வியாழன், 24 அக்டோபர், 2013இன்று (24-10-2013) ஹிந்து தமிழ் நாளிதழில், ஊர்வலம் பகுதியில் வெளியான படம் இது.  ஆஹா, ஏதோ பசுமைப் புரட்சியா?! னு நான் ஏமாந்து நினைச்சது போல நீங்களும் ஏமாந்துடாதீங்க.  அதுல இருக்கற நியூஸ படிசப்புறம்தான் தெரிஞ்சுச்சு 'அடப்பாவிங்களானு'.
"எப்பவுமே, பொதுக்கூட்டம், பாதுகாப்புனு வெயில்லயும், மழைலயும் இருக்க வேண்டிய நிலை காவலர்களுக்கு.  ஆனா இந்தப் பெண் காவலர் பசுமையான இந்த சூழலில் நிற்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்தான்.  நேரு விளையாட்டு அரங்கில் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் வரவேற்புக்காக வைக்கப்பட்டிருந்த வாழைத்தார்கள்" -செய்தி

எல்லாம் சரிதான்....இப்ப தெரியுதா நான்  அடப்பாவிங்களானு சொன்னது ஏன்னு..பசுமையான சூழலாம்...பின்ன என்னங்க, விலைவாசி எகிறி போயி, ஒரு வாழைக்காயும்,  ஒரு வாழைப்பழமும் கூட 10ரூபாய், 12 ரூபாய்னு விக்கிற இந்த நிலமைல, ஒருவேள சாப்பாட்டுக்கே வழி இல்லாம ஒரு பக்கம் சனங்க வயித்தயும் வாயையும் கட்டிகிட்டு கிடக்க....இப்படி இத்தனை வாழைத்தார் கட்டி வீணடிக்காங்களேனு....இப்படிக் கூடவா?!  முக்கியமான நபர்கள்?......யார் வீட்டுக்குப் போச்சோ?! யார் யார் வீட்டுல அடுத்த நாள் வாழைக்காய வைச்சே ஓட்டினாய்ங்களோ?! என்னக் கொடுமை சார் இது......

உங்க ஊர்ல இப்ப வாழைக்கா, பழம் என்ன விலைங்க.? அதாங்க எல்லாம் அங்க வரவேற்கப் போயிடுச்சே ..அதான்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக