வியாழன், 24 மே, 2018

காலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்


1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் இந்நாவலை எழுதி முடிக்கத் தைரியம் தந்தது.


அந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தில்லைஅகத்து க்ரோனிக்கிள்ஸில் எழுதிய இடுகையின் சுட்டிதான் இது. அந்தப் பதிவும் இந்த புதினத்தில் வரும் ஒரு காதாபாத்திரத்திற்கு இணையான முக்கியமான பங்கு வகிக்கிறது. அதை, நீங்கள் இந்தப் புதினத்தை வாசிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.

பரிதாபத்திற்குரிய தாயைத் தாரமாக்கிய ஈடிபஸின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அது போன்ற சம்பவங்கள் அரிதிலும் அரிதாய் நிகழ்கின்ற ஒன்றுதான். என்றாலும் எல்லோரும் அது போன்ற கசக்கும் உண்மைகளைக் கண்டும் காணாமலிருக்கத்தான் விரும்புகிறார்கள். அப்படி, காலம் செய்யும் கோலத்தால் சீரழிந்து போகின்றவர்கள் செத்துத்தான் போக வேண்டும் என்பது பெரும்பான்மையினரின் விருப்பம்.

அதனால்தான் பல இடங்களில் கயவர்களால் கற்பு சூறையாடப்படும் அப்பாவிப் பெண்கள் போராட பயந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். போராடும் ஒரு சிலரோ போராடி வெற்றி பெற்றாலும், அதன் பின் சாதாரண வாழ்க்கை வாழவியலாமலும் பெரும்பான்மையினரின் இகழ்வைத் தாங்க முடியாமலும் தலைமறைவாகி விடுகிறார்கள். இவ்விரண்டிலும் தங்களை நுழைத்துக் கொள்ள முடியாத பெரும்பான்மையினர் மனநோயாளிகளாய் மாறி நடைபிணமாகி நம்மிடையே வாழ்கிறார்கள்.

இப்படி, தான் இழைக்காத குற்றதிற்காக யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இப்புதினம். பசி, , காதல், பேராசை, பொறாமை, அக்கிரமம், அநீதி , கடின உழைப்பு, தியாகம், நட்பு, நேர்மை போன்றவற்றைப் பற்றிய நல்ல புதினங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதனிடையே, இது போன்ற கேள்விக்குறியாய் வாழ வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டவர்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்வதற்குத்தான் இப்புதினம்.

“அளவிலா விளையாட்டுடைய இறைவா! நீயின்றி ஓரணுவும் அசையாது”. எனவே, இது போன்ற சம்பவங்கள் நிகழக் காரணமாகும் காலம் செய்யும் இக்கோலங்களுக்கும் காரணம் நீயே. இது நீ செய்யும் குற்றமேதான். அதனால் தான் கவிஞரின் வரிகளை கடனெடுத்து இந்நாவலின் தலைப்பாக்கி இருக்கிறேன்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் போது மனத்திரையில் நம் இதயத்தை நடிப்பாற்றலால் கொள்ளை கொண்ட திரு சிவகுமார், திருமதி சுமலதா, அமரர் மனோரமா, திரு அஜித், திருமதி ஊர்வசி, அமரர் முரளி போன்றவர்கள் வந்து போனதால்தான் அவர்களைப் போன்ற உருவ ஒற்றுமை உள்ளவர்களை இதில் கதாபாத்திரங்களாக்கியிருக்கிறேன்.

கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த எனக்கு, உறுதுணையாய் நின்று அக்கதாபாத்திரங்களுக்கெல்லாம் உருவம் கொடுத்து அவர்களை நம்மிடையே வாழ வைத்திருக்கும் திருமிகு தமிழ்செல்வனுக்கும் (தமிழுக்கு) எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. 

உரை எழுதித் தந்த முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, திருமதி தேனம்மை, திரு ராய செல்லப்பா ஸார் மற்றும் நூலழகு செய்த திரு பாலகணேஷ் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.



வரும் ஜூன் 17, ஞாயிறு அன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (இந்தியா கேட் வடிவில் இருக்கும் கட்டிடத்தின் அருகே) மாலை 5 மணிக்கு, “காலம் செய்த கோலமடி”யின் புத்தக அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. திரு பாலகணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்த புத்தகத்தைப் பெறுபவர் திரு அரசன்.

திரு ராயசெல்லப்பா, திரு வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), திரு குடந்தை ஆர் வி சரவணன், திரு ஆவி, திரு கார்த்திக் சரவணன், திரு அரசன் உள்ளிட்டோர் புத்தகத்தைப் பற்றி அவர்கள் கருத்துகளைப் பகிர்வார்கள். இந்நிகழ்வு புத்தக வெளியீடு என்பதை விட புத்தக அறிமுகம், ஒரு பார்வை என்று கொள்ளலாம்.

----அன்புடன் துளசிதரன்



39 கருத்துகள்:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள் எமது... விழா சிறப்புறட்டும்.

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள். முகநூலிலும் பார்த்தேன். விழா சிறப்படையவும் புத்தகம் வெற்றி அடையவும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கீதா சாம்பசிவம் தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    புத்தக அறிமுக விழாவிற்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    விழா மன மகிழ்வுடன் சிறப்பாக நடந்தேறவும், புத்தகத்தின் கருத்துக்கள் வெற்றிப் பாதையில் பயணிக்கவும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி கமலா ஹரிஹரன் தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  4. புத்தக வெளியீடு சிறப்புடன் அமையும். வாழ்த்துகள். படிக்க ஆவலாக உள்ளேன். அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி காமாட்சி அம்மா தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  5. புத்தக வெளியீடு சிறப்பாக அமையட்டும். வாழ்த்துகள் துளசிதரன் சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைதமிழன் தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  6. சீரும் சிறப்புமாக புத்தகம் வெளிவர வாழ்த்துகள்.

    புத்தக அட்டையில் சிவக்குமார், ஊர்வசிலாம் இருக்காங்களே! ஹன்சிகா, ஸ்ரீவித்யா, சிவகார்த்திகேயன்லாம் கிடையாதா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி ராஜி தங்களின் வாழ்த்திற்கு. 83 லியே ஹன்சிகா, ஸ்ரீவித்யா (இவர் எங்கள் காலத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா இல்லை என்று நினைக்கிறேன்) சிவகார்த்திகேயன் இருந்திருந்தால் கதை எழுதிய போது ஒருவேளை அவர்களை மனதில் நினைத்திருப்பேனோ என்னவோ.

      நீக்கு
  7. புத்தகத்தின் அட்டைப்படம் காலத்தைச் சொல்வது போல பழமை பறைசாற்றுகிறது.

    முக நூலில் பார்த்தேன். மனமார்ந்த வாழ்த்துகள். புத்தக வெளியீட்டு விழா வெற்றியடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி தங்களின் வாழ்த்திற்கு!

      நீக்கு
  8. ஆஹா துளசி அண்ணன் கேரளாவில் இருந்து கொண்டு தமிழில் புத்தகம் வெளியிடுகிறாரோ?.. நான் துளசி அண்ணனுக்குத் தமிழ் பெரிசா தெரியாது என்றுதானே நினைச்சுக் கொண்டிருக்கிறேன்.

    புத்தக முகப்பைப் பார்க்கவே வாங்கோணும் எனும் ஆசை வருது. தலைப்பும் சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா நான் தமிழ்நாட்டில் பிறந்து இங்கேயே 25 வயது வரை வளர்ந்து அதன் பின் தான் கேரளம் சென்றேன். அதன் பின் தான் என் தாய் மொழி மலையாளம் கற்றேன். என்றாலும் தமிழைத்தான் என் தாய் மொழி என்று சொல்வது வழக்கம். தமிழ்நாட்டில்தான் இருக்கவும் ஆசைப்பட்டேன். எனக்கு மலையாளத்தில் எழுத்துரு எழுதத் தெரிந்தாலும் மலையாளத்தை விடத் தமிழில் தான் எளிதாக எழுத முடிகிறது. மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  9. //வரும் ஜூன் 17, ஞாயிறு அன்று பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் (இந்தியா கேட் வடிவில் இருக்கும் கட்டிடத்தின் அருகே) மாலை 5 மணிக்கு, “காலம் செய்த கோலமடி”யின் புத்தக அறிமுக நிகழ்வு நடக்கவிருக்கிறது. திரு பாலகணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்த புத்தகத்தைப் பெறுபவர் திரு அரசன்.//

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இந்த இருவரும் எனக்குத் தெரிந்தவர்களே.. மிக்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகே அந்த நாளில் வீடு வாங்குவது வழக்கம். நீங்கள் நாவல் வெளியிட்டிருக்கிறீர்கள்!நல்லது, கடற்கரையில் சந்திப்போமா?
    -இராய செல்லப்பா சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வருவது சிரமம் செல்லப்பா சார். மிக்க நன்றி சார் கருத்திற்கு.

      நீக்கு
    2. வருவதற்கு முயற்சி செய்கிறேன் செல்லப்பா சார்...மிக்க நன்றி ஸார்

      நீக்கு
  11. அன்பின் இனிய நல்வாழ்த்துகள்...
    புத்தக வெளியீட்டு விழா சிறப்புறட்டும்..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் வாழ்த்திற்கு

      நீக்கு
  12. 85-ல் 86 % எழுதிமுடித்திருந்தீர்களா? 2014-ல் பிரேஸில் சம்பவம்வரை காத்திருந்தீர்களா? புரியாத கணக்காக இருக்கிறதே!
    //..இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன்.//

    துளசிதரன் சார், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தன் படைப்பை வெளியிடவேண்டுமெனில், எழுத்தாளன் என்று ஒருவனுக்கு சமூகத்தில் இடமே இல்லை என்றாகிவிடுமே..

    இதற்குமுன் உங்களிடமிருந்து எழுத்து முயற்சிகள் உண்டா? இதுதான் முதலாவதா?

    வெளியீட்டு விழா சிறக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏகாந்தன் சார், 85ல் எழுதியது பின்னர் தொடர முடியாமல் போனது. கேரளத்தில். அப்படியே பரணில் கிடந்தது. பின்னர் வலைத்தளம் தொடங்கிய பின் அத்தனை வருடம் தமிழ் வாசனை இல்லாமல், இதை எழுதி முடிக்க நினைத்தாலும் ஒரு தயக்குமும் இருந்தது. அதில் நான் சொல்லியிருந்த சம்பவம் அப்படி என்பதால். பின்னர் பிரேசிலில் நான் எழுதியதைப் போல ஒரு சம்பவம் நடந்தவுடன் மீண்டும் ஒரு தயக்கம் வந்தது உண்மைதான் நான் அதையே எழுதிவிட்டதாக வருமோ என்று பின்னர் ஒரு வாறாக அச்சம்பவத்தையும் நாவலில் கொண்டு வந்து முடித்தேன்...இதுதான் முதல் முயற்சி ஏகாந்தன் சார்.

      மிக்க நன்றி தங்களின் வாழ்த்துகளுக்கு.

      நீக்கு
    2. துளசிதரன் சார், எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால்தான் தன் படைப்பை வெளியிடவேண்டுமெனில், எழுத்தாளன் என்று ஒருவனுக்கு சமூகத்தில் இடமே இல்லை என்றாகிவிடுமே.. //

      மிக்க நன்றி ஏகாந்தன் ஸார் இந்த வரிகளுக்கு

      நீக்கு
  13. அன்பு துளசி, புத்தகம் வெளியிடுகிறீர்கள. மனம் நிறை வாழ்த்துகள் மா. மிக அருமையாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏது. விழா சிறக்கட்டும்.
    படங்கள் வெளியிடுங்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வல்லிம்மா தங்களின் அன்பிற்கும் ஆசிகளுடனான வாழ்த்திற்கும். நான் விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. படங்கள் வெளியிடப்படும். விழா ஒரு நிகழ்வாகத்தான். புத்தக அறிமுகம் அதைப் பற்றிய கருத்து என்பது போலத்தான் அம்மா

      நீக்கு
  14. வாழ்த்துகள் பல...

    அப்போது சென்னையில் பயணம் இருந்தால் கண்டிப்பாக வருவேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி வாழ்த்திற்கு. முடிந்தால் கலந்து கொள்ளுங்கள் டிடி. நான் வருவது தெரியவில்லை...

      நீக்கு
  15. எனது மகிழ்வான வாழ்த்துக்களும்...அண்ணா...

    பதிலளிநீக்கு
  16. மனம் நிறைந்த வாழ்த்துகள்! விழா அன்று சென்னையில் இருக்க நேர்ந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  17. //தான் இழைக்காத குற்றதிற்காக யாரும் தண்டனை அனுபவிக்க வேண்டியதில்லை என்ற கருத்தை வலியுறுத்தத்தான் இப்புதினம்//
    ஆஹா !மிக அருமையான ஒரு கான்செப்ட் .
    குற்றவுணர்வில் மருகுவோர் பலர் இவ்வுலகிலுண்டு .
    இப்புதினம் ஒரு ஆறுதலாக அமையும் என்பதில் ஐயமில்லை .

    மனமார்ந்த வாழ்த்துக்கள் துளசி அண்ணா ..

    டோவினோ தாமஸ் நடித்த ஒரு படம் வெளி வந்திருக்கு ரிவ்யூ மட்டும் படித்தேன் .சற்றே இதே கதைக்கருவோ என தோணுது .
    ஆனால் நிச்சயம் துளசி அண்ணாவின் படைப்பு மனதுக்கு அருகில் இருக்கும்


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சற்றே இதே பிரேசில் சம்பவம் தான் கதைக்கருவோ என தோணுது .

      நீக்கு
  18. சிலர் காரணமின்றியே எய்தாப்பழியை ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்பது உண்மை. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. உங்களை ஒரு நாவலாசிரியராகப் பார்ப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

    வாழ்த்துகள்.
    எந்தப் பதிப்பகம் வெளியிடுகிறது?

    பதிலளிநீக்கு
  19. வழக்கம் போல் தாமதமாக வந்திருக்கிறேன்.

    இந்த நூலை வெளியிடுவதில் தங்களுக்கு இருந்த சிரமங்கள் எத்தனை எத்தனை என்பதை கீதா சகோ அவர்கள் மூலம் அறிவேன். அத்தனையையும் கடந்து நூலை வெளியிட உள்ளமைக்கு முதலில் இச்சிறுவனின் பணிவன்பான நல்வாழ்த்துக்கள் ஐயா!

    அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் என்பவர்கள் மக்களிடையே தங்கள் எழுத்துக்களால் மட்டும்தான் உறவாடுவார்கள். ஆனால் இன்று அப்படியில்லை. எழுத்தாளர்கள் பெரும்பாலானோர் சமுதாய ஊடகங்கள் மூலம் மக்களிடையே நேரடித் தொடர்பில் இருக்கும் காலம் இது. இப்படிப்பட்ட காலச்சூழலில், அதுவும் அறிமுக எழுத்தாளரான நீங்கள், அதிலும் வலைப்பதிவராக ஏற்கெனவே ஏராளமானோரிடம் நற்பெயர் எடுத்த நீங்கள் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய களத்தை மையமாக்கிப் புதினம் வெளியிடுவது மாபெரும் துணிச்சல்!!

    இந்தத் துணிச்சலுக்கும், இத்தனை ஆண்டுக்கால உங்கள் எழுத்துத் தவத்துக்கும் உரிய பலன் உங்களுக்குக் கிடைக்க மீண்டும் என் அன்பு வாழ்த்துக்கள்! இந்நூலை வெளிக் கொண்டு வருவதில் எழுத்தாளரை விட அதிகப் பங்காற்றியிருக்கும் கீதா சகோ அவர்களுக்குப் படிப்பவர்களின் பாராட்டுக்கள் உரித்தாகுக!

    பதிலளிநீக்கு
  20. ஆஹா....அருமை சகோ....மனம் நிறைந்த வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  21. உங்கள் நூலுக்கு அணிந்துரை வழங்கியதை பெருமையாகக் கருதுகிறேன். நாளை நடைபெறவுள்ள புதின அறிமுக விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள். உங்கள் நூலுக்கான அணிந்துரையை இன்று என் தளத்தில் பகிர்ந்துள்ளேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு