செவ்வாய், 28 ஜூன், 2022

சில்லு சில்லாய் – 4 - விக்ரம் - சரவண விநாயக்கின் ஓவியங்கள்

 விக்ரம்

பெயரிலேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும்! ஆம் படமேதான். பல வருடங்கள் கழித்து திரை அரங்கிற்குச் சென்று பார்க்க அதிசயமான ஆச்சரியமான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

பலரும் முதல் காட்சி அல்லது வந்த ஓரிரு நாட்களில் பார்த்திருப்பீர்கள். எனக்கோ அதை திரையரங்கிலிருந்து எடுத்துவிடும் கடைசி நாளில் பார்க்கும் வாய்ப்பு. பரவாயில்லை. நிறைய விமர்சனங்களும் வந்திருக்கும். நான் சொல்லப் போவது ஆறிப் போன காஃபி/டீ யாக இருக்கலாம். Out dated ஆகக் கூட இருக்கலாம் என்றாலும் என் பார்வையில். Better late than never!

செவ்வாய், 21 ஜூன், 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 4

 ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோயில்/

மத்ஸ்ய அவதாரத் திருத்தலம்

 

பெயரிலிருந்தே பெயர்க்காரணத்திற்கான காரணம் புரிந்துவிடும். பெயர்க்காரணத்திற்கான -  புராணக் கதை உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும் என்பதால் கதையை நான் இங்கு விவரிக்கவில்லை.

சனி, 4 ஜூன், 2022

நாராயணவன(ர)ம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில் - ராமகிரி ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 3

 

பகுதி 1 இங்கே 

பகுதி 2 இங்கே

என்னோடு உலாவந்தவர்கள், வருகிறவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  முந்தைய பதிவில் கோயிலைப் பார்க்கும் முன் அது அமைந்துள்ள இடமான ஆரணி ஆற்றைப் பற்றிய புராணத்தை அறிந்தோம்.  அதன் தொடர்ச்சியாக இப்போது நாம் கோயிலைப் பார்க்கப் போவோம்.  ஏன் இங்கு ஈசன் பள்ளிகொண்டார் என்பதைப் பற்றி.

புதன், 1 ஜூன், 2022

நாராயணவரம் ராமகிரி வாலீஸ்வரர் கோயில் – நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள்/மத்ஸ்ய நாராயணப் பெருமாள் கோயில் – சுருட்டப்பள்ளி ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் - பகுதி 2

 

பகுதி 1

என்னோடு எல்லோரும் ஏறிவிட்டீர்கள்தானே! சென்ற பதிவை வாசித்துக் காத்திருந்தமைக்கு மிக்க நன்றி. இப்போது இத்தலத்தைப் பற்றி....

பிரதோஷ வழிபாட்டிற்குப் பெயர் பெற்ற சுருட்டப்பள்ளிஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் 

தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த ஊத்துக்கோட்டையிலிருந்து 2 கிமீட்டர் தூரத்தில் ஆந்திர எல்லை தொடங்கும் சுருட்டப்பள்ளி எனும் சிறிய ஊரில்தான், ஆரணி ஆற்றின் கரையில் பள்ளி கொண்டிருக்கிறார் பரமேஸ்வரன்!