திங்கள், 28 ஏப்ரல், 2014

கலைஞர் ராமனைத் துதித்துப் பாட வேண்டுமாம்!!!!.......?


கலைஞர் அயோத்திக்குச் சென்று, “ஸ்ரீ ராம், ஜெயராம், ஜெய ஜெய ராம்”, என ராமனைப் போற்றிப் பாடி வணங்கித் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டுமாம்............


     இதைச் சொன்னவர் திரு. வினோத் பன்சல் எனும் விஎச்பியின் (விஸ்வ ஹிந்து பரிஷத்) ஊடகப் பிரமுகர்களில் ஒருவர்.  இப்படி, இந்து மதத்தவரை எல்லாம், ஏதோ அவர்கள் கட்சியில் தொண்டர்கள் என்று பாவித்து இது போன்ற ஜோக்குகளை அள்ளி வீசுபவர்கள் வட இந்தியாவெங்கும் ஏராளமாக இருக்கிறார்கள்.  இவர்களுக்கு எல்லாம் ஆரிய திராவிட வித்தியாசமோ, சைவ வைஷ்ணவ வித்தியாசமோ, த்வைத அத்வைத வித்தியாசமோ ஒன்றுமே தெரியாது.  இல்லையேல் தங்களின் சுய லாபத்திற்காகத் தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் நாவையும், செயல்களையும் கட்டுப்படுத்தாமல் போகும் போக்கில் விட்டால், நம் நாடு ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான் போல் மத தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த நாடாகிவிடும்.  இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், இந்துக்கள் அதிகம் வாழும் இடங்களில், இடம் வாங்கி வீடு கட்டக் கூடாது என்பவர்கள், இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும் என்று சொல்பவர்கள், ராமனை அங்கீகரிக்காத, இறைவனாய் காணாத திராவிடர்கள் ராவணனின் தேசமான இலங்கைக்குப் போக வேண்டும் என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.  அதற்கு முன்னோடிதான் இது போன்ற பிரச்சாரங்கள். 

     ராமனை அரசனாக, எந்த விதத்திலும் ராவணனை விட உயர்ந்த அரசனாகக் (தன் தங்கை சூர்ப்பனகையை அவமானப்படுத்தியதற்காக பழி வாங்கவே சீதையைச் சிறையெடுத்தார் என்பதும், சீதையைத் தொடவே இல்லை என்பதும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்) காணவிரும்பாத கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாடு இது.  அப்படிப்பட்டவர்கள், தங்கள் கருத்துக்களைச் சொல்ல வேண்டிய விதத்தில், சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாததால்தான் தனி திராவிட நாட்டிற்காக வாதிக்கும், வள்ளுவனுக்கு சிலையெடுத்த, பெரியாரின் பாசறையில் வளர்ந்த கலைஞருக்கு எதிராகவே இப்படிப்பட்டக் கூச்சல்கள் போடப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன்பு வரை, சர்வ சாதாரணமாக எல்லோராலும் மேடையிலும், பட்டிமன்றங்களிலும் பேசப்பட்டவைதான், இப்போது கலைஞரைப் போன்ற மூத்த திராவிடர் சொல்லியும் விவாதமாக்கப்பட்டிருக்கிறது.  இனியேனும் இந்துக்களில் ஆத்திகர்களும், நாத்திகர்களும் உண்டு என்றும் (பண்டையகாலங்களில் ஆத்திகர்கள் சார்வாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருந்தனர்), ஆத்திகர்களில் ராமனையும், கிருஷ்ணனையும் தெய்வமாகக் காணும் வைஷ்ணவர்களும், சிவன், சக்தி முருகன், பிள்ளையார் போன்றத் தெய்வங்களை வணங்கும் சைவர்களும் உண்டு எனும் உண்மையை நிலை நாட்ட வேண்டும்.  இல்லையேல், “ராம் ராம் என்று கையிலோ, மார்பிலோ, முதுகிலோ, நெற்றியிலோ பச்சைக் குத்தாதவர்கள் இந்துக்களாகக் கருதப்படமாட்டார்கள் என்றும், (இப்போதும் பிரச்சினை வந்துவிட்டால் ஆரியசமாஜம் வழங்கும் மதச் சான்றிதழ்கள் இந்துக்கள், தாங்கள் இந்துக்கள்தான் என்று நிரூபிக்கத் தேவையாம்) அவர்கள் இந்துக்கள் அதிகமாக வாழும் பகுதிக்கோ, கோவில்களுக்கு உள்ளிலோ அனுமதிக்கப்படாமல் போகலாம். மதத் தீவிரவாதம் எந்த மதத்தவருக்கு வந்தாலும் நம் நாடு சீரழிந்துவிடும்.  மத சார்பற்ற இந்தியா என்றென்றும் மத சார்பற்றுத் திகழ, நாம் ஒவ்வொருவரும் நம்மால் இயன்றமட்டும் பேசி, எழுதி, போராடி, அடுத்து வரும் தலைமுறையினர் சமாதானத்துடன் இங்கு வாழ வழி வகை செய்ய வேண்டும்.


படங்கள்:  courtesy கூகுள்

33 கருத்துகள்:

 1. மிகச் சரியான நேரத்தில்
  மிக மிக அருமையாகப் பதிவிடப்பட்ட பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி! ரமணி சார்!

   நீக்கு
 3. வணக்கம்
  சபாஷ்...சரியான கருத்தை சரியான நேரத்தில் மிக நேர்த்தியாக வைத்துள்ளீர்கள்....
  நடுநிலையாக...பாராட்டுக்கள்
  சைவர்களுக்கும்.. வைணவர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது...இதற்கான கருத்தை எழுதினால் மிக விரிவு..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்

  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 6. சிந்திக்க வேண்டிய சிறப்பான நற் கருத்து இப் பகிர்வு பலரையும் சென்றடைய வாழ்த்துக்கள்
  சகோதரா .

  பதிலளிநீக்கு
 7. இந்து என்றால் திருடன் என்று கூறிய தலைவர் தமிழகத்தில் இருந்துகொண்டு மற்ற மதத்தினருடன் வெளிப்படையாகக் கூட்டணி வைத்துக் கொண்டிருப்பது மதச்சார்பின்மையா. இராமன் எந்தக் கல்லூரியில் படித்தான் என்று கூறிய இவர் எந்தக் கல்லூரியில் கற்று முதல்வரானார்.
  இந்து மதத்தைப் பிளவுபடுத்தி அழிக்க வெளியிலிருந்து யாரும் வரவேண்டியதில்லை.
  உங்கள் எண்ணம் நிறைவேறுமா.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபாலன் சார் தங்களுடைய வித்தியாசமான கருத்திற்கு மிக்க நன்றி!

   நீக்கு
 8. நல்ல பதிவு... பல சமயங்களில் இவர்கள் பேசுவதைக் கேட்காமல் இருப்பது மேல்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில நேரங்களில் மௌன்ம் சாதிப்பது முடியாததாகி விடுகின்றது! நண்பர் வேங்கட்! மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு!

   நீக்கு
 9. ரம்ஜானுக்கு குல்லா போட்டு கஞ்சி குடித்துவிட்டு இங்கு வந்து ராமனை கிண்டல் செய்வதுதான் மதசார்பின்மையா ? எல்லா மதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டாமல் ஒரு குறிபிட்ட மதத்தை மட்டும் கிண்டல்செய்வது எப்படி மதசார்பின்மையாகும் ?

  பதிலளிநீக்கு
 10. இந்துமத்தத்தில் உள்ள அனைத்து தவறான விழயங்களும் அனைத்துமதத்திலும் உண்டு . ஆனால் அதை சொல்ல அரசியல்வாதிகளுக்கு தைரியம் இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓட்டிற்காக செய்யப்படும் இதுபொன்ற செயல்களை அரசியல்வாதிகள் அவர்களாகவே நிறுத்தினால்தான் உண்டு! மற்ற மதங்களில், இந்து மதத்தில் காணபடுவதைப் போன்ற சுயநலமிக்க மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் இருப்பதாகத் தெரியவில்லை. அதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.

   மிக்க நன்றி தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும், ராஜா அவர்களே!

   நீக்கு
 11. சரியான கருத்து நண்பரே
  அதுவும் மிகச் சரியான நேரத்தில்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 12. நல்ல கருத்துக்கள்! சொல்லப்பட்ட முறையும் நன்று!

  பதிலளிநீக்கு
 13. இந்த பேச்சுக்கு கலைஞர் சரியான பதிலடி தருவார் !
  த ம 7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியா சொல்கின்றீர்கள்? பகவான் ஜி?!! உங்கள் பதிலே பதிலடியோ?!! மிக்க நன்றி மகுடம் ஏற்றியதற்கு!

   நீக்கு
 14. இந்து என்றால் திருடன் என்று கூறிய தலைவர்

  He didn't say this.. he quoted this from old epic book ..

  பதிலளிநீக்கு
 15. இந்து என்றால் திருடன் என்று கூறிய தலைவர்

  He didnt say this.. he quoted this from one of the old books..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லோருடைய குழப்பத்தையும் தீர்த்ததற்கு மிக்க நன்றி! கார்த்திக் ராம் அவர்களே! தங்கள் முதல் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி!

   நீக்கு
  2. கருணாநிதி என்றால் மக்களின் கருணையுடன் தன் குடும்பத்திற்கு நிதி சேர்ப்பவர் என்று நானும் எங்கோ படித்தேன்.
   ந்ன்றி,
   கோபாலன்

   நீக்கு
 16. என்ன சொல்ல, சைவத்தைத் தான் வைணவம் விழுங்கி விட்டதே! ஆனால், விழுங்கியது ஜீரணிக்க முடியாத ஒன்று என்பதை காலம்தான் காட்டிக் கொடுக்க வேண்டும்!

  மிக்க நன்றி ரூபன் தம்பி!

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு
 18. இவர் மாதிரி இன்னும் நிறைய பேர் பேசினால் ரொம்ப நல்லது தி.மு.க விற்கு..
  அது வெகுண்டு எழும், நிமிர்ந்து நிற்கும்

  பதிலளிநீக்கு