பாரதிராஜா
மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா,
சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் சிறந்த மாநில நடிகருக்கான
விருது கொடுக்காமல், சிறந்த மாநில நகைச்சுவை நடிகருக்கான விருது கொடுத்தது சரியா
என்ற கேள்விக்குச் சொன்ன பதில் தான், இப்படித் திரைப்பட விருதுகளையும்,
நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் இணைத்துப் பேச வைத்திருக்கிறது.
ஃபகத் ஃபாசில்
“இது (மாநில திரைப்பட விருது வழங்கும் குழு) ஹைகோர்ட்டுன்னு
நினைச்சுக்குங்க அது (தேசிய திரைப்பட விருது வழங்கும் குழு) சுப்ரீம் கோர்ட்டுனு
நினைச்சுக்குங்க. ஒரே கேசுலயே பல நீதிபதிகள், பலவிதமானத் தீர்ப்புக்கள் வழங்குவது
இயல்புதானே? அப்படி எங்கள் கணிப்பில் மாநிலத்தின் சிறந்த நடிகருக்கான திரைப்பட
விருது ஃபகத் ஃபாசில்லுக்கு கொடுத்திருக்கிறோம்.
சுராஜ் வெஞ்ஞாரமூடு- பேரரியாத்தவர்
மட்டுமல்ல, சுராஜுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த, திரு டாக்டர் பிஜுவின் “பேரரியாத்தவர்” எனும் படம், தேசிய
விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது அது சுற்றுபுறச் சூழல் பற்றிய திரைப்படங்களின்
பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தது. இங்கு, மாநில விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட
படங்களில் அப்படி ஒரு பிரிவே இல்லை. போதாததற்கு
தேசிய விருது பெற்ற நடிகருக்கு அது கிடைத்த ஒரு காரணத்தை மட்டும் வைத்து விருது
வழங்கினால், எங்கள் தீர்ப்பு தனித்தன்மை இல்லாத பலவீனமான ஒன்றாகிப் போகுமே?!.....கமிட்டி
மிகவும் நேர்மையான முறையில் செயல்பட்டிருக்கிறது என்பதற்கு இது நல்ல ஒரு
அத்தாட்சிதானே?” இப்படி அவர் மிகவும் தெளிவாகப் பேசி வீணான சந்தேகங்களுக்கு
இடமில்லாமல் செய்திருக்கிறார்.
CR NO - 89 இயக்குநர் - சுதேவன்
சரிதான். கமிட்டி நேர்மையாகச் செயல்பட்டதால்தான்,
மாநிலத்தின் சிறந்த திரைப்படமாக சுதேவனின் “க்ரைம் நம்பர் 89” எனும் படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் இயக்குனரான, பட்டாம்பிக்காரனான சுதேவன் எனும் சாதாரண மனிதனின்
உழைப்பும், திறமையும், அதனால் விளைந்த அவரது வித்தியாசமான இந்தப் படமும், ஏராளமான பெரிய
முகங்களுக்கும், சத்தங்களுக்கும் இடையே காணாமல் போகாமல், கண்டுபிடிக்கப்பட்டு
சிறந்த திடைப்படத்திற்கான விருதையும் பெற்றிருக்கிறது. இப்படத்தில் நடித்த அசோக்குமார் எனும் சாதாரண
மனிதனும் அதனால்தான் சிறந்த இரண்டாவது நடிகருக்கான விருதை வென்றிருக்கிறார். இந்த அசோக்குமார் தற்போது பாலக்காடு அருகே உள்ள
ஒரு சிவன் கோவிலில் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவர்களுக்குத் துணையாக பெரிங்கோடு எனும் இசையை
உயிராகப் போற்றும் கிராமமும் அங்குள்ள மனிதர்களும் துணையாக நின்று அத் திரைப்படத்தை
திரை உலகிற்கு வழங்கியிருக்கிறார்கள். பாரதிராஜா போல் கிராமங்களின் உயிர்த் துடிப்பை
அறிந்த ஒருவரால்தான், இது போன்ற சிறந்த படங்களுக்காக வாதித்து அவற்றிற்குரிய
அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுத் தர முடியும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல
நாவலோ, கதையோ எழுத முடியும் என்பது போல், ஒவ்வொருவருக்கும் (ஆர்வமும், திறமையும்,
உழைக்கும் திறனும் உள்ள ஒவ்வொருவருக்கும்) ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்கி
உலகிற்குத் தரமுடியும் என்பதுதானே, இதை
எல்லாம் பார்க்கும் போது நமக்கு புலப்படும் உண்மை. ஆனால், இதில் கடினமான வேறு ஒரு விஷயம் என்னவென்றால்,
சிறந்த திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழு மற்றும் குழு உறுப்பினர்களின் கண்களுக்கு
எல்லாவற்றையும் தெளிவாகவும், கூர்மையாகவும் காணும் திறனும் இருக்க வேண்டும். மட்டுமல்ல, நல்ல திரைப்படங்கள் அவர்கள்
கண்களில் படும்படியாக, இது போன்ற போட்டியின் போது காண்பிக்கப்பட ஏற்பாடுகளும்
செய்யப்பட வேண்டும். அதற்கு எல்லாம் வல்ல
இறைவன் தான் அருள வேண்டும்.
பாரதிராஜா மட்டும் தான் தெரிந்த முகமாய் இருக்கிறார். நல்ல டபிங் படம் பார்த்த எபெக்ட் !
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பர்களே!
ஹஹாஹஹா....மிக்க நன்றி சகோதரி!
நீக்குஅவர்கள் கண்களில் படும்படியாக செய்வதற்கு "spl.நோட்டுகள்" தேவைப்படுமோ...?
பதிலளிநீக்குஇருக்கலாம்! யாருக்குத் தெரியும்? DD?! ஆனால், இந்தச் செய்தியைப் பார்க்கும் போது ஏதோ சில நல்ல விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றது என்று தோன்றுகின்றது!
நீக்குஇன்னொசென்ட்டுக்கு பிறகு மலையாளத்தில் நவரச நடிப்பில் சுராஜ் எனக்கு மிகவும் பிடிக்கும்.. சலீம் நல்ல ஆக்டர் தான், ஆனால் எல்லா படங்களிலும் அவரை ரசிக்க முடியவில்லை.. சுராஜ் வந்தாலே ரசித்து மகிழ்வோம்.. "அம்மச்சியானு சத்யம் " என்று அவர் வரும் பெரும்பாலான படங்களில் சொல்வார்.. அவருக்கு இந்த அவார்ட் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி..! வாழ்த்துகள்.. பகத்தையும் கமர்ஷியல் நடிகர் என்று ஒதுக்கி விட முடியாது.. ரெட் ஒயின் படத்தில் எதார்த்தமாக நடித்திருப்பார்.. ஒவ்வொரு படங்களிலும் உடல் மொழியை மாற்றி நடிப்பதில் வல்லவர்..
பதிலளிநீக்குஆம்! இன்னொசென்ட் அருமையான நடிகர்! பகத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதும் சரியே! மலையாளப் படங்களில் யதார்த்தம் இருக்கத்தான் செய்கிறது! மிக்க நன்றி ! ஆவி! தாங்கள் பாலக்காடு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!
நீக்குவலைப்பூ அன்பர்களுக்கு! நாங்கள் இருவருமே வேலை நிமித்தமும், பயணம் நிமித்தமுமாக சற்று நேரம் இன்மையால் உங்கள் வலைப்பூ பக்கம் வர இயலவில்லை! என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்!
பதிலளிநீக்குவிருது பெற்ற நடிகர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு மிக்க நன்றி! தளிர் சுரேஷ்!
நீக்குதமிழகத்தில் விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படும் படங்களைஒப்பிட்டு பார்க்கையில் ,கேரள விருதுகள் பெற்ற படங்கள் கிராமங்களின் உயிர் துடிப்பை உணர்த்துவதால் தேர்வுக் கமிட்டி சரியாக செயல் படுவதாகவே தெரிகிறது !
பதிலளிநீக்குத ம
இன்னாபா இத்து... விருது வாங்குறதுன்னா காசு குட்த்து வாங்குறது கெடியாதா...? போங்கு ஆட்டமாவுல கீது...?
பதிலளிநீக்குஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
ஹஹஹஹ் நைனா கொஞ்சம் நல்லதும் நடக்குது னைனா! சந்தோஷப்பட்டுக்குவோம்!
நீக்குமிக்க நன்றி நைனா!
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் ..! எனக்கும் பாரதிராஜாவை மட்டும் தான் தெரியும் மைதிலி சொல்வது போல். நன்றி வாழ்த்துக்கள்...!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகொதரி வாழ்த்துக்களுக்கும், கருத்திற்கும்!
நீக்குநன்றி!
பதிலளிநீக்குகேரளத்தில் பெரும்பாலான படங்கள் யதார்த்தமாகத்தான் படமாக்கப்படுகின்றன. அதனால் உயிர்த்துடிப்பும் இருக்கத்தான் செய்யும். பட்ஜெட்டும் குறைவுதான். ஆனால் அங்கும் தற்போது பல மாற்றங்கள் வந்திருக்கின்றது!
பதிலளிநீக்குதங்கள் கருத்து மிகச் சரியே! மிக்க நன்றி ஜி!
விருது பெற்வர்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குபாலக்காடு வந்தால் சிவன்கோயில் அருகில் சிற்பியாக இருக்கும் அசோக் குமாரைப் பார்க்க முடியுமா?
பதிலளிநீக்குநாங்களும் ஆர்வமாகத்தான் இருக்கிறோம்! சார்! முயற்சிப்போம்!
நீக்குமிக்க நன்றி!
ரெண்டு மலையாள நடிகர்களின் பேரைத் தெரிந்துகொண்டேன், மலையாளப் படங்கள் எதுவும் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குநிறைய மிக நல்ல படங்கள் இருக்கின்றன நண்பரே! பார்க்க முயற்சி செய்யுங்கள்! மொழி புரிந்து கொள்ள அவ்வளவு சிரமம் இருக்காது என்று நினைக்கிறோம்! முயற்சி செய்துதான் பாருங்களேன்!
நீக்குமிக்க நன்றி நண்பரே!