மே 4, திங்கள் இரவு 11.30 ற்கு பேக் அப் சொல்லும் போது, சோர்ந்திருந்த, களைத்திருந்த எல்லோரது முகத்திலும் சின்னதாக முளைத்த மகிழ்ச்சி, பின் வினாடிக்கு வினாடி பெரிதாகி, அடுத்த அரைமணி நேரம் கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஒவ்வொரு சம்பவத்தையும், அலசி, விவிமரிசித்து எல்லோரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தியது. Poet the Great எனும் குறும்படம் இரண்டு வருடங்களுக்கு முன் என் மனதில் உருவானது, இதோ இப்போது உயிர் பெற்று விட்டது. இனி இக்குழந்தை இவ்வுலகில் எங்கேனும், எப்படியேனும் வாழ்ந்து கொள்ளும்.
நான்கு குறும்படங்கள் எடுத்ததனால், ஐந்தாவது குறும்படம் எளிதாக எடுத்துவிடலாம் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது.எதிர் பார்க்கக் கூடாது . ஒவ்வொரு குறும்படமும் ஒரு பிரசவம் போல்தான். இது ஐந்தாவது பிரசவம்.ஐந்தாவது குழந்தையும் 'மூக்கும் முழியுமாக' ஊனமின்றி பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைதான் எப்போதும் !.முக்கியமாக அந்த இரவு 11.30 வரை.இனி பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுத்து, நீராட்டி, பாலூட்டி, அதன் சிறுநீரில் நனைந்து, அதனைக் காணும் உற்றாரும், உறவினரும் நண்பர்களும் சொல்லும் மனதுக்கு இதமான வார்த்தைகளைக் கேட்கும் வரை பிரார்த்தனை தொடர வேண்டிய ஒன்றுதான்.
மார்ச் முதல் வாரம்தான் திரைக்கதை உருப்பெற்றது. அதன் முன்பே கதா பாத்திரங்களைக் கையாள வேண்டியவர்களின் பட்டியல் தயாராகி இருந்தது. Soni சார், நிலம்பூரில் கடந்த 30 வருடங்களாக "கிளாசில் காலேஜ்" எனும் தனியார் கல்லூரியைச சிறப்பாக நடத்திவரும் நண்பர் Poet The Great ஆக , கீரபாணியாக நம் ஆவி, மேய்யப்பனாக நம் குடந்தையூர் ஆர் வி சரவணன், மல்லையனாக நம் பால கணேஷ், கோணம்புள்ளி சித்தராக நம் ராயசெல்லப்பா, கோப்பசாமியாக நம் கவியாழி, கண் ணை யனாக "கார்பெண்டர் த க்ரேட்டாக நடித்த நண்பர் பாலகிருஷ்ணன், நாகப்பனாக நண்பர் விபின், பழநியப்பனாக நண்பர் முகமத் அலி , வள்ளியாக கலாமண்டலம் பிலஹரி, எழுத்தாளராக நண்பர் கோபாலகிருஷ்ணன், துஞ்சன் மடத்துக் கண்காணிப்பாளராக நண்பர் ராதாகிருஷ்ணன். சாரங்கபாணியாக நான், காளியம்மாவாக(பாடி நடிக்கும் ) நம் கீதா என்று இப்படியாக முடிவாகி இருந்தது. எல்லோரும்சம்மதம் தெரிவித்து , படப்படிப்பு நடக்கவிருக்கும் மே 3,4, தேதிக்கு ஒருவாரம் முன்பு வரை படப்பிடிப்புக்கு வரத் தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்கள்.
கேமரா மேனாக மாகாமுடி த க்ரேட் ஒளிப்பதிவும், படத் தொகுப்பும் செய்த ரமேஷ் ஆனிக்கொடு வர உறுதியளித்திருந்தார். இடையில் துபாயிலிருந்து ஒரு மாத விடுமுறைக்கு வந்த அவரது மைத்துனரின் திருமண நிச்சயம் 3ஆம் தேதி என்று தீர்மானித்ததால், அவர் 3ம் தேதி வரவியலாது என்றார். அதிர்ந்த நான் வேறு ஒரு நாளுக்குப் படப்பிடிப்பை மாற்றுவது இயலாத காரியம் ஆனதால், என்மூன்று குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த அஜித்தைக் கூப்பிட்டு விவரம் சொன்னேன். இரண்டாம் தேதி கண்ணூரிலும், மூன்றாம் தேதி மாலை திருச்சூரிலிலும் படம் பிடிக்கப் போக வேண்டும், இருந்தாலும் 3 ஆம் தேதி படப்பிப்பிற்கு வேறு ஆளை ஏற்பாடு செய்து அங்கு வந்துவிடுகின்றேன் என்றதும் "அப்பாடா" என்று இருந்தது. இதனிடையே ராயச் செல்லப்பா தவிர்க்கமுடியாத சில காரணங்களால் தன்னால் 3, 4 தேதிகளில் வர இயலாது என்றதும், பதிலாக எழுத்தாளராக வரும் கோபாலகிருஷ்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்க முடிவு செய்தேன், அவரையும் சம்மதிக்க வைத்து, மேக்கப் மேனுடனும் பேசி, அவருக்கு வித்தியாசமான வேஷம் போட முடிவும் செய்தேன். உடனே வந்தது அஜித்தின் போன். "திருச்சூர் போக வேறு ஆள் கிடைக்கவில்லை. எனவே 3ஆம் தேதி 2 மணிக்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூர் போக வேண்டும் . அன்று எடுக்க வேண்டியதை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம்" என்றதும், மீண்டும் தளர்ந்துவிடேன். 3ஆம் தேதி எடுக்க வேண்டியக் காட்சிகளின் வரிசையை மாற்றி அக் காட்சிகளை 4 ஆம் தேதி எடுக்க முடிவு செய்தேன்.
மே 1 ஆம் தேதி, நண்பர் முகமது அலியின் போன்! "தன்னால் 3 ஆம் தேதி வர முடியாது" என்றார். அதிர்ந்து போனேன். வேறு யார் ? ஒரு வசனம்தான். பேச கதாபாத்திரம் வேண்டுமே! பாலகிருஷ்ணன் சார் தன மருமகன் ஆசிரியரான ராஜகோபாலனை அந்தக் கதபாத்திரம் செய்ய அழைத்துவரச்சம்மதித்ததும் "அப்பாடா" என்று இருந்தது. அன்று இரவு கீதாவின் போன் " கவியாழிக்கு டிக்கட் கன்பார்ம் ஆகவில்லை எனவே அவரால் வர இயலாது. மட்டுமல்ல திண்டுக்கல்தனபாலனுக்கும் 3ஆம் தேதி வர இயலாத சூழல் " என்றதும் தலை சுற்றி விழ வேண்டிய நிலைக்கு வந்த என் சூழல் மிகவும் பரிதாபகரமாகிவிட்டது. எனக்கு உண்மையிலேயே விசுAwesome சொல்லும் பேய் அறைந்தது போலானேன் என்பது இதுபோல் ஒரு சூழலாகத்தான் இருக்கும் என்று புரிந்தது ...என்ன செய்வது ?...யாரை பிடிப்பது?..Parol குறும்படத்தில் வில்லன் கதாபாத்திரம்செய்த அபிஜித்தை கூப்பிட்டேன் .ஓகே என்றதும் சமாதானம் . கவியாழி அவர்களின் கதாபாத்திரத்தை அபிஜித்திற்கு கொடுக்கலாம். ஆனால், திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கதாபாத்திரத்தை யாருக்குக் கொடுப்பது என்ற குழப்பம் ஏற்பட, கார்பெண்டர் த க்ரேட்டில் அரசனாக வந்த நண்பர் மாதவதாசிடம் கேட்க அவரும் சரி என்று சொல்லபோன உயிர் திரும்ப வந்ததுபோல் இருந்தது . நாளை (மே 3, 4 ) படப்பிடிப்பு என்று உறுதியாகிவிட்ட சந்தோஷத்தில் பார்பர் கண்ணனின் முடிதிருத்தும் நிலையத்திற்குச் சென்று சாரங்கபாணிஆக மாற மொட்டை அடித்துக் கொண்டேன். சனி இரவு, கீதா, ஆவி, குடந்தையார் வந்து சேர்ந்தனர். நிலம்பூரிலிருந்து நண்பர் சோனியும் வந்தார். பாலக்காடு கைரளி தங்கும் விடுதி யில் அன்று எல்லோரும் தங்கினோம். மறுநாள் காலை பாலகணேஷ் அவர்கள் 41/2 மணியளவில் வந்து சேர அவரை ஆவி அழைத்து வந்தார். (இங்கு ஒரு சுவையான நிகழ்ச்சி ஒளிந்திருக்கின்றது. அதை ஆவியோ, பாலகணேஷோ வெளிபடுத்த வாய்ப்புண்டு.)
இந்தப் படத்தில் அமர்ந்திருக்கும் இளைஞர் திவான் அவர்கள் வளரும் இயக்குனர்.
2மணிக்குத் திருச்சூர் போக வேண்டிய அவசரத்தில் காமெராமேன் அஜித்!... கையில் வாளுடன் குடைந்தையூராரைக் குத்தக் காத்திருக்கும் பாலகணேஷ் !.... எல்லோரும் டென்ஷனுடன்!... மீண்டும் மீண்டும் டேக்குகள் எடுத்தும் காட்சிகள் ஒகே ஆகவில்லை...! எப்படியோ ஓரளவு சமாளித்து ஒருசில காட்சிகள் மட்டும்அவசரமாக எடுத்தோம். 2 மணிக்குக் காமெராவுடன் அஜித் திருச்சூர் ஓட, நாங்கள் வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லாததால் ,சமதானத்துடன் அங்கு அமர்ந்து மதிய உணவு உண்டோம். பின் எல்லோரும் ஓய்வெடுக்கப் போனோம். மறுநாள் நானும் மேக்கப் மேனும், காமெரா மேனும், இரண்டு நடிகர்களுடன் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சித்தூர் துஞ்சன் மடம் செல்ல வேண்டும்!.... முந்தைய நாள் எடுக்க வேண்டிய இரண்டு காட்சிகள் வேறு எடுக்க வேண்டும்!... மறு நாள் காலை 6 மணிக்கு நண்பர் விபினிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. கம்யூனிஸ்ட் கட்சித தொண்டர் ஆர்.விஜயன் வடகஞ்சேரியில் நேற்று கொல்லப்பட்டதா ல்அன்று ஆலத்தூர் தாலுகாவில் ஹர்த்தால்! நாங்கள் இருக்குமிடம் பாலக்காடு தாலுகா ...ஆனால் படப்பிடிப்பு நடக்குமிடம் ஆலத்தூர் தாலுகாவில் !.....எப்படி சமாளித்தோம்........தொடரும்......அடுத்த பகுதியில்.
(நாங்கள் இருவரும் சிறிது வேலைப் பளுவில் இருப்பதால் நன்பர்களின் வலைப்பக்கம் வர இயலவில்லை. மே 11 ஆம் தேதிக்குப் பிறகு தங்கள் வலைப்பக்கம் வந்துவிடுவோம். )
படப்பிடிப்புத் தளம், மேக்கப் என எல்லாமும் குறும்படத்தைக் காணும் ஆவலைத் தூண்டுகின்றன. வெற்றிபெற வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்கு(ஹும்ம்ம், இதில் கீதா யாராக இருக்கும் !!)
மிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குஉங்களது முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்.. முடிந்தால் படங்களை பெரியதாக இடவும் நன்றி
பதிலளிநீக்குமிக்க நன்றி தமிழா! தங்களின் வாழ்த்திற்கு. படங்களைப் பெரிதாக இடவும் செய்கின்றோம்...
நீக்குஅந்த ஹர்த்தால் மற்றும் அதனால் ஏற்பட்ட சிறு இடைஞ்சலல் மறக்க முடியாதது என்றாலும் குறும்படக் குழந்தை புஷ்டியாகவே பிறந்துள்ளது என்பதில் மனம் நிறைய்ய மகிழ்ச்சி எனக்கு. ஆவி என்னை ரிசீவ் செய்த விஷயத்தைத் தனியாகவே எழுதலாம் இல்லை..? ஐடியாவிற்கு நன்றி.
பதிலளிநீக்குஹஹஹஹஹஹ் கண்டிப்பாக ஆவி தங்களை ரிசீவ் செய்ததை எழுதலாமே! ம்ம் ஹர்த்தால் அன்று கொஞ்சம் நிறையவே படுத்துவிட்டது.....எப்படியோ உங்கள் எல்லோரது ஒத்துழைப்புடனும் நன்றாக முடிந்தது! மிக்க நன்றி!
நீக்குஆனந்த் மற்றும் பாலகணேஷ் மேக் அப் மிரட்டுகிறது. படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. காத்திருக்கிறோம் ஆவலுடன்.
பதிலளிநீக்குஹஹ்ஹா மிக்க நன்றி நண்பரே! இன்னும் எடிட்டிங்க் ஆரம்பிக்கவில்லை முடிந்து வருவதற்கு அடுத்த மாதம் ஆகிவிடும்.....
நீக்குஒவ்வொரு ஆக்கபூர்வமான முயற்சியும் ஒவ்வொரு விதமான அனுபவங்களைத் தரும் என்பதே உண்மை. தாங்களும், தங்கள் குழுவினரும் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியின் அறிமுகம் அறிந்து பெருமை கொள்கிறோம். ஐந்தாவது குறும்படக் குழந்தை வெற்றிவாகை சூட மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். திரையில் தோன்றும் கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கு! பாராட்டிற்கும்!
நீக்குதங்களின்முயற்சிக்க வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதங்களின் குறும்படத்தினை உடனே காணும் ஆவல் எழுகிறது
படம் பெற்றி பெற நல் வாழ்த்துக்கள் நண்பரே
தம 1
மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குகுறும் படம் என்றாலும் அதுவும் ஒரு திரைப்படத்திற்கு இணையான சவால்களை கொண்டது தான். வெற்றிகரமாக முடிந்த குறும் படம் பல விருதுகள் வென்று உலகஅளவில் மிளிர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குத ம 2
மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குகொண்டாட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன்...
பதிலளிநீக்குபரவாயில்லை டிடி அடுத்த முறை கலந்து கொள்ளலாம் மட்டுமல்ல வெல்லூரில் நாம் சந்தித்துக் கொண்டாடுவோம்.
நீக்குகட்டுரையின் ஆரம்பத்தில் தாங்கள் குறிப்பிட்டது மிகச் சரி. அப்படியே லைவ் ரிப்போர்ட் ஆகவே தந்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது. கலந்து கொண்டதில் மகிழ்ச்சி யும் மனநிறைவும் கிடைத்தது மிக்க நன்றி சார்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சரவணன் சார்! எங்களுக்கும் மிகவும் மகிழ்ச்சி! மன நிறைவும்தான். தங்கள் எல்லோரது கூட்டு முயற்சிதானே சார் இந்த படம்....
நீக்குமுயற்சி திருவினையாகட்டும்..
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குஒரு திரைப்படம் எடுப்பது என்பதன் பின்னணியில் எத்தனை எத்தனை வேலைகள், எவ்வளவு ஆட்கள் என்று ஒவ்வொரு திரைப்படத்தின் போதும் காட்டப்படும் பெயர்களைப் பார்த்து வியந்து போவேன். இப்போது உங்களது அனுபவம் அதையே நிரூபிக்கிறது. உங்களது ஐந்தாவது குழந்தை நல்ல நீண்ட ஆயுளுடன் ஓடி விளையாட ஆசிகள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குஇந்த மாதிரியான இடர்கள் சிலவற்றை நாடகம் மேடையேற்றுவதில் சந்தித்திருக்கிறேன் குறும் படத்தினை இயக்குவதிலும் சிரமங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது, ரிஹர்சலுக்கு வந்து கதாபாத்திரமாகவே மாறி இருந்தஒருவர் வராவிட்டால் ஏற்படும் இன்னல்கள்நினைத்து பார்க்க இயலாதது. நாடகத்துக்கு அரங்கம் புக் செய்து அட்வான்ஸ் கொடுத்து எல்லோரும் வசனங்களை மனப்பாடம் செய்திருக்க முக்கிய பாத்திரதாரர் வர இயலவில்லை என்ற நிலை வந்தபோது அந்த நாடகத்தின் இயக்குனராக இருந்த நானே நடிக்க வேண்டி இருந்தது மறக்க முடியாது. குறிப்பிட்ட கதாபாத்திரங்களுக்கான நண்பர்கள் வராதபோது உங்கள் மனம் எவ்வளவு துன்பப் பட்டிருக்கும் என்பதை அறிய முடிகிறதுALL IS WELL THAT ENDS WELL வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதாங்களும் இது போன்ற பின்னணியில் இருந்ததால் தங்களால் புரிந்து கொள்ள முடிகின்றது சார்! எங்களாலும் புரிந்து கொள்ள முடிகின்றது. எங்களுடையதாவது குறும்படம் காணொளி, அதுவும் டெக்னாலஜி யுகம். தங்களின் காலகட்டம் அதுவும் மேடை நாடகம் லைவ் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று நினைத்துப்பார்க்க முடிகின்றது.....தங்களின் வாழ்த்திற்கு மிக்க நன்றி!
நீக்குகாண ஆவலுடன்..குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குபடங்களை பார்க்கவே குறும்படம் காண ஆவலை தூண்டுகிறது. முயற்சி வெற்றி அளிக்க வாழ்த்துக்கள் சகோ ....!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குமுயற்சி முடிந்தபின் முற்றும் காண ஆவல்!
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குவணக்கம் நலமா இதனால்தான் வலைப்பதிவு வரவில்லையா தங்களது முயற்சி வெற்றி பெற எமது வாழ்த்துகள் தொடர்கிறேன்
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் நுழைக்க 7
ஆமாம் நண்பரே! இதனால்தான்.....மிக்க நன்றி தங்களின் வாழ்த்துகளுக்கு!
நீக்குதடங்கலுக்கு வருந்துகிறேன். எழுத்தச்சனின் வரலாறான குறும்படத்தில் வரலாறு பதிக்க முடியாமல் போனதற்கு மீண்டும் வருந்துகிறேன். எனினும் என்னைப்போலவே இளம்தொப்பையுடைய இன்னொருவர் உங்களுக்குக் கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா, சென்னை
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்! பரவாயில்லை சார். உங்கள் வேடம் அவரல்ல சார். அவர் திரு கோபால கிருஷ்ணன் பெரியா தாடியுடன் ஜடா முடியுடன் இருக்கின்றாரே அவர்தான். மிக்க நன்றி வாழ்த்துகளுக்கு சார்!
நீக்குஎன்னால் தான் கலந்து கொள்ள இயலவில்லை என்ற வருத்தம் இருக்கிறது சார், மன்னிக்கவும்... அடுத்த முறை உங்கள் பயணத்தில் நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன். ஒருவழியாக இனிதாக படப்பிடிப்பு நிம்மதியை தருகிறது , விரைவில் திரையில் காணும் ஆவலில் இருக்கிறேன் ...
பதிலளிநீக்குமிக்க நன்றி அரசன்! நிச்சயமாக தாங்களும் அடுத்த படத்தில் கலந்து கொள்ளவேண்டும்.
நீக்குஉங்கள் பதிவு பலரை குறும்பட உலகிற்கு இழுத்துவரும் என்று நினைக்கிறன்
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குPOET THE GREAT - குறும்படம் இரண்டு வருடங்களுக்கு முன் தங்களின் மனதில் கருவாகி உருவான கதையை... மார்ச் முதல் வாரம் திரைக்கதையாக்கி..அதை குறும்படமாக எடுக்க எடுத்துக் கொண்ட முயற்சியை... குழந்தையைப் பிரசவிக்கின்ற பொழுது ஏற்படும் வேதனையை விளக்கி...அதுபோல படம் எடுத்ததை அருமையாகச் சொல்லி இருந்தீர்கள்.
கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து...அவர்களை அன்றைய தினத்தில் நடிக்க வைப்பதற்கும்...பாடு பட்ட மனநிலையை ‘ உண்மையிலேயே பேய் அறைந்தது போலானேன்’ என்று மனம் தவித்த தவிப்பை... இதயத் துடிப்பை எழுத்தில் காட்டியிருந்தீர்கள்!
ஒப்பனைகளே ஓகோவென்று இருக்கிறது...! அதிலும் நீங்கள் மொட்டை போட்டு விட்டீர்கள் சத்யராஜ் போல...! ஆவியின் அசத்தலான தோற்றம்... குடந்தையூரார், பாலகணேஷ் பட்டை தீட்டிய வைரங்களாக ஜொலிக்கிறார்கள்...! படங்களைப் பார்க்கினற பொழுது... படப்பிடிப்பு இடங்களைக் காணுகின்ற பொழுது... படம் அருமையாக வந்திருக்கும் என்ற எண்ணம் தோன்றுகிறது!
கதைக்களம் முதற்கொண்டு மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
தங்களின் கடின உழைப்பிற்குக் கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும்.
குறும்படம் வெற்றிபெற என்னுடைய இதப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
த.ம. 9.
மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு! பாராட்டிற்கும். விரிவான பின்னூட்டத்திற்கும். மட்டுமல்ல தங்களின் அருமையான வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் ஊக்கம் அளிக்கின்றது. புரிதலுக்கும்...ஆம் நீங்களும் மேடை நாடகம் அரங்கேற்றியவரல்லவா...அதில் இன்னும் எத்தனை சிரமங்கள் இருந்திருக்கும் புரிந்து கொள்ள முடியும் நண்பரே! மிக்க நன்றி!
நீக்குகுறும்படம் வெற்றிபெற பிரார்த்திக்கின்றேன்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
தங்களின் அனுபவங்களை சுவையாக எடுத்து காட்டியுள்ளீர்கள்... இந்தப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் வாழ்த்திற்கு!
நீக்கு//எழுத்தாளராக வரும் கோபாலகிருஷ்ணனுக்கு இரட்டை வேடம் கொடுக்க முடிவு செய்தேன், அவரையும் சம்மதிக்க வைத்து, மேக்கப் மேனுடனும் பேசி, அவருக்கு வித்தியாசமான வேஷம் போட முடிவும் செய்தேன். //
பதிலளிநீக்குஆஹா, எனக்கு இரட்டை வேஷமா ? மிக்க நன்றி. தங்கள் முயற்சிகள் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அஹஹஹஹ ரசித்தோம் தங்களின் பின்னூட்டத்தை. மிக்க நன்றி சார் தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குகாத்திருக்கிறேன் ஆசானே!
பதிலளிநீக்குஅனுபவத்திற்கும் குறும்படத்திற்கும்...!
நன்றி.
மிக்க நன்றி ஆசானே தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குஅருமை அருமை. ! கோபால் சார்தானா அவர் :)
பதிலளிநீக்குமுடியில்லாத கெட்டப்பில் இருப்பது நீங்கதானா சகோ :)
மிக்க நன்றி சகோதரி தங்களின் வாழ்த்திற்கு!
நீக்குமிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்திற்கு!
பதிலளிநீக்கு