செவ்வாய், 30 டிசம்பர், 2014

மத நம்பிக்கை தவறில்லை...ஆனால் மதம் பிடித்த மத நம்பிக்கை ஆபத்தானது...


      மங்களூரு அருகேயுள்ள புத்தூரில் அமீர்கானின் பிகே படம் பார்க்கத் தன் பெற்றோர்களுடன் போன இளம் பெண்ணை, படத்தினிடையே போலீசார்கள் வந்து வெளியே வர அழைத்ததும், பயந்து போனார்.  போலீசார்கள் பெண்ணையும், பெற்றோரையும் விசாரித்த பின் அவர்களுடன் தியேட்டருக்கு வெளியே வந்ததும் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான ஆட்களைப் பார்த்துத் திடுக்கிட்டு அவர்களும் போலீசாரைப் பார்க்க, போலீசார் கூடி நின்றவர்களிடம் :நீங்கள் நினைத்தது போலத் தனியாக ஒரு முஸ்லிம் இளைஞனுடன் படம் பார்க்கவரவில்லை. இந்தப் பெண் இவரது பெற்றோருடன்தான் படம் பார்க்க வந்திருக்கின்றார்.  எனவே எல்லோரும் பிரச்சினையேதும் உண்டாக்காமல் கலைந்து போங்கள்” என்று சொல்லி எல்லோரையும் சமாதானப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள்.
 
பெண்கள் மேல் இவ்வளவு அக்கறையோ என்றெல்லாம் எண்ணி ஏமாற்றமடைய வேண்டாம்.  நூற்றுக்கணக்கான அவர்களில் இந்துக்களும் உண்டு.  முஸ்லிம்களும் உண்டு. அவர்கள் தங்களது வாட்ஸப்பில் ஒரு இந்துப் பெண் முஸ்லிம் இளைஞனுடன் பிகே படம் பார்ப்பதாகச் செய்தி வந்ததும் ஓடிவந்தவர்கள்.  அதெப்படி ஒரு இந்துப் பெண் முஸ்லிம் பையனுடன் அல்லது ஒரு முஸ்லிம் பெண் இந்து பையனுடன் படம் பார்க்க அனுமதிப்பது? நம் மதம் அதை அனுமதிக்காதே. அதே நேரத்தில் மாரல் போலீஸ் என்று அழைக்கப்படும் இவர்கள் சாலை விபத்தில் அடிப்பட்டு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற இதேபோல் வாட்ஸப்பில் தொடர்பு கொண்டு மற்றவர்களை வரவழைத்து மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல உதவுவார்களா? என்று கேட்டால், “இல்லை அதைப்பற்றி எல்லாம் மதநூல்களில் அதிகம் பேசப்படவில்லை அல்லது மதத்தலைவர்கள் பேசுவதில்லை.  ஒருவேளை அவர்கள் உயிர் ஊசாலாடும் அவரை அலைபேசியில் படம் பிடித்து யூட்யூபிலோ, முகநூலிலோ பதிவு செய்யலாம்.  அவ்வளவே.  மதங்கள் மாறிவிட்டன.  அவை இப்போதெல்லம் இறையுணர்வையும், அன்பையும், உதவி மனப்பான்மையையும் வளர்ப்பதில்லை.  அதற்குப் பதிலாக பிற மதத்தவர்பால் வெறுப்பையும், விரோதத்தையும்தான் வளர்க்கிறது. 


மதம் பிடித்த தீவிர மதவாதிகள் அதனால்தான் தாம் எம்மதமும் சம்மதமே எனும் உயர்ந்த உள்ளம் படைத்த இந்தியர்கள் என்பதைக் காட்ட மறந்து, மத தீவிரவாதச் செயல்களுக்கு உதவி செய்யத் துணிகிறார்கள்.  இவற்றை எல்லாம் எதிர்ப்பவர்கள் தான் நம் நாட்டில் அதிகம்.  அதில் ஐயமில்லை.  எதிர்த்துப் பேசும், எழுதும் நம்மைப் போன்றவர்களை விட எண்ணிக்கையில் குறைவான அவர்கள் காட்டும் ஆவேசமும், ஆர்வமும் ஏனோ நம்மால் காட்ட முடியவில்லை. அப்படி எவரேனும் மதவேறுபாடுகளை முறியடிக்க ஏதேனும் செயல்களைச் செய்ய நேர்ந்தால், மத தீவிரவாதிகள் புத்தூர் தியேட்டருக்கு வெளியே ஒன்று திரண்டது போல் திரண்டு அதை முறியடித்து விடுகிறார்கள்.


அப்படி ஒரு சம்பவம் கடந்த புதனன்று (17/12/2014) கொச்சியில் நடந்தது.  பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனரான ஆஷிக் அபுவும், நடிகை ரீமாகல்லிங்களும் மதம் பாராமல் சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு, மததீவிரவாசிகளைத் திகைக்கவைத்தவர்கள்.  கடந்த புதனன்று இந்திய ஜனநாயக இளைஞர் அணியினர் (டிவைஎஃப்ஐ) ஜாதி, மதம் பாராமல் மணமுடிக்க விரும்புபவர்களுக்கான ஒரு வலைத்தளத்தை செக்குலர் மேரேஜ்.காம் எனும் பெயரில் தொடங்கி அதன் தொடக்க விழாவை, ஆஷிக் அபு மற்றும் ரீமாகல்லிங்களால் நடத்தினர். முதல் நாளே ஆயிரக்கணக்கானவர்கள் வலைத்தளம் வந்து தங்கள் வரவேற்பைத் தந்தனர்.  ஆனால், மறுநாள் வியாழக்கிழமை (18/12/2014) அன்று கொமோடோ அந்த வெப்சைட்டை விழுங்கி  விட்டது.  இப்போது அதில் மததீவிரவாத்தை எதிர்க்கும் எவரையும் இது போன்ற சைபர் போரால் முறியடிப்போம் என்று செய்தி மட்டும் இடப்பட்டிருக்கிறது.  இப்படி மததீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நம் செக்குலர் இந்தியாவில் கூட ஒன்றும் செய்யவியலாத நிலை.மனதுள் மிகுந்த வேதனையைத் தருகின்றது.  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இந்நிலை மாறி என்று தர்மம் வெல்லும் நிலை வருமோ?......

-

66 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாங்க வாங்க எப்போது வந்தாலும் தாங்கள் வரவேற்கப்படுவீர்கள்!!! ஆல்வேய்ஸ் வெல்கம்!!! ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாருங்கள் ஆசானே! மிக்க நன்றி ஆசானே! தங்கள் கருத்திற்கு! தங்களின் பின்னூட்டப் பதிவுதான் நினைவுக்கு வருகின்றது...ஹஹஹஹஹஹ

   நீக்கு
 3. "மீண்டும் தர்மே வெல்லும்" - என்று எவராலும் சொல்ல முடியாத நிலை அல்லவா அங்கு நிகழ்ந்துள்ளது!
  மத நல்லிணக்கம் என்ற வேரில் வெடி வைக்கும் வேதனையான செயல்கள் இனியும் இந்த பாரதத்தில் நிகழாமல் இருக்க.....
  "மனிதமே மதம் என்ற என்ற நிலையில் பிடிப்போடு வாழ வேண்டும்!
  மனித நேயமிக்க மனிதரின் பதிவு!
  வாழ்த்துக்கள் அய்யா!
  நன்றியுடன்,
  புதுவை வேலு
  (எனது வலைப் பூ வை சூடுவதற்கு வாருங்கள் அய்யா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! வருகின்றோம் தங்கள் வலைப்பூவைச் சூட!! நிச்சயமாக வருவோம் ஐயா!

   நீக்கு
 4. துளசி!
  என் அடுத்த இடுகை உங்கள் சம்பவத்தின் கருத்தை ஒட்டியே! நன்றி! என் இடுகைக்கு ஒரு முன்னூட்டம் கொடுத்தா மாதிரி இருக்கு!

  என் இடுகை நான் எப்படி ஹிந்தி கற்றுக்கொண்டேன் எனபதை ஒட்டியே-உங்கள் இடுகை!

  தமிழ்மணம் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை நம்பள்கி வாங்க வாங்க!! மிக்க நன்றி நம்பள்கி!! எங்கள் இடுடை தங்களுக்கு ஒரு முன்னூட்டமாக அமைந்ததற்கு!

   உங்கள் ஹிந்தி கற்ற அனுபவத்தை வாசிக்க வருகின்றோம்......

   நீக்கு
 5. மதங்கள் போதிப்பது அன்பு ஒன்றினை மட்டும்தான்
  நாம் மறந்ததும் அது ஒன்றினை மட்டும்தான்
  வேதனையாக உள்ளது நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! உண்மையே! அன்பு மட்டும்தான்! மனிதந்தான் எல்லாவற்றையும் கேவலப்படுத்துகின்றான்...தனது ஆறாவது அறிவை வைத்துக் கொண்டு.....

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 6. மதவாதிகளின் கையில் நாடு ..குரங்கு கை பூமாலையாய் மாறிக் கொண்டுள்ளது !
  த ம 3

  பதிலளிநீக்கு
 7. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
  தர்மம் மறுபடியும் வெல்லும்!..

  அந்த நிலை என்று வருமோ?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருப்போம் வருமா என்பது ஐய்ம்தான்!

   மிக்க நன்றி ஐயா! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 8. பதில்கள்
  1. சரியாகச் சொன்னீர்கள் டிடி! அதுதான் மனிதனை நாசப்படுத்துகின்றது!

   நீக்கு
 9. 'மதம்' பிடித்து ஆடுகிறார்கள். கடைசி பாரா சொல்லும் செய்தி திகைக்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நன்பரே! நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றோம் என்று தெரிய வில்லை....

   நீக்கு
 10. இப்டி தலைப்புகளை செய்தி தாளில் பார்த்தல் கூட இப்போ உங்க நினைவு வந்துடுது சகாஸ்:))) ஆமா நம்ம இந்தியா எங்க போய்ட்டிருக்கு:(((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ்! ஓ! நாங்கள் அந்த அளவிற்கு ஆகிவிட்டோமா....நல்ல கேள்வி! நிஜமாகவே நம்ம இந்தியா எங்க போகுது?!!!!! மக்கள் திருந்தாத வரையில் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். மதம் இல்லா விலங்குகள் உயர்வானவைதான் இல்லையா சகோதரி! இந்த ஆறறிவு படுத்தும் பாட்டைப் பாருங்கள்!

   நீக்கு
 11. அருமையான விடயத்தை தந்தமைக்கு தில்லை அகத்தார்களுக்கு ஒரு ராயல் சல்யூட்

  நமது நாட்டில் நல்ல செயலுக்கு கூடும் கூட்டத்தைவிட கேடு கெட்ட செயலுக்கு கூடும் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது இது விஞ்ஞானம் வளர்ந்ததாக பீற்றிக்கொள்ளும் நாம் இது அறியாமையே 80தை மறந்து விடுகிறோம்.

  நண்பர் கரந்தையாரின் கருத்துகளை ஆமோதிக்கிறேன்.

  முடிவில்...
  தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இந்நிலை மாறி என்று தர்மம் வெல்லும் நிலை வருமோ ?......
  என்று கேட்டு இருக்கிறீர்கள் நிச்சயமாக வராது என்பதே எமது கருத்து காரணம் அதற்க்கான சாத்தியக்கூறுகள் புலப்படவில்லையே...

  தினம், தினம், கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைபோலத்தான் நமது சமூகம் போய்க்கொண்டே........... இருக்கிறது

  மனிதனுக்கு ஆறறிவு 80தை மாற்றி எழுக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்

  தமிழ் மணம் 7

  மாற்றத்தை நாடும்,,, அல்ல தேடும்....

  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹை ஜி! உங்கள் கருத்தைப் போன்று மேலே மைதிலி சகோதரிக்குச் சொல்லி வந்தால் இங்கு னீங்களும் அதையே மொழிந்துள்ளீர்கள்!

   நிச்சயமாக மாறப்போவதில்லை! என்பதுதான் உண்மை! ஆறறிவா? யருக்கு??!!! மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 12. இங்கு மனிதர்களைப் பார்ப்பதில்லை மதத்தை மட்டுமே பார்க்கிறார்கள்...
  என்ன செய்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக மிகஹ் சரியே! நண்பரே! மதத்தைப் பார்ப்பதாலதான் மதம் பிடித்து அலைகின்றான் மனிதன்! மனிதம் என்ற வார்த்தையில் அந்த னியை எடுத்துவிட்டு வாழ்கின்றான்..என்ன செய்ய...

   நீக்கு
 13. மதங்களை மறக்கும் நாள் முதலே மனிதம் செழிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியே! மேலேதான் மனிதம் மதம் பற்றி பேசிவிட்டு வந்தால் நீங்களும் சொல்லி இருக்கின்றீர்கள் நண்பரே! மிக்க நன்றி!

   நீக்கு
 14. வணக்கம்
  அண்ணா.
  அற்புதமாக நல்ல கருத்தை முன்வைத்துள்ளீர்கள் முதலில் எனது பாராட்டுக்கள்... தனபாலன் அண்ணா சொன்னது போல. அகந்தை ஒழிய வேண்டும் அப்போது வித்தியாசமான தோற்றம் பிறக்கும்.. பகிர்வுக்கு நன்றி த.ம9
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி! தங்களின் அருமையான கருத்திற்கு!

   தங்களுக்கும் தங்கள் குடும்பதார்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 15. மதம் ஒரு வாகனம் போன்றது..மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதம் ஒன்றே என்று புரிந்துகொண்டால் இந்நிலை மாறும் சகோதரரே..மாற விடமாட்டார்கள்..ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு அரசியல்... :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி தங்கள் கருத்திற்கு!! சரியான கருத்து...

   நீக்கு
 16. வணக்கம் !

  மிகவும் சிறப்பான நற் கருத்து ! மதம் பிடித்த மத நம்பிக்கையானது சில
  சமயங்களில் மனித மனங்களில் முக்கியமாக இருக்க வேண்டிய
  தன்னம்பிக்கையையும் சிதைத்து விடுவதும் உண்டு.ஒன்று பட்ட
  நல்லுணர்வால் உலகும் சிறந்து விளங்கட்டும் !உங்களுக்கும் உங்கள்
  குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
  சகோதரா !வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கஹ்கோதரி தங்கள் கருத்திற்கு! மிக அழகிய கருத்து!

   வாழ்த்துக்களௌக்கும் மிக்க நன்றி!

   நீக்கு
 17. அன்புள்ள அய்யா,

  மதம் பிடித்த மத நம்பிக்கை ஆபத்தானது... உண்மைதான்! இப்போதெல்லம் இறையுணர்வையும், அன்பையும், உதவி மனப்பான்மையையும் வளர்ப்பதில்லை. அதற்குப் பதிலாக பிற மதத்தவர்பால் வெறுப்பையும், விரோதத்தையும்தான் வளர்க்கிறது என்பது நிதர்சனம்.
  நமது நாட்டில் ஒரு பெரியார் அல்ல... பல பெரியார்கள் மீண்டும் வரவேண்டும். பெரியாரின் பெயரைச் சொல்லி வாழ்பவர்களே அவரின் கருத்தை வலியுறுத்த தயங்குகிறார்களே!
  மதம் மனிதனை மயக்கத்திலே வைத்திருக்கவே முயற்சி செய்கிறது. எப்பொழுதும் மனிதன் விழித்துக்கொள்வதற்கு விடுவதாய் இல்லை. மதவாதிகள் கடவுளின் பெயரைச் சொல்லி உல்லாசமாக வாழ்கிறார்கள். ஏமாளிகளாகவே பாமரர்கள் காலம் கழிகிறது!
  ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
  -நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது நாட்டில் ஒரு பெரியார் அல்ல... பல பெரியார்கள் மீண்டும் வரவேண்டும். பெரியாரின் பெயரைச் சொல்லி வாழ்பவர்களே அவரின் கருத்தை வலியுறுத்த தயங்குகிறார்களே! //

   மிக மிக சரியான கருத்து!

   மதவாதிகள் கடவுளின் பெயரைச் சொல்லி உல்லாசமாக வாழ்கிறார்கள். ஏமாளிகளாகவே பாமரர்கள் காலம் கழிகிறது!// அருமையான கருத்து!

   மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 18. அன்புச் சகோதரரே தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும், கீதா குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி! தங்களின் வாழ்த்திற்கு! தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 19. அரசு சாராச் சேவை அமைப்புகள் பல ஒருங்கிணைந்து இந்த பா.ச.க, பச்ரங்தளம் போன்ற சமயவெறி இயக்கங்களைத் தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் சரியான கருத்து! வழக்குத் தொடுக்க முடியுமா? ஆட்சியே அதைச் சார்ந்துதானே இருக்கின்றது! மதமும் அரசியலும்

   மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு!

   நீக்கு
 20. மதத் தீவிர வாதம் என்றுதான் ஒழியுமோ? சிறப்பான பகிர்வு! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 21. "அன்பும் பண்பும் அழகுற இணைந்து
  துன்பம் நீங்கி சுகத்தினை பெறுக!"

  வலைப் பூ நண்பரே / சகோதரியே!

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (2015)

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  பதிலளிநீக்கு
 22. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் துளசி சார், கீதா மேடம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 23. நல்ல பகிர்வு சகோதரரே!

  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 25. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 26. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் , சகோதரி கீதா மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 27. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 28. மிகவும் யோசிக்க வைத்த பதிவு.இந்தப் புத்தாண்டிலிருந்தாவது மனிதர்கள் மாறட்டும்.. ஹ்ம்ம்..

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

  பதிலளிநீக்கு
 29. தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 30. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 31. அருமையான இந்த பதிவை மிஸ் பண்ணியதற்கு மன்னிக்கவும்.

  இந்த பதிவை படிச்சு, பயன்படுத்தாமல் வைத்திருந்த என்னுடைய மூளையை பயன்படுத்த வச்சுட்டிங்க (ரொம்பவும் ய்ப்சிச்சு என்னுடைய மூளை குழம்பி விட்டது) . அதற்கு நஷ்ட ஈடா என்ன தரப்போகிறீர்கள் சகோஸ்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயோ! நண்பரே! இதுல என்ன இருக்கு?! தங்களுக்கு எப்போது நெரம் கிடைக்குதோ அப்ப பார்த்துக்குங்க..ஹஹஹஹ ரொம்ப மூளைய கசக்க வைக்கும்படியா இருந்துச்சு இந்த பதிவு?!!! ஹஹ் நஷ்ட ஈடா என்ன தர்ரது சொல்லுங்க ..நண்பரே டீல் போட்டுருவோம்.....டீல் ஆர் நோ டீல்!!!இது எப்புடி....

   மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 32. நம்மில் பலரும் தீவிர மதவாதிகளே, என்னஒரு வித்தியாசம் என்றால் இவர்கள் மனதளவில் தீவிர மதவாதிகள், அதாவது silent supporters. இல்லையென்றால் இப்போது குஜராத் மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் இவர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்க முடியுமா.?அண்மையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் ஜம்முவில் மாத்திரம் பாஜகவும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இஸ்லாமியர் மட்டும் வெற்றி பெற்றிருக்க முடியுமா. ? வெளிப்படையில் நமக்கு எம்மதமும் சம்மதமே. அடிப்படையில் அல்ல. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! சரிதான் சார்! சைலன்ட் சப்போர்டர்ஸ்....மிகவும் சரியே! தாங்கள் சொல்லியக் கருத்துக்கள் மிகவும் தெள்ளத்தெளிவான னேரடியான கருத்துக்கள். வெளிப்படையில் சம்மதம் அடிப்படையில் அல்ல...உண்மையே!

   நன்றி சார்!

   நீக்கு
  2. எனக்கு ஜி.எம்.பி சார் சொல்லியிருக்கும் கருத்துதான் மிகச் சரியாகப் படுகிறது. மனதின் உள்ளே நம்பாமல், வெளியில் நம்புவதாகக் கருத்து சொல்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால்தான் அவர்களின் சந்ததிக்கு 'ஒருவருடைய மதம் என்பது அவருடைய நம்பிக்கை மட்டும்தான்' என்ற செய்தியைக் கடத்தமுடியவில்லை. (வெளியில் நாத்திகர்போலும் உள்ளே ஆத்திகராகவும் இருப்பது போன்று.. அல்லது வெளியே பக்திப் பழம் ஆனால் மனத்தில் உண்மையான நம்பிக்கையும் பக்தியும் இல்லாமல் இருப்பது)

   நீக்கு
 33. இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

  புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
  http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! வாழ்த்துக்களுக்கு. தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

   நீக்கு