ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

ஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய அவசியமில்லை - 2 + வலைப்பதிவர் விழாவிற்கான கட்டுரை, கவிதைப் போட்டிகள்

முந்தைய பதிவுக் கட்டுரையின் தொடர்ச்சி....

புதிய ஒரு மொழி கற்பவர்கள் முதலில் அம் மொழியிலுள்ள, நம் மொழியில் இல்லாத ஒலிகளை எழுப்ப பழகிக் கொள்ள வேண்டும்.  தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் உள்ளன. 30 வித்தியாசமான ஒலிகளை நுரையீரலிலிருந்து நாம் வெளியேற்றும் காற்றை நாக்கு, மூக்கு, பல் மற்றும் உதடுகளின் உதவியால் வித்தியாசமான ஒலிகளாக மாற்றி தமிழ் மொழியை பேசிக் கொண்டிருக்கின்றோம்.  இதில் 12 உயிர் எழுத்து ஒலிகளை எழுப்பும் போது, காற்று வாயினுள் எங்கும் தடைபடாமல் சுதந்திரமாக வெளியேறுகிறது.  ஆனால், ஆங்கில மொழியில் இதற்குச் சமமான A E I O U  எனும் எழுத்துக்களிலிருந்து உருவாகும் 12 வவ்வல் ஒலிகளும், 8 Diphthong  (2 வவ்வல் ஒலிகள்  சேர்த்துச் சொல்வது) இதில் நாம் பேசாத ஆனால் நம்மால் முயன்றால் எளிதாக எழுப்ப முடிகின்ற 8 ஒலிகளை நாம் முதலில் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ் ஒலிகள் அடங்கிய வார்த்தைகளைப் பல முறை உச்சரித்து, அவற்றை நாம் பழகிக் கொள்ள வேண்டும்.

/ə/ - about நடு நாக்கை உபயோகித்து வாயை அதிகம் திறக்காமல் சொல்லப்படும் “அ” சப்தம்.

ə:- Turn - ə அந்த சப்தத்தைக் கொஞ்சம் நீட்டிச் சொல்லும் சப்தம்.

/ɪə/- இயா – Here,  

/eɪ/- எய் – Take,

/eə/ - எய – there

/ʊə/ - உஅ – Your,

/əʊ/ - ஒவ் – No (நோவ்), 

/ɔɪ/ - Boy ஆ வையும் ஓ வையும் சேர்த்து உச்சரிக்கும் போது அவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஒலி

அதே போல் க்ச்ட்த்ப்ற் எனும் வல்லினத்திற்குச் சமமான Plosives ங்ஞ்ண்ந்ம்ன் எனும் மெல்லினத்திற்குச் சமமான Nasals, ய்ர்ல்வ்ழ்ள், எனும் இடையினத்திற்குச் சமமான Fricatives  ஆங்கிலத்தில் உண்டு என்றாலும், தமிழில் உள்ள ல, ள, ழ எனும் மூன்று இடையினத்திற்கு ஒரே ஒரு /l/ ல எனும் lateral சப்தம் மட்டும் தான் ஆங்கிலத்தில் இருக்கிறது. அது வித்தியாசமான இரு விதத்தில் Dark “l” ஆகவும், கிளியர் “l” ஆகவும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால், “வ்” எனும் இடையினத்திற்குப் பதிலாக, இரண்டு வித்தியாசமான ஒலிகள் ஆங்கிலத்தில் உள்ளன.  /v/- Victory எனும் போது உச்சரிக்கப்படும் /v/ - “” – கீழ் உதட்டை மேல் பல்லில் தொட்டு, காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.  அதே சமயம், /w/- – ஒலியை உதடுகளை பல்லில் தட்டாமல், வட்டவடிவாக்கி காற்றைப் புறம் தள்ளி உச்சரிக்க வேண்டும்.

    18 மெய்யெழுத்துக்களுக்குப் பதிலாக 24 Consonant sounds ஆங்கிலத்தில் உள்ளன.  தமிழ் மொழியில் இல்லாத ஒலிகள் /w/- தவிர, /g/ - Gun,  /θ/ - Thin  “த”  எனும் ஒலியை நுனி நாக்கைப் பற்களின் பின் புறம் தொட்டுக் காற்றை வெளியேற்றி உச்சரிக்க வேண்டும். அதே சமயம் நாம் உச்சரிக்கும் “த” ஒலி நுனி நாக்கை பற்களின் மேல் அண்ணத்தில் தொடுவதால் உண்டாகிறது.  ð – This – “த” ஒலியை கொஞ்சம் அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.

/s/ -  “ஸ்” Sin, /z/ - Zoo, “ஸ்” சத்தத்தைக் கொஞ்சம் நீட்டி அதிகமான சத்தத்துடன் உச்சரிக்க வேண்டும்.  /ʃ/ - ஷ – Ship, /ʒ/ - Measure - ʃ சத்தத்தை நாவின் பின் புறத்தை உயர்த்திக் கொஞ்சம் அதிகமான சத்தத்தில்தான் உச்சரிக்க வேண்டும்.  // - ஜ – Judge.


       இப்படித் தமிழில் இல்லாத ஒலிகளை உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  30 ஒலிகளில் மட்டும் பேசிப் பழகும் நாம், ஆங்கிலத்தில் உள்ள 44 ஒலிகளையும் உச்சரிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  ஆரம்ப பள்ளிகளில் 44 ஓசைகள் அடங்கிய ஆங்கில வார்த்தைகளை மாணவர்கள் உச்சரிக்கத் தேவையான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும்.  ஆசிரியர்களுக்கு முதலில் பயிற்சி அளித்து வெற்றி கண்ட பின் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது நல்லது.

      ஆங்கில மொழிக்கு 44 வித்தியாசமான ஒலிகளை, வித்தியாசமாக உச்சரிப்பது எவ்வளவு இன்றியமையாததோ, அது போல் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் போது ஆங்காங்கே, “சிலபிள்”களில் அழுத்தம் (Stress) கொடுப்பதும்.  உயிரெழுத்தை (Vowels and Diphthongs)  மையமாகக் கொண்டு உருவாகும் ஒலிகளின் கூட்டம்தான் சிலபிள் என்று சொல்லப்படுகிறது.  உதாரணமாக Take” என்பது ஒரு சிலபிள் வார்த்தை.  அதே சமயம் Taking” என்பது Take – ing” எனும் 2 சிலபிள் வார்த்தை.

      ஆங்கிலத்தில் “Bio” எனும் வார்த்தையை உச்சரிக்கும் போது “Bio” என்று முதலில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது.  அதே சமயம், அது “Biology” என்றாகும் போது ‘Bio விலுள்ள அழுத்தம் அடுத்த சிலபிள் ஆன Ology க்குத் தாவுகிறது.  மீண்டும் இவ்வார்த்தையை Cal” சேர்த்து விரிவாக்கி Biological” ஆகும் போது Ology  யில் இருந்த அழுத்தம் logical க்குத் தாவி Bio’logical ஆகிறது. (‘பயோ, ப’யோலஜி, ப’லாஜிக்கல்) இப்படி அழுத்தமும் (Stress) உச்சரிப்பைப் (Pronunciation)  போலவே மிகவும் முக்கியமான ஒன்று. இதற்குத் தேவையான பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.  அப்படி ஆங்கிலத்தில் உச்சரிக்கும் வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டிய சிலபிள் எது என்று அறிந்து பேசிப் பழக வேண்டும்.  கொடுக்கப்படும் பயிற்சிகளும் அதற்கு ஏற்றாற் போல் இருக்க வேண்டும்.

      5 லட்சத்துக்கும் மேலான வார்த்தைகள் உள்ள ஆங்கில மொழியைச் சுலபமாக, எளிதாக நம் எண்ணங்களை வெளிப்படுத்த, நாம் அன்றாடம் உபயோகிக்கும் 1000 அல்லது 1500 வார்த்தைகள் போதும்.  அவற்றை உபயோகித்து, வாக்கியங்கள், வினாக்கள் போன்றவற்றை உருவாக்கத் தேவையான பயிற்சிகளைத் தேவையின் அடிப்படையில், அதாவது வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் வாக்கியங்கள், வினாக்கள், அலுவலகத்தில், பள்ளியில், பேருந்து நிலையத்தில், வங்கியில் உபயோகிக்கத் தேவையான வாக்கியங்கள், வினாக்கள் என்று பிரிவு படுத்திப் பயிற்சி அளிக்க வேண்டும்.  இயற்பியல், வேதியியல், உயிரியல் இவற்றிற்கு செய்முறை வகுப்புகள் என்பது போல் ஆங்கிலத்திற்குக் குறைந்தது 20% வகுப்புகள் Communicative English” க்கு ஒதுக்கப்பட வேண்டும். அதற்குத் தனியாக தேர்வும், மதிப்பெண்களும் வேண்டும்.

   இப்படிக் கொஞ்சம் சிரமப்பட்டு மாணவர்களின் மொழி அறிவை அறிந்து, தேவையெனில் ஆங்கில அடிப்படை அறிவு நல்கி, அவர்களுக்குத் தேவையான, அவர்களால் எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய விதத்தில் பயிற்சி அளித்து அவர்களது ஆங்கில மொழி பேசும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.  இதுவரை நாம் பின்பற்றிய கல்வி முறை அவர்களது ஆங்கில மொழியாற்றலை வளர்க்கவிலை எனில் அது மாணவர்களின் குறையே அல்ல. அது அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின், அவ்வாசிரியர்கள் எதை எப்படிக் கற்பிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் மொழி வல்லுனர்கள் மற்றும் கல்வி இலாக்காவின் குறையேதான்.  அக்குறையைப் போக்கத் தேவையான வழிகளை இனியேனும் ஆராய்ந்து கண்டறிந்து செயல்படுத்தி, மாணவர்களின் ஆங்கில மொழியாற்றலைச் செம்மைப்படுத்த வேண்டும். 

      இறுதியாகச் சொல்ல வேண்டும் என்றால், நமது தாய்மொழியை நாம் நன்றாகக் கற்றுக் கொண்டோம் என்றால் எந்த ஒரு மொழியையும் அதன் அடிப்படையில் நன்றாகக் கற்றுக் கொண்டுவிட முடியும் என்பது மட்டுமல்லாமல், ஒருவேளை நாம் வேற்று மொழிச் சூழலில் பிறந்து, வளர்ந்து, அந்த மொழியில் நாம் வளர்ந்தாலும், அம்மொழியே தாய்மொழியாய் ஆனாலும், நமது தாய்மொழியை மறந்திடாமல், புறம் தள்ளாமல் இருத்தல் போற்றுதற்குரிய ஒன்று.

__________________________________________________________________________________________________

நம் வலை அன்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி!  பதிவர் மாநாட்டில் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

1கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி
2.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி
3.பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி
4. புதுக்கவிதைப் போட்டி
5.மரபுக்கவிதைப் போட்டி

போட்டிகளுக்கான மொத்தப் பரிசுத் தொகை 50000 ரூபாய்!!!!!!!!!!  
முதல் பரிசு - ரூ 5000
இரண்டாம் பரிசு - ரூ 3000
மூன்றாம் பரிசு - ரூ 2000

மேலும் போட்டிகள் பற்றிய விதிமுறைகள், விவரங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றீர்கள் தானே....இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டிகளைச் சொடுக்குங்கள்.  

முத்துநிலவன் ஐயாவின் வலைத்தளம்   முத்து நிலவன் ஐயா அவர்களின் வலைத்தளம்..

விழாவிற்கான வலைத்தளம்  விழாவிற்கான வலைத்தளம்..

போட்டிக்கான உங்கள் கட்டுரைகள் சென்றடைய வேண்டிய இறுதித் தேதி : 30-09-2015

உங்கள் கட்டுரைகளை இந்த மின் அஞ்சல் வழி bloggersmeet2015@gmail.com அனுப்பிவிடுங்கள்!  விருதை வெல்லுங்கள்!!!

ஹாங்க் ஒண்ணு சொல்ல மறந்துவிட்டோம்.  இந்தப் போட்டிகளில் வலைப்பதிவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.  சரி அப்ப நாங்கனு பதிவர்கள் அற்ற சைலன்ட் ரீடர்ஸ் கேட்பது கேட்கின்றது.  நீங்களும் போட்டியில் பங்கு பெறலாமே...ஒண்ணும் இல்ல.. ஒரு வலை ஆரம்பிச்சுருங்க...பதிவர் உலகத்துக்குள்ள நுழைஞ்சுருங்க...அவ்வளவுதான்!!  கடினமா என்ன?!!!!!!!  

அனைவருக்கும் வாழ்த்துகள்!


43 கருத்துகள்:

 1. போட்டி பற்றி இன்றே தெரியும். முடியுமானு பார்க்கிறேன். போட்டினா கலந்து கொள்வதில் ஓர் அலுப்பு! பள்ளி நாட்களில் இருந்தே! ஒதுங்கிடுவேன். காரணம் தோல்வி பயமா? தெரியலை! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ் அதுதான் காரணமோ...பரவாயில்லை சகோதரி..கலந்துக்கங்க...வென்றால் என்ன வெல்லாவிட்டால் என்ன அதற்கு போட்டிகள் முடிந்த பிறகு புதுக்கோட்டை நண்பர்களிடம் அனுமதி வாங்கி நம்ம தளத்துல பகிர்ந்து கொள்ளலாமே...என்ன சொல்றீங்க!!

   நீக்கு
 2. ஆங்கிலம் அருமையாகக் கற்றுக் கொடுத்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! கீதா சாம்பசிவம் தங்களின் பாராட்டிற்கு!

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி மகேஷ்! ஓ நீங்களும் ஆங்கில இலக்கியம் பயின்றவர் இல்லையா....

   நீக்கு
 4. சிறப்பான தகவல்களுடன் - இன்றைய பதிவு..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 5. ஆஹா சகோ, அருமை, வாழ்த்துக்கள்,,
  ஆரம்பமாகட்டும்,,,,,,பதிவு நல்லா இருக்கு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 6. நீங்கள் சொல்லி இருக்கும்படி ஆங்கிலம் கற்பிக்கப் பட்டால் இந்த வித்தியாசமான ஆக்செண்டுகள் இருக்காது அல்லவா. ஆங்கிலத்தையே தமிழ்போலும் மலையாளம் போலும் ஹிந்தி போலும் பலர் பேசுவதைக் கேட்கத்தானே செய்கிறோம். வலைப் பதிவர் விழாவில் போட்டிகள் பற்றி உப்போதுதான் அறிகிறேன் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் சார்! நம் அகராதியில் இந்த ஃபோனிக்ஸ் கொடுக்கப்பட்டிருக்குமே ஒவ்வொரு வார்த்தையின் அருகிலும்...அதுதான்
   ஆனால் ஒவ்வொரு மொழியினரும் அவரது மொழி சார்ந்து பேசுவதால் அக்சென்ட் வேறுபடுகிறது...
   நீங்களும் கலந்து கொள்ளலாமே சார் போட்டியில்....

   மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 7. உச்சரிப்பு உயிர் (வவல்ஸ்) உடனும் மெய் (கொண்சோணன்ற்ஸ்) உடனும் வேறுபடலாம்.
  ஆனால்,
  அமெரிக்கன் ஆங்கிலம், பிரிட்டன் ஆங்கிலம், இந்தியன் ஆங்கிலம் என நாட்டுக்கு நாடு உச்சரிப்பு வேறுபடுவதாலே நம்மாளுங்க ஆங்கிலம் தெரிந்திருந்தும் வெள்ளைக்காரங்களோட ஆங்கிலத்தில கதைக்க அஞ்சுகிறாங்களே!
  அப்படியாயின்
  உலகெங்கும் ஒரு பொதுவான ஆங்கில உச்சரிப்புத் தேவை என்பதை உணருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நாட்டிற்கு நாடு வேறுபடுகிறதுதான் அதனால்தான் இந்தப் பயம் அவர்களது அக்சென்ட் வேறுபடுவதால் ..பொதுவாக என்பது சரிதான் என்றாலும் கொஞ்சம் கடினம்தான் என்று தோன்றுகின்றது...மிக்க நன்றி நண்பரே தங்களின் கருத்திற்கு..

   நீக்கு
 8. ஆங்கிலம் தேவை குறித்த நல்ல விழிப்புணர்வுக்கட்டுரை. விசாவுக்கு விண்ணப்பிக்கும்போதும், வேலைக்கு விண்ணப்பிக்கும்போதும்தான் பலர் ஆங்கிலத்தின் தேவையை உணர்கின்றார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா! நமது தாய் மொழியை மறந்திடாமல் அதே சமயம் வயிற்றுப் பிழைப்பிற்காக அதை அறிந்து கொள்வதில் தவறு இல்லையே! மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 9. ஆங்கிலோய நாட்டில் பிறந்தவர்கள் அந்நிய மொழியாகக் கருதவேண்டியதிலலை என்று ஒரு முன்னொட்டு சேர்த்தால் எனக்கு உடன்பாடுதான். அவரவரின் தாய்மொழியன்றி மற்ற எந்த மொழியுமே -பயிற்று மொழியாக இருந்தாலும் வயிற்று மொழியாக வராதவை அந்நிய மொழிதான். மற்றபடி, அவரவர் தேவைக்கு எந்தமொழியையும் கற்பது அவரவர் விருப்பம். இந்த மொழியைப் படித்தால்தான் உயிர்வாழ முடியும் என்று சொந்த மொழியான தாய்மொழியைத் தவிர எந்தமொழி வந்தாலும் அது அந்நிய மொழியே. இது நிறக். வலைப்பதிவர் திருவிழாவை ஒட்டிய மின்-தமிழ் இலக்கியப் போட்டிகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுத் தந்தமைக்கு விழாக்குழுவின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா தங்களின் கருத்தை ஏற்கின்றோம். கட்டுரையில் இறுதியில் அதைத்தான் சொல்லி இருக்கின்றோம். இப்போது வயிற்றுப் பிழைப்பிற்கு ஆங்கிலம் இல்லாமல் முடிவதில்லையே ஐயா....தேவை என்று வரும் போது அந்த மொழியைக் கற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. ராணுவத்தில் வேலை செய்பவர்கள் அவர்கள் எந்த மாநிலத்தவராக இருந்தாலும், ஆங்கிலமும், ஹிந்தியும் இல்லாமல் வேலை செய்ய முடிவதில்லையே ஐயா...ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்க வேண்டும் என்று இல்லை அதை ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்தத்தான்....மேலை நாட்டவருக்கு நம் மொழியின் மேன்மையைச் சொல்ல வேண்டும் என்றாலும் ஆங்கிலம் தானே உதவும் ஐயா...

   நாங்கள் தமிழ் மீதுள்ள அன்பினாலும் ஆர்வத்தினாலும் தானே எழுதுகின்றோம் ஐயா தமிழில்...

   எதற்கு நன்றிகள் ஐயா....நாம் எல்லோரும் பங்குபெறும் வலைக்குடும்ப விழா தானே!.

   மிக்க நன்றி ஐயா...தங்களின் மேன்மையான கருத்திற்கு

   நீக்கு
 10. வணக்கம் அருமையாக கையாண்டு இருக்கின்றீர்கள் சொல்லிச்சென்ற விதம் அழகு என்னைப்போன்ற பாமரனுக்கும் விளங்குவது போல்.....

  இன்றைய வாழ்க்கைச் சூழலில் ஆங்கிலம் அவசியம் என்ற நிலைக்குள்தான் நாம் தள்ளப்பட்டுள்ளோம் இதை யாருமே மறுக்க முடியாது காரணம் நாம் தமிழ்நாட்டுக்குள் மட்டுமே வாழ்வதில்லையே..

  நாளையே ஏதோ ஒரு பிரட்சினையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் திருப்பி அனுப்பப் பட்டால் நமது நாட்டின் நிலையென்ன ? ஆக நாம் தமிழ் நாட்டை மட்டுமே நம்பி வாழமுடியாது 80 கண்கூடாக விளங்கும்

  எங்கெங்கு ஓடினும் பிறமொழி எவ்வளவு கற்றாலும் தமிழனிடம் தமிழைப்பேசவும், தமிழை சமது பிள்ளைகளுக்கு பேசவும் படிக்கவும் கற்றுக்கொடுப்பவனே தமிழன் பெயகில் மட்டும் தமிழை வைப்பதில் அர்த்தமில்லை.

  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹைய்யோ ஹைய்யோ நீங்க இல்லாத தைரியத்தில்தான் நண்பரே அய்யா கலாம் அவர்களைக்கூட சிலது(கள்கள்) கண்டபடி பே(ஏ)சுகின்றன. உங்களைப்போன்றோர் இந்நாட்டிற்க்கு திரும்பும் நாளே கலாம் அவர்களின் கனவுகள் நிறைவேற வித்திடும் நாளாகும்.

   நீக்கு
  2. சரியாகக் சொல்லியிருக்கின்றீர்கள் கில்லர்ஜி. நல்ல கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
  3. சிவம்! புதுக்கோட்டையில் விதைக்"கலாம்" ஆரம்பித்தாயிற்று...நிறைய நற்செயல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தூற்றுவார் தூற்றட்டும்...போற்றுவார் போற்றட்டும் சக்தி....யாரோ சொல்லுவதற்கு ஏன் இந்த உணர்ச்சிவசம்....எனக்குக் காது கேக்கலைப்பா.....கேக்கவும் செய்யாது...

   கீதா

   நீக்கு
 11. செம மேட்டர் துளசியாரே... கட்டாயம் மாணவர்களுக்கு பகிரப் பட வேண்டிய விபரம்...

  மூணாவது பத்தியிலிருந்து நீங்க சொன்னா மாதிரி உச்சரித்துப் படித்துப் பார்த்தேன். சன்னிலியொன் படத்துக்கு டப்பிங் குடுக்குற மாதிரியே ஒரு உணர்வு... (ச்சும்மா....., நம்பள்கி ஹேங்ஓவர்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அஹஹஹ் நம்பள்கி ஹேங்க்ஓவர்....உங்க துரோணாச்சாரியார் இல்லையா...ஹஹஹ்

   சன்னிலியோனுக்குப் புக் பண்ணிடலாமா...டப்பிங்க்...ஹஹஹ் மிக்க நன்றி மலர்வண்ணன்....

   நீக்கு
 12. மிக நல்ல .தேவையான முயற்சி.கற்றுக்கொடுத்திருக்கும் விதம் சிறப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சென்னைப்பித்தன் ஐயா! தங்கள் கருத்திற்கு..

   நீக்கு
 13. மிகவும் நல்லதொரு மொழி, ஆங்கில மொழி அயல் நாட்டவரது மொழியாக மட்டுமில்லை, அது ஓர் இந்திய மொழியாகவும் இன்று மாறிவிட்டது. இந்திய ஆங்கிலம் என்பதே ஆங்கிலத்தின் கிளைமொழிகளில் ஒன்றாகவும் வளர்ச்சி கண்டு வருகின்றது. எவ்வாறு வெளியிலிருந்து வந்த இந்தோ-ஆர்ய மொழிகளை நம் இந்திய மொழிகளாக ஏற்றுக் கொண்டோமோ, அதே போல ஆங்கிலத்தையும் நாம் இந்திய மொழிகளில் ஒன்றாக ஏற்பதே நல்லது. ஏனெனில் இன்று இந்தியர்கள் பலரும் ஆங்கிலத்தில் இலக்கியங்களையும் சிறப்பாகப் படைத்து வருகின்றனர். அது மட்டுமின்றி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட இரண்டரை லட்சம் மக்களும் இந்தியாவில் வாழ்கின்றனர். அதே சமயம், ஆங்கிலத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விடப் பன் மடங்கு முக்கியத்துவத்தை நம் சொந்த தாய்மொழிக்கும் வழங்குவதே சிறப்பானது. தாயை ஒதுக்கிவிட்டு வாழ முடியுமா என்ன? கண்ணாடிக்கு ஆசைப்பட்டுக் கண்ணைக் குத்திக் கொள்வோமோ, அதே போல ஆங்கிலத்தைச் சீரும் சிறப்பாகக் கற்கும் அதே சமயத்தில் தமிழை உயிருக்கு உயிராக நேசித்துக் கற்றுப் பேசி மகிழ்ந்து வாழ்வோமாக. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிக அருமையான தகவலுடன் கூடிய பின்னூட்டம். கடைசி வரிகள் உட்பட....மிக்க நன்றி கருத்திற்கும் முதல் வருகைக்கும் திரு அருணன் கிருஷ்ணன் அவர்களே....

   நீக்கு
 14. நல்ல முயற்சி.

  போட்டி : கலந்து கொள்ளப் போகிறவர்களுக்கும், வெற்றி பெறப் போகிறவர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்.
  தம+

  பதிலளிநீக்கு
 15. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பர் கரந்தையாரே தங்களின் கருத்திற்கு...

   நீக்கு
 16. நல்ல முயற்சி. தொடரட்டும்.....

  போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட் ஜி தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 17. அழகான விளக்கத்துடன் அருமையான பகிர்வுங்க. அந்தந்த ஒலிகளுடன் கற்க வேண்டும். இது போல குழந்தைகளுக்கு கற்றுத்தந்தால் எத்தனை மொழியையும் எளிதாக கற்றுவிடுவார்கள். ஏன் இங்கு இப்படி பதிவிட்டால் நானும் கற்பேன் ஹஹ.
  கண்டிப்பாக தொடருங்கள். பயனுள்ள பகிர்வுபலரையும் சென்றடைய வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க் நன்றி சகோதரி சசிகலா தங்களின் கருத்திற்கு. ஆமாம் எந்த மொழியானாலும் ஒலிகளுடன் கற்பித்தால் எளிதுதான்....மிக்க நன்றி சகோ...

   நீக்கு
 18. ஒலிகளுடன் கற்பதே சிறப்பு..அருமையாய் ஆங்கிலப்பாடம் எடுத்துவிட்டீர்களே அண்ணா..பிரமாதம்!
  போட்டிக்குப் போறேன், நீங்களும் வரீங்க தானே? :)

  பதிலளிநீக்கு
 19. அருமையான விளக்கம். ஆனாலும் ஆங்கிலம் என்றால் பயமாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் தங்கள் சொல்லியது போல் பள்ளிகள்தான்.
  த ம 11

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள அய்யா,

  ஆங்கில உச்சரிப்பு ஒலிக் குறிப்பை நன்றாக விளக்கிச் சொல்லியது அருமை.

  நமது தாய்மொழியை மறந்திடாமல், புறம் தள்ளாமல் இருத்தல் போற்றுதற்குரிய ஒன்று என்று இறுதிக் கருத்தாக உறுதியாகச் சொன்னீர்கள் .

  த.ம.12

  பதிலளிநீக்கு
 21. ஜோர் தோழர்
  நான் மீண்டும் வருவேன்..
  இன்று பி.பி.சி டோர்ரன்ட் ஒன்று மாட்டியது போனிக்ஸ் பயிற்சிக்கு
  பாப்போம் தோழர்
  எப்படி கீது என்று
  தம +

  பதிலளிநீக்கு
 22. சூப்பர். ஆனா என்ன எழுதுறதுன்னுதான் தெரில. :)

  பதிலளிநீக்கு