என்று மனது நச்சரித்தது. வங்கியில் என் சேமிப்பில் இருந்த ரூ 12000 த்தை எடுத்துக்கொண்டு, அவளிடம் பம்பாய் போய் புது வாழ்க்கையைத் தொடங்கலாம் என்றேன்.
அவளது மூன்று வயதுப் பெண் குழந்தையைப் பேசிப், பேசி, ஒருவழியாய் அவளது தாயிடம் ஏற்பித்து ஒரு வெள்ளிக்கிழமை‘ஜெயந்தி ஜனதா எக்ஸ்ப்ரஸ்‘ ரயிலில் ஏறினோம். அந்த ரயில்பயணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத இனியஅனுபவம். பி.எஸ்.ஆர்.பி யில் (Banking Service Recruitment Board) ஓரிரு மாதங்களுக்குள் போஸ்ட்டிங்க்எதிர்பார்த்திருந்த நான், ஒரு மாதம் மட்டும் தான் அவளுடன் வாழமுடிவு செய்திருந்தேன். அதன் பின் எப்படியாவது அவளைக்கொச்சியில் உள்ள அவளது வீட்டிற்கு அனுப்பி விட வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். எனக்கு அவளுடன் வாழ்ந்த நாட்கள் மறக்க முடியாதவைதான். பாவம், அவள் என்னைக்கணவனாகவே கண்டாள். நானோ அவளை உதறித் தள்ள சமயம் பார்த்துக் கொண்டிருந்தேன். இனிய இல்லற வாழ்க்கை இரண்டு மாதம் நீடித்தது. என் கழுத்தில் கிடந்த செயின், மோதிரம்எல்லாம் என் காமத்தீக்குத் தீனி போட்டது. எனக்கு பல்லடம் இந்தியன் வங்கி கிளையில்சேருவதற்கு ஆர்டர் வந்து, சேர்வதற்கு 5 நாட்கள் மட்டுமே இருந்த போது, அறையைக் காலிசெய்து கொச்சி போகலாம் என்று கூறி ஜலஜாவுடன் ரெயில்வே ஸ்டேஷன் சென்றடைந்தேன். ஒரு டிக்கட் மட்டும் எடுத்து அவளைப் பெண்கள் கம்பார்ட்மென்டில் அமரச் செய்து,
“நான் டிக்கெட் பரிசோதகரைக் கண்டு ஏதேனும் அட்ஜஸ்ட் செய்து வேறு கம்பார்ட்மென்டில்நம் இருவருக்கும் பெர்த் கிடைக்க முயல்கிறேன். அப்படிக் கிடைக்கவில்லைன்னா நான் முன்புள்ள கம்பார்ட்மென்டில் இருக்கிறேன், இடையிடையே வருகிறேன்”
என்று சொல்லி நழுவினேன். வண்டியில் போரடிக்கும் போது வாசிக்க சில மலையாளவார இதழ்கள் வாங்கிக் கொடுத்தேன். அதில் ஒன்றில் 26-ம் பக்கத்தில் ஒரு கடிதம்வைத்துள்ளேன் என்றும், அதை வண்டி நகர்ந்த பின்னர்தான் வாசிக்க வேண்டும் என்றும்சொன்னேன். நான் ஆங்கிலத்தில் எழுதிய கடிதம். ‘குட்பை’ கடிதம். அவளது லக்கேஜைஅவளிடம் ஏற்பித்த பின் நகர்ந்தேன். எல்லா வருடமும் புதுவருட வாழ்த்து அட்டை என்முகவரியை எழுதாமல் அவளுக்கு அனுப்பி வந்தேன். பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்து...
ரோப்வேயிலிருந்து இறங்கியதும் எனக்காகக்காத்திருக்கும் ஜலஜாவின் அருகே சென்றேன். எனக்குப் பேசமுடியவில்லை. என் கண்கள் அவளிடம் மன்னிப்புக் கேட்டுக்கெஞ்சியது. அந்த இளைஞனிடம், என்னை முன்பு அவள்வேலை செய்த ‘ஓபீஸிலே ஸார்’ என்றாள். அவன் அவளதுசித்தப்பா பையனாம். பாலக்காடு இஞ்சினீரிங்க் கல்லூரிஇன்டெர்வ்யூவிற்கு வந்தார்களாம். சூர்யா ஹோட்டலில்தங்கியிருக்கிறார்களாம். ரூம் நம்பர் 405 ஆம். நான்கண்டிப்பாக அங்கு வர வேண்டும் என்றாள். நான் மகள்நலமா என்றேன். ஏதோ ஒரு போர்டிங்க் ஸ்கூல் பெயர்சொல்லி அங்கு படிப்பதாகச் சொன்னாள். ‘‘சேட்டன் நலமா”?என்றதும் போன வருடம் இறந்ததாகச் சொன்னாள். மாலை 6 மணிக்கு முன்பு ஹோட்டல் வரச்சொன்னாள். க்ரான்ட் ஹோட்டலில் நானும் பிரபாகரனும் அன்று தங்க முடிவு செய்தோம். மதியம் சாப்பிட்ட பின், பிரபாகரனுடன் மீண்டும் என் பழைய பம்பாய் நாட்களைப் பகிர்ந்தேன். 5மணிக்கு நான் மட்டும் சென்றேன். ரிஸப்ஷனில் ரூம் நம்பர் 405 என்றதும் காத்திருக்கச்சொல்லி இன்டெர்காமில் கூப்பிட்டு என் பெயர் சொன்னதும் எனக்கு மேலே செல்ல அனுமதிகிடைத்தது. லிஃப்டில் 3 ஆவது மாடி சென்றேன்.
ஜலஜாவைத் தழுவத் தத்தளிக்கும் கரங்களும், சுவைக்கத்துடிக்கும் உதடுகளுமாய் கதவைத் தட்டினேன். நைட்டிமட்டும் அணிந்திருந்த ஜலஜா கதவைத் திறந்தாள்.
நான் உள்ளே சென்றதும் தாளிட்ட அவள் என்னைத்தழுவினாள் ஆவேசத்துடன். அவளது கைகளும், உதடுகளும்என் உடலில் எங்கெல்லாமோ கோலமிட்டன. இடையில்எப்படி, எப்போது என்று தெரியவில்லை என் ஆடைகளைஅவள் அவிழ்த்து எறிந்தாள். பல நாட்கள் பட்டினி கிடந்தவள்ஆவேசத்துடன் உணவை அணுகுவது போல் அவள் நடந்துகொண்டாள். ஏழாண்டுகளுக்குப் பிறகு அவளை, எனக்குக்கிடைத்ததாக நினைத்தேன், ஆனால் நான் தான் அவளுக்குக்கிடைத்தேன் என்பதுதான் சரி. பத்து நிமிடத்திற்குப் பிறகுசூறாவளி ஓய்ந்தது. பாத்ரூம் சென்று வந்த அவள்சந்தோஷவதியாக இருந்தாள். நான் பாத்ரூமில், உடலில் பல பாகங்களில் எரிச்சலைஉணர்ந்தேன். ‘காண்டம்’ உபயோகிக்காததால் அங்கும் எரிச்சல்.
ஜலஜாவைத் தழுவத் தத்தளிக்கும் கரங்களும், சுவைக்கத்துடிக்கும் உதடுகளுமாய் கதவைத் தட்டினேன். நைட்டிமட்டும் அணிந்திருந்த ஜலஜா கதவைத் திறந்தாள்.
நான் உள்ளே சென்றதும் தாளிட்ட அவள் என்னைத்தழுவினாள் ஆவேசத்துடன். அவளது கைகளும், உதடுகளும்என் உடலில் எங்கெல்லாமோ கோலமிட்டன. இடையில்எப்படி, எப்போது என்று தெரியவில்லை என் ஆடைகளைஅவள் அவிழ்த்து எறிந்தாள். பல நாட்கள் பட்டினி கிடந்தவள்ஆவேசத்துடன் உணவை அணுகுவது போல் அவள் நடந்துகொண்டாள். ஏழாண்டுகளுக்குப் பிறகு அவளை, எனக்குக்கிடைத்ததாக நினைத்தேன், ஆனால் நான் தான் அவளுக்குக்கிடைத்தேன் என்பதுதான் சரி. பத்து நிமிடத்திற்குப் பிறகுசூறாவளி ஓய்ந்தது. பாத்ரூம் சென்று வந்த அவள்சந்தோஷவதியாக இருந்தாள். நான் பாத்ரூமில், உடலில் பல பாகங்களில் எரிச்சலைஉணர்ந்தேன். ‘காண்டம்’ உபயோகிக்காததால் அங்கும் எரிச்சல்.
பின் பலதும் பேசினோம். நான் பம்பாயில் அவளை விட்டுப் பிரிந்த போது பேகில் இருந்தபணம், ஸாரி, குழந்தைக்குக் கொடுத்த ஃப்ராக், என் கடிதம் எல்லாவற்றையும் பற்றிக் கேட்டேன்.என்னைப் பற்றி நான் எல்லாம் சொல்லவில்லை. வங்கி ஃபோன் நம்பர் கொடுத்தேன். ஏனோஅவள் முகம் வாடி இருந்தது. இடையிடையே கண் கலங்கியது. பின்னர் விடை பெற்றேன்.மீண்டும் சந்திக்க வேண்டும் என்றேன். பிரபாகரனிடம் நடந்ததைக் கூறியதும் அவனுக்குஅதிசயம் வழக்கம் போல் ‘நீ மச்சக்காரண்டா’ என்றான்.
“ஸாரி சிங்கேட்டா. ஐயாம் ஸாரி.. பெரிய தவறு நடந்துபோச்சு. திருத்த முடியாத தவறு. அன்று, வி டி. ஸ்டேஷனில் உங்களைப் பிரிந்த நான் கடந்த 5 வருடங்களாக பம்பாயில் தான்இருந்தேன். அன்று நாம் பிரிந்த நாளில் வண்டி புறப்படும்சமயம் உங்களைக் காணாமல் கதவு பக்கம் வந்து நின்றுவிட்டுத் திரும்ப ஸீட்டுக்குப் போனதும் என் லக்கேஜைக்காணவில்லை. பிறகு என்ன செய்வது என்று தெரியாமல்எல்லா இடத்திலும் ஓடி உங்களைத் தேடிய நான் அந்த ரயிலில்ஏறவில்லை. ஏதோ ஒரு அம்மா என்னை சமாதானப்படுத்தித்தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அவளது வீட்டை அடைந்ததுமே நான் அதிர்ந்து போனேன். அவள் ஒரு விலை மாது. பலமுறை அங்கிருந்துத் தப்ப முயன்றேன். முடியவில்லை. மூன்றாம் நாள் என்னைரூ.30,000 க்கு விற்று விட்டாள் பாவி. பின் பல கைகள் மாறி மாறி நரக வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டேன். இரண்டு வருடங்களுக்கு முன் போலீஸில் பிடிபட்டதால் எப்படியோ அவர்கள்உதவியால் கொச்சியை அடைந்தேன். எனக்கு எனது மகளது எதிர்காலத்தைக் கருதி வேறு வழியின்றி சம்பாதிப்பதற்காக மீண்டும் பம்பாய் வாழ்க்கையை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டேன். இருந்தாலும் மனதில் சிங்கேட்டன் என்ற சதிகாரனை தினமும் சபித்துக்கொண்டுதான் இருந்தேன். உங்களை நேரில் மலம்புழயில் கண்டதும் இறைவனுக்கு நன்றிசொன்னேன். உங்களைப் பழிவாங்கத்தான் ஹோட்டலுக்கு வரவழைத்தேன். காண்டம்உபயோகிக்கச் சொல்லாமல் உங்களுடன் உடலுறாவு கொண்டதும் பழிவாங்கத்தான். ஆனால்எல்லாம் முடிந்த பின் நீங்கள் சொன்னதைக் கேட்டதும் நான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேனோஎன்ற வருத்தம். அதனால் தான் இப்போது உங்களுக்கு ஃபோன் செய்கிறேன். எனக்கு HIVபாஸிட்டிவ்.
ஏதேனும் நல்ல ஆஸ்பத்திரிக்குப் போய் எப்படியாவது உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.” பிறகு அவள் சொன்னது ஒன்றும் என் காதில் விழவில்லை.
ஏதேனும் நல்ல ஆஸ்பத்திரிக்குப் போய் எப்படியாவது உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.” பிறகு அவள் சொன்னது ஒன்றும் என் காதில் விழவில்லை.
வங்கி மேனேஜர் “ஐயோ! சிங்காரவேலா! என்று கத்திக் கொண்டே என்னைத் தாங்கிப் பிடிக்க ஓடி வந்ததை ஏதோ ஒரு கனவு காண்பது போல் உணர்ந்தேன்.”
.
******************************************************
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிங்காரவேலனின் வாழ்க்கை சீரழிந்து போனது. மூன்று வருடங்கள் மட்டுமே அவனால் வேலையில் தொடர முடிந்தது. பின் உடுமலைப்பேட்டை அருகே உள்ள அவனது சொந்த ஊரான சின்னவீரன்பட்டிக்குப்போய்விட்டான். இரண்டு வருடங்கள் மட்டுமே அவனது நோய் விவரங்கள் யாருக்கும் தெரியாமல் ரகஸியமாக்கி அவனால் வைக்க முடிந்தது
எப்படியோ நோய் விவரங்கள் அறிந்த அவனது குடும்பத்தினர் அவனை கோயம்பத்தூரில் உள்ள ஒரு எய்ட்ஸ் Rehabilitation Centre -ல் (மறுவாழ்வு மையம்) கொண்டுவிட முடிவு செய்தனர் . 2002 ஆம் ஆண்டே டெஸ்ட் ரிஸல்ட் வந்து, அதில் HIV பாஸிட்டிவ் என அறிந்த அன்று இரவே அவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான்.
(அவனது தற்கொலை முற்சியை அப்படியே நான் எடுத்த ‘பரோல்’ என்னும் குறும் பட்ததில் படம் பிடித்திருந்தேன். அதைப் பார்த்த அவன், கண்களில் கண்ணீர் மல்க நன்றி சொன்னது இப்போதும் என் செவியில் ஒலிக்கிறது.) அவனைக் காப்பாற்றி அவனுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் அனைத்தையும், வீட்டிலுள்ள அம்மா,அப்பா கூட அறியாமல் செய்து வந்தது அவன் அண்ணன் குமரேசன் தான்.
எப்படியோ நோய் விவரங்கள் அறிந்த அவனது குடும்பத்தினர் அவனை கோயம்பத்தூரில் உள்ள ஒரு எய்ட்ஸ் Rehabilitation Centre -ல் (மறுவாழ்வு மையம்) கொண்டுவிட முடிவு செய்தனர் . 2002 ஆம் ஆண்டே டெஸ்ட் ரிஸல்ட் வந்து, அதில் HIV பாஸிட்டிவ் என அறிந்த அன்று இரவே அவன் தற்கொலைக்கு முயன்று இருக்கிறான்.
(அவனது தற்கொலை முற்சியை அப்படியே நான் எடுத்த ‘பரோல்’ என்னும் குறும் பட்ததில் படம் பிடித்திருந்தேன். அதைப் பார்த்த அவன், கண்களில் கண்ணீர் மல்க நன்றி சொன்னது இப்போதும் என் செவியில் ஒலிக்கிறது.) அவனைக் காப்பாற்றி அவனுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் அனைத்தையும், வீட்டிலுள்ள அம்மா,அப்பா கூட அறியாமல் செய்து வந்தது அவன் அண்ணன் குமரேசன் தான்.
சிங்காரவேலன் தவறுகள் மட்டுமே செய்து வாழ்ந்த ஒரு வஞ்சகனோ, கொடியவனோ அல்ல. எப்போதோ அவன் வாழ்வில் அவன் வாசித்தவை, கண்டவை, அனுபவித்தவை எல்லாம் அவனை ஈர்த்து, பெண்ணாசையை அவன் மனதின் ஆழத்தில் வேரூன்ற வைத்திருக்கலாம். அதனால் அவன் பெண்ணாசை பிடித்துத் தன் வாழ்வையே அழித்துக் கொண்ட பித்தனாகத் தோன்றலாம்.
ஆனால், எனக்கு அவன் “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைந்த” நண்பன். கல்லூரி தேர்தலில் போட்டியிட்ட என்னைத் தன் தோளிலேற்றி கல்லூரியை வலம் வந்தவன். கல்லூரி விடுதியில் நடந்த தகராரில் என் மேல் விழ வேண்டிய அடிகளைத் தன் உடலில் ஏற்றவன். வேலையின்றி ட்யூஷன் சென்டரில் பணியாற்றி வந்த என்னை, இப்போது நான் ஆசிரியனாக, பாலக்காடு அருகே இருக்கும் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் வேலையில் அமர கட்டாயப்படுத்தி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடை பணத்தில் பாதிப் பணம் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து என்னை ஆசிரியனாக்கியவன். குமுதத்திற்கும், ஆனந்த விகடனுக்கும், ஒரு போதும் பிரசுரிக்கப்படாத கதைகளை, வருடக் கணக்கில் அனுப்பிச் சோர்ந்த எனக்கு என் பெயரில் ஒரு வலைத்தளம் தொடங்கி, அதில் என்னை எழுத வைத்து, பாமரன்,குடந்தையூர் சரவணன், ராமகிருஷ்ணன், ஞானி, ஜெயமோகன் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவியவன்.
சிலபஸில் உள்ளதால் திரைப்படம் எடுப்பது பற்றியும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நான் கற்பிக்கிறேன் என்று அறிந்தவுடன் குறும்படம் எடுப்பது பற்றியும் சொல்லி,என்னை ஊக்குவித்து SIET (Kerala State Institute of Educational Technology) நடத்தும் குழந்தைகள் பட விழாவில் போட்டியிட திரைப்படங்கள் உருவாக்க வைத்தவன். அதற்கான செலவுகளில் பாதியைத் தானேற்று என்னை மூன்று திரைப்படங்களை எழுதி இயக்கச் செய்தவன். ஏப்ரல் மாதம் நான்காம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள குடந்தையூர் சரவணனின் சம்மதத்தைப் பெற்றுத் தந்தவன். அத் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சான்பாறையில் தமிழ் மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளியில் வரும் ஜூன் மாதம் நடத்த வேண்டுமென்றும், அவ்விழாவிற்குப் பாமரனை பங்கெடுக்கச் செய்வேன் (பாமரனின் நெருங்கிய நண்பர் இவனது நண்பராம்) என்றும், கூடவே தானும் பங்கெடுப்பேன் என்றும் உறுதி கூறியவன். ஜலஜா போனவருடம் இறக்கும் வரை எல்லா மாதமும் அவளுக்குப் பணம் அனுப்பியவன். அவளது மகளின் திருமணத்தின் போது 10 பவுன் நகை கொடுத்தவன்.
ஆனால், எனக்கு அவன் “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைந்த” நண்பன். கல்லூரி தேர்தலில் போட்டியிட்ட என்னைத் தன் தோளிலேற்றி கல்லூரியை வலம் வந்தவன். கல்லூரி விடுதியில் நடந்த தகராரில் என் மேல் விழ வேண்டிய அடிகளைத் தன் உடலில் ஏற்றவன். வேலையின்றி ட்யூஷன் சென்டரில் பணியாற்றி வந்த என்னை, இப்போது நான் ஆசிரியனாக, பாலக்காடு அருகே இருக்கும் மேனேஜ்மென்ட் ஸ்கூலில் வேலையில் அமர கட்டாயப்படுத்தி அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய நன்கொடை பணத்தில் பாதிப் பணம் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்து என்னை ஆசிரியனாக்கியவன். குமுதத்திற்கும், ஆனந்த விகடனுக்கும், ஒரு போதும் பிரசுரிக்கப்படாத கதைகளை, வருடக் கணக்கில் அனுப்பிச் சோர்ந்த எனக்கு என் பெயரில் ஒரு வலைத்தளம் தொடங்கி, அதில் என்னை எழுத வைத்து, பாமரன்,குடந்தையூர் சரவணன், ராமகிருஷ்ணன், ஞானி, ஜெயமோகன் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவியவன்.
சிலபஸில் உள்ளதால் திரைப்படம் எடுப்பது பற்றியும், ப்ளஸ் 2 மாணவர்களுக்கு நான் கற்பிக்கிறேன் என்று அறிந்தவுடன் குறும்படம் எடுப்பது பற்றியும் சொல்லி,என்னை ஊக்குவித்து SIET (Kerala State Institute of Educational Technology) நடத்தும் குழந்தைகள் பட விழாவில் போட்டியிட திரைப்படங்கள் உருவாக்க வைத்தவன். அதற்கான செலவுகளில் பாதியைத் தானேற்று என்னை மூன்று திரைப்படங்களை எழுதி இயக்கச் செய்தவன். ஏப்ரல் மாதம் நான்காம் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள குடந்தையூர் சரவணனின் சம்மதத்தைப் பெற்றுத் தந்தவன். அத் திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சான்பாறையில் தமிழ் மாணவர்கள் அதிகம் பயிலும் பள்ளியில் வரும் ஜூன் மாதம் நடத்த வேண்டுமென்றும், அவ்விழாவிற்குப் பாமரனை பங்கெடுக்கச் செய்வேன் (பாமரனின் நெருங்கிய நண்பர் இவனது நண்பராம்) என்றும், கூடவே தானும் பங்கெடுப்பேன் என்றும் உறுதி கூறியவன். ஜலஜா போனவருடம் இறக்கும் வரை எல்லா மாதமும் அவளுக்குப் பணம் அனுப்பியவன். அவளது மகளின் திருமணத்தின் போது 10 பவுன் நகை கொடுத்தவன்.
கடந்த ஆறு வருடங்களாக்க் கோவையிலுள்ள எய்ட்ஸ் Rehabilitation Centre-ல் (மறுவாழ்வு மையம்) வாழ்ந்த என் ஆருயிர் நண்பன் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இவ்வுலகத்தை விட்டேப் போய்விட்டான். பள்ளியில் கொடியேற்றம் முடிந்ததும் ஃபோன் வந்தது. விவரமறிந்து நான் கோயம்பத்தூர் ஓடினேன். சலனமற்ற அவன் உடலைக் கண்டதும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. கூட அழ அவன் அண்ணன் குமரேசன் மட்டுமே. எலும்பும் தோலுமான அவன் உடலை கோவைஅரசு க்ரிமடொரியம் கொண்டு சென்று எறித்தோம். கடந்த செப்டெம்பர் 1-ஆம் தேதி அவன் விருப்பப்படி அவனை எரித்தச் சாம்பலை அவன் கிராமத்திலுள்ள அவனுடைய தென்னந் தோப்பில் தூவி அதன் மேல் மண்ணை வெட்டியிட்டோம். 25 வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்லூரி விடுமுறை நாளில் அந்தத் தோப்பில் இளநீர் வெட்டிக் குடித்துக் கொண்டிருந்த்த போது அவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.
“நாம 10th ல படிச்சமேடா ஒரு ஸ்பீச்.நம்ம முன்னாள் பிரதமர் நேரு, அவர் உடலை எரிச்ச சாம்பலை, இமய மலையில் தூவ வேண்டும்னு சொன்னாரே, அது மாதிரி என்னோட ஆசை,என் உடலும் மரணத்திற்கு பின் எரிக்கப்பட்டு சாம்பலின் ஒரு பகுதி இந்தத் தென்னந்தோப்பில் தூவப்படணும்", என் செவிகளில் இப்போதும் அவன் வார்த்தைகள் தெளிவாக ஒலிக்கிறது.
-------------------------------------------
வாழத் தெரியாத ராஜீவ்
“எங்களாலால இனிமேலாம் அமைதியா, பேசாம இருக்க முடியாது. பொறுமை போயிடுச்சி. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல. உண்மையச் சொல்லணும்னா, பிரேத பரிசோதனைக்கு கவர்ன்மண்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் சுடுகாட்டுக்கும் எடுத்துட்டு போற இந்த சவம் பத்தாவது சவம் தெரியுமா.? உங்களுக்கெல்லாம் எங்க தெரியபோகுது?.”
இது சுதாகரன் என்பவரின் வார்த்தைகள். சுதாகரனின் மனைவி, கேரளாவில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள ஊர்ங்காட்டிரி பஞ்சாயத்தில் வார்டு உறுப்பினர். ஆகையால், சுதாகரன் அந்தப் பஞ்சாயத்தில் மிகவும் இன்றியமையாத ஒரு நபர். சீருந்தை நிறுத்தி இறந்து போன ராஜீவின் வீட்டிற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று நாங்கள் கேட்ட போது அங்கு இருந்த ஒரு மளிகைக் கடைக்காரர் சுதாகரனைக் கை காட்டி விட்டார். சுதாகரன் அப்போது, அருகிலுருந்த ஒரு தேநீர் கடையில் ‘கட்டன் சாயா’ என்று கேரளாவில் சொல்லப்படும் பால் கலக்காத கருந்தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். நாங்கள் ராஜீவ் என்ற வார்த்தையை உச்சரித்த உடனேயே அவர் கொந்தளித்து,
“ஆமா, நீங்கல்லாம் ஏன் இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க? செத்த பாடி கிடைக்க இன்னும் ரெண்டு மணி நேரம் ஆவும். அதுவரைக்கும் உங்களால காத்துக் கிடக்க முடியுமா? எதுக்காக நீங்கல்லாம் கஷ்டப்படணும்? நாங்கதான் கையாலாகதவங்க. இந்த மாதிரி மோசமான கொடுமைக்கெல்லாம் துணை போயி கஷ்டப்படணும்னு விதி. . எதுக்குமே உபயோகமில்லாம பொறந்துருக்கோம். இது மாதிரி செத்துப்போன சவங்கள முதுவான் குடியிருப்பிலிருந்து இந்தத் தாலுகா ஆசுபத்திரிக்கு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு வரணும்னு எங்க விதி. நாங்க இந்தப் பிரேத பரிசோதனை செய்ற டாக்டருங்களுக்கும் அப்புறம் இந்தப் பிரேதங்களைக் கொண்டு வந்து ஸ்ட்ரெச்சர்ல போட்டு திரும்பக் கொண்டு போற அந்த ஆளுங்களுக்கும் லஞ்சம் கொடுக்க பணம் பொரட்டணும். அப்புறம் இந்தப் பாடிங்களக் கொண்டுபோயி அடக்கம் செய்யோணும். ஆனா, நாங்க இப்போ முன்ன மாதிரி கிடயாது. எங்களுக்கும் எல்லாம் தெரியும். அதனால, நீங்க சாமர்த்தியமா எங்களை ஏமாத்த முடியாது. இந்தப் பையனுக்காக நாங்க செலவழிக்கர ஒவ்வொரு காசும் எங்களுக்கு வந்தாகணும். இந்த ஆதிவாசிப் பையனைப் புதைக்கறதுக்கு ஆகுற செலவெல்லாம் கிடக்கறதுக்குள்ள ரூலஸ் உங்க கையில உண்டுனு எங்களுக்குத் தெரியும்” என்று கொந்தளித்துக் கொண்டு இருந்தவர்க்கு, அவர் நினைத்திருந்தது போன்று ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் அல்லர், நாங்கள் ராஜீவ் படித்து வந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் என்று தெரிந்ததும் அதிர்ந்து விட்டார். அவர் மனம் சங்கடப்பட்டு விட்டது. அந்த நிமிடத்திலிருந்து எங்களிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார். செங்குத்தான மலை மேலிருந்த ராஜீவின் வீட்டிற்கு வழி காட்ட எங்களுடன் வரவும் செய்தார்.
வழியில் வரும்போது தன்னுடைய முட்டாள் தனமானப் பேச்சிற்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே வந்தார். ராஜீவின் வீட்டை அடைய இருபது நிமிடங்கள் ஆனது.
இந்த மயிலாடிக் குடியிருப்பு நான் இதுவரை பார்த்த ஆதிவாசிக் குடியிருப்புகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தது. ராஜீவின் வீட்டிற்கு அருகில் எந்த வீடுமே தென்படவில்லை. அருகில் என்பது தோராயமாக இருநூறு மீட்டர் தள்ளித்தான் இருந்தது. ராஜீவின் உடல் தூக்குப் படுக்கையிலேயேதான் இருந்தது. மலை அடிவாரத்திலிருந்து இந்த உடலை மலை மேல் கொண்டு வருவதற்கு அந்த ஊழியர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று மலைத்தோம்.
ராஜீவின் முகம் பார்த்ததும் எனக்கு அவன் எட்டாம் வகுப்பு இ பிரிவில் கடைசி விசுப்பலகையில் உட்கார்ந்திருந்த நினைவு வந்தது. நான் அவனுக்குப் பாடம் நடத்தவில்லை என்றாலும், சீருடை, பேருந்தில் செல்வதற்கானக் கட்டணங்களைப் பெறுவதற்காகச் சென்றிருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவுள்ளது. அவன் நல்ல ஆரோக்கியமான பையனாக இருந்தான்.
ஆனால், அவன் அம்மாவும், அவனுடைய இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் மிகவும் நலிந்திருந்தார்கள். அவர்களுடைய பெரிய கண்களில் வருத்தத்தை விட பயமே மிகுதியாக இருந்தது.
இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மொத்தமே பதினைந்து பேர்தான் கூடியிருந்தனர். யாரோ ஒருவர் வந்து சுதாகரனிடம் சவக் குழி தோண்டியாகி விட்டதாகக் கூறினார். சுதாகரன் ராஜீவின் அம்மாவிடம் வேறு ஏதாவது சடங்குகள் செய்வதற்கு உள்ளதா என்று கேட்டதற்கு எதுவும் இல்லை என்று கூறி விட்டாள். அவர் ராஜீவின் அம்மாவை சிறிது தண்ணீராவது அவன் வாயில் ஊற்றும்படி சொன்னதற்கு, அதுவும் தேவை இல்லை என்று சொன்னாள்.
பின்னர் சுதாகரனும் அவருடைய நண்பர்களும் உடலை சவக்குழிக்கு எடுத்துச் சென்றனர். எங்களது கண்கள் கண்ணீரால் நிரம்பியது. ஆனால், ராஜீவின் அம்மாவின் கண்களில் ஒரு துளிக் கண்ணீர் கூட வர வில்லை என்பது எனக்குச் சற்று விசித்திரமாக இருந்தது. அப்பெண்மணி உள்ளே சென்று ராஜீவின் சீருடைகள், பள்ளிப் பை முதலியவற்றைக் கொண்டுவந்து,
“இதெல்லாம் சவக்குழியில விட்டெறிஞ்சுருங்க. எங்களுக்கு அவனுக்குச் சொந்தமானது எதுவும் வேண்டாம்.” என்றாள்.
“ஏன் ராஜீவ் தற்கொலை செஞ்சுகிட்டான்?” என்று அவன் அம்மாவிடம் கேட்டேன். நாங்களும், அவன் அம்மாவும், மற்ற குழந்தைகளும் மட்டுமே அங்கு இருந்தோம்.
“எனக்கு எப்படித் தெரியும். அவன் ரொம்ப அடம் பிடிக்கறவன். என்னய என்ன செய்யச் சொல்லுறீங்க?” என்பது அவன் அம்மாவின் பதிலாக இருந்தது. “நேத்தைக்கு நான் வெடிக்காலம் எந்திரிச்சு பார்த்தப்போ அவென் இந்த முந்திரி மரத்துல தொங்கிக்கிட்டிருந்தான்.”
“ராஜீவ் தங்கியிருந்தப் பள்ளிக்கூட ஹாஸ்டல் ஓணம் விடுமுறைனால மூடியிருந்திச்சு. ஓணம் விடுமுறை முடிஞ்சதும் அவன் பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தான்னா இந்த மாதிரி அவனுக்கு நடந்திருக்காது.” என்பது எங்களுடன் வந்திருந்த சசி என்பவரின் கருத்து. இவர் பள்ளி விடுதியின் உணவகத்தில் வேலை செய்பவர்.
சுதாகரனும் அவரது நண்பர்களும் ஈமச் சடங்குகளை முடித்துவிட்டு திரும்பி வந்தனர். நான் ராஜீவின் அம்மாவிடம் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுக்க எண்ணிய போது சுதாகரன் என்னைத் தடுத்தார்.
“நீங்க அவன் அம்மா கையில கொடுத்தீங்கன்னா கள்ளுக் கடைக்குப் போயி குடிப்பா. இல்லைன்னா அதை வேற வழில செலவாக்கிட்டு, இல்லன்னா தொலைச்சுட்டு நம்மகிட்ட வந்துட்டு கெட்ட வார்த்தைல கத்துவா. நீங்க அவங்ககளுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சா என்னோட வாங்க. மலை அடிவாரத்துல ஒரு கடை இருக்குது. அங்க போயி அரிசி, பருப்பு, சர்க்கரை மாதிரி ஏதாச்சும் வாங்கிக் கொடுங்க.”
நாங்கள் ராஜீவின் அம்மாவிடம் அவன் சகோதரர்களை எங்களுடன் அனுப்பச் சொன்னோம். அவர்களும் எங்களுடன் வந்தார்கள். போகும் வழியில், ராஜீவ் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்று சுதாகரனிடம் கேட்டேன்.
“எங்களாலால இனிமேலாம் அமைதியா, பேசாம இருக்க முடியாது. பொறுமை போயிடுச்சி. எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குல. உண்மையைச் சொல்லணும்னா, பிரேத பரிசோதனைக்கு கவர்ன்மண்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் சுடுகாட்டுக்கும் எடுத்துட்டு போற இந்த சவம் பத்தாவது சவம் தெரியுமா. உங்களுக்கெல்லாம் எங்க தெரியபோகுது?.. இது தற்கொலைன்னு எல்லாரும் நினச்சு பேசிக்கராங்க. ஆனா இது தற்கொலைலாம் இல்ல. இது இரத்தத்தை உறைய வைக்கற பயங்கரமான ஒரு கொலை. அதில எந்த சந்தேகமும் கிடயாது.
பொணம் தொங்கிட்டுருந்துச்சுனு சொல்ற அந்த மரம் அந்த முந்திரி மரத்தைப் பாத்தீங்களா? அந்த மரம் இந்தப் பையனோட உடம்பத் தாங்குமாயா? சொல்லுங்க. அதுவுமில்லாம, கொஞ்சமும் சக்தியே இல்லாத இந்த அம்மாவும், அந்தப் பிள்ளைங்களும் அந்தக் கயித்தை அறுத்து உடம்பக் கீழ கொண்டுட்டு வந்தாங்களாம். இத நம்பணுமாம். நல்ல கதை. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமாயா?. நாங்க அவன ஆசுபத்திரிக்கு எடுத்துட்டு போனப்போ அவனோட பிறப்பு உறுப்பும், விரையும் சிதஞ்சு, அறுபட்டு இருந்ததப் பாத்தோம். ஒரு பையன் அவன் தற்கொலை செஞ்சுக்கணும்னு நினைசப்புறம், செய்றதுக்கு முன்னாடி தன்னோட பிறப்பு உறுப்புகளை அறுத்து சிதக்க அவனுக்கென்ன பைத்தியமா புடிச்சுருக்கு? இந்த மலைக்குப் பெரிய்ய்ய ஆளுங்கல்லாம் வெல உசந்த, சொகுசான காருங்கள்ள அடிக்கடி வந்து போறாங்க. அதுவும் ராத்திரிலதான். முன்னாடில்லாம் வேட்டையாடறதுக்கு பெரிய வீட்டு மனுஷங்களும், ராஜாக்களும் அந்த குடும்பத்தைச் சேந்தவங்களும் வந்துட்டு போவாங்க. இப்ப பணக்காரங்க, பெரிய மனுஷங்க எல்லாம் வரத்தொடங்கிருக்காங்க. அவங்க துப்பாக்கில்லாம் கொண்டு வரது கிடயாது. சாராயமும், போதை மருந்துமாத்தான் வந்து இறங்கறாங்க. இங்க இருக்கற ஆதிவாசிப் பொண்ணுங்களையும், சின்னப் பொண்ணுங்களையும் சொல்றதுக்கே வெக்கமாவும், கோபமாவும் வருது. கற்பழிச்சு அழிக்கிறாங்க. எல்லாரையும் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போனா கூட தப்பிலனு தோணுது. எத்தனை அழுகிப் போன பொணங்களை இங்க கண்டெடுத்து, பிரேத பரிசோதனைக்காக கவர்ண்மென்டு ஆசுபத்திரிக்கும் அப்புறம் அடக்கம் செய்றதுக்கும் கொண்டு போயிருக்கோம் தெரியுமா? எல்லாமே ரொம்ப மோசமான மொறையில கற்பழிக்கப்பட்ட உடம்புங்க. ராஜீவோட அம்மா இதுக்கெல்லாம் கோபப்பட்டு, கேள்வி எதுவும் கேக்க மாட்டா. அவளுக்கு இதெல்லாம் பழகிப் போச்சு. போலீசு வந்து விசாரிச்சாலும் யாரும் உண்மையைச் சொல்லிட மாட்டாங்க. ஒண்ணு இவங்க அவங்களுக்குப் பயப்படறாங்க இல்லன்னா அவங்க இவங்களுக்கு சாராயம், போதை மருந்து எல்லாம் கொடுத்து வாயை அடச்சுடறாங்க.”
“நீங்க ராஜீவோட அம்மாவைப் பாத்தீங்கல்ல? அவன் அம்மாவுக்கு நல்லாத் தெரியும் தன் மகனுக்கு என்ன நடந்துச்சுனு. ஆனா, அவன் அம்மா , மத்த பிள்ளைங்களுக்கு நடந்தாலும் கூட எதையும் சொல்ல மாட்டா. இப்படித்தான் கஷ்டப்படணும், விதினு நம்புறா. அவன் அம்மா உயிரோடு இருக்கறதுக்கு காரணமே இந்த அடிமை புத்திதான்.
ஒருநா காலைல ராஜீவோட அப்பா நாடி, ஒரு ஓடைக்குப் பக்கத்துல பொணமாக் கெடந்தாரு. அவரு செத்தப்புறம் இந்தக் வெறியனுங்களுக்கு சுதந்திரம் கூடிப்போச்சு. நாடிதான் இவனுங்களைலாம் எதிர்த்துப் போராடினாரு . போன வாரம், ராஜீவ், இந்த வெறியனுங்களை அவன் அம்மாகிட்ட தப்பா நடந்துக்க வந்தப்ப கத்தியால மிரட்டி விரட்டினான்னு சொல்லிக் கேட்டோம். அதனால அவனுங்கதான் இவனைக் கொன்னு போட்டுருக்கணும்னு நினைக்கறோம். இதெல்லாம் எங்களால இனியும் பொறுத்துகிட முடியாது. இதெ அரசியல் கட்சித் தலைவர்கள் கிட்டயும், மேலிடத்திலயும் கம்ப்ளைன்ட் லெட்டரு கொடுக்கணும். இப்படியே இதெ போக விட்டம்னா இந்த வெறியனுங்க நாங்க குடியிருக்கற இடத்துக்கும் வந்துடுவானுங்க. பொறகு இந்த ஆதிவாசிப் பொண்ணுங்களுக்கு வந்த கெதிதான் எங்க வீடுகள்ல இருக்கற பொண்ணுங்களுக்கும் நடக்கும். நாங்க ஏற்கனவே பல கட்சிகள்ல இருக்கற இளைஞர் அமைப்புகிட்ட பேசி, வங்காளிகளுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும், சிரியா நாட்டு மக்களுக்கும், எகிப்தியர்களுக்கும் நடக்கற கொடுமைங்களுக்கு எதிரா போராடறதுக்கு பதிலா, நம்ம இடத்துல எங்களுக்கு நடக்கற இந்த கொடுமைங்களுக்கு எதிரா போராடணும்னு கெஞ்சிக் கேட்டுருக்கோம். என்ன நடக்குதுனு பாப்போம். இல்லனா நாங்களே போராட்டத்துல இறங்க வேண்டியதுதான்”
சுதாகரனின் இந்த வார்த்தைகள் எங்கள் மனதிலும் போராடும் உணர்வைத் தூண்டியது. நாங்கள் சுதாகரனை மிகவும் பாராட்டிவிட்டு அவர் நடத்தும் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்தினோம். அந்த மலையில் இன்னும் சிறிது நேரம் இருந்து ரசிக்க முடியாததற்கு வருந்தி, ஏக்கத்துடன், மனம் இல்லாமல் வீட்டிற்குப் புறப்பட்டோம். புறப்படும் முன் ராஜீவின் குடும்பத்திற்கு அரிசி, சர்க்கரை மற்றும் மளிகைப் பொருட்கள் கொடுத்தோம். எங்கள் மனம் இன்னும் அந்த மலையையேச் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. அந்த மயிலாடி மலைக்கு, நல்ல உள்ளமும், அநீதியை எதிர்த்துப் போராடும் துணிவுள்ள மனிதர்கள் ஏராளமாகத் தேவைப்படுகின்றனர். அப்பொழுதுதான் நாம், அந்த முதுவான் குடியிருப்பு ஆதிவாசி மக்களை அந்த மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடியிலுள்ள காமவெறியர்களிடமிருந்துக் காப்பாற்றப் போராட முடிவெடுத்திருக்கும் சுதாகரனுக்கு வேண்டிய தார்மீக ஆதரவும் , முடிந்த உதவிகளும் கொடுக்க முடியும். சுதாகரனைப் போன்ற நபர்கள் நம் சமுதாயத்திற்கு மிக அவசியம்.
இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் நாடிக்கு நடந்தது போன்ற ஒரு கொடூரமான முடிவு சுதாகரனுக்கு ஏற்படக் கூடாது என்று இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டுகிறோம்.
வாழத் தெரியாத ராஜீவ்

மிஸ்டர் பிள்ளை, ஐ ஆம் ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யு

ஐம்பது வயசு. இந்த வயசுல உங்களுக்காக இந்த அழுகின முட்டைகளையும், அழுகின தக்காளிகளையும் அவங்க என் மேல எறிஞ்சதை பொறுத்துகிடணுமா? மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்குதுங்க. இது கேரளா, தமிழ்நாடு இல்லைனு உங்களுக்கு எத்தனைத் தடவை நான் சொல்லியிருக்கேன். இங்குள்ள மக்கள், பாலியல் பலாத்காரம், ஊழல் மாதிரி பிரச்சினைகள்லதான் அதிகமா ஆர்வம் காட்டுவாங்க. நான் சரியான சமயத்தில உங்களுக்கு அட்வைஸ் பண்ணினேன். ஆனா, நீங்க அதை கொஞ்சம் கூட காது கொடுத்துக் கேக்கல. உங்களை அவங்க எதுவுமே செய்யலல., நான் தானே எறி பட்டேன்? என்னோட கன்னத்திலும், நெத்தியிலயும்தானே அழுகிப்போன முட்டைகளையும், தக்காளிகளையும் எறிஞ்சாங்க. எறியும்போது என்ன சொல்லி எறிஞ்சாங்க தெரியுமா?”
“என்ன தைரியம் இருந்திருந்தா இந்த மாதிரி தரக்குறைவான ஒரு நாடகத்தை எங்க திரைப்பட விழாவுக்குக் கொண்டு வந்திருப்ப.? நீ என்ன பெரிய்ய்ய ஆளுனு நினப்பா? இங்க இருக்கறவங்களப் பத்தி தெரியுமா உனக்கு? இவங்கள பத்தி என்ன நினச்சுருக்க நீ? இவங்கலாம் படத்த ஆர்வமா, ரசிச்சுப் பார்க்கறவங்க மட்டும் இல்ல. நல்ல டைரக்டர்ஸும் கூட. இந்த மாதிரி ஒரு இடத்துக்கு இந்த மாதிரி ஒரு பீரியட் நாடகத்தக் கொண்டுவந்துருக்க,? அதிலயும் நடிப்பே தெரியாதவங்க, நடிப்புக்கும் அவனுங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவனுங்க எல்லாம் நடிக்க வெச்சுக் கொண்டுவந்துருக்க. அதுக்கு உனக்கு கொடுக்க கூடிய மரியாத இதுதான். இந்தா வாங்கிக்க”
யோசிக்காமல், என் மனைவியையும், குழந்தைகளையும், பக்கத்து வீட்டுக்காரர்களையும் இந்த விழாவிற்குக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டேன். கொஞ்ச நேரத்திலேயே பார்வையாளர்கள் எல்லோரும் அமைதி இழந்து கத்த ஆரம்பித்துவிட்டார்கள். ‘இந்தப் படத்த நிறுத்தி. வேற படத்த போடுயா’ என்று கத்தினார்கள். அதனால் என்னால் உள்ளே உட்காரக் கூட முடியவில்லை. நான் எழுந்து எனக்கு ஏதொ அவசர ஃபோன் கால் வந்தது போல பாவ்லா செய்து வெளியில் வந்தேன். எனது மனைவியும், குழந்தகளும் பார்வையாளர்களின் கத்தலில் வெறுப்பாகி அவர்களையே கவனித்துக் கொண்டு இருந்ததால் அவர்கள் என் முகத்தில் உள்ள அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் கவனிக்கவில்லை. எப்படியோ, போலீசாரும், சேவகர்களூம் வந்து என்னைக் காப்பாற்றி கழிவறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என் முகத்தை கழுவிக் கொண்டேன். திரும்பவும் படம் திரையிடும் ஹாலை நோக்கி நடக்க முயன்றேன். உடன், போலீசும், சேவகர்களும் என்னை எச்சரித்தனர்.
“சார், நீங்க அங்க போறது அவ்வளவு நல்லதில்ல. திரும்பவும் அவங்க உங்கள ரொம்ப மோசமா தாக்கினாலும் தாக்கலாம். ஆச்சரியப்படறதுக்கு இல்ல. அதனால, நீங்க இப்ப என்ன பண்றீங்க, நாங்க டாக்சி ஏற்பாடு பண்ணித் தரோம். அதுல ஏறி, ரெயில்வேஸ்டேஷன் போயி வெயிட் பண்ணுங்க. உங்க ஃபாமிலி அங்க வந்து சேர ஏற்பாடு பண்ணறோம். நீங்க இப்ப கிளம்புங்க. சொன்னா கேளுங்க. உங்க நன்மைக்குதான் சொல்றோம்”
அப்போது அவர்கள் சொல்வதைக் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இவர்கள் சொல்வது போல, மீண்டும் என்னை அங்கு அந்தக் கூட்டம் பார்த்தால் திரும்பவும் தாக்கக் கூடும். எனவே, இந்தத் தருணத்தை சமயோசிதமாக உபயோகித்துக் கொண்டேன். என் குடும்பமும் சற்று நேரத்தில் ரெயில்வேஸ்டேஷன் வந்து சேர்ந்து என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னை சந்தேகக் கண்களோடு பார்ப்பது தெரிந்தது.
“என்னாச்சு உங்களுக்கு? ஏன் இங்க வந்து நிக்கறீங்க, விழால கலந்துக்காம? எங்களயும் இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்க! ஏதாவது பிரச்சினையா? உங்க முகத்துல ஏதோ வெள்ளையா முட்டை மாதிரியும், சிவப்பா ஏதோ தக்காளி மாதிரியும் பார்த்தோம்! ஏதோ நடந்துருக்குது? என்னங்க அது?’”
இப்படி நிறைய கேள்விக் கணைகள் என் குடும்பத்தாரிடமிருந்து வந்தன. ஆனால் நான் அதை சாமர்த்தியமாக சமாளித்தேன். இல்லை என்னவோ சொல்லி சாமர்த்தியமாக சமாளித்ததாக நினைத்துக் கொண்டேன்.
“ஓ! அதுவா! ஏதொ டெலிவிஷன் சானலில் இருந்து இந்த பட விழா பற்றி என்னைப் பேட்டி எடுக்கப் போறதாகச் சொன்னாங்க. அதுக்கு என் முகம் கொஞ்சம் பிரகாசமா இருக்கணும்ல அதுக்காக ஃபேஸ்மாஸ்க் மஸாஜ் பண்ணிக்கிட்டேன். அவ்வளவுதான்”
“ஓ! அப்படியா! உங்க டயலாக்க நம்பித்தானே ஆகணும்! நாங்க பயந்தே போயிட்டோம் யாராவது பொறாமை பிடிச்சவங்க அழுகின முட்ட, தக்காளிய உங்க மேல எறிஞ்சிருப்பாங்களோனு நினச்சோம்” என்று என் மனைவி என்னை நமுட்டு சிரிப்புடன் நக்கலடித்தாள்.
“பார்வையாளர்கள் இந்தப் படத்தைத் தப்பா எடுத்துக்கிட்டாங்க. அதாவது, இந்தப் படம் கேரளால இருக்கற இந்துக்களுடைய நம்பிக்கைக்கு எதிரா எடுத்திருக்கறதாக நினைச்சுட்டாங்க. கேரளால இருக்கற எல்லா இந்துக்களும் விஷ்ணுவ வணங்குறவங்க. 18ஆம் நூற்றாண்டில திருவிதாங்கூரை ஆண்ட மார்த்தாண்ட வர்மா வைணவத்தை தான் ஏற்றதோடு தன் மக்களையும் வைணவர்களாக மாற்றி விட்டாராம். ஓம்ங்கறதையே மாற்றி ஹரி நாமத்தை ஏத்துகிட்டாங்க. அதனாலதான், அவங்க ஓம் ஸ்ரீ கணபதயே நமனு சொல்றதுக்கு பதிலா ஹரி ஸ்ரீ கணபதயே நமனு சொல்றாங்க. இங்க, கேரளாவுல சிவ வழிபாடு செய்யற சைவ சமயப் பிரிவு இல்லை. அதனால, அவங்களால, விஷ்ணு பக்தர்களுக்கும், சிவ பக்தர்களுக்கும் நடுல ஏற்படுற சச்சரவுகளை ஏத்துக்க முடில. அதுதான் காரணம்” என்ற வகையில் சொல்லி ஓரளவு அவர்களை நம்பச் செய்தேன்.
எப்படி இருப்பினும், நாடகத்தில் காண்பிக்கப்பட்ட சச்சரவுக் காட்சிகள், பார்வையாளர்களின் மத்தியில் எந்தக் குழப்பத்தையும் ஏற்படுத்தவில்ல என்றும், அந்த நாடகம்தான் குழப்பமே என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஏனென்றால் அவர்களால் அந்த நாடகத்தை முழுமையாகச், சரியான கோணத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான் அங்கு நடந்ததை வைத்து நான் புரிந்து கொண்டது. ஒருவேளை அது மலையாளத்தில் எழுதப்பட்டிருந்தால், அவர்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்திருப்பார்கள். ஆனால் அது ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. அதுவும் இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலம். தற்போதைய ஆங்கிலத்தில் உலா வரும் நவீனச் சொற்களாகிய, “shit, wanna, gonna, hell, yaar, aint, and o.k.”. போன்றவை இல்லை.
“மிஸ்டர் பிள்ளை, உங்களை எத்தன தடவக் கெஞ்சியிருப்பேன்? சொல்லுங்க. ஒரு நல்ல தமிழ் தெரிந்த பத்திரிகையாளராப் பார்த்து அவரை உங்க தமிழ் வசனத்த இங்க்லிஷ்ல எழுதித் தரச் சொல்லுங்கனு சொன்னேனா இல்லையா? நீங்க அந்த மாதிரி செஞ்திருந்தீங்கன்னா, அவரு வெற்றிகரமா, இதுக்குத் தேவையான, காரசாரமா, வசீகரமா, இந்தக் காலத்துக்குப் பொருந்தரா மாதிரியான வசனம் எழுதிக் கொடுத்துருப்பாருல்ல? என்னுடைய எச்சரிக்கய கேக்காம என்னைய எழுதித் தரச் சொல்லி என் மேல பெரிய பாரத்த இறக்கி வைச்சீங்க. எனக்கு இதுக்கு பின்னாடி இருக்கற காரணம் தெரியும். நீங்க உங்க கைல இருந்த நாப்பதாயிரம் ரூபாய்க்குள்ள இந்த குறும்படத்த எடுத்து முடிச்சிடணும்னு முயற்சி செஞ்சீங்க. அதனால, எனக்கு இங்கிலீஷ் நல்லா வருதுனு சொல்லி என்னை இதுல இழுத்து விட்டீங்க. ஆமா! எனக்கு இங்கிலீஷ் தெரியும்தான். பேசத் தெரியும், எழுதத் தெரியும் தான். ஆனா இங்கிலீஷ் வொக்காபுலரியும், நல்ல ஸென்டென்ஸ் எழுதற திறமையும் கொஞ்சம் கம்மிதான். நான் படிச்சது கவர்ன்மென்ட் எய்டட் ஸ்கூல்ல. ஹைஸ்கூல் க்ளாஸஸ்ல, ஸ்யின்ஸும், ஸோஸியல் ஸ்யின்ஸும் கத்துக் கொடுத்த டீச்சர்ஸ்தான் இங்கிலீஷும் கத்துக் கொடுத்தாங்க. இப்ப உள்ள பிள்ளைங்கல்லாம் அதிர்ஷ்டசாலிங்க. அவங்க இப்ப டெலிவிஷன்ல பார்க்கற மாதிரியான கார்டூன் நெட்வொர்க்கோ, இங்கிலீஷ் படங்களோ என் சின்ன வயசுல டெலிவிஷன்ல பார்த்ததே கிடயாது. அதனால, உங்களுடைய ரொம்ப நீளமான தமிழ் வசனங்கள இந்தக் காலத்துக்கு ஏத்தா மாதிரி எழுத முடியாம எனக்குத் தெரிஞ்ச இங்கிலீஷ்ல எழுதினேன். ஆனா, எழுதறப்பதான் இந்த நாடகத்த புரிஞ்சுக்கற வாய்ப்பு எனக்குக் கிடச்சுது. உங்க நாடகம் ரொம்ப அருமையா இருக்குது. ஆனா, இதை ரொம்ப ஆழமா படிச்சாத்தான் இதோட அருமைய புரிஞ்சுக்க முடியும். அதுவுமில்லாம, இத ஆழமா புரிஞ்சுக்கணும்னா, இதப் பார்க்கறவங்களுக்கு, ஓரளவுக்காவது கேரள சமூகத்தைப் பத்தின அறிவும், கேரள சரித்திரமும், த்வைத தத்துவத்திற்கும், அத்வைத தத்துவத்திற்கும் உள்ள வித்தியாசமும் தெரிஞ்சிருக்கணும். ஆனா, இந்த நவீன, அதிவேகமா இருக்கற உலகத்துல யாருக்குமே தெரியாத ஒரு மாபெரும் அரசரைப் பத்தி தெரிஞ்சுக்கவோ, புரிஞ்சுக்கவோ, அவங்களுக்கு நேரமும் கிடயாது. எந்த முயற்சியும் எடுக்கவும் மாட்டாங்க. மிஸ்டர் பிள்ளை, உங்கள இங்க யாருக்கும் தெரியாது. இங்க பெரிய எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர், உன்னியார்ச்சா அப்படின்ற வரலாற்று கதைல நடந்த சில சம்பவங்கள ட்விஸ்ட் செஞ்சதுல அவருக்கு வெற்றியும் கிடச்சுது. ஆனா நீங்க மஹாபலி, ஹிரண்யகசிபு கதையை ட்விஸ்ட் செஞ்சதா நினைக்கறது ட்விஸ்ட் கிடயாது. அதெல்லாம் உண்மையா நடந்த சம்பவங்கள்தான். அத தெரிஞ்சவங்க இப்ப யாருமே உயிரோட இல்ல உங்களத் தவிர. அத இப்ப என் உள்ளே புகுத்திட்டீங்க. என்னோட மன நிம்மதியே போச்சு.
இங்க கேரளாவுல மஹாபலி யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? அவர இங்க விஷ்ணு பக்தனாக, விஷ்ணுவின் நெற்றியிலுள்ள நாமத்தை இவருக்கும் போட்டு, பெரிய வயிரோட, ஓணம் ஸீஸன்ல ரோட்ல, பனை ஓலை குடையோடு நடக்கவிட்டு, வியாபர நோக்கத்தோட ஏதாவது ஒரு பிரபலமான காமெடி நடிகர், இன்னொஸென்ட்னு பேரு,, கேள்விப்பட்டிருப்பீங்கல்ல, அவரோட குரல்ல பேசவிட்டு கேரள மக்களை சந்தோஷப்படுத்தற ஒருவரா மாத்தியிருக்காங்க. இவர வாமனன் ஏமாத்தி கீழுலகத்துக்கு அனுப்பினத பத்தி இந்த மக்களுக்கு யாருக்குமே எந்த வருத்தமும் கிடயாது. அவங்கள பொருத்தவரைக்கும், மஹாபலி அன்பும், கருணையும் உள்ள ஒரு நல்ல அரசர் கிடயாது. ஒரு அசுரன். அப்படித்தான் நம்பறாங்க. விஷ்ணு அவர தண்டிச்சதுனால விஷ்ணுவால ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு அசுரனாக நம்பறாங்க.
விஷ்ணு, மஹாபலிக்கு செஞ்ச கொடுமைக்காக, உங்க சீர்காழி சட்டநாத ஸ்வாமி விஷ்ணுவை பழி வாங்கியதெல்லாம் இந்த மக்கள் கேள்விப்பட்டது கூட கிடயாது. உங்க சட்டநாதன் விஷ்ணுவைக் கொன்றதுக்கு அப்புறம் அவருடைய தோலை எடுத்து தன் மேல போட்டுக்கிட்டதுனாலதான் அவருக்கு சட்டநாதன்ன்ற பேரும் வந்துச்சுன்னு சொல்றதெல்லாம் இங்க யாருக்குமே தெரியாது. ஏன் உங்க தமிழ் நாட்டுல உள்ளவங்களுக்குத் தெரியுமா?. இரண்டு புராணங்களுமே தவறானபடி ஜோடிக்கப்பட்டிருந்தாலும் கேரள மக்களுக்குத் தெரிஞ்சது முதல் கதை தான். அதனால, கோதாவரி நிலத்துலருந்து வந்த ஒரு பிராமணத் துறவியான வாமனன் தான் மஹாபலியிடம் மூன்று வரங்களை வாங்கிக்கிட்டு அவர காட்டுக்கு அனுப்பினாருங்கறதை இவங்க ஏத்துக்க மாட்டாங்க. அதே மாதிரி, ஹிரண்யகசிபு அவரு மகன் ப்ரஹலாதன் கேட்டாங்கறதுக்காக தெரியாம ஒரு சிங்கத்தோட கூண்ட நொறுக்கப் போன சமயத்துல அந்தச் சிங்கம்தான் அவர கொன்னுச்சுங்கறதையும் ஏத்துக்க மாட்டாங்க. வைஷ்ணவ குருமார்களோட பலியாடா இருந்த ப்ரகலாதனுக்கு இந்தச் சதி தெரியல. இந்த சம்பவங்கள்லாம் உண்மையா இருந்தாலும் கேரள மக்கள் நம்பமாட்டாங்க. கேரளாவுல மிகப் பெரிய கவிஞரான உள்ளூர் பரமேஸ்வர ஐயர் கூட இதைப் பத்திக் கவிதையா எழுதி தோல்வியடைஞ்சாரு. இந்த மாதிரி விஷயங்கள சொல்லி மக்கள திசை திருப்ப முடியாது. அதனால, மிஸ்டர் சிதம்பர நாதன் பிள்ளை, நீங்க இந்த மாதிரி மத சம்பந்தமான திருத்தங்கள செய்யறத நிறுத்திக்குங்க. இந்த மாதிரி விஷயங்களுக்கு இப்ப இந்த விஞ்ஞான உலகத்துல யாரும் மூளைய கசக்க விரும்பறது இல்ல.”
மறு நாள், நான் செய்தித் தாளைப் புரட்டும் போது, அந்த முட்டை ஏறியப்பட்ட சம்பவம் பற்றிய செய்தி வராதது கண்டு மிக ஆசுவாசமாக இருந்தது. ஆனால், தேசாபிமானி என்ற செய்தித் தாளில், சிந்து ஜார்ஜ் என்ற பெண் பத்திரிகையாளரின் விமர்சனம் பார்த்து மிகவும் ஏமாற்றம் அடைந்தேன். மூன்றே மூன்று ஆங்கிலப் படங்கள் தான் பட விழாவில் போட்டியிட்டன. அதில் ஒன்று எங்கள் படம். அந்தப் பத்திரிகையாளர், ஹிந்தி, அராபிக் படங்களைப் பற்றி எல்லாம் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ‘டிஸ்கைஸ்’ என்ற ஒரு ஆங்கிலப் படத்தைப் பற்றி மட்டும்தான் குறிப்பிட்டிருந்தார். எங்கள் மஹாமுடி ஆங்கிலப் படவரிசையில் கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை.
“மிஸ்டர் பிள்ளை, பாருங்க எவ்வளவு பரிதாப கரமான நிலை நம்முடைய படத்துக்குனு. அது மட்டுமா? அவங்க சலிக்க வைக்கும் வசனங்களும், மிகவும் மோசமா படம் பிடிக்கப்பட்ட சில படங்களும் போட்டியிட வந்ததில் வருத்தம்னு தெரிவிச்சுருந்தாங்க. இந்த சிந்து ஜார்ஜ் யாருனு தெரியுமா? பிரபலமான ஒரு விமர்சகர். புரட்சிகரமா கவிதை எழுதக்கூடிய கவிஞர் ஜார்ஜினுடய மகள். அப்படிப்பட்ட ஒரு விமர்சகருக்கு, ஒண்ணு இந்தப் படம் புரிஞ்சுக்கமுடியாத ஒண்ணா இருந்திருக்கலாம் இல்லனா இதப் பத்தி நல்லதாச் சொல்ல அவர் விரும்பல. ஒருவேள அவங்க செலக்டிவாக சில படங்களை மட்டும் பாத்து விமர்சனம் எழுதி இருக்கலாம். அதனால இதுலருந்து என்ன தெரியுதுனா, இத மாதிரி செலவுமிக்க ரிஸ்க் எடுக்க கூடாதுனு தெள்ளத் தெளிவா தெரியுது. நான் இனிமே இந்த மாதிரியான தப்பெல்லாம் செய்யக் கூடாதுனு தீர்மானிச்சுட்டேன். அதனால என்ன விட்டுருங்க. நீங்க இந்த அனுபவத்துக்கு அப்புறமாவும், இதே மாதிரி ரிஸ்க் திரும்பவும் எடுக்கணும்னு நினச்சீங்கன்னா, ராஜேஷ் பண்டிட்ட போய் பாருங்க. அவர பத்திதான் இப்ப இண்டஸ்ட்ரில அதிகமா பேசிக்கறாங்க. தன்னோட முதல் படத்துலயே ஒரு புரட்சிய ஏற்படுத்தினவரு. அதனால அவர் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு. (ஸாரி, ரெண்டாவது படம் எடுத்ததும், அது ஓடாம போனதும் ஆளையே காணோமாம். அதும் நல்லதுதான். இப்ப ஆளு ஃப்ரீதான்.). என்னைய தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ். என்னைய தனியா விட்ருங்க. மிஸ்டர் சீர்காழி சிதம்பரநாதன் பிள்ளை, ஐ ஆம் ஸாரி, ஐ கான்ட் ஹெல்ப் யு.”
அந்த ஒரு சில நிமிடங்களில் என் மனம் எப்படித் தாவி தாவி அலை பாய்ந்தது? என்னென்ன எதிர்மறையான எண்ணங்கள் மனதில் தோன்றின என்று இப்போது நினைக்கும் போது சிரிப்புதான் வருகின்றது. இதைத்தான் “மனம் ஒரு குரங்கு” என்று சொல்லுகிறார்களோ? எப்பொழுதோ ஏதொ ஒரு புத்தகத்தில் பொன்மொழியாகப் படித்த ஞாபகம்.
----------------------------------------------------------------------------------------------------
நான் வேலைக்குச் செல்கின்ற வழியில் உள்ள நடை பாதைப் பிள்ளையாருக்கு எல்லா நாளும் ஒரு வணக்கம் போடாமல் செல்வது கிடையாது. நடைபாதைப் பிள்ளையார் என்றதும், மிகவும் சாதாரணமாக நினைத்து விட வேண்டாம். மிகப் பெரிய பணக்காரர். சிறிய கோவில் தான் ஆனால் கும்பாபிஷேகம் நடைபெறும் அளவு வளர்ந்து விட்டார்.
மனம் குரங்காய் மாறிய அந்த நிமிடங்கள்
இது இருபதாவது நடை. நான் வீட்டின் உள்ளும் வெளியுமாக நடந்து கொண்டிருக்கின்றேன். கண்கள் வெளியே வாசற்கதவைத் தாண்டி தெரு முனையையே பார்த்துக் கொண்டிருக்கின்றது. எல்லாம் என் குழந்தையைக் காணாமல்தான். குழந்தை என்றதும், ஏதோ எல்.கே.ஜி படிக்கும் குழந்தை என்று நினைத்து விடாதீர்கள். எட்டாம் வகுப்பு படிக்கும் பதின்மூன்று வயது பையன். அதனால் என்ன? எத்தனை வயதானாலும் அம்மாவிற்கு குழந்தை, குழந்தை தானே! ஆனால், சைக்கிளில் சென்றுள்ளதால் இந்தக் கவலை. 4.15 மணிக்கு பள்ளி முடியும் நேரம். சரியாக 4.45 மணிக்கு அம்மா என்று அழைத்துக் கொண்டே வந்து நிற்பான்.
ஆனால் இன்று மணி 5.30 ஆகியும் வரவில்லை. நாங்கள் இருப்பது சென்னையின் போக்குவரத்து நெரிசல் அதிகமான பகுதியில். அவனது பள்ளியும் அதுபோன்ற பகுதியாதலால் நெரிசலான இடம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இரண்டு வாரம் முன்புதான் அவன் தெருவை சைக்கிளில் தாண்டும் போது, வேகமாக வந்து தெருவில் திரும்பிய ஒரு கார் இவனைத் தள்ளி விட்டுச் சென்று விட்டது. நல்லவேளை இறைவன் அருளால் சிறிய காயங்களுடன் தப்பித்தான். அந்த நினைவினாலோ என்னவோ இன்று மனம் நிலை கொள்ளாமல் தவிக்கின்றது. ஒருவேளை நண்பர்களுடன் விளயாடிவிட்டு வருவானோ? இல்லை ஏதாவது எக்ஸ்ட்ரா வகுப்புகள் இருக்குமோ? இல்லையென்றால் விளையாட்டுப் பயிற்சி வகுப்பாக இருக்குமோ? ஆனால் எதுவாக இருந்தாலும் முன்பே சொல்லிவிடுவானே, தான் தாமதமாக வர நேரிடலாம் என்று. மனம் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு இருக்கின்றது. ஒரு வேளை அன்று போல் சைக்கிளில் வரும்போது ஆக்சிடென்ட் ஆகி இருக்குமோ? ஹாஸ்பிட்டலில்?....இல்லை அடிபட்டு ரோட்டில் யாருடைய உதவியும் இல்லாமல் கிடக்கிறானோ? இது சென்னையில் பரவலாக நடப்பதுதானே……… ஐயோ கடவுளே! அப்படி இருக்கக் கூடாது.
ஒரு பக்கம் உதடுகள் கடவுளைப் பிரார்த்திக்க, மறு பக்கம் மனம் தவிக்க, தெருவைப் பார்த்தபடியே “ அதோ ஸ்கூல் யூனிஃபார்ம்…….சைக்கிள்…..குழந்தையேதான்……தவிப்பு அடங்கும் நேரம்……….அந்த சைக்கிள் அருகில் வர வர…..ஓ….என் பையன் இல்லை……..மனதில் ஏமாற்றம்………மறுபடியும் தவிப்பு………
ட்ரிங்க்…….ட்ரிங்க்…..இது………என்ன………..இந்த நேரத்தில் டெலிஃபோன் அடிக்கிறது? நம் வீட்டில்தானோ? ஒருவேளை ஸ்கூல் டீச்சர்?
ஹலோ……..இந்த நம்பர்……...தானே……..நான் ஸ்கூலில் இருந்து உங்கள் மகனின் டீச்சர் பேசறேன்….உங்கள் பையன் அடிபட்டு ஹாஸ்பிட்டலில்……………
ஐயோ!.......என் குழந்தைக்கு என்னாயிற்று? ஹாஸ்பிடலுக்கு ஓடுகிறேன். ஹாஸ்பிட்டல் வாசனை…………..நர்சுகள் அங்குமிங்கும் வேக வேகமாக நடக்கின்றார்கள்..... என் பையனுக்கு என்னாயிற்று? யாரும் ஒழுங்காகப் பதில் சொல்லத் தயங்குகிறார்களே. இது என்னக் கொடுமை?.....இறைவா என் செல்லக் குட்டிக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது…….யாரிடம் கேட்பது அவனுக்கு என்னாயிற்று என்று…….இறைவா…………………………
அம்மா…….அம்மா……….... ..இதுஇது…….என் செல்லக் குட்டியின் குரல் போன்று உள்ளதே! ஹாஸ்பிட்டலா இல்லை வீடா ஐயோ! எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறதே………………..
ட்ரிங்க்……ட்ரிங்க்……ஓ! இன்னும் டெலிஃபோன் அடிக்கின்றதே…………………எடுக்கின்றேன்…
ஹலோ!..............ஹலோ! நல்லசிவம் வீடுங்களா?.......................இல்லீங்க இது ராங்க் நம்பருங்க. பெருமூச்சுவிட்டபடி ஃபோனை வைத்துவிட்டுத் திரும்பும் சமயம்.
“அம்மா. ஸாரிம்மா நான் காலைல சொல்ல மறந்துட்டேன்…இன்னிக்கு லேட்டாகும்னு. இன்னிக்கு கேம்ஸ்ல, ரிலே டீமுக்கு செலெக்ஷன் மா……..அதான் லேட்டு”. என் மகனைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“என்னம்மா, என்ன இப்படிப் பார்க்கற…….நான் என்ன சின்னக் குழந்தையா? கேர்ப்ஃபுல்லாதான் வருவேன்மா. பயப்படாதம்மா” என்ற பதிலில் எனக்கு மன உறுதி வந்தாலும், அந்த சில நிமிடங்களில்……………….தமிழ் படங்களில் வருவது போல வேக வேகமாக காட்சிகள் மனத்திரையில் விரிந்ததே…………….ஓ! இத்தனையும் நான் டெலிஃபோன் ரிசீவரை எடுக்கும் முன்………………என்னென்ன விபரீதமான எண்ணங்கள் மனதைக் குரங்காக மாற்றி மரத்துக்கு மரம் தாவ வைத்தது. எல்லாம் என் செல்லக் குட்டியின் ‘அம்மா’ என்ற வார்த்தையைக் கேட்டதும் சூரியனைக் கண்ட பனி மூட்டம் போல் மறைந்தே போனது.

----------------------------------------------------------------------------------------------------
வெற்றிப் பிள்ளையார்

அதன் பிறகு அவரது மவுசும் கூடிப்போனது. காரில் வந்து இறங்கும் பக்தகோடிகள் காரை நிறுத்தக் கூட இடம் இல்லாத அளவு பிள்ளையார் ப்ரகாசிக்கத் தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டம் அலை மோதத் தொடங்கியது. தேங்காய் உடைப்பு, சந்தனக் காப்பு, அபிஷேகம், பிள்ளையார் சதுர்த்திக்கு ஒருவாரத் திருவிழா, தேர்வு சமயங்களில் கேட்கவே வேண்டாம், கூடும் மாணவ, மாணவிகள், பெற்றோர் கூட்டம் என்று ஜெகத்ஜோதியாகவும், ஜெகத்ரக்ஷகனாகவும் பிரபலாமாகி விட்டார். வெற்றி வினாயகர் என்ற பெயர் கூட அவருக்குச் சூட்டியாகி விட்டது.
ஒரு சில மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சிக் கழகத்திலிருந்து மேலதிகாரிகள் வந்து, இங்கு தேங்காய் உடைப்பதும், பக்தர்கள் கூடுவதும் நடைபாதையில் நடப்பவர்களுக்கு நடக்க முடியாமல் போக்குவரத்து நெரிசலுக்கும் காரணமாக உள்ளதால், அந்தப் பிரதான சாலையை அகலப் படுத்தப் போவதாகக் கோவிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டி நடவடிக்கை எடுத்தபோது மக்கள் திரளாகக் கூடி எதிர்த்து ஆர்பாட்டம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, ஒரு சில மதவாத அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கூட்டி எப்படியோ பிள்ளயாரை அங்கிருந்து அப்புறப்படுத்தாதபடி பார்த்துக் கொண்டனர். அவருக்குண்டான ஆதரவைப் பார்க்கவேண்டுமே நீங்கள். ஒரு அரசியல்வாதிக்குக் கூட இந்த அளவுக்கு ஆதரவுக் கூட்டம் இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. பல சாதிக்காரர்கள் ஒற்றுமையாக அங்கு கூடி போரடியபோது எனக்கு மிகவும் சந்தொஷமாக இருந்தது. நானும் வேண்டிக் கொண்டேன். ‘தமிழ் பண்பாட்டிற்கு ஒவ்வாத இந்த சாதி அரசியலை தமிழகத்திலிருந்து வேரோடு அழித்தால், 101 தேங்காய் உடைக்கிறேன் என்று’.
“என்ன சிரிப்பு? நடக்காத விஷயத்துக்கு 101 தேங்காய்னா? நீங்க நினைக்கற மாதிரி இவரு சாதாரண பிள்ளையார் இல்லீங்க. வெற்றிப் பிள்ளையார்! என்னைய 101 தேங்காய் உடைக்க வைப்பாரு. அவர மட்டுமில்ல என் தமிழகத்தயும் நான் நம்பறேன். ஏன்னு கேட்டிங்கனா இது சாதி, மதம் பாக்காம வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.
அதனால தானே இங்க புரட்சித் தலைவர் முதல்வராக அவரு இறுதிக் காலம் வரை இருந்தாரு. அதனால தமிழ் இதயங்களுக்கு சாதி அரசியல் தற்சமயம் வந்த ஒரு மோசமான நோய். வெற்றிப் பிள்ளையார் அந்த நோய உறுதியா குணப்படுத்துவாரு.
ஒருவேளை, கொஞ்சம் வருடங்களுக்கு முன்னாடியே இவரு இந்த மாதிரி சாதாரண பிள்ளையாரா இல்லாம வெற்றிப் பிள்ளையாரா இருந்திருந்தார்னா, அன்னைக்கே நம்ம தலைவர் ரஜனிய அரசியலுக்கு கொண்டு வந்து இந்த சாதி அரசியல தடுத்திருந்திருப்பாரோ? ம்ம்ம்ம் இனி அது நடக்காது. தமிழ் இதயங்கள்ள அந்த அளவுக்கு கவரக் கூடிய ஒருத்தரு வரணும். பிள்ளையார் யாரையாவது கண்டுபிடிச்சு அனுப்புவாருனு நம்பணும். அவருக்கும் 101 தேங்காய் கமிஷன் கிடைக்கும்ல.”
அங்கு வந்த இரு அதிகாரிகளின் மகள்களுக்கும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததற்குக் காரணம் அவர்கள் இந்தக் கோவிலை அப்புறப்படுத்த வேண்டி வந்ததால்தான் என்றும், அந்த சாமிக் குற்றத்தை உணர்ந்த அவர்கள் இப்போது இந்தப் பிள்ளையாரின் பக்தகோடிகளில், ஸாரி, பக்த பதினாயிரங்களில் எல்லாவற்றிற்கும் முன் பந்தியில் நிற்கும் இருவர்களாக மாறியதாக அங்கு பூ விற்கும் பெண்களும், பிச்சைக்கார்களும் கூடப் பேசிக் கொண்டார்கள். இதை எல்லாம் பிள்ளையார், வெற்றிப் பிள்ளையார் என்ற பெயருக்கேற்றபடி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
எது எப்படியோ, எனக்கும் இந்தப் பிள்ளையாருக்கும் உள்ள உறவு இன்று நேற்றல்ல. பல வருடங்களாக. அவர் அந்த நடைபாதையில் உள்ள மரத்தடியில் சிறிய கல்லின் மீது எளிமையாக, சாதாரணமாக யாரோ கட்டிவிட்ட ஒரு அழுக்குத் துணியில் வீற்றிருந்த காலம் தொட்டுப் பழக்கம். எனக்கு அவர் என்றுமே அதே பிள்ளையார்தான். என் ரகசியங்களைக் கூட அவரிடம் தினமும் பகிர்ந்து கொள்வேன். இவ்வளவு ஏன், அவர் மணமாகாதவராக இருந்தாலும், எத்தனை வருடங்களாகியும் இதுவரை மாறாமல் என் மனதில் இருக்கும் என் காதலைப் பற்றிக் கூட அவரிடம் பேசிப் பகிர்ந்து கொள்வதுண்டு. அத்தனைக்கு என் உற்ற நண்பர் அவர். அவரைச் சுற்றி பக்தர்களும், பிச்சைக்காரர்களும் அதிகமாயினர்.
நான் இதுவரை இந்த பிச்சைக் காரர்களுக்கு ஒரு ரூபாய் கூடப் போட்டதில்லை. அதனால், எனக்குக் கருணையே கிடையாது என்று நினைத்து வட வேண்டாம். பத்திரமறிந்துப் பிச்சையிடு. காசிட்டு இவர்களை உழைத்து சம்பாதிக்க விடாமல் சோம்பேறிகளாக்கி விடுகிறோம் என்ற எண்ணம்தான் காரணம். இவர்கள் யாரும் வேலை செய்து பிழைக்கக் கூட முடியாதபடி உடல் ஊனமுற்றவர்களோ, மனம் ஊனமுற்றவர்களோ கிடையாது..
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அன்றுதான் பிள்ளயாரைப் பார்க்கப் போனேன். இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள்.
கோவில் இன்னும் சிறிது விரிவாக்கப்படுவதால் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. தேங்காய் உடைப்பதற்கு என்று ஒரு பெரிய தொட்டி, திருவனந்தப்புரத்திலுள்ள பழவங்காடிப் பிள்ளையார் கோவிலில் உள்ளது போன்று, கட்டப்பட்டிருந்தது. பிச்சைகாரர்களில், பழையன கழிதலும், புதியன புகுதலும் போல ஒரு சிலர் காணாமல் போயிருந்தனர்.
ஒரு சிலர் புதியவர்களாக இருந்தனர். அதில் ஒருவர் மட்டும் இந்தத் தொழிலுக்கே புதியவர் போன்று இருந்தார். அவர் யாரிடமும் யாசிக்காமல் எதையோ பறிகொடுத்தது போன்று விட்டத்தையே வெறித்தபடி இருந்தார். பூக்காரியிடம் அருகம்புல் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றேன். அர்ச்சகர் என்னை இரண்டு மாதம் காணாததைப் பற்றி விசாரித்தார். நான் இரண்டு மாதங்களுக்கு முன் வேண்டிக் கொண்டதற்கான பணத்தை உண்டியலில் செலுத்திவிட்டு வாசலுக்கு வந்தேன். அப்போதும் யாசிக்கும் கூட்டத்தில் இருந்த அந்தப் புதியவர் ஏனோ என் மனதை நெருடினார். பூக்காரியின் அருகில் வந்து என் செருப்பை அணியும் போது என் நலம் பற்றி விசாரித்து விட்டு, என் கண்கள் அந்தப் புதியவரை நோக்கிப் போவதைப் பார்த்து அவளே அவரைப் பற்றிக் கூறத் தொடங்கினாள்.
“பக்கத்தில இரண்டு தெரு தள்ளித்தான் குடியிருந்தாரு. சொந்த வீடுதான். அவரு நல்ல பெரிய்ய படிப்பெல்லாம் படிச்சவரும்மா. பெரிய்ய வேலைல இருந்தாரு. அதான்மா இந்தக் காரெல்லாம் வீட்டுக்கு கூட வந்துக் கூட்டிட்டுப் போவுமே, அதென்னவோ பேரு வாயில நுழயல, அத்த வுடு, அந்தக் கம்பனி கவுந்துருச்சு. அதான் எல்லா பேப்பர்லயும் வந்துச்சே. இவரு செய்யாத தப்பு இவரு பெரிய்ய பொறுப்புல இருந்ததுனால இவரு மேல பழி வந்துருச்சு. இவரு நிறைய லட்சம் லட்சமா ரூபா கட்டும்படியா ஆயிடுச்சு. போலிசு கேசு ஆயிப்போச்சு. பொண்டாட்டிக்காரி அவங்க வீட்டுல நல்லப் பணம். நல்லப் பணக்காரி. அவ இவர அம்போனு வுட்டுட்டு, புள்ளங்கள இட்டுகிட்டு பொறந்தவூட்டுக்குப் போயிட்டா. என்னப் பொம்பள அவ. இப்படியா கட்டினவர நடுத்தெருல வுட்டுட்டுப் போவா? இவலாம் பொம்பள ப்பு. இவரு இங்க நாதியத்துக் கெடக்காரு. என்னத்த சொல்ல. கோயிலு ஐயருதான் இரக்கப்பட்டு அவருக்கு கோயில்ல செய்ற ப்ரசாதம் கொடுப்பாரு. அவரு செல சமயம் வாங்கிக்குவாரு. செல சமயம் இந்தா இப்ப உக்காந்துருக்காரு பாரு இப்படித்தான். அப்புறம் இங்க இருந்த சிலதுங்கள ஏதொ கூட்டர வேலை, தோட்ட வேலை வாங்கிக் கொடுத்து இட்டுட்டுப் போய்ட்டாங்க. இவருக்கும் அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்.” என்று இரண்டு மாதக் கதையை சொல்லி முடித்தாள்.
எனக்கு மனது வேதனையாக இருந்தது. உண்டியலில் போட்டப் பணத்தை இவருக்குக் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றியது. பிள்ளையாரும் சந்தோஷப்பட்டிருப்பார். கோவிலில் இடுவது நல்ல விஷயம்தான். ஆனால் அதைவிட உண்மையாக நலிந்த ஒருவருக்குக் கொடுத்து இருக்கலாம் என யோசித்துக் கொண்டே நடந்தேன். அப்போது அந்தப் பூக்காரி சொன்ன வார்த்தைகள் என் காதில் ஒலித்தது. “அந்தப் பிள்ளையார்தான் ஏதாவது வழி காட்டணும்”. அந்த மனிதருக்கு நிரந்தரமான வருமானம் கிடைப்பதற்கு அவருக்கு எனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக நல்ல ஒரு வேலை கிடைப்பதற்கு வழி செய்யலாமே என்றுத் தோன்றியது. பிள்ளையார் என் மனதில் வேறு ஒரு சிந்தனை தோன்றக் காரணமாகி விட்டார். திரும்பிப் பார்த்தேன் அவரை.
"இங்கு வருபவர்களின் குறைகளை தீர்த்து வைப்பதுதானே என் ஸ்டைல். அதனால் தானே வெற்றிப் பிள்ளையாராக நான் இங்கு வீற்றிருக்கிறேன். குறைகளுடனும், குறைகளைத் தீர்க்கும் திறமை உடையவர்களும் இங்கு வருகிறார்கள். என்னிடம் சொல்லிவிட்டாய் இல்லையா நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போய் ஆகவேண்டியதைப் பார்" என்று என்னைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது.
ஒரு நம்பிக்கைத் தோன்ற என் குற்ற உணர்வு மறைந்து, அவருக்கு உதவும் எண்ணத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும், யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்று யோசித்தேன், யாருக்காவது உதவும் எண்ணம் வந்து விட்டால் நமது மனதில் எப்படி ஒரு இனம் புரியாத மகிழ்வுணர்வு வருகிறது என்று நினைத்தபடியே பிள்ளையாரைத் திரும்பிப் பார்த்துவிட்டு என் அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன். அப்போதும் வெற்றிப் பிள்ளையார் அவர் பெயருக்கேற்றபடி ஒர் மர்மப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக