சனி, 19 ஆகஸ்ட், 2017

எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 9

இன்று மாலை நான் கோடம்பாக்கத்திலிருந்து தரமணிக்குப் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருந்த சமயத்தில்தான் இன்று உலகப் புகைப்பட தினம் என்று அறிய நேர்ந்தது. வீட்டுக்குச் சென்று இன்று புகைப்படங்களைப் பகிரலாம் என்று நினைத்த சமயம், அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர, வெங்கட்ஜியின் பதிவு ஏன் வரவில்லை என்று நினைத்துக் கொண்டே அலைபேசியில் மெயில் பார்த்தால் வெங்கட்ஜியின் புகைப்படப் பதிவு! மிக மிக அழகான படங்கள். வெங்கட்ஜி மற்றும் தோழி கீதாமதிவாணன் அவர்களின் படங்கள் போல் இருக்காது என்றாலும் எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு என்பதால் இன்றைய தினத்தில் இங்குப் பகிர்கின்றேன்.  


இந்த இரு படங்களும் என்ன படங்கள் என்று சொல்ல முடிகிறதா ஊகித்துப் பாருங்களேன். பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


நடைப்பயிற்சி செல்லும் போது என் செல்லம் கண்ணழகியைப் பார்த்துக் குரைக்கத் தயராக இருக்கும் செல்லம்


மரத்தின் அடியில்தான் வேர் இருக்கும்...இங்கு பாருங்கள் மரத்தின் நடுவில் கோயிலின் கூரையில் வேர் விட்டு மரமாகப் பார்க்கவே வியப்பாக இருந்ததால் உடனே க்ளிக்கினேன்!
இவ்விரண்டு படங்களிலும் இருக்கும் பூச்சியும் ஒன்றே! முதலில் உள்ள படம் தானாகவே  ஃப்ளாஷ் இயங்கி எடுத்தது. இரண்டாவது படம் நான் ஃப்ளாஷ் பட்டனை எழும்பவிடாமல் அழுத்திக் கொண்டு ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்த படம். 

எருக்கம்பூவில் வண்டு


  
இந்தக் காளானைப் பாருங்கள்! அடுக்கடுக்காகப் பூ போன்று!! என் மாமியார் வீட்டுத் தோட்டத்தில்..



வித்தியாசமான உருண்டை வடிவில் பூ தானே இது? இல்லை காயா?  முதன்முறையாகப் பார்க்கிறேன். ! தொட்டுப்பார்க்க முடியவில்லை. மரத்தில் உயரத்தில் இருந்தது.  ஜூம் பண்ணி எடுத்தேன். இது என்ன என்று அறிந்தவர்கள் சொல்லலாம்!




தாமதமாகிவிட்டதால், எல்லாவற்றிற்கும் வழக்கம் போல் கருத்துகள் எழுத நேரம் இல்லை....

------கீதா

38 கருத்துகள்:

  1. முதல் கேள்விக்கு பதில் தெரியவில்லை! எ.ப.மூ?

    இரண்டாவது கேள்விக்கு பதில் ஸ்பீக்கர் பூ?

    ரசனையுடன் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அது ஸ்பீக்கர் என்று சொல்லப்படும் ஊமத்தம் பூ இல்லை..மிகச்க் சிறியதாக இருக்கிறது

      நீக்கு
  2. பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழ் இளங்கோ சகோ! தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  3. ஸ்ரீராம் முதல் கேள்விக்குப் பதில் இறுதியில் சொல்லுகிறேன்..யாரேனும் கண்டுபிடிக்கிறார்களா என்று பார்ப்போம்...

    இரண்டாவது கேள்வி...ஓ நீங்கள் கீழுள்ள படத்தை எடுத்துக் கொண்டீர்கள் போலும்...மேலுள்ள படம். உருண்டையாக இருக்கிறதே அது மரத்தில் இருந்தது...அது என்ன என்று தெரியவில்லை...அதைத்தான் கேட்டேன்...

    மிக்க நன்றி ஸ்ரீராம்...ரசித்தமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மொபைலில் பார்த்ததைவிட, கணினியில் படங்கள் இன்னும் பெரிதாக, தெளிவாக, அழகாக... மதுரைத்தமிழன் சொல்லியிருப்பது சரி என்று இங்கு வந்து தெரிகிறது. தம வாக்குப்போட வந்தேன்.

      நீக்கு
    2. அட! இனி படங்களை இதிலேயே பாருங்க ஸ்ரீராம்...வடை போச்சே!!!தம க்கு நன்றி ஸ்ரீராம். எங்களுக்குப் பொட்டியே தெரியலை!

      நீக்கு
  4. காபி கப்பாகா இருக்கும் அல்லது வீட்டில் உள்ள கிணறாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதுரை கை கொடுங்க! கரெக்ட்! காஃபி கப்! நான் ப்ளாக் காஃபி குடித்துவிட்டு அடியில் இருந்தததை சுழற்றி சுழற்றி சரிக்க ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு டிசைன், மழை பெய்து முடிந்ததும் ஆற்றின் கரையில் கொஞ்சமாக மணல் இருக்கும் பகுதியில்டி பல டிசைன்கள் வருமே அது போல வரவும் அழகாக இருக்கவே எடுத்துப் பார்ப்போம் என்று எடுத்த போது ஏதோ குகையில் இருப்பது போல் அகழ்வாராய்ச்சி போல் இருக்கவே சேமித்துவிட்டேன்.

      சூப்பர் மதுரை....பொக்கே உங்களுக்கு! ...நீங்க என்ன கேப்பீங்கனு தெரியும்....ஹிஹிஹிஹி..

      அது சரி கிணறு எப்படித் தோணிச்சு??!!

      மிக்க நன்றி மதுரை!!!

      நீக்கு
  5. புகைப்படங்கள் நன்றாக வந்து இருக்கின்றன... ஒரு வேளை நீங்கள் போய் நயந்தாராவை போட்டோ எடுத்தால் இன்னும் இளமையாக ஆகிவிடுவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா என்ன ஆசை பாரு!!!!வேண்டாம் நான் எடுக்கப் போய் இன்னும் வயசானவங்க மாதிரி வந்துருச்சுனா??!பேய் மாதிரி ஆயிருச்சுனா!!!என் கேமராவுல லென்ஸ் எரர் வந்துருச்சு!! ரிப்பேர் பண்ணினாதான் இனி படம் எடுக்க முடியும்.

      அது சரி அனுஷ்கா?

      அதுக்கெல்லாம் நம்ம வெங்கஜியோட கேமரா அல்லது கீதாமதிவாணன் அவங்களோட கேமரா சூப்பரா வொர்கவுட் ஆகும்..

      நீக்கு
  6. பூவும் மரமும் நாயும் பூச்சியும் மூன்றாம் கண் வழியே அழகோ அழகு :)
    புகைப் பட புதிரைக் கண்டுபிடிக்க முடியவில்லை :)
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி பகவான் ஜி!ரசித்தமைக்கு!! புகைப்படப் புதிர் மதுரை கண்டுபிடித்துவிட்டார்!

      நீக்கு
  7. முதல் படம் ஜொள்ள' வந்தேன் அதற்குள் மதுரைத் தமிழன் முந்தி விட்டார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா கில்லர்ஜி நீங்கதான் மொத ஆளா வருவீங்கனு நினைச்சேன்....வடை போச்சு..ஸ்ரீராமும் சொல்லியிருப்பார் மொபைலில் பார்த்ததால் போச்சு...

      அந்த உருண்டையான பூ என்னனு தெரியுதான்..

      கோமதிக்கா இல்லை கீதா சாம்பசிவம் அக்கா அல்லது நெல்லை வந்தாங்கனா சொல்லுவாக...ஏஞ்சல் இப்ப லீவுல ஸோ...

      மிக்க நன்றி கில்லர்ஜி

      நீக்கு
  8. //அழகான படங்கள் பகிரும் வெங்கட்ஜி, தோழி கீதாமதிவாணன், அனு, கோமதியக்கா, எங்கள்ப்ளாக் எல்லோரும் நினைவுக்கு வர//

    கீதா , என்னையும் வெங்கட், கீதமஞ்சரி, அனு மாதிரி சொன்ன உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றி.
    நான் உறவினர் வீட்டுக்கும், கோயிலுக்கும் காலையில் போய் இரவுதான் வீட்டுக்கு வந்தேன்.
    இணையம் பக்கம் வரவில்லை.
    ஐபோன் மாலை பிரதோஷ காட்சிகளை எடுத்து முக நூலில் போட்ட பின் வேலை செய்ய வில்லை.
    போன் சரிசெய்ய வேண்டும். வாட்ஸ் அப் செய்திகள் எதுவும் பார்க்க முடியவில்லை.
    இரவு கணினியில் வெங்கட் பதிவு மூலம் உலக புகைப்படதினம் அறிந்து அவசர அவசரமாய் படங்களை போட்டு விட்டு உறங்க போய் விட்டேன்.

    உங்கள் மூன்றாவது கண் அருமையாக படம் பிடித்து இருக்கிறது.
    ஒவ்வொரு படமும் வெகு துல்லியம், அழகு.

    கீதமஞ்சரி சொல்லி விடுவார் உருண்டை பூ பற்றி.
    நான் பார்த்த மாதிரி நினைவுக்கு வரவில்லை.
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அக்கா ஸாரி அக்கா...எப்படியோ இதற்குப் பதில் விட்டுப் போயிருக்கிறது...

      மிக்க நன்றி அக்கா ரசித்தமைக்கு...ஆமாம் அக்கா உங்கள் படமும் மிக மிக அழகாக இருந்தன...அந்தத் தட்டு போன்ற இலைகள் மிக மிக அழகு...உங்கள் பகிர்தலில்...
      சரியாகிவிட்டதா எல்லாம்...

      கீதாமதிவாணன் பார்த்தால் சொல்லிவிடுவார்தான்...இங்கிருக்கும் பல மலர்கள் பார்த்திருந்தாலும் எல்லாமே காட்டுப் பூக்கள் என்பதால் பெயர் தெரிவதில்லை. மிக்க நன்றி கோமதிக்கா...


      நீக்கு
  9. எல்லாப் படங்களும் பிடித்திருந்தன. (பொதுவா ரிபீட் செய்வதைத் தவிர்த்து வேறு ஒரு படம் போட்டிருக்கலாம்). இள மஞ்சளாக (உள்ளில் கொஞ்சம் சிவப்பாக) இருப்பதை, 'லீலாவதி' என்று தாய்லாந்தில் அழைக்கிறார்கள். அவர்கள் தலையில் ஒரு பூவைச் செருகியிருப்பார்கள்.

    முதல் படம், முதலில் ஏதேனும் கண்ணோ என்று தோன்றியது. அப்புறம், நெய் காய்ச்சின கசண்டோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நெல்லைத் தமிழன்!! இவை எல்லாமே இப்போது சமீபத்தில் வாக்கிங்க் போகும் போது எடுத்த படங்கள். நீங்கள் முன்பு லீலாவதி என்று சொல்லப்படுவதைப் பற்றி எழுதியிருந்தீர்கள். ஆனால் அதுவும் இதுவும் ஒரே போன்று இல்லை செடி..இளம் மஞ்சள் உள்ளே சிவப்பு முன்பு எடுத்த பூ பெரிது...இப்போது எடுத்திருக்கும் பூ மிகவும் சிறிதாக இருந்தது. செடியும் வித்தியாசமாக இருக்கிறது. வாக்கிங்க் போகும் இடத்தில் இருப்பவையே.... முதல் இரண்டைத் தவிர அது காஃபீ நான் ப்ளாக் காஃபி குடித்துவிட்டு கப்பில் இருந்ததைச் சரித்து சும்மா விளையாடிக் கொண்டிருந்த போது அதில் தோன்றிய டிசைனைக் கேமரா கண்களில் பார்த்த போது அழகாக வித்தியாசமாக இருக்கவே அப்படியே எடுத்துவிட்டேன்...

      மிக்க நன்றி நெல்லைத்தமிழன்...

      நீக்கு
    2. ரிப்பீட் ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்...இது அக்கருத்தில் விடுபட்டுவிட்டது

      மிக்க நன்றி நெல்லை

      நீக்கு
  10. முதலிரண்டு படம் காஃபி டம்பளர்ல மிச்சமிருக்கும் டிகாஷன்னு நினைக்குறேன். சரியா தப்பான்னு சொல்லி வைங்க. நான் ஷாப்பிங்க் முடிச்சுட்டு வந்து பார்க்குறேண். விடை சரியா இருந்தா அதே டம்ப்ளர்ல திக்கா, டபுள் ஸ்ட்ராங்கா போட்டு கொடுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ராஜி!! கட்டன் காஃபி அதாவது பால் சேர்க்காத காஃபி!!! சரிதான்.....ஷாப்பிங்க் முடிஞ்சுருச்சா டயர்டா இருக்குமே!!! இதோ டபுள் ஸ்ட்ராங்கா காஃபி உங்களுக்கு காஃபிடே காஃபி இங்கருந்து அனுப்பினா ஆறிப் போயிடும் ஸோ உங்க ஊருல என் பேரைச் சொல்லி வாங்கிக்குங்க ஹிஹிஹிஹி....

      நீக்கு
  11. எல்லா படங்களும் சூப்பர் கீதாக்கா....


    இரண்டாவது படம் டிகாசன் டம்பளர் என நானும் கண்டுபுடுச்சுடேன்...அதுல எனக்கு குதிரை ..குதிரையாய் தெரியுது...


    கண்ணழகி, வேர்விட்ட மரம்....அடுக்கு அடுக்கான மலர்கள் எல்லாம் அருமை...


    ம்ம்ம்...என் படங்களையும் பாராட்டியதற்கு நன்றிக்கா...

    நமக்கு பிடித்த விசயத்தை செய்யும் போது போதும் என்ற எண்ணமே வருவது இல்லை...அதில் போட்டோ எடுப்பதும் ஒன்று...சோ நிறைய எடுங்க..சந்தோசமா இருங்க..



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அனு!! காஃபியேதான்....முதல் படம் இந்தியா படம் போல வும் இரண்டாவது எனக்கும் குதிரை தான் தோன்றியது உங்களுக்குத் தோன்றுவது போல...

      யெஸ் நமக்குப் பிடிச்ச விசயத்தை செய்யு,ம் போது போதும்னே தோனாது உண்மை...நிறைய எடுக்கறேன்.இப்ப கேமரா லென்ஸ் எரர் வந்துருக்கு பாக்கணும்...

      மிக்க நன்றி அனு ரசித்தமைக்கு

      நீக்கு
  12. எல்லாப் படங்களும் அழகு! காஃபி அல்லது தேநீர் எனச் சொல்ல நினைத்திருந்தேன். இங்கே விடை சொல்லிட்டாங்க! :) நான் அநேகமாய்த் தேநீர் தான் என்றே எண்ணினேன். எல்லாமே அழகான அருமையான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கீதாக்கா...காஃபி அதுவும் பால் சேர்க்காத ப்ளாக் காஃபி!! ரசித்தமைக்கு மிக்க நன்றி அக்கா

      நீக்கு
  13. போன வாரம் ரொம்ப பிசி. பிளாக் பக்கம் வரமுடியவில்லை .professional photographer ஆக இல்லாவிட்டாலும் படங்கள் எல்லாமே அழகு .காஃபியா அது ? நம்ப முடியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருணா ரசித்தமைக்கு...

      ஆமாம் அது காஃபி ப்ளாக் காஃபி....

      நீக்கு
  14. பதில்கள்
    1. மிக்க நன்றி கோவிந்த ராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் ரசித்தமைக்கும்

      நீக்கு
  15. அனைத்தும் அழகு.. கண்ணுக்கு விருந்து..
    அருமையான படங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரைசெல்வராஜு சகோ ரசித்தமைக்கும் கருத்திற்கும்

      நீக்கு
  16. ella padamum attakasam. ! ellaarum ipidi asathureengkaley . supero super :) !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தேனு!!! உங்கள் படங்களும் இப்போது ரொம்பவே அசத்துகின்றன....மிக்க நன்றி தோழி ரசித்தமைக்கு

      நீக்கு
  17. உள்ளம் கவர் நிழற் படங்கள்
    பல செய்திகளைப் பகிருகிறதே!


    தாங்கள் https://seebooks4u.blogspot.com/2017/08/blog-post.html இல் வெளியிட்டுள்ள மின்நூல்களை 10,000,000 வாசகர்களுக்குப் பகிர்ந்து உதவுங்கள். என்னங்க... இந்த உதவியைத் தானே கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு

  18. பூக்களே! சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்து விட்டா"ல்".... அவள் வந்து விட்டா"ல்"... உங்களுக்கு ஓய்வு கிடைக்காது ஓயாமல் ஷூட் செய்வா(ள்).

    அழகு.

    கோ

    பதிலளிநீக்கு