நகரத்தின் மருத்துவமனை ஒன்றின
7 வது தளத்தில் நின்று கொண்டு ஜன்னல் வழியாக கீழே தெரிந்த சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
சிறிய பிம்பங்கள்! வாழ்க்கையிலும் நாம் மேலே செல்லச் செல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களும்,
இருப்பவைகளும் இப்படித்தான் சிறியவைகளாக, அற்பமாகத் தெரியத் தொடங்கிவிடுகின்றதோ? விந்தையான
மனம் கீழே மீண்டும் வேடிக்கை பார்த்தது.
தில்லைஅகத்துChronicles - Heard Melodies are Sweet! But this unheard Melody is Sweeter!!!! இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.
சனி, 23 செப்டம்பர், 2017
செவ்வாய், 5 செப்டம்பர், 2017
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 11 - கா...கா...கா...என்னை கா 2
கொஞ்சம் காத்திருப்பீங்கதானே! அப்படினு சொல்லிருந்தேன்ல...அதுக்கு மிக்க நன்றி! என்னை பயமுறுத்தியவர் பூனையாராம்/பூஸாராம்!!! அவர் வேறு நான் இங்கிலீஷில் பேசுவதாகச் சொல்லியிருந்தார். ஆமாம்! நான் தமிழ்நாட்டுக் காக்கைக் குஞ்சு தமிழ்தான் பேசணும் இல்லையா. அதனால் தான் 'நன்றி' என்று சொல்லியிருக்கிறேன்.
ஞாயிறு, 3 செப்டம்பர், 2017
எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 10 - கா....கா....கா என்னை கா! 1
"நான் வெளிய போய் உனக்குச் சாப்பாடு
கொண்டு வருகிறேன். அது வரை நீ கூட்டில் பத்திரமாக இருக்க வேண்டும். நான் வந்த பிறகு
என் முன்னால் பறக்க முயற்சி செய்தா போதும். தாந்தோன்றித்தனமா பறக்க முயற்சி செய்யாதே” னு அம்மா சொல்லிட்டுத்தான் போனாங்க. நான் கேட்டால்தானே! அதான் நான் பறக்க முயற்சி
செய்து இதோ கீழே விழுந்துவிட்டேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அண்ணன் எங்கு போனானோ அவனையும் காணவில்லை. சரி அதோ ஏதோ தரை தெரிகிறதே! அங்கு போய் பார்ப்போம்னு கொஞ்சம் பறக்க முயற்சி செய்து தத்தி நடக்கத் தொடங்கின்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)