வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

Kadhal Poyin Kadhal - Short Film By Kovai Aavee and his Teamஇப்படத்தினுடனான எங்கள் இனிய அனுபவம் அடுத்த பதிவில்.  இப்படத்தின் இயக்குனர், நண்பர் கோவை ஆவிக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள் பல, எங்களையும் இதில் பங்கெடுக்க வைத்ததற்கு! 

37 கருத்துகள்:

 1. பார்த்தேன். ரசித்தேன். குழுவினர் அனைவருக்கும் 'எங்கள்' பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! "எங்கள்" ப்ளாகின் பாராட்டுகளுக்கும், வாழ்த்துக்களுக்கும், தாங்கள் ரசித்ததற்கும்.

   நீக்கு
 2. நானும் படத்தினைப் பார்த்தேன் விமரிசனம் எழுதுவதா வேண்டாமா என்று ஒரு தவிப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சார் ஏன் சார் கண்டிப்பாக நீங்கள் விமர்சனம் எழுத வேண்டும் சார். எழுதுங்களேன்! எதற்காகத் தவிப்பு சார்! எழுதி விடுங்கள்! எங்கள் எல்லோருக்குமே உதவியாக இருக்கும் சார்....

   மிக்க நன்றி! (இது அட்வான்ஸ் நன்றி தங்கள் விமர்சனத்திற்கு!!ஹஹ்)

   நீக்கு
 3. வணக்கம்
  அண்ணா

  படத்தை பாரத்தேன் அதில் தங்கள் வரும் காட்சி அசத்தல் அதில் தேனீர் கொடுக்கும் காட்சி மிக மிக அசத்தல் மேலும் வளர எனது வாழ்த்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் வாழ்த்திற்கும், கருத்திற்கும்!

   நீக்கு
 4. அன்புள்ள அய்யா,

  அன்புச் சகோதரி திருமதி.மைதிலி அவர்களின் பகிர்வின் மூலம் தங்களின் ‘காதல் போயின் காதல்’ குறும்படம் பார்க்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. தாங்கள் சுப்புவாக காபி விற்பவராக வெகு இயல்பாக வந்தது பாராட்டுக்குரியது. காஸ்டிலியான காபி...! நாளை நரேந்திர மோடியாக எண்ணமோ?


  ஆவி டாக்கிஸ் அறிமுகமே சார்லி சாப்ளின் இமேஜ் ,,, தொப்பி... & வாக்கிங் ஸ்டிக்குடன் மிரட்டலான இசையுடன் ஆரம்பமே அமர்க்களம்... அசத்தல்!

  காதல் ஏதோ சூழ்நிலையால் போயின்... அந்தக் காதல் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்...கவிதை ஒன்றுடன் டூயட் பாடல் இதமான இசையுடன் நன்றாக இருக்கின்றது.

  அக்கா நோயில் வீழ்ந்ததால் காதல் தியாகம்... சித்தியானலும்... சிந்தையில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் காதல்! காதலனும் காதலியை எண்ணியே வாழும் காதல்...!
  ‘காதல் போயின் காதல்’ நடித்த நடிகர்கள் அனைவரும் தங்கள் பாத்திரத்தை நிறைவாக செய்திருந்தார்கள்! சுப்பபுவாக நீங்கள் நாயகிடம் ‘இது உங்க பையனா? என்று கேட்கின்ற பொழுது ”ஆ” என்று சொல்லுகின்ற இடம்... ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லாத சொல் அல்லவா... ? நடிப்பின் உச்சமாகப் பார்க்கிறேன். எவ்வளவு காலம் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை என்பது தெரியவில்லை. அருமையாகத் தன் பங்கைத் திறமையாக வெளிக்காட்டிய நாயகிக்கு ...சபாஷ்! இறுதியில் நாயகி கைபேசியில் அழைப்புவர “சாரி... எனக்கூறி... புறப்படும் அவர், கைபேசியில் ஏதோபேசிக்கொண்டே காரை இயக்க முற்படுவது போலக் காட்டியிருக்கலாம்! ஏதும் பேசாமலே செல்கின்றார்!
  இறுதியில் இசையில்லாமல் வரும் சோலோ சாங்க்...மிகமிக அருமையாக இருக்கிறது....பாடியவருக்குப் பராட்டுகள்!
  படப்பிடிப்பு... படத்தொகுப்பு... பிளாஸ்பேக்...நாயகன் தாடியில்லாமல் கட் செய்து நடப்பு...(தாடியுடன்) இரண்டையும் நன்றாக காட்டியிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

  ஆனந்த ராஜா விஜயராகவன் ‘காதல் போயின் காதல்’ + ஆல்
  ஆல் இன் ஆல் ஆவியாகி எல்லோரின் மனங்களிலும் புகுந்துவிட்டார்.

  தங்களுக்கும்...குழுவிற்கும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்!

  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா! எத்தனை ஒரு விரிவான கருத்து! மிக்க நன்றி! நல்ல அலசல் நண்பரே! மிக மிக நுணுக்கமாக விமர்சித்திருக்கின்றீர்கள்!

   //சுப்பபுவாக நீங்கள் நாயகிடம் ‘இது உங்க பையனா? என்று கேட்கின்ற பொழுது ”ஆ” என்று சொல்லுகின்ற இடம்... ஆமாம் என்றும் இல்லை என்றும் சொல்லாத சொல் அல்லவா... ? நடிப்பின் உச்சமாகப் பார்க்கிறேன். // நன்றி நன்றி‍ மது அதில் அசத்தியிருப்பார்....

   //இறுதியில் நாயகி கைபேசியில் அழைப்புவர “சாரி... எனக்கூறி... புறப்படும் அவர், கைபேசியில் ஏதோபேசிக்கொண்டே காரை இயக்க முற்படுவது போலக் காட்டியிருக்கலாம்! // நன்பரே கைபேசியில் பேசிக் கொண்டே காரை இயக்குவது சரியல்லவே, அது சட்டத்திற்கு புறம்பானது ஆகிவிடுமே என்பதால் அவர் ப்ளூடூத் காதில் அணிந்து பேசுவதாகக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

   முதலில் எங்கள் நன்றி! தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும்.

   ஆம்! ஆவி அவர்கள் எல்லோரது மனத்திலும் புகுந்துவிட்டார் தனது அழகான படைப்பினால். !!

   மிக்க மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 5. வணக்கம் துளசி சார்...
  நாங்களும் அந்த பார்க்குக்கு வந்தா காபி, ஹார்லிக்ஸ் கொடுப்பீங்கதானே...
  பார்த்தேன்... நல்ல முயற்சி, வெற்றி பெற்றிருக்கிறது உங்கள் குழு.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
  மனசு தளத்திலும் எழுதியிருக்கிறேன்.
  கீதா மேடத்துக்கு பாடல் பாடியதற்காக தனியாக வாழ்த்துச் சொல்லிருங்க... அருமையா பாடியிருக்காங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாகக் கொடுப்போம் நண்பரே! காபி, ஹார்லிக்ஸ் என்ன விருந்தே வைச்சுருவோம்ல...

   மிக்க நன்றி நண்பரே! தங்களின் வாழ்த்துக்களுக்கு.

   கீதா: நண்பரே! உங்கள் வாழ்த்துக்கள் வந்து சேர்ந்துவிட்டது நண்பரே! மிக்க மிக்க நன்றி! அட....கண்டுபிடித்துவிட்டீர்களா..... (ஆமாம், பெரிய கம்ப சூத்திரம் பாருங்க....அப்படினு சொல்றது தெரியுது.... ஹஹஹஹஹ் )

   நீக்கு
 6. தம 3 அதுல விஷேசம் என்னன்னா. உங்க பக்கத்தில்
  ஆவியோட படம் வெளியிட்டிருக்கிங்க.
  அது ஆவி படம்ன்றதாலயோ என்னமோ என் கணினியில்
  தெரியலை. இருந்தாலும் உங்க பரிந்துரையோடு வரும் படம் குறும்படமாக இருக்குமே தவிர நிச்சயம் குறையுள்ள படமா இருக்காது என்கிற நம்பிக்கையில் ஒரே அழுத்தா அழுத்திட்டேன் வாக்கு பொறியை. ஆவிக்கும் ஆவியுடன் சேர்ந்த கூட்டத்திற்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ.....பரவாயில்லைங்க. ஆனால், கணினி அதைக் காட்டும் போது கண்டிப்பாகப் பாருங்கள். பார்த்து தங்களது மேலான கருத்துரையை இங்கேயோ இல்லை யூட்யூபிலோ இடுங்களேன்...கருத்துரை எதுவாக இருந்தாலும் வரவேற்கப்படும் நண்பரே! ஆனா...இப்படியெல்லாம் எங்கல் மீது நம்பிக்கை வைத்திருப்பதற்கு மிக்க நன்றி....ம்ம்ம் எங்களின் பொறுப்பு கூடிவிட்டதே....இனி உட்டான்ஸ் விட முடியாது போலிருக்கே...ஹஹஹ

   மிக்க நன்றி தங்களின் வாழ்த்துக்களுக்கு....

   நீக்கு
  2. நண்பரே ஒன்று மறந்து விட்டோம். ஆவி எல்லாம் ராத்திரிதானே தோன்றும் இல்லையோ....எனவே கொஞ்சம் முழித்திருந்து ராத்திரி முயற்சி செய்து பாருங்களேன்..ஹஹஹஹ்

   நீக்கு
 7. நானும் பார்த்தேன் அனைவரது பங்களிப்பும் பாராட்டுக்குறியது
  கருத்துரை போடுறவங்களுக்கு ஒரு சாயா கொடுத்தால் நல்லா இருக்கும்
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்களின் பாராட்டிற்கு. சாயா தானே!! வாங்க கொடுத்துட்டாப் போச்சு! சாயா என்ன விருந்தே படைப்போம்!!

   நீக்கு
 8. இங்க சொடுக்குங்க, read more ஏதாவது இருக்கும்னு பார்த்தேன். மொத்தமே மூணு வரிதானா!!!!!!!!!!! ஆனாலும் சூப்பர்! வாழ்த்துகள் சகாஸ்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ஹஹஹஹ் இல்ல சகோதரி! இன்னும் வரும்....அடுத்த பதிவில்....எங்கள் அனுபவங்கள் வரும்....வாழ்த்துக்களௌக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 9. நானும் பார்த்தேன். வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் ஆவி டாக்கீஸின் காதல் போயின் காதல் குறும்படத்தை. அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். டீவிற்பவராக இயல்பா வந்து போனீங்க. கீதா சகோதரி வாய்ஸ் இனிமையாக இருக்கிறது.
  ஆவியார் அனைத்து துரையிலும் வல்லவரென அறியமுடிகிறது.

  நம் பிளாகர் நண்பர்கள் சும்மா அசத்துறாங்க....மீண்டும் அக்குழு அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். உங்கள் பணி தொடரட்டும்....

  (என் கணினியில் ஏதோ பிரச்சனை. ஆகையால் 3 மூன்று நாட்களாக மற்றவர் தளத்தை திறந்தால் உடனேயே போய்விடுகிறது. பதிவுகளை படிக்க முடியவில்லை. சில தளங்கள் திறக்கின்றன. இப்போது கொஞ்சம் சரி செய்து கொடுத்தார்)

  அதான் ஒவ்வொரு தளமாக போய் கொண்டு இருக்கிறேன்.

  மீண்டும் தாங்கள் வந்து கருத்துரை இட்டது மகிழ்வை தருகிறது. வராத போது ஏதோ ஒன்று மிஸ்சானது போன்ற உணர்வு. இது தான் நட்பின் அன்போ....)))).....ஹஹஹா...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கும், வாழ்த்திற்கும்!

   //மீண்டும் தாங்கள் வந்து கருத்துரை இட்டது மகிழ்வை தருகிறது. வராத போது ஏதோ ஒன்று மிஸ்சானது போன்ற உணர்வு. இது தான் நட்பின் அன்போ....))))....// அதே அதே! எங்களுக்கும் இது தோன்றியது....உண்டு.....எங்கள் கூகுள் க்ரோம் கொஞ்சம் படுத்தியது அதனால் தான்...வர இயலாமல் போனது....இப்போது அதை சரி செய்து மனம் சமாதானம் அடைந்தது. நட்புகளைப் பார்க்க முடியாமல்....ஏதோ ஒன்று மிஸ் ஆவது போல.....னமது நட்பு எப்போதும் இருக்கும் சகோதரி! மிக்க நன்றி தங்களின் அன்பு உள்ளத்திற்கு!

   நீக்கு
 10. தங்களின் தளத்தில் திரையிடப்பட்டுள்ள குறும்படத்தைக் கண்டேன்..

  மனதை என்னவோ செய்கின்றது..

  குறும் படத்தை உருவாக்கி வழங்கிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனதை என்னவோ செய்கின்றது..// முதன் முதலாக வந்த ஒரு கருத்து....அதுதான் நிச்சயமாக நீங்கள் அதை உணர்ந்து பார்த்திருக்கின்றீர்கள் எனத் தெரிகின்றது...அதுவே ஆவியின் வெற்றிதனே! ஐயா! மிக்க நன்றி! தங்களின் வாழ்த்திற்கு!

   நீக்கு
 11. பார்த்தேன் சகோதரரே! உங்கள் நடிப்பும் அருமை..சகோதரி கீதா இனிமையாய்ப் பாடியிருக்கிறார். மைதிலி சொல்லித்தான் பாடியவர் தில்லையகத்து கீதா என்று அறிந்தேன்..உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள் இருவரிடமிருந்தும் மனமார்ந்த நன்றிகள்!

   கீதா: மைதிலியிடம் (தோழி அல்லவா) உரையாட நேர்ந்ததால் சொன்னது...இல்லை என்றால் அதுவும் வெளியிட்டிருக்க மாட்டேன் நானாக...ஹஹ்ஹஹ்..ஏனென்றால் யாரென்று தெரியாமல் வரும் விமர்சனக் கருத்து இன்னும் ஒரு படி மேலே என்பது எனது கருத்து. மிக்க நன்றி தோழி!

   நீக்கு
 12. பார்த்தேன்
  ரசித்தேன் நண்பரே
  அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
  தொடரட்டும் தங்களின் கலைப் பணி
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்ததற்கும், தங்களின் பாராட்டிற்கும்!

   நீக்கு
 13. ரசித்துப்பார்த்தேன்! அந்தப் பெண் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்கள்! அனைவருமே அப்படித்தான்! உங்களுக்கும் மற்றும் அனைவருக்கும் மனமர்ந்த வாழ்த்துக்கள்! இனிமையாகப் பாடிய கீதாவிற்கும் அன்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் பாராட்டிற்கு! எங்கள் இருவரின் மனமார்ந்த நன்றிகள்!

   கீதா: ஆஹா! பாட்டுப் புலமை பெற்ற தோழியின் பாராட்டிற்கும் அன்பான வாழ்த்திற்கும் மிக்க நன்றி! நான் இன்னும் என்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்.

   நீக்கு
 14. பதிவர்கள் அசத்தியுள்ள குறும்படத்தை பார்த்து ரசித்தேன் ,உன்கானுபவமும் சுவையாய் இருக்குமென எதிர்ப் பார்த்து காத்திருக்கிறேன் :)
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி தங்களின் கருத்திற்கு! நிச்சயமாக எங்கள் அனுபவத்தைப் பகிர்கின்றோம்.

   நீக்கு
 15. குறும்படம் அருமையாக இருந்தது. அதிலும் அந்தக் குட்டிப்பையன் கொள்ளை அழகு. கடைசியில் 'சித்தி'ன்னு சொல்லிட்டு 'அம்மா' எனும் இடம் சூப்பர்.

  ஒரே ஒரு சின்ன நெருடல்தான். இவ்வளவு காதலாக இருக்கும் அப்பெண் ஏன் தன் சகோதரியின் மகனை தங்கள் மகனாக நினைத்து வளர்க்கலாம் என்று கேட்கவில்லை ?

  குழுவிற்கு இனிய வாழ்த்துக்கள். கீதாவின் குரல் இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! அந்தக் குட்டிப் பையன் பதிவர் கார்த்திக் சரவணன் அவர்களின் பையன். அதுதான் ரேஷ்மா காரெக்டர் சகோதரி!

   மிக்க நன்றி சகோதரி குரலைப் பாராட்டியதற்கும்....

   நீக்கு