வியாழன், 19 அக்டோபர், 2017

சொல்லுதல் யார்க்கும் எளிய……

“அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு ஒரு பிராமணனாகப் பிறக்க வேண்டும்”, இப்படி ஒரு அதிரடி ஆசையை கடந்த மாதம் வெளியிட்டு எல்லோரையும் திடுக்கிட வைத்தவர் பரத் சுரேஷ் கோபி எம்.பி அவர்கள். சிறந்த நடிப்பால் பரத் விருதை பெற்றதுடன், பி ஜே பியில் சேர்ந்ததால் எம் பி யும் ஆனவர். “அதுக்கும் மேல” 
Image result for suresh gopi in I tamil movie

என அவர் நம்பும் பிராமண ஜென்மம் அவருக்குக் கிடைக்க நாமும் பிரார்த்திப்போம். பிராமணனாக ஜென்மம் எடுத்தால் எப்போதும் இறைவன் அருகே இருந்து இறை சேவை செய்யலாம் என்ற எண்ணம் தான் அவர் பிராமணராக அடுத்த ஜென்மத்தில் பிறக்க அவரைத் தூண்டி இருக்கிறது என்றால், (எல்லா பிராமணர்களுக்கும் இறை சேவை செய்யும் பாக்கியம் கிடைப்பதில்லையே!) அவர் கண்டிப்பாக பத்தனத்திட்டா ஜில்லா திருவல்லா அருகில் உள்ள மணப்புரம் மஹாதேவர் கோயிலுக்குப் போய் அந்தக் கோயிலில் பூணூலிட்டு பூஜை செய்யும் யது கிருஷ்ணனைக் காண வேண்டும். ஆனால் அதன் பிறகு அவர் உடனே அடுத்த ஜென்மத்தில் யதுக் கிருஷ்ணன் பிறந்த புலயர் குலத்தில் பிறந்து இது போல் பூணூல் அணிந்து இறை சேவை செய்ய வேண்டும் என்று மட்டும் ஆசைப்படவும் கூடாது சொல்லவும் கூடாது. இப்போது பூணூலிட்டு பூஜை செய்ய பிராமணராகப் பிறக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாகிவிட்டது.

தன்னுள் உறையும் இறைவனை உணர்ந்து அகந்தையும், சுயநலமும் இன்றி மனித குல நன்மைக்காக இறை சேவை செய்ய விரும்பும் எவரும் பூணூலிட்டு பிராமணராகலாம். அது பரம்பரை சொத்து போல் அடுத்த தலைமுறைக்கு தகுதி பாராமல் ஏற்பிக்கக் கூடிய ஒரு பதவி அல்ல என்று எல்லோரும் சொன்னாலும் இக்கருத்து இதுவரை எல்லோரும் உதட்டளவில் மட்டும் ஏற்றுக் கொள்ளூம் ஒரு கருத்தாகத்தான் இருந்து வருகிறதே ஒழிய மனதார ஏற்று அதைச் செயல் வடிவில் இதுவரை யாரும் செய்துகாட்டவே இல்லை. (ஸ்ரீஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் அப்படித் தன் சிஷ்யர்களுக்கு பூணூலிட்டுப் பிராமணர் ஆக்குகிறார். அவர் மட்டுமல்ல ஏராளமானோர் இப்படிச் செய்கிறார்கள்) ஆனால், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கேரள மாநிலம் அதைச் செய்து காட்டியிருக்கிறது. வைக்கம் செட்டிமங்கலம் கோபாலன், தங்கமணி தம்பதியரின் மகன் ஜீவன், எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரென்று முத்திரை குத்தப்பட்டவரை, பூஜை விதிகளை முறையாகக் கற்றுத் தேர்ந்த பின் நடத்தப்பட்டத் தேர்வில் அவர் முதன்மையாக வந்ததால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அவரை கீழூர்க்காவு தேவி கோயில் பூசாரியாக கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி நியமித்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அவரைப் போல் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று முத்திரை குத்தப்பட்ட பிரதீப்குமார், சுமேஷ், மனோஜ் மற்றும் யது கிருஷ்ணனையும் தேவசம் போர்டு கோயில்களில் நியமித்து கேரளம் வரலாறு படைத்திருக்கிறது. கூடவே, 30 பிற்பட்ட சாதியினர் என்று முத்திரை குத்தப்பட்டவர்களையும் திருவிதாங்கூர், கொச்சி, மலபார் தேவசம் போர்டு கோயில்களில் நியமித்துமிருக்கிறது. இது வரலாறில் ஒரு புரட்சியேதான்.

திருவிதாங்கூரில் 1936 நவம்பர் 12 ஆம் தேதிவரை பிற்பட்ட சாதியினரும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் கோயிலுக்கு உள்ளே மட்டுமல்ல, கோயிலுக்கு அருகே உள்ள வழிகளில் போலும் நடக்க அனுமதிக்கப்படாதிருந்த சூழல், மகாராஜா திரு சித்திரைத் திருநாள் அன்றைய தினம் அறிவித்த “ஷேத்ர ப்ரவேஸன விளம்பர”த்தால் மாறியது. அதற்குள் இறைவனிடமிருந்து முற்பட்ட சாதியினரால் அகற்றப்பட்ட பிற்பட்ட மற்றும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பிறமதங்கள் தேடிப் போயும்விட்டனர். எஞ்சியவர்களில் மிகக் குறைந்தவர்கள் மட்டும்தான் அதன் பின் முற்பட்டோரது ஆதிக்கத்திலிருந்த கோயில்களுக்குப் போய் வணங்கினர். பலரும் திருவிழாக்களுக்கு மட்டும் செல்லும் பழக்கமும் அதன் பின் ஏற்பட்டது, இதனிடையே கம்யூனிஸம்  “மதம் மனிதரை மயக்கும் கறுப்பு (போதைப் பொருள்)” என்றதால் இறையுணர்வு நாளடைவில் கேரளத்தில் உள்ள பெரும்பான்மையினரான பிற்பட்ட இந்துக்களது மனதில் வேரற்றுப் போனது. ஸ்ரீநாராயண குரு பிரதிஷ்டை செய்த சில கோயில்களும் அங்கு பூஜை செய்த பிரமணர் அல்லாத பூசாரிகளும் அதற்கு விதிவிலக்காய் நின்றார்கள் என்று சொல்லலாம்.
இதனிடையே 1967 திருவிதாங்கூர் தேவஸம் போர்டில் பிற்பட்ட சாதியினரை பூசாரிகளாக நியமிக்க தீர்மானமும் எடுக்கப்பட்டது. இதுவரை 95 பிற்பட்ட சாதி பூசாரிகளை பல தேவஸம் போர்டு கோயில்களில் நியமித்திருந்தாலும் பல கோயில்களில் இப்போதும் அவர்கள் பூசை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

மாவேலிக்கரை அருகே உள்ள செட்டி குளங்கரை தேவி கோயிலில் பூசாரியாக நியமிக்கப்பட்ட பிற்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவரை இப்போதும் கோயிலுக்குள் பூசை செய்ய அனுமதிக்கவில்லை. கோயிலுக்குள் நுழைந்தால் குடும்பத்தினரை எல்லாம் கொன்றே விடுவோம் என்று சில முற்பட்ட சாதியினர் மிரட்டுகிறார்களாம். பெரிய கோயில்களிலும், வருமானம் அதிகமான கோயில்களிலும்தான் இப்படிப்பட்ட பிரச்சனை எழுகிறது. வருமானம் இல்லாத காரணத்தால் திருவிதாங்கூர் தேவஸம் போர்டு ஏற்றெடுத்த சிறிய (வருமானதில் மட்டும்) கோயில்களில் பிரச்சனை இல்லை. மட்டுமல்ல கேரளத்தில் மஹாவிஷ்ணு, கிருஷ்ணர், ராமர் கோயில்களில் மட்டும்தான் பூணூலிட்ட பிராமணர்கள் பூசை செய்ய வேண்டும் என்ற கட்டாய நிலை. சிவ, பகவதி, கணபதி, சுப்ரமணிய (சுப்ரமணியரை மலையாளிகள் மறந்தே போய்விட்டார்கள்!) கோயில்களில் அப்படிப்பட்டவர்கள் பூசை செய்ய பிரச்சனை இல்லை. இக்கோயில்கள்தான் கேரளத்தில் 90 சதவீதமும். எனவே, பிற்பட்ட, தாழ்த்தப்பட்டக் குல பூசாரிகளுக்கு அங்கெல்லாம் பூசை செய்ய பிரச்சனை வராது.

எப்படியோ இது கேரளத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது. பெரும்பான்மையான கோயில்களில். பிராமணர் அல்லாதவர்கள் பூணூலிட்டு பூசை செய்யத் தொடங்கிவிட்டார்கள். இது தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நடைமுறைக்கு வர இறைவன் அருள் புரிந்து சம்பந்தப்பட்டவர்களின் மனதில் இவ்எண்ணத்தை உதிக்கச் செய்து செயல்முறைப்படுத்த பிரார்த்தனை செய்வோம். கர்நாடக முதல்வர் விரைவில் கர்நாடகத்தில் இதை நடைமுறைப்படுத்தப் போவதாகச் சொல்லியிருக்கிறார். கேரளத்தில் முற்பட்ட சாதியினர், பிற்பட்ட சாதியினரையும், தாழ்த்தப்பட்ட சாதியினரையும் ஒரு சேர கோயில்களில் இருந்து ஒதுக்கியிருந்தார்கள். ஆனால், தமிழகத்தில் பிற்பட்ட சாதியினரும், முற்பட்ட சாதியினரும் ஒரு சேர நிற்பதால், தாழ்த்தப்பட்ட சாதியினராய் முத்திரை குத்தப்பட்டவர்களுக்குக் கேரளத்தில் சம்பவித்தது போல் பூணூலிட்டுப் பூசாரியாக முடியுமா என்பது சந்தேகமே. இருந்தாலும் இறைவன் காலத்தைக் கனியச் செய்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.

---துளசிதரன்
86 கருத்துகள்:

 1. எதுவும் சரியாப் புரியல்ல ... கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் எனத்தான் படிச்சோம்..

  அதனால கோயிலுக்குள் போய் விக்கிரங்களுக்கு அருகில் நின்று சேவை செய்தால் மட்டுமே கடவுளை நெருங்கலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...

  அன்பு, கருணை... அடுத்தவர்கள் மேல் காட்டும் பாசம், நன்னடத்தை, அடுத்தவர் மனம் புண்படாமல் பேசுவது, மனச்சாட்சிக்குப் பயந்து வாழ்வது, முடிந்தவரை நல்ல விசயங்கள் செய்வது, பிறரைத் தூற்றாமை.... இப்படிச் செயல்கள் மூலம்தான் கடவுளை நெருங்க முடியும் அல்லது இப்படி இருப்போர் கடவுளாகத் தெரிவார்கள் என்பதே என் கருத்து.

  ஊசிக்குறிப்பு:- இதில் இன்னொன்று சொல்ல மறந்திட்டேன்... அப்பாவியாக இருப்பதும் இதில் அடங்கும்:)... ஹையோ ஏன் முறைக்கிறீங்க:)....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா உங்களது பின்னூட்டம் மிகவும் அருமை.
   நான் வியக்கேன்....

   நீக்கு
  2. ஹா ஹா ஹா கில்லர்ஜி யையே வியக்க வச்டிட்டுதே என் பின்னூட்டம்:).. போஸ்ட் பார்த்ததும் டக்குப் பக்கென மனதில் எழுவதை எழுதிடுவேன்... பின்பு ஹையோ ஏதும் தப்பா எடுத்திடுவினமோ எனும் பயத்தில் ஓடிப்போய் எங்காவது ஒளிச்சிருந்து வோச் பண்ணுவேன்:).... ஹா ஹா ஹா.

   நீக்கு
  3. அதிரா, தங்களின் கருத்து மிக மிக உயர்வான கருத்து. முழுவதும் ஏற்கிறேன்.

   ஒன்றே ஒன்று மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். இங்கு சொல்லப்பட்டது இறை சேவை எனப்படும் கோயிலில் பூசை செய்வதற்கு நிறுவப்படும் பூசாரிகள் குறித்ததே. இறைவனை உணர்தல் பற்றி அல்ல. எல்லா இறை சேவகர்களும் இறைவனை உணர்ந்து செய்கிறார்களா என்று சொல்வதற்கில்லை. நெல்லைத் தமிழன் அவர்கள் சொல்லியிருப்பது போல் இது வேலை வாய்ப்புக்கான இடமில்லை. ஆனால் யாதார்த்தம் அப்படியில்லை.

   பதிவிலும் சொல்லியிருக்கும் ஒரு வரி.//தன்னுள் உறையும் இறைவனை உணர்ந்து அகந்தையும், சுயநலமும் இன்றி மனித குல நன்மைக்காக இறை சேவை//

   அதே போன்று சக மனிதனின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு உணர்ந்து செய்வது எப்படி, விளம்பரத்திற்காக உதவுவது எப்படி. வித்தியாசம் உண்டுதானே. அதே போன்றுதான் இதுவும்.

   உங்கள் கருத்து மிக உயரிய கருத்து. மிக்க மிக்க நன்றி அதிரா.

   துளசிதரன்

   நீக்கு
  4. கடந்தும், உள்ளும், இருக்க கூடிய கடவுளை அவர் இருக்கும் இடத்திலிருந்து சேவை செய்வது சிறப்பு. நீங்கள் கூறிய குணங்கள் மனிதராக இருக்க; கடவுளிடம் அன்பு, சேவை என்பது தனிப்பட்ட அன்பு, காதல், எட்டவற்றையும் எட்ஜ்ஹிர்பாராத மனம்.

   நீக்கு
 2. இந்தக் கருத்தை டைஜஸ்ட் செய்துகொள்வது எளிதல்ல. அதன் காரணம் வழிவழியாக மனத்தில் ஆழமாகப் பதிந்துள்ள பிம்பங்கள். ஆனால் இடுகை பல உண்மைகளைப் பேசுகிறது. கோவில் சமூகத்தினுடையது. அதைப் பாதுகாத்து தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்வது சமூகத்தின் கடமைதான். பக்தியும், ஆழ்ந்த அறிவும், following rules of that placeம் கோவில் வேலைகளுக்கான pre requisites. அது வேலைவாய்ப்புக்கான இடமில்லை. அதனால் இவர்தான் அதனை பரம்மரையாகச் செய்யவேண்டும் என்று சொல்வதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன் அவர்களுக்கு. மிகவும் நல்ல புரிதல் உள்ள அர்த்தமுள்ள கருத்து.

   //அது வேலைவாய்ப்புக்கான இடமில்லை// மிக மிக நல்ல கருத்து. அபப்டிப்பட்டவர்கள் இறை சேவைக்கு வராமல் இருப்பது மிக மிக நல்லது. //அதனால் இவர்தான் அதனை பரம்மரையாகச் செய்யவேண்டும் என்று சொல்வதில் அர்த்தம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.// மிகவும் சரியே...

   மிக்க மிக்க நன்றி

   துளசிதரன்

   நீக்கு
 3. கோயில்கள் எல்லாம் வணிகத் தலங்களாக மாறிவிட்டன நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையார் நண்பரே தங்களின் கருத்திற்கு
   துளசிதரன்

   நீக்கு
 4. தமிழ்நாட்டின் பல அம்மன் கோயில்கள், ஐயனார் கோயில்கள், கருப்பண்ணசாமி கோயில்கள் போன்றவையும் இந்து அறநிலையத் துறைக்குக் கீழேயே வருகின்றன. அவற்றில் எல்லாம் பிற்படுத்தப்பட்ட மற்ற சாதியினர் தான் பூசாரிகள்! இது வெகு காலமாக இருந்து வருகிறது. அவர்களில் பலர் பரம்பரைப் பூசாரிக் குடும்பத்தினர். நீங்கள் சொல்வது போல் இங்கேயும் சிவன், விஷ்ணு, ராமர், கிருஷ்ணன் கோயில்களில் மட்டுமே சிவாசாரியார்களும், பட்டாசாரியார்களும்! இவர்களில் பலரும் பரம்பரையாக வருபவர்களே! ஒரு சில அம்மன் கோயில்களில் சிவாசாரியார்களோடு சேர்ந்து பூசாரிகளும் பணியாற்றுவார்கள். உதாரணமாக சமயபுரம் மாரியம்மன் கோயில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டில் 35000 கோயில்களில் ஒரு 1000த்திற்குட்பட்ட கோயில்களில்தான் இது போன்ற பிரச்சனைகள் நிலவுகிறது. இதவும் நாளடைவில் நல்லதொரு தீர்வு காணும் என்று நம்புவோம். சகோதரி கீதா தங்களின் விரிவான கருத்திற்கு மிக்க நன்றி நல்ல கருத்து...

   துளசிதரன்

   நீக்கு
 5. இங்கே காவிரிக்கரையில் உள்ள ஓர் பிள்ளையார் கோயிலில் அந்தணரல்லாதவர் தான் வழிபாடுகள் செய்து வருகிறார். அந்தக்கோயிலைச் சார்ந்த ஈசன் சந்நிதியில் பிரதோஷத்துக்கு மட்டும் அந்தணர் என்னும் சொல்லப்படும் சிவாசாரியார் ஒருவர் வருகிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி கீதா அவர்களுக்கு, எல்லாதரப்பு மக்களின் ஆதரவுடன் இப்படி நடக்கிறது என்பது மகிழ்ச்சியான் ஒன்று. இறைவன் பெயரால் நாம் வேறுபடக் கூடாது ஒன்றுபட வேண்டும்.
   மிக்க நன்றி மீண்டும்கருத்திட்டமைக்கு.

   துளசிதரன்

   நீக்கு
 6. >>> இருந்தாலும் இறைவன் காலத்தைக் கனியச் செய்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்...<<<

  நல்லதொரு பதிவு.. உண்மையான ஆன்மிகம் தழைத்தோங்கட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 7. இந்த நிகழ்வுகளுக்கு எல்லாம் வித்திட்டு சென்றது ஈரோட்டுக் கிழவன் என்பதையும் நாம் நினைவில் கொள்வதே தர்மம்

  1989-ல் தமிழ் நாட்டில் நான் கண்ட ஒரு ஐயப்பன் கோவில் அர்ச்சகரைப் பற்றிய பதிவு நேற்றுதான் எழுதி வைத்தேன். இந்திய வலையுலகில் முதன்முறையாக இன்னும் சில தினங்களில் வெளிவரும்.

  ஒரு மனிதன் எந்த ஜாதிக்காரனாகவோ, எந்த மதக்காரனாகவோ வாழ்ந்த காலத்தில் மனிதம் இல்லாத மிருகமாக வாழ்ந்து மரணித்தான் என்றால் இறைவனை நம்பி வணங்கும் மனிதர்கள் இதையும் இறைவன் ஏற்றுக்கொள்வான் என்று நம்புகின்றார்களா ?

  ///இது தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நடைமுறைக்கு வர இறைவன் அருள் புரிந்து சம்பந்தப்பட்டவர்களின் மனதில் இவ்எண்ணத்தை உதிக்கச் செய்து செயல் முறைப்படுத்த பிரார்த்தனை செய்வோம்.///

  இதை எப்படி இறைவன் செயல் என்று ஏற்றுக்கொள்ள இயலும் ? இது அறிவார்ந்த மனிதர்கள் எடுத்த முடிவு இதற்கும் இறைவனுக்கும் டீலிங் இருக்க சாத்தியமில்லை.
  (ஆகவே நான் பிரார்த்தனை செய்ய மாட்டேன்)

  இது இறைவனின் செயல் என்றால் இந்நொடியே உலகம் முழுவதையும் ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையை மக்களின் மனதில் உருவாக்க முடியாதா ?

  மலையாளிகள் மக்கள் நலனுக்கான செயலை ஜாதி மதம் மறந்து நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். தலைவன் தவறு செய்தால் தலைவனையே கொல்வார்கள்.

  தமிழர்கள் அப்படி இல்லை தலைவன் என்று ஏற்றுக்கொண்டால் தான் மரணிக்கும்வரை அந்த எண்ணத்தை கைவிடாமல் செத்து மடிவான் இது தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு.

  தலைவன் தவறு செய்தால் அவனை தன் மனதிலிருந்து தூக்கி வீசும் ஒரு தமிழனை காட்டி விடுங்கள் சவால் விடுகிறேன். நான் எனது மீசையை இன்னும் பெரிதாக வளர்த்துக் காட்டுகிறேன்.

  சுரேஷ் கோபியிடம் கில்லர்ஜி சொன்னதாக சொல்லி வையுங்கள்,‘’போடா புல்லே’’ என்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈரோட்டுக் கிழவனின் கனவு நனவாக வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் ஒரு சில கிராமப் பிரதேசங்களில் ந்லவும் இது போன்ற சாதிப் பிரச்சனைகள் ஒழிய வேண்டும்.. அதற்கெல்லாம் இனி நிறைய காலம் வேண்டும் அதைப் புரிந்து கொள்ளும் அறிவும் வளர வேண்டும். சில கருத்துகளை செல்லப்பா சார் மற்றும் கீதாக்கா, தமிழ் இளங்கோ நெல்லைத் தமிழன் எல்லோரும் அவர்களே சொல்லிவிட்டதால் இங்கு வேறு ரிப்பீட் செய்ய வேண்டாமே என்றுதான். இது கோயில்களில் பூசை செய்வது பற்றிய கேரளத்தில் நடந்த நடக்கும் செயல்கள் பற்றிய இடுகை அவ்வளவே. இதில் இறைவன் செயல் என்று சொலல்வில்லை என்று நினைக்கிறேன்.
   மிக்க நன்றி கில்லர்ஜி விரிவான கருத்திற்கு...

   துளசிதரன்

   நீக்கு
 8. நல்ல பதிவு. நடிகர் பரத் சுரேஷ் கோபி அவர்கள் நாளை கமலைப் போல நான் அப்படி நினைக்கவில்லை என்று சொன்னாலும் சொல்லலாம்.

  எனது பணிக்காலத்தில், நெருங்கிய நண்பர் ஒருவர் ‘தமிழ்நாட்டில் வந்து ஏண்டா பிராமணனாக பிறந்தோம் என்று இருக்கிறது. வடக்கே இது போல் இல்லை’ - என்று வருத்தப் பட்டுக் கொண்டார். அப்போது ’நான் பிராமண விரோதி இல்லையே’ - என்று சொன்னேன். அதற்கு அவர் ‘எல்லோரும் உங்களைப் போலவே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது’ என்றார்.. அவர் வருத்தப் பட்டுக் கொண்டதில் எனக்கும் மனதிற்கு கஷ்டமாகத்தான் இருந்தது. ஏனெனில், இங்கே, தமிழ்நாட்டில் சிலர் பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பிராமணர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடுபவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையில் பிராமணீயத்தை இங்கு கடை பிடிப்பவர்கள் பிராமணர் அல்லாதோரே. இதனை இவர்கள் கண்டிப்பதில்லை.. நிற்க. : உண்மையில் இங்கு பிராமணீயம் என்று சொல்வதை விட, ஜாதிவெறி என்று சொல்வதே மிகப் பொருந்தும். ஏனெனில் இது எல்லா ஜாதியிலும் இருக்கிறது


  // எப்படியோ இது கேரளத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது. பெரும்பான்மையான கோயில்களில். பிராமணர் அல்லாதவர்கள் பூணூலிட்டு பூசை செய்யத் தொடங்கிவிட்டார்கள். இது தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் நடைமுறைக்கு வர இறைவன் அருள் புரிந்து சம்பந்தப்பட்டவர்களின் மனதில் இவ்எண்ணத்தை உதிக்கச் செய்து செயல்முறைப்படுத்த பிரார்த்தனை செய்வோம். //

  என்ற அனைவரது பிரார்த்தனையும் பலிக்கட்டும்.

  எனினும், தமிழ்நாட்டில், அர்ச்சகர்கள் நியமன விஷயத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றால், குறிப்பிட்ட ஜாதியினர் (பிராமணர்கள்) மட்டும் இதனை எதிர்த்து ஏன் கோர்ட்டுக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை. ஏனெனில் இப்போது யாரும், வர்ணாசிரம தர்மப்படி, அவரவர் குலத் தொழிலை செய்வதில்லை. கட்டாயமும் இல்லை. ஒரு காலத்தில் நாவிதர்கள் ( மருத்துவ ஜாதி ) மட்டுமே பார்த்து வந்த மருத்துவத் தொழிலுக்கு, டாக்டர் படிப்பு என்ற பெயரில்+, இன்று எல்லோருமே போட்டி போடுகின்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதில் கருத்து வேறுபாடு இல்லை என்றால், குறிப்பிட்ட ஜாதியினர் (பிராமணர்கள்) மட்டும் இதனை எதிர்த்து ஏன் கோர்ட்டுக்கு செல்கிறார்கள் என்று புரியவில்லை.//பெரிய கோயில்களின் பரம்பரை அர்ச்சகர்கள், பட்டாசாரியார்கள், தில்லைச் சிதம்பரம் கோயில் தீக்ஷிதர்கள் போன்றோரே எதிர்க்கின்றனர். ஏனெனில் அது பரம்பரை பரம்பரையாக அவர்கள் குலத்துக்கு அளிக்கப்பட்ட சொத்து எனலாம். மதுரையில் பட்டர்கள் போல் ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பட்டாசாரியார்கள், சிதம்பரம் கோயிலில் தீக்ஷிதர்கள், மற்றக் கோயில்களில் சிவாசாரியார்கள் போன்றவர்கள் தொன்று தொட்டுச் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தக் கோயில்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை! ஆனால் இவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளமும் தொகுப்பூதியம் தான். விடுமுறைகள் இல்லை! ஓய்வூதியம் இல்லை. இப்படி எத்தனையோ சொல்லலாம். என்றாலும் கோயில் மேலும் இறைவன் மேலும் கொண்ட பற்றினால் மட்டுமே இவர்கள் தொண்டாக எண்ணிச் செய்து வருகின்றனர். இதற்குப் பல கோயில்களில் இருந்து எடுத்துக்காட்டுகள் உள்ளன.

   நீக்கு
  2. மேடம் அவர்களுக்கு நன்றி. மீண்டும் உங்களை இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்து சமய அறநிலைத்துறையின் ( Hindu Religious and Charitable Endowments Department ) கீழ் வரும் கோயில்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் பரம்பரை சொத்து உரிமை இல்லை.

   நீக்கு
  3. இங்கே, தமிழ்நாட்டில் சிலர் பிராமணீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பிராமணர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடுபவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையில் பிராமணீயத்தை இங்கு கடை பிடிப்பவர்கள் பிராமணர் அல்லாதோரே. இதனை இவர்கள் கண்டிப்பதில்லை.. நிற்க. : உண்மையில் இங்கு பிராமணீயம் என்று சொல்வதை விட, ஜாதிவெறி என்று சொல்வதே மிகப் பொருந்தும். ஏனெனில் இது எல்லா ஜாதியிலும் இருக்கிறது//

   மிகவும் சரியே! இங்கு கூட முற்பட்டவர்கள் என்று சொன்னதில் இதுதான் முக்கியமாகச் சொல்ல வந்தது. இத்துடன் சகோதரி கீதா சாம்பசிவம் சொன்ன கருத்தும் சரியாகவே படுகிறது. ஆழமான கருத்து. அதையும் சிந்திக்க வேண்டும்.

   இதில் நெல்லைத் தமிழன் அவர்கள் சொன்னது போல் // கோவில் சமூகத்தினுடையது. // என்பதும் சிந்திக்க வேண்டிய கருத்து.

   மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா தங்களின் விரிவான ஆழமான கருத்திற்கு..

   துளசிதரன்

   நீக்கு
 9. கேரளத்தில் கோவில்களில் சாமியைப் பார்க்க கட்டணம் ஏதுமில்லை அல்லவா?
  தமிழகத்தில் பகல் கொள்ளை கட்டணங்கள் உண்டு... இறைவனை மனதார வழிபட முடியாமல் எல்லாம் காசாகி வணிகத் தளமாகிவிட்டது... எங்கள் பிள்ளையார்பட்டியில் மட்டுமே எதற்கும் பணமில்லை...

  இங்கு எல்லாச் சாதியினரும் அர்ச்சகர் என்பது கேள்விக்குறியே... மேலும் சாதி அரசியல் என்று வரும்போது மேல் கீழ் எல்லாம் ஒருபோல்தான்... அடக்குமுறைகளெல்லாம் சாதீய அடிப்படையில் இங்கில்லை... எல்லாச் சாதியும் இங்கு ஆட்டம்தான் போடுகிறார்கள்... இதில் கூத்து என்னன்னா பாரதியும் எங்க சாதியின்னு போஸ்டர் ஒட்டுறதுதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குமார், தங்களின் முதல் கருத்தை ஏற்கிறேன். பெரிய கோயில்கள் வணிகமாகி வருவது வேதனைதான். கேரளத்திலும் பத்மநாபர் கோயிலிலும் இப்போது வசூலிப்பு வைத்திருக்கிறார்கள். ஆச்சரியமான விஷயமே. ஒரு சிலர் அதில் செல்கிறார்கள். எல்லோரும் அல்ல.

   மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 10. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிராம்மணர்கள் என்றுமே சமூக நலத்தையே கருதிவந்திருக்கிறார்கள். கோவில்களைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்துவிட்டவர்களும் அவர்களே. பிராம்மணர் அல்லாதாரின் நிர்வாகத்தில் நடைபெறும் கோவில்களிலும் பிராம்மண குருமார்கள் விஜயம் செய்ய மறுப்பதில்லை. எனவே, முறையாக ஆகமம் படித்துவரும் எந்தச் சாதி அர்ச்சகர்ஆனாலும் பிராம்மணர்களுக்கு ஆட்சேபணையில்லை.

  ஆனால், தாழ்த்தப்பட்டமக்களை (SC/ST) எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால், இன்று, பணத்தாலும் பதவியாலும் அரசியலாலும் 'புதிய பிராம்மணர்களாக' மாறியிருக்கும் பிற BC/ OBC யினர்தான். இவர்கள் தத்தம் சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களைத் தான் ஏற்கவிரும்புவார்களே யன்றி, வேறு சாதியினரை அல்ல.

  உதாரணமாக, பிள்ளைமார்கள், ஒரு நாடாரையோ அல்லது தேவரையோ தமது கோயில்களில் அர்ச்சனை செய்ய அனுமதிப்பார்களா என்று பார்க்கவேண்டும். அதே போல் கோவையில் நாயுடுக்கள் தம் ஆலயங்களில் ஒரு செட்டியாரையோ, பிள்ளைமாரையோ அர்ச்சகராக ஆக்குவார்களா என்றும் பார்க்கவேண்டும். முதல் கட்டமாக இது நடந்தால் மட்டுமே, SC/ST பிரிவினரைச் சேர்ந்த அர்ச்சகர்களுக்கு வாழ்வு கிடைக்கும்.


  மேலும், ஏற்கெனவே பலர் எடுத்துக்காட்டியதுபோல, கோவில்களில் அர்ச்சகர் வேலை என்பது பெரும்பாலும்
  பரம்பரையாக வருவது. அதை அரசியல் தீர்வின்மூலமே மாற்றிட முடியும். உதாரணமாக, சமயபுரம் அல்லது கோவை மாசாணியம்மன் கோவில்களில் உள்ள பிராம்மணரல்லாத அர்ச்சகர்களை நீக்கிவிட்டு, புதிதாக ஒரு பிராம்மணரை அங்கு அர்ச்சகராகப் போட அனுமதிப்பார்களா?

  எனவே, இது, பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சினையே அல்ல; கோவில்களின் மரபு வழிபாட்டில் சீர்திருத்தம் வேண்டுமா என்பது பற்றிய பிரச்சினையே.

  பெண்கள் மார்புச்சீலை அணிவதற்கே போராடவேண்டியிருந்தது கேரளத்தில். அத்தகைய பிற்பட்டநிலை தமிழ்நாட்டில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  -இராய செல்லப்பா சென்னையில் இருந்து

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக விரிவான ஆழமான அர்த்தத்துடன் கூடிய கருத்திற்கு மிக்க நன்றி ஸார்.
   தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பிராம்மணர்கள் என்றுமே சமூக நலத்தையே கருதிவந்திருக்கிறார்கள். கோவில்களைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திறந்துவிட்டவர்களும் அவர்களே. பிராம்மணர் அல்லாதாரின் நிர்வாகத்தில் நடைபெறும் கோவில்களிலும் பிராம்மண குருமார்கள் விஜயம் செய்ய மறுப்பதில்லை. எனவே, முறையாக ஆகமம் படித்துவரும் எந்தச் சாதி அர்ச்சகர்ஆனாலும் பிராம்மணர்களுக்கு ஆட்சேபணையில்லை.

   ஆனால், தாழ்த்தப்பட்டமக்களை (SC/ST) எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால், இன்று, பணத்தாலும் பதவியாலும் அரசியலாலும் 'புதிய பிராம்மணர்களாக' மாறியிருக்கும் பிற BC/ OBC யினர்தான். இவர்கள் தத்தம் சாதியைச் சேர்ந்த அர்ச்சகர்களைத் தான் ஏற்கவிரும்புவார்களே யன்றி, வேறு சாதியினரை அல்ல.//

   முற்றிலும் உண்மை. பெரியார் இறைவன் பெயரால் நடந்த அநீதியையும் தீண்டாமையையும் மேல்சாதி கீழ்சாதி சம்பிரதாயங்களையும் எதிர்த்தவர். அதனால் பிராமணர்களையும், ஏன் இதெற்கெல்லாம் துணைபுரியும் இறைவனையே தேவையில்லை என்றவர். அவர் சொன்னதில் பிராமண விரோதத்தை மட்டும் மனதில் வைத்த பிராமணர்களிடமிருந்து பிற்பட்ட சாதியினரைத் தொற்றிக் கொண்ட மேல்சாதி கீழ்சாதி சம்பிரதாயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்து செயல்படாமல் இருப்பதே பழத்தைத் தூரப்போட்டு பழத் தோலைச் சாப்பிடுவது போல்தான். இந் நிலையை மாற்றினால்தான் தந்தை பெரியார் கண்ட கனவை நனவாக்கி தமிழர் என்று சொல்பவர் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

   //பெண்கள் மார்புச்சீலை அணிவதற்கே போராடவேண்டியிருந்தது கேரளத்தில். அத்தகைய பிற்பட்டநிலை தமிழ்நாட்டில் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. //

   தமிழ்பிராமணர்கள் மலையாள நம்பூதிரிகளைப் போல் இது போன்ற பாவங்களைச் செய்யாததானால்தான் அவர்களது பின் தலைமுறை நல்வாழ்வு வாழ்கிறது. தன்வினை தன்னைச் சுடக் காரணமானவர்கள் கேரளத்திலிருந்து காணாமல் போனதும் அதனால்தான்.

   மிக்க நன்றி செல்லப்பா சார்

   துளசிதரன்

   நீக்கு
 11. பின்னூட்டங்களும் அர்த்தம் பொதிந்தவைகளாக இருக்கின்றன. எழுதியவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நெல்லைத் தமிழன்! நான் பின்னூட்டங்களை வாசித்து நினைத்து இதைச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன் அதையே நீங்களும் இங்கு சொல்லிவிட்டீர்கல். இனிதான் எல்லாவற்றிற்கும் பதில் கொடுக்க வேண்டும். எனக்கு மொபைலில் தளம் பார்ப்பது சிரமம். எனவே கீதா எனக்கு கருத்துகளை காப்பி பேஸ்ட் செய்து அனுப்பியுள்ளார். அனைத்துக் கருத்துகளும் ரொம்ப ஆழமாக அர்த்தமுள்ளதாக அழகாக வந்துள்ளன. கருத்துகள் வாசித்தாலும் பதில் இரவுதான் கொடுக்க முடியும். கொடுக்கிறேன். மிக்க நன்றி

   துளசிதரன்

   நீக்கு
  2. ஆஆஆஆஆவ்வ்வ் மக்கள்ஸ்ஸ்ஸ் நெல்லைத்தமிழன் என்னைத்தான் சொன்னார்ர்ர்ர்ர்ர்:)... ஹையோ வழி விடுங்கோ வழிவிடுங்கோ கட்டிலுக்குக் கீழ பதுங்கிடுறேன்:)

   நீக்கு
  3. அதிரா, நீங்கள் மிக உயர்வான கருத்தைத்தானே சொல்லியிருக்கிறீர்கள். ஏன் ஒளிய வேண்டும்!!! நெல்லைத் தமிழன் அவர்களும் உங்களுக்கும் சேர்த்துத்தானே கருத்துகள் அர்த்தம் பொதிந்தவை என்று வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்!

   துளசிதரன்

   நீக்கு
 12. சொல்ல நினைத்த விஷயங்களும் பின்னுட்டமாய் நண்பர்கள் சொல்லிவிட்டார்கள் இந்த ஒரு அந்த ஒரு உருவத்தில் மட்டுமே கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை நியமனம் என்பதை உண்மையாக எங்கு பாலோ செய்வதில்லை உலகெங்கும், பூணுல் என்பதை பற்றி நான் படித்திருக்கிறேன் அது தனிமனித ஒழுக்கத்திற்காண விஷயம் ஆனால் கடைபிடிக்க படுகிறதா ?முக்கியமாய் கோவில் கூட இல்லை கடவுளை வியாபார பொருளாய் ஆகிவிட்டார்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி பூவிழி அவர்களுக்கு மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு. ஆம் நண்பர்கள் அனைவரும், மற்றும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் பல விரிவான தகவல்களையும் கருத்துகளையும் தந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் அதே சமயம் அவர்களைப் பாராட்டவும் வேண்டும்.

   இறைவனை வைத்து வியாபாரம் நடக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மைதான். அதை நம்மால் தடுக்க இயலுமா என்றால் அதற்குப் பல மாற்றங்கள் வர வேண்டும். அரசிலிருந்தும், மக்களிடமிருந்தும். எனவே நாம் நம் மனதில் உண்மையான இறையுணர்வு கொண்டு நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வோம். மிக்க நன்றி சகோதரி.
   துளசிதரன்

   நீக்கு
 13. எனக்குப் புரியாத ஒன்று இந்த பிராம்மண வேஷம் பரமனுக்கும் பாமரனுக்கும் பாலமாய் இருப்பவனே பிராம்மணன் எனும் பார்ப்பனன் (பார்ப்பு = இரு பிறப்பு எடுப்பவர்கள் )பிறப்பால் பிராம்மணன் ஆவதில் மட்டும் பிராம்மணன் ஆக முடியாது சேவை மனப்பான்மையோடு கோவில் அர்ச்சகர்கள் இருக்கிறார்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சேவை மனப்பான்மையோடு இருக்கும் அர்ச்சகர்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள் ஜி எம் பி ஸார். இல்லை என்று சொல்வதற்கில்லை. சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கூட இதைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறார்.

   மிக்க நன்றி ஜி எம் பி ஸார் தங்களின் கருத்திற்கு

   துளசிதரன்

   நீக்கு
 14. பதிவும் மறுமொழிகளும் மிகவும் நன்று! ஒரு ஐயம்! இவ்வளவுக்குப் பின் பூணுல் எதற்கு!!!!?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கு.

   துளசிதரன்

   நீக்கு
 15. கேரளா எப்பவும் எல்லாவற்றிலும் முன்மாதிரியான மாநிலம் ..சுரேஷ் கோபி மட்டுமில்லை இது ஒதுக்கி வைக்கப்பட்ட பலரின் மன ஆதங்கம்தான் ..சிலர் வாழ்நாளெல்லாம் மன பாரத்துடன் இருக்காங்க சிலர் வெறுத்து பிற மதங்களை தழுவறாங்க இன்னும் சிலர் நாத்திகராகிடறாங்க . இந்த பிரிவுகள் சிலர் மதம் மாறியபிறகும் விடாமல் தொடர்வது வேதனை :(
  எங்கள் மதத்தில் அதாவது ஆங்கிலிகன் ஆலயங்களில் ஆயராக பணி புரிய தியாலஜி காலேஜ் சென்று படித்து சில வருடம் பயிற்சி எடுத்த பிறகே ஆயராகலாம் ,,அப்படி விதி முறைகள் அதாவது வேத பள்ளிக்கு படித்தவர்கள் மட்டும் அர்ச்சகர் ஆகலாம்னு சட்டம் விதிமுறை இருக்கா அங்கே ? அதே போல அவர்களுக்கு மாத ஊதியம் எல்லாம் உண்டா ? எனக்கு இதைப்பற்றி தெரியாது அதனால் தான கேட்கிறேன் . என்னை பொறுத்தவரை யாருக்கும் மனதாலும் தீங்கிழைக்காத முழு பக்தியுடன் அன்புடன் எதை செய்தாலும் இறைவனை பூஜிக்கலாம் .
  மிகவும் ஆழமாக அழகாக எழுதப்பட்டபதிவு . நல்லதே நடக்கட்டும் எல்லா இடத்திலும்ன்னு பிரார்த்திக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளா முன் மாதிரியான மாநிலம் என்பது ஒரு சில விஷயங்களுக்குத்தான் இங்கும் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இங்கு மக்கள் உடன் குரல் கொடுத்துவிடுவதால் மாற்றங்கள் சட்டென்று வந்துவிடுகின்றன.

   //இந்த பிரிவுகள் சிலர் மதம் மாறியபிறகும் விடாமல் தொடர்வது வேதனை :( // ஆம் இதுவும் ஏற்கப்படவேண்டிய ஒன்று. உண்மைதான்.

   //சிலர் வாழ்நாளெல்லாம் மன பாரத்துடன் இருக்காங்க சிலர் வெறுத்து பிற மதங்களை தழுவறாங்க இன்னும் சிலர் நாத்திகராகிடறாங்க// ஆம். சகோதரி ஏஞ்சல்.

   எங்கள் மதத்தில் அதாவது ஆங்கிலிகன் ஆலயங்களில் ஆயராக பணி புரிய தியாலஜி காலேஜ் சென்று படித்து சில வருடம் பயிற்சி எடுத்த பிறகே ஆயராகலாம் ,,அப்படி விதி முறைகள் அதாவது வேத பள்ளிக்கு படித்தவர்கள் மட்டும் அர்ச்சகர் ஆகலாம்னு சட்டம் விதிமுறை இருக்கா அங்கே ? //
   இதைப் பற்றி சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் சில நாட்கள் முன்பு தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் இட்ட பதிவில் கொடுத்திருக்கிறார். இதை நான் நேற்றுதான் அறிந்தேன். இங்கு நீண்டுவிடும் என்பதால் கொடுக்கவில்லை.

   அதே போல அவர்களுக்கு மாத ஊதியம் எல்லாம் உண்டா ?// தேவஸம் போர்ட்/ இந்து அறநிலையத்தின் கீழ் வரும் கோயில்களில் சேவை செய்பவர்களுக்கு மாத ஊதியம் உண்டு. இதைப் பற்றியும் சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் கீழே கொடுத்திருக்கிறார்கள்.

   நீங்கள் சொல்வது போல் நல்லதே நடக்கட்டும். மிக்க நன்றி சகோதரி ஏஞ்சல் தங்களின் கருத்திற்கு.

   துளதிசரன்

   நீக்கு
 16. கோயிலுக்கு யார் குருக்களாக வரலாம் என்பதற்கு சண்டை போடுவதைவிட்டுவிட்டு நாட்டின் பல நகரங்களில் குருக்கள் இன்றி கேட்பாரற்று பல கோயில்கள் பல உள்ளன. அங்கு சென்று சாமிகளுக்கு அட்லீஸ்ட் ஒரு வேளையாவது யாராவது பூஜை செய்யலாமே.இவர்கள் எல்லாம் உண்மையிலே சாமிக்கு பூஜை செய்வதற்காக அடித்து கொள்கிறார்களா அல்லது எந்த கோயிலில் அதிக வருமானம் வருகிறது அங்கு சென்று நல்லா சம்பாதிக்கலாம் என்று அடித்து கொள்கிறார்களா என்பது தெரியவில்லை


  துளசி சார் தீபாவளிக்கு வாய்க்கு பலகாரம் கொடுத்து அசைபோட வைப்பீங்க என்று பார்த்தால் இப்படி ஒரு பதிவை போட்டு எல்லோர் வாயையும் அசை போட வைத்திட்டீங்க பாராட்டுக்கள்...

  கீதா & துளசி சார் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத் தமிழன் உங்கள் கருத்தும் மிகவும் அருமையான கருத்து. இதுவும் சரிதானே என்று சிந்திக்கவும் வைக்கிறது. ஆனால் எல்லோரும் வருமானத்திற்காக செய்வதாகத் தெரியவில்லை. உண்மையுடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

   //துளசி சார் தீபாவளிக்கு வாய்க்கு பலகாரம் கொடுத்து அசைபோட வைப்பீங்க என்று பார்த்தால் இப்படி ஒரு பதிவை போட்டு எல்லோர் வாயையும் அசை போட வைத்திட்டீங்க பாராட்டுக்கள்...//

   நகைச்சுவைக்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் கருத்திற்கும் தீபாவளி வாழ்த்திற்கும்.

   துளசிதரன்

   நீக்கு
 17. நடிகர்களை நாம் நடிகர்களாகவே கொள்வோம். ஏனென்றால் அடுத்து அவர்கள் என்ன சொல்லப் போகின்றார்கள் என்று ஊகிக்க முடியாது.... ஏற்பவர் ஏற்கட்டும், ஏற்காதவர் ஒதுங்கட்டும். ஒவ்வொன்றிலும் அனாவசிய சர்ச்சையை உண்டாக்குகின்றார்கள் போலுள்ளது. சமயம், கடவுள் என்பனவெல்லாம் கூட இப்போது கேலிப்பொருளாக ஆகிவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   துளசிதரன்

   நீக்கு
 18. கீதாக்கா, நெல்லைத்தமிழன், தமிழ் இளங்கோ சார், செல்லப்பா ஸார் அதிரா.. இவர்கள் சொல்ல வேண்டியத்தைச் சொல்லி விட்டதால், எல்லோர் பின்னூட்டத்தையும் வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடாதீங்கோ விடாதீங்கோ ஸ்ரீராம் இப்பூடிச் சொல்லி எஸ்கேப்ப்ப்ப் ஆகிறார்ர்ர்ர்ர்:)..

   நீக்கு
  2. ஸ்ரீராம் மிக்க நன்றி. ஆம் எல்லோருமே சொல்லிவிட்டார்கள். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்கள் நிறைய தகவல்களையும், கருத்துகளையும் அழகாகச் சொல்லியிருக்கிறார். அவருக்குத்தான் இன்னும்நன்றி சொல்ல வேண்டும். ராயச் செல்லப்பா சாரும் இளங்கோ ஐயாவும் நெல்லைத் தமிழன் அவர்களும் மிக நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதிரா மிக உயர்வான கருத்தைச் சொல்லிவிட்டார்.

   மிக்க நன்றி

   துளசிதரன்.

   நீக்கு
  3. ஹாஹாஹாஹா அதிரா!! ஸ்ரீராம் பற்றித் தெரியும்....அவர் எஸ்கேப் ஆகலை...ஒரு டெக்னிக்...ஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  4. ஹையோ கீதா அது டெக்னிக் இல்ல.... தக்கினிக்கி:)... இப்பூடிச் சொன்னால்தான் ஸ்ரீராமுக்கும் புய்யுமாக்கும்:).

   நீக்கு
 19. எல்லோர் பதில்களும் அருமை..
  அதிராவின் பதில் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சகோதரி கோமதி அரசு! அதிராவின் பதில் தன்னலம் பாராத இறையுணர்வில் அடங்கிவிடுகிறது!! உயர்வான கருத்து.

   மிக்க நன்றி சகோதரி

   துளசிதரன்.

   நீக்கு
 20. அன்புமிகு துளசிதரன்.... அற்புதமான பதிவு! நான்கைந்து முறை படித்தாகிவிட்டது. இந்து மத வழிபாட்டு முறையில் சரித்திரம் போற்றும் மாற்றம். தெளிவான சிந்தனையுடன் கேரளா மட்டும் அல்லாது மற்ற மாநிலங்களிலும் இது எவ்வாறு பரவலாக்க முடியும் என்று அலசி இருப்பது பாராட்டுக்குரியது. கேரளாவில் மகான் ஸ்ரீ நாராயண குரு விதைத்துச் சென்ற சிந்தனை மரபும், தொடர்ச்சியான அதன் வளர்ச்சியும், இன்றளவும் அது நிலைத்திருப்பதும் இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அதற்கு ஈடான சமுதாய நிகழ்வுகள், தமிழகத்தில், என்னறிவிற்கு இல்லை என்றே படுகிறது! நன்றி கலந்த பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சந்திரகுமார் எங்கள் தளத்திற்கு முதல் தடைவையாக வந்தமைக்கும், கருத்திற்கும்.

   மகான் ஸ்ரீநாராயண குரு கேரளத்தில் விதைத்துச் சென்ற சிந்தனை மரபு தொடர்வது மாற்றத்திற்குக் காரணம்.

   தமிழ்நாட்டிலும் நல்ல விதைகள் ஊன்றப்பட்டதுதான். ஆனால் ஆன்மீகம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுத் திசை திரும்பிவிட்டது. உங்கள் கருத்து சரியே. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கும், பாராட்டிற்கும்.

   துளசிதரன்

   நீக்கு
  2. சந்திரகுமார் அவர்களுக்கு... அன்று கொடுக்க நினைத்து இடையில் முடியாமல் போன கருத்து...

   ஸ்ரீ நாராயண குரு ஒரு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது அதில் ஏறிய ஒரு நம்பூதிரி அவர் அருகே அமர்ந்தார். சிறிது நேரப் பேச்சிற்குப் பிறகு “ஸ்வாமி நீங்கள் என்ன சாதியைச் சேர்ந்தவர்” என்றார். உடனே குரு “பார்த்தால் என்ன சாதி போல் தெரிகிறது தெரிகிறது” என்று கேட்டார். “என்ன சாதி என்று கண்டுபிடிக்க முடியவில்லை” என்ற பதிலைக் கேட்டதும், “பார்த்துப் புரியாததை எப்படிச் சொல்லிப் புரியவைப்பது” என்றாராம். தான் மனித சாதி என்பதைத்தான் குரு அவருக்குப் புரியவைத்தார். இது போல் நான் 1980 ல் மதுரைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று சமுதாயத்தால் முத்திரை குத்தப்பட்டு சர்டிஃபிக்கேட்டில் எழுதப்பட்ட, சில மாணவர்கள் தாங்கள் பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லி எல்லோரிடமும் எந்த வித்தியாசமும் இன்றிப் பழகிவாந்தார்கள். ஆனால் எப்படியோ ஓராண்டிற்குப் பிறகு எல்லோருக்கும் எல்லோரது சாதியும் தெரியவந்த போதுதான் அவர்கள் தாழ்த்தப்பட்டச் சாதியினர் என்று தெரிந்தது. அன்று பார்க்கும் போதும், பழகும் போதும் வித்தியாசம் தெரியாத சாதி சர்டிஃபிகேட்டில் இருந்து தெரியவந்த போதுதான் சாதி எண்ணம் உடையவர்களுக்குப் பிரச்சனையானது. அது போல் நகரத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த என் நண்பர் ஒருவரது வீட்டிற்குச் சென்ற போது நண்பன் என்னிடம் “நான் இங்கு எல்லோரிடமும் ஒரு பிற்பட்டச் சாதியைச் சேர்ந்தவன் என்றுதான் சொல்லியிருக்கிறேன் சாதிப் பேச்சு ஏதேனும் வந்தாலும் வாய்தவறிக் கூட என் சாதி என்னது என்று சொல்லிவிட வேண்டாம். என்று கேட்டுக் கொண்டான். இதை எல்லாம் கண்ட போதும், கேட்ட போதும் எனக்கு மனது மிகவும் வேதனைப்பட்டது. உலகில் எங்கும் இல்லாத இந்த சாதி சம்பிரதாயம் நம் நாட்டில் மட்டும் கொடிய தொற்று நோயாக முன்பு முற்பட்டவர்களைப் பாதித்திருந்தது. இப்போது பிற்பட்டவர்களையும் பாதித்து ஒற்றுமையைச் சீர் குலைக்கிறதே. இப்படி மாறாமல் இருக்கும் இந்த நோய் மனித மனனங்களை விட்டு எப்போதுதான் அகலுமோ? காலம் தான் பதில் சொல்ல வெண்டும்

   துளசிதரன்

   நீக்கு
  3. கூடுதல் தகவல்களுக்கு , நன்றி துளசிதரன்! என் மானசீக ஆராதனைக்கும், அபிமானத்திற்கும் உரிய வெகு சிலரில் ஒருவர். திரு. ஜெயமோகன் அவர்களது தளத்தில் இருந்து விரிவான கட்டுரைகள். நீங்கள் படித்திருக்கக் கூடும். மற்றவர்களுக்காக, இங்கே இணைக்கிறேன்!
   1) நாராயண குரு எனும் இயக்கம் -1 -- http://www.jeyamohan.in/7522
   2) நாராயண குரு எனும் இயக்கம் - 2 -- http://www.jeyamohan.in/7524

   நீக்கு
 21. //இந்து சமய அறநிலைத்துறையின் ( Hindu Religious and Charitable Endowments Department ) கீழ் வரும் கோயில்களுக்கு, நீங்கள் குறிப்பிடும் பரம்பரை சொத்து உரிமை இல்லை.//

  திரு தமிழ் இளங்கோ ஐயா, எனக்குத் தெரிந்து மதுரை, ஶ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களில் பரம்பரையாக வழிபாடு செய்பவர்களே இருந்து வருகின்றனர். மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற ஆணையும் இருக்கிறதாக நினைக்கிறேன். என்னுடைய புக்ககம் ஆன கருவிலி சற்குணேஸ்வரர் கோயிலில் பரம்பரை அர்ச்சகர் மகன் தான் வழிபாடுகள் செய்து வந்தார். அவருடைய மகன் ஆகமக் கல்வி முடித்ததும் அந்தக் கோயிலில் தான் தன் முதல் சேவையையும் தொடங்கினார். ஆனால் பின்னர் அவரை அங்கிருந்து அகற்றி விட்டனர். இப்போது வேறொருவர் சேவை செய்து வருகிறார். அதே எங்க பூர்விக ஊரான பரவாக்கரையில் உள்ள பெருமாள் கோயிலில் நாங்கள் பரம்பரையாக வழிபாடுகள் செய்து வந்த பட்டாசாரியர் குடும்பத்தினரையே இப்போதும் வழிபாடு நடத்தச் சொல்லி இருக்கிறோம். அதே போல் அங்குள்ள எங்கள் குலதெய்வமான மாரியம்மன் கோயிலிலும் பரம்பரைப் பூசாரி தான்! இம்மூன்று கோயில்களுமே அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வருபவையே! பெருமாள் கோயில் எங்கள் குடும்பத்துத் தனிப்பட்ட நிர்வாகத்தில் இருந்தது 75-76 ஆம் ஆண்டில் தான் அரசு எடுத்துக் கொண்டது. அப்போது முதல் பரம்பரை பட்டாசாரியார் தான்! திருச்செந்தூர், கன்யாகுமரி, பழநி போன்ற இடங்களிலும் அப்படியே என அறிகிறேன். என்றாலும் இது குறித்து ஆதாரபூர்வமான தகவல்களையும் கண்டறிய முயல்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி கீதா சாம்பசிவம் மீண்டும் வந்து இங்கு பல தகவல்களை முன்வைத்தமைக்கு. மிக்க நன்றி.

   துளசிதரன்

   நீக்கு
 22. கேரளாவில் அரசால் நியமிக்கப்படும் அர்ச்சகர்களுக்கு மாற்றல்கள், ஓய்வூதியம் எல்லாம் உண்டு என்கின்றனர், அது குறித்தும் சரியாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் சாதாரண அரசு ஊழியருக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? கோயில்களில் சேவை மனப்பான்மை மட்டும் போதாது. இறைவனுக்கு நாம் வழிபாடுகள் செய்கிறோம் என்னும் ஆத்மார்த்தமான பக்திபூர்வமான மனப்பான்மையும் தேவையே! பிறர் நன்மைக்காகவே வழிபாடுகள் அர்ச்சகர்களால் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டு அர்ச்சகர்கள் ஒரு கோயிலை விட்டுஇன்னொரு கோயிலுக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு செல்வதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் வருமானம் அதிகம் உள்ள கோயில்களுக்கே எல்லோரும் போட்டி போடுவார்கள்.அதோடு இங்கெல்லாம் எந்த அர்ச்சகர்களுக்கோ பட்டாசாரியார்களுக்கோ ஓய்வூதியம் என்றெல்லாம் இல்லை. வயதாகி விட்டால் ஊழியம் செய்ய முடியாது. இதைக் குறித்து வருந்தும் பல அர்ச்சகர்கள் உண்டு. கோயிலுக்கு வருவதை நிறுத்த முடியாமல் தள்ளாத வயதிலும் கோயிலுக்கு வருவதை ஓர் கடமையாகவும் பக்தி பூர்வமாகவும் உணர்ந்து செய்யும் சிவாசாரியார் ஒருவரை சீர்காழி கோயிலிலும் சென்னையில் மயிலை மாதவப் பெருமாள் கோயிலிலும் கண்டிருக்கோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளாவில் ஓய்வூதியம் உண்டு. ஆனால் அது மிக மிகச் சிறிய தொகைதான். 2010 ஆம் வருடம் இந்துவில் வந்த ஒரு செய்தி இதோ.
   /A meeting of the Travancore Devaswom Board held here on Friday decided to give minimum pension to all temple employees who retired from service before April 1, 1985. The pension scheme was introduced from April 11, 1985. Those retired from service before the date were being given a consolidated amount of Rs.500.//

   இப்போது இது சற்றுக் கூடியிருக்கலாம். ஆனால் அவர்களது தினசரி தேவைகளுக்கு குடும்பத்தை நடத்துவதற்கு ஏதேனும் வேண்டும் தானே. குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே. எனவே ஊதியம் கிடைக்கட்டும். ஆனால் அதே சமயம் நாம் எல்லா அரசு ஊழியர்களையும் நேர்மையாகச் சேவை செய்ய வேண்டும் என்று சொல்லுவது போல் இவர்களும் நீங்கள் சொல்லியிருபப்து போல் இறை சேவை செய்ய வேண்டும்.

   இதில் ஒரு சிலர் அந்த பூசை, இந்த பூசை என்று மக்களை ஏமாற்றி பணம் பறிப்பவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லத்தான் வேண்டும். எனவே நேர்மையாக, ஈடுபாடுடன், இறையுணர்வுடன் பிறர் நலனுக்காக சேவை செய்பவர்களின் குடும்பமும் தழைக்க ஒரு சிறு ஊதியம் கிடைப்பதில் தவறில்லையே என்று தோன்றுகிறது. அவர்களும் பிழைக்க வேண்டுமே. நன்றாக அரசு வேலையில் இருப்பவர்கள் கையூட்டுப் பெறத்தானே செய்கிறார்கள். அப்படியிருக்க உண்மையாக இறை சேவை செய்பவர்கள் வயிற்றுப் பிழைப்பு நடத்தவேனும் ஊதியம் பெற்றால் நல்லதுதானே.

   மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தாங்கள் மிக மிக நல்ல கருத்துகளை முன்வைத்தமைக்கு.

   துளசிதரன்

   நீக்கு

 23. கோவில் பூஜை செய்பவர்களின் மாறிவரும் கேரளத்து சீனைத் தெளிவாகக் காட்டுகிறது உங்கள் பதிவு.

  அதிரா ஆரம்பித்துவைத்த பின்னூட்டச்சரம் அனுமார் வாலாய் நீண்டு செல்கிறது. (ஒருவேளை, அதிரா ஆஞ்சனேய பக்தரோ!). அருமையான தெளிவான பின்னூட்டங்கள் திரு. செல்லப்பா மற்றும் திருமதி. கீதா சாம்பசிவம் ஆகியோரிடமிருந்து. இவர்கள் கருத்துடன் இணைகிறேன். மேற்கொண்டு ஏதும் சொல்லாது நகர்ந்தால், தப்பிச்சு ஓட்றார் பாருங்கோ! என்று அதிரா கூப்பாடு போட வாய்ப்பிருப்பதால், ஒன்றே ஒன்றை சொல்ல விழைகிறேன்:

  கோவிலின் கர்ப்ப க்ருஹத்தினில் நுழைந்து விக்ரஹ ஆராதனை, பூஜை செய்பவர்களுக்கு, அவர் எந்த ஜாதியினராய் இருந்தாலும், இருக்கவேண்டிய (அரசாங்க, கோர்ட் புத்தகங்கள், ஆவணங்களில் எழுதப்பட்டிருக்காத) ப்ரதான தகுதி: பக்தி.

  கர்ப்பக்ருஹத்தினுள் விக்ரஹ வடிவில் இருப்பதாகக் கருதப்படும் ஆண்டவனருகில், சுத்தபத்தமாக, பக்தி உணர்வோடு தினம் சென்று சிரத்தையுடன் மந்திரங்களை, ஸ்லோகங்களை, வழிபாட்டுப்பாடல்களை அதற்குரிய பாவத்துடன் சொல்லத்தெரிந்தவராய், சொல்லவிரும்புபவராய் அர்ச்சகர் / குருக்கள் இருத்தல்வேண்டும்.

  இத்தகுதியை கொண்டிராத ஒருவர், நானும் இதற்கான தேர்வில் 33 % வாங்கி பாஸ் செய்திருக்கிறேன் என்று கோவில் கர்ப்பகிருஹத்தினுள் சென்றால், பூஜை செய்ய அனுமதிக்கப்பட்டால், அங்கு பூஜை முறையாக நடக்காது. வேறெதாவது நடந்தேறும் நாளடைவில். இப்படியெல்லாம் நடந்தால், கோவிலின் பெயர் கெடும்; வழிபடும் பக்தர் வரவும் குறைந்துவிடும். Then, you can’t undo anything !

  இந்த முக்கியமான விஷயத்தை எப்படி, யார் சோதிப்பார்கள், சரிபார்ப்பார்கள் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //(ஒருவேளை, அதிரா ஆஞ்சனேய பக்தரோ!). /

   ஏகாந்தன் சார் உங்களுக்கு விஷயம் தெரியாதா ? :) ஆஞ்சி அங்கிள் தான் அதிராவின் குரு :)


   தீட்ஷை எல்லாம் வாங்கியிருக்காங்க மியாவ்

   நீக்கு
 24. உங்களது பதிவிற்குப் பின்னூட்டமிட்டுவிட்டு தினமலர்ப்பக்கம் சென்றேன். ஆச்சரியம். கேரளத்து யதுகிருஷ்ணாபற்றி, அவர் Outlook வார இதழுக்களித்த நேர்காணலின் அடிப்படையில் அமைந்த கட்டுரை! அசந்துபோனேன்.

  சிறுவனாக இருக்கும்போதே கோவில் பணிகளில் தன்னை விரும்பி ஈடுபடுத்திக்கொண்டவர். அர்ச்சகர் படிப்பிற்கான கடுமையான பாடத்திட்டத்தோடு (கர்ப்பகிருஹத்தினுள் நுழையவிருக்கும் அர்ச்சகர் 51 லட்சம் முறை மந்திரங்களைச் சொல்லிப் பயின்றிருக்கவேண்டும் என்பதும் இதில் ஒன்று), சுமார் 10 வருடங்கள் படித்து, எம்.ஏ. சமஸ்கிருத்திலும் தேறியுள்ளார் யதுகிருஷ்ணா. அவர் போய்ச் சரணடைந்த குருவும் அப்படிப்பட்டவர். இடையிலே சர்வீஸ் கமிஷன் தேர்வில் நல்ல ரேங்கில் தேர்வுபெற்றும் அந்த வேலைக்குப்போகவில்லை. குடும்பத்தினர் நீ அர்ச்சகராகவே இரு என்றிருக்கிறார்கள். அவரும் சரி என்று கோவிலுக்கு வந்துவிட்டார். இதுவல்லவா பக்தி. யதுகிருஷ்ணா போன்று ஒருவர் பக்தி சிரத்தையுடன், பயின்று தேர்ந்து அர்ச்சகரானால், அது மிகவும் வரவேற்கத்தக்கது. அவர் பணியாற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பாக்யசாலிகள் என்பேன்.

  கேரளத்தில் இதெல்லாம் நிகழ்கிறது. சந்தோஷம். ஆனால், எதிலும், எல்லாவற்றிலும் ஊழல் எனக் காலம் தள்ளும் என் இனிய தமிழ்நாட்டில் இது சாத்தியமா என்றொரு கேள்வியும் உடனே பிறக்கிறதே, என் செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஏகாந்தன் ஸார், விரிவான விளக்கம் தந்தமைக்கு. கிறித்தவ மதத்தவரும், இஸ்லாம் மதத்தவரும் தகுதி உள்ளவர்களை புரோகிதர்களும், இமாம்களும் ஆக்கும் போது, தகுதியுள்ள யதுகிருஷ்ணனைப் போன்றவர்கள் பூசாரிகளாக வேண்டியது இந்தக் காலகட்டத்திற்கு மிக மிக அவசியம். நம் நாட்டில் இப்போதும் சில இடங்களில் நிலவும் மேல் சாதி கீழ் சாதி சம்பிரதாயமும் தீண்டாமையும் இது போன்ற சம்பவங்களால் நாளடைவில் மாறும் என நம்புவோம். நீங்கள் முதல் கருத்தில் சொல்லியிருப்பது போல் பக்தி மிக அவசியம், தொழிலாக இருந்தாலும் செய்யும் தொழிலே தெய்வம்!!

   தங்களின் இரு கருத்துகளுக்கும் சேர்த்தே இங்கு கொடுத்துள்ளேன். பல கருத்துகளும் பேசப்பட்டுவிட்டதால். சுருக்கமாக்கிவிட்டேன்.

   // ஆனால், எதிலும், எல்லாவற்றிலும் ஊழல் எனக் காலம் தள்ளும் என் இனிய தமிழ்நாட்டில் இது சாத்தியமா என்றொரு கேள்வியும் உடனே பிறக்கிறதே, என் செய்வது?// உண்மைதான் ஸார்.

   மிக்க நன்றி ஏகாந்தன் ஸார்.

   துளசிதரன்

   நீக்கு
 25. ////ஏகாந்தன் Aekaanthan !20 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:16

  ///அதிரா ஆரம்பித்துவைத்த பின்னூட்டச்சரம் அனுமார் வாலாய் நீண்டு செல்கிறது. (ஒருவேளை, அதிரா ஆஞ்சனேய பக்தரோ!). /////
  ஹா ஹா ஹா உங்கள் பதில் பார்த்து மீ வியக்கேன்:).. கடந்த 4 வருடமாகத்தான் கும்பிட ஆரம்பிச்சேன் முன்பு ஆஞ்சனேயரைப் பிடிக்காது... இப்போ பயங்கர விருப்பம் அவரில்... வீட்டில்... என் கழுத்தில்... கார் கீயில் எல்லா இடமும் அவரைக் கொழுவி வச்சிருக்கிறேன்:)..

  ,///தப்பிச்சு ஓட்றார் பாருங்கோ! என்று அதிரா கூப்பாடு போட வாய்ப்பிருப்பதால், ////

  ஹா ஹா ஹா எல்லோரையும் நான் மிரட்டி வச்சிருக்கிறேன்:) ஆனா பாருங்கோ இந்த மைனஸ் வோட்டுக்குப் பயந்து நான் போஸ்ட் போடாமல் திரிகிறேன் ஹா ஹா ஹா... பூஸோ கொக்கோ?:)..
  அஞ்சு என்னை மிரட்டினா கெதியா போஸ்ட் போடுங்கோ நீண்ட நாளாகுதென:).... பிள்ள என்னில ரொம்ப அக்கறையா இருக்கே என நான் புல்லாஆஆஆ அரிச்சுப்போயிட்டேன்:).. பின்புதான் பார்த்தால்.. விசயம் என்னன்னா... அதிராவுக்கும் மைனஸ் வோட்டுப் போடீனமோ எனப் பார்க்க ஆசையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)..

  உங்கள் கடசிப் பந்தியை நானும் ஆதரிக்கிறேன்... கோயிலில் பூசை செய்வோரையும் பல சமயம் கடவுளாக எண்ணி மரியாதை கொடுக்கிறோம்... எங்கள் பக்கத்துப் பிள்ளையார் கோயிலில், ஒரு குருக்கள் குடும்பம் பூசை செய்வார்கள்... விசேச தினம் வெள்ளி செவ்வாயில் மட்டும் தந்தை பூசை செய்வார், இடை நாட்களில் சின்ன மகனை அனுப்புவார்...
  அவரைப் பார்த்தாலே எனக்கு சுவாமி கும்பிடும் ஆவல் போய்விடும்... அர்ச்சனைகூடச் செய்ய மாட்டோம்... மந்திரம் ஒழுங்கா சொல்லமாட்டார்.. மணியை இறுக்கி கிலுக்கி வாயசைப்பார்... தீபம் காட்டும்போது எங்கெங்கோ எல்லாம் பார்ப்பார்...

  முடிவில் தீர்த்தம் திருநீறு கொடுக்கும்போது .. எங்கோ பார்த்தபடி கொடுத்து கீழே கொட்டிடுவார்...

  மன நிம்மதி தேடிக் கோயிலுக்குப் போகிறோம்... ஆனா இன்னும் நிம்மதி இழந்து திட்டிக்கொண்டே வீட்டுக்குத் திரும்பும் சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகிறது... இதனால எனக்கு எப்பவும் பூசை இல்லாத அமைதியான சூழலில் போய் கடவுளோடு ரகசியம் பேசிவருவது பிடிக்கும்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரைக் கொழுவி வச்சிருக்கிறேன்:)..//

   ஆ!! ஏஞ்சல் இங்க பாருங்க பாவம் ஆஞ்சு! ஆஞ்சுவ கழுவி வைச்சுருக்காங்கனு முதல்ல வாசிச்சுட்டேன்...கழுவிதானே அர்த்தம் ஹிஹிஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  2. ஹா ஹா ஹா எல்லோரையும் நான் மிரட்டி வச்சிருக்கிறேன்:) ஆனா பாருங்கோ இந்த மைனஸ் வோட்டுக்குப் பயந்து நான் போஸ்ட் போடாமல் திரிகிறேன் ஹா ஹா ஹா... பூஸோ கொக்கோ?:)..// அதானே!! அதுக்கெல்லாம் பயப்படாதீங்க அதிரா....த ம போனா போகுது...நாங்க எல்லாம் இருக்கோமல்லோ!! போடுங்கோ போடுங்கோ...போஸ்ட் போடுங்கோ....

   கீதா

   நீக்கு
  3. //விசயம் என்னன்னா... அதிராவுக்கும் மைனஸ் வோட்டுப் போடீனமோ எனப் பார்க்க ஆசையாம் கர்ர்ர்ர்ர்ர்ர்:).. //
   வரவர விவரமாகிட்டே போறீங்க :) எல்லாம் ஒரு ஆசைதான் :)

   நீக்கு
  4. ஹாஹாஆ அதுதான் நானும் சொல்றேன் போஸ்ட் போடுங்க மியாவ் நான் பார்க்கணும் :)
   ஹாஹாஆ அதுதான் நானும் சொல்றேன் போஸ்ட் போடுங்க மியாவ் நான் பார்க்கணும் :)

   எல்லாம் ஒரு ஜலதோஷம் தான் :)

   நீக்கு
  5. ஹாஹா :) கொழுவி மீன்ஸ் கட்டி hang செஞ்சி

   நீக்கு
  6. //// அதுக்கெல்லாம் பயப்படாதீங்க அதிரா....த ம போனா போகுது...நாங்க எல்லாம் இருக்கோமல்லோ!! போடுங்கோ போடுங்கோ...போஸ்ட் போடுங்கோ....////
   ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் பயமில்ல கீதா பிக்கோஓஓஓஒஸ்:)... நான் தான் வடிவேல் அங்கிள் மாதிரிக் கதவைச் சாத்திப்போட்டுக் கால்ல விழுந்திடுவனே... ஹா ஹா ஹா:)...

   இல்ல கீதா கொம்பியூட்டர் கார்ட் டிஸ்க் போயிந்தி:).. அதில் பல படங்களும்... முக்கியமா ஸ்ரீராமுக்கு அனுப்ப என எப்பவோ செய்து வச்ச சில சமயல் போட்டோக்களும்... இது மொபைல் கொமெண்ட்ஸ் அதனால உங்களுக்கும் வோட் போட முடியவில்லை இங்கு...
   அடுத்த கொம்பியூட்டரூடாக விரைவில் போடுவேன்...

   நீக்கு
  7. பார்த்தீங்களோ என் செக்ரட்டறி அப்பப்ப காலை வாரினாலும் கடமை தவறுவதில்லை ஹா ஹா ஹா..

   கொழுவி என்றால் உங்க பாசையில் மாட்டி விடுதல் என வரும்மாக்கும் கீதா.. அதே ஹங்:)..

   நீக்கு
  8. நான் தான் வடிவேல் அங்கிள் மாதிரிக் கதவைச் சாத்திப்போட்டுக் கால்ல விழுந்திடுவனே... ஹா ஹா ஹா:)...//

   சரி சரி பில்டிங்க் ஸ்ட்ராங்க் பேஸ்மென்ட் வீக்குனு சொல்லுங்க..அதிரா..ஹாஹாஹாஹா

   ஆஆஆஆ!! ஏஞ்சல் இதைக் கேட்பதுக்கு யாருமில்லையா...//.எப்பவோ செய்து வச்ச சில சமயல் //

   வோட் ...விடுங்க அதிரா அதெல்லாம் நாங்கள் பார்ப்பதே இல்லை...அது கிடக்குது...விடுங்க

   கீதா

   நீக்கு
  9. "முக்கியமா ஸ்ரீராமுக்கு அனுப்ப என எப்பவோ செய்து வச்ச சில சமயல் போட்டோக்களும்.." - ஏஞ்சலின்... நேரம் கிடைக்கும்போது அ.அவுக்கு உண்மை கண்டறியும் சோதனையைச் செய்யுங்க. தி. பதிவுக்கு ரெடி பண்ணிவச்சு காணாமல் போய்விட்டது என்று சொல்கிறார். (ஒருவேளை... அவர் கொழுவி வைத்த ஆஞ்சனேயரே நம்மையெல்லாம் காப்பாற்ற அப்படிச் செய்தாரோ?)

   நீக்கு
 26. @ Angelin :

  //.. உங்களுக்கு விஷயம் தெரியாதா ? ஆஞ்சி அங்கிள் தான் அதிராவின் குரு//

  ஏதோ அடிச்சுவிட்டா ஹிட்டாயிருச்சே..! ஓ! அப்பிடிப் போகுதா கதை ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹையோ ஹையோ கதை அப்பூடி எல்லாம் போகல்ல:) அஞ்சுவை ஆஞ்சி என மாத்திச்சொல்லிட்டாபோல இருங்கோ ஆரிந்த ஆஞ்சி எனக் கண்டு பிடிக்கிறேன்ன்ன்ன்ன்:)...

   நீக்கு

 27. @ அப்பாவி athira :

  //..இப்போ பயங்கர விருப்பம் அவரில்... வீட்டில்... என் கழுத்தில்... கார் கீயில் எல்லா இடமும் அவரைக் கொழுவி வச்சிருக்கிறேன்..//

  அடேங்கப்பா! பக்தியிலும் அதிரடியா ?

  //..மந்திரம் ஒழுங்கா சொல்லமாட்டார்.. மணியை இறுக்கி கிலுக்கி வாயசைப்பார்... தீபம் காட்டும்போது எங்கெங்கோ எல்லாம் பார்ப்பார்...முடிவில் தீர்த்தம் திருநீறு கொடுக்கும்போது .. எங்கோ பார்த்தபடி கொடுத்து கீழே கொட்டிடுவார்... //

  இந்தமாதிரி ஆட்களை எனக்கு அறவே பிடிக்காது. செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். தெய்வத்தருகேயே உனக்குப் பணி என்றால், அதையும் நீ எங்கோ பார்த்துக்கொண்டு செய்வாய் என்றால் உன்னை அந்த இடத்துக்குள் நுழையவிட்டதே தப்பு என்பேன். ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஆசாமிகள் இருக்கிறார்கள். பக்தி சிரத்தை இல்லாதவர்களுக்கு சாமிக்கருகில் என்ன வேலை?

  டெல்லியில் ஒரு கோவிலுக்கு அடிக்கடி வரும் பாட்டி இப்படி சில குறைகளை சொல்லியிருக்கிறார். நான் ப்ளாக் எழுதுகிறவன் என்று தெரியும்; என் எழுத்தைப் படித்திருக்கிறார். பக்தி மெகஸின்களில் கட்டுரை எழுதுபவர் அவர். இதைப்பற்றி உங்கள் பக்கத்தில் எழுதுங்கள் என்றார் சமீபத்தில். போட்றவேண்டியதுதானா ஒரு பதிவு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் உங்களுக்குச் சொன்ன கருத்தில் இந்த செய்யும் தொழிலே தெய்வம் வாசகத்தைக் குறிப்பிட்டேன் நீங்களும் இங்கு அதிரா அவர்களுக்குக் கொடுத்திருக்கும் கருத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே கருத்துதான். யாராக இருந்தாலும் சின்ஸியராகச் செய்ய வேண்டும்.

   துளசிதரன்

   நீக்கு
  2. போடுங்கள் சார்/சகோ பதிவு ஒன்று அதைப் பற்றி..

   நீக்கு
 28. @Thillaiakathu Chronicles :

  //போடுங்கள் சார்/சகோ பதிவு ஒன்று அதைப் பற்றி..//

  நிறையை ஏதும் சொல்லாமல், குறையை மட்டும் குறிப்பிட்டால் நன்றாக இருக்காதே..என்பதும் சிந்தனையில்.

  ஆரம்பித்திருக்கிறேன். சுஜாதா சொல்வதுபோல் அது தன்னைத்தானே எழுதிக்கொண்டுபோகிறது. பார்ப்போம் எப்படி வரும் என.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகாந்தன், இன்னிக்கு உங்க பதிவுக்கு வந்து அலசு அலசுனு அலசினேன்! ஒண்ணையும் காணோம்! இமெயில் ஆப்ஷனும் கொடுக்க முடியலை! :)

   நீக்கு
 29. சிந்திக்க தூண்டும்பதிவும்... பின்னூட்டங்களும்..


  பல பல செய்திகள்....

  அனைத்தும் சிறப்பு...கீதாக்கா..

  பதிலளிநீக்கு
 30. இருந்தாலும் இறைவன் காலத்தைக் கனியச் செய்வார் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம் என்று பதிவை முடித்துள்ளீர்கள். மாற்றம் வருவதற்கு இன்னும் நூறாண்டு ஆகலாம். சரியான நேரத்தில் வந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 31. விவாதமாகக்கூடிய பதிவென்பதனாலேயே என் கருத்துக்களை இடுவதை தவிர்த்தேன். ஒரு பெரிய மனுசன்.. அவர் வார்த்தையை நாலு பேர் நலல்தென நம்பி பின்பற்றும் நிலையில் இருப்பவனாய் நம்பப்ப்டுபவன்... கடவுளை காண, அருகில் இருக்க, அவரை உணர பிராமணனாய் பிறந்தால் தான் முடியும் என நினைத்து அப்பிறப்பே உயர்வென தானும் நினைத்து ஏனையோரையும் நினைக்க வைக்கும் அறிவிப்பாய் தான் இப்பேச்சை கேட்டு கடந்து சென்றேன்.

  எல்லா மதத்திலும் மதகுருமார்கள், பலீபீடம், கருவறை வரை செல்லும் அதிகாரம் பெற்றவர்கள் கடவுளை நேரில் நெருங்கி உணர்வதாயும் ஏனையோருக்கு அத்தகைய பாக்கியம் கிட்டாது என்பது போலும்..... ரெம்ப தூரம் வேண்டாம்.. கண்ணப்ப நாயனார் கதை ஒன்றே போதும். எந்தப்பிறப்பில் பிறந்தாலும் மனிதனாய் இருந்தாலவனும் மகான் தான். அவனை தேடி கடவுள் வருவார்.

  பதிலளிநீக்கு
 32. மிகச் சரியான பதிவு . அதிலும் முடிவில் பூணூலிட்டுப் பூசாரியாக முடியுமா என்று கேட்டது யோசிக்க வைத்தது. !

  பதிலளிநீக்கு
 33. அருமையான பதிவு! மிகவும் தாமதமாக வந்து விட்டேன். வருந்துகிறேன்!

  பா.ச.க நாடாளுமன்ற உறுப்பினரின் குறிப்பிட்ட கருத்திலிருந்து கட்டுரையைத் தொடங்கியிருந்த விதம் நெற்றியடி!

  இப்படியொரு மாற்றம் தமிழ்நாட்டில் வர இறைவனை வேண்டுவோம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். கட்டுரையில், பிற்படுத்தப்பட்டவர்களையும் கோயில் பூசாரியாக்க 1967-லேயே தேவசம் வாரியம் முடிவெடுத்து விட்டதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். இத்தனை காலம் அது நடைமுறைக்கு வராமல் கடவுள் நம்பிக்கையற்ற ஒருவரால்தான் இப்பொழுது நடைமுறைக்கு வந்திருக்கிறது. கேரளத்தில் மட்டுமில்லை, தமிழ்நாட்டில் பாரப்பனரல்லாதாருக்கும் பூசை செய்யும் உரிமை வேண்டும் என்று வலியுறுத்திய பெரியாராகட்டும், அப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்த கருணாநிதியாகட்டும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்தாம். எனவே, அனைத்து உயிர்களிலும் கடவுள் உறைந்திருந்தாலும் அனைவரையும் தன்னருகில் வரவழைக்க அவரால் இயலவில்லை; கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாலேயே அது நடக்கிறது! எனவே, இதில் இறைவன் அருளுக்கு எதுவும் தேவை இருப்பதாகச் சிறியேனுக்குத் தெரியவில்லை. (தவறெனில் மன்னிக்க! எனக்குத் தோன்றியதைச் சொன்னேன்).

  அதே நேரம், கோயில் பூசாரியாக அதற்கான படிப்பைப் படித்துத் தேர்ந்தால் போதாதா? எதற்காகப் பூணூல்? அப்படிப் பார்த்தால், பார்ப்பனர் ஆன பிறகுதான் கடவுளைத் தொட்டுப் பூசை செய்ய முடியும் என்பதாகத்தானே ஆகிறது? தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் வரும்பொழுது கவனமாக இது தவிர்க்கப்பட வேண்டும்! நான் சொல்வது சரிதானே?

  பதிலளிநீக்கு
 34. 25 கோடி மக்களுக்கான வாழ்வாதாரத்திற்கு வழி சொல்லுங்கள். ௧௨௫ குடிமக்களும் சேர்ந்து வாழ தயாராகுங்கள். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் யார் கடவுளுக்கு அர்ச்சகராக இருப்பது என்பதை.

  பதிலளிநீக்கு