திங்கள், 3 பிப்ரவரி, 2014

கேரளத்தில் கம்யூனிஸத்திற்கு கால் இடறுகிறதா?


     கடந்த 28.01.2014 அன்று T.P. சந்திரசேகரனின் கொலை வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்ட்து.  அரசியல் காரணமாகத்தான் T.P. சந்திரசேகரன் கொல்லப்பட்டார் என்றும், அரசியல் விரோதிகளும் அவர்களுக்கு உடந்தையான கொலையாளிகளும் தான் நடந்தக் கொலைக்கு உத்தரவாதிகல் என்றும், ரகசியப் பேச்சு வார்த்தை நட்த்திய 3 CPI (M) கட்சி உறுப்பினர்களுக்கும், 7 கொலையாளிகளுக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட்து.  2012, மே 4 ஆம் தேதி, உடலில் 51 வெட்டுக் காயங்களுடன், T.P. சந்திரசேகரன் மரணமடைந்த சம்பவம் கேரளத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று.  கோழிக்கோடு, வடகரை அருகே, ஒஞ்சியம் பஞ்சாயத்து தேர்தலில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸக் கட்சிக்கு ஏற்பட்ட்த் தோல்வி, மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து தொடங்கிய RMP (Revolutionary Marxist Party) கட்சித் தொண்டர்களுக்கும், CPI (M) தொண்டர்களுக்கும் இடையே பல முறை ஏற்பட்ட மோதல்களும், வடகரையில் கிடைக்க வேண்டியிருந்த பாராளுமன்றத் தொகுதி CPI (M)  க்கு கிடைக்காமல் போனதற்கு T.P. தான் காரணம் என்பதும், கொலைக்குப் பின்னிலுள்ளக் காரங்களாகக் கருதப்படுகின்றன.


     T.P. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மிகவும் நேர்மையான, திறமை மிக்கத் தலைவராக நீண்டகாலம் தொண்டாற்றியவர்.  கட்சியில் அவருக்கும், கட்சியின் மேல் தட்டு தலைவர்களுக்கும் இடையே உண்டான கருத்து வேறுபாடுகளும்,

V.S. அச்சுதானந்தன்அவர், V.S. அச்சுதானந்தனின் ஆதரவாளர் என்பதும், அவரைக் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய ஒரு சூழல் உண்டாக்கியது.  மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து, முன்பும் இது போல் பல தலைவர்கள், பல காரணங்களுக்காக வெளியேறவோ, வெளியேற்ப்படவோ வேண்டியச் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கே.ஆர். கௌரி அம்மா
எம்.வி.ராகவன்

திருமதி கே.ஆர். கௌரி அம்மாவும், திரு. எம்.வி. ராகவனும், மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி சொந்தமாகக் கட்சி ஆரம்பித்து, காங்கிரஸ் கூட்டணியுடன் சேர்ந்து அமைச்சர்களாகவும் ஆகியிருக்கின்றார்கள். அதுபோல், அப்துல்லாக் குட்டியும், செல்லராஜுவும் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்து, தேர்தலில் வெற்றியும் பெற்ரு, காங்கிரகாரகளாகவும்,  மஞ்சளாம்குழி அலி என்பவர் மார்க்ஸிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி முஸ்லிம் லீக்கில் சேர்ந்து தேர்தலில் வெற்றியும் பெற்று, இப்போது அமைசராகவும் இருக்கிறார்.


T.P. அப்படியெல்லாம் செய்யாமல் தனியே கட்சி ஆரம்பித்து, அவர் பின்னில் மார்க்ஸிஸ்ட் தொண்டர்கள் அணிவகுத்தும், மேடைப் பேச்சுக்களில் அஞ்சா நெஞ்சம் படைத்த அவர் வெளிப்படுத்திய பல விஷயங்களும், மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும், கட்சியின் வட்ட, மற்றும் மாவட்டத் தலவர்களுக்கும் வேதனையையும், கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம்.  அவர்களுக்கு T.P. ஒரு தீராத தலைவலியாக மாறியே விட்டார்.  அவருடைய புதிய கட்சியும், அதற்கு கிடைக்கும் ஆதரவும், அது போல் மாநிலத்தின் பலபாகங்களிலும் வி.எஸ். அச்சுதானந்தனின் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பலதும் நஷ்டமாவதைக் கண்டு, கொந்தளித்த பலரும் கட்சித் தலைமைக்கு,  T.P. யைப் போல் எதிர் குரல் கொடுக்கத் தொடங்கியதும், பெரும் பிரச்சினையாக ஆனது.  ஷோர்னூரில் முரளி, T.P. போல் கட்சிக்கு எதிரே தெர்தலில் தன் ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றியும் பெற்று விட்டார்.  பாலக்காடு முண்டூரில் கோகுல்தாசன் எதிர்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.  விளைவோ, கட்சியின் எதிர் அபிப்ராயம் சொல்லும் தொண்டர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமயத்தை வீணாக்குவதை விட, அதிரடி நடவடிக்கை எடுக்க கட்சி செயலாளர் பினராயி விஜயன் தீர்மானித்தார். 
T.P. குடும்பம்

ஸ்டாலினைப் போல் மார்க்ஸிஸ்ட் கட்சியை கட்டிக் காக்க முகம் பாராது எந்தவிதக் கடினமான நடவைக்கையும் எடுக்கத் தயங்காத அவர் கட்சித் தலைமையை எதிர்ப்பவர்க்கு எதிரே, பதவிப் பறிப்பு, சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை எடுக்கத் தொடங்கிவிட்டார்.  இதற்கிடையில், T.P. மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு ஒரு பெரும் பிரச்சினையும் ஆகிவிட்டார்.  தொழிலாளர் நலம், சமத்துவம், சமூக நன்மை, போன்றவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்ஸிஸ்ட் கட்சி, கேரளத்தில் கல்வி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முக்கிய பங்கு வகித்த மார்க்ஸிஸ்ட் கட்சி, இந்தியாவில் முதன் முறையாக உழுதவனுக்கு நிலமும், உரிமையுடன் வாழும் வீடும், நிலக் கிழார்களிடமிருந்து ஏழைகளுக்குப் பெற்றுத் தந்த கட்சி, சாதிமதம் பேதம் பாராது கொடுமைக்காரர்களான நிலக் கிழார்களையும், சாதிமத வெறியர்களையும் ஆயுதமேந்தி அழித்த மார்க்ஸிஸ்ட் கட்சி தான், கட்சியைவிட்டு வெளியேறும் முன்பு வரை மார்ஸிஸ்ட் கட்சிக்காக அயராது பாடுபட்ட, கம்யூனிஸத்தைத் தன் உயிருக்கும் மேலாக நேசித்த, பெரும்பான்மையானோரின் அன்புக்கும், மரியாதைக்கும் பாத்திரமான, மஞ்சேஸ்வரம் முதல் பாரசாலை வரையுள்ள மலையாளிகளால், “முதுகெலும்புள்ள நல்ல நேர்மையான ஒரு அரசியல்வாதிஎன்று பாராட்டப்பட்ட ஒரு நல்ல கணவனும், தந்தையும், மகனுமாய் குடும்பத்தினருக்கு அன்பும், பாசமும் காட்டி வாழ்ந்து வந்த T.P. எனும் கம்யூனிஸ்டை, ஏசுநாதரை சிலுவையில் ஏற்றப் போகும் போது, தனக்கு இதில் பங்கில்லை என்று கை கழுவிய மன்னனைப் போல் வட்டம் அம்ற்றும் மாவட்டக் கட்சித் தலைமைப்  பொறுப்பிலுள்ள சிலர், T.P. யை அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற போது, கட்சித் தலைமை தன் கைகளைக் கழுவி, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் கேரளத்திலுள்ள  மனசாட்சி உள்ள மக்களுக்கு வரத்தான் செய்யும்,  போதாதற்கு, தீர்ப்புக்குப் பின் குற்றவாளிகளைக் கண்ணூர் மத்திய சிறைச் சாலிக்குக் கொண்டு போன வாகனங்களின் பின்னே, “செங்கொடியுடன் ஒரு வாகனம் அவர்களைப் பின் தொடர்வதையும், கடந்த தினம், திரு. கொடியேரி பாலகிருஷ்ணன், சிறைச்சாலைக்குச் சென்றுக் குற்றவாளிகளைக் கண்டதும், கண்டதற்கானக் காரணங்களை விவரித்ததையும் சானல்கள் வழியாக ஏராளமானவர்கள் பார்க்கவும் செய்தபின்.

கேரளத்தில், கட்சிகள் மத அடிப்படையில் உருவாக்கப்படவில்லை என்று சொன்னாலும், முஸ்லிம் மற்றும் கிறித்தவ மதத்தினரின் ஓட்டுக்களால் உயிர் வாழும் கட்சிகளான முஸ்லிம்லீக் மற்றும் கேரளா காங்கிரஸ்களின் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்க மார்க்ஸிஸ்ட் கட்சி மிக மிக அவசியம். அது மார்க்ஸிஸ்ட் கட்சியால்தான் முடியும்.  நிகழ்ந்த தறுகளுக்கு என்னென்னக் காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மையாக ஒரு கம்யூனிஸ்டைக் கொன்றது  பாவமே!  வேலியே பயிரை மேய்வது போல் அது சம்பவிக்கக் கூடாதுதான்.  நீதியை நிலை நாட்டவும், தவறுகளைச் சுட்டிக் காட்டவும் ஒரு நேர்மையான கம்யூனிஸ்ட் தவறக் கூடாது என்பதற்கு பதிலாகச், சில நேரங்களில் கம்யூனிஸ்ட், சில சம்பவங்களை “காணவில்லை, கேட்கவில்லைஎன்றிருக்க வேண்டும் என்றால், Capitalism முதலாளித்துவத்திற்கும், கம்யூனிசத்திற்கும் இடையே இடைவெளி குறைய ஆரம்பித்து விட்டது என்ற எண்ணம் சாதாரண மக்களின் மத்தியில் உண்டாகத்தான் செய்யும். அது தவிர்க்கப்பட வேண்டும்.  இது போல் தவறுகள் இனியும் உண்டாகாமல் இருக்க வேண்டும். கட்சியை விட்டு வெளியேறியவர்களைத் திரும்பக் கொண்டுவர முயற்சிகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.  மேலும், கருத்து வேறுபாடு இல்லாமல் ஜனநாயக முறையில் தீர்மானங்கள் எடுக்கபட்டு, இது போல் இனி ஒரு T.P. கட்சிக்கு எதிராக கட்சியில் இருந்து வெளியேறி கொல்லப்படுமரு நிலை கேரளத்தில் உருவாகாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  கடந்த வாரம் 1000க் கணக்கான பி.ஜே.பி.க்காரர்கள் தங்கள் கட்சியை உதறி மார்க்ஸிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டதால், கட்சிக்கு உண்டான ஒரு லாபத்தை விட, நம் இந்த ஒரு T.P. யின் இழப்பு மார்க்ஸிஸ்ட் கட்சிக்குரு பெரும் சேதம் என்பதை மறக்கக் கூடாது

16 கருத்துகள்:

 1. வணக்கம்
  நண்பரே.
  அரசியல் என்பது ஒரு நீரோட்டம் போன்றது..... என்னவென்றாலும் நடக்கலாம்..... நீதிக்கு குரல் கொடுக்கும் எந்த மனிதனும் நீண்ட நாள் வாழ்ந்தாக இல்லை.... அரசியல் கண்ணோட்டாம் மிக அருமையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..

  -நன்றி-
  -அன்புன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // நீதிக்கு குரல் கொடுக்கும் எந்த மனிதனும் நீண்ட நாள் வாழ்ந்தாக இல்லை..// மிகச் சரியான வார்த்தைகள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. மூச்சு விடாமல் எழுதினீர்களா...? அப்படித்தான் படிக்க முடிந்தது...! ஹிஹி...

  நானும் அரசியல் பற்றி எழுத தயாராகி விட்டேன்... புதன் அன்று (சிரிக்க) காணத் தவறாதீர்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிடி! அவர்களே! எழுதற மேட்டர் அப்படிப்பட்ட மெட்டர் ஆச்சே! சுற்றும் முற்றும் பார்த்த் பயந்து பயந்து எழுத வேண்டியது ஆச்சே!. எழுதி முடிக்கறதுக்கள்யும் அறுவா எந்த பக்கத்துலருந்தும் வரலாம் அதான்....அதுக்கு முன்னாடி எழுதிடனுமே....கேளடி கண்மணில மூச்சு விடாம எஸ்.பி.பி. பாடலையா அதை விடவா!!!!???

   தங்கள் நகைச்சுவை உணர்வு அபாரம்....ரசித்து சிரித்தோம்.....போடுங்க போடுங்க அரசியல் பதிவு.....ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்...!! நகைச்சுவை என்று சொல்லுங்கள்!!!!!

   நன்றி!

   நீக்கு
 4. # ஒரு T.P. யின் இழப்பு மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு பெரும் சேதம் என்பதை மறக்கக் கூடாது#
  சம்பந்தப் பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் பகவன் ஜி! உணர வேண்டும் என்பதுதான் ஆசை! பர்ப்போம் இனியும் இது போன்று நடக்க்காமல் இருந்தால் சரி!

   நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 5. பதில்கள்
  1. மிகச் சரியே! அதுதான் நடந்து கொண்டிருக்கின்றாது. மிக்க நனேய் தங்கள் கருத்திற்கு!!!

   நீக்கு
 6. கேரள அரசியல் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால் அவர்கள் மத ரீதியாக பிளவுபட்டுக் கிடக்கிறார்கள் என்று மட்டும் கேள்விப்பட்டுள்ளேன். சிபிஎம் கட்சியின் லட்சணமே இப்படியென்றால் வேறென்ன நடக்கும் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சிபிஎம் கட்சியின் லட்சணமே இப்படியென்றால் வேறென்ன நடக்கும்//

   நீங்கள் சொல்லுவது மிகச் சரியே! விசுவின்....பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்க வேண்டிய வைத்தியற்க்கே பைத்தியம் பிடித்தால் எந்தப் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியரைக் கொண்டு வந்து இந்தப் பைத்தியத்திற்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியரை குணப்படுத்துவது....என்பது போலத்தான்....

   சாதி இன மத வெறியர்களை தட்டிக் கேட்க வேண்டிய திறன் படைத்த இட்ந க் அட்ச்சியே இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது....

   தங்கல் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 7. கேரள அரசியல் குறித்து
  அதிகம் தெரியாததால் கருத்தூன்றிப் படித்தேன்
  அறியாத பல விஷயங்களை அறிய முடிந்தது
  பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.!!!!
   நீக்கு