புதன், 24 பிப்ரவரி, 2016

ஆக்ஷன் ஹீரோ பிஜு – ஒரு காவல் அதிகாரியின் கதை

Image result for action hero biju
courtesy - google

மலையாளத் திரையுலகில் இப்போது வலம் வரும் இளைய தலைமுறை சூப்பர்ஸ்டார்கள் யாருமே முந்தைய சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மோகன்லால் போன்றவர்களைக் கீழே தள்ளி அவர்கள் இருந்த இடத்தைப் பிடித்தவர்கள் அல்ல. பதிலாகத் தங்களுக்கான ஓர் இருப்பிடத்தை அதன் அருகே இட்டு அது அவர்களுக்கு நட்டமாகிவிடக் கூடாது என்று மிகவும் கவனமாக திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதுடன் அதில் மிகவும் சிரத்தையோடுக் கவனம் செலுத்தி நடித்துக் கொண்டிருப்பவர்கள். அதனால்தான் அப்படிப்பட்டவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி காண்கின்றது.

அவர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்த, தயாரித்த (வேறு இருவர்களுடன் சேர்ந்து) எஃப்ரிட் ஷைன் இயக்கிய “ஆக்ஷன் ஹீரோ பிஜு” ஒரு யதார்த்தமான காவல் உதவி ஆய்வாளரின் கதையைச் சொல்லி எல்லோரதுக் கைத்தட்டல்களையும் பெற்றிருக்கிறது.

கல்லூரி ஆசிரியராகத் தகுதி பெற்ற, வாய்ப்பும் கிடைக்கப்பெற்ற பிஜு பௌலோஸ் எனும் இளைஞர் காவல் உதவி ஆய்வாளராக ஆர்வம் கொண்டு அதற்கானத் தேர்வெழுதி அதில் முதலிடம் பெற்று உதவி ஆய்வாளராகி சமூகத்தில் தன்னால் இயன்ற மட்டும் மக்களுக்கும், சட்டத்திற்கும் பாதுகாப்பாக இருக்க எடுக்கும் முயற்சிகள்தான் இப்படம். இதனிடையே தற்காலிக வேலை நீக்கம், கல்யாண நிச்சயம், ஒரு கத்திக் குத்து, கல்யாணம், முதல் குழந்தைப் பிறப்பு இப்படி எல்லா நிகழ்வுகளும் நடக்கின்றது. இதற்கிடையே தன் கடமைகளைச் செய்யும் பிஜுவைக் காணும் போது இது போன்ற சிலரேனும் காவல்துறையில் உள்ளதால்தானே காவல்நிலையத்திற்குச் சாதாரண மக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்கச் செல்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு பெரிய வீட்டில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாங்காய்களில் ஒன்றைத் திங்க ஆசைப்படும் குழந்தை அதில் கல்லெறிய, அதைக் கண்ட வீட்டுக்காரர் தன் நாயை அவிழ்த்துவிட, அது குழந்தையை விரட்டிக் கடித்து விழுந்த குழந்தையின் கையொடிந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறது.  அச்செய்தி காவல் நிலையத்திற்கு வர, குழந்தையையும், பெற்றோரையும் மருத்துவரையும் கண்ட பின், நாய் வளர்ப்பவரின் வீட்டிற்குச் செல்ல, வீட்டுக்காரர் பங்களூரு போய்விட்டதாக மனைவியும், ஒரு அரசியல் பிரமுகரும் சொல்ல, பிஜு அவருடன் மொபைலில் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் இடத்தை அறிந்து அவரைக் கையோடுப் பிடித்து நீதிபதி முன் கொண்டு சென்று ஜாமின் கிடைக்காத வழக்கில் பதிவு செய்து சிறைச்சாலைக்கு அனுப்புகிறார்.

தன் மனைவி குழந்தையுடன் தன் நண்பனுடன் ஓடிவிட்டதாகப் புகார் கொடுக்கும் கணவனிடம் அவரது மனைவியின் அலை பேசி எண்ணை வாங்கி, அவருடன் பேசி காவல்நிலையத்திற்கு வரவழைத்து அவர்களை ஒன்று சேர்க்க முயலும் போதும், ஒன்று சேர தயாராகாத மனைவியிடம் கோபப்படும் போதும் நிதினின் நடிப்பு அபாரம்.

மனைவியால் கைவிடப்பட்ட கணவனாக வரும் சுராஜ் வெஞ்சாரமூடு தன் குழந்தையைத் தனக்கு வேண்டும் எனும் போது அவரது மனைவி குழந்தை அவருக்குப் பிறந்ததல்ல, அவரது நண்பனுக்குப் பிறந்தது எனும் போது, பதறி அக்குழந்தையைப் பிடித்து முத்தமிட்டு, “என்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என்று அவளிடம் சொல்லுங்க சார்” என்று சொல்லும் போது கைதட்டல் பெறுகின்றார்.

கஞ்சாவுக்கு அடிமையான மகனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் தாய் தன்னை ஒரு திருடன் தாக்கியதாகச் சொல்லுவதை நம்பாத பிஜு அவரது வீட்டைச் சோதனை போட்டு அங்கு பள்ளி மாணவனான மகனால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சாவை எடுத்து அவன் தாயிடம் காட்டுகின்றார்.  அப்போது தாய், “என் மகனை ஒன்றும் செய்யாதீங்க” என்று சொல்வதும், அதன் பின் அப்பையனைப் பள்ளியில் சென்று கண்டு நடந்ததைக் கூறும் போது அவன் கதறி அழுவதும், பிஜு அவனைத் தேற்றுவதும் அருமையான இடம். 

அவனிடமிருந்துக் கஞ்சா பள்ளிக்கு வரும் விதத்தையும், பள்ளியில் அதை உபயோகிக்கும் மாணவர்களையும் பற்றித் தெரிந்தபின் அவர்களை எல்லாம் காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து, மாணவர்களின் வீட்டார்களை வரவழைத்து அறிவுரை வழங்கி அவர்களைத் திருப்பி அனுப்பும் இடம் மனதை நெகிழச் செய்கிறது. காவல்துறை அதிகாரிகளால் இது போல் சாதிக்க முடிகின்ற காரியங்களை எண்ணி நாம் வியந்தே போகின்றோம்.

இப்படிப் பல சம்பவங்கள் வாயிலாகக் காவல்துறையினர் சமூகத்திற்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் என்பதை இப்படம் உணர்த்துகிறது. இதனிடையே காணாமல் போகும் காவலதிகாரியின் வயர்லெஸ், எதிர்பாராமல் திடீரென வெடிக்கும் ரிவால்வர் போன்ற சம்பவங்களினால் ஏற்படும் பிரச்சனைகளும் கடந்த நாட்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது.

சாலையில், குடித்துவிட்டுத் தன் கைலியை அவிழ்த்துக் காட்டி ஆடிக் கொண்டிருக்கும் மனிதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் மக்கள்.  அப்போது அங்கு வரும் பிஜுவும் போலீசாரும் அவனிடம் நெருங்க அப்போதும் பயமின்றி அவன் ஆடிப்பாடிக் கொண்டு கைலியை அவிழ்த்துக் காட்ட, பிஜு அருகிலிருந்த நாயுருவிச் செடியை ஒடித்தெடுத்து அம்மனிதன் கைலியை அவிழ்க்கும் போது, அதனுள்ளே வைத்துக் கைலியை மடித்துப் பின்புறமாய்ச் சொருகிக் கையில் விலங்கிட்டுக் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லும் போது நெளியும் சுரேஷின் நடிப்பும் அபாரம். (உண்மையிலேயே அவரதுக் கால்களுக்கிடையில் நாயுருவிச் செடியைச் சொருகியிருப்பார்களோ??!!). 

500க்கும் மேற்பட்ட நாட்டுப்புறப்பாடல்கள் எழுதிய சுரேஷ் காவல்நிலையத்தில் “முத்தே....பொன்னே” எனும் பாடலையும் பாடிக் கைத்தட்டல் பெறுகிறார். இது போன்ற ஒரு காவல்நிலையத்திற்கு வரும் புகார்களும், அவற்றைப் பரிசீலித்துக் காலதாமதமின்றி ஒரு காவல் அதிகாரி எடுக்கும் நடவடிக்கைகளையும் காணும் போது, சாதாரணமாக நாம் திரைப்படங்களில் காணும் காவல் நிலையங்களில் காட்டப்படும் மிகைப்படுத்தல்கள் இல்லாத இந்தப் படம் அதன் காரணமாகவே நமக்குப் பிடிக்கும் ஒரு படமாகிறதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. 

பூக்கள் பனிநீர் பூக்கள் - ஜேசுதாஸ், வாணி ஜெயராம் - courtesy youtube

ஜெரி அமல்தேவின் இசையமைப்பில், ஜேசுதாசும், வாணி ஜெயராமும் பாடும் “பூக்கள்......பனிநீர் பூக்கள்” எனும் இனிமையான பாடல் மனதைத் தொடுகின்றது. அலெக்ஸ் புளிக்கலின் காமேரா நன்றாகவே இயக்கப்பட்டிருக்கிறது.

எப்படியோ கேரளா காவல்துறைக்கும், உள்துறை அமைச்சரான ரமேஷ் சென்னித்தலைக்கும் படம் மிகவும் பிடித்துப் போனது. சட்ட சபையிலுள்ள அமைச்சரது அலுவலகத்திற்கு நிவின்பாலி அழைக்கப்பட்டுப் பாராட்டப்பட்டிருக்கிறார். அப்போது, எல்லோரும் எதிர்பார்த்தது போல் ஆக்ஷன் ஹீரோ பிஜுவாகப் போலீஸ் யூனிஃபார்மில் போகாமல்,  நீல நிறச் சட்டையும், ஜீன்சும் அணிந்து நிவின்பாலியாகச் சென்றுத் தனக்குக் காக்கிச் சட்டை மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளதால்தான் அதை அணியாமல் வந்தேன் என்று சொல்லி அங்கும் கைதட்டல்களைப் பெற்றிருக்கிறார். மென்பொருள் பொறியியலாளரான அவர் நடிப்பார்வத்தில் தன் வேலையை உதறி விட்டு நடித்த முதல்படமான "மலர்வாடி ஆர்ட்ஸ் க்ளப்" அவருக்கு எதிர்பார்த்த அளவு அடுத்தடுத்துப் படங்களைத் தரத் தவறினாலும், "தட்டத்தின் மறையத்து"க்குப் பின் எல்லாம் அவரது "நேரம்"தான். எல்லோருக்கும் அவருடன் "ப்ரேமம்" (காதல்!!!) தான். 


43 கருத்துகள்:

 1. ப்ரேமம் பார்த்து ரசித்தேன். படத்தை அனுபவித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. சட்டசபையில் அழைத்துப் பாராட்டும் நிகழ்வு படத்திலா, நிஜத்திலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம்..ஆம் நன்றாக இருந்தது படம். சட்டசபை நிகழ்வு படத்திலல்ல நிஜத்தில் அந்த வரிகள் அப்படித்தானே இருந்தது?!! பார்க்கின்றேன் தவறாகிவிட்டதா என்று..மிக்க நன்றி ஸ்ரீராம்

   நீக்கு
  2. முழுப்படத்தையும் பார்த்த மகிழ்ச்சியைத் தரும் இயல்பான விமர்சனம்.. நண்பர் ஸ்ரீராம் கேட்டதுபோலத்தான் எனக்கும் சந்தேகம் வந்தது. படத்தில் வந்த காட்சி என்றுதான் இப்போதும் தோன்றுகிறது..இல்லையென்றால் கைத்தட்டல் எங்கிருந்து வந்தது? படம் அருமை, அறிமுகப்படுத்தியது அதனிலும் அருமை. நன்றி வாழ்த்துகள்

   நீக்கு
  3. மிக்க நன்றி ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். இல்லை ஐயா அது நிஜத்தில் நடந்தது. அமைச்சரின் அலுவலகத்தில். ஒரு சிறு நிகழ்வாக.. கைத்தட்டல் அங்கு குழுமியிருந்தவர்கள் தட்டியது.

   தம வாக்கிற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 2. அழகான விமரிசனம்..
  திரைப்படத்தைக் காண்பதற்கு ஆவல் பிறக்கின்றது..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி துரைசெல்வராஜு ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 3. படிக்கப் படிக்க படத்தினை பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆவல் மேலிடுகிறது நண்பரே
  தமிழில் இதுபோன்ற படங்கள் சாத்தியம்தானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கரந்தையாரே தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 4. ஹலோ படத்தை பார்த்து விமர்சனம் பண்ணினால் மட்டும் போதாது ஆளுக்கொரு சிடியும் அனுப்பனுமாக்கும் அப்பதான் நாங்க படம் பார்த்து எஞ்சாய் பண்ண முடியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹஹ் அதுவும் சரிதான்...அதான் ஒரு பாட்டு இங்க போட்டுருக்கோமே..தமிழா நான் இருப்பது தமிழ் நாடு/பாண்டிச்சேரி இல்லையே. கேரளா. இங்கு புதுப்பட சிடி எல்லாம் அவ்வளவு எளிதாகக் கிடைக்காதே. யுட்யூபில் கூட பார்த்தோம் லிங்க் இருக்கிறதா தரலாமே என்று. கிடைக்கவில்லை...

   நன்றி மதுரைத் தமிழன்

   நீக்கு
 5. நல்ல விமர்சனம் அண்ணா..படம் பார்க்கத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி க்ரேஸ் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 6. மிக நல்ல விமர்சனம் ...ஒரு போலிஸ் கதையை இவ்வளவு நேர்த்தியாக அழகாக விவரித்திருக்கின்றிர்கள்..படத்தை காண விழையும் மனோ நிலை வந்துவிட்டது ....வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 7. தமிழில் வராமலா போய்விடும் பார்த்து விடுகிறேன் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹஹஹ அதுவும் சரிதான் பார்த்துவிடுங்கள் பகவான் ஜி நல்ல படம்..மிக்க நன்றி தங்கள் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 8. தமிழ் படமே பார்ப்பது இல்லை ....ஆனாலும் உங்க வார்த்தைகளால் இப்படம் காணும் ஆவல் ஏற்படுகிறது ..

  பாடல் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி சகோதரி அனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 9. வணக்கம்
  அண்ணா
  படம் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் நிச்சயம் தமிழில் வரும் பொது பார்க்கிறோம்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ரூபன் தம்பி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 10. வணக்கம்
  அண்ணா
  படம் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் தமிழில் வரும் போது பார்க்கிறோம்.
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. நான் படங்கள் பார்ப்பதே அரிதாகி விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் ஓ அப்படியா?!!சார்...மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 12. அருமையான விமர்சனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டது தங்களுக்காக பார்க்கிறேன்.
  சின்ன டவுட்டு எல்லாப்பயலும் காசுக்காகத்தான் நடிக்கிறான் இதுல ஸூப்பர் ஸ்டார் அப்படினு மக்கள் சொல்றது எனது மண்டைக்கு விளங்கவே மாட்டுது.
  அதுலயும் தேசபக்தி நிறைஞ்சவன் இந்த மோகன்லால் ஸூப்பர் ஸூப்பர்.

  தமிழ் மணம் 4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி கில்லர்ஜி. வருகைக்கும் கருத்திற்கும். காசுக்காகத்தான் எல்லோருமே வேலை பார்க்கின்றோம் இல்லையா ஜி?! அவர்களும் அதற்குத்தான். நீங்கள் சொல்லுவது சரிதான். ஜி அவர்களைக் கலைஞர்களாகத் திரையில் மட்டுமே பார்ப்போமே. அப்படித்தான் நாங்கள் பார்ப்பது.மற்றபடி மரியாதையோ ஆதர்சனமோ கொடுப்பதில்லை...

   நீக்கு
 13. அருமையான விமர்சனம் ..மலையாள பட ஹீரோக்களுக்குள் போட்டி பொறாமை பன்ச் டயலாக் இதெல்லாம் இல்லை மம்முட்டி மோகன்லால் ரெண்டுபேர்மே ஒன்றாக நடிப்பாங்க அதனால்தான் எல்லாருமே இன்னமும் டாப் ஹீரோஸ் ..கதையை மட்டுமே நம்புபவர்கள் மேலும் இயல்பான சூழல் இதெல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஏஞ்சல் சகோ! மிக்க நன்றி சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்

   நீக்கு
 14. அருமையான விமர்சனம்.. மலையாள சினிமாவில் மட்டுமல்ல , தமிழ் ரசிகர்களுக்கும் மினிமம் கேரண்டி படம் தருவதில் நிவின் பாலியும் பிரித்விராஜும் செம்ம ... அதிலும் பிரேமத்துக்குப் பின் அவருடைய தமிழக ரசிகர் வட்டம் உயர்ந்திருக்கிறது.. ஏன்னு தெரில, பிரேமம் மெகாஹிட்டானதுக்கப்புறமும் இங்க தமிழகத்துல அவ்ளோ தியேட்டர் எடுக்கல.. அதும் நெல்லையிலும் கூட எடுக்கவில்லை.. சேதுபதி எனக்கு ரொம்ப பிடித்திருந்தது... பார்க்கலாம் நிவீன் அதை தகர்க்கிறாரா என்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஜெயசீலன். ஆமாம் நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் சரியே...ஒருவேளை மலையாளப்படம் என்பதால் தமிழில் எடுபடவில்லையோ என்னமோ...சேதுபதி நன்றாக இருந்தது. ம்ம் பார்ப்போம்

   நீக்கு
 15. தமிழகத்தில் போலீஸ் கொடூரத்தைப்பற்றி “விசாரனை” என்ற படம் பேரு வாங்குது.. கேராளாத்தில் போலீஸ் நல்ல போலீஸ் என்றுபேரு வாங்குகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.

   நீக்கு
 16. படம் பார்க்கவில்லை ஆனாலும் உங்க விமர்சனம் படத்தைப்பார்க்கத்தூண்டுகின்றது.யூட்டிப்பில் இருந்தால் விரைவில் பார்க்கின்றேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி தனிமரம் தங்களின் கருத்திற்கு.. யூட்யூபில் இப்போது கிடைக்குமா என்று தெரியவில்லை. பாருங்கள் ...

   நீக்கு
 17. நான் முன்னர் எழுதியிருந்த பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை! (தவறாக அனுப்பாமல் விட்டேனா? தெரியவில்லையே?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருவருக்குமே வேலைப்பளுவால் தாமதமாகிவிட்டது ஐயா. எங்கள் பதிவுகள் எல்லாமே சென்னையிலிருந்துதானே பதிவாகின்றன. உங்கள் கருத்தும் வெளியியாகிவிட்டது. ஐயா. மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 18. ம்ம்ம்ம்... பாத்துட வேண்டியது தான்...
  ஓம்சாந்தி ஓசன்னா, வடக்கன் செல்பி, ப்ரேமம் படங்களுக்கு பிறகு நம்ம வீட்ல எல்லோரும் இப்போ நிவின்பாலி ரசிகர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மலர். நிவின் பாலி எல்லோரையும் கவர்ந்துவிட்டார்தான். பாருங்கள் பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லிடுங்கள் உங்கள் பக்கத்தில்....

   நீக்கு