வெள்ளி, 25 அக்டோபர், 2019

கோபுர வாசலிலே - ஸ்ரீரங்கம் - 3


ஆண்டாள் செல்லத்தைப் பார்த்துவிட்டு,  கீழே இதோ இந்தப்  படத்தில் உள்ள பகுதியை ஒட்டிய  மண்டபத்தின் வழியாக நடந்தோம். நான் க்ளிக்கிக் கொண்டே. எல்லாரும் பாருங்க ஆண்டாள் செல்லத்தின் படங்களையும், வீடியோவையும். வீடியோவைப் பாருங்க.  சின்ன வீடியோதான். அதில் எல்லோரையும் வாழ்த்துகிறாள் பாருங்க!
 
இந்த மண்டபத்தின் வழி சென்ற போது அதன் பகுதிகளைக் கொஞ்சமே க்ளிக்கிக் கொண்டேன் அவைதான் இதோ..

இதோ கீழே இருக்கும் நான்கு படங்களும் மேலே உள்ள மண்டபத்தின் வழி சென்ற போது அடுத்த பிராகாரம், பல சிற்பங்கள், அழகிய தூண்கள் நிறைந்த மண்டபம் என்று ஆனால் பெயர் தெரியவில்லை. என்ன சன்னதி என்று தெரியவில்லை. கீதாக்காவைக் கேட்டுக்கோங்க எல்லாரும். 


 இதோ இதுவும் ஒரு சன்னதி இருக்கிறது. தெரியவில்லை ஆனால் அந்தத் தூண்கள் அழகாக இருக்கின்றன. வெளியில் இருந்தே க்ளிக்.  

இது பரமபத வாசல்

பரமபத வாசல் எதிரே ஒரு வாசல் இருந்தது. அதை எடுக்கவில்லை. அழகிய சிற்பங்கள். இன்னும்  அவசரத்தில் எடுக்க முடியவில்லை.

 பரமபத வாசல் கடந்து இதன் வழியாகச் சென்றோம்.. 

அதன் வழி சென்றால் ஒரு பெரிய மண்டபம் சன்னதிகள் ஆனால் அவை என்ன என்று தெரியவில்லை. அதைக் கடந்தால், இதோ இந்த இடம் வருகிறது. இதுதான் முகப்புப் படம்.  இதனூடே வெட்ட வெளியில் தெரியும்  மண்டபத்தில் தான் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி பாடல் படமாக்கப்பட்டதாம்.  ஆனால், இச்செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் படம் எடுக்க அனுமதிப்பார்களா என்று தெரியவில்லை.

இதோ இந்த மண்டபம் வழிதான் இடப்பக்கம் திரும்பி, கொஞ்சமாகத் தெரிகிறதா ஒரு நீண்டப் பிராகாரம் அந்த நீண்ட பிராகாரப் பாதையில் சென்றோம். இங்கும் ஒரு சன்னதி உள்ளது. என்ன சன்னதி என்பது மறந்துவிட்டது. நின்று பார்க்காததால்.

இடப்பக்கம் நீண்ட பிராகாரம் தெரிகிறதா அதன் வழிதான் நடந்தோம் அப்படியே மண்டபங்களைக் க்ளிக்கிக் கொண்டே. இந்த நீண்டப் பிராகாரத்தில் தான் நரசிம்மர் சன்னதி என்று நினைவு. இதோ இந்த வெட்டவெளி மற்றும் இருபுறம் உள்ள மண்டபங்கள்.. இப்போது இங்கு வலப்புறம் சிறிதே தெரியும் மண்டபம் அடுத்த தொகுப்பில் இன்னும் தெளிவாக முழு படமும் வரும்.  இந்த இடம் தான் அந்தக் காட்சி எடுக்கப்பட்ட இடம் என்று குழுவில் நண்பர் ஒருவர் சொன்னார்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...

----- கீதா

61 கருத்துகள்:

 1. காணொளியின் இறுதியில் ஆண்டாள் அழகாக ஆசி கொடுப்பது வெகு அழகு.   ஆண்டாளும் நீங்கள் எல்லோரும் பக்கத்தில் வருவீர்கள் ஆசி கொடுக்கலாம் என்று காத்திருந்து காத்திருந்து பார்த்து விட்டு கடைசியில் அங்கிருந்தே பொதுவாக ஆசி கொடுத்து விட்டாள்!  உங்கள் ஆச்சர்ய / அதிர்ச்சிக் குரலும் கேட்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாங்க ஸ்ரீராம்...

   ஆமாம் என்ன அழகு இல்லையா ஆண்டாள்! இல்லை ஸ்ரீராம் அதன் அருகில் செல்ல முடியாதே. அது ஒரு பெரிய அறைக்குள் நாம் கம்பி கதவுக்கு இப்புறம். கதவுகளின் கம்பிகளுக்கு இடையில் கை விட்டு மொபைல் வழி படங்கள் வீடியோ எல்லாம். அது துதிக்கையைத் தூக்கவே இல்லை. இன்னொரு வீடியோ இருக்கு. அழகா ஆடியது. அதையும் அடுத்த பகுதியில் போடுகிறேன். அது துதிக்கையை தூக்கவே இல்லையே என்று அந்த வீடியோவை ஆஃப் செய்தேன். பெரிய வீடியோ போடுவது சிரமம் இல்லையா அதனால். அப்புறம் மீண்டும் ஆன் செய்து எடுத்துக் கொண்டிருந்த போது அது தூக்கவில்லையே என்று ஆஃப் செய்யப் போனேன் அது தூக்கியதா அதான் அந்தக் கத்தல்...ஹா ஹா ஹா அங்கிருந்தவர் வேறு எங்களை வரச் சொல்லிவிட ஆஃப் செய்து இவ்வளவாவது கிடைத்ததே என்று வந்துவிட்டோம். ஆண்டாளைப் பார்க்க அவர் மூலம் தான் சென்றோம்.

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 2. மண்டபங்கள் அழகு.   இந்தப் படங்கள் கீதா அக்காவுக்கு பார்க்க மிகவும் மகிழ்ச்சியாகஇருக்கும். ஸ்ரீரங்கத்தை விட்டு தோஇலைவில் இருக்கிறாரே...    சொந்த ஊரில் இருப்பது போல உணர்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் மண்டபகங்கள் எல்லாம் அத்தனை அழகு ஸ்ரீராம். கீதாக்காவுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். அப்பவே போடச் சொன்னாங்க...பாருங்க இப்ப தாமதித்துப் போடுவதும் நல்லதாகிப் போனது அவங்க ஸ்ரீரங்கம்ல இல்லாம இப்ப அம்பேரிக்காவில் இருப்பதால் இங்கு இருப்பது போன்ற ஃபீல் வரும் நீங்க சொல்லியிருப்பது போல்...

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
 3. அந்த மண்டபம் பற்றி ஏதோ எனக்குப் புரியும், நான் சொல்லும்போது உங்களுக்குத் தெரியும் என்று சொல்லியிருந்தீர்கர்களே...   இந்த வாரம் அந்தப் புதிருக்கு விடை இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா ஸ்ரீராம் அதைத்தான் அந்த மண்டபம் படம் மேலே கொடுத்திருக்கிறேன் அந்தப் புதிருக்கான?? விடை.. மகாநதிப் பாடல் ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் பாடல் இங்குதான் படமாக்கப்பட்டது என்று குழுவில் சொன்னாங்க அதைத்தான் சொன்னேன்...உங்களுக்குத் தெரிந்ததா என்று கேட்டிருந்தேன்...

   ஆனா இப்ப துரை அண்ணா சொல்லிருப்பது பார்த்தால் வேறுகோயில் போல....

   மிக்க நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  2. மகாநதி பாடல் படமாக்கப்பட்டிருப்பது இங்கு அல்ல. 

   நீக்கு
  3. சந்திர புஷ்கரணியை படம் எடுக்கவில்லையா? 

   நீக்கு
  4. கோதண்டராமர் சந்நிதிக்கு எதிரே ஒரு மண்டபம் இருக்கும். அங்குதான் கமபர் ராமாயணத்தை அரங்கேற்றினார் என்று சொல்லுவார்கள். கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றம் செய்த இடம் என்று போர்டு கூட இருக்கும். அதற்கு பக்கவாட்டில் இருக்கும் சந்நிதியைத்தான் மேட்டு அழகியசிங்கர் என்பார்கள்.  உயரமான இடத்தில்  அமைந்திருப்பதால் இந்த பெயர். 
   நரசிம்ம அவதாரத்தை பற்றி கம்பர் எழுதியிருந்த விதம் பாகவதத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டிருப்பதை போல இல்லாததால் ஸ்ரீரங்கம் கோவில் பட்டர்கள் நரசிம்மர் "இதை ஒப்புக்கொண்டால்தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம்"  என்று கூறி விட்டார்களாம். கம்பர் அவருடைய ராமாயணத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி எழுதியிருக்கும் இடம் வந்ததும் மேட்டழகிய சிங்கர் ஆஹாகாரம் செய்து ஆமோதித்தாராம்.   

   நீக்கு
 4. நிழலும் வெயிலுமாய் படங்களிலேயே அதன் தாக்கம் தெரிகிறது.  நெருக்கமான மண்டபங்கள்.  நீங்கள் படம் எடுத்திருக்கும் வகையினால் அதன் தூண்கள் வளைந்து இருப்பது போல ஒரு தோற்றம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நல்ல வெயில். கண்கள் கூசும் அளவுக்கு.

   ஹா ஹா ஹா எனக்கும் தோன்றியது தூண்கள் வளைந்திருப்பது போல என்று...நான் கிடைத்தவறை கிளிக்கிக் கொண்டு சென்றேன். நிதானமாக நின்று ஆராய்ந்து பார்த்து எடுக்கலையே ஸ்ரீராம்...

   மண்டபம் எல்லாமே அத்தனை அழகு ஸ்ரீராம். நெருக்கமாக இந்தச் சுற்று முழுவதும் இப்படித்தான் நிறைய...சுற்றி வெளியே வரும் போது க்ளிக்ஸ்...அம்புட்டுத்தான். அஜெண்டா கோயில் கோபுரம் அந்த மொட்டைமாடியில் பார்ப்பது மட்டுமே...இது போனஸ்!!!!!

   நன்றி ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு

 5. படங்கள் எல்லாம் அழகாக வந்து இருக்கின்றன பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. வாங்க அனு...வணக்கம்..

   முதல் ஆளாக..ஹா ஹா ஹா பரவல்லா இப்பவும் சொல்லிக்கலாம் நம்ம பூஸார் போல...

   கீதா

   நீக்கு
 7. moderation வச்சிடீங்க லா அதான் கமெண்ட் ஸ் இல்லையா ..என்னடா நாம முதல் ஆளா ன்னு நினைச்சு பயந்துட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கமென்ட் மாடரேஷன் வைத்துவிட்டேன். அதான்...ஹா ஹா ஹா ஹ ஏன் பயப்படனும்...முதல்னு சொல்ல..

   நன்றி அனு

   கீதா

   நீக்கு
 8. ஆண்டாள் செல்லத்தின் படங்களும் வீடியோவும் சூப்பர் கா ...வீடியோ ஆஹா ரொம்ப நல்லா இருக்கு ..ரசித்தேன் .

  மணல் வெளி பிரகாரத்துக்கு முன்ன ஒரு மண்டபம் படம் இருக்குல்ல அங்க கோதண்டராமர் சன்னதி இருக்கு ரொம்ப அழகா இருப்பார் ..பக்கத்தில தான் ஆண்டாள் சன்னதி யும் ..ரொம்ப பிடித்த சன்னதிகள் ..

  நீங்க என் ஆசையும் ரொம்ப தூண்டுறீங்க ..நாளைக்கி கூட திருச்சி பயணம் தான் ஆனாலும் ஸ்ரீரெங்கம் செல்ல முடியுமா ன்னு தெரில ..போகும் போது நானும் பல படங்களுன் வரேன் ..


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ரொம்ப அழகுல்லா. நீங்க ரசிப்பீங்கனு நல்லாவே தெரியும்....அடுத்த வாட்டி போகும் போது ஆண்டாளையும் பார்த்துருங்க..

   ஆமாம் இப்ப நினைவுக்கு வருது அந்த மண்டபத்தில் கோதண்டராமர்...ஆனால் நாங்க அங்கு நிக்கலை அனு எந்த சன்னதிலயும் நிக்கலை. இது கோபுரம் மட்டும் பார்த்துட்டு வெளிய வரதுக்கு சுத்தி வந்த போது அப்படியே எடுத்த படங்கள் தான்....இதுக்குனு போகலையே...அந்த நீண்ட ப்ராகாரத்துல நரசிம்மர்..

   எனக்கும் உங்க படங்கள் பார்க்கும் போது ஆசைரொம்பவே வரும் அனு. வாய்ப்பு கிடைக்க வேண்டுமே.

   நான் அவசரமாக போனதால் நிதானமாக எடுக்க முடியலை. நீங்க அப்படி எடுத்துப் போடுங்க...மறக்காம கேமராவுக்கு டிக்கெட் வாங்கிடுங்க...மொபைல்னா அவங்க வாங்குவதில்லை ஆனா பெர்மிஷன் கேட்டுக்கங்க.

   கீதா

   நீக்கு
  2. மிக்க நன்றி அனு ரசித்தமைக்கு

   கீதா

   நீக்கு
 9. படங்கள்லாம் நல்லா வந்திருக்கு. நான் சென்ற இடங்களை நினைவுபடுத்தியது.

  ஆனால் //இங்கும் ஒரு சன்னதி உள்ளது. என்ன சன்னதி என்பது மறந்துவிட்டது// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் பொதுவா அந்த இடத்தின் பெயர் உள்ள பலகையையும் படம் எடுத்து வச்சுக்குவேன். இல்லைன நாள் கழித்து எந்த இடம்னு தெரியாது.

  ஒரு கோவிலுக்குப் போனால் அது எந்தக் கோவில் என்பதை முதலாகவும், கடைசியா சேவிச்சுட்டு வெளில வந்தப்பறம் கோபுரத்தோடு ஒரு படம், அப்புறம் கோவில் பெயர்ப்பலகையை ஒரு படம்னு எடுத்துக்குவேன். இதையே ஃபாலோ பண்ணுவதால் ஒவ்வொரு கோவிலுள் எத்தனை நேரம் இருந்தோம், அந்தக் கோவிலிலிருந்து அடுத்த கோவில் செல்ல ஆன நேரம் எது என்றெல்லாம் சரியாக அந்தப் பயணத்தைப் பற்றி எழுதும்போது குறிப்பிட முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள்லாம் நல்லா வந்திருக்கு. நான் சென்ற இடங்களை நினைவுபடுத்தியது.//

   மிக்க நன்றி நெல்லை

   நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர் முதல்லயே சொல்லிட்டேனே...எல்லா கோபுரமும் பார்ப்பது, ஆண்டாள் செல்லம் பார்ப்பது மட்டுமே அஜெண்டா...இது வெளிய வரதுக்கு சுத்தி வரும் போது நான் அவசர அவசரமா க்ளிக்கிக் கொண்டே வந்தேன். எல்லாரும் முன்னாடி போய்ட்டாங்க...நாங்க எந்த சன்னதிலயும் நிற்கவில்லை. இது போனஸ் தான் எனக்கு.

   மிக்க நன்றி நெல்லை.

   கீதா

   நீக்கு
 10. மண்டபத் தூண்கள்ல உள்ள ஒரு சிற்பம் கூட இந்தப் பதிவுல போடலையே நீங்க...

  அரங்கநாதர் கோவில் என்று ஆனபிறகு, அங்கு இத்தனை சன்னிதிகள் வந்ததெப்படி, ஏன் ஒரு கோவிலில் நிறைய சன்னிதிகள் வைக்கறாங்க என்பதற்கெல்லாம் கீதா சாம்பசிவம் மேடம் வந்துதான் பதில் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மண்டபத் தூண்கள்ல உள்ள ஒரு சிற்பம் கூட இந்தப் பதிவுல போடலையே நீங்க...//

   நெல்லை நான் மட்டும் போகவில்லை. குழுவாகச் சென்றதால் எங்கும் நிற்கவில்லை. ஆராய்ந்து பார்த்து எடுக்க நேரம் இல்லை. ஜஸ்ட் வெளியே வர சுற்றி வந்தததால் கிடைத்த நேரத்தில் வாய்ப்பில் க்ளிக்கிக் கொன்டே வந்தேன். இதுவே எல்லாரும் முன்னாடி போய்விட நான் தேட...அப்புறம் அவங்கள்ல ஒருவர் வந்து என்னையும் மற்றொரு தோழியையும் பின்னால் வரச் சொல்லிச் சென்றார். அத்தோழி தன் மொபைலில் எடுத்துக் கொண்டே வந்தார். நான் என் கேமராவில்...

   மற்றவை எல்லாம் மீக்கு நோ ஐடியா...அப்படி எல்லாம் தோன்றியதும் இல்லை நெல்லை.. ஹிஹிஹிஹி....மீக்கு ஆன்மீக விஷயங்களில் எல்லாம் கேள்வியே வராது. அதைப் பத்தி யோசிக்காததால் ஹிஹிஹி...

   கீதாக்கா தான் சரியான நபர் இதற்கு..

   கீதா

   நீக்கு
 11. படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன...

  2009 ல் சென்றது... அதன் பின் சரியான நேரம் வாய்க்கவில்லை...
  தாமதமாக வருவது குறித்து வருந்த வேண்டாம்...

  இந்த வாரம் எபியில் வெளியான் அகதைக்கே இன்னும் நன்றி சொல்லி முடியவில்லை...

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துரை அண்ணா...

   படங்கள் எல்லாம் அழகாக இருக்கின்றன...//

   மிக்க மிக்க நன்றி துரை அண்ணா.

   தாமதமாக வருவது குறித்து வருந்த வேண்டாம்...//

   அதெல்லாம் இல்லவே இல்லை அண்ணா. புரிந்து கொள்ள முடியும். நானுமே எல்லாத் தளங்களும் இப்ப போவது மெதுவாகத்தான்...எனக்கும் முடிவதில்லை இப்ப...

   வாய்ப்பு கிடைக்கும் போது போய்விட்டு வாங்க..நிதானமாகப் போக வேண்டும்..நிறைய மண்டபங்கள்.

   மிக்க நன்றி துரை அண்ணா

   கீதா

   நீக்கு
 12. நீங்கள் சொல்லும் ஸ்ரீரங்க ரங்கநாதனின் - என்ற மகாநதி பாடல்

  திருபுவனம் கோயிலில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்...

  ஒருசில நொடிகள் மட்டுமே காட்டப்பட்டது என்பதனால் மனதில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ அந்தப் பாடல் திருபுவனம் கோயிலிலா? ஆமாம் ஒரு சில நொடிகள் தான் வருகிறது. ஆனால் வீடியோவிலும் நான் பார்க்க முயற்சி செய்தேன் கோயில் வரும் காட்சியுடன் வீடியோ இல்லை. பாடல் மட்டுமே வருகிறது.

   மிக்க நன்றி துரை அண்ணா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 13. அனைத்து படங்களும் அழகு. தாயார் சன்னதி, தெப்பக் குளம், மணல் வெளி என அனைத்தும் சுற்றி வந்திருக்கிறீர்கள் போலும். எல்லா இடங்களிலும் சின்னச் சின்னதாய் நிறைய சன்னதிகள் உண்டு. நின்று நிதானமாகப் பார்த்து படம் எடுக்க வேண்டும் என்றால் நிறையவே நேரம் எடுக்கும். இருந்த குறைவான நேரத்தில் இத்தனைப் படங்கள் எடுத்திருப்பதே சிறப்பு! பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிவுகள் தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வெங்கட்ஜி! நானும் இன்றுதான் தளம் வருகிறேன் அதனால் உடனேயே பதில் கொடுக்க முடியவில்லை.

   ஆமாம் நிறைய நேரம் வேண்டும் நிதானமாக எடுக்க. போய்க்கொண்டே ஆங்காங்கே ஜஸ்ட் கண்ணில் பட்டதை எல்லாம் எடுத்துக் கொண்டே சென்றேன். இன்னும் இரு பதிவுக்கு இருக்கு போடுகிறேன்.

   பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஜி.

   கீதா

   நீக்கு
 14. படங்களைப் பார்க்கும் போது பழக்கப்பட்ட இடங்களாகவேதோன்றியது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜி எம் பி ஸார் கருத்திற்கு. நீங்கள் திருச்சியில் இருந்த போது சென்றிருப்பீர்களே!

   கீதா

   நீக்கு
 15. வழக்கம்போல அழகிய காட்சிகள் எடுத்த விதமும்கூட... வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. ஆஹா !!! ஆண்டாள் செல்லத்தை மீண்டும் மீண்டும் ரசித்தேன் ..என்னே அழகு ..குழந்தை நல்லா இருக்கட்டும் மற்ற படங்களும் அழகு கீதா .உங்கள் குடும்பத்தாருக்கும் துளசி அண்ணன் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் ஆண்டாள் செல்லம் அழகோ அழகு!தான்.

   மிக்க நன்றி ஏஞ்சல் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

   ரொம்பவே தாமதமாகிடுச்சு பதில் கொடுக்க. இன்றுதான் அதுவும் இப்பத்தான் தளம் பக்கம் வருகிறேன். இன்னும் நிறைய பதிவுகள் பார்க்கணும் தேவதை கிச்சன், ஓ மனமே மனமே ,,நோன்பு பாரணை (ஹா ஹா பூஸாரின்) எல்லாம் பார்க்க வேண்டும்...ஸோ பிசி பிசி!! ஹா ஹா

   கீதா

   நீக்கு
 17. கோதண்டராமர் சந்நிதியில் ராமர் கழுத்தில் இருக்கும் சாளக்ராம மாலை நேபாள அரசர் வழங்கியது என்பார்கள். இந்த சந்நிதி கோவிலின் வடகிழக்கில் அமைந்திருப்பதால் மிகவும் விசேஷமானது என்பார்கள். அங்கு அமர்ந்து ஜபம் செய்தால் மந்திரம் சித்திக்கும் என்று பாலகுமாரன் எழுதியிருக்கிறார். மணல் வெளி தாண்டி இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில்தான் வைகுண்ட ஏகாதசியின் பொழுது பெருமாள் எழுந்தருளுவார். அங்கிருக்கும் குதிரை வீரன் சிற்பங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //சாளக்ராம மாலை நேபாள அரசர் வழங்கியது என்பார்கள்// - பா.வெ. மேடம்... இதைப்பற்றிய ஒரு செய்தி சொல்லலாம்னு நினைக்கிறேன்.

   நேபாளத்தில் அரசரின் ஆட்சி இருந்தபோது, இங்கிருந்து கோவிலுக்காக சாளக்கிராம மாலையைக் கேட்டு தகுந்த ருசுக்களுடன் யார் நேபாள அரசருக்கு கடிதம் எழுதினாலும், வெள்ளிப் பெட்டியில் சாளக்கிராம மாலையை அனுப்புவதை நேபாள அரசர் கடமையாகக் கொண்டிருந்தாராம்.

   ஒரு தடவை இதைக் கேள்விப்பட்டு, தானும் ஒரு கோவிலுக்காக கேட்கலாமே என்று ஒரு கடிதம் (சங்கராச்சார்யார் திறந்து வைத்த கோவில் என்றெல்லாம்) எழுதியவர், இதை யாரு கவனிக்கப்போகிறா என்று இருந்துவிட்டாராம். மூன்று மாதங்கள் கழித்து போஸ்ட் ஆஃபீசிலிருந்து 'கஸ்டம்ஸ்' 1500+ ரூபாயைக் கட்டச் சொல்லிச் சொன்னார்களாம். இவர் எதற்காக என்று அங்கு சென்றபோது, சாளக்க்ராம மாலை நேபாள அரசர் ஒரு பெட்டியில் வைத்து அனுப்பியிருப்பது தெரிந்ததாம்.

   அவர்கள் நேரடியாக இராமேஸ்வர கருவறைக்குள் செல்லும் உரிமை பெற்றவர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும் (நேபாள அரசர்)

   நீக்கு
  2. பானுக்கா தகவலுக்கு மிக்க ந்னறி. ஆயிரங்கால் மண்டபம், கம்பர் மண்டபமும் வரும் அடுத்த பதிவில்...

   நான் போகிற போக்கில் எடுத்துக் கொண்டே சென்றதுதான்.

   நெல்லை உங்கள் தகவலுக்கும் மிக்க நன்றி

   இருவரின் தகவலும் எனக்குப் புதிது!!

   கீதா

   நீக்கு
 18. வணக்கம் சகோதரி

  படங்கள் அத்தனையும் மிக அழகு. ஆண்டாள் யானையா அது? பெயரே அத்தனை அழகு. யானையும் கம்பீரம். படங்களும் வீடியோவும் ரசித்தேன்.

  தூண்கள் ஒவ்வொன்றும் அத்தனை அழகாக செதுக்கியிருக்கிறார்கள். கல்தூண்கள் அமைப்புகளும் அவற்றை நீங்கள் அழகுற படங்கள் எடுத்திருக்கும் முறைகளும் மிகவும் நன்றாக இருக்கின்றன.

  பரமபத வாசலை தரிசித்துக் கொண்டேன். அதன் எதிரில் உள்ள அந்த சிற்பங்கள் ஒவ்வொன்றும், அழகாக உள்ளன.கடைசி படம் மிகவும் அருமையாக இருக்கிறது. நல்ல தெளிவான படங்களின் வாயிலாக ஸ்ரீ ரங்கம் கோவிலை தரிசிக்க வைத்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் கமலா அக்கா அது ஆண்டாள் யானையேதான். அழகு!

   பரமபத வாசலின் எதிரில் இன்னும் இருக்கின்றன. ஆனால் முழுவதும் எடுக்க முடியவில்லை கமலா அக்கா. நடந்து கொண்டே சென்றதால் கிடைத்த வாய்ப்பில் எடுத்தவைதான்.

   மிக்க நன்றி கமலாக்கா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 19. ஆஆ கீதா, இவதான் முன்பு கீசாக்கா படம் போடுறேன் படம் போடுறேன் ஆண்டாளைப்படமெடுத்துப் போடுறேன் எனச் சொல்லிச் சொல்லியே பேய்க்காட்டிய ஆண்டாளோ?.

  மிக அழகாக ஸ்ரைலாக இருக்கிறா.. சூப்பராக இருக்கு. வீடியோவும் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. http://sivamgss.blogspot.com/2014/11/blog-post_2.html க்ர்ர்ர்ர்ர்ர்ர், இது போட்டப்போ எல்லாம் நீங்க என்னோட பதிவுகளுக்கு வந்ததே இல்லை. இதிலே நான் பேய்க்காட்டுறேனா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கே பாருங்க ஆண்டாளை! கிட்டத்திலே!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா அதிரா கீதாக்காவே சொல்லிட்டாங்க பதில் லிங்கும் கொடுத்துட்டாங்க!! ஸோ இப்ப டூ லேட் நான் உங்களையும் கீதாக்காவையும் கலாய்க்க!!!

   மிக்க நன்றி அதிரா அண்ட் கீதாக்கா

   கீதா

   நீக்கு
 20. உள்பக்க கலைவடிவம்.. என்னத்தைச் சொல்ல??.. அப்படியே சொக்கிப் போக வைக்கிறது.. என்ன அழகு... பார்த்துக் கொண்டே இருக்கலாம். அந்தக் கதவு அழகோ அழகு... இதுக்கு மேல எப்படி வார்த்தைகளை வெளிப்படுத்துவதென தெரியவில்லை கீதா. அவ்ளோ அழகாக நீட்டாக பராமரிக்கிறார்கள்.

  கோயில்போல தெரியவில்லை, காசில் போல இருக்கு பார்க்க ஹா ஹா ஹா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதிரா ரொம்ப அழகான உள் அமைப்பு வடிவங்கள் எல்லாமெ அழகு அதிரா. உள்ளே ரொம்பசுத்தமாகவும் இருக்கும். ஆமாம் அரங்கனின் கோட்டைதானே அது!!!!

   மிக்க நன்றி அதிரா

   கீதா

   நீக்கு
 21. அரிய பெரிய தகவல் களஞ்சியமாகத் தங்கள் பதிவினைப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 22. பலமுறை சென்ற கோயில். இப்போது உங்களின் பதிவுகள் வாயிலாக. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா தங்களின் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 23. ஆஹா....கோவில் தரிசனத்துடன் உங்கள் தளம் வந்து விட்டேன்.மூன்று,நான்கு முறை மட்டுமே சென்று இருக்கிறேன். சில இடங்களில் கால் சூடு தாங்காமல் ஓடியது நினைவுக்கு வருகிறது.உங்கள் படங்கள் வாயிலாக சூடு இல்லாமல் அழகாக கண்டு ரசிக்கிறேன். இராமானுஜர் சன்னதி அற்புதம் இல்லையா...அதற்கு முன் சன்னதியில் குட்டியாக அனுமரும் அதன் வாலில்மணி கட்டி இருப்பது அழகு. நினைவுகளில் நானும் கோவிலுக்கு போய் விட்டேன்.


  சகோக்கள் இருவருக்கும் தீபாவளி நல் வாழ்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க உமையாள்! ரொம்ப நாளாகிவிட்டது. இல்லையா!

   //உங்கள் படங்கள் வாயிலாக சூடு இல்லாமல் அழகாக கண்டு ரசிக்கிறேன்.//

   ஹா ஹா ஹா மிக்க நன்றி உமையாள்...

   இராமானுஜர் சன்னதி எங்கும் நிற்கவில்லை உமையாள். கோபுரங்கள் எல்லாம் ஒரு சேர கண்டபின், அப்படியே வெளிப்புறம் செல்ல இந்த வழியாகச் சென்றது அவ்வளவே..அப்போது எடுத்த படங்கள்...

   மிக்க நன்றி உமையாள் கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 24. அன்பு கீதா
  ஏராளமான படங்கள். இத்தனை படங்கள்
  ஸ்ரீரங்கத்தைப் பற்றி பார்த்ததே இல்லை.
  ஆண்டாள் அழகியவள்.
  நான் பார்த்தபோது கம்பிகள் கிடையாது. அந்தத் திண்ணையிலேயே
  உட்கார்ந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
  பாகனும் கேட்டுக் கொண்டிருந்தார்.

  தாமதமாக வந்ததுக்கு மன்னிச்சுக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிம்மா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எதுக்கு தாமதமாக வந்ததுக்கு மன்னிப்புன்னு எல்லாம். அப்படினா நானும் இப்ப உங்ககிட்ட மன்னிப்பு!! தாமதமாகப் பதில் கொடுப்பதற்கு ஹா ஹா ஹா சரி சரி ஈக்வேட் ஆகிவிட்டது!! இனி மன்னிப்பு எல்லாம் நீங்க எங்ககிட்ட எல்லாம் சொல்லக் கூடாது அம்மா ப்ளீஸ்...

   இன்னும் நிறைய படங்கள் எடுக்கலாம் அம்மா உள்ளே அத்தனை இருக்கு ஆனால் இன்னும் இரு பதிவுகளுக்குப் படங்கள் அதோடு முடிந்தது...

   ஓ நீங்க ஆண்டாள் பார்த்த போது கம்பிகள் கிடையாது இல்லையா..ஆஹா அவளோடு பேசிக் கொண்டிருந்தீங்களா ஆண்டாளும் பதில் சொல்லியிருப்பாளே!! சூப்பர் வல்லிம்மா

   மிக்க நன்றி வல்லிம்மா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 25. இப்போதுதான் பார்த்தேன். நன்றாகப் படமெடுத்து ஆடியிருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா வாங்க ஏகாந்தன் அண்ணா...

   நான் எங்கே ஆடியிருக்கிறேன்னு தேடினேன் தேடினேன் ஓ ஆண்டாளைச் சொல்றீங்களஆ? சூப்பர் இல்லையா?!!

   மிக்க நன்றி ஏகாந்தன் அண்ணா கருத்திற்கு

   கீதா

   நீக்கு
 26. இந்தப் பதிவு வந்ததே இன்னிக்குத் தான் தெரியும். இப்போத் தான் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதாக்கா இந்தப் பதிவு வெளி வந்த அப்புறம் கொஞ்சம் பதில் கொடுத்துவிட்டு நானும் வர முடியாமப் போச்சே...

   இனிதான் உங்க பதிவுகள் எல்லாம் பார்க்கணும் கீதாக்கா

   மிக்க நன்றி

   கீதா

   நீக்கு
 27. பதில்கள்
  1. வாங்க வாங்க கீதாக்கா..ஆனா நீங்க சொல்லி ரெண்டு நாளாகுது இன்றுதான் பதில் கொடுக்க முடிந்தது...நன்றி கீதாக்கா

   கீதா

   நீக்கு
 28. வணக்கம் சகோதரி

  நலமா? தங்களை எங்கும் காணவில்லையே என நினைத்துக் கொண்டேயிருந்தேன். பின்பு தங்கள் கணினிக்கு உடல் நலமில்லை என தெரிந்து கொண்டேன். விரைவில் தங்கள் கணினி உடல்நலம் பெற்று தாங்கள் அதன் உதவியுடன் திக்விஜயம் செய்ய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு