சனி, 1 நவம்பர், 2014

பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம்


     தீபாவளி அன்று கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூரில், குத்ரோளியிலுள்ள கோகர்ணநாதர் ஆலயத்தில் பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய சம்பவம் நடந்திருக்கின்றது. அதை நினைக்கையில் மனமெல்லாம் கற்கெண்டாய் இனிக்கிறது! கணவனை இழந்தப் பெண்கள், வாழவேண்டிய அவசியமில்லை.  அவர்கள் இறந்த கணவருடன் உடனே உடன் கட்டை ஏறித் தீயில் வெந்து சாம்பலாகி விடவேண்டும்.  அப்படிச் செய்யாமல் உயிர் வாழ ஆசைப்பட்டால் அவர்களை சமூகம் ஒதுக்கும்.  சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவர்களும், அவர்களது வீடும் ஏன் அவர்களது குழந்தைகளும் ஆக்ரமிக்கப்படுவதைத் தவிர்க்கவும் முடியாது. 

இப்படியெல்லாம், கணவனை இழந்தப் பெண்களிடம் காட்டுமிராண்டித்தனம் காட்டிய கயவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், இதற்கெல்லாம் ஆதாரமாக இறைவனையும் இறைவன் அருளால் எழுதப்பட்டதாகச் சொல்லப்பட்ட நூல்களையும் உயர்த்திக் காட்டிப் பெண்களுக்கு அநீதி இழைத்த வஞ்சகர்கள் வாழ்ந்த நம் நாட்டில், சுமார் 185 ஆண்டுகளுக்கு முன்பு 1829 சதி என்னும் உடன்கட்டை ஏறும் (ஏற்றும்) காட்டுமிராண்டித்தனத்தைப் பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. அச்சம்பவம் விதவைகளுக்கு ஒரு பாலைவனச் சோலையாய் அமைந்தது. 


ஆனால், அதன் பின்னும், கணவனை இழந்தப் பெண்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். அதனால்தான், சதி தடை செய்யப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகும், 1893ல், மகாராஷ்டிராவைச் சேர்ந்த வேத பண்டிதையும், சமூக சீர்திருத்தவாதியுமான ரமா பாய், விதவையான தான் முன் போல் மன நிம்மதியோடு இந்து மத்ததில் வாழ முடியாது என்று முடிவு செய்து மதம் மாறியே விட்டார்.  அவர் மட்டுமா?  141 நாட்களில் இந்திய அரசியலமைப்பிற்கு உயிர் கொடுத்த டாக்டர் அம்பேத்கார், மக்களில் சிலரை தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்பட்டு இழிவு படுத்தப்படுவதை எதிர்த்து அதற்குக் காரணமான மனுஸ்ம்ருதியை எரித்து, லட்சக்கணக்கானத் தாழ்த்தப்பட்டவர்களுடன் இந்து மதத்தைத் துறந்து புத்த மதத்தை ஏற்றுக் கொண்டார்.
 
இப்படி இந்து மதம், மதம் பிடித்து, மக்களைத் துன்புறுத்தத் தொடங்கியது என்னவோ 8 நூற்றாண்டுகளுக்கு முன்புதான் என்று சொல்லப்படுகிறது.  அன்று வாழ்ந்த சிலரது மனதில் தோன்றிய சுயநலம் நிறைந்த விபரீதப் புத்திதான் இதற்கெல்லாம் காரணமாம். அதற்கு முன்பும் இது போன்று நடந்ததாகச் சொல்லப்பட்டதெல்லாம் அந்த நாட்களில், எழுதிச் சேர்க்கப்பட்டவைகள்தானாம்.  அதன் முன் ஆணும் பெண்ணும், எல்லா மனிதர்களும் சம உரிமையுடன்தான் வாழ்ந்திருக்கின்றார்கள்.


      இந்த உண்மையை மனிதர்களுக்கு உணர்த்துவதற்குத்தான், இடையிடையே இறைவன் தன் தூதர்களாம் சமூகச் சீர்திருத்தவாதிகளை அனுப்பி இத்தகைய அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கச் செய்திருக்கிறார். பிற்பட்டோர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள், விதவைகள் என்று முத்திரை குத்தி எவரையும் இறைவனிடம் இருந்து அகற்றக் கூடாது என்று கூறி, இறைவன் எல்லோருக்கும் பொது சொத்து, இறைவன் ஏற்றத் தாழ்வு பார்ப்பதில்லை அது மனிதனின் தந்திரம், என்று கூறி கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்ரீ நாராயணகுரு ப்ரதிஷ்டை செய்து நடத்தியக் கோயில்தான் கர்நாடக மாநிலத்தில் மங்களூரில் உள்ள குத்ரோளி கோகர்ணநாத திருக்கோயில்.  அங்கு இறைவனுக்கும் தெவிக்கும் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் அல்லர். 

பூஜை முறைகளை முறைப்படிக் கற்ற பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள்.  அவர்கள் பூஜை செய்வதை விரும்பாத இறைவன் எங்கும் ஓடிவிடவில்லை. எனவே, 2013 அக்டோபர் 6 ஆம் தேதி பிற்பட்டவகுப்பைச் சேர்ந்த விதவைகளான, பண்டியால், மூடாவைச் சேர்ந்த லட்சுமி மற்றும், புத்துபல்லூரைச் சேர்ந்த இந்திராவும், பெண் பூசாரிகள் ஆனார்கள். அப்போதும் இறைவன் அவ்விடம் விட்டுச் செல்லவில்லை.  இம்மாதம், பூஜை முறைகளை முறையாகக் கற்று தாழ்த்தப்பட்ட வகுப்பினரான மங்களூரு, சிலிம்பியைச் சேர்ந்த லட்சுமியும், ராணிபுராவைச் சேர்ந்த சந்திரிகாவும் பெண் பூசாரிகளாய் இருக்கிறார்கள்.  இப்போதும் இறைவன் அசையாமல் அங்குதான் அமர்ந்திருக்கிறார்.
 

அப்படி இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த விதவைகளால் பூஜை, அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யப்படும் அம்மையப்பன் அருள் புரியும் அவ்வாலயத்தின் தேர்திருவிழா கடந்த தீபாவளி அன்று நடந்தது.  தேரிழுக்க அம்மையும் அப்பனும் தேர்ந்தெடுத்ததோ நூற்றுக் கணக்கான விதவைகளை.  விதவைகள் இழுத்தத் தேர் விபத்துக்குள்ளாகவில்லை.  ஒரு விபரீதமும் நிகழவில்லை

. எனவே இத்தனைக் காலம் விதவைகளை இறைவனிடமிருந்து அகற்றியது இறைவனல்ல. சுயநலவாதிகளான மனிதர்களே என்பதுதான் உண்மை.  இது போன்ற சுயநலவாதிகள் தான் இப்போதும் கேரளாவில் பல கோயில்களிலும் சட்டை மற்றும் பேன்ட் இட்டுக் கொண்டு செல்லக் கூடாது என்றும், பெண்கள் சூரிதார் இட்டு செல்லக்கூடாது என்றெல்லாம் சொல்லித் தடுக்கிறார்கள்.  கூடவே, பிராமணர்கள் அல்லாதவர்கள் பூஜை செய்யும் கோயில்களில் போய் வேண்டுவதில் பலன் இல்லை என்று பிரச்சாரம் செய்து அவ்வாலயத்தின் வருமானத்தைக் குறைக்கின்றார்கள். அவர்களுக்கு உதவ சோதிடர்களும் ஆவன செய்வதாகவும் கேள்வி.  இருப்பினும் குத்ரோளிக் கோயிலும் திருவிழாவும் தேரோட்டமும் வரலாற்றில் பொன்னேட்டில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாய் மாறி இருக்கின்றது. நம் நாடெங்கும் இது போன்ற ஏராளமான குத்ரோளிக் கோயில்கள் உருவாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.  இப்படி சிந்தித்துச் செயலாற்றி நாட்டுக்கு ஒரு உதாரணமான குத்ரோளிக் கோயில் நிர்வாகத்தினரையும், பக்தர்களையும் பொதுமக்களையும், வாழ்த்துவோம்.!  

41 கருத்துகள்:

 1. உங்கள் வாழ்த்து பலிக்க என் வாழ்த்துகள்!
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி பகவான் ஜி! தங்கள் வாழ்த்திற்கு!

   நீக்கு
 2. புரட்சிகரமான கருத்துக்களை துணிவுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
  த.ம.2

  பதிலளிநீக்கு
 3. பூஜை முறைகளை முறைப்படிக் கற்ற பிற்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள். அவர்கள் பூஜை செய்வதை விரும்பாத இறைவன் எங்கும் ஓடிவிடவில்லை//

  இறைவன் பொதுவானவன் என்பதை உணராத..மூடர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்

  நம் நாடெங்கும் இது போன்ற ஏராளமான குத்ரோளிக் கோயில்கள் உருவாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இப்படி சிந்தித்துச் செயலாற்றி நாட்டுக்கு ஒரு உதாரணமான குத்ரோளிக் கோயில் நிர்வாகத்தினரையும், பக்தர்களையும் பொதுமக்களையும், வாழ்த்துவோம்.! //

  அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

  தெரியாத விஷயம் பகிர்ந்ததற்கு
  நன்றி.
  வாழ்க வளர்க
  உமையாள் காயத்ரி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி சகோதரி! இறாய்வன் பொதுவானவன் என்பதை இன்னும் இந்த கால கட்டத்திலும் கூட உணராதவர்களை என்ன சொல்ல!? நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு

 4. அருமையான பொன்னேட்டில் பதிக்க வேண்டிய விஷயம் தான் !! பகிர்வுக்கு நன்றி .குத்ரோளிக் ஆலய நிர்வாகத்துக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னரி சகோகோதரி! தங்கள் கருத்திற்கு! ஆம் நாம் பாராட்டத்தான் வேண்டும்!

   நீக்கு
 5. விதவைகள் இழுத்தத் தேர் விபத்துக்குள்ளாகவில்லை. ஒரு விபரீதமும் நிகழவில்லை...


  நாம்தானே விதவைகளை வீட்டுக்குள் பூட்டி வைக்கிறோம்...

  நல்ல பகிர்வு... வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச் சரியே! நாம்தான்! மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு

 6. என்னையே
  நான் நம்பவில்லை
  இப்படியொரு எழுச்சி கண்டு...
  எல்லாம் நம்பிக்கையே!
  உடன்கட்டை ஏறுதலை நிறுத்தி
  விதவைகளுக்கு
  மறுவாழ்வு வழங்குவோரை வரவேற்கிறேன்!

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி நண்பரே! தங்களது விரிவான அழகான பின்னூட்டத்திற்கு!

   நீக்கு
 7. காலம் மாறிக் கொண்டிருக்கிறது. பழமைக் கருத்துகள் மறைந்து கொண்டிருக்கின்றன. நம்பிக்கை வெளிச்சங்கள் தெரிகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நிச்சயமாக. நம்பிக்க வெளிச்சங்கள் தெரிகின்றன! மிக்க நன்றி! நண்பரே தங்கள் பாசிட்டிவ்வான கருத்திற்கு!

   நீக்கு
 8. நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சார்!

  இது பொன்ற புரட்சிகரமான பதிவுகல் மிக அவசியம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ் தங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும்1

   நீக்கு
 9. உங்களது இந்தப் பதிவு உற்சாகம் தருகிறது. ரௌத்திரம் பழகு என்று சொன்னவனை நினைத்துக் கொள்கிறேன் இருந்தாலும் ஒரு குறை. விழிப்புணர்வை கொண்டு வருவதற்கும் சமயச் சடங்குகளே உதவ வேண்டி இருக்கிறது. சில நாட்களுக்கு முன் கோவிலில் அந்தணரல்லாதவரும் வேதம் பயின்று பூசனைகள் செய்ய வேண்டுமென்ற கருத்தில் stipend எல்லாம் கொடுத்து பூஜை செய்பவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள் அரசு தரப்பிலிருந்து. இதை நான் என் நினைவேட்டிலிருந்துதான் எழுதுகிறேன் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார்! ஆம் உண்மைதான் சில கோயில்களில் அந்தணர் அல்லாதவரும் கேதம் பயின்று பூசைகள் செய்ய வேண்டுமென்ற கருத்தில் ஸ்டைஃபன்ட் எல்லாம் கொடுத்து தேர்ந்தெடுத்தது.அரசு....அவர்கள் பூசை செய்கின்றார்கள். ஆனால் இப்போது புதியதாய் எடுப்பதாய் தெரியவில்லை. சிதம்பரம் கோயிலில் இது போன்ற ஔர் பிரச்சினை ஓடிக் கொண்டு இருக்கின்றாதே. இப்போதுதான் ஒன்றும் சத்தமில்லாமல் இருக்கின்றது! நம் ஊரில் பிரச்சினை வரும் போதுதான் நாம் எழுதுவோம்...ஊதிப் பெரிதாக்குவோம். பின்னர் அதன் முடிவு என்ன? தீர்வு என்ன என்று யோசிப்பதும் இல்லை, எழுதுவதும் இல்லை....

   நீக்கு
 10. நல்லதொரு முயற்சி! பாராட்டத்தக்க சம்பவம்! தொடரட்டும்! மூட நம்பிக்கைகள் அழியட்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சுரேஷ் நண்பரே! மூடநம்பிக்கைகள் அழியவேண்டும்!

   நீக்கு
 11. த ம ஏழு
  இறைவன் வாழும் ஆலயத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி தோழர்..
  நான் வழிபட விரும்பும் கோவில்களில் பட்டியலில் முதல் இடம் இப்போதைக்கு இதற்குத் தான் நன்றி தோழர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தோழரே! மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது! தங்கள் கருத்தைக் கண்டதும்! மிக்க மிக்க நன்றி !

   நீக்கு
 12. நல்ல முன்னுதாரனம் ஐயா.அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 13. கணவனை இழந்த பெண்களின் நிலை குறித்துப் பழந்தமிழ் இலக்கியங்கள் நிறையப் பேசுகின்றன..
  “கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்“ எனக் கோப்பெருந்தேவி குலைந்து நடுங்கி உயிர்விட்டதைச் சிலம்பு காட்டும்.
  உரையாசிரியர் அருமையாக இந்தத் தொடரை விளக்குவார்,
  தாயோ தந்தையோ இறந்தால் இழந்தவர்களிடம் சென்று,“ கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்குத் தாயாக அல்லது தந்தையாக இருந்து பார்த்துக் கொள்கிறேன் “ என்று சொல்லாம். ஆனால் கணவன் என்கிற உறவை இழந்தவளிடத்தில் சென்று , கவலைப்படாதே நான் உனக்கு கணவனாக இருந்து பார்த்துக் கொள்கிறேன் “ என்று சொல்ல முடியாது.
  எனவே கணவனை இழந்தவர்க்கு அந்த இழப்பை ஈடுகட்டும் உறவுண்டென்று காட்டித் தேற்ற வழியில்லை என நினைந்து கணவன் இழந்த அடுத்த கணமே கோப்பெருந்தேவியின் உடலிலிருந்து உயிர் நீங்குகிறது.
  ஆனால் கண்ணகி அவ்வாறு உயிர் துறக்கவில்லை.
  தன் கணவனைக் கொன்றவர்களைப் பழிவாங்கித் தீர்கிறாள்.
  கோவலனைத் தன் கணவனாக வரித்துக் கொண்ட மாதவி துறவு வாழ்க்கை பூணுகிறாள்.
  தரைமகள் தன் கொழுநன்தன் உடலந்தன்னை
  தாங்காமல் தன்னுடலால் தாங்கி விண்ணாட்
  டரமகளிரிர் அவ்வுயிரைப் புணராமுன்னம்
  ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்“
  எனக் கூறும் கலிங்கத்துப் பரணி.
  ஆனால் ஆசானே,
  உயிர்குடி மக்களின் புனிதம் பேண உருவாக்கப்பட்ட இந்தக் கற்பிதங்கள்,
  தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வில் இருந்ததாகத் தெரியவில்லை.
  பண்ணை அடிமைகளில் , பஞ்சமர் எனப் பழித்துரைக்கப்பட்டவரில் இல்லை ஏனெனில் ஆண்டைகளுக்குப் பெண்கள் அடிமைகளின் உற்பத்தி மூலகங்கள்.
  காளை இறந்து விட்டது என்பதற்காக எந்த முதலாளியும் பசுவைக் கொல்வதோ, சாக அனுமதிப்பதோ கிடையாது.
  பின் அவளது வேலையை யார் பார்ப்பதாம்?

  கோயில்பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
  வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
  ஞானமான பள்ளியில் நன்மையில் வணங்கினால்
  காயமான பள்ளியில் காணலாம் இறையையே”

  என்ற சிவவாக்கியச் சித்தனின் பாடலோடு நிறைகிறேன்.

  மது சொல்வதைப் போல இறைவன் உறையும் ஆலயம் தான் அது.
  பகிர்வுக்கு நன்றி
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசானே தாங்கள் தமிழிலேயே குளித்துக் கொண்டிருக்கின்றீர்களோ?! அதனால்தான் இத்தனை முத்துக்கள் உங்களால் அள்ளித் தர முடிகின்றதோ?!! அருமை! தக்னள் வழங்கிய சிவ வாக்கியச் சித்தன் பாடல்.பழந்தமி இலக்கியத்திலிருந்து உதாரணங்கள்! குறித்துக் கொண்டிருக்கின்றோம்... மிக்க நன்றி!

   நீக்கு
 14. உண்மையில் பொன்னேட்டில் பதிக்க வேண்டிய செய்திதான்.இதுவரை அறிந்ததில்லை. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி! நண்பரே! தங்கள் கருத்திற்கு! ஆம் உண்மையே!

   நீக்கு
 15. இந்த புரட்சிகரமான செயலை பொன்னேட்டில் பதிக்க வேண்டியது தான். இம்மாதிரியான சமூகச் செய்திகளை பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள். இந்த செய்தி எத்தனை பேருக்கு தெரிந்துருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது கண்டிப்பாக நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

  மேலும் இதுபோன்ற நல்ல விஷயங்களை தெரியப்படுத்துங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களது இந்த அழகான, ஆதரவான பின்னூட்டத்திற்கு! மநிச்சயமாக இது போன்ற நல்ல விஷய்ங்கள் தெரிய வரும் போது தெரியப்படுத்துகின்றோம். மிக்க மிக்க ந்னறி!

   நீக்கு
 16. மகிழ்வூட்டும் அருமையான செய்தி
  விரிவாக அருமையாகப் பதிவிட்டு அறியத் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்ன்றி ரமணி சார்! தங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 17. //இத்தனைக் காலம் விதவைகளை இறைவனிடமிருந்து அகற்றியது இறைவனல்ல. சுயநலவாதிகளான மனிதர்களே என்பதுதான் உண்மை!..//

  நியாயமான கருத்து..

  மூடத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித பேதமும் இல்லை.. மடமை நீங்கிய மனதில் தான் மகத்தான ஞானம் மலர்கின்றது..


  பொன்னேட்டில் பதிக்க வேண்டிய சமூகச் செய்தியினைப் பதிவிட்டதற்காக மனமார்ந்த பாராட்டுகள்.

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 18. அபுதாபி வந்துட்டண், டண், டண்.
  தங்களை மதுரையில் எதிர்பார்த்தேன் ஏமாற்றிவிட்டீர்கள்.
  உடன்கட்டை ஆணாதிக்கவாதிகள் உருவாக்கிய மூடபழக்க வழக்கங்கள் இன்றும் இதை ஆதரிக்கும் மூடர்கள் உண்டெனில் அவர்களிடம் நான் கேட்க விரும்புவது மனைவி இறந்தால் கணவணும் உடன்கட்டை ஏறவேண்டும் ‘’அது முதலில் நீயாக இருக்கவேண்டும்’’
  சபாஷ் அருமையான பதிவை முன்வைத்தமைக்கு நன்றி நண்பரே,,, பதிவர் சந்திப்பு பதிவில் இறங்கி விட்டேன் வேலை பழு கூடுதலாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபுதாபி போயிட்டேள்..டேள்...பேஷ் பேஷ்....துளசி ஏற்கனவே வரமுடியாத சூழல். கீதா வருவதற்கான ஏற்பாடுகள் செய்தும் கடைசியில் ரத்து செய்ய வேண்டிய சூழல் ஆகிவிட்டது. எங்களுக்கும் வருத்தம்தான் நம் அன்பர்களைச் சந்திக்க முடியாமல் போனதில். அடுத்த முறையோ இல்லை இடையில் எப்போதாவதோ சந்திக்க முடியுமா என்று காத்திருக்கின்றோம். பார்ப்போம்.....

   தங்களது கேள்வி மிக நியாயமே அதைத்தானே மீசைக்காரக் கவிஞர் சொல்லிவிட்டுச் சென்றார்.

   மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 19. நல்ல செய்தி. பல இடங்களில் இம்மாதிரி கோவில்கள் உருவாக வேண்டும். ஸ்ரீ நாராயணகுரு கேரளாவில் மிகவும் பிரபலமாயிற்றே...... தில்லியில் கூட அவர் பெயரில் ஒரு குழு இயங்கி வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் உருவானால் நல்லதுதான். நம் சமுதாயம் மாற வேண்டுமே. ஆம் கேரளாவில் ஸ்ரீ நாராயண குரு மிகவும் பிரபலம் தான். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது ஸ்ரீ நாராயண குரு தில்லியிலும் மக்களின் மனதில் வாழ்கின்றார் என்பதை தங்கள் வாயிலாக அறியும் போது.

   மிக்க நன்றி வெங்கட் ஜி!

   நீக்கு
 20. வணக்கம்
  அண்ணா.

  மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் யாரும் சொல்லாத கருத்தை மிக துணிச்சலாக சொல்லியுள்ளீர்கள் அதற்கு எனது பாராட்டுக்கள்மாற்றம் வேண்டும் .....இவற்றுக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் தம்பி ரூபன். எத்தனை நாளாகிவிட்டது! தங்களை வலைப்பக்கம் கண்டு. அறிவோம் தங்களுக்கு வேலைப்பணி அதிகம் நேரமின்மை காரணம் என்பதும்...

   மிக்க ந்னரி தம்பி வந்து கருத்து சொன்னதற்கும், பாராட்டியதற்கும்...

   நீக்கு