ஞாயிறு, 9 மார்ச், 2014

ஆம் ஆத்(மி)மா அபிமானமுள்ள வலைப்பூ எழுத்தர்கள் இதோ நாட்டைக் காக்க தேர்தல் களத்தில் குதித்து விட்டார்கள்!!....பரபரப்பான செய்தி!

 .
தேர்தல் நெருங்கி வந்துவிட்டது! தேதிகளும் குறித்தாகிவிட்டது! பல வலைப்பூக்கள் கட்சிகளைப் பற்றியும், கூட்டணிக் கட்சிகளைப் பற்றியும், எந்தக் கூட்டணிச் சிறந்தது, எந்தக் கட்சி எந்தக் கட்சியுடன் சேர வேண்டும், எந்தக் கூட்டணிக் கட்சி ஜெயிக்கும் என்றெல்லாம் விவரங்களை அக்கு வேறு ஆணி வேராக ஆராய்ந்து, பிரித்து நூலாக்கி எழுதும் போது நாம் ஏன் ஒன்று எழுதக் கூடாது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நம் மதுரைத் தமிழனின் அறிவிப்பைப் பார்க்க நேர்ந்தது! ஆஹா! பழம் நழுவிப் பாலில் விழ இந்தக் கட்சிகள் எல்லாம் போட்டியிட்டால் என்ன என்ற, எங்கள் ஆர்வக் கோளாரில் முளைத்தது தான் இந்த யோசனைப் பதிவு!

நம் வலைப்பூ நண்பர்கள், அன்பர்களில் யார், யார் எந்தக் கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்ற ஒரு பார்வை!

அரசியல் என்றதும், எங்களுக்கு அறிமுகம் ஆன அன்பர்களில், முதலில் தோன்றுபவர்கள் நம்பள்கி, மதுரைத் தமிழன் தான்! ரஹிம் கஸாலியும், http://www.rahimgazzali.com  நண்டு நொரண்டு திரு ராஜசேகரனும் http://nanduonorandu.blogspot.com  இந்த கட்சியில் இருந்தாலும்  அவர்களை ஆராயும் அளவு எமக்குப் புலமை இல்லை! 

மதுரைத் தமிழன், http://avargal-unmaigal.blogspot.com “லொள்ளுக் கட்சி என்ற பெயரில் ஆரம்பிக்கலாம். “அவர்கள் உண்மைகள் என்ற வாசகத்தை அதன் அடியில், இப்பொழுது எல்லாம், பெரும்பான்மையான திரைப்படங்கள் போட்டுக் கொள்வது போல (சிவாஜி the boss) போட்டுக் கொள்ளலாம்! நவீன சின்ன நக்கீரன் என்றும் சொல்லலாம் இவரை! (பெரியவர் ஒருத்தர் இருக்காரு அதான்). கண்டிப்பாக அவர் சின்னம் “பூரிக் கட்டைதான்.!

“தமிழுக்காகவும், எமது தமிழ் மக்களுக்காகவும் லொள்ளு பதிவுகளும், அதனூடே நல்ல கருத்துக்களையும்!, பதிவுகளையும்! போட்டு அயாராது உங்கள் எல்லோரையும் இன்னும் என் வலைப்பூவில்/ஆட்சியில் சந்தோஷப் படுத்துவேன்! கலாய்ப்பேன்! எல்லாப் பெண்களுக்கும் இலசமாகப் பூரிக்கட்டை தருவேன்!  ஆண்களுக்கும் தான்! பூரிக்கட்டையும், கேடயமும் இலவசமாகக் கிடைக்கும். அப்போது தான் உங்கள் மனவிமார்கள் பூரிக்கட்டையைத் தூக்கும் போது நீங்களும் கேடயத்தால் உங்களைக் காத்துக் கொண்டு, பூரிக்கட்டையால் உங்கள் மனவியுடன் கோலாட்டம் போடலாம்! மனைவி குளிர்ந்து விடுவார்! நாடே குஜாலாகிவிடும்! எங்கும் அமைதித் திருவிழா! காப்டன், எம்டன், கெஜ்ரி, குஜ்ரி, மோடி, தாடி, தளபதி, குளபதி, அண்ணன், தம்பி, அம்மா, தாத்தா, அயல்நாட்டம்மா, அவர் பின்னால் மறைந்திருக்கும் தாத்தா, இளவரசர் எல்லோரும் என்னிடம் ஐடியா கேட்டு என் கட்சியில் சரண்டர்!

இளைஞர்களே/இளைஞிகளே காதலியுங்கள்!  அப்படியாவது நம் நாட்டில் சாதி, மதச் சண்டைகள் ஒழியட்டும்! காதல் பாடம் எடுக்கப்படும்!, ரவுசு விடுவது, லுக்கு விடுவது எப்படி என்ற இலவச சேவை வழங்கப்படும்! ஃபிகர்களைப் பற்றி எல்லாம் அவ்வப்பொழுது படத்துடன் செய்திகள் வெளியாகும்! நான் உண்மையை மட்டுமே பேசுவேன்! பொய் பேசினால், ஊழல் நடந்தால் அதை அலசித் துவைத்து விடுவேன்! என் வலைப்பூ உங்களுக்கு அதை உணர்த்தியிருக்கும்! எனவே அன்பர்களே உங்கள் ஓட்டுக்களை எனக்குப் போட்டு, மத்தியிலோ, தெற்கிலோ, எங்கு அமர வைத்தால் உங்களுக்கு என் சேவை தடங்கல் இல்லாமல் கிடைக்குமோ அங்கு அமர வைத்து, நம் நாட்டிற்கான லொள்ளு சேவையைத் தொடர உதவுமாறு வேண்டிக் கொள்கின்றேன்!” (என் வீட்டம்மாவிடம் இதை இப்போது தெரிவிக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன்! உங்கள் ஓட்டுக்களைப் போட்டு என்னை ஜெயிக்க வைத்த பிறகு சொல்லிக் கொள்ளலாம்)

நம்பள்கி!  http://www.nambalki.com. அறிமுகம் தேவை இல்லை! இருந்தாலும், பழக்கம் யாரை விட்டது?!! நக்கீரப் பரம்பரை! அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியாவையும், தமிழ்நாட்டையும் கேள்விகேட்டுத், துவைத்து, அலசி, விளாசிக் கிழித்துத் தள்ளுபவர்! அதனால் நமது அரசியல் வாதிகள் “யோவ் அங்கருந்துகிட்டு என்னய்யா கிழிக்கிறீரு! இங்க வந்து அரசியல் பண்ணிப் பாருமய்யா! அப்பத் தெரியும் உமக்கு! என்று சவால் விட, சவால் என்றாலே அவருக்கு அல்வாதான்! மீசையை முறுக்கிக் கொண்டு வந்து குதித்து விட்டார்!  ஆற்றில் அல்ல!  அரசியல் குட்டையில்!

“உங்கள் எல்லோருக்கும் இலவசமாக “மைக் தருகின்றேன்! ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைத்தீர்கள் என்றால்...என் விவாதங்கள் உங்கள் மூளையைக் கசக்கி, யோசிக்க வைத்து, மைக் பிடிக்க வைத்து விடும்!  அப்போ, சாதிச் சண்டையாவது, மண்ணாவது! ஒரு புண்ணாக்கும் கிடையாது!  எந்த முட்டாப் பயலும் ஒண்ணும் பண்ண முடியாது! நல்ல மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்! இலவசம் என்பது ஒரிஜினல் ஏழைகளுக்கும், உழவர்களுக்கும்தான்! மற்றபடி இலவசம் என்பதே என் ஆட்சியில் இருக்காது! பெஞ்சையாவது தேய்க்க வேண்டும்!

என்  வலைப்பூவில் வருவது போல் கிளு கிளு சமாச்சாரத்தை என் ஆட்சியில் எதிர்பார்க்காதீர்கள்! என்னோடு வாக்குவாதம் செய்யுங்கள்! கேள்வி கேளுங்கள்! சந்திராயனும், மங்கள்யானும் போய் சேருமா? கடவுள் இருக்கிறாரா என்று ஆராயுமா? சொல்லுமா? மூளையைக் கசக்கி மண்டையைப் பிய்த்துக் கொள்ளுங்கள்! அப்பனை வேண்டிக் கொண்டு எல்லோரும் பழனிக்கோ, திருப்பதிக்கோ சென்று மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்! கூடவே பஞ்சாமிர்தத்தில் பழம் இருக்கிறதா என்றும், லட்டுவில் முந்திரிப் பருப்பு இருக்கிறதா என்றும் தேடிப்பார்த்து சொல்லுங்கள்! ஊழல் என்று சொல்லி, என் கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள்! பல நல்ல வீடியோக்கள், படங்கள் போட்டுக் காண்பிக்கப்படும்! நான திரைப்படத்திற்கும் எழுதுவேன்! தமிழ்நாட்டில், திரைப்படத்துறையில் இருப்பவர்தான் ஆட்சிக்கு வரமுடியும் என்பது எனக்குத் தெரியாதா என்ன?!  அதையே மத்தியிலும் நீங்கள் செய்யலாமே எனக்கு ஓட்டளித்து! அதனால் நீங்கள் என்னை மகுடம் ஏற்றுங்கள்! பதில் அளிக்கிறேன்! இவன் என்ன பேசறான், செய்யறான் என்று யோசிப்பதிலேயே நேரம் போய்விடும்! ஆதலால் என்னைக் குறை சொல்வதற்கு நேரம் இருக்காது! இத்தனை நேரம் என் அஜால் குஜாலைப் பொறுமையாகக் கேட்டதற்கு நன்றி!  அதுவே எனக்கு வெற்றி!!என் கட்சி “விவாதமேடைக் கட்சி!  சின்னம் “மைக்”.

இன்னும் அடுத்த பதிவில் வர இருக்கும் கட்சிகளும் வளர, தன் கட்சிக்குப் போட்டியோ என்று கூட யோசிக்காமல் தினமும் சுறுசுறுப்பாக, தேனீ போன்று பறந்து வந்து ஒவ்வொரு பூவிலும் அமர்ந்து தேனை மட்டும் ருசிக்காமல், ஒவ்வொரு பூவிற்கும் மகரந்தத்தையும் அளித்து விட்டு – அதாவது ஓட்டு மட்டும் அல்லாமல், ஒவ்வொரு வலைப்பூவும் எங்கெங்கு அற்முகப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் தந்து விட்டு, பூ செழிப்பாக மலர பல டெக்னிக்குகளையும் தந்து உதவி – இப்படி ஒவ்வொரு வலைப்பூவும் வளர உதவும் தன்நலம் கருதாத திண்டுக்கல் பூட்டு போன்ற திடமான மனதுடன் வலம் வரும் அந்த “பிசி பீ DD யைப் பற்றி இங்கு சொல்லாமல் போனால் எப்படி?! http://dindiguldhanabalan.blogspot.com இதோ...அவர்....

“மக்களே! என் சக அன்பர்களே! நண்பர்களே! உங்கள் எல்லோர் நலமும் தான் என் நலம்! .உங்கள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அன்பிருக்குமானால் உங்களையே நீங்கள் நேசிப்பவர் என்றால், உலகையும் நேசியுங்கள். அதன் அனைத்து உயிர்களையும் நேசியுங்கள்என்று இலெபனான் நாட்டுத் தீர்க்கதரிசி மிகெய்ல் நைமி என்பவர் அழகாக்ச் சொல்லியுள்ளார்.  மக்களின் துயர் துடைக்க வேண்டுமென்றால் தன் நலம் பாராது, பொது நல நோக்குடன் எல்லோரையும் அன்பு செய்தால் மட்டுமே சாத்தியம். அதையே,
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றும் அறியேன் பராபரமே”  என்று குறிப்பிடுகின்றார் தாயுமானவர்.
“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதிய மில்லை உயிர்க்கு 
என்பது வள்ளுவரின் வாக்கு! மனித குலத்திற்கு பணிசெய்து, அவர்களைத் தூற்றாமல், போற்றி வாழ்வதே சிறந்தது! மனிதர்களை வெல்ல வேண்டும் என்றால் அன்பினால் அவர்களது இதயத்துள் நுழைந்து விடவேண்டும்!
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
என்பதையும் உங்களுக்குச் சொல்ல விழைகின்றேன்! இதுவே என் தேர்தல் அறிக்கை!  “என்ன மனசாட்சி!  நான் பேசியது சரிதானே!?! என் கட்சி “திருவள்ளுவர் கட்சி.  சின்னம் “தேனீ

ரூபன் தம்பி! http://tamilkkavitaikalcom.blogspot.in இவரை ஒரு காலும் மறந்து விட முடியாது!  காதல் கவிதைகளும், கதைகளும், மனதைத் தொடும் கவிதைகளும் எழுதுபவர்! துடிப்பான இளைஞர்!  ம்லேசியாவில் இருந்தாலும்! எல்லா கட்சிகளுக்கும் (வலைப்பூ) பறந்து பறந்து வந்து ஓட்டு போடுபவர்! ஊக்குவிப்பவர்! இளைஞர்! அப்படி இருக்க அவரை ஆதரித்து அவருக்கு ஓட்டு போடாமல் இருக்க முடியுமா?!! கட்சி “பரிசுக் கட்சி.  சின்னம் “சான்றிதழ்

“மக்களே! பல போட்டிகள் அறிவித்து உங்களை எல்லாம் மகிழ்விப்பது மட்டுமல்ல என் வேலை!  உங்களுக்கு எல்லாம் பரிசுகளும் அள்ளித் தருவேன்! என் தாயகம் இலங்கையாகவும், தற்போது மலேசியாவில் இருந்தாலும் என் மனம் உங்களிடம் இருப்பதால், என்னால் தனியாகக் கட்சி ஆரம்பிக்க முடியாவிட்டாலும், கட்சியின் பெயரும், சின்னமும் கொடுத்துள்ளேன்! நான் பாண்டியன் அண்ணனிடமும், DD அண்ணனிடமும் பேசி வருகின்றேன்! அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டி! எனவே மக்களே அவர்கள் வேறு வேறு கட்சியில் இருப்பதாக நினைக்க வேண்டாம் எந்தக் கட்சி வென்றாலும் அவர்கள் இணைந்து கொள்வார்கள்!  எனவே பயப்படாமல் உங்கள் ஓட்டை அளியுங்கள்! வாழ்த்துக்கள்!”

மலர்வண்ணன் http://malarinninaivugal.blogspot.com . இவர், படா நகைச்சுவைப் பேர்வழி!  இடுகைகளும் சரி, பின்னூட்டங்களும் ரசிக்கும்படி போடுபவர்! பாம்பு வந்ததைப் பற்றி போட்டாரு பாருங்க...கண்டிப்பா அந்தப் பாம்பே கூட “ஆஹா நம்மள வைச்சு இப்படி காமெடி கீமடி பண்ணுற ஆள் வீட்டுக்கு வந்துட்டமே!  இப்ப நம்மளால இவிங்கள பயமுறுத்தக் கூட முடியாது போலருக்கே,  சும்மானாலும் தலய ஆட்டிப் பாப்பம்என்று நினைத்திருக்கும் அந்தப் பல்லில்லா பாம்பு! தங்கமணியுடன் தங்கம் வாங்கையில் அந்தக் கடைக்காரரையே ஒருவழி பண்ணி அவருக்கே அல்வா கொடுத்தவர்!  இவர் பெரும்பாலும், நம்பள்கியின் கட்சியில் இணையலாம்...அவரது சிஷ்யன் என்று சொல்லுபவர்!  அதனால்.....

நம் சகோதரிகள், காணாமல் போன கனவுகளை இப்படியாவது சாதித்துக் கொள்ளலாமே என்று ராஜியும், http://rajiyinkanavugal.blogspot.in , வேலூரிலிருந்து தமிழ் மயிலாய், ஒயிலாய் வலைப்பூ சுமக்கும், உஷா அன்பரசு,  http://tamilmayil.blogspot.com இருவரும் பார்த்தார்கள்!

“நாம் சேர்ந்து கட்சி ஆரம்பித்து இந்த மதுரைத் தமிழனுக்குச் சவால் விட்டால் என்ன என்று கூட்டணி அமைத்தார்கள்! துடைப்பத்தைச் சின்னமாக வைக்கலாமோ என்று யோசித்த போது அது கெஜ்ரிவாலின் சின்னமாயிற்றே என்று நினைத்து துணி தோய்க்கும் கட்டையைச் சின்னமாக (உபயம் நண்பர் வெங்கட்நாகராஜ்) வைத்துக் கொள்ள முடிவு செய்து தங்கள்  பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். 

“ஆண்களே, சகோதரர் மதுரைத் தமிழன், பூரிக்கட்டை என்ற ஒரே ஒரு வார்த்தையைக் கொண்டு தன் லொள்ளு நகைச்சுவைத் திறமையால் உங்களை எல்லாம் மிகவும் வசியம் செய்துள்ளார்.  இதில் சில பெண்களும் அடக்கம் என்று தெரிய வருகிறது. அவர்களைப் பின்னால் கவனித்துக் கொள்கிறோம்! ஆண்களே! உங்கள் மனைவிமார்களை எல்லாம் உங்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு எல்லா மனைவிகளும் பூரிக்கட்டையைத் தூக்குவதாகப் பிரச்சாரம் செய்கிறார். நாங்கள் பூரிக்கட்டையைத் தூக்குவதில்லை! சகோதரரின் காதில் விழட்டும்! பாவம் அவர் ஆண்களுக்கு எல்லாம், பூரிக்கட்டையும், கேடயமும் இலவசமாகத் தருவதாகக் கேள்விப்பட்டோம்! நாங்கள் தோய்க்கும் கட்டைக்கு மாறி விட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

பெண்களுக்குத் தோய்க்கும் கட்டை இலவசமாகவும், ஆண்களுக்குச் சமையல் குறிப்புகள் அடங்கிய எலக்ட்ரானிக் புத்தகம் இலவசமாகவும் வழங்கப்படும் - அதில் என்ன விசேஷம் என்றால், உங்கள் மனைவிக்குப் பிடித்த உணவின் பெயரைச் சொன்னாலே போதும், உடன் உங்கள் அழகிய மனைவி திரையில் தோன்றி, அதன் சமையல் குறிப்பு முழுவதும் செய்முறை விளக்கத்துடன் சொல்லி விடுவார்கள்! அதைச் செய்து உங்கள் மனைவியைத் மகிழ்வித்து?! திருப்திப்படுத்தி?!, அவரின் கட்டைத் தூக்கலில் இருந்து தப்பிக்கலாம்! பெண்களே! நீங்கள் எங்களுக்கு ஓட்டு போடுவீர்கள் என்று தெரியும்! எங்களுக்குப் போடுவதாக்ச் சொல்லிவிட்டு சகோதரர் மதுரைத் தமிழனுக்குப் போட்டு விடாதீர்கள்! அவரது மனைவி அதாவது எங்கள் அண்ணியும் எங்கள் கட்சிதான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்! ஆண்களே, எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை நாங்கள் பாதுகாப்போம்! சகோதரர் மதுரைத் தமிழனுக்கும் இலவசம் அளிக்கப்படும். வெட்கப் படாமல் வந்து வாங்கிச் செல்லவும்!  தயக்கம் வேண்டாம்! ட்ரம்ப் கார்ட் எங்கள் கட்சியில்

     திரு. கரந்தை ஜெயக்குமார், http://karanthaijayakumar.blogspot.com திரு. பாண்டியன், http://pandianpandi.blogspot.com சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் http://makizhnirai.blogspot.in, மது http://www.malartharu.org நால்வரும் கொஞ்சம் நல்ல ஆசிரியர்களாகிப் போனதால் அவர்கள் நால்வரும் சேர்ந்து பெண்களை முன் நிலைப்படுத்தினால் தான் ஓட்டுக் கிடைக்கும் என்று சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களப் பேச விட்டார்கள்! இவர்கள் கட்சி “மந்தை மேய்த்தல் கட்சி.  மாணவர்களை மட்டுமல்ல மக்களையும் மேய்க்க வேண்டுமே!

     “மக்களே! ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான உடை அணிய வேண்டும்! அப்படி அணிந்தால்தான் உங்களுக்கு மதிப்பு கிடைக்கும்! என் வலைப்பூவில சில படங்கள் தந்துள்ளேன் அதைப் பாருங்கள்! மாணவர்களே! ஆண்களே! மேல் பட்டனைத் திறந்து வைத்து சட்டை அணியாதீர்கள்! பெண்களே! நீங்கள் நவநாகரீக உடை அணிந்தாலும், பதவிசாக அணிய வேண்டும்! ஏழைகள் எல்லோருக்கும் நல்ல உடைகள் இலவசமாகக் கிடைக்கும்!

சகோதரர் மது, உங்களுக்கு பல அறிவியல் தகவல்களையும், பல நல்ல தகவல்களையும் அறிவு பூர்வமாக விளக்குவார்! பல திட்டங்கள் தீட்டியிருக்கிறார், மாணவர்களுக்காகவும், மக்களுக்காகவும்!
சகோதரர் பாண்டியன், மாணவர்களைத் தன் இரு கண்களாகப் பாவித்து, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல நல்ல திட்டங்கள் வைத்துள்ளார் அதைச் செயலிலும் காட்டுவார்!

அண்ணா கரந்தையார் பல நல்ல மனிதர்களைத் தன் வலைப்பூவில் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறார்! இளைஞர்களே! இளைஞிகளே! நாட்டின் வருங்காலச் சிற்பிகளே! இளைய பாரதம் செதுக்கப் போகும் சிங்கங்களே! நீங்கள் அண்ணனின் வலைப்பூவில் அவர் எழுதும் மாமனிதர்களைப் பற்றி வாசித்து, அவர்களை எல்லாம் முன்னோடிகளாகக் கொண்டு நாட்டைச் செம்மைப்படுத்த எங்கள் கட்சியில் இணையுங்கள்! உங்களைக் கடைமை அழைக்கிறது! எனவே, காதல் போன்ற விஷயங்களில் எல்லாம் கண்மூடித்தனமாக விழுந்து கடமையை – அதாங்க எங்களுக்கு ஓட்டு போடும் கடமையைத் தவற விட்டுவிடாதீர்கள்!  இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான்! மறந்து விடாதீர்கள் எங்கள் சின்னம் “சிலேட்டும் குச்சியும்!

     நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தானையா என்று நம் ஜோக்காளி ஓடோடி வந்து விட்டார்!  http://www.jokkaali.in
“எனது கட்சி “ஜோக்காளி.  சின்னம் “கூலிங்க்ளாஸ் சின்னம்.
“என்னைத் தெரியுமா?  நான் சிரித்துப் பழகி உங்கள் கருத்தைக் கவரும் ரசிகன், என்னைத் தெரியுமா? உங்கள் கவலை மறக்க ஜோக்குகள் சொல்லும் ரசிகன் என்னைத் தெரியுமா?!
. நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தாரையா
சிரிக்க வைத்து நாட்டை செழிக்க வைக்கும் சீர்திருத்தக் கோமாளி வந்தாரையா
இங்கு கூறுவதை விட என் வலைப்பூவிற்கு வந்து வாசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்! எனக்கு வோட்டு போட்டு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்!!

இன்னும் கட்சிகள் தொடர்கின்றது நாளை.....

25 கருத்துகள்:

 1. மதுரைத்தமிழனின் லொள்ளு பதிவுகளை தொடந்து படிப்பதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை இங்கு கண் கூடாக பார்க்கமுடிகிறது. இதுக்குதான் பெரியவங்க சொல்லுவாங்க சேர்வாரோடு சேர்ந்தால்தான் பிள்ளை உருப்படும் என்று அது இங்கே உண்மையாகி இருக்கிறது.

  பாத்தீங்களா இந்த லொள்ளு பையன் மதுரைதமிழனோடு சேர்ந்ததால் நீங்களும் இப்ப பெரிய லொள்ளாக மாறி இப்படி கலாய்த்து இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. ///உடன் உங்கள் அழகிய மனைவி திரையில் தோன்றி, அதன் சமையல் குறிப்பு முழுவதும் செய்முறை விளக்கத்துடன் சொல்லி விடுவார்கள்! ///

  அழகிய மனைவி இங்கதான் இடிக்குதே......கல்யாணத்திற்கு முன் அழகாக இருக்கும் பெண்கள் கல்யாணம் ஆன பின் நம் கண்ணிற்கு அழகாக தெரிவதில்லையே ஆனா அதே நேரத்தில் பக்கத்துவீடுகளில் இருக்கும் பெண்கள் மட்டும் நம் கண்ணிற்கு மிக அழகாக இருக்கிறார்கள் அது எப்படி?

  பதிலளிநீக்கு
 3. சகோ ராஜி உஷா அவர்கள் எப்போதும் என் கட்சிதான். ராஜி என் கட்சியின் மகளிர் அணித்தலைவர், உஷா அவர்கள் எனது கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர். அவர்களும் என் மனைவியை போல கோபம் கொள்ளும் போது அடிப்பார்களே தவிர என்னைவிட்டு பிரிந்து போய் தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டார்கள்

  என்னை விட்டு அவர்களை பிரிக்க நீங்கள் செய்யும் சூழ்ச்சியை இந்த மதுரைத்தமிழன் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த தவறை நீங்கள் செய்தற்காக எனது அனைத்து பதிவுகளையும் தினமும் 5 மூறை படித்து வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. #நாட்டுக்கு சேவை செய்ய நாகரிகக் கோமாளி வந்தாரையா#
  ஹீரோ ,ஹீரோயின்களுக்கு விழும் வோட்டுக்களை விட இந்த நாகரீக கோமாளி அதிக வோட்டுக்கள் வாங்கி வெற்றி பெறுவான் என்பதில் ஐயமில்லை ,ஆச்சரியமில்லை ,அச்சமில்லை ,...அடச்சீ ,பேசிகிட்டு இருக்கும்போதே கரண்ட் போயிடுச்சே !
  த ம 3

  பதிலளிநீக்கு
 5. அருமை நண்பரே அருமை
  சிலேட்டும் குச்சியும் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கீடு
  செய்தமைக்கு நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 6. why சகோ why? எல்லோரும் தாயா பிள்ளையா பழகிட்டு இருக்கையில் இப்புடி ஆட்டையை கலைக்கிறீங்களே? பாதிவரை படிக்கையில் எல்லாம் நண்பர்களா இருக்காங்களே கள்ளவோட்டு போடுருவோமானு பார்த்தேன்? நீங்க என்னடான்னா இப்டி எங்களையே வேட்பாளரா நியமிச்சு கலாய்சுட்ட்ட்டீங்களே!! ஆன செம கூட்டணி!
  I LIKE IT MA !!!!!!!!!

  பதிலளிநீக்கு
 7. நல்ல வேளை, என்னை இழுக்காமல் விட்டீர்கள் ! உங்களை என்னமோ என்று நினைத்தேன் . பலே ஆசாமி ஐயா நீர்! போகிற போக்கைப் பார்த்தால் அடுத்த வாரமே தமிழ்மணம் தரமதிப்பீட்டில் முதல் இடத்தை அடைந்து விடுவீர்கள் போலிருக்கிறதே!

  பதிலளிநீக்கு
 8. காமெடியும் சூப்பரா எழுதறீங்க! கலக்குங்க! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. மதுரைத் தமிழனோடு சேர்ந்து லொள்ளு பண்ணுவதில் சந்தோஷமே! இந்த சேர்தல் உருப்படும் சேர்தல்....தான்

  பதிலளிநீக்கு
 10. வீட்டம்மாவுக்கு செய்தி போயாச்சு! எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா வீட்டுக்கு போங்க! முடிஞ்சா சகோதரிகள் ராஜிக்கிட்டயும், உஷாகிட்டயும் சமையல் குறிப்பைய வாங்கிக்கங்க, உங்க கேடயத்தையும் எடுத்து வைச்சுக்கங்க!

  பதிலளிநீக்கு
 11. ஐயோ இது என்னபா! ! எங்க மேல பழி! உட்டாலங்கடியா இருக்கு! இதுக்கு அவங்க சம்மதிச்சுட்டாங்களா?!!! அவங்க வீராப்பு எல்லாம் இவ்வளவுதானா?!!!!!

  நாங்க உங்க பதிவை 5 முறை வேணாலும் வாசிக்கிறோம்! ஆனா பழி போடாதீங்கப்பா!.....தமிழனுக்குத் தமிழன் தோள் கொடுக்கணும்பா!

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி ஜோதிஜி நண்பரே! பாராட்டிற்கு!

  பதிலளிநீக்கு
 13. ஜோக்காளி ஜெனரேட்டர் கொண்டு போகலையோ?!!

  மிக்க நன்றி! ஜி!

  பதிலளிநீக்கு
 14. சிலேட்டும் குச்சியும் தானே ஆசிரியர்களின் அடையாளங்கள்!
  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 15. மிக்க நன்றி DD! பின்ன தொடராம? எத்தனை பேர் இருக்காங்க!?

  பதிலளிநீக்கு
 16. குட்டையைக் கலக்கினாத்தானே தெளிவு பிறக்கும்?!! மிக்க நன்றி பாராட்டிற்கும்! கருத்திற்கும்! நாளைய இதன் மீதி இடுகை இந்த பதிலுக்கு பதிலாக அமையும்!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 17. நாளைய இடுகையைப் பார்க்கவும் ஸார்! பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி எங்களைக் கூச்சப்பட வைக்காதீர்கள் ஸார்.

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 18. தளிர் மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு! நாளை கண்டிப்பாக வாசியுங்கள் இதன் 2 வது பாகத்தை!

  பதிலளிநீக்கு
 19. ஆஹா! ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை..... இன்னும் இத்தனை கட்சிகளா! :))))

  கலக்கலான பதிவு.....மிகவும் ரசித்துப் படித்தேன்! என்னையும் இங்கே இழுத்து விட்டீர்கள் போல! ஒரு கட்சிக்கு சின்னம் கொடுத்த வள்ளலாக்கி விட்டீர்களே! :)))

  பதிலளிநீக்கு
 20. சரிதான் தில்லி நண்பரே! ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொல்லைதான்! ஆனால், இந்தக் கட்சிகள் எல்லாம் ஆனந்தம் தரும், மனிதநேயமும், நல்ல எண்ணங்களும் உள்ள கட்சிகள்! ஊழல் இல்லா கட்சிகள்! நல்ல எழுத்துக்களைப் படைக்கும் கட்சிகள்! வாலிபர் முதல் வயோதிகர் வரை எல்லோரும் மிகவும் அன்புடன் பழகும் கட்சிகள்!

  ஆமாம் தங்கள் பதிவுகள் எங்களை மிகவும் கவர்ந்ததால் உங்களையும் இழுத்துவிட்டோம்! சொல்லப் போனால இன்னும் நிறைய அன்பர்கள் இருக்கிறார்கள்! எல்லோரையும் பதிவுக்குள் இழுக்க முடியவில்லை! இன்னும் அனுமார் வால் போல நீளும் என்பதால் முடித்துக் கொண்டுவிட்டோம்!

  மிக்க நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு