திங்கள், 22 மே, 2017

ரோசா நறுமணச் சாரமும் ரோசாவாகிய நானும்

நம் ஸ்ரீராம், நெல்லைத் தமிழன், ஏஞ்சல், இராயசெல்லப்பா சார் மற்றும் அதிரா போடும் பதிவுகள் சில எனது பழைய நினைவுகளைக் கிளறிவிடும். சமீபத்தில் ஸ்ரீராம் தன் தோழி செய்த ரோஸ் எஸன்ஸ் பற்றி திங்கக் கிழமையில் போட டொட்டடைய்ங்க் என்று நேர இயந்திரத்தில் என் தலை 180 டிகிரி திரும்பிட நினைவுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. நல்ல காலம் முற்பிறவி நினைவுகள் எனக்கு வருவதில்லை.


அது ஒரு கனாக்காலம். வீட்டிற்குத் தெரியாமல் சேட்டைகள் பல செய்த இளமை துள்ளிய கல்லூரிக்காலம்! கத்திரி வெயிலையும் கூட வெயிலே இல்லை என்றும் மழை பெய்து உடைப்பெடுத்து வெள்ளம் வந்தாலும் ‘இதெல்லாம் ஒரு மழையா’ என்றும் சொல்லித் திரிந்த காலம். (இப்போதும் இளமை துள்ளுகிறது என்றுதான் நான் சொல்லுவேன் ஆனால் வெயிலைத் திட்டிக் கொண்டே!). கற்பதை எல்லாம் செய்து பார்க்கவும், புதியதாக ஏதேனும் செய்யவும் துடித்திருந்த காலம். அது இப்போதும் தொடர்வது வேறு விஷயம்.

இப்படி ஆர்வக் கோளாறினால் நான் சமையலறையில் செய்யும் சோதனைகளைச் சோதனை செய்ய சோதனை எலிகள் என்ற பெயரில் என் அத்தைகள் மற்றும் மாமாக்களின் பெண்கள், பையன்கள்  என்று ஒரு பட்டாளம் உண்டு. நாங்கள் எல்லோரும் ஒரே கூரையின் கீழ் வளர்ந்தவர்கள். இதில், யாருக்கேனும் பங்கு கொஞ்சம் குறைந்துவிட்டால், வீட்டுத் தலைமையிடம் என்னைப் பற்றிப் போட்டுக் கொடுத்து மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் செல்லமான குள்ளநரிகளும் ஓரிரண்டு உண்டு. அவர்களுக்குத் தலைமையிடமிருந்து சில காரியங்கள் ஆக வேண்டியிருக்கும்.

எங்கள் வீட்டுத் தலைமை – பாட்டி. என் அம்மாவின் அம்மா. இந்திராகாந்தி. எல்லோரது கருத்துக்களையும் கேட்பது போல கேட்டு தான் நினைத்ததையே கோலோச்சி வந்தவர். வீட்டில் சர்வாதிகார ஆட்சி! வீட்டை மட்டுமல்ல ஊரையே ஆட்சி செய்தவர் எனலாம்.

‘பால் காய்ச்சத் தெரியாது, ஒரு சாதம்,  குழம்பு, ஒரு ரசம் கூடப் பண்ணத் தெரியாது, வந்துட்டா போக்கத்தவ’ என்று எனக்கு மொத்து கிடைப்பதை, நான் செய்வதை எல்லாம் நன்றாக உள்ளே தள்ளிவிட்டு, போட்டுக் கொடுத்ததும் போதாதென்று  ஒளிந்து கொண்டு எட்டி எட்டிப் பார்த்துச் சிரிக்கும் அந்தக் கூட்டம் இருக்கே! அதைப் பார்த்து அப்போது என் மனம் கருவிக் கொள்ளும். யாரெல்லாம் மதிப்பெண்களை மாற்றிப் போட்டுத் திருத்திக் காட்டி கையொப்பம் வாங்கினார்கள் என்று தேய்ந்து போன மெமரி கார்டை பட்டை தீட்டும்.

ஆனால் அது கொஞ்ச நேரம் தான். நான் செய்யும் சோதனைகளை எல்லாம் அஞ்சா நெஞ்சுடன் தின்னும் சோதனை எலிகளாச்சே! விடுவேனா என் செல்லப் பட்டாளத்தை! மனம் இளகிவிடும்.

இதில், என் சோதனைக்கே நான் நிறைய லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கும். டப்பா, பேனா, அப்பளம், வத்தல், வடாம், உருளைக்கிழங்கு கறி, தின்பண்டங்கள், சேவை, ரிப்பன் என்று பெரிய பட்டியல். மிகப்பெரிய லஞ்சம் என்னவென்றால், எல்லோருக்கும் அறிவியல் ரெக்கார்டில் நான் தான் படம் வரைந்து கொடுக்க வேண்டும். 12 ஆம் வகுப்புகளுக்கு ஹெர்பேரியத்திற்குச் செடிகள் திரட்டி ஒட்டிக் கொடுக்க வேண்டும்.

இப்படியாகப் போய்க்கொண்டிருந்த காலத்தில், பெண்கள் இளங்கலை படிப்பு முடித்ததும் சுயதொழில் செய்து வருமானம் ஈட்ட உதவும் வகையில், “உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்” – (Canning and Food Preservation) என்ற ஒரு வார, சான்றிதழ் வகுப்பு ஒன்றை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நடத்த இருப்பதாகவும், ஆர்வமுள்ளோர் அதில்  கலந்து கொள்ளலாம் என்றும், கட்டணம் எதுவும் இல்லை இலவசம் தான் என்றும் எங்கள் கல்லூரியில் அறிவித்தார்கள். 20, 25 பேர்தான் சேர முடியும் என்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்கள்.

கட்டண வகுப்பு என்றால் வீட்டில் கட்டணத்திற்கான பணம் தர மாட்டார்கள். இது இலவசம். விடுவேனா. முதல் ஆளாய் நின்றேன். அதுவும் அந்த ஒரு வாரம் முழுவதும் வகுப்பிற்குச் செல்ல வேண்டாம். வகுப்புகளைக் ‘கட்’ அடிக்கப் பயந்த காலத்தில் இப்படியான ‘கட்’ அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் விடுவேனா. ஜூஸ், ஸ்குவாஷ், மொரப்பாக்கள், ஜாம், ஜெல்லி, ரோசா பால் சாரம் (ரோஸ் மில்க் எஸன்ஸ்), ரோசா சாரம் (க்ளியர் ரோஸ் எஸன்ஸ்), பழ மிட்டாய்கள், ஊறுகாய் என்று அதகளம் தான்.

ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்ததும் மண்டைக்குள் குடையும். கை துறு துறுக்கும். ஆனால், கண்காணிக்கும் ரேடார் போன்று யாருக்கும் தெரியாமலேயே 4 கண்கள் எப்போதும் 360 டிகிரியில் சுழன்று கொண்டே இருக்கும். அதுவும் அவ்வப்போது நியமனம் செய்யப்படுவது வெகு ரகசியமாக மாறிக் கொண்டே வேறு இருக்கும். லஞ்சம் எல்லாம் கொடுத்து செயலிழக்க வைக்கவே முடியாது.

பெரியவர்கள் ஏதேனும் வேலையாக வெளியில் செல்லும் போது எங்களுக்கும் விடுமுறையாக இருக்கும் நாள் பார்த்துக் குறித்து, ராகுகாலம், எமகண்டம், குளிகை எல்லாம் பார்த்து நல்ல நேரம் குறிக்கப்படும். அப்படியான ஒரு பொன்னான நாள் வர, சோதனை எலிகள் எல்லாம் என்னைச் சூழ்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன் என்று சப்புக் கொட்டிக் கொண்டிருக்க, மிகப் பெரிய ரகசியம் என்பது போல் கெத்து காட்டுவேன்.

அன்றைய மெனு ரோஸ் மில்க் எஸன்ஸ். அதற்கு நிறம், மற்றும் க்ளியர் ரோஸ் எஸன்ஸ் வேண்டும். இல்லை என்றால் நிறம் சேர்க்கப்பட்ட ரோஸ் எஸன்ஸ் வேண்டும். கற்றுக் கொடுத்த ஆசிரியரிடமிருந்து க்ளியர் ரோஸ் எஸன்ஸைச் சிறு குப்பியில் வாங்கி வந்திருந்தேன். பால் வேண்டும். எங்கள் ஊரில் கறந்த பால் தான் கிடைக்கும். அதிகமாகக் கேட்டால் கிடைக்காது. மட்டுமல்ல பாட்டியின் காது வரை செய்தி போய்விடும். டவுனில் தான் பாக்கெட் பால் கிடைக்கும். ஆனாலும், நான் பால் வாங்கிவிடுவேன். எப்படி? பைசா? அது ரகசியம். ரகசியங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்! அடுத்து நிறம் தான் பிரச்சனை. அதற்கு முன்பு செய்த போது நிறத்திற்கு வீட்டிலிருந்த கேசரி பௌடர் சேர்த்து செய்து கொடுத்ததை இந்தப் பட்டாளம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கமென்ட் அடித்தது.

“ஐயே இது என்னவோ கீர் கீர்னு நம்ம வடக்கத்தி மீரா சொல்லுமே அப்படி இருக்குது. நல்லால்ல..”

“ஏய் இது இருமலுக்கு மஞ்சப்பொடி போட்டு பால் தருவாங்களே அப்படி இருக்கு…ஹும்…”

“உவ்வே! இது ஞாயித்துக் கிழமை நாகர் மேல மஞ்சள் பூசி பால் விட்டு பிரசாதம் நு அத்தை தூக்குல கொண்டு வர பால் மாதிரி இருக்கு. என்ன.. சில்லுனு இருக்கு அம்புட்டுதான்…”

இத்தனையும், அவர்கள் அதைக் குடித்துக் கொண்டே அடிப்பார்கள் என்பது வேறு விஷயம். அதனால் வீட்டில் ஆராய்ச்சி செய்த போது பீட் ரூட் கண்ணில் பட உடனே ஐடியா தோன்ற, சமையலறைப் பக்கம் யாரும் எட்டிப் பார்க்கக் கூடாது என்று பட்டாளத்திற்கு உத்தரவு போட்டுவிட்டு, பீட் ரூட்டைத் துருவி, ஜூஸ் எடுத்து கண்ணளவில் சர்க்கரை சேர்த்து லைட்டாக ஒட்டும் பதத்தில் கொதிக்க வைத்து, எடுத்து ஆறவைத்து எஸன்ஸ் சேர்த்துவிட்டு, பாலில் கலந்துவிட்டு, பீட் ரூட் துருவலையும் தூர எறியாமல் அதனையும் கேரட் அல்வா போல செய்து, (மற்றுமொரு முறை இந்தத் துருவலைத் தொக்காகச் செய்தேன்) இடையில் துருவலை உதட்டில் லிப்ஸ்டிக் போல தேய்த்து, ஹை இப்படிக் கூட நாடகத்தில் செய்யலாம் என்று அழகு பார்த்துவிட்டு செய்த தடயம் இருக்கக் கூடாதே என்று பார்த்தால், தரை, சுவர் மற்றும் எல்லா இடமும் ஒரே சிவப்பு. நான் செய்தது விறகு அடுப்பில். (அப்போதெல்லாம் கிராமத்திற்கு சிலிண்டர் கிடைப்பது கஷ்டம்)

திடீரென்று சோதனை எலிகள் எல்லாம் ஓடி அவரவர் கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு, வாயில் கை வைத்து விஷமச் சிரிப்புடன், படிப்பது போல் நடிக்க, நான் என்னடா என்று பார்த்தால் வாயிலில் மாமா! பாட்டியின் தம்பி! என்னைப் பார்த்ததும்,

Related image
படம் இணையத்திலிருந்து

“ஆ! இது எந்தா! எண்டே மோள் ரோசா பூ போல ஆயல்லோ? மோள் கொள்ளாமல்லோ? எந்தெங்கிலும் பரிபாடியோ?” என்று கேட்க, நானோ திருட்டு முழி முழிக்க, அப்போது பட்டாளத்தில் ஒன்று என்னைப் பார்த்துக் கண்ணடித்து கையால் சைகை காட்டியது. பார்த்தால் என் உடம்பில் எல்லாம் சிவப்புக் கலர். வெள்ளைத் தாவணியில் ரோஸ் கலர் திட்டுத்திட்டாக, மாமா என்னை அழைத்துச் சென்று கண்ணாடியில் காட்ட, பீட் ரூட் தன் நிறத்தை என் மீது அப்பியிருக்க நான் ரோசாய் ரோசாவாய் நின்றிருந்தேன்!!!

“ஆஹா! இதெந்தா? நல்ல மணம்! மாமன் வருன்னது மோளுக்கு எங்ஙன அறியாம்? ரோஸ் மில்க் உண்டாக்கிட்டுண்டல்லோ,” என்று சொல்லிக் கொண்டிருக்க, பின்னாலேயே பாட்டி “வாடா கேசவா” என்று சொல்லிக் கொண்டே நுழைந்தார். கூடவே, ஸ்லோகப் பாட்டுக் கற்றுக் கொள்ளச் சென்ற எல்லா பெரியவர்களும் வந்துவிட, பாட்டி என்னைப் பார்த்ததும், "இதென்ன பைத்தியக்காரக் கோலம், என்ன சேட்டை பண்ணின இதோ வரேன் இருக்கு உனக்கு வேட்டு" என்று சொல்லிக் கொண்டு சமையலறைக்கு விரைய அங்கு எதுவும் இல்லாதது கண்டு விறகு அடுப்பு இருக்கும் இடத்திற்குச் சென்றார். “ஓ! என்னது இது, எல்லா இடமும் ஒரே ரத்தச் சிவப்பா இருக்கு. கஷ்டப்பட்டு வாங்கறது எல்லாம் நாசாமா போறது. என்ன திரிசமண்டி இது?” என்றிட, பாட்டியின் தம்பி எனக்குச் சப்போர்ட் செய்தாலும், செய்த ரோஸ் மில்க் எல்லாம், என் மாமாவின் உபயத்தால் புதியதாய் வீட்டிற்கு வந்திருந்த சிறிய கெல்வினேட்டர் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுவிட, பட்டாளம் எல்லாம் நற நற என்று பல்லைக் கடித்துக் கொண்டு என்னை முறைக்க, குளிர்சாதனப் பெட்டியின் தாக்கோல் எங்கே என்று தலைமை கேட்க, தலைமையின் வலது கையான என் பெரிய மாமி தாக்கோலைக் கொண்டு கொடுக்க குளிர்சாதனப் பெட்டியின் தாழ் மணிச்சித்திரத் தாழ் ஆகியது!! 

----கீதா

64 கருத்துகள்:

  1. பழைய நினைவுகள் ஒரு சங்கீதமே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கில்லர்ஜி! ஆமாம் சிறு வயது குறும்புகள் இனியவை!

      நீக்கு
  2. சின்ன வயது திரிசமன்கள்தான் எத்தனை எத்தனை... பீட்'ரூட் ரோஸ் எசன்ஸ் - நான் நிச்சயம் செய்துபார்ப்பேன். எனக்கும் “உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்” கோர்ஸ் மெட்டீரியல் பார்க்கணும்னு எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நெல்லைத் தமிழன்... சின்ன வயது திரிசமன்கள் எல்லாம் இப்போது இனிக்குது....பீட் ரூட் ரோஸ் எசன்ஸ் செய்து பாருங்க..பதிவு போடுங்க திங்க ல...
      கோர்ஸ் மெட்டீரியல் பாருங்க நெட்ல தேடினா கிடைக்கும்னு நினைக்கிறேன்...அது ஒன்னும் இல்ல ப்ரிசர்வெட்டிவ் நாம போடுற மூலப்பொருளுக்கு ஏத்தபடி அளந்து போடனும். அளவு சொல்லிருப்பாங்க....என்னிடம் தேடிப் பார்க்கிறேன் கிடைச்சா உங்களுக்குச் சொல்லுறேன்...

      மீந்த சக்கையை அதான் பீட் ரூட் சக்கையை கேரட் ஹல்வா செய்வது போலவோ இல்லை தொக்காகவோ போடுங்க நல்லாருக்கும்....நாங்க எதையும் தூர எறிய மாட்டோம்ல...ஹிஹிஹி

      நீக்கு
    2. "நாங்க எதையும் தூர எறிய மாட்டோம்ல" - ஏன்னா, நான் சாப்பிடமாட்டேனில்ல. எல்லாம் மாட்டிக்கிட்டவங்களுக்குத்தான் - இதைத்தானே சொல்ல வந்தீங்க.

      நீக்கு
    3. ஹஹஹஹஹ்ஹ் ஆமாம் ஆமாம் நெல்லைத்தமிழன்...!!!

      ஆனா மெய்யாலுமே நல்லாருந்துச்சு. ஸ்வீட்டும் சரி, தொக்கும் சரி...இல்லைனா சப்பாத்தி மாவுல ஸ்டஃப் பண்ணி இல்ல மாவு பிசையும் போது கலந்து இப்படி ஏதேனும் ஒன்னு......(எல்லாம் சொல்லுவ கீதா....நாங்கல்லா அத சொல்லனும்...நு மாட்டிக்கிட்டவங்க சொல்லுறது காதுல விழுதா நெல்லை...?!!!!ஹஹஹஹ்)

      நீக்கு
  3. ஹாஹா :) மணிச்சித்திர தாழ் ரசித்தேன் கீதா :)

    இப்படித்தான் நிறைய நினைவுகள் அப்பப்போ நம்ம பதிவுலக நட்புகளால் கிளறப்படுது :) இனிமைதான் சில நினைவுகள் நெல்லைத்தமிழனின் ஒவ்வொரு ரெசிபியும் அம்மாவையும் அப்பாவையும் நினைவூட்டும் .
    இந்த றோஸ் கலருக்கு லிப்சுக்கு நானும் பீட்ரூட்டை தேச்சுருக்கேன் ..நாங்கல்லாம் தனியே வீட்டில் இருந்தா பெரியவங்க தொல்லையில்லாம :) அப்போ கோலி கலர் சோடா வாங்கி க்ரூப்பா உக்காந்து குடிப்போம் :)
    தடா செய்யப்பட்ட போட்டி அப்பளம் எனும் மஞ்சள் வற்றல் இதெல்லாம் வாங்கி கூட்ட களவாணித்தனம் செய்வோம் :)
    நானெல்லாம் அப்போவே சமைக்க ஒரு effort உம் எடுக்கலையே :)

    உங்களுக்கு வீட்டுக்குள்ளேயே சிசி டிவியா :)) ரேடார் கண்களை சொல்றேன் ..

    எங்க வீட்லயும் ரெக்கார்ட் ஷீட்ஸ் வரைவது ஹெர்பேரியம் கலெக்சன் நான் தான் :)
    அருமையான நினைவுகள் அந்த ஜூஸ் எப்படியிருந்ததுன்னு சொல்லலியே :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹப்பா ஏஞ்சலின் உங்களுக்குப் புரிந்தது மணிச்சித்திரத்தாழ் நு சொன்னது!!!! அதைப் பற்றி ஒரு பதிவு போடுறேன்...

      ஆமாம் நமது பதிவுல நட்புகள் பல நினைவுகளைத் தூண்டி விடுகிறார்கள். அதுவும் நமக்கு ஒரு பதிவைத் தேத்த உதவுது ஹஹஹஹஹ்...மட்டுமில்ல நம்ம வாழ்க்கையை இனிமையா மகிழ்வாவும் கொண்டு போக உதவுது...

      ஐயோ இந்த சோடா கதைய ....சரி சரி பதிவுக்கு ரிசர்வ்ட்...அது போல நிறைய களவாணித்தனம் செஞ்சுருக்கோம்...அதெல்லாம் வருது...

      நானெல்லாம் அப்போவே சமைக்க ஒரு effort உம் எடுக்கலையே :)// ஐயோ ஏஞ்சல் நான் அப்போ சமையல் எதுவும் செய்ததில்லை. கல்யாணம் ஆன சமயத்தில் எனக்குத் துவரம் பருப்பு, கடலைப் பருப்பிற்கு வித்தியாசம் தெரியாது....உடைத்த உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு வித்தியாசம் தெரியாமல் இருந்தேன்...

      செய்தது எல்லாம் இப்படியான விஷயங்கள்தான்...பதப்படுத்துதலில் கற்றுக் கொண்டதுதான்...திருமணம் ஆன பிறகு டே டு டே சமையல் நிறைய கற்றுக் கொண்டேன். கற்பனையும் கலந்தும் செய்வேன்.....செய்துதானே ஆகணும்.!!! நீங்களும் இப்போது நன்றாகத்தானே சமைக்கிறீர்கள்! எனக்கு உங்களைப் போல அளவு எல்லாம் சொல்ல இயலாது. சொல்லண்ம்னா நான் அதை வீட்டில அளந்து செய்து பார்க்கணும் அப்புறம்தான் பதிவு போட முடியும்...அதற்குப் பொறுமை இல்லை. ஆனால் பேக்கிங்க் மட்டும் அளந்துதான் செய்வேன் அப்படித்தான் செய்யவும் வேண்டும் இல்லைனா சரியா வராதே...

      ஆமாம் எங்கள் வீட்டில் ரொம்பவே கண் காணிப்பு உண்டு. மிலிட்டரி என்று சொல்லலாம். அதுவும் அப்போது எங்கள் கிராமத்தில் நிறைய தவறுகள் நடந்து கொண்டிருந்தது. அதனால் பாட்டி பெண் பிள்ளைகள் எங்களை மிகவும் கட்டுபாட்டிற்குள் வைத்திருந்தார். வெளியில் யார் யாருடன் பேசினாலும் வீட்டிற்குச் செய்தி வந்துவிடும்.

      எங்கள் வீட்டில் வரைவது எல்லாம் என்னிடம் குத்தகைக்கு விடப்படும்!!!
      ரோஸ் மில்க் தான் மணிச்சித்திரத் தாழுக்குள் போய்விட்டதே....எங்களுக்குக் கிடைக்கவில்லையே பனிஷ்மென்டாம்!!!! பெரிய தலைகள் எல்லாம் குடித்தார்கள்....ஹஹ

      நீக்கு
  4. நினைத்தாலே இனிக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி!! ஆமாம் நிறைய இளம் நினைவுகள் இனிக்கும் அந்த இனிமையும் வாழ்க்கையை மகிழ்வாக வைத்திருக்க உதவும் தான்..மிக்க நன்றிமா...

      நீக்கு
  5. ///பைசா? அது ரகசியம்.///

    அந்த ரகசியம் அடுத்த பதிவாக வர வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பாட்டி இல்லைதான் இப்போது ரகசியத்தைச் சொல்லலாம் தான் ஆனால் இப்போது அம்மா அதிரா அவங்க பெர்மிஷன் வேணுமே......ஹிஹிஹி

      நீக்கு
  6. “ஆ! இது எந்தா! எண்டே மோள் ரோசா பூ போல ஆயல்லோ?///

    அந்த மாமா இன்று வந்தாலும் என்டே ரோசாபூ என்றுதான் சொல்லுவார் காரணம் உங்களின் மென்மையான பழகும்தன்மையை வைத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஆ!!! மதுரை சகோ கத்திரி வெயிலுக்கு இப்படி ஒரு பெரிய பனிக்கட்டியா!!! கூல் கூல்!!!

      மிக்க நன்றி சகோ...ஆனால் நானும் சில சமயங்களில் சாது மிரண்டால் காட்டேரிதான் ஹிஹிஹிஹி...

      நீக்கு
  7. கீதா நீங்கள் அதிராவின் வலைதளத்திற்கு அதிகம் போவதால் அவருக்கு பிடித்த பிங்க் கலரை உங்கள் படத்திலேயும் கொண்டு வந்தீட்டீங்க இப்ப பாருங்க காப்பிரைட் சட்டத்தின் பேரில் உங்கள் மேல் கேஸ் போடலாம் அல்லது சோகத்தில் தேம்ஸ் நதியில் குதிக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இவர் நேக்கு சப்போர்ட் பண்ணிப்பேசுறாரா?:) இல்ல வஞ்சகப்புகழ்ச்சி செய்து:) தேம்ஸ்ல தள்ளத் துடிக்கிறாரோ?:).. நித்திரை வராட்டில் சொல்லுங்கோ ட்றுத்.. பாடிவிடுகிறேன்:)

      நீக்கு
    2. // 12 ஆம் வகுப்புகளுக்கு ஹெர்பேரியத்திற்குச் செடிகள் திரட்டி ஒட்டிக் கொடுக்க வேண்டும்.//

      ஹா ஹா ஹா அயல் குழந்தைகளுக்கு நானும் அழகழகா கைவேலைகள் செய்து கொடுப்பேன்.. எனக்கும் சின்னனிலிருந்தே.. இப்படியான வேலைகள் செய்வதில் நல்ல ஆர்வமும் பொறுமையும் உண்டு.

      நீக்கு
    3. ஹஹஹ்ஹ் மதுரை சகோ சத்தியமாக உங்களின் இந்தக் கமென்டை எதிர்பார்த்தென். இந்தப் படத்தைப் போடும் போதே அதிராவை நினைத்தென்.நீங்களும் பிங்கைக் கலாய்த்து போடுவீர்கள் என்று நினைத்துக் கொண்டேன்...

      நீக்கு
    4. நித்திரை வராட்டில் சொல்லுங்கோ ட்றுத்.. பாடிவிடுகிறேன்:)// அதான் ஆஷா போஸ்லேனு பெயர் வைச்சுருக்கீங்களே பாடிடுங்க!!! ஆனா ஒன்னு மதுரை சகோ பாவம் அவருக்குத் தூக்கத்தில் எழுந்து நடப்பது வந்துவிடாமல் இருக்க வேண்டும்!!!!

      நீக்கு
    5. அதுவும் தூக்கத்தில் கத்தியையும் தூக்கிக் கொண்டு ஓடும் பழக்கம் வந்து விடாமல் இருக்க வேண்டும் ஆஷா போஸ்லே அதிரா!!!!! ஏற்கனவே பூரிக்கட்டை அடி வாங்கி வாங்கி....இப்போ மாமி பயந்து விடக் கூடாது என்னடா இது நல்லாருந்த மனுஷன் இப்படி ராத்திரி கத்தியைத் தூக்கிக்கிட்டு நு பெரிய பூரிக்கட்டையைக் கையில் எடுக்காமல் இருக்க வேண்டும்...எண்டெ பகவானே மதுரை சகோவை ரெட்சிக்கு!!!

      நீக்கு
    6. ஹா ஹா ஹா அயல் குழந்தைகளுக்கு நானும் அழகழகா கைவேலைகள் செய்து கொடுப்பேன்.. எனக்கும் சின்னனிலிருந்தே.. இப்படியான வேலைகள் செய்வதில் நல்ல ஆர்வமும் பொறுமையும் உண்டு.// சூப்பர் அதிரா!!!! வெல்டன்...

      இப்பவும் முடியுதா?!!! இல்ல 65 வருஷத்துக்கு முந்தைய கதையல்லோ அது..!!!ஹிஹிஹி..ஜோக்ஸ் அபார்ட்...

      நீங்கள் மிக அழகாகச் செய்வீர்கள் என்பது உங்கள் பதிவுகளிலிருந்து அறிய முடிகிறது அதிரா!!!

      நீக்கு
  8. //குளிர்சாதனப் பெட்டியின் தாக்கோல் எங்கே என்று தலைமை கேட்க, //

    தாக்கோல் என்றால் சாவியா? :)))))

    ரோஜா நறுமணம் கமழும் சாரமுள்ள நல்ல பதிவு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வைகோ அண்ணா! தாக்கோல் என்றால் சாவிதான்...தாழ் என்றால் கதவு இல்லையா? கோல் என்றால் அதைத் திறக்கும் கருவி...தாழ்க்கோல் என்பதுதான் தாக்கோல் என்று மருவி பேச்சு மொழியாகியது. எங்கள் வீட்டில்(பிறந்த வீட்டில்) இப்போதும் சாவிக்குத் தாக்கோல் என்றுதான் சொல்லுவது வழக்கம். சென்னை வந்தபிறகு எனது வட்டார மொழி பல மாறிவிட்டாலும் கூட எனக்கு இன்னும் எங்கள் பகுதி பேச்சு வழக்குகள் ஒரு சில அப்படியே வருகிறது. அதுவும் கேரளத்து உறவினர் வந்துவிட்டால் அப்படியே அந்த ராகத்திற்குப் போய்விடும்...

      மிக்க நன்றி அண்ணா கருத்திற்கும் பாராட்டிற்கும்

      நீக்கு
  9. # (Canning and Food Preservation) என்ற ஒரு வார, சான்றிதழ் வகுப்பு#என்றதும் எனக்கும் பழைய நினைவு வந்து விட்டது ,இந்த வகுப்பு நடந்தது சொக்கிக் குளம் ஏரியாவில் தானா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொக்கிக் குளம் ஏரியாவில் நடந்ததா? அப்போ நீங்களும் ட்ரெய்ன்ட்!!! ஆஹா அப்போ ஜோக்காளிதான் வீட்டில் சமையலா!!! சூப்பர்!!!! இந்தச் செய்தி தெரியாமல் போய்டுச்சே...ஹஹ

      ஆனால் ஜி இது எங்கள் கல்லூரியில் நடந்தது!!!

      நீக்கு
  10. //எப்படி? பைசா? அது ரகசியம். ரகசியங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும்! //

    ஹா ஹா ஹா ரகசியம் ரகசியமாகவே இருக்கட்டும்:).

    வீட்டில் பீற்றூட் சமைத்தால், அந்த கழுவும் தண்ணியை வெளியே ஊத்த விடாமல், அம்மாவிடம் வாங்கி, ஒரு போத்தலில் ஊத்தி, சோடா என எல்லோருக்கும் குடிப்பதுபோல பந்தா காட்டுவேன்.

    வெங்காய்த் தண்டு வறை செய்யும் நாளில்.. அது ஸ்ரோ ஆக மாறியிருக்கும் என் யூஸ் கப்பில்:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்ம சகோ கேட்டிருக்காராக்கும் ரகசியத்தை....பார்ப்போம் இப்ப சொல்லிடலாம் தானே.. அடிக்க பாட்டி இல்லையே ஹிஹிஹி

      நீக்கு
    2. ஆஆ மறந்திட்டேன்....நீங்கள் இருக்கும் போது ரகசியம் சொல்லலாமா!!!!!!

      நீக்கு
    3. உஸ்ஸ்ஸ்ஸ் கீதா.. அதை ரகசியமாகவே சொல்லிடுங்கோ:)

      நீக்கு
  11. ///ஆ! இது எந்தா! எண்டே மோள் ரோசா பூ போல ஆயல்லோ?//

    ஹா ஹா ஹா இப்பவும் எண்ட மோள் ரோசாப்பூத்தானே?:).. சுகமான நினைவுகள்.. என்றும் அழியாது.. நினைக்க நினைக்க இனிமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா இப்பவும் எண்ட மோள் ரோசாப்பூத்தானே?:). உங்கள் மகள் ரோசாப்பூதான்// ஹை ஆமாம்! அதிரா தாயே!!!! உங்கள் மகளாகிய நான் இப்பவும் உங்களைப் போலவே ரோசாப்பூதான்!!!...ஹிஹீ

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அஞ்சு இனியும் பொறுக்கேலாதூஊஊஊ மீ பாடப்போறேன்ன் கீதாவுக்கு???:)

      நீக்கு
  12. நினைவிருக்கட்டும்.. 4ம் வோட் என்னோடது:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓகே ஓகே பதிந்தாச்சு!! நன்றியும் சொல்லிடறோம்....

      நீக்கு
  13. மனதில் பதிந்த அற்புதமான
    நினைவு மணத்தை இப்போது
    அற்புதமாகச் சொல்லிச் சென்றதன் மூலம்
    எங்கள் மனங்களிலும் மணக்கச் செய்து விட்டீர்கள்

    360 டிகிரி கண்காணிப்பு குறித்து
    விளக்கியவிதத்தை மிகவும் இரசித்தேன்

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரமணி சகோ! ரசித்து வாசித்தமைக்கு...

      நீக்கு
  14. நாகர் மேல மஞ்சள் பூசி.... ஹா... ஹா... ஹா..

    சுவாரஸ்யமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். மதுரை ஜெயராஜ் தியேட்டர் அருகில் ஒரு இடம் உண்டு. 1980 களில் அங்கு ரோஜாப்பூ, சர்க்கரை போன்ற மூலப் பொருட்கள் கொண்டுபோய் ரோஸ்மில்க் போட்டுக் கொள்ளலாம். காய்கள் கொண்டுபோய் ஊறுகாய் செய்து கொள்ளலாம், சிறு கட்டணத்துடன்!


    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! பரவாயில்லையே மூலப்பொருட்கள் கொடுத்து செய்து வாங்குவது..இப்போதும் இருக்கிறதா?

      சோன்பப்டி செய்து கொடுக்கப்படும் என்று பங்களூரில் தெருவில் வண்டிகள் வருமாம் பல வருடங்களுக்கு முன் ...என் மாமியார் சொல்லியிருக்கிறார். மைதா, சர்க்கரை கொடுத்தால் போதுமாம் அவர்கள் உடன் செய்து கொடுத்து விடுவார்களாம்.. அதற்கென்று மெஷின் வைத்திருப்பார்களாம்.

      நானும் ரோஜாப்பூ வைத்து க்ளியர் ரோஸ் எஸன்ஸ் மற்றும் கலர் ரோஸ் எஸன்ஸ், சர்க்கரைப் பாகு ரோஸ் எஸன்ஸ் இப்படி பீட் ரூட் ரோஸ் எஸன்சும்...செய்ததுண்டு. மூன்று நான்கு வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்...பனீர் ரோஸ் கிடைத்தது எஸன்ஸ் செய்யலாம் என்றால் வாசனை மிகவும் குறைவாக இருந்தது..நிறைய ரோஸ் வேண்டுமாக இருந்தது...அதனால்..செய்யவில்லை...

      மிக்க நன்றி ஸ்ரீராம்...

      நீக்கு
    2. /// 1980 களில்//

      அப்போ ஒரு 15 வயசு இருக்கும்போல:) எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)

      நீக்கு
  15. பதில்கள்
    1. மிக்க நன்றி கரந்தை சகோ! கருத்திற்கு. ஆம் இனிமையானவைதான்...

      நீக்கு
  16. ஆகா... ரோசா மணம் வீசியதே பதிவு முழுதும்!..

    நல்ல கலகலப்பான நிகழ்வை சுவை குன்றாமல் காட்டியிருக்கின்றது தங்கள் கை வண்ணம்!.. (அதுவும் ரோசாவோ!..)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி துரை செல்வராஜு சகோ! பதிவு மணக்கிறது என்று சொன்னமைக்கு மிக்க நன்றி...

      நீக்கு
  17. “உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்//
    என் தங்கையும், என் பெண்ணும் கோவை அவனாசி கல்லூரியில் க்ற்றுக் கொண்ட நோட்டு என்னிடம் உள்ளது. படித்த புதிதில் கொஞ்சம் செய்தோம் அப்புறம் அவ்வளவுதான்.

    உங்களின் மலரும் நினைவுகள் அருமை.

    தலைமையின் வலது கையான என் பெரிய மாமி தாக்கோலைக் கொண்டு கொடுக்க குளிர்சாதனப் பெட்டியின் தாழ் மணிச்சித்திரத் தாழ் ஆகியது!!

    பட்டாளம் அப்புறம் ருசி பார்த்தார்களா? என்ன சொன்னார்கள் ? என்று சொல்லவில்லையே!
     


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “உணவு பதப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்//
      என் தங்கையும், என் பெண்ணும் கோவை அவனாசி கல்லூரியில் க்ற்றுக் கொண்ட நோட்டு என்னிடம் உள்ளது.// உங்களிடம் உள்ளதா ஆஹா!!!!

      நெல்லைத் தமிழன் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்....

      ரோஸ் மில்க் தான் மணிச்சித்திரத் தாழிற்குள் போய்விட்டதே!! அப்புறம் எப்படி எங்களுக்குக் கிடைக்கும்!! பெரியவர்கள் எல்லோரும் குடித்தார்கள். ருசித்துக் குடித்தார்கள். அப்போ நன்றாக வந்திருக்கிறது என்று புரிந்தது. பனிஷ்மென்டாம்...ஹஹஹ் இது எப்படி இருக்கு....

      மிக்க நன்றி அக்கா

      நீக்கு
  18. பழைய நினைவுகளை எண்ணும்போது கிடைக்கும் அலாதியான சுகத்திற்கு இணை எதுவுமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்முனைவர் ஐயா....அது அலாதியான சுகம் தான்...மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  19. மலரும் நினைவுகள்...ரோசா போல் மணக்கும் நினைவுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சென்னைப்பித்தன் சார். ரோசா போல சுகந்தமாக மணம் வீசும் நினைவுகள். இப்போதும் நாங்கள் சொல்லிச் சிரிப்பதுண்டு...மிக்க நன்றி சார் கருத்திற்கு

      நீக்கு
  20. என் மனைவியும் food crafts கல்லூரியில் ஒரு வாரகாலம் பயின்றிருக்கிறாள் இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே அந்த கோர்ஸ் மடீரியல் எல்லாம் எங்காவது இருக்கும் பதிவு போட உபயோகமாகுமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ஜி எம் பி சார்!! தேடி எடுத்துப் போடுங்கள் சார்!! மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

      நீக்கு
  21. மலரும் நினைவுகளை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள் கீதா!

    பதிலளிநீக்கு

  22. படிக்கப் போய்
    படிச்சு வந்தாச்சென
    சிவப்பு நிறத்திற்கு
    பீற்றூட் துருவலும் சாறுமா
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ தங்களின் கருத்திற்கு

      நீக்கு
  23. நான் முதல் முறையாக இங்கு வந்தேன். படிக்கப்படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்தது.ரோஜாப்பூவாக நின்றதையும்,மற்ற நிகழ்வுகளையும் சிரித்துக்கொண்டே மனதில்தான் ரஸித்தேன். மலர்ந்த நினைவுகள் அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க காமாட்சியம்மா தங்களின் முதல் வரவிற்கு மிக்க நன்றி. நான் தங்களது சில சமையல் குறிப்புகளை வாசித்துள்ளேன். ஓரிரண்டிற்குக் கருத்து கூறிய நினைவு. மிக்க நன்றி அம்மா தாங்கள் ரசித்தமைக்கும் கருத்திற்கும்...

      நீக்கு
  24. அருமையான ரசனையான பதிவு. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். பீட்ரூட்டில் அல்வா மட்டும் சின்ன வயசில் அம்மா செய்து சாப்பிட்டிருக்கேன். அதைவிடக் காரட் தான் பிடிக்கும். காரட்டில் பாயசம் செய்வது எனக்குப் பிடித்தது! சின்ன வயசில் அதிகம் சோதனை செய்து பார்க்க முடிந்ததில்லை. எல்லாம் கல்யாணத்திற்குப் பின்னரே! அப்பா, அம்மா தப்பிடுவாங்க. இந்த சோதனை எலி, அதான் நம்ம ரங்க்ஸ் தப்பிக்க முடியாதே! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை வாங்க கீதா சாம்பசிவம் அக்கா....ஜெட் லேக் எல்லாம் கொஞ்சம் ஓகேயா...காரட்டில் பாயாசம் செமையா இருக்கும் அக்கா...ரொம்ப பிடிக்கும் பீட் ரூட் கீர்/பாயாசம் கூட கலர் சிவப்பாக இருந்தாலும் சுவை நன்றாக இருக்கும் அக்கா...ஆனா ஒரு சிலருக்குப் பிடிக்காது...ஹஹஹஹ் ரங்க்ஸ் அண்ணா சோதனை எலியா ஹஹஹ் சூப்பர் போங்க...அது சரி தப்பிக்க முடியாதுதான்...ரொம்ப நன்றி அக்கா...

      நீக்கு
  25. hahaha azagu rosa geetha :) super athu rose milk aa beetroot milk aa :)

    பதிலளிநீக்கு
  26. அசத்தல் நினைவுகள் ப்பா. நான் வீட்டில் மூத்தவள் என்பதனால் எனக்கு பின் நான்கு தங்கை, ஒரு தம்பி என்பதனாலும் இம்மாதிரி வாய்ப்புக்கள் எனக்கு கிடைத்ததில்லை. அத்துடன் 12 வயதிலிருந்து வீட்டிலிருந்து பிரிந்து 15- 16 வயதில் சுவிஸுக்குள் வந்த பின்... வரும் போது இடியாப்பம், புட்டு என்பது சாப்பிட மட்டுமே தெரிந்த உணவு. ஊரில் சாதம் வடிக்கவும், அந்த நேரத்து கிராமத்து சமையலும் அம்மா இல்லாத நேரம் சமைத்து தங்கைகள் தம்பிக்கு கொடுக்கவும் கற்றிருந்தேன். ஆனால் இடியாப்பம்,பிட்டு எல்லாம் செய்ய தெரியாது.

    நான் வந்த 90 களின் ஆரம்பத்தில் இங்கே பெண்கள் வருகை குறைவு என்பதோடு என் வயதுகளில் இல்லவே இல்லை. ஆனால் ஆண்கள் அதிலும் இளவயதினர் அதிகம். அனைவரும் மாமன் மச்சான் முறையில் வருவதால் பிள்ளை பிள்ளை என எனக்கு தெரியாததை எல்லாம் சமைச்சு கொடு என கேட்டால் முழித்து கொண்டிருப்பேன். ஆரம்ப காலங்களில் ஆண்கள் சமைக்க அப்பா உட்பட வேலைக்கு போய் வந்து இரவுக்கும் மறு நாள் பகலுக்கும் சேர்த்து சமைப்பார்கள். அதை சாப்பிடுவேன். அப்புறம் அப்பா இங்கே ஏற்கனவே வந்திருந்த குடும்பத்தினர் சிலரின் அறிமுகம் தந்து பழக சொன்னார். அந்த வீட்டு அன்ரி மாரிடம் சென்று ஒவ்வொன்றும் எப்படி செய்வது என கேட்டு அதன் படி செய்வேன். நாங்கள் தரைத்தளத்தில் இருக்க ஒரு அன்ரி தன் குடும்பமாய் மூன்றாவது தளத்தில் வசித்தார். ஒவ்வொரு சாப்பாடு மெதட்டும் கேட்க நாளுக்கு பத்திருபது முறை அவர் வீட்டுக்கு சென்று மணி அடிப்பேன். மீராக்கா சொன்னால் அது வேதவாக்கு என என்னை கிண்டல் செய்யும் படி என் ஆரம்ப கால சமையல் கற்றல் இருந்தது. அதில் முக்கியமாக இடியாப்பம் செய்ய நான் கற்றுக்கொண்டது இருக்கே!! ஹாஹா.. மீராக்கா இடியப்பம் அவிக்கும் போது கோதுமை மாவை ஸ்ரீம்மரில் ஆவியில் வேக வைத்து சலித்தெடுத்து அரிசி மாவும் கலந்து தான் அவித்தெடுத்தார். எனக்கு எங்க அம்மா அம்மம்மா அரிசியை ஊற வைத்து உரலில் இடித்து மாவாக்கி சலித்தெடுத்து அதை வறுத்து தான் இடியப்பம் செய்தது தெரிந்திருந்தது. ஆனால் பதம் எல்லாம் தெரியாது.

    நான் இவை இரண்டையும் கலந்து மாவை முதலில் அரை மணி நேரம் ஸ் ரிம்மரில் அவித்து சலித்து பின் அதை வாணலியில் இட்டு வறுத்து சலித்து இடியாப்பத்துக்கு கொதிக்க கொதிக்க சுடு நீர் விட்டு மா பிசைந்தால் உரலில் பிளியவும் கஷ்டம் என கூட தெரியாது... கிட்டத்தட்ட பத்து பேர் சாப்பிட இரவு சாப்பாடு செய்ய வெளிக்கிட்டு விட்டேன். ஐயகோ... அதை ஏன் கேட்கின்றீர்கள்... பகல் ஒரு மணிக்கு ஆரம்பித்த இடியாப்ப சிக்கல் இரவு அப்பா முதல் எல்லாரும் வேலையினால் வந்த பின்னும் இடியப்பமாக வரவில்லை. கிச்சன் மட்டும் எல்லா இடமும் மாவாக கொட்டி கிடக்குது. என் முஞ்சி முகம் உடை எல்லாம் மா... வீட்டுக்குள் வந்த என் மச்சான் முறையான அண்ணன் என அழைப்பவர்... என்ன நடக்குது என கேட்டு நான் இடியாப்பம் செய்வதா சொல்ல... ஆரு மீராக்க சொல்லிதந்தவவோ.. என கேட்டு... அம்மாடி.. அன்னிக்கு இடியப்பம் சாப்பிடல்ல... இன்னொரு நாள்.. சாதம் வடிக்க வெளிக்கிட்டு உப்புக்கு பதில் சீனி போட்டு.. சும்மா இல்லை இருபத்தியைந்து ;பேருக்கு இரவு சாப்பாட்டுக்கு அப்பா சாதம் வடிக்க சொல்லி போனார். நான் உம் என கோயில் மாடு போல் தலையாட்டி விட்டு... அவங்கல்லாம் நல்ல பசியோடு வந்து சோத்தை தட்டில் போட்டு கறியெல்லாம் வைச்சு... சோத்தை பிசைந்து வாயில் வைச்சு.... நல்ல வேளை நான் சோத்தை வடிச்சி வைச்சிட்டு... இன்னொரு அக்கா வீட்ட போயிட்டேன். தப்பினேன்.

    இன்னும் வரும்ல... ! கட்லெட் செய்த முதல் அனுபவம், மீன் குழம்புக்கு முதல் அனுபவம் என.. ஆரம்பகால குளறுபடிகள் நிரம்ப நிரம்ப இப்ப நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும்.

    பதிலளிநீக்கு
  27. பெண்மையே, இன்னும் என்னென்ன உண்மைகளை ஒளித்துவைத்திருக்கிறாய்? சீக்கிரம் வெளியில் விடு. ஜிஎம்பி, வை.கோ, நெல்லைத்தமிழன் ...போன்றவர்களுக்கு வயதாகிக்கொண்டே வருகிறது.

    பதிலளிநீக்கு