திங்கள், 27 மார்ச், 2017

80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி!!

பெண் அன்றி நான் அல்ல பொம்மை என்ற என் குறுநாவலை மிகவும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்!  அடுத்து சில மாதங்களில் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து வருவதற்குக் காத்திருக்கும், கோடிக்கணக்கான மாந்தர்களுள், காலம் செய்த கோலத்தில் சிக்கலானப் புள்ளிக் கோலங்களாய் வாழும் கதாபாத்திரங்களான  துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சரி ...கீதா நீ ஒரு அழகான ஆதர்ச ஜோடியைப் பற்றிச் சொல்லணும்னு சொன்னியே..தொடங்கிக்க....நானும் அங்க நம்ம வலை உறவுகளோடு சேர்ந்துக்கறேன்...
ஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை

இவரை வலையுலகில் அறிந்திராதவர் எவரும் இருக்க முடியாது. எனக்கு இவர் அறிமுகமானது டிஸ்கவரி புத்தகக் கடையில் முன்பு நிழந்த புத்தக வெளியீடுகள், துளசியின் குறும்பட முன்னோட்டம் என்ற நிகழ்வுகளின் மூலம் என்றாலும் எங்கள் நட்பை நெருக்கமாக்கியது இசை என்றால் மிகையல்ல. இசையின் சக்தி அது.  

80 ஐ நெருங்கும் இந்த இளைஞர், வலைப்பதிவர்கள் யார் பாட்டெழுதினாலும் உடன் இசை அமைத்துப் பாடி காணொளிகள் வெளியிட்டுவிடுவார். அப்படி, அவர் கவிநயாம்மா அவர்கள் http://ammanpaattu.blogspot.in என்ற தளத்தில் கடந்த 12/13 வ்ருடங்களாக அம்மனைப் பற்றி மட்டுமே பாட்டெழுதி ஒவ்வொரு செவ்வாயன்றும் வெளியிடுகிறார். அந்தப் பாட்டுக்களுக்கு மெட்டு இட்டு, உணர்வு பூர்வமாகத் தன் குரலிலே பாடி, பிற வலைப்பதிவர்கள் எழுதும் பாடல்களையும் பாடி, ஏறத்தாழ 1000 பாடல்களுக்கும் மேலாகப் பாடி யூட்யூபில்/க்ளவுடில் பதிந்திருக்கிறார். 

கேதாரம் ராகத்தில் அமைந்த அருமையான பாடல் சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

மிகுந்த நகைச்சுவையாளர். அவர் மட்டுமா அவருக்குப் போட்டியாக அவரது இளம் மனைவியும் நல்ல நகைச்சுவையாளர். நகைச்சுவையாளர் மட்டுமல்ல பாடவும் செய்வார்! இவ்வயதிலும் அன்பும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும் மிளிர்வதால் இருவருக்கிடையேயான உறவு மிகுந்த இனிமையான இசையாகவே ஒலிக்கிறது! நேர்மறை எண்ணங்களும் சுடர்விடுகிறது!

இவர்களைச் சந்தித்தால் நம்மையும் இனிமையான இசையும், நேர்மறை எண்ணங்களும், கலகலப்பும் தொற்றிக் கொண்டு மனது லேசாகி மிக்க மகிழ்வுடன் புத்துணர்வுடன் நாம் திரும்புவோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

அந்த சுந்தரன் யாரென்று நீங்களே ஊகித்திருப்பீர்கள். ஆம் சுப்புத்தாத்தா மற்றும் மேனகா பாட்டி! (என் பெற்றோரின் வயது என்றாலும் எல்லோரும் இப்படி அழைப்பதால் நானும் அப்படியே)

subbuthatha.blogspot.com 

சுப்புத்தாத்தா, எனக்கு மின் அஞ்சலில் தனக்கு நரம்புத் தளர்ச்சியால் வலைப்பக்கம் வரமுடியவில்லை என்றும், கணிணியும் பல சமயம் படுத்துகிறது என்றும் எழுதிட, நான் அவருடன் பேசிய போது அழைப்பு விடுக்க சென்றாவாரம் அவரைச் சந்திக்கச் சென்றேன். கொஞ்சம் தளர்வாகத்தான் இருந்தார். அங்கு செல்வதற்கு முன், முன்பே ஆவி என்னிடம் தாத்தாவைப் பார்க்கச் செல்வதாக இருந்தால் தனக்கும் தெரிவிக்கும்படி சொல்லியிருந்ததால் ஆவியைத் தொடர்பு கொண்டிட அவருக்கு அன்று பணி நாளானதால் வர இயலவில்லை. எனவே, நான் மட்டும் முதலில் சென்று வந்தேன். மீண்டும், ஆவி, நான், கணேஷ் அண்ணா மூவரும் ஞாயிறு அன்று தாத்தாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம்.

நான் தனியாகச் சென்றிருந்த அன்றைவிட ஞாயிறு அன்று தெம்புடன் வழக்கமான துள்ளலுடன் மிகுந்த மகிழ்வுடன் இருந்தார். ஆவியும், கணேஷ் அண்ணாவும் வந்திருந்ததாலோ என்னவோ.!!!

அருமையான சந்திப்பு! சந்தித்தவர்கள் அனைவருமே நகைச்சுவை விரும்பிகள், ரசிப்பவர்கள் என்பதால், தாத்தா பாட்டியைக் கலாய்க்க, பாட்டி பதிலுக்கு தாத்தாவைக் கலாய்க்க என்று தொடக்கமே களை கட்டியது. இந்த வயதிலும் இருவருமே ஹனிமூன் ஜோடிகள் போன்றுதான் இருக்கின்றனர். பாட்டி, தாத்தா தனக்காக நிறைய விட்டுக் கொடுப்பார் என்று புகழாரம் சூட்ட, அதற்கு தாத்தா ஒரு மந்தகாசமான புன்னகையைத் தவழவிட எங்களுக்கு அவர்களைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி! தாத்தா பேசும் போது பாட்டி சிரித்துக் கொண்டே அதனை காதலுடன் ரசித்திட, பாட்டி பேசும் போது தாத்தா ஒரு அழகான அர்த்தத்துடனான புன்னகையுடன், காதலுடன் பாட்டியை ரசித்திட என்று அங்கு நிலவிய அந்த அன்பையும், காதலையும் நாங்கள் மிகவும் ரசித்தோம்! நகைச்சுவையிலும் நாங்கள் திளைத்தோம்!!

பிந்துமாலினி ராகத்தின் ரசத்தைப் பிழிந்து எடுக்கிறார் அதுவும் மிகச் சிறிய வயதில் - மறைந்த இசை மேதை மாண்டலின் யு ஸ்ரீனிவாஸ்

நகைச்சுவையுடன் அடுத்து இசை! ஆவி, தாத்தா, பாடிட இந்த வெயில் நேரத்தில் அங்கு இசை மழை பொழிந்து குளிர்வித்து, இனிமையாக்கியது! இசை இசை இசை!! தனது ராகங்கள் வலைத் தளத்தைக் காட்டி அதில் திரை இசையையும், கர்நாடக இசையையும் ஒப்பிட்டு, ஒரே ராகத்தை ஒவ்வொரு பாடலிலும் இசையமைப்பாளர்கள் தங்கள் கற்பனைக்கேற்றபடி எப்படிப் பயணிக்க வைத்திருக்கிறார்கள் என்பதையும் காட்டினார். இடையிடையே சுப்புத்தாத்தா எங்களுக்கும், பாடல் பாடும் போது எப்படிப் பாட வேண்டும் என்று பல மதிப்பு மிக்க டிப்ஸ் கொடுத்தார்! அதில் முக்கியமான ஒன்று பாட்டில் வரும் வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அந்த உணர்வைப் பாட்டில் வெளிப்படுத்த வேண்டும், எப்படிக் கொண்டு வர வேண்டும் எப்படிப் பாடினால் கொண்டுவரலாம், என்ற மிக மிக அருமையான அறிவுரைகளைக் கொடுத்தார். கிட்டத்தட்ட ஒரு இசை செமினார் எனலாம்! 

ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த மிக அருமையான மலையாளப் பாடல் - படம் பைத்ருகம்

சுப்புத் தாத்தாவுக்கு மிகவும் பிடித்தவை கனடா, தர்பாரி கானடா, மற்றும் ஹிந்துஸ்தானி தழுவிய கர்நாடக ராகங்கள்! எப்படிப் பல பாடல்கள் இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு, மேற்கத்தியப் பாடல்களிலிருந்து இங்கு கலக்கப்படுகின்றன என்பதையும் காட்டினார். அவரது தங்கை மிக அழகாகப் பாடுகிறார் ஆனால் கணவரின் மறைவுக்குப் பின் பாடுவதில்லை என்று சொல்லி அவர் பாடுவதையும் காட்டினார். அப்படியே கே பி சுந்தராம்பாள் குரல் எனலாம்!

கர்நாடக சங்கீதத்தில் டேக் ஆஃப் ஆன ஃப்ளைட், அழகாகப் பயணித்து, மெல்லிசை, திரை இசை, இரண்டையும் ஒப்பிட்டு, கர்நாடக இசை திரை இசையில் வரும் போது எப்படி வருகிறது என்று சில தமிழ் பாடல்கள், இந்திப் பாடல்கள், கிராமியப் பாடல்கள் மற்றும் மேற்கத்திய இசை என்று இறுதியில் ஃப்யூஷனில் வந்து லேன்ட் ஆனது! பேச இன்னும் எவ்வளவோ இருக்கத்தான் செய்கிறது.

தர்பாரி கானடா ராகத்தில் ஒரு ஃபுயூஷன் 

எங்களுக்கு அங்கிருந்து வருவதற்கு மனமே இல்லை. என்றாலும் கடமைகள் இருக்கிறதே! அதனால் பிரிய மனமில்லாமல் விடைபெற்று வந்தோம். வெளியில் வந்த பிறகும் அதன் தாக்கம் இருந்தது. இதோ இப்போதும் இருக்கிறது. டென்ஷனைப் புறம்தள்ளிய அருமையான, இனிமையான, மகிழ்வான ஒரு சந்திப்பு. அதுவும் வெகுநாட்களுக்குப் பிறகு! 

கணவன் மனைவி, ஒருவருக்கொருவர் எத்தனை வயதானாலும், புரிந்துகொண்டு வாழும் போது, அந்த உறவே இனிமையான இசையாகி அந்த இசை அந்த வீடு முழுவதும் பரவி எதிரொலிக்கிறது மட்டுமின்றி, 80 லும் ஹனிமூன் கொண்டாடும் ஜோடியாகி,  அங்கு வருபவர்களையும் நேர்மறை எண்ணங்களால் மகிழ்விக்கிறது!

இருவருக்கும் எங்கள் அனைவரது பிரார்த்தனைகளும்!

------கீதா


40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க வாங்க மதுரை சகோ!!

      தேம்ஸிலிருந்து நீந்தி வருபவர்கள் வருவதற்குள் முந்திக் கொண்டுவிட்டீர்கள்!!

      நீக்கு
    2. Noooo mee thaan 1stuuuuu:)... நான் தான் உலகத்தை சுத்தி வந்தேன்ன்ன் ஐ மீன் தேம்ஸை... அதனால பிரியாணி நேக்கு... தாத்தாவை ட்றுத்துக்கு குடுப்க்கோ:)

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாமாம் உங்களுக்குத்தான்!!! ரிசர்வ்ட்...தேம்ஸ்காரங்களுக்குக் கிடையாது!

      நீக்கு
    2. நோஓஒ துளசி அண்ணனா கீதாவா இப்பூடி றிசேவ் பண்ணியது..... இதோ தேம்ஸ் கரையில் விடியும்வரை உண்ணாவிரதம் ஆரம்பம்ம்ம்ம் அஞ்சுக்கு சொல்லி அனுப்புங்கோ.... ஸ்ஸ்ஸ் அவவுக்குத்தான் தெரியும் காண்ட்பாக்ல ஒளிச்சு எடுத்து வந்து இரகசியமா தருவா எனக்கூ ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்ஞ்சூஊஊஊஉ கமோன்ன்ன்:)

      நீக்கு
  3. பெரியவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழன் தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  4. (த.ம. 1 போட்டேன். சக்கரம் சுழன்றுகொண்டே இருக்கிறது.பார்ப்போம்.)

    - சென்ற ஆண்டு சுப்புதாத்தா அவர்களை டிஸ்கவரிபுக் ஷாப் அருகில் சந்தித்தேன். இனி, சென்னை திரும்பிய உடன், பார்க்கவேண்டும். தம்பதியரின் ஆசிகளைக் கோருகிறேன்.

    - தங்களின் அடுத்த குறுநாவல்களை- எதிர் பார்க்கிறேன். அவை வழக்கமான குறுநாவல்களாக இல்லாமல் 'குறுகுறு' என்று புல்லரிக்கும் - இளமை ததும்பும்- கதைகளாக இருந்தால் இளைய தலைமுறைக்குப் பயன்படும் என்று தோன்றுகிறது.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி செல்லப்பா சார்!

      துளசி: மிக்க நன்றி சார். அது நான் 1980 களில் எழுதிய நாவல் முடிக்காமல் வைத்திருந்து இப்போதுதான் முடிக்கிறேன். புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது சார். பார்ப்போம்...

      மிக்க நன்றி சார்!

      நீக்கு
  5. அழகாக தலைப்பிட்டுள்ளீர்கள்.. சுப்புத்தாத்தாவையும் மீனாட்சி பாட்டியையும் பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள் அப்படியொரு மகிழ்வு பிறக்கும். இருவருடைய அன்பையும் நகைச்சுவையுணர்வையும் காணொளிக் காட்சிகளாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். இங்கு உங்கள் எழுத்தால் கண்முன் காட்சி விரிகிறது. ராகங்கள் பற்றிய அடிப்படை ஞானமின்மை பாடல்களை விரும்பி ரசிக்க ஒரு தடையா என்ன.. சுப்புத்தாத்தா பாடிய பல பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். என்னுடைய பாடலொன்றைக்கூட பாடி யூட்யூபில் ஏற்றியுள்ளார். இருவரும் என்றைக்கும் இதே மகிழ்வோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதாமதிவாணன் அக்கா! ஆமாம் அக்கா அவர்களைக் கண்டால் அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொண்டுவிடும்!!

      ஆம்! அக்கா பாட்டை ரசிப்பதற்கு ராகமோ, இலக்கணமோ மொழியோ எதுவுமே தேவையில்லையே!! ஞானமும் எதுவுமே தேவையே இல்லையே!! இசையை ரசிக்கத் தெரிந்தால் போதுமானதே!! அது உங்களுக்கு நிறையவே உண்டு என்பது உங்கள் பதிவுகளில் வாசித்திருக்கிறோம்....

      எங்களுக்கு எழுதத் தெரியவில்லை என்றாலும் உங்கள் எழுத்தை நாங்கள் ரசித்து வாசிப்பது போல!!!!

      மிக்க நன்றி அக்கா தங்களின் கருத்திற்கு!!

      நீக்கு
  6. பெரியவர்கள் இருவருக்கும் நமஸ்காரங்களும், வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  7. சுப்பு தாத்தாவை மட்டும் ஒரு முறை - சென்னை பதிவர் சந்திப்பில் பார்த்து பேசிக் கொண்டிருந்தேன். இதுவரை மீனாட்சி பாட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த தமிழகப் பயணத்தில் ரெண்டு நாள் சென்னை டேரா போடணும்னு இருக்கு... பார்க்கலாம்!

    சுப்பு தாத்தா - மீனாட்சி பாட்டி ஆகிய இருவருக்கும் நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், உடல் ஆரோக்கியமும் தர எல்லாம் வல்லவனிடம் பிரார்த்திக்கிறேன்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையில் ஒரு 2 நாட்கள் நீங்கள் சொல்லியிருப்பது போல் டேரா போடப் பாருங்கள் வெங்கட்ஜி! சுப்புத்தாத்தா உட்பட நாம் அனைவரும் சந்திக்கலாம்...

      மிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  8. வணக்கம்
    இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

      நீக்கு
  9. தாத்தா எனது மூன்று பாடல்கள் பாடி யூட்யூப்பில் ஏற்றி இருக்கின்றார்
    சில முறைகள் தாத்தாவுடனும், பாட்டியுடனும் தொலைபேசியில் பேசியிருக்கிறேன் இளஞ்ஜோடிகளை விரைவில் சந்திப்பேன் ஆசி பெற...
    தாத்தா-பாட்டியை வணங்கி இருவரும் செஞ்சுரி அடிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
    த.ம.4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கில்லர்ஜி தங்களது மூன்று பாடல்களை அவர் பாடியுள்ளார் அதுபோல எங்கள் தளத்தில் வெளியான பாடலையும் பாடியுள்ளார்...மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு

      நீக்கு
  10. ///றுநாவலை மிகவும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்! /////

    நோஓஓஓ ஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்...... இதில் சொற்பிழை வந்துவிட்டது.... கருத்திட்ட அதிராவுக்கும் மற்றும் அனைவருக்கும் மற்றும் கைநடுக்கத்தால்:), (கொஞ்சம் இருங்கோ சிரிச்சிட்டு வாரேன்ன்ன்):) மைனஸ் வோட் போட்ட அஞ்சுவுக்கும் என வந்திருக்கோணும்:)...

    நான் இப்பவே உண்ணாவிரதம் ஆரம்பிக்கிறேன்ன்ன்ன்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹஹஹ் அனைவருக்கும் என்றால் அதில் அதிரா உண்டல்லோ!! என்னாது மைனஸ் வோட் போட்ட அஞ்சுவா....!! அங்க ஓட்டுப் பெட்டியே காணோம்....இதுல எப்படி ஏஞ்சல் போட்டுருப்பாங்க...

      சரி சரி உங்கள் உண்ணாவிரதம் பிரியாணி பாக்கெட், சமோசாவுடன் தானே??!! ஆரம்பியுங்கள்!!

      கீதா

      நீக்கு
    2. garrrrrrrrr கை நடுக்கத்தால் வோட் போடாம விட்ட அதிராவுக்கும் :)

      நீக்கு
  11. ////துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.///

    அப்பூடியெனில் அவர்களின் படங்களையும் வெளியிடுங்கோ:) படம் பார்த்து முடிவெடுப்போம்ம்ம், அழகெனில் பிரித்தானியாவுக்கு இல்லையெனில் அமெரிக்காவுக்கே கொடுங்கோ நமக்கு வாணாம்ம்ம் ஹா ஹா ஹா நான் சொன்னது மன அழகை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ படமெல்லாம் வெளியிட முடியாதுன்னேன் ...துளசிகிட்ட கேட்கிறேன் வெளிய்டலாம்னு சொன்னா வெளியிடறேன்...அது புத்தகமாக வருகிறது. தளத்திலல்ல...அதுவும் நாவலாக...

      ச்ரி சரி வெளி வரட்டும் முடிவெடுப்போம் பிரித்தானியாவுக்கா அமெரிக்காவுக்கா என்று...

      கீதா

      நீக்கு
  12. 80 தை நெருங்கும் முன்னாள் வாலிபர் இன்றைய சுப்பு தாத்தாவுக்கும் பாட்டிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிவர் இளமதியின் பக்கம் தான் தாத்தாவின் வொயிஸ் கேட்டேன்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அதிரா உங்கள் வாழ்த்திற்கு...சொல்லிடுவோம்!!

      கீதா

      நீக்கு
  13. ஆஹா !அடுத்த கதாபாத்திரங்கள் துரைராசு, லதா, கோபால் ஆகியோரை சந்திக்க ஆவலாக இருக்கிறது .
    ..வாவ் !சுப்பு தாத்தா ஆல்வேஸ் rocks நானும் தாத்தாவின் பாடல்களை யூ டியூபில் பார்த்திருக்கிறேன் .என்னவொரு சந்தோஷமான மனிதர் ..அவரிடமிருந்து இல்லை அவர்கள் இருவரிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் ....உண்மையில் இளம் ஜோடிகள்தான் ..தாத்தா என்பதற்கு பதில் நாம் அங்கிள் என்று அழைத்திருக்கணும் .யங் அன்ட் எனர்ஜடிக் பெர்சன் என்றால் அது இவர்தான் ..
    எத்தனை சுறுசுறுப்பு என வியப்பாக இருக்கும் இளமதி கவிதை எழுதினால் அதை அடுத்த அரை மணியில் பாடலாக பாடி முடித்திருப்பார் ..ஹனிமூன் ஜோடிகள் எப்பவும் இதே சந்தோஷத்தோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கணும்னு இறைவனை வேண்டிக்கறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஏஞ்சல்! ஆமாம் மிகவும் மகிழ்ச்சியான மனிதர்...ஆம் முன்பெல்லாம் பாடிவிடுவார். இப்போது சற்று தளர்ச்சியால் பாட முடியவில்லை என்றார். பிரார்த்திப்போம் அவர்களுக்காக...

      நீக்கு
  14. உண்மையான அன்பிற்கு வயது என்றைக்குமே தடையாக இருப்பதில்லை..

    பதிவர்களுக்கு அவர்கள் அளிக்கும் ஊக்கமும் உற்சாகமும் ததும்பும் கருத்துரைகள் தனித்துவமானவை..

    பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்க!.. - என, வேண்டிக்கொள்கின்றேன்..

    பதிலளிநீக்கு
  15. வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்த எனக்கு வயதில்லை என்றாலும் வாழ்த்துகிறேன் ,வணங்குகிறேன் :)

    பதிலளிநீக்கு
  16. பெரியவங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். ஏற்கெனவே முகநூலில் சு.தா.வின் பதிவைப் படித்தேன். நல்ல விஷயம் தெரிந்த நண்பர்கள் ஒன்று கூடி இம்மாதிரியான அருமையான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வது என்பது எங்களுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம். சும்மாவானும் பேசிக் கொண்டிருக்காமல் பயனுள்ள பொழுதாகக் கழிந்தமைக்கு வாழ்த்துகள். ஒத்த கருத்துடையவர்கள் ஒன்று சேர்ந்து அனைவரின் பொழுதையும், மனதையும் இனிமையாக்கி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  17. அழகான சந்திப்பை அருமையாக பகிந்ததுக்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  18. சுப்புத்தாத்தா விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. படத்தைப் பார்த்த உடனேயே.. எங்கேயோ இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேனே என்று தோன்றியது. நல்ல சந்திப்பு.

    இருவருக்கும் எனது வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  20. எண்பதை நெருங்கும் ஹனி மூன் ஜோடிகள் என்பது சரியா. சூரி சிவா என்னை விட சிறியவர். மேனகா பாட்டி அல்ல மீனாட்சி பாட்டி. இவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து இருக்கிறோம் என் ஓரிரு பதிவுகளுக்கும் பாடி இருக்கிறார் எங்களது ஐம்பதாவது மண நாளுக்கு வருகிறேன் எப்ன்றவர் வர இயலவில்லை. நான் எழுதி இருந்த கன்னடப் பாட்டு மாத்தாடு மாத்தாடு மல்லிகெயின் தமிழ் மொழி பெயர்ப்புக்கு பாட இயலவில்லை என்று கூறி எழுதி இருந்தார் சுவாரசிய தம்பதிகள்

    பதிலளிநீக்கு
  21. திரையிசைப் பாடல்கள் எப்பொழுதாவது காதில் விழும்பொழுது சுவைப்பது தவிர இசைக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

    ஆனால் அன்பு, காதல் எல்லாம் அனைவருக்கும் பொதுவான மொழிதானே! அது புரிகிறது. முதுமை வந்து விட்டால் கணவனும் மனைவியும் தங்களுக்குள் மேன்மேலும் கசப்பை உமிழ்ந்து கொள்வதுதான் வழக்கம். இப்படிப்பட்டவர்கள் அரிதானவர்கள்! நீங்கள் அங்கு உணர்ந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் படிப்பவர்களும் உணரும்படியாகப் பதிவில் கொண்டு வந்திருக்கிறீர்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  22. பெரியவர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்...
    இந்த சந்தோஷமும் நீண்ட ஆயுளும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  23. அட்டகாசம் அட்டகாசம். என் புக் ரிலீசுக்கு வந்து கௌரவம் கொடுத்த சுப்பு சாரை மறக்க இயலுமா. வாழ்க வளமுடன் அன்பு ஜோடி.திருஷ்டி சுத்திப் போடச் சொல்லுங்க. நாங்களும் வீட்டுக்கு வந்து பேசினமாதிரி ஒரு சந்தோஷம் :)

    பதிலளிநீக்கு
  24. கலை நாட்டம் (ஆர்வம்)
    இசை நாட்டம் (ஆர்வம்)
    இரண்டுமே
    நீண்ட ஆயுளைத் தருமே!
    அறிஞரின் பணிகள் தொடர
    இருவரும் நீடூழி வாழ
    வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு