எப்போதும்
பிறரது குறைகளைச் சுட்டிக் காட்டி ஆத்திரப்படும் நாம் ஏனோ பெரும்பாலும் அவர்களது நிறைகளைச்
சொல்லிப் பாராட்டுவதே இல்லை. சில நேரங்களில்
அவர்கள் காலமான பின் அவர்களது சிறப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு.
இதை உணர்ந்த சில நல்ல உள்ளங்கள் அவர்கள் வாழும் சமூகத்திற்கும் அதை உணர்த்தி, கல்விச் சாலையைத் தந்த ஒரு தலைவனுக்குக் கடந்த தினம் ஒரு பாராட்டு விழா எடுத்தார்கள்.