வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

கண்ணால் காண்பதும் பொய்.....காதால் கேட்பதும் பொய்....தீர விசாரித்து அறிவதே மெய்.மலம்புழையில், தெற்கேமலை என்னும் இடத்தில், சாலை அருகே காணப்படும் பாறைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள ஒரு சிறிய குகையிலிருந்து, கடந்த வாரம் திடீரென புகை வர ஆரம்பித்தது.  அருகே சென்று என்னவென்று அறிய முயன்றவர்களுக்கு, சகிக்க முடியாத நாற்றமும், கண்களில் எரிச்சலும், தலை சுற்றலும் ஏற்பட, எல்லோரும் உள்ளே போகப் பயந்து வெளியிலேயே நின்று விட்டார்கள்.  புகை வருவது ஓரிரு நாட்கள் தொடர்ந்ததால், எல்லோருக்கும் பலவித சந்தேகங்கள் ஏற்பட்டது.  அதில் எல்லோராலும், கொஞ்சம் பயத்துடன் அதிகமாகப் பேசப்பட்ட சந்தேகம் தோய்ந்த வாசகம், "பூகம்பம் ஏற்படும் முன் சில இடங்களில் இது போன்ற அறிகுறிகள் தோன்றுமாம்" என்பதுதான்.  அதைக் கேட்ட பாதி, கேட்காத பாதி பொதுமக்கள் "மலம்புழையில் பூகம்பம் உண்டாகப் போகிறது" என்றும், "பாலக்காட்டில் பூகம்பம் உண்டாக வாய்ப்புண்டு" என்றும், தோன்றிய இடங்களில் தங்கள் முன் தோன்றியவர்களிடம் எல்லாம் அவசியம் இல்லாமல் சொல்லி, தங்களின் தூக்கத்தையும், கேட்பவர்களின் தூக்கத்தையும்  கெடுக்கத் தொடங்கி விட்டார்கள்.


காவல்துறையினர், தீயணைக்கும் படை மற்றும் தீயணைப்பு வண்டியுடன், புகைந்து கொண்டிருக்கும் குகையை நோக்கிப் பாய்ந்தனர்.  கூடவே மலம்புழா மக்கள் மட்டுமல்ல, சுற்றுலா பயணிகளில் சிலரும் பாய்ந்தனர்.  தேவையான தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து, மிகவும் கவனமாக சில காவல்துறை மற்றும் தீயணப்பு படையைச் சேர்ந்தவர்கள் குகைக்கு உள்ளேச் சென்றன்ர்.  தலை சுற்றி வீழவோ, வெடிப்போ ஏற்பட்டால் அவர்களைக் காப்பாற்றி வெளியில் கொண்டுவர தயாராக காவல் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வெளியே  காத்திருந்தனர்.  ஏதாவது சத்தம் கேட்டால் தலை தெறிக்க ஓடி, எதிலாவது தட்டி விழுந்து தங்கள் கை, கால்களை உடைத்துக் கொள்ளத் தயாராகத் திகிலுடன் காத்திருக்கும், சாதாரண மக்கள் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு குகைக்கு வெளியே கத்திருந்தார்கள்.  


நேரடி ஒளிபரப்பாக, சம்பவத்தைப் பதிவேற்றம் செய்யத் தயாராக, மொபைல்ஃபோன்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முகனூல்காரர்களும், வலைப்பதிவ்ர்களும், ஊடகக்காரர்கள் மட்டுமல்ல நாங்களும், இங்கிருக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.  இப்படி கண்ணிமையையும், திறந்த வாயையும் மூடாமல் எல்லோரும் சில நொடி நேரங்களை நகர மறுக்கும் நிமிடங்களாக உணர்ந்து சலித்துக் கொண்டிருந்த நேரம அது.  "பிரச்சினை இல்லை போல் தெரிகிறது.  இதுவரை உள்ளேயிருந்து, கத்தல்களோ, கதறல்களோ வெடிச் சத்தமோ கேட்கவில்லை" என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.


சிறிது நேரத்திற்குப் பிறகு வெளியே வந்தக் காவல் துறையினரின் கையில் கறுகிப் போன உடல் பாகங்கள் போல் சிலவற்றைக் கண்டதும், பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி.  ஆனால், போலீசார் அதை உயர்த்திக் காண்பித்து, "பயப்பட ஒன்றும் இல்லை.  இதெல்லாம் தீவிபத்தில் கறுகிய வௌவ்வால்களின் உடல்கள்தான்.  காட்டுத்தீ படர்ந்து, இதோ இந்தக் காய்ந்த மரத்தில் பற்றிப் பிடித்து, இதன் வேர் குகைக்குள் சென்றிருந்ததால், அதன் வழியே உள்ளே சென்று, அங்குள்ள காய்ந்த செடிகள், சறுகுகள், இலைகள் மற்றும் வேரின் பகுதிகளில் எல்லாம் தீ பரவி புகை வந்திருக்கின்றது.  பின் வௌவ்வால்களின் உடல் மற்றும் அவற்றின் எச்சம் தீ பற்றி எரிந்த போது உண்டான புகைதான் கண் எரிச்சலுக்கும், தலை சுற்றலுக்கும் காரணமாகி இருந்திருக்கிறது. எனவே பயமின்றி எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள்.  வீணான பூகம்பப் பயம் எல்லாம் வேண்டாம்",  என்றதும், எல்லோர் முகத்திலும் "அப்பாடா....நிம்மதி!" என்ற புன்முறுவல்.  இப்படிக், "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்" என்ற உண்மையை உணர்ந்த மக்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.

33 கருத்துகள்:

 1. வணக்கம்
  நீங்கள் சொல்வது உண்மைதான் தீர விசாரிக்க வேண்டும் என்பதை நடந்த நிகழ்வை வைத்து எழுதிய விதம் நன்று..
  உலவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாது என்பார்கள் எப்படியாவது ஒரு விடயம் பல வகையில் திரிபடைந்து சென்றுவிடும்.... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. உண்மை சரிவர தெரியவில்லை என்றால் கதைகள் ஆரம்பம் ஆகியிருக்கும்...

  அப்பாடா நிம்மதி...

  பதிலளிநீக்கு
 4. எதையோ எதிர்ப்பார்த்து வந்தவர்கள் ,இப்படி பல்பு கொடுத்திருச்சே குகைன்னு நொந்து இருப்பாங்களே !
  நான் சென்ற முறை போட்ட கமெண்ட் இப்பதிவின் தலைப்பாகி விட்டது பொருத்தம்தான் !
  த ம 4

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் கண்ணால் பார்த்துதான் இந்த பதிவை எழுதினீர்களா அல்லது காதால் கேட்டு எழுதீனிங்களா என்று சொல்லவே இல்லையே???
  tha.ma 5

  பதிலளிநீக்கு
 6. //ஏதாவது சத்தம் கேட்டால் தலை தெறிக்க ஓடி, எதிலாவது தட்டி விழுந்து தங்கள் கை, கால்களை உடைத்துக் கொள்ளத் தயாராகத் திகிலுடன் காத்திருக்கும், சாதாரண மக்கள்//
  //நேரடி ஒளிபரப்பாக, சம்பவத்தைப் பதிவேற்றம் செய்யத் தயாராக, மொபைல்ஃபோன்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முகனூல்காரர்களும், வலைப்பதிவ்ர்களும், ஊடகக்காரர்கள் மட்டுமல்ல நாங்களும், இங்கிருக்கிறோம் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.//

  நான் ரசித்த இடங்கள்...! தொழில் முறை எழுத்தாளர் எட்டிப்பார்க்கின்றார்...!

  பதிலளிநீக்கு
 7. எதைப்பார்த்தாலும் நம் மக்களுக்கு பீதிதான்! நேரடி வர்ணனை ரசிக்க வைத்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. சரியாகச் சொன்னீர்கள் ரூபன் தம்பி! ஊர் வாயை மூடுவது கடினம்தான்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும், ஓட்டிற்கும்!

  பதிலளிநீக்கு
 9. ஆமாங்க....பல கதைகள் உருவாகியிருக்கும்....நமக்கு கடைச்சுருக்கும்...எழுத...ஒருவழியா நிம்மதி ஆகிப் போச்சுல்ல DD! அவர்களே! மிக்க நன்றி!!!

  பதிலளிநீக்கு
 10. அட! ஆமாம்ல! ஜி! என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்! தலைப்பு கொடுத்து உதவியதற்கு மிக்க நன்றி!!!!ஜி!

  பதிலளிநீக்கு
 11. மிக்க நன்றி! அன்னானிமஸ்! முகமூடி எடுத்து வரலாமே! நன்றாக இருக்குமே!

  பதிலளிநீக்கு
 12. மதுரைத் தமிழ அது தொழில் ரகசியம்க.......பரவயில்லை....நீங்க வெகு தொலைவில் அமெரிக்காவில் இருப்பதால் தைரியமாகச் சொல்லலாம் என்பதால் சொல்கிறோம்...கண்ணால் காணவில்லை....காதில் மட்டும் கேட்டு பேப்பர் படித்து சுட்டது......(என்ன கொஞ்சம் மசாலா சேர்த்து......) ஆனா செய்தி உண்மைதானுங்க.....

  பதிலளிநீக்கு
 13. நைனா என்ன நைனா இப்படிப் பாராட்டி புல்லரிக்க வைச்சுட்டீங்களே! ரரொம்ப நன்றிங்க!!!! உங்களைப் போனறு அழகாக எழுதுவோர் எங்களை ஊக்கப் படுத்துவதுதான் ......நன்றி!

  பதிலளிநீக்கு
 14. இலங்கையில் பச்சை மழை ,மஞ்சள் மழை ,சிவப்பு மழை பொழிந்த போதும்
  (இது உண்மையா என்று கூட சந்தேகம் உள்ளது )இவ்வாறே இலங்கை அழியப் போகிறது
  என்று பரவலாக கதையைக் கட்டி விட்டார்கள் .அதுவும் இக் கதை போல பொசுக்கென்று
  மறைந்து விட்டது :)))மொத்தத்தில் உண்மை எதுவென்று அறியாமல் பேசுவதைப் போல்
  ஓர் இழிவான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது தான் சகோதரா .சிறப்பான
  பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

  பதிலளிநீக்கு
 15. திர்லிங்கான பதிவு...
  இப்படி ஒரு சம்பவம்
  உயிரை பணயம் வைத்து செயல்பட்ட
  தீயணைப்பு துறைக்கும்
  காவல்துறைக்கும் பாரட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 16. ஆனாலும் வதந்தி பரப்புரதுல நம்ம ஆளுங்களை மிஞ்ச முடியாது சகோ !
  //நேரடி ஒளிபரப்பாக, சம்பவத்தைப் பதிவேற்றம் செய்யத் தயாராக, மொபைல்ஃபோன்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டு முகனூல்காரர்களும், வலைப்பதிவ்ர்களும்,// இதுல நாமளும் சேர்த்தா ?ஹா ஹா.. நல்ல வர்ணனை சகோ !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லீங்க! சகோதரி! நாம போக முடில! ஸ்கூல் இருக்கே! எல்லாம் செய்தித்தாள்ல சுட்டு கொஞ்சம் மேல சொன்ன மாதிரி மசாலா சேர்த்து.........ஏதோ முடிஞ்ச அளவு பரப்பியாச்சு!....

   மிக்க நன்றி!

   நீக்கு
 17. இப்படி ஆயிடுச்சேன்னு பீல் பண்ணினாங்களோ, வந்தவங்க எல்லாம்?

  பதிலளிநீக்கு
 18. உள்ளுக்குள்ள மோடி பீரங்கி பண்ணிக்கிட்டு இருக்கானுன்னு எவனாவது சொல்லியிருப்பானே.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
 19. தம11. இந்த வவ்வால்கள் படுத்தும் பாடு! உயிரோடிருக்கும்போதே நாற்றம் மிகுந்தவை, வவ்வால்கள். செத்தால் கேட்க வேண்டுமா? (அது சரி, பல வருடங்களுக்கு முன் மலம்புழா அணைக்கு வந்தபோது, அங்கு இரு காலகளையும் விரித்தபடி பெருத்த உடம்பினளாகிய ஒருத்தியின் சிலை இருந்தது. இப்போதும் இருக்கிறதா? )

  பதிலளிநீக்கு
 20. சரிதான் தாங்கள் சொல்லுவதும்! சகோதரி! தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 21. கண்டிப்பாகத் தீயணைப்பு துறைக்கும்
  காவல்துறைக்கும் பாரட்டுக்களைத் தெரிவித்தே ஆகவேண்டும்!

  மிக்க நன்றி! மது அவர்களுக்கு! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

  பதிலளிநீக்கு
 22. புஸ்ஸுனு ஆயிப் போச்சே! அவல் மெல்லா முடியாம போச்சேனு.....ஒருவேளை இது ஆவியின் வேலையோனு சொல்லாம விட்டாங்களே! ஓ! ஸாரி....கோவை ஆவி அல்ல மற்ற ஆவி.....நண்பரே!

  மிக்க நன்ரி!

  பதிலளிநீக்கு
 23. ஹாஹாஹாஅ.....வாங்க கோபாலன்! ஸார்! செம நக்கல்ஸ்! மோடி காமெடி சூப்பருங்க! சொல்லிருக்கலாம் என் காதுல விழாம போச்சு....உங்க காது வரைக்கும் வந்துருக்கு போல.....ரொம்ப நன்றி ஸார் தங்கள் நகைச்சுவ உணர்வுடன் வந்த கருத்திற்கு!

  பதிலளிநீக்கு
 24. ஆமாம் ஸார்! பல பழம்பெருமை வாய்ந்த கோயில்களில் கூட இந்த நாற்றம் சகிக்க முடியாதுதான்!

  அது அந்த சில எட்சி சிலை! ஸார்! அதாவது மோஹினி, ரத்தக்காட்டேரி...இதுதான் பாலக்காட்டையே பாதுகாக்கிறதாம்! ஆனா ஒண்ணு அந்த சிலை ! மட்டும் இல்லனா மலம்புழாவுக்கு யாரு போவாங்க சொல்லுங்க!

  ரொம்ப நன்றி ஸார் தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்!

  பதிலளிநீக்கு
 25. இந்த நிகழ்வு ஆவிப்பா புத்தகம் வெளிவந்ததற்கு முன் நடந்தா?
  அல்லது பின்னேயா ?

  ஆவிப்பா தன இதயத்தில் இருந்து வெளியே வரும் பெருமூச்சாக இதை எண்ணி இன்னொரு கவிதைத் தொகுப்பு செய்யவும் வாய்ப்பு உள்ளது.

  எனிவே,
  வவ்வால் புராணம்
  லவ்வால் ஆக இருந்தது. ( லவ் ஆல் என்றும் எடுத்துக்கலாம் )

  எந்த ஒரு விஷயத்தையும் தலை முதல் கால் வரை, சாரி,வால் வரை ஆராய்ந்துகொண்டே போனால்,

  இறுதியில், சுவாரசியம் குன்றி விடும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒன்றே
  போதும்.

  சுப்பு தாத்தா.
  www.wallposterwallposter.blogspot.in

  பதிலளிநீக்கு
 26. தாத்தா, இது ஆவிப்பா புத்தகம் வெளிவந்த பின் நடந்து! வவ்வால், லவ்வால் ...தாத்தா நல்ல எதுகை மோனை!

  பின்னூட்டத்தை ரசித்தோம்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 27. விதம் விதமாய் கதை கட்டிவிடும் வாய்ப்பு உள்ள நிகழ்வு.

  தீர விசாரிப்பதே மெய் :))))

  பதிலளிநீக்கு