வியாழன், 19 ஜூன், 2014

யூட்யூப் வழியாக மஹாராஷ்ட்ரா கோலாப்பூரிலிருந்து பங்களூரு பன்னேர்கட்டாவுக்குத் தப்பிய யானை!



      

    யூட்யூப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களால் சமூகத்திற்கு நன்மையா?  பாதிப்பா என்று பட்டிமன்றம் நடத்தினால் நன்மை, தீமைகளின் பட்டியல்கள் ரயில் தண்டவாளம் போல் ஒன்றுக்கொன்று இணையாக, விடை காணா புதிராக நீண்டு கொண்டே போகத்தான் செய்யும்!

குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்

எனும் வள்ளுவன் வாக்குக்கு இவை இரண்டும் ஒரு வேளை பொருந்தாமல் போகலாம்!  அந்த அளவுக்கு இவை இரண்டும் வேண்டியதையும், வேண்டாததையும், அவசியமானதையும், அவசியமில்லாததையும் வாரி இறைத்து சமூகத்தை உடும்புப் பிடியாக பிடித்தேவிட்டது!

      முகநூலில் எவரும் எதைப் பற்றி வேண்டுமானாலும் தங்கள் கருத்துக்களைப் பயமின்றி பறைசாற்ற முடியும் என்பதற்காக எதையும் சொல்லலாம் என்று எண்ணக் கூடாது.  சொல்ல நினைப்பதைச் சொல்வதால் பிரச்சினை வராது என்று உறுதிப்படுத்திய பின்தான் சொல்ல வேண்டும்.  சில மாதங்களுக்கு முன், மும்பையைச் சேர்ந்த மொஹ்சீன் ஹெய்க் என்பவர் தன் முகநூலில் சத்ரபதி சிவாஜி, மற்றும் பால்தாக்கரேயை இழிவுபடுத்தினார் என்று சொல்லி அவரைக் கொலையெ செய்துவிட்டார்கள். அதேபோல் யூட்யூபில், தான் தற்கொலை செய்வது போன்ற சம்பவத்தை படம்பிடிக்க முயன்ற கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கயிறு இறுகி உயிரிழக்கவும் செய்தார்.  இப்படி உயிருக்கே உலை வைக்கும் முகநூலும், யூட்யூபும், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் எத்தனையோ பேர்களின் சிச்சைக்காக உதவி புரிந்து உயிர்களைக் காப்பாற்றியும் இருக்கின்றன!  அப்படிப்பட்ட யூட்யூபின் நல்ல பக்கங்களின் ஒரு பக்கம்தான்  இனி நீங்கள் இங்கு வாசிக்கப் போவது!


      மஹாராஷ்டிரா மாநிலத்திலுள்ள, கோலாப்பூர் அருகிலுள்ள வார்ணா எனும் இடத்தில் சுந்தர் எனும் ஒரு கோயில் யானையை அதன் பாகன் எப்பொதும் அடிப்பதுண்டு.  அடியும், சூடும் பட்டதால் ஏற்பட்டத் தழும்புகள் சுந்தரின் உடம்பில் ஏராளம்.  கோவிலுக்குச் செல்வோர்கள் பெரும்பான்மையோர் இக்கொடுமையைக் கண்டு மனம் நொந்து இறைவனிடம் முறையிட்டிருக்க வேண்டும்.. (சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு பயனில்லாததால்).  யானைப் பாகன் சுந்தரிடம் காட்டிய இந்தக் கொடுமை, யானையின் விளையாட்டைக் கண்டு களித்த ஒரு யூட்யூப் ப்ரியர் கண்களில் பட, அதைத் தன் மொபைலில் படம் பிடித்து யூட்யூபில் பதிவேற்றம் செய்திருக்கிறார்..  வழக்கம் போல் அதைப் பார்த்து ஐயோ பாவம் என்ரு நம்மவர்கள் சொல்லி வருந்திக் கொண்டிருக்க, அமெரிக்காவில் PETA (PEOPLE FOR ETHICAL TREATMENT FOR ANIMALS) எனும் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், மும்பையிலுள்ள அவர்கலது இயக்கத்தைச் சேர்ந்தவர்களிடம், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கச் சொல்ல, அவர்கள் மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுக், நீதிமன்றம் Animal Welfare Board டிடம் இதப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டது. பரிசோதித்தவர்கள் யானை துன்புறுத்தப்படுகிறது என்ரு கூற நீதிமன்றம் யானையைப் பாதுகாக்க உத்தரவிட்டது.


 
சுந்தரை மீட்ட மருத்துவர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி

இதற்கு எதிராக கோயில் ட்ரஸ்ட் உச்சநீதி மன்றத்தை  அணுக, உச்சநீதி மன்றமோ, யானையை மீட்டுக் காப்பாற்றி பாதுகாக்க உத்தரவிட, மஹாராஷ்டிரா வனத்துறை கேரளத்திலுள்ள எலிஃபண்ட் ஸ்குவாட் ன் உதவியுடன் அந்த யானையை மயக்கமடையச் செய்து அதற்கான பிரத்தியேகமான வாகனத்தில் ஏற்றி பங்களூரு பன்னேர்கட்டாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு, ஓரிரவும், ஒரு பகலும் பிரயாணம் செய்துக் கொண்டுவந்து விட்டது.  இப்பொது சுந்தர் விலங்குகள் ஏதுமின்றி சுதந்திரமாக மற்ற யானைகளுடன் திரிகின்றது!  இப்படி யூடூயூப் வழியாக நல்லவர்களின் கண்களில் பட்டு, யானைப் பாகனிடமிருந்துத் தப்பிய சுந்தரால் யூட்யூபிற்கு நன்றி சொல்ல முடியாத நிலையில் நம்மைப் போன்றவர்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்!

பின் குறிப்பு: எங்களுக்குத் தேவையான இசை மற்றும் படக் காட்சிகளை யூட்யூப் அவ்வப்போது எங்கள் குறும்படத்தில் சேர்க்க உதவியிருக்கிறது)
                                                                                 

     

22 கருத்துகள்:

 1. நல்ல கட்டுரை நண்பரே! (நீங்கள் இவ்வாறு அடிக்கடி எழுதுவதில்லை என்ற எங்களின் மனக்குறையை யூடியூப் மூலம் போகக் முடியுமா?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி சார்! யூட்யூப் காணொளிகள் மட்டும்தானே!

   நீக்கு
 2. அறியாத அவசியம் முகநூலை
  வெறும் பொழுபோக்கு விஷயமாக மட்டுமே
  பயன்படுத்துபவர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய
  அற்புதமான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூக வலைத் தளங்கள் தாங்கள் சொல்லியிருப்பது போல் நல்ல விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால் மிகவும் நல்லதே! தங்கள் கருத்திற்கும், பாராட்டிற்கும் மிக்க நன்றி! ரமணி சார்!

   நீக்கு
 3. பதில்கள்
  1. ஆம் DD! யூட்யூபிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்! அதைப் படம் பிடித்து வெளியிட்டவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்!

   நீக்கு
 4. யூ ட்யூபிற்கு நன்றி சொல்ல வேண்டும்
  வெறும்பொழுது போக்கிற்காக மட்டுமல்லாமல்
  இத்தளங்களை அனைவரும் பயனுள்ள வகையில் உபயோகித்தால்
  இன்னும் நலல நிகழ்வுகள் பல நடக்கலாம்
  அருமையான பதிவு நண்பரே நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! நண்பரே! தாங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரியே! //இத்தளங்களை அனைவரும் பயனுள்ள வகையில் உபயோகித்தால்
   இன்னும் நலல நிகழ்வுகள் பல நடக்கலாம்//

   மிக்க நன்றி தங்கள் பாராட்டிற்கு!

   நீக்கு
 5. சுந்தரை மீட்ட யூ.ட்யுப் வாழ்க!!
  சாரி சகா போன பதிவில் உங்கள் மனம் வருந்தும் படி கருத்திட்டு விட்டேனோ? எனக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றால் நான் அதை பற்றி பேசி இருக்கக்கூடாதோ? எதோ எப்படியோ friends are always friends:)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சகோதரி! அப்படியெல்லாம் நாங்கள் நினைக்கலைங்க! நட்பிற்கும், தனிமனித, தனிப்பட்ட கருத்திற்கும் சம்பந்தமே இல்லையே சகோதரி! தாங்கள் தங்கள் மனதுக்குப் பட்ட கருத்தைச் சொல்லலாம்! கருத்துச் சுதந்திரம்!

   நண்பர்கள் எப்போதும் நண்பர்கள்தான்!

   நீக்கு
 6. ஐயா தங்களது பதிவு ஆரம்பத்தில் வேதனையாகவும் முடிவில் சந்தோசமாகவும் இருந்தது நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! கில்லர் ஜி! வேதனையான விஷயம் ஆனால் அந்த யானை இப்போது சந்தோஷமாக இருப்பதை நினைத்தால் நமக்கும் சந்தோஷம் தான்!

   மிக்க நன்றி கில்லர் ஜி!

   நீக்கு
 7. யு ட்யுப் வாழ்க...
  பாகனின் குருரத்தில் இருந்து தப்பிய யானை கொடுத்து வைத்தது..
  www.malartharu.org

  பதிலளிநீக்கு
 8. பாகனை உள்ளே தள்ளி அதே மாதிரி அடிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.....

  தமிழகத்திலும் இப்படி பல கோவில்களில் யானைகளை பார்க்கும்போது பாவமாக இருக்கும் - தன்னுடைய இயற்கைச் சூழலில் இருக்க முடியாமல் இருக்கிறதே என்று தோன்றும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது போன்ற பாகனுக்குத் தண்டனை கொடுத்தல் வேண்டும்! சமீபத்தில் நாகர்கோவில் மார்த்தாண்டம் அருகே யானைப் பாகன் யானை ரோட்டில் நகராமல் னின்றதற்காக அடித்திருக்கிறார். ஆனால் யானை எதிர்த்து அவரைத் தும்பிக்கையால் பிடிக்க முயல அவர் தப்பித்து ஒட யானை அவரைச் துரத்த என்று 2 மணி நேரம் ரோட்டில் உள்ளவர்கள் எல்லாம் அலறி அடித்து தலை தெறிக்க ஓடியிருக்கின்றார்கள்! பின்னர் அதன் ஓனர் வந்து அதற்கு வெல்லம் கொடுத்து சமாதானப் படுத்தி அழைத்துச் சென்றுள்ளார்! சாது மிரண்டால்?!!!!! நல்ல சாமர்த்தியாமான யானைதான்!

   மிக்க நன்றி!

   நீக்கு