திங்கள், 14 ஆகஸ்ட், 2017

வெற்றிப் பிள்ளையார்


“ஹலோ! நண்பா! குட்மார்னிங்க்! உன்னை பார்த்து 2 மாசம் ஆச்சு! சரி, இந்த 2 மாசத்துல என்ன நியூஸ்? 2 மாசம் முன்னாடி ஒரு சவால் கொடுத்தேனே என்னாச்சு? ஹும் நீ எங்கப் பேசப் போற. மர்மச் சிரிப்பு!” என்று வீட்டினருகில், அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் நடைபாதை பிள்ளையாரை பார்த்து பேசிவிட்டு இன்று ஞாயிறு என்பதால் வெளியில் வந்து அரசமரத்தடியின் திண்டில் அமர்ந்தேன். இதமான காற்று! தினமும் ஹலோ சொல்லி ஒரு வணக்கம் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம். அப்ளிக்கேஷன் போடும் பழக்கமோ, உச்சாடனமோ சுத்தமாகக் கிடையாது. ஆத்திகனா நான்? இல்லை. ஆனால் நான் நாத்திகன் அல்ல என்பதையும் உறுதியாகச் சொல்லுவேன். அனைத்தையும் ரசிக்கும் பழக்கம் எனக்கு. அதென்ன சவால் என்று கேட்கிறீர்களா? இருங்கள், அதற்கு முன் என் நண்பரைப் பற்றிச் சொல்ல வேண்டாமா!

நடைபாதை பிள்ளையார் என்றதும், சாதாரணமானவர் என்று நினைத்து விடாதீர்கள்! இப்போதெல்லாம் நண்பரைப் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது! இப்போது அவர் பணக்காரர்! நானோ குசேலன்! நண்பரை பற்றி உங்களிடம் முன்னர் சொல்லியிருக்கிறேனா? தெரியவில்லை. இப்போது சொல்கிறேன்.

எனக்கும் நண்பருக்கும் உள்ள நட்புறவு, நடைபாதையில் உள்ள அரச மரத்தடியில் சிறிய கல்லின் மீது, யாரோ கட்டிவிட்ட ஓர் அழுக்குத் துணியுடன் அவர் வீற்றிருந்த காலம் தொட்டு, நெற்றியில் குட்டிக் கொண்டால் புத்தி தெளியும் என்று சொல்லப்பட்ட வயதிலிருந்து பழக்கம்.  வீட்டில் கிடைத்த அடியிலிருந்து தப்பிக்க, அவர் பின்னால் ஒளிந்து கொண்டு, டென்ஷனில் வரும் ‘ஒன்றினை’ கஷ்டப்பட்டு, நெளிந்து, டிராயரைப் பிடித்து அடக்கிக் கொண்டு, காட்டிக் கொடுத்துவிடாதே என்று அவருடன் டீல் போட்ட காலம் அது! காற்றடித்தால் அவர் பர்த்டே பேபி! ‘ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சொல்லி, துண்டைத் தேடிக் கட்டிவிடுவேன். இல்லை என்றால் வீட்டிலிருந்து ஒரு துண்டைக் கிழித்துக் கொண்டு வந்து கட்டி விடுவேன். ஏனோ எனக்கு என் நண்பரைத் துண்டில்லாமல் பார்க்கப் பிடிக்கவில்லை. அவர் மழையில் நனைந்தால் வீட்டிலிருந்து மூங்கில் தட்டினைக் கொண்டுவந்து அவர் தலையில் கவிழ்த்து வைத்ததுமுண்டு.

பருவ வயதில் என் ரகசியங்களை அவரிடம் தினமும் பகிர்ந்து கொள்வேன்.  அவர் பேச்சுலராக இருந்தால் என்ன!? எத்தனை வருடங்களாகியும் என் மனதில் இருக்கும் என் காதலைப் பற்றி இப்போதும் கூட அவரிடம் பகிர்ந்து கொள்வதுண்டு. பக்தக்கோடிகள் அதிகமாக, பிள்ளையார் வளர்ந்தார். போவோர் வருவோர் இனாமாகத் தோப்புக்கரணம் போட்டுவிட்டு, சூடன் கொளுத்திக் கும்பிட்டுச் சென்ற காலம் எல்லாம் 6 வருடங்கள் முன்னால் வரைதான்.

 6 வருடங்கள் முன்பு ஒரு பெரிய செல்வந்தர் வந்து நண்பரிடம் என்ன டீல் போட்டாரோ தெரியவில்லை, ஏழையாக இருந்த நண்பர் திடீரென்று பணக்காரர் ஆனார். கறுப்புப் பணம் என்று பேசிக் கொண்டனர். என் நண்பருக்கென்ன? மாட்டிக்கவா போகிறார் என்று சிரித்துக் கொண்டேன். பாலைத் தன் துதிக்கையால் குடித்தார் என்று புகழ் பெற்றார்! அவருக்கும் விளம்பரம் தேவை போலும்! பட்டுபீதாம்பரம், கவசம், வைரம் என்று ஜொலிக்கத் தொடங்கினார். இதற்கெல்லாம் ஜிஎஸ்டி, வருமான வரி உண்டா? தெரியவில்லை! கும்பாபிஷேகம் நடைபெறும் அளவு வளர்ந்து விட்டார்.  அவரது மவுசு கூடிப்போனது.  அவரது வாகனமான மௌசும்தான்.  பின்னே மௌசும் இப்போது தங்கத்தில் ஜொலிக்கிறாரே!

காரில் வரும் பக்தகோடிக:ளுக்குப் பார்க்கிங்க் பிரச்சனை ஏற்படத் தொடங்கியது. பிள்ளையார் சதுர்த்திக்கு 10 நாட்கள் திருவிழா! ட்ராஃபிக் டைவெர்ஷன்! தேர்வு சமயங்களில் மாணவ, மாணவிகள், பெற்றோரின் முற்றுகை என்று ஜெகஜோதி ஆனார். வெற்றிப் பிள்ளையார் என்ற பெயர் சூட்டு விழா கூட நடந்து இப்போது நேம் போர்டுடன்! டிக்கெட் கவுண்டர், பிரசாதம், கணினி பில்லிங்க் என்று அவரை பார்க்க ரூபாய் கட்டி அப்பாயின்ட்மென்ட் வாங்கும் அளவு, அதுவும் ஆன்லைன் புக்கிங்க் என்று உலகம் முழுவதும் தான் இருக்கும் இடத்திலிருந்தே இணையம் வழி சுற்றி ஹைடெக்காக ஜெகத்ரஷகன் என்று புகழ் பெற்றுவிட்டார்! இருந்த இடத்திலிருந்தே அவர் அம்மை அப்பனிடம் மாங்கனி பெற்ற கதை நினைவுக்கு வருகிறதோ? அவர் மட்டும்தான் வளர்ந்தாரா? நானும் வளர்ந்தேன். சிறு வயதில் குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் போட்டதாலோ என்னவோ புத்தி தெளிந்து அவருடன் டீல் போடும் பழக்கமெல்லாம் மலையேறி பல வருடங்கள் ஆகிவிட்டது. எனக்கு அவர் அதே நண்பர்தான்! அதே மர்மப் புன்னகையுடன்!

6 மாதங்களுக்கு முன்பு, மாநகராட்சி திகாரிகள் வந்து, நடைபாதையில் நடப்பவர்களுக்கு நடக்க முடியாமல் போக்குவரத்து நெரிசல் என்பதால் நண்பரை ஜாகை மாற்றச் சொன்னார்கள். விடுவார்களா பக்த கோடிகள்! திரளாகக் கூடி ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என்று சில கட்சிகளும் புகுந்து ஆதரவைக் கூட்டி நண்பர் இருந்த இடத்தை விட்டு அசையவில்லையே!  நண்பர் பெரிய ஆள்தான் என்று நினைத்துக் கொண்டேன்!

என் குறும்பு எண்ணம் சும்மா இருக்குமா? “பல சாதிக்காரங்க கூடி ஒத்துமையா உனக்காகப் போராடினாங்களே! சாதி அரசியலைத் தமிழகத்துலிருந்து வேரோடு அழிச்சுக் காட்டேன். 108 தேங்காய் உடைக்கிறேன் என்று டீல் போடும் பழக்கமே இல்லாத நான் டீல் போட்டேன். என்ன சிரிப்பு? நடக்காத விஷயத்துக்கு 108 தேங்காய்னா? அந்த தைரியம்தான்!

இரண்டு மாதங்களில் நிறைய மாற்றங்கள்!  கோவில் விரிவாக்கப்படுகிறது. தேங்காய் உடைப்பதற்கு ஒரு பெரிய தொட்டி கட்டப்பட்டிருக்கிறது. அரசமரக் காற்றைச் சுகித்துக் கொண்டிருந்த நான் நேரமாகிவிட்டதென்று வீட்டிற்குச் செல்ல எழுந்தால் எம் எஸ்ஸின் முதாக்கராத்த மோதகம் கட்டிப் போட்டது. பாடலில் லயித்து, முடிந்ததும் எழுந்து பூக்காரியின் அருகில் விட்ட செருப்பினை எடுத்த போது யாசிப்பவர்களை நோட்டமிட்டேன். யாசிப்பவர்களுக்கு நான் இதுவரை ஒரு ரூபாய் கூடப் போட்டதில்லை. பத்திரமறிந்துப் பிச்சையிடு என்ற எண்ணம்தான் காரணம். இங்கிருந்தவர்கள் வேலை செய்து பிழைக்க முடியாத அளவு மாற்றுத் திறனாளிகளோ, மனம் பிறழ்ந்தவர்களோ கிடையாது!

பழையன கழிதலும், புதியன புகுதலும் போல ஒரு சிலர் காணாமல் போயிருந்தனர்.  ஒரு சிலர் புதியவர்களாக இருந்தனர். புதியவர்களில் ஒருவரை எங்கேயோ பார்த்தது போன்று இருந்தது. அந்தக் கூட்டத்தில் மிகவும் வித்தியாசமாக, யாரிடமும் யாசிக்காமல் எதையோ பறிகொடுத்தது போன்று கோயிலையே வெறித்தபடி இருந்தார்.  நான் ஆராய்வதைப் பார்த்த பூக்காரி 2 மாதக் கதையை கூறத் தொடங்கினாள். 

கோயிலை அப்புறப்படுத்த வந்த மாநகராட்சியின் இரு அதிகாரிகளின் மகள்களுக்கும் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்ததாம் சாமிகுற்றமாம். அதை உணர்ந்த அவர்கள் இப்போது   நண்பரின் பக்தகோடிகளில், எல்லாவற்றிற்கும் முன் வரிசையில் நிற்பவர்களாக மாறியிருப்பதாகச் சொன்னாள். அது அவர்களது நம்பிக்கை.

பூக்காரி அந்தப் புதியவரைப் பற்றிச் சொன்னதும் அவர் யாரென்று எனக்குப் புரிந்தது. ஏதோ ஒரு கம்பெனி நடத்தி ஊழலில் மாட்டிக் கொண்டு இவர் செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்கும் நிலையில் பணம் எல்லாம் இழந்து போலீஸ் கேஸ் என்று ஆகிட, மனைவியும், உறவினர்களும் கிடைத்ததை எல்லாம் அமுக்கிக் கொண்டு பிறந்தகம் சென்று டைவேர்ஸும் அப்ளை செய்துவிட இவர் மனமுடைந்ததாக ஏதோ ஒரு பேப்பரில் சிறிய செய்தியாக வாசித்த நினைவு.

பூக்காரி தொடர்ந்தாள். “இப்படியா புருஷங்காரனை நடுத்தெருல வுட்டுட்டுப் போவா? இவலாம் பொம்பள ப்பு’!  கோயிலு ஐயருதான் இவுருக்கு ப்ரசாதம் கொடுப்பாரு.  இவுரு செல சமயம் வாங்கிக்குவாரு.  செல சமயம் இந்தா இப்படித்தான் பித்துப் புடிச்சாபுல உக்காந்துருப்பாரு. ஹும்! என்ன பாவம் செஞ்சாரோ இவுரு. இந்தப் பிள்ளையார்தான் ஏதாச்சும் வழி காட்டணும்.” பாவ புண்ணியங்கள், முற்பிறப்பு, இப்பிறப்பு ம்ம்ம்ம்..இந்நொடியில் வாழும் எனக்குப் பெருமூச்சு வந்தது! அந்தப் புதியவரை நினைத்து மனது வேதனையுற்றது.

பூக்காரி சொன்ன வார்த்தைகள் என் மனதில் ஓடியது. “அப்புறம் ஏதோ ஒரு சமூகச் சேவையாம், மூணு பேரு வந்து இங்க இருந்த சிலதுங்கள கூட்டர வேலை, தோட்ட வேலைன்னு இட்டுகினு போயிருச்சுங்க. இவுருக்கும் யாராச்சும் வேலை கொடுத்தா நல்லாருக்கும்.நாளை, என் பாஸிடம், புதியவருக்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று கேட்க வேண்டும். மனம் உற்சாகமடைந்தது. நல்லது செய்யும் எண்ணம் வந்து விட்டால் நமது மனதில் எப்படி ஒரு இனம் புரியாத மகிழ்வுணர்வு தொற்றிக் கொண்டு விடுகிறது! நண்பரைத் திரும்பிப் பார்த்தேன்! அப்போதும் அவரிடம் அதே மர்மப் புன்னகை! அதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

----கீதா

இது ஒரு மீள் பதிவு. வலைப்பூ தொடங்கி எழுதத் தெரியாத காலகட்டத்தில் எழுதியது. இப்போது நிறைய மாற்றங்களுடன்! ஓல்ட் வைன் இன் ந்யூ பாட்டில் என்பது போல!!! 


58 கருத்துகள்:

  1. மீள்பதிவு நெஞ்சில் நீங்காத பதிவு த ம 1

    பதிலளிநீக்கு
  2. ஓல்ட் வைன் மிக சுவையாக இருக்கிறது கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா மிக்க நன்றி மதுரை சகோ!!! சுவைத்தமைக்கு! இதை எழுதும் போது உங்களை நினைத்துக் கொண்டேதான் எழுதினேன்!! ஹிஹிஹிஹி...

      நீக்கு
  3. பதில்கள்
    1. த ம வாக்கிற்கும்மிக்க நன்றி மதுரை சகோ!!

      நீக்கு

    2. நான் பள்ளிக்கு செல்லும் வழியில் மதுரை ரயில்வேகாலனியில் டிவிசனல் ஆபிஸுக்கு அருகில் ஒரு கோயில் இருந்தது. அந்த சாமியிடம் நானும் உங்களை போல பேசியதுண்டு ஆனால் அது ரயில்வே காலனிக்குள் இருந்ததால் இந்த கோவில் போல பிரபலம் அடையவில்லை. இல்லையென்றால் மிகப் பேமஸாக ஆகி இருக்கும்.. அந்த கோயிலை கடக்கும் பொது அந்த குருக்கள் பூஜை செய்யும் போது சொல்லம் இந்த வரிகள் இன்னும்மனதில் நிற்கின்றன

      சாம்ராஜ்யம் பூஜ்யம் விஷ்னு பரமேஸ்வர ராஜ்யம் ஓம்!

      நீக்கு
    3. ம்ம்ம் யாராவது பணக்காரர் கண்ணுல பட்டிருந்தார்னா...இன்னிக்கு நீங்க இருக்கற இடம் வரைக்கும் ஃபேமஸ் ஆகியிருப்பாரு...

      //சாம்ராஜ்யம் பூஜ்யம் விஷ்னு பரமேஸ்வர ராஜ்யம் ஓம்!// ஹாஹாஹாஹாஹா.அட இந்த மந்திரம் கூட நலலருக்கே.செம மந்திரம்பா....இது உங்க உடான்ஸ்தானே!!!

      நீக்கு
    4. ஹான் மதுரை தமிழன் நான் பிள்ளையாருடன் பேசுவது வழக்கம் என்றாலும் இது கதைதான். பொதுவாக ஒரு கோயில் டக்கென்று எப்படி ஃபேமஸ் ஆகிறது என்ற சில நிகழ்வுகளை வைத்து கதையாகக் கற்பனையில் எழுதியதுதான்...

      நீக்கு

    5. உடான்ஸ் இல்லை உண்மையாகத்தான் அந்த கோயில் குருக்கள் பூஜை பண்ணும் போது சொல்லும் மந்திரத்தில் இந்த வரிகள் வரும்

      நீக்கு
    6. ஓ! புதுசா இருக்கே மதுரை!! இந்த மாதிரி கேட்டதே இல்லையே! ஒரு வேளை நான் அர்ச்சகர் சொல்லும் மந்திரங்களை எல்லாம் கவனிக்கும் பழக்கம் இல்லாததால் இருக்கலாம்...ஏனென்றால் நண்பருடன் பேசுவதிலேயே கவனம் எல்லாம் போயிடுமே!!

      எனக்கு நாலெட்ஜ் ரொம்ப கம்மி..ஹிஹிஹி..ஸோ இந்த மந்திரம் பற்றி ஓவர் டு கீதா சாம்பசிவம் அக்கா.. இந்த விஷயங்கள் எல்லாம் அவங்கதான் சொல்லுவாங்க...

      நீக்கு
  4. அருமை. பிள்ளையார் கடவுள் அல்ல. நண்பர்தான்! மனா ஓட்டங்களும், சம்பவங்களும் இயல்பு, அருமை.

    தம மூன்றாம் வாக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ் ஸ்ரீராம்!! பிள்ளையார் நண்பரை போலத்தான் பார்ப்பேன்!! ரொம்பவே ரசிப்பதும் வழக்கம் அது போலவே அவரது தம்பியையும்!! ரொம்பப் பிடிக்கும்!! மிக்க நன்றி ஸ்ரீராம் கருத்திற்கு!

      நீக்கு
  5. பதில்கள்
    1. ஹாஹாஹா மிக்க நன்றி டிடி!! நடந்தால் எல்லோருக்குமே நல்லதுதானே!!

      நீக்கு
  6. என்னது... எங்க பெரியப்பா பேச்சுலரா ? யாரு சொன்னது... சித்தி, புத்தி'னு ரெண்டு பெரியம்மா இருக்காங்களே தெரியாதோ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா...அதெல்லாம் வடக்கே!! தெக்க அவரு பேச்சுலர்தான்!! அப்ப நீங்க வடக்கா தெக்கா கில்லர்ஜி??!!! ஹாஹாஹா

      நீக்கு
  7. எனக்கும் என் பிள்ளைகளுக்கும் - ஏன்?.. என் பேத்திக்கும் கூட
    பிள்ளையார் தான் முதல் நண்பன்..

    கலகலப்பான பதிவு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜு சகோ! அட பிள்ளையார் எல்லாருக்குமே நண்பர்தான்!! எல்லோரையும் மகிழ்விக்கும் நண்பர் இல்லையா...மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  8. இட்லி பழசு என்றாலும் இட்லி உப்புமா அருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா மிக்க நன்றி கோவிந்தராஜு ஐயா! தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  9. சித்தி, புத்தி, சேர்ந்தால் சுபம், லாபம், சந்தோஷம்! ஆகவே பிள்ளையாரை வணங்கினால் நமக்குக் கிட்டுவது சித்தியும், புத்தியும் இவை சேர்ந்தால் வரும் சுபம், லாபம் மற்றும் சந்தோஷமுமே! அதைப் பெண்ணாக உருவகப்படுத்தி சித்தி, புத்தி பிள்ளையாரின் மனைவி என்றும் சுபம், லாபம், பிள்ளைகள் என்றும் சந்தோஷம், பெண்ணாகவும் சொல்லப்படுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யெஸ்!! அக்கா! இப்படியான விளக்கம் கேட்டிருக்கிறேன். மீண்டும் இங்கு சொல்லியமைக்கு மிக்க நன்றி. கில்லர்ஜி நோட் இட்!!

      நீக்கு
    2. ம்... ம்... நம்மவர்கள் கதை"ப்பதில் புலிதான்.

      நீக்கு
    3. இது கதைனு பார்த்தால் கதை கில்லர்ஜி! ஆனால் உள்ளார்ந்த தத்துவப் பொருளைக் கொண்டது! விவரிக்க ஆரம்பித்தால் பெரிசாப் போகும். பின்னர் ஒரு சமயம் நேரமும், சரியான வாய்ப்பும் கிடைத்தால் விவரமாகச் சொல்ல முயலுவேன்.

      நீக்கு
  10. என்னோட அருமை நண்பர் மதுரை மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி முனையில் பல வருடங்களாகக் குடி கொண்டிருக்கும் நேரு பிள்ளையார் தான்! பிள்ளையாரின் பெயரே நேரு ஆலாலசுந்தர விநாயகர் ஆகும். பள்ளிக்குச் செல்லப் பேருந்து நிறுத்தம் செல்ல தினமும் அந்த வழியாத் தான் போகணும். எத்தனை அவசரத்திலும் அவரைப் பார்க்காமல் போனதில்லை. பரிக்ஷை சமயத்தில் பேனா, பென்சில், பரிக்ஷை எழுதப் பயன்படுத்தும் அட்டை(அப்போல்லாம் அட்டை, பேப்பர், க்ளிப், எல்லாமும் உண்டு. சில சமயங்களில் பொதுப் பரிக்ஷைன்னா பள்ளியிலேயே எழுதும் பேப்பர் கொடுப்பாங்க!) ஹிஹி எங்கேயோ போயிட்டேனே! எல்லாத்தையும் பிள்ளையார் காலடியில் வைச்சு எடுத்துட்டுப் போகிறது உண்டு. அவர்ட்டே அப்போ வேண்டுதல் எல்லாம் நான் படிச்சதுக்குள்ளே கேள்விகள் வரணும் என்று தான்! மற்றபடி படிக்காமலேயே பிள்ளையார் உதவி வேணும்னு கேட்டதில்லை. அந்த மாதிரி வரலைனா சாயந்திரம் வரச்சே பிள்ளையாரை ஒரு கை பார்த்துடுவேன்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா ஹாஹாஹா....

      நானும் சின்ன வயசுல இதேதான்... அவரிடம் கா விட்டதுண்டு. அப்புறம் பழம் விட்டு மீண்டும் கை கோர்த்துக் கொண்டதுண்டு...தப்பு பண்ணினா அவர்கிட்ட தோப்புக்கரணம் போட்டு மன்னிப்பும் கேட்டதுண்டு...இப்பவும் மன்னிப்பு கேட்பேன். ஆனா தோப்புக்கரணம் தான் போடறதில்லை...

      மிக்க நன்றிக்கா

      நீக்கு
  11. பிள்ளையார் சுழி போட்டு பதிவு எழுதத் தொடங்கிய காலத்து பதிவு என்று நினைக்கிறேன்.

    எங்கள் ஊர் உச்சிப் பிள்ளையார். நகரத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கோயில் கோபுரம் தெரியும். பழைய ஆட்கள் பலரும் அன்றைய தினத்திற்கு முதன்முதல் பார்த்தவுடன் தலையில் குட்டு போட்டுக் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தமிழ் இளங்கோ சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  12. கதை நல்லாத்தான் இருக்கு. இந்த மாதிரி சிறிய கோவில்கள் சடக் என்று பெரிய அளவில் வளர்ந்துவிடுகின்றன. அதன் மூலம் சிலருக்கு வேலை கிடைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! அப்படியும் கொள்ளலாம்....மிக்க நன்றி நெல்லைத்தமிழன் தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  13. அருமையா எழுதி இருக்கீங்க கீதாக்கா...

    எனக்கு நெருக்கமான பிளையார் திருச்சி, தில்லைநகர், 10 th crossla இருக்கார்...

    போகும் போது, வரும் போது என அவர்ட பேசாம (மனசுக்குள்ள தான்) போறது இல்ல...

    ஸ்கூல் காலத்திலேந்து ரொம்ப நெருக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அனு! ஆஹா! உங்களுக்கும் நெருக்கமான பிள்ளையார் திருச்சியில்...தில்லை நகர் 10த் க்ராஸ்!!! அங்கு 10த் க்ராஸிற்கு முன்பு பல தடவை வந்திருக்கிறேன்...யாருக்குத்தான் இந்தப் பிள்ளை நெருக்கமாக இல்லை!!! குழந்தைகள் முதல் பெரியவர் வரை!!

      நீக்கு
  14. அட,.... geetha clicks ம் ... சூப்பர்...தொடருங்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா...மிக்க நன்றி அனு!! உங்களுக்குத்தான் சொல்லணும்...பெயர் எப்படிப் போடணும்னு சொல்லிக் கொடுத்தீங்களே!!

      நீக்கு
  15. உங்கள் நண்பர் கதை:) மிகவும் அருமை. ரசனை யாகவும் இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மாதேவி!!ரசித்தமைக்கு!! முதல் வருகை என்று நினைக்கிறேன்...அதற்கும் நன்றி...

      நீக்கு
    2. மாதேவி நீங்கள் இப்போது எழுதுவதிலலி போலத் தெரிகிறதே!...உங்கள் ப்ளாக் பக்கம் சென்றேன். யாழ் மண்ணிலிருந்து என்று தெரிந்து கொண்டேன். எழுதலாமே!!

      நீக்கு
  16. அடியேன் அடிக்கடி போகிற இடம்; காளிகாம்பாள் கோவில். எதிரே வீற்றிருக்கும் இஷ்டசித்தி விநாயகரை நான் ‘வாத்யாரே’ என்றுதான் அழைப்பேன்.(இது குறித்து முகநூலில் எழுதியதாகவும் ஞாபகமிருக்கிறது). மற்ற கடவுள்களிடம் கொஞ்சம் பவ்யமாக, அடக்க ஒடுக்கமாக இருந்தாலும், பிள்ளையார் என்றால் ‘பிரதர், வாத்யாரே, ப்ரோ’ என்று உரிமையுடன் பழகுவதுண்டு. அவ்வப்போது கோபம் வந்தால் அவரிடம் தான் பஞ்சாயத்துக்குப் போவது. சில சமயங்களில் நான் சற்று உரக்க அவரோடு சண்டைபோடுவதை மற்ற பக்தகோடிகள் வேடிக்கை பார்த்த விசித்திரமான அனுபவமும் உண்டு. ஆனால், இப்போதும் நான் காளிகாம்பாள் கோவிலுக்கோ இஷ்டசித்தி விநாயகர் கோவிலுக்கோ போனால் என்னை சிவாச்சாரியார்கள் ஒரு பரிச்சயமான புன்னகையுடன் வரவேற்பார்கள். உங்களது பதிவுக்கும் என்னுடைய ஆன்மீகத்துக்கும் நிறையவே சம்பந்தம் இருப்பதுபோலிருக்கிறது. I am not alone! Thanks! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சீனியர்!! மிக்க நன்றி உங்கள் அனுபவங்களையும் இங்கு பகிர்ந்தமைக்கு. அட! நானும் கூடப் பஞ்சயாத்துக்குப் போவேன்!! நானும் அன்றன்று என்ன மூடோ அதற்கு ஏற்றாற் போல் அவரை இஷ்டத்திற்கு விளித்துக் கொள்வேன்.

      //உங்களது பதிவுக்கும் என்னுடைய ஆன்மீகத்துக்கும் நிறையவே சம்பந்தம் இருப்பதுபோலிருக்கிறது. I am not alone! Thanks! :-)// ஹாஹாஹா....மிக்க மிக்க நன்றி! சேட்டைக்காரரே!!

      நீக்கு
  17. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள் தளத்தில் வருகிறேன் ...

    ரசித்தேன்...

    நேரம் கிடைத்தால் நம் தளத்திற்கு வாங்க
    ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அஜய்! தங்களின் கருத்திற்கு. வருகிறோம் தொடர்கிறோம் உங்கள் தளத்தை....

      நீக்கு
  18. மும்பையில் பலவருடங்கள் முன்இருந்த ,தேருவோர பிள்ளையாரை கடந்த வருடம் சென்று இருந்த போது காணவில்லை ,காரணம் அவரும் நீங்கள் சொன்னமாதிரி ரிச் பிள்ளையார் ஆகிவிட்டார் ! பளிங்கினால் ஆன நவீன கோவிலில் ,தங்க ஆபரணக்களுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ,பாலத்தின் அடியில் அகலமான இடத்தில் ,போலீஸ் காவலுடன்,பாம் டிடெக்கர் வாசல் வேறு ,அடேங்கப்பா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மும்பைக்குச் செல்வோர் எவரையும் மும்பை அப்படியே விட்டுவிடாதாமே! பணக்காரராகவோ இல்லை வயிற்றுப் பிழைப்பை டீஸண்டாக நடத்தும்படியோ ஆக்கும் தன்மை மும்பைக்கு உண்டு என்று சொல்லப்படுவதுண்டு...பிள்ளையாரும் விதிவிலக்கல்லவோ....மும்பை அல்லவா அதனால் கூடுதல் வசதிகளுடன் போலும்..ஹாஹாஹா...

      மிக்க நன்றி பகவான் ஜி!!

      நீக்கு
  19. அருமையான பிள்ளையார் நினைவுகள்.
    எனக்கும் பிள்ளையார் தான் நண்பர்.
    அவர் எளிமையாக எங்கு வேண்டுமென்றாலும் அமர்ந்து கொள்வார்.
    சிதறு காயில் நம் துன்பங்களை சிதற செய்வார்.
    நம் வினைகளை களைபவர் அல்லாவா? அருமையான பதிவு.
    பிள்ளையார் சதுர்த்திக்கு முன் 10 நாட்கள் விழா நடக்கும் அது போல் முன்பே வந்து விட்டது உங்கள் பதிவு.
    வாழ்த்துக்கள் கீதா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் கோமதிக்கா! எளிமையாக எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொள்வார்!! இதோ எங்கள் தெருவில் ஜஸ்ட் ஒரு100 மீட்டருக்குள் மூன்று பிள்ளையார்கள்....குட்டி குட்டியாக...கோயில் எழுப்ப முடியாது ஏனென்றால் சுவற்றோடு சுவறாக..ஒருவரு ஒரு கடையில், மற்ற இருவர்கள் வீட்டு வாயில் சுவற்றுடன்....ஒரு வீட்டில் அவருக்குப் பூஜை அபிஷேஷம் எல்லாம் செய்கிறார்கள் கம்பித் தடுப்பும் போட்டிருக்கிறார்கள்.

      //பிள்ளையார் சதுர்த்திக்கு முன் 10 நாட்கள் விழா நடக்கும் அது போல் முன்பே வந்து விட்டது உங்கள் பதிவு.//
      ஹாஹாஹா ஆம் அக்கா இந்தப் பதிவைப் போடும் முன் எனக்கும் இந்த நினைவு வந்தது..இப்படியாகத் தோன்றவும் செய்தது...

      மிக்க நன்றி கோமதிக்கா..

      நீக்கு
  20. மீள் பதிவுதானே?! புதியவர் என்னவானார்ன்னும் சொல்லி இருக்கலாம் கீதாக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி! நல்ல கருத்து!! உண்மைதான்....நீங்கள் சொல்லியது பதிவை முடித்ததும் தோன்றியது. ஆனால் பழைய பதிவு இப்படியே இருக்காது...இதில் நிறைய மாற்றங்கள்...அதைக் கதையாக மாற்றியதால் அப்படியே விட்டுவிட்டேன்...புதியவர் என்ன ஆனார் என்பதைச் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் கொஞ்சம் நீண்டுவிடும்...!! அதனால் பிள்ளையாரின் மர்மப்புன்னகையே அதையும் சொல்லிவிடுகிறதே!! அவர் நன்றாக இருப்பதாக!! அப்படி வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிட்டேன்.

      உங்கள் கருத்தை மிகவும் ரசித்தேன் ராஜி!!!

      நீக்கு
  21. நிஜமா கற்பனையா என்று ஒரு சந்தேகம் வந்தது. பிறகுதான் புரிந்தது கற்பனைதான் என்று(நான் கொஞ்சம் டியூப் லைட்). சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹா பானுக்கா நீங்களா ட்யூப் லைட்?!!! எவ்வளவு நன்றாக எழுதுகிறீர்கள்! நீங்களே ட்யூப் லைட்னா நான் எல்லாம் இன்னும் ரொம்ப மோசம் அக்கா..பல விஷயங்களைப் புரிந்து கொள்வதில் நானும் ரொம்பவே ட்யூப் லைட்..ஹிஹிஹிஹி

      நீக்கு
  22. கோயிலையும் அதன் பிள்ளையையும் வணங்குவதும் வழிபடுவதும் மிகவும் அவசியம். கடவுளை நண்பனாக நினைப்பது அறிவின் தெளிவு. நல்ல(கற்பனை)பதிவு.

    வாழ்த்துக்கள்.

    கோ(யில் பிள்ளை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹாஹாஹா வாங்க கோ!! வார்த்தை விளையாட்டை மிகவும் ரசித்தேன்...

      ஆம் கோ நான் கடவுளை நண்பனாகப் பாவிப்பதுதான் வழக்கம்...அது இக்கதையில் வெளிவந்திருக்கலாம்...மிக்க நன்றி தங்களின் அழகான கருத்திற்கு

      நீக்கு
  23. சூப்பர் பிள்ளையார் நினைவுகள் கீதா மேடம் .நான் கூட கடவுள் கூட நிறைய பேசியிருக்கிறேன் ,( அவர் என் கூடப் பேசவில்லை .என்பது வேறு விஷயம் . )
    தி ட்டியிருக்கிறேன் ,டீல் உங்களை மாதிரியே போட்டிருக்கிறேன் .ஹா ஹா

    பதிலளிநீக்கு
  24. நன்றாக இருக்கிறது சகோ! ஆண் எழுதுவது போல அமைந்திருந்ததால் துளசி ஐயாவுடையது என்று நினைத்தேன்.

    நானும் முற்பிறவியில் பெரிய பிள்ளையார் அன்பன்தான். 18.05.2009 அன்று மறுபிறவி எடுத்த பிறகு இறை எதிர்ப்பாளனாக ஆகி விட்டேன். My deal was international level. பிள்ளையாரால் முடியவில்லை போலும். சோனியா காந்தி, மன்மோகன் சிங், இராசபக்ச, கருணாநிதி என அவரை விடப் பெரிய கடவுள்கள் அந்த விவகாரத்தில் முட்டுக் கட்டையாக இருந்ததால் பிள்ளையார் தோற்று விட்டாரோ என்னவோ! முடிவு கொஞ்சம் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  25. // My deal was international level. பிள்ளையாரால் முடியவில்லை போலும். சோனியா காந்தி, மன்மோகன் சிங், இராசபக்ச, கருணாநிதி என அவரை விடப் பெரிய கடவுள்கள் அந்த விவகாரத்தில் முட்டுக் கட்டையாக இருந்ததால் பிள்ளையார் தோற்று விட்டாரோ என்னவோ! முடிவு கொஞ்சம் புரியவில்லை.//

    மனிதர்கள் அதிலும் அரசியல்வாதிகள் செய்தவற்றிற்குப் பிள்ளையார் எப்படிப் பொறுப்பாவார்? மனிதர்கள் செய்யும் தவறுகள் அவர்கள் ஒரு வினாடி கூட இறை சக்தியை நினைக்காமல், உணராமல் செய்வது! அப்படி உணர்ந்தால் தவறு செய்யும் மனிதனே இருக்க மாட்டான்!

    "நான்" என்னும் எண்ணம், அகங்காரம் இருப்பதால் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போகிறோம். இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான். அவன் அளிக்கும் சந்தர்ப்பங்களைச் சரியான முறையின் பயன்படுத்திக் கொள்வது நம் கையில் தான் இருக்கிறது. நான் சொல்வது உங்களைப் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும் திரு இ.பு. ஞானப்பிரகாசம் அவர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனிதர்கள் அதிலும் அரசியல்வாதிகள் செய்தவற்றிற்குப் பிள்ளையார் எப்படிப் பொறுப்பாவார்?// - எந்தப் பொறுப்பும் ஏற்காமல் இருப்பதற்கு எதற்கு அவ்வளவு பெரிய பதவி? அதற்கு மாறாகப் பதவியை என்னிடம் கொடுத்து விடச் சொல்லுங்கள்! எங்கும் துன்பத்தில் சாயல் கூட இல்லாத உலகாக இதை மாற்றிக் காட்டுகிறேன்! கடவுளிடம் கேட்டுச் சொல்லுங்கள்! ’முதல்வன்’ படம் போல்தான். ஒருநாள் என்னைக் கடவுளாக ஆக்கிக் காட்டச் சொல்லுங்கள்! ஒரே நாளில் உலகையே தூய்மைப்படுத்திக் காட்டுகிறேன்! சவாலா?

      //மனிதர்கள் செய்யும் தவறுகள் அவர்கள் ஒரு வினாடி கூட இறை சக்தியை நினைக்காமல், உணராமல் செய்வது! அப்படி உணர்ந்தால் தவறு செய்யும் மனிதனே இருக்க மாட்டான்!// - பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வரும் மிகப் பழைய சாக்கு இது. நடந்த இனப்படுகொலையில் வென்றால் வந்து வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டதால்தான், எல்லாம் முடிந்த பின் திருப்பதிக்கு வந்தான் இராசபக்ச என்கிறேன் நான். மறுக்க முடியுமா உங்களால்? சரி, அது போகட்டும். மகாபாரதம் படித்திருக்கிறீர்களா? அதன் இறுதியில், போர் முடிந்த இரவு அசுவத்தாமன் சிவனை வேண்டுவான். அவர் நேரில் தன் பூதக்கணங்களோடு வருவார். அவர்கள் உதவியோடுதான் பாண்டவர் படை முழுவதையும் ஒரே நாளில் அழித்தொழித்து, ஒரு தவறும் செய்யாத பாண்டவர் பிள்ளைகளையும் தூக்கத்திலேயே வெட்டிக் கொல்வான் அசுவத்தாமன். நினைத்துப் பாருங்கள், இவ்வளவு பெரிய கொடுமைக்கு உதவி புரிந்தது யார்? சிவன் எனும் கடவுள்தாம்! ஆனால் நீங்கள் சொல்கிறீர்கள், இறை ஆற்றலை நினைத்து உணர்ந்தாலே மனிதன் தவறு செய்ய மாட்டான் என்று. ஆனால், வேண்டுபவர் சரியாக வேண்டிக் கொண்டால், செய்வது தவறான செயலாகவே இருப்பினும் கடவுளே அதற்கு நேரில் வந்து உதவுவார் என நான் சொல்லவில்லை மகாபாரதம் சொல்கிறது. இதில் நகைமுரண் என்னவெனில், அதை எழுதியதும் பிள்ளையார்தான். நீங்கள் யாருக்கு ஆதரவாக என்னிடம் கேள்வி எழுப்பினீர்களோ, அதற்கு எதிரான என் கட்சிக்கு அவர் எழுதிய நூலே துணை நிற்கிறது!

      //"நான்" என்னும் எண்ணம், அகங்காரம் இருப்பதால் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டே போகிறோம்// - இது சரிதான். ஒப்புக் கொள்கிறேன்!

      //இதற்கு இறைவன் பொறுப்பாக மாட்டான்// - அஃது எப்படி? நான் எனும் எண்ணம் மனிதருக்கு வராமல் காக்க வேண்டியதுதானே? போயும் போயும் நம் எண்ணங்கள் சிந்தனைகள் போன்றவை என்ன? வெறும் நியூரான்களின் ஆட்டமும் வேதிப்பொருட்களின் விளையாட்டும்தாமே? அதைக் கூடக் கட்டுப்படுத்த முடியாதா கடவுளால்? பத்து உரூபாய் மாத்திரை செய்கிறதே அந்த வேலையை!

      கடைசியாக ஒன்று! நீங்கள் மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டா! நீங்கள் என்னை விடப் பெரியவர். நான் சிறுவன். இறை நம்பிக்கையின் உச்சத்தில் இருந்தவன் நான். தனிப்பட்ட வாழ்வில் எத்தனையோ இழப்புகளையும் மனமுறிவுகளையும் சந்தித்தவன். ஆனாலும் எந்த நிலைமையிலும் இறை நம்பிக்கையைக் கைவிடாதவன், சக மனிதர்கள் மீதான அன்பு காரணமாகத்தான் இறுதியில் மனமுடைந்து அதைக் கைவிட்டேன். ஆனால், அதற்காக நன் பெருமைப்படுகிறேன்! கடவுள் நம்பிக்கை உள்ளவனாக வாழ்ந்த காலக்கட்டத்தை விட இன்றைய காலக்கட்டத்தில் சமூகத்தின் மீதான என் அக்கறையும் உலகம் தழுவிய நேசமும் உடன் வாழும் மனிதர்கள் மீதான அன்பும் நாம் வாழும் சமூகத்துக்கு - இனத்துக்கு - இந்த உலகுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் எனும் துடிப்பும் பன்மடங்கு எனக்கு அதிகரித்திருப்பதை உணர்கிறேன். எனவே, இதுவே சரியான வாழ்கை முறையாக எனக்குப் படுகிறது. நீங்கள் மேற்படி கேள்விகளை எழுப்பியதால்தான் இந்தக் கருத்துக்களை வெளியில் சொல்ல எனக்கொரு வாய்ப்புக் கிடைத்தது. எனவே வருத்தம் ஏதும் இல்லை. நான் ஏதும் தவறாக எழுதியிருந்தால் நீங்கள்தாம் மன்னிக்க வேண்டும்!

      நீக்கு