“தெய்வத்திண்டே ஸ்வந்தம் நாடு” என்று பெருமை பேசும் பலகைகள் எல்லா இடங்களிலும் சுற்றுலாத் துறையினால் பொருத்தப்பட்டிருக்கும் கேரள மாநிலத்தில், மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் நிலம்பூரிலிருந்து ஏறக்குறைய 16 கிமீ தூரத்தில் இருக்கும் ஆட்டியன்பாற (ட்டி என்பது ஆங்கில எழுத்தாகிய D என்பதன் உச்சரிப்பு) அருவியை நோக்கி எங்கள் பயணம், இந்த வருடத்து ஜூன் மாதத்தில் என் மகனின் பயணத்திற்கு முன் இருவரும் சேர்ந்து செல்ல வேண்டும் என்று திட்டமிட்டுச் சென்ற பயணம். துளசியின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் சென்றோம். அவர்கள் இந்த அருவிக்கு மிக மிக அருகில் இருந்தும் இப்போதுதான் முதல்தடவையாகப் பார்க்கிறார்கள்.
கேரளத்துப் பருவ மழை நேரமாதலால் மஞ்சு தவழும் மலை முகடுகள். கார் மேகங்கள் சூழ்ந்து இதோ மழையைக் கொட்டிவிடுவேன் என்று கண் சிமிட்டிக் கொட்டும் மழை அல்லது தூறிக் கொண்டே இருக்கும் மழைச் சாரல்.
பயணப் பகுதி, கேரளாவின் மலபார் பகுதி என்பதால், பேருந்துப்
பயணம்/ கார் பயணம் ரயில் பயணம் என்றாலும் சரி, எங்கெங்குக் காணினும்
பசுமையடா, பச்சையைத் தவிர வேறொன்றுமில்லை என்று பறை கொட்டும் அளவிற்குப் பசுமையான
மலைகளும், ரப்பர் தோட்டங்களும், பாக்கு மரங்களும், தென்னை மரங்களும், வயல்களும், வாழைத்
தோப்பும், காடுகளும் கொஞ்சம் அல்ல நிறையவே மனதை மயக்குகின்றது. இடையிடையே
நதிகளும், சிற்றோடைகளும் பருவமழைக்காலம் என்பதால் நீர் நிறைந்து கேரளத்தின் பசுமை
வளத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.
வழி முழுவதும் இயற்கை அன்னையின் ஆட்சியே. சாலையின் இருமருகிங்கிலும் ரப்பர் தோட்டங்களும், காடுகளும் நம்மைக் கிறங்கடித்து ரசிக்க வைக்கின்றன. சாலை மிக நேர்த்தியாகவும், போக்குவரத்து அதிகம் இல்லாமல் வெறிச்சென்று இருந்தாலும், சாலை வளைந்து, வளைந்து செல்வதால், வளைவில் எதிரில் அதி வேகமாக வரும் வண்டிகள் தெரிவது இல்லை என்பதால், மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.
வழி முழுவதும் இயற்கை அன்னையின் ஆட்சியே. சாலையின் இருமருகிங்கிலும் ரப்பர் தோட்டங்களும், காடுகளும் நம்மைக் கிறங்கடித்து ரசிக்க வைக்கின்றன. சாலை மிக நேர்த்தியாகவும், போக்குவரத்து அதிகம் இல்லாமல் வெறிச்சென்று இருந்தாலும், சாலை வளைந்து, வளைந்து செல்வதால், வளைவில் எதிரில் அதி வேகமாக வரும் வண்டிகள் தெரிவது இல்லை என்பதால், மிகவும் கவனமாகச் செல்ல வேண்டும்.
இந்த இயற்கை நீர்வீழ்ச்சி இருக்கும் கிராமத்தின்
பெயர் குரும்பலங்கோடு. மலையின் மேலே ஓடும் கஞ்சிரப்புழா எனும் ஆறு
பாறைகளுக்கிடையில் படிப்படியாக வீழ்வதுதான் ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சி. மலப்புரம் மாவட்டத்தில்
மின்சாரத் தட்டுப்பாடு இருந்ததால், தற்போது கஞ்சிரப்புழா ஆற்றின் ஒரு சிறு
பகுதியைத் தடுத்து சிறிய அணை கட்டி அங்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
கேரள மாநிலம், சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதற்காக,
சமீபத்திய முயற்சியாகப் பல அணைக்கட்டுகளையும், பவர் ஹவுசையும், அருவிகளையும்
இணைத்து கேரளா ஹைடல் சுற்றுலா மையங்கள்
என்ற பெயரில் சுற்றுலாத்தலங்களை உருவாக்கி வருவதால், அதன் கீழ் ஆட்டியன்பாற
அருவியையும் 3 கோடி ரூபாய் செலவில் சுற்றுலாத்தலமாக உருவாக்கியுள்ளது. இதன் ஒரு
பகுதியாக 2.5 கிலோமீட்டர் தூரமும், 6 மீட்டர் அகலமும் கொண்ட சாலையை பவர்
ஹவுசிலிருந்து மேயின்பள்ளி பகுதிக்கு அதாவது கஞ்சிரபுழா ஆற்றில்
கட்டப்பட்டிருக்கும் அணைக்கட்டு வரை அமைத்துள்ளது.
இப்பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப்பயணிகளைக் கவர்வதாக இருப்பதாலும், இந்த நீர்வீழ்ச்சியில் கோடை காலத்தில் நீர் மிகவும் குறைந்து சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்துவிடும் என்பதாலும், சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக, 14 பேர் அமர்ந்து செல்லும் வகையில் பாட்டரியில் இயங்கும் கார் ஒன்று பவர் ஹவுசிலிருந்து அணைக்கட்டு வரைச் செல்ல விடப்பட உள்ளதாக சமீபத்தில் கேரள ஹைடல் சுற்றுலா மையம் அறிவித்துள்ளது. நாங்கள் பார்வையிட முடியவில்லை.
அருவிக்குச் செல்லும் பாதை வரை நாம் வண்டியில் செல்லலாம்.
அங்கு வண்டிகளை நிறுத்த இடம் உள்ளது. கட்டணம் ரூ 20. அருகில் அல்சனாஹ் எனும் ஒரு
சிறிய உணவகம் இருக்கின்றது. ஆனால் நாங்கள் சென்ற சமயம் திறந்திருக்கவில்லை. எனவே
நாம் கையில் உணவு கொண்டு செல்வதே நல்லது. அதனை அடுத்து கைவினைப் பொருட்கள்
விற்கும் கடையும் உள்ளது.
அருவிக்கு நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு ரூ 10.
நுழைந்தால் மிகவும் அழகான பூங்கா, கல்லில் செதுக்கப்பட்ட கொரில்லா சிலை அதைச்
சுற்றிலும் பயணிகள் அமர்வதற்கு ஆங்காங்கே பெஞ்சுகளும், அதனை அடுத்து இறங்கினால், இளைப்பாற
பெரிய அளவில் ஒரு அறையும், அதிலும் அமர பெஞ்சுகளும் உள்ளது. அதன் வழிதான்
அருவிக்குச் செல்ல வேண்டும்.
மீண்டும் படிகள் இறங்கிச் செல்லும் போது நடுவில் போகைன்வில்லா வளைவும், இரு புறமும் அமைக்கப்பட்டப் பூங்காவில் வன்ண வண்ணப் பூக்களும் மனதைக் கவர்கின்றது.
மீண்டும் படிகள் இறங்கிச் செல்லும் போது நடுவில் போகைன்வில்லா வளைவும், இரு புறமும் அமைக்கப்பட்டப் பூங்காவில் வன்ண வண்ணப் பூக்களும் மனதைக் கவர்கின்றது.
குளுமையான காற்றிற்கிடையில் கண்ணிற்கும்,
மனதிற்கும் விருந்தும், இதமும் அளிக்கும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளுக்கிடையில்
இயற்கை அன்னையின் மடியில் படிப்படியாய், அருவிக்கே உரிய இனிய ஓசையுடன் பாறைகளுக்கிடையில்
தவழ்ந்து வீழ்கின்றது அருவி. ஆங்காங்கே விழுகின்ற இடத்தில் சுனைகளும்/சிறிய
குட்டைகளும் இருக்கின்றன.
இந்த அருவியில் 22 பேர் சறுக்கி விளையாடி பாறைகளில் மோதி இறந்திருப்பதால் எச்சரிக்கை அறிவிப்பு.
தண்ணீர் வரத்து அதிகம் இருக்கும் போது இந்தக் குழிகள் தெரியாது, ஆபத்தானவை என்பதால் தான் எச்சரிக்கை
பல இளைஞர்கள் அருவி விழும் பாறையில் சறுக்கிக்
கொண்டு கீழே சுனையில் விழுந்து நீந்துகின்றார்கள். அதிகமாக மழை பெய்யும் காலத்தில்
தண்ணீரின் அளவு கட்டுக்கடங்காமல் எல்லா பாறைகளையும் மூழ்கடித்து ஓடும் சமயம்
தண்ணீருக்கடியில் இருக்கும் பாறைகளோ, பாறைகளின் குழிகளோ, நீரின் ஆழமோ அறிய
முடியாததால், இவ்வாறு சறுக்கி விளையாடுபவர்கள் பாறைகளில் மோதி இது வரை 22 பேர்
இறந்துள்ளதால் ஆங்காங்கே இதை அறிவித்து எச்சரிக்கைப் பலகைகள்
வைக்கப்பட்டிருக்கின்றது.
அதன் காரணமாக, பூங்கா வழி செல்லும் போது பிரதான அருவிக்கு அங்கிருந்து
பாறைகளில் இறங்கினால் அங்கு கம்பித் தடுப்பும் சிறிய வாயிற்கதவும் இருக்கின்றது. மாலை 5 மணி வரைதான் வாயிற்கதவு திறந்திருக்கும். அதன் பின் அருவிக்குச் செல்ல
அனுமதியில்லை. இந்தக் கம்பித் தடுப்பு பாறைகளின் மேல் நீண்ட தூரத்திற்குக் கட்டப்பட்டிருக்கிறது.
நீர் ஓடும் வழியில் தடுப்புக் கம்பி நீண்ட தூரம்
வைக்கப்பட்டிருக்கிறது. கம்பி வரை நீர் வந்துவிட்டால் கம்பியைத் தாண்டி அனுமதி
இல்லை என்றும் அச்சமயம் அருவியைக் கம்பியின் இப்புறம் இருந்து மட்டுமே காண
முடியும் என்றும் சொல்லப்பட்டது.
நாங்கள் சென்றது ஜூன் மாதம் ஆரம்பம் என்பதால்
அபாயகரமான அளவிற்கு நீரில்லை. பாறையில் இறங்கி மெயின் அருவிக்குச் செல்லாமல் கீழே
பாறைகளில் இறங்கி மீண்டும் மடிந்து விழும் சிறிய சிறிய அருவிகளிலும், சிறிய சுனைகளிலும்,
ஓடும் நீரிலும் நனைந்து, குளித்து மகிழலாம். எவ்வளவு நேரம் அருவியிலும், ஓடும்
நீரிலும் விளையாடி மகிழ்ந்தாலும் கிடைக்கும் இன்பத்திற்கு அளவே இல்லை எனலாம். நீர் மிகவும் தெளிவாகவும், சுத்தமாகவும்
இருக்கின்றது.
இந்தப் படத்தில் வலது புறம் ஒரு பாதை செல்லுகிறது அல்லவா அது வழிதான் அருவிக்குச் செல்ல வேண்டும். அங்கு சிறிய கம்பிக் கதவு இருக்கிறது. 5 மணிக்கு மூடி விடுகிறார்கள்.
வ்யூ பாயின்ட் செல்லும் வழி
வ்யூ பாயின்ட்
பாறைகளில் இறங்காமல், பூங்காவின் வழி நடந்தால், படிகள் ஏறி, இறங்கிய பின் சரிவான மண் பாதையில், ஆங்காங்கே இருக்கும் பாறையில் ஏறி, கரடு முரடான பாதை வழி ஏறினால் அங்கு மடிந்து விழும் அருவியை மிக உயரத்தில் இருந்து காணும் வ்யூ பாயின்ட் உள்ளது. சுற்றிலும் மலையும், அடர்த்தியான காடும், மலை உச்சியும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது. நம் கண்களுக்கு மட்டுமல்ல விருந்து, மூன்றாவது விழியான புகைப்படக் கருவியின் கண்களுக்கும்தான்.
பேருந்தில்/ரயிலில் பயணம் என்றால், பாலக்காடு அல்லது ஷோர்னூரிலிருந்து நிலம்பூர் சென்ற பிறகு, ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்கு நிலம்பூரிலிருந்து நாம் பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வண்டி ஏற்பாடு செய்து கொண்டு பயணம் செய்வதே நல்லது. நிலம்பூரிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் இடது புறம், வெளியந்தோடு எனும் இடத்தில், நிலம்பூர்-ஆட்டியன்பாற சாலையில் திரும்ப வேண்டும்.
அந்தச் சாலையில் மயிலாடி, அகம்பாடம் எனும் இடங்களைக் கடக்கும் போது ஆட்டியன்பாற நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழிக்கான அம்புக்குறியும், தூரமும் குறிப்பிடப்பட்டுத் தகவல் பலகை உள்ளதால் வழி அறிவதில் சிரமம் இல்லை. அங்கிருக்கும் மக்களிடம் கேட்டாலும் வழி சொல்லுகின்றனர். நிலம்பூரிலிருந்து பயண நேரம் 30-40 நிமிடங்கள்.
பாலக்காட்டிலிருந்து நிலம்பூர் செல்ல 3 மணி நேரம்.
பாலக்காட்டிலிருந்துக் கோழிக்கோடு செல்லும் பேருந்தில் ஏறினால் 2 மணி
நேரப்பயணத்தில் பெரிந்தல்மன்னா எனும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து நிலம்பூர்
செல்வதற்குப் பல பேருந்துகள் இருக்கின்றன. 1 மணி நேரப்பயணம்.
பாலக்காடு, ஷோர்னூரிலிருந்துப் புறப்படும் ரயில் விவரங்கள்
:
16349
|
Thiruvannathapuram -...
|
Exp
|
SR
|
SRR
|
05:45
|
NIL*
|
07:20
|
||||||||||||||||||
56611
|
Palakkad - Nilambur ...
|
Pass
|
SR
|
SRR
|
07:05
|
NIL*
|
08:40
|
||||||||||||||||||
56613
|
Shoranur - Nilambur ...
|
Pass
|
SR
|
SRR*
|
09:20
|
NIL*
|
10:55
|
||||||||||||||||||
56362
|
Ernakulam - Nilambur...
|
Pass
|
SR
|
SRR
|
11:25
|
NIL*
|
13:00
|
||||||||||||||||||
56617
|
Shoranur - Nilambur ...
|
Pass
|
SR
|
SRR*
|
15:05
|
NIL*
|
16:40
|
||||||||||||||||||
56619
|
Shoranur - Nilambur ...
|
Pass
|
SR
|
SRR*
|
17:10
|
-
|
NIL*
|
18:45
|
|||||||||||||||||
56621
|
Shoranur Nilambur Ro...
|
Pass
|
SR
|
SRR*
|
19:30
|
-
|
NIL*
|
21:10
|
|||||||||||||||||
நிலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து நிலம்பூர் டவுண் (Town) 3 கிமீ
தூரத்தில் உள்ளது. நிலம்பூர் டவுணிலேயே நிறைய நல்ல உணவகங்களும், விடுதிகளும், பயண ஏற்பாட்டாளர் (ட்ராவல்ஸ்) வசதிகளும் உள்ளது.. இணையம் வழியாகத் தங்கும் இடமும், ட்ராவல்சும் பதிவு செய்ய முடியும்.
கேரளா சுற்றுலாத்துறை வளர்ச்சி கார்ப்பரேஷனின் (KTDC) “டாமரின்ட்” (Tamarind) உணவகம் மற்றும் தங்கும் விடுதி, நிலம்பூர் – கூடலூர் செல்லும் சாலையில், நிலம்பூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் சாலையின் வலது புறத்தில், கரிம்புழா ஆற்றின் கரையில் உள்ளது.
(KTDC) “டாமரின்ட்” (Tamarind) உணவகம் மற்றும் தங்கும் விடுதி
கேரளா சுற்றுலாத்துறை வளர்ச்சி கார்ப்பரேஷனின் (KTDC) “டாமரின்ட்” (Tamarind) உணவகம் மற்றும் தங்கும் விடுதி, நிலம்பூர் – கூடலூர் செல்லும் சாலையில், நிலம்பூரிலிருந்து 4 கிமீ தூரத்தில் சாலையின் வலது புறத்தில், கரிம்புழா ஆற்றின் கரையில் உள்ளது.
சென்று வருவதும் எளிது என்பதால் மிக மிக அருமையான
ஒரு சுற்றுலாத்தலம் என்றால் மிகையல்ல.
------ கீதா
(படங்கள் அதிகமாகக் கொடுத்திருப்பதன் காரணம், பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள் படங்களைப் பார்த்து மகிழலாம் என்றும், மேற்கொள்ள முடிந்தவர்கள் புகைப்படங்களைப் பார்த்துப் பார்க்க ஆர்வம் ஏற்படுமே என்பதற்காகவும் கொடுத்திருக்கிறேன். அடுத்த முறை டிடி அவர்களின் பாடமான ஸ்லைட் ஷோ முயற்சி செய்ய வேண்டும்.இப்போது நேரம் பற்றாக் குறை!
இப்போதுதான் நண்பர்களின், சகோதரிகளின் தளங்களுக்கு ஒவ்வொன்றாக வருகை தருகிறோம். வாசிக்கின்றோம். நிறைய இருப்பதால்.. கொஞ்சம் தாமதமாகலாம்.)