courtesy - google
பதிவுகள் பல, அதுவும் அறிவியல் பதிவுகள், பொது அறிவுப் பதிவுகள் பல
பாதி எழுதப்பட்டு இருக்கின்றன. எதையும் மனம் ஒருமித்து எழுதி முடித்துப் பதிவிட
முடியாத சூழல். எனவே, இன்று நான் வாசிக்க நேர்ந்த, என்னக் கவர்ந்த ஒரு நல்ல
தொகுப்பின் சிறு பகுதியை பதிகின்றேன். இந்தப் பகுதியை அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்தின் பொறியியல் முன்னாள் மாணவர் சங்கமும், பல்கலைக்கழகத்தின்
முன்னாள் மாணவர் சங்கமும் சேர்ந்து வெளியிட்டுள்ளது.
திருமிகு வெ இறையன்பு அவர்கள் தமிழ்நாடு சுற்றுலாத்துறை செயலாளராக
இருந்த போது ஆற்றிய பல சொற்பொழிவுகளின் ஒரு பகுதி ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மரியாதை
அளிக்கும் வகையில் அவர்களைப் “பண்பாட்டுத் தூதுவர்கள்” எனச் சொல்லி, சுற்றுலாத்துறைக்கு
அவர்கள் எவ்விதம் உதவ முடியும் என்று
அவர்களின் மீது நம்பிக்கை வைத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சொன்னதின்
சுருக்கத்தை இங்குப் பகிர்கின்றேன்.
இறையன்பு அவர்கள் சுய முன்னேற்றம், ஆளுமையை மேம்படுத்தல் பற்றி மிகவும்
நேர்மறைக் கருத்துகளைப் பேசியும், எழுதியும் வருபவர். இதனை நான் ஒரு வின் வின்
சிச்சுவேஷனாக, நேர்மறை எண்ணமாகவே பார்க்கின்றேன். மிக அருமையானச் சொற்பொழிவு. இதோ
அவரது வார்த்தைகளில்....
புதிதாக வருகிற பயணிகள், மாநகரங்களிலும், நகரங்களிலும் கட்டடக்
காடுகளில் காணாமல் போய்விடாமல் வர்கள் அடைய வேண்டிய விலாசத்திற்குப் பத்திரமாக
அழைத்துச் செல்பவர்கள் நீங்கள். இரவானாலும், பகலானாலும், மழையானாலும்,
வெயிலானாலும், பசியையும் மறந்து, தூக்கத்தையும் தொலைத்து அடுத்தவர்களுக்காக
உழைக்கும் உத்தமர்கள் நீங்கள். உயிரையும் பொருட்படுத்தாமல் பெரிய வாகன்ங்கள் செல்ல
மறுக்கின்ற சந்துகளில் எல்லாம் பயணித்துச் சவாரியை உரிய இடத்திற்குச் சென்று
சேர்ப்பிக்கிறவர்கள் நீங்கள்.
எதிர்பார்க்கிற சவாரி சிலநேரம் கிடைக்காமலும், சரியான வாடிக்கையாளர்
அமையாமலும் அவதிப்படுகிறவர்கள் நீங்கள். எத்தனையோ இடங்களில் பணத்தைத் தவற
விட்டவர்களும் கறாராகப் பேரம் பேசுவது உங்களிடம்தான். அவசரத்தில் பயணிகள் தவறவிட்ட
பணத்தை அப்படியே எடுத்துச் சென்று சேர்க்கின்ற பெருந்தன்மை உங்களிலும் பலருக்கு
உண்டென்பதை நான் அறிவேன். (எங்கள் ப்ளாக் பாசிட்டிவ் செய்திகளில் பெரும்பாலும்
தவறாது இடம் பெறும் ஒன்று). நேர்மை தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல்
வாய்மையுடன் உழைப்பவர்கள் நீங்கள்.
உங்களை வாழ்த்துவதோடு உங்கள் பணியை இன்னும் செம்மைப்படுத்த வேண்டும்
என்பதையே என் வேண்டுகோளாக வைக்க எண்ணுகிறேன்.
மகத்தானப்பணி: எத்தனையோ இடங்களிலிருந்துத் தமிழகத்திற்குச் சுற்றுலா
வரும் பயணிகளை அழைக்கும் திருமுகமே உங்களதுதான். நீங்கள் நடந்து கொள்ளும்
வித்த்தைப் பார்த்துதான் தமிழ்நாட்டைப் பற்றிய மதிப்பீட்டை அவர்கள் மனதில்
வரைகிறார்கள். புன்னகையுடன் நீங்கள் வரவேற்று, அன்புடன் உபசரித்து, ஆதரவாக அமர
வைத்து, நயமாகப் பொருட்களை வாகனத்தில் வைத்து, நேர்த்தியுடன் அவர்களை அழைத்துச்
சென்றால் நம் மாநிலம் சிறந்த மாநிலம் எங்கிற எண்ணம் அவர்கள் உள்ளத்தில் ஏற்படும்.
அரசு வகுத்துள்ள கட்டணத்தை மட்டும் நீங்கள் வசூலித்தால் அவர்கள் அடுத்த பயணத்தையும்
உங்கள் வண்டியிலேயே தொடர விரும்புவார்கள். ஒரு மாநிலத்தைப் பற்றிய மிக்ச் சிறந்த
விளம்பரம் இங்கு வந்தவர்கள் வாய்மொழி மூலம் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லும்
அபிப்ராயங்கள், அவற்றைக் கட்டமைக்கும் மகத்தான பணி உங்களிடம் இருக்கிறது.
தூய்மையும், வாய்மையும்: தோற்றத்தில் பொலிவு, உடையில் தூய்மை,
சுத்தமான ஆட்டோ, மணம் வீசும் சூழல் என்று அவர்களை வசீகரிக்கும் வகையில் நீங்கள்
இருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு நம் மாநிலத்தில் தங்கும் நாட்களும்
அதிகரிக்கும். உங்கள் நாகரிகம், அன்பான சொற்கள், பண்பாடு உங்களை நம் மாநிலத்தின்
தூதுவர்களாக, தமிழக்ச் சுற்றுலாவுக்கே நல்ல முகமும் கிடைக்கும், முகவரியும்
கிடைக்கும்.
பழகுவதில் இனிமை: உங்கள் ஆட்டோவில் பலவித காரணங்களுக்காக
ஏறுபவர்களிடம் எரிச்சலைக் காட்டினால் கூட அது அபசகுனமாகப்படும். அன்புதான்
துன்பத்தைக் குறைக்கும் நிவாரணம். நெர்மையோடு நடப்பது தொடக்கத்தில் சிரமங்களைத்
தரும். பண இழப்பு ஏற்படும். அடுத்தவர்களைப் பார்த்து நாமும் வரம்பு மீறலாம் எங்கிற
ஆசையைத் தூண்டும். ஆனால், நாளாக நாளாக வேலை செய்யும் சஞ்சீவினியப் போன்றது நேர்மை.
உங்கள் வாகனம்தான் சிறந்த முறையில் செலுத்தப்படுகின்ற ஆட்டோ என்பதை அறிந்து ஒரு
முறை வந்தவர்கல் திரும்பத் திரும்ப அழைப்பார்கள். காட்டுகிற கரிசனம் அவர்களுக்கு
நம்பிக்கையை அளிக்க வேண்டும். வாகனத்தில் அமர்வோர் நம்மை மறக்கக் கூடாது எங்கிற
திடமான உள்ளத்துடன் நாம் அவர்களிடம் பழக வேண்டும்.
உடலை உறுதியாக்குவோம்: நல்ல பழக்கங்களாலும், வியர்வை வடிய வடிய
சேர்க்கிற பணத்தைத் தீயப்பழக்கங்களான மது, புகை போன்றவற்றில் செலவழித்து உடலை
பலவீனப்படுத்திக் கொள்ளக் கூடாது. இல்லத்து இனிமை மறைகிறது. குழந்தைகளோடு இருக்கிற
நெருக்கமோ குறைகிறது. அத்தனை நலன்களையும் உறிஞ்சி விடுகிறது. எனவே உங்களை
பலவீனப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
சேமிக்கப் பழகுவோம்: பணத்திற்கு ஒரு குணம் உண்டு. அது எப்போதும் வந்து
கொண்டே இருப்பதில்லை. வருகிற நேரத்தில் சேமித்து வைக்காவிட்டால் வராமலேயே
போய்விடுகிற இயல்பு அதற்கு உண்டு. அதனை மதிக்கிறவர்களிடம்தான் அதுவும் சேருகிறது.
எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் நல்ல கல்வியை பயில்வதற்கும், உயர்ந்த பணிகளில்
அமர்வதற்கும் உறுதுணையாய் இருக்கும். எனக்குத் தெரிந்து இது போன்று சேமித்த ஆட்டோ
ஓட்டுநர்கள் தங்கள் குழந்தைகளை மருத்துவம், பொற்யியல் கல்லூரிகளில் படிக்க வைப்பதை
அறிவேன். நம் அடுத்த தலைமுறை நம்மை விஞ்சிச் செல்வதுதான் முன்னேற்றம். அதற்கு சுஉயக்கட்டுப்பாடும்,
ஒழுக்கமும் அவசியம்.
வாகனத்தைச் செலுத்துவது விழிப்புணர்வோடு கையாளப்பட வேண்டிய ஒன்று.
வாக்கையை ஆயுள் காப்பீடு செய்து கொள்வது அவசியம். மருத்துவக் காப்பிடும் அவசியம். குழந்தைகளின்
படிப்புக்கு ஏற்ப சேகரிப்பதற்கும் ஊக்கத் தொகையுடன் கூடிய ஆயுள் காப்பீடுகள்
உள்ளன. இவை எல்லாம் மறைமுகமாகச் சேமிக்க உதவுகின்றன.
குடும்பத்தைக் கொண்டாடுவோம்: நம் வாழ்க்கை காலனேரத்தைத் தாண்டியதாக
இருந்தாலும் குடும்பத்திற்காக்க் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது அவசியம். உங்கள்
மேற்பார்வை இருந்தால்தான் குழந்தைகள் நன்றாகப் படித்து, ஒழுக்கத்துடன்
வளர்வார்கள். அவர்களுக்கும் உங்கள் மீதான பிடிப்பு ஏற்படும். சீட்டு விளையாடுதல்,
தேவையற்ற செயல்கள், அதிகமாக சினிமா பார்ப்பது போன்றவை இல்லாமல், நேர மேலாண்மை
உங்களை நெறிப்படுத்தும்.
ஆண்டுக்கிற்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் குறைந்த செலவில் ஒட்டு மொத்த உடற்பரிசோதனை
செய்யப்படுகின்றது. ஆண்டிற்கொரு முறை கண்களையும் பரிசோதனை செய்து தேவைப்பட்டால்
மூக்குக் கண்ணாடியை அணிவது அவசியம். சத்தான உணவு, பழங்கள், காய்கள் என்று சமச்சீர்
உணவை உட்கொள்வது அவசியம். ஆட்டோ ஓட்டுவதால் வெயிற்காலங்களில் உஷ்ணம் தாக்காமல்
இருக்க மோர், நுங்கு போன்றவற்றை ஆட்டோவில் எப்போதும் வைத்திருப்பது காப்பாற்றும்.
ஆங்கிலமும் அறிவோம்: தமிழத்திற்குப் பல்வேறு மாநிலங்களிலிருந்து
பயணிகள் வருவதால் அவர்களிடம் உரையாட குறைந்த்து முக்கியமான 100 வாக்கியங்களையாவது
ஆங்கிலத்தில் கற்றுக் கொள்ள வேண்டும். ஹில இடங்களில் பேச்சுமுறை ஆங்கிலம்
பயிர்றுவிக்கப்படுகிறது. உங்களுக்கு
வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைப்பார்கள்.
சுற்றுலா வழிகாட்டியாய் இருப்போம்: ஆட்டோ ஓட்டுநர்கள் சுர்றுலா
வழிகாட்டியாகவும் செயல்படுகிறார்கள். நம் பகுதியைப் பற்றிய முழு விவரங்களையும்
நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தைப் பற்றியும் சுற்றுலா கையேடு
தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஓய்வு நேரங்களில் இவற்றை எல்லாம் வாசித்து
எந்த இட்த்திற்கு என்ன முக்கியத்துவம், எந்தச் சாலையின் வழியாகச் செல்ல வேண்டும் என்றெல்லாம்
தெரிந்து வைத்துக் கொண்டால், பலரும் நாடி வருவார்கள். பிறகு நம்மைப் பற்றிய தகவல்களை
ஆட்டோ ஓட்டுநர்கள் குழுவாகச் சேர்ந்து இணையத்திலும் இடம்பெறச் செய்யலாம்.
வெளிநாட்டுப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும்.
ஆட்டொவில் செல்லும் போது அலைபேசியில் பேசுவதையோ, மோத வருகிற மற்ற
வாகங்களோடு சண்டை போடுவதையோ, கோபமான சொற்களைச் சாலைகளில் செல்பவர்கள் மீது
பிரயோகிப்பதையோ ஒரு போதும் செய்யக் கூடாது, அவை வண்டியில் இருப்பவர்களுக்குத் தர்ம
சங்கடத்தை ஏற்படுத்தும்.
பல பணியைச் செம்மையாக வழிபாட்டுடன் செய்தால், மதிப்புடன்,
பெருமையுடன், தமிழக ஆட்டோ ஓட்டுநர்கள் தரணியிலேயே தன்னிகரற்றவர்கள் என்கிற நிலையை
அடைய இன்றிலிருந்து இன்னும் தீவிரமாகப் பாடுபடுவோம்.
-----கீதா
(இனி புதனன்று சந்திப்போம். பயணம் மேற்கொள்வதால்...)