செவ்வாய், 9 டிசம்பர், 2014

நைஜீரியாவிலுள்ள பொக்கொ ஹராம் இயக்கத்தினரைப் போல் நம் நாட்டிலும் க்காப் (Khap) பஞ்சாயத்துக்காரர்கள் தனிக் காட்டு ராஜாக்கள்

படம்: இணையம்நைஜீரியாவில் பொக்கொ ஹராம் இயக்கம் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளைச் சிறை எடுத்து மதம் மாற்றிக் கட்டாயக் கல்யாணம் நடத்தி அவர்களை எல்லாம் கர்பிணிகளாக்கிய சம்பவம் உலகை உலுக்கியது போல் நம் நாட்டிலும் ராஜஸ்தானில் தில்வாரா எனும் இடத்தில் க்காப் பஞ்சாயத்துக்காரர்கள் எனும் ஈவிரக்கம் இல்லாத ஆண்கள் கூட்டம் கணவனை இழந்து, கடந்த 37 வருடங்களாகத் தனித்து வாழும் 80 வயது மூதாட்டியை பிசாசாக முத்திரை குத்தி அவரை நிர்வாணமாக்கி, அவரது உடலில் கரும் சாயம் பூசி, கழுதைமேல் ஏற்றி, பில்வாரா மாவட்டத்தில் உள்ள, சவுஹானோன் கி கமேரி எனும் கிராமம் முழுவதும் சுற்றச் செய்து காட்டுமிராண்டித்தனத்துடன் செயல்பட்டு, இந்தியாவிலும் நைஜீரியாவிலுள்ள பொக்கோஹராம் இயக்கத்தினருக்கு இணையான செயல் செய்யச் சளைக்காதவர்கள் உண்டு என்பதை நிரூபித்து உலகத்தைவரை உலுக்கி இருக்கிறார்கள்.
India still practice some weird laws, like stripping a woman naked and parading her on a donkey
India still practice some weird laws, like stripping a woman naked and parading her on a donkey (bbc.com)

அத்துடன் தீரவில்லை. அந்த மூதாட்டியுடன் எவரேனும் பேசினால் அவர்களுக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதமாம். அவரை அக்கிராமத்திலிருந்தே தள்ளி வைத்துவிட்டார்களாம். இப்படிப்பட்டத் தீர்மானங்கள் எடுத்துச் செயல்படுத்தும் கிராம பஞ்சாயத்துக்காரர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அல்லர்.  தடி எடுத்தவன் தண்டக்காரன் ஆவது போல் அக்கரமம் காண்பித்து அதிகாரம் கையாண்டவர்கள் தான் இவர்கள் எல்லாம்.  பாவம் அம்மூதாட்டியின் கைவசமுள்ள இடத்தை அபகரிக்கத்தான் இப்படிப்பட்டக் காரியங்களைச் சிலர் செய்வதாகச் சொல்லும் அவரது வார்த்தைகள், மனிதாபிமானம் உள்ளவர்களின் மனதை வேலால் குத்துகிறது.  இது போன்ற சம்பவங்கள், வடமாநிலங்களில் புதிதல்லவாம்.  ஒரு மாதம் முன்பு 50 வயதாகிய ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி கழுதை மேல் ஏற்றி ராஜஸ்தானில் ராஜ் சமந்த் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் சுற்றச் செய்துள்ளார்கள்.  அதன் முன் சிற்றார் மாவத்திலுள்ள ஒரு கிராமத்தில் 42 வயதுள்ள ஒரு பெண்ணின் வாயில் துணியைச் செருகி நிர்வாணமாக்கி கழுதை மேல் ஏற்றி கிராமத்தைச் சுற்றச் செய்துள்ளார்கள். இதற்கெல்லாம் அவர்கள் சொல்லும் காரணங்கள் மூதாட்டி சொன்னது போல் உண்மையாக இருக்க வாய்ப்பில்லைதான்.  இப்படிக் காட்டுமிராண்டிகள் வாழும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்து தேர்தலில் வாக்களித்து சுதந்திரத் தினம் கொண்டாடி வாழ்கிறோம் என்பதை எண்ணும் போது மனது மிகவும் வேதனைப்படுகின்றது.

      

      வேற்றுமைகளில் ஒற்றுமை காணும் இந்தியாவில், வெட்கப்பட்டுத் தலைகுனிவை ஏற்படுத்தும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கவே முடியாதா? செவ்வாய் கிரஹத்திற்கு மங்கள்யானை அனுப்பி மேலை நாடுகளுடன் விண்வெளியில் போட்டியிடும் நாம் இது போன்ற இங்கு நடக்கும் சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்படும்போது, “கான மயிலாடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து” ஆடிய கதைதான் நினைவுக்கு வருகின்றது.  மனிதாம்பிமானமுள்ள ஒவ்வொரு இந்தியனும் இதற்கு எதிராகக் குரல் கொடுத்து இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள் இனியேனும் நடக்கவிடாமல் தடுக்க வேண்டும். பொது இடங்களில் முத்தம் கொடுக்கவும், அதைத் தடுக்கவும், அதைக் காணவும், அலைபேசியில் படம் பிடிக்கவும், அதைப் பற்றிப் பேசவும் எழுதவும் நம்மவர்கள் காண்பிக்கும் ஆரத்தையும், அக்கறையையும் ஆவேசத்தையும் இது போன்ற அநீதியும், அராஜகமும் நடக்காமல் இருக்க இதிலும் காண்பித்து, இதைப் பற்றி பேசியும், எழுதியும், போராட்டம் நடத்தியும் இக்காட்டுமிராண்டித்தனத்தைத் தவிர்க்க முன் வரமாட்டார்களா? என்று மனம் ஏங்குகின்றது. 

படங்கள்: இணையம்  

(வலை அன்பர்களே, (கீதா)பயணத்தில் இருந்ததால் நாங்கள் வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தங்கள் பதிவுகளை வாசிக்கவும் முடியவில்லை. இதோ தொடர்கின்றோம் தங்களை, இன்றிலிருந்து...)

37 கருத்துகள்:

 1. 80 வயது மூதாட்டியிடமா ? அடபாவிகளா ? ஒருத்தனுக்கு கூடவா ? மனிதாபிமானம் இல்லை வெட்கப்படுவதைத்தவிற வேறு என்ன ? செய்யமுடியும் மானங்கெட்டசெயல்.
  நண்பரே ஒரே பாகம் இரண்டுமுறை வந்து இருக்கிறது சரி செய்யவும்

  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! கில்லர்ஜி! தங்களுடன் பேசி பல நாட்கள் ஆகிவிட்டன.

   வெட்கக் கேடுதான்....மானக்கேடுதான்....நண்பர் மதுவின் பின்னூட்டத்தைப் பார்த்தீர்களா? அவரது தகவல் நமது நாட்டின் உண்மையை அப்படியே தோலுரித்து வைத்துள்ளது..மானக்கேடு.....

   சரி செய்துவிட்டோம் நண்பரே! மிக்க நன்றி!

   நீக்கு
  2. தொ(ல்)லைபேசியிலதான் பேசிட்டியலே... உங்களோட.... க்கா

   நீக்கு
 2. இது போன்ற செய்திகளை படிக்கும் போதும் கேட்கும் போதும் கோபத்தையும் தாண்டி மனம் வெறுத்து போகிறது !

  என்ன மனிதர்கள் இவர்கள் ?

  மதங்களும், சமுதாய வழக்கங்களும் தோன்றியதே மிருகமாய் திரிந்த மனிதனை திருத்தத்தான்... ஆனால் இன்று அந்த மதங்களின் பெயரால் நடக்கும் காட்டுமிராண்டித்தங்களை ( மிருகத்தனம் என கூறுவதற்கில்லை, காரணம் எந்த மிருகமும் தன் இனம் சார்ந்த உயிரை திட்டமிட்டு கொல்வதில்லை. பெண் மிருகத்தின் மீது ஆசிட் வீசுவதில்லை ! ) அறிய நேரும் போது...

  நெஞ்சு பொறுக்குதில்லையே...

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நமது நாட்டை செக்யுலர் நாடு என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்கின்றோம். எதன் அடிப்படையில் என்று தெரியவில்லை.

   மிருகத்தனம் என கூறுவதற்கில்லை, காரணம் எந்த மிருகமும் தன் இனம் சார்ந்த உயிரை திட்டமிட்டு கொல்வதில்லை. பெண் மிருகத்தின் மீது ஆசிட் வீசுவதில்லை ! ) // அருமையான கருத்து நண்பரே! விலங்குகளுடன் மனிதர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதே தவறு...விலங்குகளைக் கேவலப் படுத்துவது போல்....மிக்க நன்றி!

   நீக்கு
 3. அதிர்ச்சியளிக்கும் தகவல்
  இந்த நாகரீக காலத்திலும் இப்படிப்பட்ட
  காட்டுமிராண்டிகளா என மனம் கொதிக்கிறது

  பதிலளிநீக்கு
 4. எவ்வளவு தான் நம்ம நாடு முன்னேறினாலும், இந்த மாதிரி கொடுமையான,கேடுகெட்ட மனிதாபிமானம் இல்லாத பழக்கவழக்கங்களில் இருந்து எப்போது தான் முன்னேறுமோ? அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்....

  அரசியல்வாதிகள் நாங்கள் இது செய்துவிட்டோம், அது செய்துவிட்டோம் என்று பீற்றிக் கொள்கிறார்களே, உண்மையில் இந்த மாதிரியான பழக்கவழக்கங்களை முற்றிலும் ஒழித்தால் அவர்கள் தற்பெருமை பேசிக்கொள்வதில் அர்த்தம் இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் உன்னதமானக் கருத்து! என்ன முன்னேற்றம்...இப்படிப்பட்ட அநாகரீகமான செயல்கள் நடக்கும் போது?!! தாங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் சரியே! மிக்க நன்றி! நண்பரே!

   நீக்கு
 5. வெட்கக்கேடான வேதனைத் தரும் செய்தி.தலைகுனிகிறேன்

  பதிலளிநீக்கு
 6. துளசி:
  நலமா! மனிதன் கண்டுபிடிப்பில் படு கேவலமானது மதம் தான்..தன்னை சார்ந்தவர்களை அடக்கி ஒடுக்க மதம் என்ற அபினை மக்களுக்கு கொடுத்தனர்--மக்களும் முட்டாள்கள்.

  மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது!
  தமிழ்மணம் +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க நம்பள்கி! தங்களின் வருகை மிகவும் மகிழ்சியாக உள்ளது.

   துளசி: நலமே! (கீதா : நம்பள்கி என்னை மறந்துவிட்டீர்களா?!)

   தங்களின் கருத்து மிகவும் உண்மையே. சரி நம்பள்கி! நம் ஹைடெக் மோடியின் ரியாக்ஷன் இதற்கு என்னவாக இருக்கும்? அதுவும் அவரது மானிலத்தின் தொட்டடுத்த அண்டை மானிலமாயிற்றே!

   நீக்கு
 7. இதுபோலும் செய்திகள் தான் இந்தியா மீதான உலகின் மரியாதையை குழிதோண்டி புதைகின்றன! சாதிகொடுமைகளை விடவும், மோசமாகத்தான் இருக்கிறது உலகெங்கும் பெண்கள் நிலை:((( பகிர்வுக்கு நன்றி சகாஸ்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே! சகோதரி! நமது நாட்டில் சீராக்க முடியும்...மதுவின் பதிலைப் பார்த்தால் தெரியும்...

   நீக்கு
 8. படிக்கப் படிக்க வெட்கமாக இருக்கிறது நண்பரே
  எந்த நூற்றாண்டில் வாழ்கின்றோம் என்பதே புரியவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்கம், அவமானம், நாம் இன்னும் கற்கால மனிதனின் காலத்தில்தான் உள்ளோமோ என்று தோன்றுகின்றது வடமானிலங்களின் கிராமங்களைக் காணும் போது...மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 9. காப் களுக்கு எதிராக அரசு ஒன்றும் செய்ய முடியாது என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரே சொல்கிற பொழுது...
  என்ன நடக்கும்...
  நல்ல தலைவர்களுக்கு நம் மக்களிடம் மரியாதை இல்லை ..
  பெருவாரி மக்கள் காப் சொல்லும் ஆட்களுக்குத் தான் வாக்களிகின்றனர் ..
  எனவே பிரச்சார செலவு பலமடங்கு குறைகிறது
  எளிதில் வெற்றிபெற முடிகிறது ...
  காப் முறைகள் ஒழிக்கப் பட்டால்தான் உண்மையான ஜனநாயகம் வளரும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக முக்கியமான, கருத்துள்ளத் தகவல். நீங்கள் சொல்லுவது போல் நல்ல தலைவர்களுக்கு மரியாதை இல்லை. நம் மக்களும் கொஞ்சம் சிந்தித்து செயல்பட்டால், ஒரு புரட்சி கொண்டுவந்தால் மாற்றம் வராமலா போகும்? ! அயல்நாட்டவரை எதிர்த்து திரண்டு சுதந்திரம் வாங்க முடிந்த நம்மால் ஏனோ நம் நாட்டு அரசியல் வாதிகளிடமிருந்து சுதந்திரம் வாங்க இயலவில்லை.

   மிக மிக நல்ல கருத்து! மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 10. பதில்கள்
  1. இந்தப்பாவிகள் உள்ளதுவ் அரை நண்பர் மது சொல்லுவது போல் ஜனநாயகம் வளருமா? மிக்க நன்றி டிடி!

   நீக்கு
 11. // இப்படிக் காட்டுமிராண்டிகள் வாழும் நாட்டில்தான் நாமும் வாழ்ந்து தேர்தலில் வாக்களித்து சுதந்திரத் தினம் கொண்டாடி வாழ்கிறோம் என்பதை எண்ணும் போது மனது மிகவும் வேதனைப்படுகின்றது. //

  வெட்கக்கேடான செயல்.. வேதனையுடன் தலைகுனிகின்றேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையே! நாம் உண்மையான சுதந்திரம் அடைந்துள்ளோமா என்று பல நேரங்களில் சந்தேகம் எழத்தான் செய்கின்றது! மிக்க னன்றி ஐயா!

   நீக்கு
 12. வணக்கம்
  அண்ணா
  தகவலை பார்த்தவுடன் வேதனையாக இருந்தது..எவ்வளவு நாடு வளர்ச்சியடைந்தாலும் இவர்களின் முட்டால் தனமான விளையாட்டுக்கள் நின்ற பாடில்லை... இப்படி பட்டவர்களுக்கு உரிய வகையில் கவனிக்க வேண்டும்..
  கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்போடு

  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: எப்போது மலரும்…………….:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க ந்னறி தம்பி ரூபன் தங்களின் கருத்திற்கு. வருகின்றோம் தங்கள் வலைப்பக்கம்!

   நீக்கு
 13. நம் ஆணாதிக்கக் கலாச்சாரமும் மூட நம்பிக்கைகளும் அவற்றுக்குத் துணைபோகும் ஹிந்துதுவா குழுவினரும் இவற்றுக்கு முக்கிய காரணங்கள் ஆ, ஐயோ என்று கூறும் பலரும் சிந்திக்கும் திறனை இழந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதே இதன் irony. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. இன்னும் இதுபோன்ற காட்டுமிராண்டி தனங்கள் நடப்பது வேதனையளிக்கிறது!

  பதிலளிநீக்கு
 15. செய்தித்தாளில் நானும் படித்தேன், இந்தச் செய்தியை. கொடூரமானவர்கள்.

  பதிலளிநீக்கு
 16. இப்படி முட்டாள்களும் வாழும் நாடு இந்தியா எனும் போது தலைக்குனிவை ஏற்படுத்துகிறதே !
  த ம +1

  பதிலளிநீக்கு
 17. இம்மாதிரி கொடூரங்கள் ஹரியானா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகம். காப் சொல்லி விட்டால் அதற்கு எதிர்ப்பே காட்ட முடியாத நிலை தான் இங்கே. ஹரியானாவில் தான் மிக அதிகமான கொடூரங்கள். பல வெளியே வரவே வராது. இவர்களின் வழிமுறைகள் சற்றே வித்தியாசமானது தான்......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! வெங்கட் ஜி! எப்படி முன்னேறும் இந்தியா?!1மிக்க நன்றி நண்பரே! தங்கள் கருத்திற்கு!

   நீக்கு