எழுத்தில், படங்களின் மூலம் சொல்வதை விட நேரடிப்பயிற்சி நல்லது என்பதை நான் மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன். யோகா ஆசனங்களை எப்படி ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டு செய்வது நல்லதோ அப்படி, இப்படியான சில பயிற்சிகளை உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால், தகுந்த மருத்துவர், ஃபிசியோதெராப்பிஸ்ட்டிடம் ஆலோசனை பெற்று கற்றுக் கொண்டு செய்வது நல்லது.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
திங்கள், 30 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - கைகள், கழுத்து, தோள்பட்டைக்கான பயிற்சிகள்
வியாழன், 26 ஜனவரி, 2023
ரப்பர் வேளாண்மை - பகுதி 1
இயற்கையோடு இணைந்து வேளாண்மை செய்து வாழ்பவர்கள்தான் நம் நாட்டில் பெரும்பாலும். அதனால்தான் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்” மற்றவர்கள் எல்லாம் அவர்களைத் “தொழுதுண்டு வாழ்பவர்கள்” என்று சொல்லப்படுகிறது. வேளாண்மையில் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றுடன் காப்பி, தேயிலை, ஏலம், ரப்பர் போன்றவைகளும் அவரவர்களுக்கான சூழல்களில் பயிரிடப்பட்டு பராமறிக்கப்படுகிறதுதான். இவற்றில் ரப்பர் பராமரிப்பும், பயனெடுப்பும் பற்றித்தான் இங்கு நான் உங்களுடன் நான் கண்டறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
திங்கள், 23 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்-தொடர்ச்சி
சென்ற பகுதியில், நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள் இன்னும் சில பற்றி அடுத்த பகுதியில் தொடர்கிறேன், என்று சொல்லியிருந்தேன். இதோ இங்கே. இவை எல்லாமும் நான் செய்வதுதான் ஆனால் நான் செய்யும் படங்கள், காணொளிகள் எடுக்க முடியாததால் இங்குப் பகிர முடியலை. ஒவ்வொன்றையும், லெஃப்ட் ரைட் தவிர நான் 30 எண்ணிக்கை செய்வதுண்டு. லெஃப்ட் ரைட் மட்டும் 100 எண்ணிக்கை செய்வதுண்டு.
வியாழன், 19 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி - நின்று கொண்டு செய்யும் பயிற்சிகள்
சனி, 14 ஜனவரி, 2023
நலம் வாழ எந்நாளும் நலம் பயக்கும் உடற்பயிற்சி
தை பிறந்தால் வழி பிறக்கும்! தங்கமே தங்கமான எங்கள் நட்புகள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் மகிழ்வாக வாழ்ந்திட வாழ்த்துகள்! (துளசிதரன், கீதா)
(இந்த வரியைப் பார்த்து வாழ்த்துகளை மட்டும் சொல்லிவிட்டு
ஓடிடாதீங்க! இதை முன்னரே சில பதிவுகளில் சொல்ல நினைத்ததுண்டு. இப்ப
எபி வியாழன் பதிவில் நம்ம ஸ்ரீராம் சொல்லியிருந்த ஒரு வரி எனக்கு இதை நினைவுபடுத்தியது!!)
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!
வெள்ளி, 6 ஜனவரி, 2023
இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 13 - Bபோரா குஹாலு (Borra Caves)
பகுதி 12, பகுதி 11, பகுதி 10, பகுதி 9, பகுதி 8, பகுதி 7, பகுதி 6, பகுதி 5, பகுதி 4, பகுதி 3, பகுதி 2, பகுதி 1
சென்ற பகுதியின் இறுதியில் தடிகுடா நீர்வீழ்ச்சி பற்றி சொல்லி அங்கிருந்து சுமார் 11.5 கிமீ தூரத்தில் இருக்கும் போரா குகைகளைப் பார்க்கச் சென்றோம் என்று சொல்லி முடித்திருந்தேன். பதிவுகளை வாசிப்பவர்கள், கருத்திடுபவர்கள் அனைவருக்கும் நன்றி.
ஞாயிறு, 1 ஜனவரி, 2023
இந்திய கடற்படையின் கிழக்குக் கரையோரத் தலைமையக நகரத்தில் பயணம் - 12 - அனந்தகிரி மலை (G)கலிகொண்டா வியூ பாய்ன்ட் - காஃபி தோட்டம் - தடிகுடா நீர்வீழ்ச்சி
அனைவருக்கும் எங்கள் இருவரின் (துளசிதரன், கீதா) இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! எல்லோரும் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த ஆண்டும் இனி வரும் ஆண்டுகளும் நல்கிட வாழ்த்துகள்!