புதன், 22 ஏப்ரல், 2015

கோ (GO ) க்ரீன்


முதலில் சகோதரர்கள், சகோதரிகள் எல்லோருக்கும் மிக்க மிக்க நன்றி!  சென்ற பதிவில் எனது காது வலியைப் பற்றிச் சொல்லவும், எல்லோரும் அன்புடன் அறிவுரைகளும், பிரார்த்தனைகளும், சீக்கிரம் குணமாக வாழ்த்துகளும், மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் தெரிவித்து என்னை உற்சாகப்படுத்தியமைக்கு பல கோடி நன்றிகளை இங்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  ஒவ்வொருவருக்கும் தனித்தனியே கொடுக்க முடியாததால் இங்கு எல்லோருக்கும் தெரிவிக்கின்றேன். உங்கள் எல்லோரது அன்பும், ஆதரவும், அக்கறையும்தான் எங்களை வழிநடத்திச் செல்கின்றது.  இப்போது பரவாயில்லை எனலாம்.  இன்னும் முழுவதும் குணமாகவில்லை.  ஒரு வாரம் செல்லலாம் என்றிருக்கின்றார் மருத்துவர். உங்கள் எல்லோரது அன்புடன் கூடிய பிரார்த்தனைகள் இருக்க பயமென்?!!!! மீண்டும் நன்றியுடன்.....

Image result for go green, comical cartoons

                “மன்னாரு அண்ணே என்னாச்சு? இப்படிச் சோகமா உக்காந்துருக்கீங்க? வீட்டுல யாரும் இல்லைப் போலருக்கு.... வழக்கம் போல சாவி கொடுக்கலையா?”

                “அட தம்பு!  என்ன இந்தப் பக்கம்? அதிசயமாருக்குது... சோழியன் குடுமி சும்மா ஆடாதே”

                “என்ன அண்ணே...என்னையப் போயி இப்படிச் சொல்றீங்க...நான் உங்க பின்னாடியே வர்ற நாய் குட்டி மாதிரி அண்ணே.....எங்கத் தெருல கரண்ட் கட்டு...அதான் உங்க வீட்டுல கரண்டு இருந்தா காத்து வாங்கிட்டுப் போகலாமெனுதான்...”

                “காத்து வாங்கத்தானே வந்த....சரி அப்ப ஒரு மணி நேரத்துக்கு 200 ரூவா வெச்சுட்டுப் போ...”

                “அண்ணே என்ன அண்ணே தமாசு பண்ணறீங்க!  நீங்களே திண்ணைல உக்காந்துதான் காத்து வாங்கிட்டு இருக்கீங்க....இதுல நான் உங்களுக்கு ரூவா தரணுமாக்கும்...அன்ணன் காமெடியே காமெடிதான்......அது சரி அது என்ன மூலைல ஒரே புல்லுக் கட்டு, கீரைக்கட்டு..பச்சை பச்சையா......மாடு வாங்கிருக்கீங்களா அண்ணே?

                “என்னது மாடா? மாடு கட்டி மேய்க்கற காலமாடா இது. நான் தான் இருக்கேனே..செக்கு மாடா உழைக்க.”

                “அதுவும் சரிதான் அண்ணே...அப்ப உங்களுக்குத்தான இந்த புல்லு எல்லாம்.....நான் என்ன நினைச்சேன்னா.....சுற்றுப் புறச் சூழல் மாசுபடக் கூடாதுனுட்டு, நீங்க உங்க வண்டிய எல்லாம் கொடுத்துட்டு இனி மாட்டு வண்டில போறதுக்கு வேண்டி மாடு வாங்கிருக்கீங்களோனு நினைச்சுக் கேட்டேன்...”
 
“டேய் அந்த வயித்தெரிச்சலக் கிளப்பாதடா.....நாம எல்லாம் செக்கு மாடா நம்ம வீட்டுக்கு உழைக்கறோம்....ஆனா, நம்ம அம்மணிங்க நாம வாங்கற “செக்க” கூட கண்ணுல காட்டாம அதுக்கு “செக்கு” வைச்சுடறாங்களே”

“சரி இப்ப என்ன சொல்ல வர்றீங்க”

“கொஞ்ச நாள் முன்னாடி இந்த டிவில ஏதோ ஒரு அம்மணி வெயிட் குறைக்கறது எப்படினு ஒரே பச்சை பச்சையா என்னெல்லாமோ செஞ்சு காமிச்சாங்களா, நம்ம வீட்டு அம்மணி அதைப் பாத்துப்புட்டாங்க.....”

“அண்ணே அந்த டிவி அம்மணி டிவி ஸ்க்ரீன் கொள்ளாத அளவு இருப்பாங்க அவங்களா வெயிட் குறைக்கறதப் பத்தி.......”

“டேய் தம்பு இப்படி எல்லாம் கேள்வி கேக்கக் கூடாது....நமக்கு ஸ்மோக் பண்ணாத, தண்ணி அடிக்காதனு அட்வைஸ் பண்ணற டாக்டருங்க எல்லாம் அடிக்காமயா இருக்காங்க?....அதுமாதிரிதான் இதுவும் அட்வைஸ் எல்லாம் மத்தவங்களுக்குத்தான்”

“அதுக்காக இவ்வளவு மூட்டை மூட்டையா...எதுக்கு அண்ணே?  இப்ப ஊரு முழுக்க “கோ க்ரீன்” அப்படினு வைச்சுருக்காங்கல்ல,  ஒரு வேளை அண்ணி அத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க போல”

“டேய் அதுமட்டும் இல்ல.....நேத்து நான் கொஞ்சம் தலை சுத்துதுனு தெரியாம சொல்லிப்புட்டேன்.  அவ்வளவுதான் என்னை பலி ஆடு மாதிரி, வடி வேலு ஒரு படத்துல நினைச்சுப் பார்ப்பாரே...தன்னை ஆடு மாதிரியும் அவரை பார்த்திபன் இழுத்துட்டுப் போறா மாதிரியும்...அப்படி இழுத்துட்டுப் போனா பாரு.....  டாக்டரும், “ம் உங்க உடம்புல எல்லாருக்கும் சப்ளை பண்றா மாதிரி, சக்கரை, எண்ணை எல்லாம் இருக்கா இல்லை ரேஷனா நு ஒரு செக் அப் செஞ்சுரலாம்” அப்படினு பரீட்சை எழுதறா மாதிரி பக்கம் பக்கமா எழுதி ஒரு ஃபைலே போட்டார்னா பாரேன்...”

“ம்ம்ம் கால் நடைப் பயிற்சிக்குப்  பதிலா உங்க வீடு “கால்நடை” தீவன வீடா ஆகிடுச்சுனு சொல்லுங்க...”

“டேய்....பச்சைக் காய்கறிகள்ல என்ன செய்யலாம்னு ஒரு புக்.  புல்லுல, கீரைல, பாகற்காய்ல ஜூஸ், சூப் செய்யறது எப்படினு ஒரு புக் இப்படி எல்லாமே பச்சைதாண்டா....எங்க வீட்டுல....மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் இங்கலாம் கூட இந்த ஜீஸ் எல்லாம் காலைல விக்கிறாங்களாமேடா....”

“ஆமாண்ணே அது ரொம்ப நாளா நடக்குதே.....அப்ப அண்ணி “பச்சைதான் எனக்குப் புடிச்ச கலரு”னு பாடுறாங்கனு சொல்லுங்க....”

டேய் தம்பு கிளப்பாதடா....உங்க வீட்டுல இட்லி, என்ன கலர்லடா இருக்கும்,?”

“தும்பைப் பூவாட்டம் வெள்ளை வெளேர்னு,,  மல்லிப்பூ மாதிரி  ம்ருதுவா இருக்கும், ஏன் கேக்கறீங்கண்ணே?”

“தோசை?”

“.தங்க நிறத்துல, மொறு மொறுனு இருக்கும்”

“அடை?”

“அதுவும் தங்க நிறத்துல மினு மினுனு, அங்கங்க, கறிவேப்பிலை கண் சிமிட்டும்....ஆமா, அண்ணே! எதுக்கு இந்தக் கேள்வி எல்லாம்? உங்க வீட்டுலயும் அண்ணி அப்படித்தானே செய்யும்...”

“டேய் கொடுத்து வைச்சவண்டா நீ....எங்க வீட்டுல சோத்தப் பாத்து யுகமாகுது.....கழனித் தண்ணி மாதிரி ஏதோ ஒரு பானம்.....இட்லி, தோசை எல்லாம் பச்சைக் கலர்ல இருக்கும்......வாதநாராயணக் கீரை தோசை, முடக்கத்தான் கீரை இட்லி அப்படினு........அடை.....அந்த அடை இருக்கே...கிராமத்துல எங்க ஆத்தா, அந்தக் காலத்துல, சுவத்துல தட்டி வைச்சுருக்குமே பச்சைக் கலர்ல.....அது மாதிரி.....”

“மன்னாரு அண்ணே.....அது வறட்டி! வறட்டி மாதிரியா இருக்கும்?!...” என்று சொன்ன தம்பு எதையோ யோசிப்பது போல் யோசித்து விட்டு, “அண்ணே, கொஞ்சம் இருங்க..இதோ இப்ப வார்றேன்....” என்று சொல்லி ஓட....

“டேய் தம்பு எங்கடா அவசர அவசரமா ஓடற....”

“அண்ணே,...அது ஒண்ணும் இல்ல....பக்கத்துத் தெரு மாமிங்க எல்லாம் நேத்து பேசிக்கிட்டாங்க...” இப்பல்லாம் மாடுங்கள தெருல காண்றதே இல்ல....சாணமே கிடைக்கறதுல்லனு......” அதான் அவங்ககிட்ட விஷயத்தச் சொல்லி உங்க வீட்டக் காமிச்சுரலாம்னுதான்....”

“டேய் தம்பு! நீ நாய்குட்டி இல்லடா......என் காலைச் சுத்தற பாம்புடா.....தம்பு! என் மானத்த வாங்கற உனக்கு இருக்குடா ஆப்பு

--கீதா


 படம்:  கூகுள் உதவி
             

43 கருத்துகள்:

 1. ரசித்தேன் நல்லவே கலாய்க்கிறீங்க..... பக்கத்து வீட்டுக்காரன் மாட்னான் உங்கள்ட்ட பாவம்.
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹஹ் மிக்க நன்றி ஜி! பக்கத்து வீட்டுல யாருமே இல்லையே அதான் ஒரே கவலையா இருக்கு ஜி!

   நீக்கு
 2. தம்பு தின்ன ஒரு அடையைக் கொடுத்திருக்கலாம் ,தப்பிச்சிட்டாரே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ அது சரிதான்....மன்னாரே அன்றைக்கு வாசலில்....ம்ம்ம் மிக்க நன்றி ஜி!

   நீக்கு
 3. வணக்கம்
  அண்ணா

  மிக அருமையாக பேச்சு தமிழில் அத்தியுள்ளீர்கள் இறுதியில் சந்திர முகி படத்தில் வடிவேல் சொல்லிய பஞ்சு டயலக் நன்று... த.ம 3

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. துன்பத்தை துடைக்கும் தூயவன் நண்பன்
  இன்பத்தை படைக்கும் மாயவன் இறைவன்
  நலம் வாழ நல்வார்த்தை நாளும்
  இல்லம் தேடி வரும் ஆசானே!
  த ம 1
  நட்புடன்,
  புதுவை வேலு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 5. கீதா,

  சிரிச்சு சிரிச்சு முடியல ! இப்படியே ஓடிஓடி டயர்டாகி ஒரு நாளைக்கு அரிசியைத் தேடி ஓடப்போறோம். சர்க்கரை, எண்ணெய், ரேஷன் ...... சூப்பர்.

  சீக்கிரமே காதுவலி குணமாக பிரார்த்தணைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ்ஹஹஹஹ மிக்க நன்றி சித்ரா! நன்றி ஃபாட் பிரார்த்தனைகள்! உங்கள் எல்லோரது அன்பும் இருக்க பயமென்!

   நீக்கு
 6. சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறது
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்!

   நீக்கு
 7. ஹா....ஹா...ஹா....

  ஆனாலும் அண்ணன் வீட்டு அம்மணி இவர் ஆரோக்யத்துக்குத்தானே இப்படிப் பாடு படுத்தறாங்க, ச்சே....படறாங்க.... அவிங்களப் போய்க் குறை சொல்லிகிட்டு....!

  :))))))))))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹா அது சரி பாருங்க உங்க வாயிலயே தவறி பாடு படுத்தறாங்கனு வந்துடுச்சு....குறையா....ஹஹஹஹ் அப்ப மன்னாரிணிகிட்ட சொல்லி அப்ப அடை பார்சல் அனுப்பலாமா??!!!! சகோதரருக்கு?!!!...ஹஹஹஹ

   நீக்கு
 8. உடல் நிலையையும் பொருட்படுத்தாது உள்ளத்தில் பதியுமளவு ஒரு அனாயசமான பதிவினைத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தாங்கள் எல்லாம் அரும்பாடுபட்டுச் செய்யாத ஆராய்ச்சிகளா ஐயா! மிக்க நன்றி ஐயா தாங்கள் ரசித்தமைக்கு!

   நீக்கு
 9. உங்கள் எழுத்தில் மிக பெரிய மாற்றம் பதிவும் மிக அருமை....முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் எழுதிய நகைச்சுவை பதிவு போல இருக்கிறது பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழா! மிக்க நன்றி ! இத்தனை பாராட்டுகளா?!!! ம்ம்ம் முன்பும் எழுத்யுள்ளேன் தமிழா ஆனால் அப்போது எனது பெயர் போட்டதில்லை. நகைச்சுவைப் பதிவுகள் என்ற பெயரில்....ம்ம்ம் அப்பப்ப மூளை ஃப்யூஸ் ஆகிடும்...இல்ல லோசார்ஜ் ஆகிடும்....அப்புறம் ரிவைவ் ஆகும் போது இப்படி ஏதாவது மின்னலடிக்கும்....

   தங்களிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்க மிகுந்த மகிழ்வாக இருக்கின்றது தமிழா. மிக்க நன்றி!

   நீக்கு
 10. இன்றைக்கு எல்லோரும் இயற்கை உணவை தேடி ஓடுவதை நகைச்சுவையோடு உரைநடை கதையாக சொல்லியிருக்கிறீர்கள். பேச்சுத் தமிழ் உங்களிடம் துள்ளி விளையாடுகிறது. காலையில் சிரிக்க வைத்த உங்களுக்கு எனது நன்றிகள்.
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்துச் சிரித்தமைக்கு!

   நீக்கு
 11. காது வலி விரைவில் தீர்ந்து நலம் பெறவேண்டும்..

  கலக்கலான - கதை.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா! தங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

   நீக்கு
 12. நல்ல முயற்சி.பாராட்டுக்கள். எங்க வீட்டு அம்மணியும் சில நேரங்களில் உடலுக்கு நல்லது என்று ஆடு தின்னும் முருங்கைக் கீரையை சமைப்பாள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சார் தங்களின் பாராட்டிற்கு! கீரைதானே சார் நன்றாக இருக்குமே சார்...!!?

   நீக்கு
 13. கதை காமெடி என்று நன்றாகவே அசத்துகிறீர்கள்மா அட .....பஞ் டயலாக் வேற wow அசத்துங்க அசத்துங்க ஆமா காது வலி இன்னும் தீரலையா ம்..ம்.ம் சரி இன்னும் 2 நாளில சரியாயிடும் ok வா பதிவுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி இனியா! ம்ம் மிடில் இயர் அல்லவா...அதனால் கொஞ்சம் தாமதாமாகும்.....பார்ப்போம்...மிக்க நன்றி சகோதரி!

   நீக்கு
 14. வலி விரைவில் குணமாக வேண்டுகிறேன். வெள்ளை, மொரு மொரு இது எல்லாம் உடம்புக்கு தேவையா? மாடு தின்னும் இலை தழை நன்று தான். அருமையாக கலக்கலான கதையுடன் கூடிய அறிவுரை, சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹ்ஹாஹஹ்ஹ்....நாக்கு நாக்கு!!! அடக்கு அடக்கு என்றால் நாக்கு அடங்க மாட்டேங்குதே....மிக்க னன்றி மகேஷ்வரி....

   நீக்கு
 15. நல்ல நகைச்சுவை ரசித்தேன். சாப்பாடு என்றால் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். இந்த டீவிக் காரர்கள், பேஸ்புக் ஆலோசகர்கள் எல்லாம் ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி குழப்புவார்கள். அந்த பக்கம் அடிக்கடி போகாதீர்கள்.
  த.ம.10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்! ஐயா! நல்லவையே என்றாலும் அதற்காக அதை மட்டுமே நிறைய பேர் செய்து கொண்டிருக்கின்றார்கள். எதையுமே அளவோடு ருசித்து, ரசித்துச் சாப்பிட்டால் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை.

   போவதே இல்லை ஐயா.

   மிக்க நன்றி !

   நீக்கு
 16. பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே! தாங்கள் ரசித்துச் சிரித்தமைக்கு!

   நீக்கு
 17. ஹையோ :) டயட்டிங் பற்றி நினைச்சாலே பகீர்னுது ...ஹா ஹா ரசித்தேன் ..

  பதிலளிநீக்கு